Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Pirithariyaa Pithana podhum-7

  • Thread Author
அத்தியாயம்…7

லிங்கா இந்தியாவில் தன் அன்னையை பற்றி நினைத்து கொண்டு இருந்தான் என்றால், கனடாவில் தன் அக்காவை பற்றி கலைசெல்வன் தன் மனைவியிடம் தன் மனதில் இருந்ததை பகிர்ந்து கொண்டு இருந்தார்..

லிங்காவுக்காவது வேதனை மட்டுமே, ஆனால் கலைசெல்வனுக்கு மனதில் குற்றவுணர்ச்சியும் சேர்ந்து கொண்டது.

ஆம் குற்றவுணச்சி தான்.. அன்று அதாவது ஜெய பிரகாஷ் திருமணத்திற்க்கு முன் அவர்கள் வீட்டிற்க்கு வந்த போது கல்லூரியை விட்டு வந்தவன் அக்கா அறையில் ஜெய பிரகாஷ் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து வந்தது தெரியாது வெளியில் சென்று விட்டான்..

அந்த வயதில் நாளை திருமணம் செய்ய இருப்பவர்கள் தனியே பேசிக் கொள்வதில் என்ன தப்பு இருக்கிறது..? அதுவும் ஒரு முறை ஜெய பிரகாஷ் வீட்டு தொலை பேசிக்கு அழைத்த போது இவன் தான் எடுத்தான்..

இவன் என்று தெரிந்ததும் ஜெய பிரகாஷ் ஏதேதோ பேசி வைத்து விட. அப்போது கலைசெல்வனுக்கு தன் மாமனை நினைத்து பாவப் பட்டான்.. அந்த பாவப் பட்டதால் தான் கலைசெல்வன் ஜெய பிரகாஷ் பேசட்டும் என்று நினைத்து வெளியில் சென்றது..

ஆனால் அவன் அன்று பாவப்பட்டது இப்படி அனைவரும் தன் அக்கா மீது இப்படி பாவத்தை சுமத்தும் படி ஆக கூடும் என்று தெரிந்து இருந்தால்..” என்று சொல்லி தன் மனைவியிடம் வேதனை பட்ட போது.

“இது நடந்தால் இப்படி என்று முன் கூட்டியே யாருக்கு தெரிய போகுது சொல்லுங்க. நீங்க நல்லது நினச்சி தான் செய்திங்க. ஆனா அவர் அப்படி இல்ல என்று உங்களுக்கு தெரியுமா…? போனதையே நினச்சி வேதனை படாதிங்க.” என்று கணவனுக்கு ஆறுதல் வழங்க.

இருந்தும் அந்த இரவு கலைசெல்வனுக்கும் சரி. லிங்காவுக்கும் சரி தூங்கா இரவாக தான் போனது.

என்ன தான் லிங்கா மனதில் வேதனை மன்டி கிடந்தாலும், அதை வெளியில் காட்டாது காலை உணவை சாப்பிட உணவு உண்ணும் மேடைக்கு வந்து அமர்ந்தான்..

அவனுக்கு முன்னவே அனைவரும் வந்து இருக்க, அவன் பாட்டுக்கு வந்தவன் சமையல் அறை நோக்கி குரல் கொடுக்க.அவரும் ஒடி வந்தவர்..

முன் நாள் லிங்கா கேட்ட டிபனை செய்தவர் அதை அவன் தட்டில் எடுத்து வைக்க. இப்போது அனைவரின் பார்வையும் லிங்கா தட்டில் இருந்தது.. அதில் சிவப்பு அரிசி புட்டு இருந்தது…

அதை பார்த்த காஞ்சனா.. “இது ஒட்டல் கிடையாது ஆள் ஆளுக்கு ஒன்னு செய்ய… நாங்க எல்லாம் பூரி பொங்கல் சாப்பிடுறோம்.. இதில் ஏதையாவது சாப்பிடனும்.. இது என்ன புதுசு புதுசா வீட்டில் நடக்குது…” என்று பொதுவாக சொன்னவர்..

பின் தன் தந்தையை பார்த்து.. “ அப்பா என்னப்பா இது எல்லாம்… நீங்க கேட்க மாட்டிங்களா…? என்று கேட்ட காஞ்சனாவுக்கு லிங்கம்..

