Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

மேவியமே மந்ராவின் மந்திரம்...5.2

  • Thread Author
அத்தியாயம்..5.2

இங்கு ராஜேந்திர பூபதி தன் மகனிடம்… “பாட்டி வீட்டவங்க வர எல்லா ஏற்பாடும் செய்து விடு தீக்ஷா…” என்று சொன்னது தான் தாமதம்… அதற்க்கு உண்டான அனைத்து வேலைகளையும் அவர்கள் வரும் இந்த இடைப்பட்ட நேரமான இரண்டு மணி நேரத்தில் செய்து முடித்து விட்டான்…

எப்போதும் இது போல் அவன் செய்வது தான்.. அரசியல் கட்சி மீட்டிங் கூட சில சமயம் தீக்ஷேந்திரன் ஊரில் இருக்கும் சமயங்களில்

“நீ கொஞ்சம் பாரு தீக்ஷா….” என்று தந்தை சொல்லுவார் தான்.. அரசியலை பொறுத்த வரை தன் நிழலை கூட நம்ப கூடாது என்பது தான் அவர் வேதாந்தம்… அதன் தொட்டு.. ஒரு சில முக்கியமான விசயங்களை மகனிடம் ஒப்படைப்பார்..

தீக்ஷேந்திரனுமே… தந்தை எதிர் பார்த்ததிற்க்கு மேலாகவே அந்த கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து விடுவான் என்பது வேறு விசயம். அதை எல்லாம் தன் உதவியாளன் ராகவ்வை வைத்து.. இவன் இது இது இன்னது செய் என்பதோடு சரி… காரணம் அவனுக்கே தனிப்பட்டு அத்தனை முக்கியமான கேஸ் விசயம் இருக்கும்..

ஆனால் இன்றோ ராகவ்விடம் சொன்னதோடு மட்டும் அல்லாது ராகவ் கூடவே இவனுமே நிற்க…. வேலையாட்கள் இன்னுமே கூடுதல் கவனத்தோடு வேலைகள விரைந்தும் கச்சிதமாகவும் செய்தனர்..

என்ன தான் இருந்தாலும் ராகவ்வும் அங்கு வேலை செய்பவன் கணக்கில் தானே வருவான்.. அவன் நின்று வேலை வாங்குவதை விட முதலாளியான தீக்ஷேந்திரனே வந்து நின்றால்,

அப்போது வருபவர்கள் எத்தனை முக்கியமானவர்கள் என்பதை வேலை செய்பவர்கள் அறிந்து கொண்டனர்.. தீக்ஷேந்திரனுக்கு இதுவும் வேண்டும் தானே.

ராகவ் கூட தீக்ஷேந்திரனின் இந்த செயல்களை கிண்டலாக பார்த்து கொண்டு இருந்தான்.. எதுவும் சொல்லவில்லை… ஆனால் அவனின் பார்வையை கண்டு கொண்ட தீக்ஷேந்திரன் ராகவ் தோள் மீது ஒரு சின்ன அடி வைத்தவன்..

“வேலையை பாரு மேன்…” என்று இதை சொல்லும் போதே ஏனோ அவனின் முகத்தில் வெட்கம் தன்னால் வந்து விட்டது…

அதை பார்த்த ராகவ்.. இத்தனை நேரம் என்ன தான் நட்பாக இருந்தாலுமே, வேலை நேரத்தில் தான் தீக்ஷேந்திரனிடம் வேலை செய்கிறேன் என்பது போல் இது வரை நடந்து கொண்டு இருந்த ராகவ்.. இன்று.. அதை அனைத்தையும் உடைத்தவனாக..

“தீக்ஷா.. இன்னைக்கு உங்க அப்பா அவர் பேமிலியை வெல்கம் பண்ண வேலையை தான் செய்ய சொன்னார்…” என்று ஒரு மாதிரி தன் பேச்சை இழுத்து நிறுத்தியவனிடம்..

தீக்ஷேந்திரன்.. “ நானுமே அந்த வேலையை மட்டும் தானே மேன் செய்யிறேன்…” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ராகவ்வின் கிண்டல் பார்வையில்..