“அது தன் நானும் சொல்றேன் தாத்தா. இது ஒட்டல் கிடையாது… ஆளுக்கு ஒவ்வான செய்ய. செய்வது உடல் நலனுக்கு நல்லது போல இருக்கனும்.. பூரியும் கொழுப்பி பொங்கலும் கொழுப்பு.. வயசானவங்க எல்லாம் சாப்பிடுவதா இது.?” என்று கேட்டவன் பின் சமையல் செய்யும் பெண்மணியிடம்.

“இனி நாளைக்கு என்ன செய்யனும் என்று முன் நாளே என் கிட்ட கேட்டுக்குங்க.” என்று சொல்லி விட்டு சென்றவனின் பார்வை ஒர விழியில் மதுவையும் தழுவ தவரவில்லை.



காஞ்சனா இப்படி லிங்கா பேசுவான் என்று எதிர் பார்க்கவில்லை.. தான் அவனை மடக்க பார்க்க. அவன் தன்னை மொத்தமாக கவிழ்த்து விட்டு போனதில் மொத்த கோபமும் தன் தந்தையின் மீது திரும்பியது…

“என்னப்பா வீட்டு சமையல் என்பது பெண்கள் விசயம்.. இதுலேயும் அவன் மூக்கை நுழைப்பானா..?.” என்று கேட்கும் போதே தன் அறையில் லேப் டாப்பை எடுத்து கொண்டு மீண்டும் கீழே வந்த லிங்காவின் காதில் காஞ்சனா பேசியது விழ..

“என்ன இது சமையல் விசயம் பெண்கள்.. ஆபிஸ் விசயம் ஆண்களா..? எந்த காலத்தில் நீங்க இருக்கிங்க..” என்று கேட்டவன்.

பின் தாத்தாவிடம்.. “ இது வரை காலேஜ் ஸ்கூல் அட்மிஷனும் சரி வேலை அப்பாயிண்ட் மெண்ட்டும் சரி இது வரை எப்படியோ .. ஆனால் இனி என் கல்லூரி பள்ளியில் வேலையில் லேடீஸ் தான் அதிக அளவில் இருக்க வேண்டும்..” என்று சொன்னவன்..

இதை எல்லாம் பல்லை கடித்து கொண்டு கேட்டு கொண்டு இருந்த சிவ பிரகாஷுக்கு அப்படி ஒரு ஆத்திரம்… ஆனால் அதை வெளிக்காட்ட முடியாது அமைதி காத்தார்..



கல்லூரி பள்ளியில் அனைத்து அதிகாரமும் லிங்கா கை வசம் சென்று விட்டது.. மொத்தத்தில் இப்போது சிவ பிரகாஷ் ஒப்புக்கு சப்பானியாக தான் அங்கு சென்று கொண்டு இருக்கிறார்..

இவர் அங்கு போக வேண்டிய வேலையே கிடையாது.. ஆனால் சென்று கொண்டு தான் இருக்கிறார்.. அங்கு தான் அவன் ஆதிக்கம் என்று பார்த்தால், வீட்டிலுமா.. எதுவும் சொல்ல முடியாத நிலை.. அது தான் முதலிலேயே சொல்லி விட்டானே.. போகுபவர்கள் போங்க என்று..

அப்படி ஈசியா அவனிடம் எடுத்து கொடுக்கவா தான் அத்தனை கஷ்டப்பட்டோம்… ம் முடியாது.. இந்த வீட்டில் பெண் எடுத்ததில் இருந்து மூத்த மாப்பிள்ளை என்ற அந்தஸ்த்தை தன்னால் விட முடியாது என்று தன்னுள் உழண்டு கொண்டு இருந்தவரிடம்..

லிங்கா.. “ அட்மிஷன் விசயத்தில் கொஞ்சம் சந்தேகம் இருக்கு.. நீங்க க்ளியர் செய்யிறிங்களா இல்ல.. நம்ம எஸ். எம் நிர்வாக குழு மூலம் என் சந்தேகத்தை தீர்த்து கொள்ளட்டுமா…” என்று கேட்டதுமே..

சிவ பிரகாஷின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை வடிய.. அதை துடைத்து கொண்டே..

“என்ன லிங்கா நான் வர்றேன்.. நான் தான் தினம் வர்றேன்னா.. பின் என்ன நானே நானே..” என்ற அவர் பேச்சை அங்கு இருந்தவர்கள் புதியதாக பார்த்தனர்.