தீக்ஷேந்திரன் தொடர்ந்து… “ அப்பா பேமிலி என் பேமிலியும் தானே ராகவ்…” என்று சேர்த்து கூறியவனின் பேச்சை நான் நம்பவில்லையே என்று பார்த்த ராகவ்..

பின்….” எனக்கு என்னவோ இது பேமிலியை வெல்கம் பண்ணும் நிகழ்வா தெரியல… உன் வருங்காலத்தை வர வேற்கும் நிகழ்வா தான் தெரியுது.” என்று சொன்னவன் பின் அவனே..

“என் பேமிலி தான் என் வருங்காலம் என்று சொல்லிடாதே தீக்ஷா.. நான் எதை சொல்றேன் என்று உனக்கு தெரியும்… அது எனக்கும் தெரியும் என்று உனக்கு தெரியும்.” என்று சொன்னவன் பின் அங்கு இருந்த பூசென்டுகளை காட்டி…

“ஆனா இந்த பொக்கே ஒரு ஆளுக்கு போக வேண்டி எல்லோருக்கும் இதை நீ கொடுக்க போற பாரு…” என்று அங்கு இதயம் வடிவில் வடிவமைக்கப்பட்ட. அதுவும் அனைத்து மலர்களுமே காதலின் நிறமாக கொண்ட சிவப்பு மலர்களை கொண்டதாக இருந்தவைகளை காட்டி சொல்ல..

தீக்ஷேந்திரன் நண்பனின் இந்த கிண்டலை ரசித்தான் என்று தான் சொல்ல வேண்டும்.. இது எல்லாம் அவனுக்கு புதிய அனுபவம் என்று தான் சொல்ல வேண்டும்..

ஒவ்வொரு மணி துளிகளையும் பணமாக மாற்றுபவன்.. இன்று… விடலை பையன் போல்.. அனைவரையும் பூ செண்டு கொடுத்து வர வேற்க நினைத்தவன்…

தான் பார்க்காது தன் மனதில் மந்திரம் செய்து கொண்டு இருக்கும் மந்ராவுக்கு இதயம் வடிவிலான பூ செண்டை கொடுக்க எண்ணினான்..

ஆனால் ஏற்கனவே முன் என்ன நடந்து இருக்கிறது என்று தெரியாது இப்போது எடுத்த உடனே.. மந்ராவுக்கு இது கொடுத்தால், சரியா வருமா. என்று யோசித்தவன்.

மந்ராவுக்கு மட்டும் கொடுத்தால் தானே பிரச்சனை.. அனைவருக்கும் கொடுத்தால், இது போல காட்சிகள் படத்தில் வந்தாலே… என்ன டா இது பைத்தியக்காரன் போல… இதையும் பார்க்கிறாங்க பாரு… அவன் காசு பாக்க படத்தை பார்க்கிறவங்களை பைத்திக்காரன் ஆக்குறான் என்று நினைப்பவன்..

இன்று காதல் படுத்தும் பாடு… அதே பைத்தியக்கார தனத்தை அவன் நடத்திக் கொண்டு இருக்கிறான்…. இதோ நண்பன் முன் இது போல் தன்னை கிண்டல் செய்தான் என்ன செய்து இருப்பானோ… ஆனால் இன்று.. இன்னும் இது போல் பேசினால் நன்றாக இருக்கும் என்ற அளவுக்கு அவனுள் மந்ரா மந்திரம் செய்து விட்டாள்…

அந்த வீட்டில் பேரன் காதல் போதையில் இருக்க… பாட்டனோ…. தன் மகள் சொன்ன விசயத்தை கேட்டதில் இருந்து அவர் மனது ஒரு நிலையில் இல்லாது பட பட என்று அடித்து கொண்டது…

பின் மகள் சொன்னது கூட நம்பாது….தன் விசுவாசியை பேசியின் மூலம் அழைத்து கேட்க… அவரே.

“நானும் கேட்கனும் என்று நினைத்தேன் ஐய்யா. என்ன நடக்குது ஐய்யா.. நம்ம சட கோபனை கட்சியின் உறுப்பினரில் இருந்தே நீக்க போறதா… கட்சியில் பேசிக்கிறாங்க…

முதல் அமைச்சருக்கு இன்னைக்கு முக்கியமான மீட்டிங்க. வரல.. அப்புறம் ஏதோ முதலமைச்சர் வீட்டில் முக்கியமானவங்க வருகை என்பது போல வேறு பேச்சு இருக்கு…” என்று சொன்னவர் பின் கடைசியாக.

“யார் ஐய்யா அது ….?” அந்த வீட்டை பொறுத்த வரை நீங்க தான் முக்கியமானவங்க…” என்று சொன்னவர்,,

பின் ஏதோ யோசிப்பது போல்…. “ அமெரிக்காவில் இருந்து உங்க மகன் குடும்பம் வராங்கலா…. ஐய்யா..?” என்று கேட்டவர் பின் அவரே.

“ஆனா அவர் வரதுக்கு எல்லாம் இப்படி செய்தது இல்லையே…” என்று சொன்னவர் தெரிந்து பேசினாரா.? தெரியாமல் பேசினாரா…? என்று தெரியவில்லை..

ஆனால் கேள்வி கேட்ட சேக்கிழாரின் கேள்விக்கு பதில் சொல்லாது இவர் பாட்டுக்கு கேள்வியாக கேட்டு தள்ளினார்… அதுவும் எதிர் பக்கத்தில் இருந்து பதில் வருகிறதா… இல்லையா….? அது பற்றி கூட கவலை படாது…

இவரின் இந்த ஒவ்வொரு கேள்வியும்.. சேக்கிழாரை பழையது அனைத்துமே நினைக்க வைத்தது… சொன்னது போல் தன் மகன் குடும்பத்துடன் வரும் போது… ராஜேந்திர பூபதியும் சரி… தீக்ஷேந்திரனும் சரி… வீட்டில் இருந்து வர வேற்பது கூட அதிசயம் தான்… அதுவும் அவர்கள் வீட்டில் இருந்தால் தான். அந்த வர வேற்புமே…. அனைத்தையும் நினைத்தவருக்கு அப்படி ஒரு கோபம். அந்த கோபத்தை

தன் எதிரில் கை பிசைந்து நின்று கொண்டு இருந்த தன் மகளிடம் தான் அவர் காட்டினார்…

“முதல்ல நீ இது போல பயப்படுவதை நிறுத்து.. புரியுதா… நீ பழைய நீல கண்டன் பூபதி ஐய்யா கிட்ட வேலை பார்த்த சேக்கிழார் மகள் இல்லை….

முன்னாள் முதல் அமைச்சரின் மகள்… இன்னாள் முதல் அமைச்சரின் மனைவி…. லீடிங்க லாயர்… தீக்ஷேந்திரனின் அம்மா…. புரியுதா ….?

இப்போ அவங்க உன் வீட்டுக்கு தான் வராங்க… இது உன் வீடு… அவங்க கஷ்டப்பட்டு போலீசில் அடி வாங்கி.. உன் புருஷன் உதவியோடு வெளியில் வந்து… வேறு நாதி இல்லாமல் இங்கு வராங்க. இந்த வீட்டின் எசமானி நீ.. இது போல பயந்து எல்லாம் இருக்கனும் என்று உனக்கு எந்த அவசியமும் இல்ல..

உன் புருஷன் கிட்ட அவங்க உறவு தொடரனும் என்றால், உன் கிட்ட அவங்க அனுசரிச்சிட்டு தான் போகனும்.. முதல்ல இதை உன் மண்டையில் ஏத்திக்க.. நீ எல்லாம் என்னத்த வெளி நாட்டில் படிச்சியோ….” என்று சேக்கிழார் பேச்சுக்கு..

காவ்யா ஸ்ரீ … ஆமாம் ஆமாம் என் வீட்டிற்க்கு தான் அவங்க வராங்க.. என்று தந்தையின் பேச்சுக்கு திடம் படுத்திக் கொண்டு இருந்த காவ்யா ஸ்ரீ…

சேக்கிழார் கடைசியாக சொன்ன… “ நீ வெளிநாட்டில் படிச்சு…” என்ற அந்த வார்த்தையானது இத்தனை நேரம் தன்னை திடப்படுத்திக் கொண்டது ஒன்றும் இல்லாது போக போதுமானதாக ஆகி விட்டது..