சிவ பிரகாஷ் பேச்சு எப்போதும் இது தான் இன்னும் என்ன என்பது போல் தான் பேசுவார்.. இப்படி திக்கி திணறி.. அதுவும் லிங்காவிடம் பணிவோடு பேசுவது மது யோசனையுடன் தன் பெரியப்பாவை பார்த்து கொண்டு இருக்க, அவளை தான்டி போகும் போது லிங்காவும் மதுவின் பார்வையை கவனித்து தனக்குள் சிரித்து கொண்டே.

லேசாக மிக மிக லேசாக யாரும் கவனிக்காத வகையில் அவள் பின்னலை இழுத்து விட்டு செல்லவும்.. மதுவின் பார்வை தன் பெரியப்பாவில் இருந்து லிங்காவிடம் சென்றது..

லிங்கா மதுவின் அந்த பார்வைக்கு காத்திருந்தது போல அவனின் புருவ மடிப்பில் கேள்வியிலும், அவன் அவள் மேனியில் கண் பதிந்த இடத்தையும் பார்த்து விட்டு தன்னால் முன்னால் பார்க்க.. அனைத்தும் சரியாக இருக்கவும், அவனை முறைத்து பார்க்க.. அவனோ புன்னகை மன்னனாக அந்த இடத்தை விட்டு அகன்றான்..

இவர்களின் இந்த ஒரங்க நாடகத்தை மற்றவர்கள் கவனிக்கவில்லை என்றாலுமே, சிவ பிரகாஷ் கவனித்து விட்டார்..

மனதிற்க்குள்.. எனக்கு இது போதுமே. திரும்பவும் உன்னை ஊரை விட்டு ஒட வைக்க என்று நினைத்து கொண்டவர் திகைப்பில் இருந்து ஒரு தெளிவுக்கும் வந்து விட்டார்.

கல்லூரியிலும் சரி.. பள்ளியிலும் சரி லிங்கா கேட்ட எதற்க்கும் சிவ பிரகாஷ் ஒழுங்காகவே பதில் அளிக்கவில்லை..

“மேனஜ்மெண்ட் கோட்டா இவ்வளவு அட்மிஷன்… இது எதுவும் சரியில்லையே…” என்ற லிங்காவின் கேள்விக்கு சிவ பிரகாஷிடம் திரும்ப திரும்ப..

“எனக்கு டைம் கொடு லிங்கா.. நான் சரி பார்த்து சொல்றேன். நம்ம பள்ளி.. நம்ம கல்லூரி என்று ஒழுங்கா நான் அகவுண்ட்ஸ் மெயிண்டன் பண்ணல. அதை சரி பார்த்து கொடுக்க எனக்கு கொஞ்சம் நாள் அவகாசம் தேவை..” என்று அப்போதைக்கு அவர் சமாளித்து விட்டார்..

லிங்காவுக்கு தெரிந்து விட்டது… இவருக்கு நாள் என்ன ஆண்டுகள் கொடுத்தாலுமே, அவரிடம் இருந்து தனக்கு சரியான பதில் வராது என்பது..



கணக்கு ஒழுங்கா இருந்தால் தானே.. கொடுக்க.. ஏதோ செய்து இருக்கிறார் என்று தெரிகிறது.. ஆனால் செய்த தொகை சிறியதா ..?பெரியதா…? என்பது தான் லிங்காவுக்கு தெரியவில்லை..

லிங்காவுக்கு இது மட்டுமா…? தெரியவில்லை.. அந்த கல்லூரியில் எவ்வளவு பெரிய விசயம் எல்லாம் நடந்தது..

இப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதும் தான் தெரியவில்லை… அது தெரிய வரும் போது அவன் என்ன உணர்வான்.. முதலில் அவன் என்ன ஆவான்… பார்க்கலாம்..

தன் வகுப்பில் அமர்ந்து இருந்த மதுவுக்கு லிங்காவின் பார்வையும் சீண்டலும் நல்லதிற்க்கா…? கெட்டதிற்க்கா…? என்று புரியவில்லை..

அவள் அன்னை காயத்திரி சொன்னது இது தான்.. லிங்கா தவறானவன் கிடையாது.. ஆனாலுமே நீ கொஞ்சம் பார்த்து நடந்துக்க அவ்வளவு தான் சொல்வேன் என்று.. இதை என்ன என்று எடுத்து கொள்வது என்று தெரியாது அவள் இன்னும் குழம்பி போனது தான் மிச்சம்..



தான் ஜாக்கிரதையாக இருக்க தான் போகிறோம்.. அது அவளுக்கு நிச்சயம் தான்.. அந்த ஜாக்கிரதை உணர்வு லிங்காவால் கிடையாது.

எப்போது தான் யூ.எஸ் சில் தன் படிப்பை பாதியில் விட்டு விட்டு இந்தியாவுக்கு வந்து .. இந்த கல்லூரியில் சேர்ந்தாளோ, அன்றில் இருந்து அவள் எப்போதும் விழிப்போடு தான் இருந்து கொண்டு இருக்கிறாள்..

ஏன் சில சமயம் தங்கள் வீட்டிலேயே கூட அந்த ஜாக்கிரதை உணர்வு அவளுக்குள் இருக்கும்.. அதற்க்கு காரணம்.. என்று ஏதோ நினைத்து அவள் மனது எங்கேங்கோ சென்றது போலவே அவள் கால்கலும் சென்றது போல.

ஏன் என்றால் அவர்கள் கல்லூரிக்கு அருகில் இருக்கும் அவர்கள் கால்லூரியில் ஹாஸ்ட்டல் முன் வந்து நின்றாள்.. நின்றவளை பார்த்த அந்த ஹாஸ்ட்டல் வாட்ச் மேன்..

“இன்னைக்கு யாரை பார்க்க வந்தேம்மா…? ஆனால் இப்போ ஹாஸ்ட்டலில் படிக்கிற பிள்ளைங்க யாரும் இல்லையேம்மா… இன்னும் காலேஜ் முடியல போல. நீங்க இன்னைக்கு காலேஜ் போகலையாம்மா..?” என்ற அவர் கேள்வியில் தான் ..

ஏதோ நினைவில் எப்போதும் போல் தன் கால்கள் தன்னை இங்கு அழைத்து வந்து விட்டது என்பதனை உணர்ந்தவள்.. அவரிடம் ஏதோ வாயில் வந்ததை பேசி விட்டு மீண்டும் கல்லூரிக்கு நடந்து வந்தவள் லிங்காவிடம் மாட்டி கொண்டாள்..

மீண்டும் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு செல்ல காரை எடுத்த லிங்கா எதிரில் நடந்து வருவது மதுவா…? மது தான் இன்று இந்த உடை தானே அவள் உடுத்தி கொண்டு இருந்தாள்..

உடை என்று லிங்கா நினைக்கும் போதே இதழில் புன்னகை தன்னால் வந்து ஒட்டி கொண்டது.. ஒவ்வொரு முறை தன் பார்வை அவள் மீது படும் விதமும், அதற்க்கு அவள் எதிர் வினையும் நினைத்த போதே அவனின் புன்னகை இன்னும் விரிந்தது..

மது என்ற நினைத்ததுமே லிங்கா தன் காரை நிறுத்தி விட்டு தான் அவளை பார்த்து கொண்டே இவ்வளவையும் நினைத்தான்.. பெண்களை அது போல பார்ப்பவனே கிடையாது அவன்.. அதுவும் அவன் வாழ்ந்த ஊரில் இலை மறை காய் எல்லாம் கிடையாது.. எல்லாம் பொது வெளியாக தான் அனைத்தும் நடக்கும்.. அதுவும் உடை.. பாதி அங்கங்கள் காட்டி கொண்டு.,. ஏன் அதற்க்கும் கீழே தான் உடை உடுத்துவார்கள்..

அவர்களை எல்லாம் கல்லையும், மண்ணையும் பார்ப்பது போல் தான் கடந்து வந்து இருக்கிறான்.. ஏன் இன்னும் கேட்டால் இரண்டு பெண்கள் இவன் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோருக்கு வந்த பெண்கள் அவனிடம் வெளிப்படையாகவே..

லவ் ப்ரபோஸ் செய்து இருக்கிறார்கள்.. இவன் மறுத்த போது.. சரி ஒரு நாள் டேட்டிங்காவது வா.?” என்று நேரிடையாகவே இவனை அழைத்த பெண்களும் உண்டு..

ஒரு முறை இவன் மாமா கலைசெல்வன் எதிரிலேயே ஒரு பெண் அழைக்க.. இவன் மறுக்க அந்த பெண் சென்ற உடன்..

“உன்னை போய் அழைக்கிறா பார்.. என்னை அழைத்தாலாவது ஏதாவது வேலைக்கு ஆகும்..” என்று கிண்டல் செய்தவரிடம்..

“ அப்படியா..? உங்க வேலை எப்படி என்று மாமி கிட்ட கேட்கிறேன்..” என்று கை பேசியை கையில் எடுத்த போது இவன் காலில் விழாத குறையாக தடுத்து என்று அந்த கூத்து எல்லாம் கனடாவில் நடந்து இருக்கிறது..