மீண்டும் சேக்கிழார்… “ இன்னும் என்ன….?” என்று அதட்டல் போட.. ஒன்றும் இல்லை என்று தலையாட்டிய மகளை பார்த்து …

“என்னவோ போ உன்னை வெச்சிட்டு….” என்று கடிந்தவர்.. பின் ஏதோ நினைத்து கொண்டவர்…

மகளின் மூலம் தெரிந்த விசயமான. தனக்கு பிசியோ செய்ய வந்த பெண் ஜீவிதாவின் பெண் தான் என்பது நினைவுக்கு வர… அன்று அந்த பெண் எப்படி இருந்தாள்.. அன்னைக்கு ரொம்ப வலியில் கண்ணாடி வேறு போடல.. என்று தன்னையே கடிந்து கொண்டவர் என்ன நினைத்தாரோ…

“தீக்ஷா என்ன செய்யிறான்…” என்று ஒரு வித யோசனையுடன் கேட்டவருக்கு…

“அவங்க எல்லாம் வரதுக்கு உண்டானதை பார்க்கிறான்..” என்றதும்..

“நீ இதே முதல்ல சொல்றதுக்கு என்ன….? ” என்று மகளை கடிந்து கொண்டவர் தன் பேரனுக்கு அழைத்தார் கை பேசியின் மூலம்…

இங்கு அனைத்தும் முடிந்து அப்போது தான் தன் அறைக்கு செல்ல நினைத்தான்.. தான் ரெடியாக வேண்டி… என்னை பார்த்து இருப்பா தான்… மீடியாவில்.. ஆனால் நேரில் பார்க்கும் போது அவளின் பார்வைக்கு நான் நன்றாக தெரிய வேண்டும் என்று நினைத்து தான் தன் அறைக்கு சென்றது…

அப்போது தான் சேக்கிழார் தன் பேரனை அழைக்கவும்…

தன் கை பேசியில் தாத்தாவின் எண் வரவும். உடனே ஏற்றவன்… முதல் வார்த்தையாக..

“நீங்க ரொம்ப லேட் தாத்தா… முன்னவே கூப்பிடுவிங்க என்று நினைத்தேன்…” என்று சொன்னவன்..

பின்.. “ என்ன தாத்தா உங்க மகளுக்கு தைரியம் சொல்லிட்டு இருந்திங்கலா என்ன….?” என்று கிண்டலாக கேட்டான்..

இந்த கேலி கிண்டல் பேச்சுக்கள் தாத்தான் பேரனுக்கு இடையில் எப்போதும் நடப்பது தான்.. ஆனால் இன்று பேரனின் இந்த கிண்டல் தாத்தனுக்கு பிடிக்கவில்லை போல.

“என் மகளுக்கு நான் ஏன் தைரியம் சொல்லனும்… இது அவள் வீடு தீக்ஷா… வரவங்க தான் என் பொண்ணு கிட்ட பாத்து நடந்துக்கனும்…” என்று சொன்னவரின் பேச்சில் அத்தனை அழுத்தம்.. அவர்கள் என் மகளுக்கு மரியாதை கொடுத்து தான் ஆக வேண்டும்.. என்று..

தாத்தனின் பேச்சுக்கு பேரனும்… “ அப்புறம் என்ன தாத்தா. அப்பாவின் பேமிலியை வர வேற்க பேமிலியா ரெடியாகலாம்.. ஒகே வா….” என்று சொல்லி அவன் கை பேசியை அணைக்கும் போது சேக்கிழார்..

“நான் உன் கிட்ட சொல்லி இருக்கேன் தீக்ஷா… இந்த வீட்டிற்க்கு என் பேத்தி தான் மருமகள் என்று….” தாத்தனின் பேச்சு காதில் விழ…

“நீங்க சொன்னது நியாபகம் இருக்கும் போது அப்போ நான் சொன்னதும் உங்களுக்கு நியாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன் தாத்தா.. எனக்கு அது போல எந்த ஐடியாவும் இல்லை என்று சொன்னது….” சொல்லி விட்டு பேசியை அணைத்து விட்டவன்..