அப்படி இருந்தவன் இந்த பெண்ணை பார்க்கும் போது எல்லாம் சீண்டுவது. அதுவும் அவள் அங்கத்தை வைத்து.. தவறு என்றும் தெரிகிறது.



‘ என்னடா இது..? நீ அவ்வளவு தானா.... என்று அவனே கேட்டுக் கொண்டு இனி இது போல பேச கூடாது பார்க்க கூடாது என்று தான் நினைக்கிறான்..

ஆனால் அது எல்லாம் மதுவை பார்க்கும் வரை தான்… பார்த்த பின் தன்னால் அவன் வாயும் அவன் கட்டுப்பாட்டில் இல்லை.. அவன் கண்ணும் அவன் கட்டுப்பாட்டை மீறி கண்ட படி அலை மோதுகிறது.. ஏன் அவன் புருவம் கூட அவன் சொல் பேச்சை கேட்பது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்…

இவள் நான் தவறான இடத்தில் பார்க்கிறேன் தான்.. ஆனால் தவறாக பார்க்கிறேனா கிடையாது.. அப்படி என்றால்.. இவன் நினைக்கும் போதே மது இவன் காருக்கருகில் நடந்து வர..

மதுவை தன் காரை கடக்க விடாது லிங்கா சட்டென்று தன் கார் கதவை திறந்தான்.. காரின் மிக மிக அருகில் மது நடந்து வந்ததால் கார் கதவை திறந்ததும் பயந்து விட்டாள்..

காருக்கும் தனக்கும் இடை வெளியை ஏற்படுத்திய பின் தான் யார் ..என்றே பார்த்தாள்.. பார்த்த உடன் அது லிங்கா என்றதும், சட்டென்று மதுவின் முகத்தில் ஒரு நிம்மதி.. பின் ஒரு கோபம்.. இது எல்லாம் வார்த்தையினால் கிடையாது பாவத்தால் மட்டுமே அவனிடம் காட்டினாள் பாவை..

அது என்னவோ மதுவுக்கு லிங்கா உடன் சகஜமாக அவளாள் பேச முடியவில்லை.. பேச எங்கே விடுகிறான்.. அவன் எதிரில் வந்தாலே நான் தான் குனிந்து விடுகிறேனே.. குனிகிறேன் என்பதை விட லிங்கா குனிய வைத்து விடுகிறான் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

இப்போது ஏன் வீதியில் இது போல செய்கிறான் என்று பார்த்தவள் எதுவும் பேசாது அவனை கடக்க முயன்றவளை மேல நடக்க விடாது அவள் வழி மறித்து நின்றான் லிங்கா.

“ சே..” என்று விட்டு அவனை சுற்றி நடந்து போக பார்த்தவளை அந்த வழியிலும் போக விடாது லிங்கா தடை போட.

“ இப்போ என்ன வேண்டும் உங்களுக்கு.?” என்று கோபமாக கேட்க வேண்டும் என்று நினைத்தாலுமே, மதுவுக்கு அவனிடம் அப்படி பேச வரவில்லை.. அதனால் சாதாரணமாக தான் கேட்டாள்..

“இப்போதைக்கு வேறு எதுவும் வேண்டாம். இப்போ ஒரே ஒரு பதில் வேண்டும்.. இந்த பக்கம் எங்கு போயிட்டு வர.. அதுவும் காலேஜ் டைமில்..?” என்று தன் கை கடிக்காரத்தில் நேரத்தை பார்த்த வாறு கேட்டான்..

எதுவும் யோசிக்க வைக்காததால், சட்டென்று பொய்யை அவளாள் சொல்ல முடியவில்லை..

“சும்மா சும்மா இந்த பக்கம் அப்படியே நடந்துட்டு வந்தேன்..” என்று அவள் திக்கி திணறி சொன்ன விதத்திலேயே லிங்காவுக்கு தெரிந்து விட்டது.. அவள் சொல்வது அப்பட்டமான பொய் என்று..

லிங்கா இன்னொன்றும் கவனித்தான்.. அது மது அந்த வீட்டில் யாரிடமும் அவ்வளவு நெருக்கமாக இல்லை என்பது.. அதே போல் அனைவரையும் ஒரு யோசனையுடன் பார்ப்பதையும், இவன் கவனித்து இருக்கிறான்..