தயார் ஆக அறைக்கு வந்தவன்… தன் மெத்தையில் அப்படியே மல்லாக்காக விழுந்து விட்டான்… தீக்ஷேந்திரா.. கட்சி அரசியலை நீ சமாளிச்சது பெருசு இல்ல… இனி வீட்டு அரசியலை சமாளிச்சி.. நீ உன் ஆசையையும் நிறைவேத்திக்கிறது தான் பெருசு… அவனுக்கு அவனே சொல்லி கொண்டவன்..

அன்று பார்த்து பார்த்து தயாராகிய பின் தான் தன் அறையை விட்டு வெளியில் வந்தது.. அங்கு அவனுக்கு முன்பே அனைவரும் இருக்க.

அவன் நேராக தன் தந்தையின் பக்கம் சென்றவன்.. அவரின் தோள் மீது கை வைத்து .

“ப்பா” என்று அழைத்தவனிடம் ஒரு நிறைவான புன்னகை புரிந்தார்… இதை சேக்கிழாரும் கவனித்தார் தான்…. தான் கட்டி வைத்த கோட்டை மெல்ல மெல்ல தரை மட்டம் ஆகி விடுமோ… என்று தந்தை மகன் பிணைப்பை பார்த்து நினைத்து கொண்டவர்..

பின் அவருக்கு அவரே… இல்ல இல்ல அப்படி இல்ல…. பேரனுக்கு என் மீது பாசம் மரியாதை இருக்கு… அது யார் வந்தாலும் மாறி போகாது என்று நினைத்து கொண்டவருக்கு தெரியவில்லை…

காதல் என்ற ஒன்று மனதில் வந்து விட்டால், அதுவும் தன் மனதிற்க்கு இனியவளை தாழ்வாக பேசுவது போல் வார்த்தைகளை யார் விட்டாலுமே, அவன் முன் பாசம் நிற்காது காதல் தான் முன் வந்து நிற்கும் என்பதை…

அதுவும் நாளை மறு நாள் என்று நிகழாது… சேக்கிழாருக்கு இன்றே தன் தன் பேரனின் மனது புரியும் படியான நிகழ்வு நடக்கும் என்பதை அவர் எதிர் பார்க்கவில்லை…

தீக்ஷேந்திரன் மனது ஆர்ப்பரிப்பது போலவே வெளியில் தீக்ஷேந்திரன் வைத்த பேன்ட் வாத்தியத்தின் சத்தம் கேட்ட நொடி… இத்தனை நேரம் தந்தையின் கையை பற்றி கொண்டு இருந்தவன் சட்டென்று விட்டவனாக அனைவருக்கும் முன்பாக தன் தந்தையின் குடும்பத்தை பார்க்க ஆவலாக முன் சென்றான்.

அது மற்றவர்களின் பார்வைக்கு ஆனால் ராகவ் தீக்ஷேந்திரனின் இந்த செயலை பார்த்து பாஸ் இவரே தன் அப்பன் குதிருக்குள் இல்லை என்று காட்டி கொடுத்து விடுவார் போலவே என்று நினைத்து கொண்டு தீக்ஷேந்திரன் பின் ஓடினான்…

விவேகானந்த் ராஜேந்திர பூபதியின் கட்டளைக்கு உட்ப்பட்டு சுதாகர் மகேந்திரன் வினோத் மூவரையும் அவர்கள் வீட்டிற்க்கு அழைத்து சென்று பின் அங்கு இருந்த அனைவரையும்… முறையாக பாதுக்காப்போடு… கூட மரியாதையோடு அழைத்து வந்தார்..

இவர்கள் வரும் போதே மீடியோ மொத்தமும்… முதல் அமைச்சர் பங்களாவின் முன் தான் குவிந்து இருந்தனர்..

சாதாரணமாகவே முதல் அமைச்சரின் இல்லம் முன் மீடியா ஆட்கள் இல்லை என்றால் தான் ஆச்சரியம் .. இன்று முதல் அமைச்சர் ஊரில் இருந்து கொண்டே அவரே ஏற்பாடு செய்து இருந்த மீட்டிங்கை ரத்து செய்து விட்டார் என்ற செய்தி வெளியாகிய உடனே…. முதல் அமைச்சரின் பங்களாவை விட்டு தள்ளி மீடியா ஆட்கள் வட்டம் இட ஆரம்பித்து விட்டனர்..

இதில் ஏதோ விழா போல் முதல் அமைச்சரின் வீட்டில் ஏற்பாடு செய்வதை மீடியா ஆட்களின் கழுகு பார்வையில் பட்டு விட. அதுவும் இரண்டு மூன்று முறை வேலையாட்கள் வேலை செய்யும் இடத்தில் தீக்ஷேந்திரனை பார்த்ததுமே…

யாரையோ வர வேற்க தான் இத்தனையும் செய்வது என்று நினைத்து கொண்டவர்கள். கூடவே தீக்ஷேந்திரனே முன் நின்று செய்வது என்றால் ஒரு வேலை அவரின் திருமணத்திற்க்கு உண்டான ஏற்பாடா… என்று ஒன்றன் போலவே அனைத்து பத்திரிக்கை.. மீடியா.. என்று அவர் அவர் கற்பனை குதிரையை தட்டி விட்டு விட..

அதற்க்கு ஏற்றார் போல்… அத்தனை பெரிய விலை உயர்ந்த காரில் சகல மரியாதையோடு ஒரு கார் ஒன்று வந்து நிற்க..

அந்த காரின் கதவு அருகில் ராஜேந்திர பூபதியும் தீக்ஷேந்திரனுமே வந்து அந்த காரின் கதவை திற்ப்பதை தூரத்தில் நின்றாலுமே முதல் அமைச்சரையும் அவரின் மகனையும் மீடியாக்காரனுக்கு தெரியாது போய் விடுமா என்ன….?

அதுவும் இந்த மாநிலத்தின் முதல் அமைச்சரே கார் கதவை திறக்கும் போது… அவரின் பாதுகாவர்கள் அவரை சூழ வந்த போதும் அவர்களை தன்னை விட்டு கொஞ்சம் தள்ளி நிறுத்தி விட்டு…. அன்னையின் பக்கம் இருந்த காரின் கதவை மகன் திறந்து விட. திரிபுர சுந்தரி… தன் மகனையே பார்த்த வாறு இறங்கினார்..

இங்கு வர வேண்டி.. திரிபுர சுந்தரி மட்டும் கிடையாது.. யாருமே பிரத்தியோகமாக எந்த உடையும் அணிகலங்களையும் அணிந்து கொண்டு வரவில்லை.

ஆனால் திரிபுர சுந்தரி மட்டும் இல்லாது அவரை தொடர்ந்து ஜீவிதா மந்ரா… அந்த காரை விட்டு ஒருவர் பின் ஒருவராக இறங்கி அருகருகே நின்ற அந்த தோற்றமானது….

யப்பா என்ன அழகுடா என்ன கம்பீரம் டா என்று தான் பார்ப்பவர்களை நினைக்க வைத்தது…

ராஜேந்திர பூபதியோ அனைத்தும் மீறி.. மீடியா தங்களை புகைப்படம் எடுக்கிறார்கள் என்பதை கூட கருத்தில் கொள்ளாது… தன் அன்னை காரை விட்டு இறங்கியதுமே… அவரின் பாதத்தை தொட்டு வணங்கியவர்..

“ம்மா….” என்ற அந்த அழைப்பில் அத்தனை பாசம் கொட்டி கிடந்தது.. ஊருக்கே ராஜா என்றாலும் அன்னைக்கு மகனாக தான் ராஜேந்திர பூபதி நின்றார்..

திரிபுர சுந்தரி என்ன நினைத்தாரோ… மகனின் தலை மீது கை வைத்து ஆசிர்வாதம் போல் செய்ய… .. அதில் ராஜேந்திர பூபதி தன் அன்னையை கட்டி அணைத்து கொண்டார்…

பின் தம்பியையுமே கட்டி அணைத்து கொண்டவர்… ஜீவிதாவின் தலை மீது கை வைத்து பாசத்துடன்…

“பொம்மா…” என்று அழைத்தவரிடம் ஜீவிதா போகாது கொஞ்சல் விலகி நின்று கொண்டு ராஜேந்திர பூபதியை பயப்பார்வை பார்த்து வைத்தார்..