தானும் அது போல தான் மற்றவர்களிடம் தள்ளி இருக்கிறேன்.. அதே போல் அவர்களின் செயல்களையும் கவனிக்கிறேன்.. அதற்க்கு ஒரு காரணம் இருக்கிறது.

ஆனால் இவளும் ஏன்..? என்று யோசனை ஒரு பக்கம் இருந்தாலுமே, லிங்கா மதுவிடம்..” எங்கு போறே..? என்ற கேள்வியில் மது சட்டென்று..

“ வீட்டுக்கு..? என்று விட்டாள்..

“ ஒ அப்போ காரில் ஏறு நானும் வீட்டிற்க்கு தான் போகிறேன்..” என்று கல்லூரி செல்வதை விடுத்து வீட்டிற்க்கு போவது போல் சொல்ல.

அவன் சொல்வதை மறுக்க முடியாது காரில் ஏறினாள்..” இல்ல வேண்டாம் என்று மறுத்தாள் பேச்சுக்கள் தான் நீளும்.. என்று நினைத்து தான் மது எந்த மறுப்பும் சொல்லாது காரில் ஏறியது..

மது அமர்ந்ததும் காரை செலுத்திய லிங்காவும் எதுவும் பேசாது அமைதியாக வர.. மதுவும் இப்படியே எந்த பேச்சும் இல்லாது வீடு சென்றாள் போதும் என்ற மனநிலையில் மது இருந்ததால் அவளின் வாய் திறக்கவில்லை..

அதனால் அங்கு அமைதி நிலவியது. அவர்கள் கல்லூரியில் இருந்து வீடு சிறிது தூரம் .. தூரம் என்றால் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும்..

அதனால் பத்து நிமிடம் கடந்த பின் லிங்கா தன் காரில் இருந்த ப்ளேயரை தட்டி விட. அதில் முதல் பாடலே..



அன்பே.. அன்பே.. கொல்லாதே கண்ணே …

கண்ணைய் கிள்ளாதே..

பெண்ணே புன்னகையில் இதயத்தை

வெடிக்காதே



ஐயோ உன்னசைவில் உயிரை குடிக்காதே

அன்பே அன்பே கொல்லாதே கண்ணே

கண்ணே கிள்ளாதே

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்.

அடடா பிரம்மன் கஞ்சனடி..

சற்றே நிமிர்ந்து தலை சுற்றிப் போனேன் ..

ஆஹா அவனே வள்ளலடி

என்ற பாடல் ஒட.. லிங்காவின் உதடுகளும் அந்த பாடல் வரிகளை மெல்ல முனு முனுத்து கொண்டு வந்தது.

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் என்ற வரி வரும் போது அவன் கண்கள் தன்னால் அருகில் அமர்ந்து இருந்த இடுப்பு பகுதியை பார்த்தது.

அன்று மது சுடி தான் அணிந்து இருந்தாள்.. அதனால் இடை தெரியவில்லை.. ஆனால் வடிவம் அப்பட்டமாக உடும்பு போல வளைந்து தெரிந்ததை பார்க்கும் போதே..

அடுத்த வரியான.. சற்றே நிமிர்ந்து தலை சுற்றி போனேன் ஆனால் அவனே வள்ளலடி.. எனும் வார்த்தை கேட்டப்படி அவனும் அவன் பார்வையை நிமிர்ந்த துப்பாடையும் மீறி…



உன் விசயத்தில் அவன் ரொம்பவே வள்ளலாக போயிட்டான் போல. என்று அதுவும் மெல்ல முனு முனுக்க மதுவோ.. அவன் என்னவோ தன்னிடம் பேசுக்கிறான் என்று நினைத்து.

“ என்ன..?” என்று கேட்டாள்..

இதற்க்கு மேல் இந்த பாடல் வரிகள் கேட்டால் தாளாதுப்பா என்று நினைத்து லிங்கா ப்ளேயரை அணைத்து விட்டு..

அவளிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்.. “ யூ.எஸ்லே ஏன் படிப்பை டிஸ்கண்டினீயு செய்துட்ட… அங்கே அங்கே அங்கு படிக்க சான்ஸ் கிடைக்குமா என்று காத்து கொண்டு இருக்காங்க. நீ என்ன அவ்வளவு அசால்ட்டா தூக்கி போட்டு விட்டு இந்தியா வந்துட்ட.?” என்று தெரிந்து கொள்ள தான் லிங்கா மிக சாதாரணமாக கேட்டது..

ஆனால் அது போல் பார்வை பார்க்கும் போது கூட வராத கோபம்..லிங்காவின் இந்த கேள்விக்கு மதுவுக்கு வந்தது.

“உங்களுக்கு ஏன்.. அது எல்லாம்..?” என்று கேட்டதற்க்கு..

முகத்தில் குழப்பம் எழ.. “ தெரிந்து கொள்ள தான் கேட்டேன்.. தாத்தா நீ சேர்ந்த காலேஜ் சொன்னார்… கனடாவில் இருந்து அங்கு படிக்க பசங்க அவ்வளவு ஆசைப்படுவாங்க. ஏன் நானும் அங்கு படிக்க நினைத்தேன். அதான் ஏன் டிஸ்கன்டினியூ செய்த என்று தெரிஞ்சிக்க கேட்டேன்..?” என்று அப்போதும் லிங்கா சாதாரணமாக தான் பேசினான்..

ஆனால் மது அதற்க்கும்.. “ இது என்ன பொது அறிவா..? கேட்டு தெரிந்து கொள்ள..” என்ற மதுவின் இந்த பேச்சில் லிங்கா அடுத்து எதுவும் கேட்கவும் இல்லை பார்க்கவும் இல்லை..

ஆனால்; மனதில் யோசனை பல.அந்த காலேஜ் விட்டு இந்தியா வந்ததிற்க்கு ஏதோ பலமான காரணம் இருப்பது போல அவனுக்கு தோன்றியது..

காரணம் லிங்கா இங்கு வந்து சில மாதங்கள் தான் ஆகிறது.. அவன் பார்த்த வரை மது கோபமாக பேசி அவன் பார்த்தது கிடையாது ..

அப்படி பட்டவள் ஒன்றும் இல்லாத விசயத்திற்க்கு இந்த அளவுக்கு கோபம் படுவாளா.? இந்த அளவுக்கு கோபப் பட வேண்டும் என்றால், கண்டிப்பாக பெரிய விசயமாக தான் இருக்கும்..

படிப்பவர்களின் கனவு.. அமெரிக்காவில் அந்த யூனிவர்சட்டியில் படிக்க வேண்டும் என்பதாக தான் இருக்கும்.. அங்கு படித்து கொண்டு இருந்தவள் அதை விட்டு இங்கு வருவது என்றால்.

மதுவோ இப்போது நான் ஏன் கோபப்பட்டேன்.. வீட்டில் உள்ளவர்களுக்கு அந்த காலநிலை என் உடம்பிற்க்கு ஒத்து கொள்ளவில்லை என்று சொல்லியது போல… இவனிடமும் சொல்லி இருந்தால் போதும்.. ஏன் கோபப்பட்டு நானே அவனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துக்கிறேன்..

அதுவும் இல்லாது இப்போது கல்லூரி நிர்வாகம் முழுவதும் இவன் கட்டுப்பாட்டில் இருக்கும் போது அவனுக்கு சந்தேகம் ஏற்படும் படி பேசுவது சரியில்லையே..

அதுவும் பேசிக் கொண்டு வந்தவன் இப்போது அமைதியாகி விட்டான் என்றால், இதை பற்றி யோசிக்கிறானா…? என்று நினைத்து கொண்டே பக்க வாட்டில் திரும்பி அவன் முகத்தை பார்த்தாள்..

லிங்காவின் முகம் சாதாரணமாக இருப்பது போல் தான் தெரிந்தது . ஆனால் பேசிக் கொண்டு வந்தவன் ஏன் அமைதியாகி விட்டான் என்று யோசித்து கொண்டே அவன் முகத்தையே மது பார்த்து கொண்டு இருக்க.

வீதியை பார்த்த வாறு கார் ஒட்டிக் கொண்டு வந்த லிங்கா சட்டென்று திரும்ப மதுவை பார்த்தான்..



பார்த்தவன். “ என் கிட்ட ஏதாவது சொல்லனுமா.” என்று கேட்டதற்க்கு இல்லை என்று மது தலையாட்ட.

“இல்ல கேட்கனுமா.?” என்றதற்க்கும் இல்லை என்று தான் தலையாட்டினாள்..

அப்போ நேரா பார்.. என்னை பார்க்காதே என்று சொன்னவன் அடுத்து அவளிடம் பேசவில்லை.. மதுவும் அவனை பார்க்கவில்லை..’

சிறிது நேரம் கழித்து வீடு வந்து விட.. விட்டால் போதும் என்று நினைத்து வீட்டிற்க்குள் நுழைந்தவள்.. கூடத்தில் அனைவரும்.. வீட்டு உறுப்பினர் ஒருவர் விடாது அமர்ந்து இருப்பதை பார்த்து மது தன் அறைக்கு போகாது தயங்கி அங்கேயே நின்று விட்டாள்..

காரை பார்க் செய்து விட்டு வந்த லிங்காவும் என்ன என்பது போல் பார்க்க..

சோமசுந்தரம்.. “ உனக்கு எத்தனை முறை கால் செய்வது..” என்று அவர் கேட்கும் போது தான் தன் பேசியை எடுத்து பார்த்தான்..

அது ஏரேப்ளையின் மோடுக்கு மாறி இருப்பதை அப்போது தான் கவனித்து விட்டு அதை சரி செய்யும் போது..



சிவ பிரகாஷ்.. “அது தான் சின்ன பையனை இவ்வளவு பெரிய பதவியில் உட்கார வைக்க கூடாது என்று சொல்வது.. இதோ அவன் வயதிற்க்கு உரிய வேலையை பார்த்துட்டு வரான்.. அதற்க்கு தடையா இருக்க கூடாது என்று தான் போனை சுச் ஆப் செய்து விட்டான்..” என்று மதுவோடு வந்ததை சுட்டி காட்டி பேசினார்.

லிங்கா அவரை ஒரு ஆளாக கூட மதிக்காது.. சோமசுந்தரத்தை பார்த்து. “என்ன தாத்தா.? ஏதாவது பிரச்சனையா..” என்று கேட்டான்..

அதற்க்கு சோமசுந்தரம்.. “ ஆமாம்பா காலேஜ் ஹாஸ்ட்டலில் ஒரு பெண் தற்கொலை செய்து கிட்டா..” என்று அவர் சொன்னதுமே..

சிறிது இடைவெளியில் நின்று கொண்டு என்ன என்று கவனித்து கொண்டு இருந்த மது சோமசுந்தரத்தின் இந்த பேச்சில் அவர் அருகில் ஒடி வந்து..

“ எந்த அறையில் தங்கி இருந்த பெண் தாத்தா..?” என்று பர பரப்பாக கேட்டவளையே லிங்கா சந்தேகத்துடன் பார்த்து கொண்டு இருந்தான்..
 
Well-known member
Joined
Jun 2, 2024
Messages
135
Edho perusa intha sivapragash college la panran pola...paapom enna nadakuthunu...Madhu oru puriyatha pudhir ah irka...ava moolama enna poogambam vedikka poguthu nu paaka waiting...
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
Edho perusa intha sivapragash college la panran pola...paapom enna nadakuthunu...Madhu oru puriyatha pudhir ah irka...ava moolama enna poogambam vedikka poguthu nu paaka waiting..காலேஜில் பிரச்சினை தான்.. மது புரியாத புதிர் தான்.. ஆனால் லிங்கா புரிந்து கொண்டு விடுவான்
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
270
சிவப்ரகாஷ் ஏதோ தப்பு பண்ணிட்டு இருக்காரு சீக்கிரமே மாட்டிக்க போறாரு.....

மது மர்மமாவே இருக்கா..... இவ ஏன் இப்படி பதறுறா.... 🤔
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
சிவப்ரகாஷ் ஏதோ தப்பு பண்ணிட்டு இருக்காரு சீக்கிரமே மாட்டிக்க போறாரு.....

மது மர்மமாவே இருக்கா..... இவ ஏன் இப்படி பதறுறா.... 🤔
இன்று இரவு இந்த கதையின் அத்தியாயம் கொடுத்து விடுவேன் பா
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454

சிவப்ரகாஷ் ஏதோ தப்பு பண்ணிட்டு இருக்காரு சீக்கிரமே மாட்டிக்க போறாரு.....

மது மர்மமாவே இருக்கா..... இவ ஏன் இப்படி பதறுறா.... 🤔நன்றி பா தொடர்ந்து படித்து கருத்துகள் சொல்லவும் நன்றி🙏💕 பா
 
Member
Joined
May 11, 2024
Messages
83
ஹாஸ்டல் அடிக்கடி போய் ங்க இருக்க பொண்ணுங்க கிட்ட பேசினிருக்கா மது அது வாட்சமன் பேசும் போதே தெரியுது ஆனா ஏன் போகுஅனும் எதுக்கு பேசணும்
 
Top