தொலைக்காட்சி கை பேசியின் மூலம் ராஜேந்திர பூபதி முதல் அமைச்சர் என்ற வரை மட்டுமே ஜீவிதாவுக்கு தெரியும்… அவ்வளவே தூங்கி எழுந்ததும் ஜீவிதாவிடம்…

“ உன் அண்ணன் வீட்டிற்க்கு போக போறோம்…” என்று தன் அன்னை சொன்னதும்.. ஜீவிதாவுக்கு குழப்பம்…

குழம்பியவளிடம்… “ இப்போ பேச நேரம் இல்ல ஜீவி.. உனக்கு மகேந்திரனை தவிர இன்னொரு அண்ணா இருக்காங்க. இப்போ நாம அங்கு இருப்பது தான் நமக்கு நல்லது புரியுதா…”?” என்று கேட்டவரிடம் தலையாட்டிக் கொண்டார்…

அவருக்கு அனைத்தையும் விட தன் கணவன் அண்ணன்… அண்ணன் மகனை பார்க்க முடியவில்லையே என்ற எண்ணம் தான் மோலோங்கி இருந்தது..

இத்தனை வருடங்களில் அன்னையை பற்றி நன்கு தெரிந்த மந்ரா.. “ ம்மா இப்போ அவங்க எல்லோரும் வந்துட்டு இருக்காங்க….”

மந்ரா தன் பாட்டியின் மூலம் தெரிந்து கொண்ட விசயத்தை தன் அன்னைக்கு கடத்தினாள்.. ஜீவிதாவுக்கு இதுவே போதுமானதாக இருந்தது.. அவங்க கூட எங்கு என்றாலும் போக தயார் என்று இருக்க..

இதோ வந்து நின்ற இடமோ முதல் அமைச்சரின் வீடு… அதுவும் தன்னை பாசமாக பார்த்த ராஜேந்திர பூபதையை ஜீவிதா கலவரமாக பார்க்க.

அந்த பார்வை ராஜேந்திர பூபதி பெரியதாக தாக்கியது.. என்ன என்பது போல் தன் அன்னையை தான் அவர் பார்த்தது.. அவரோ கண் மூடி திறந்து மூட.. ஒரு பெரும் மூச்சுடன்… தன் மருமகள் மந்ராவிடம் வந்தவர்….

அவள் கன்னம் இரண்டையும் தன் உள்ளங்கையில் வைத்து கொண்டவர் அவள் நெற்றியில் ஒரு முத்தம் பதித்து…

“முன்னவே நீ இந்த வீட்டுக்கு வந்துட்டு போனலேம்மா. சாரிடா. மாமாவுக்கு தெரியாது…” என்று தன் அம்மா தங்கையின் மறு உருவமாக இருக்கும் தன் தங்கை மகளின் மீது பாசம் தன்னால் வர… முத்தம் வைத்தவர் அணைத்தும் கொண்டார்..

பின் கவிதா சுதாகர் என்று வந்தவர்.. வினோத்தையும் அணைத்து கொண்டவர் வாங்க வாங்க என்று வர வேற்க.. இதை அனைத்தையும் கை கட்டி பார்த்து கொண்டு இருந்த தீக்ஷேந்திரன் தன் பெயரை ஒட்டி தீயாக முறைத்து வைத்தான்..

மகனின் பார்வையில் தப்பர்த்தம் புரிந்து கொண்ட தீக்ஷேந்திரன்..

தன் அன்னையிடம்… “ உங்க பேரன் ம்மா…” என்று சொன்ன விநாடி தீக்ஷேந்திரன் தன் பாட்டியின் காலில் விழுந்தான்.

தன் கணவனின் பிரதிபலிப்பாக தன் முன் வந்து நின்ற பேரனை கண் கொட்டாது பார்த்தார்.. நம் திரிபுர சுந்தரி,..

ராஜேந்திர பூபதியும் சரி… மகேந்திர பூபதியும் சரி… அவர்கள் தந்தையை போல் தான் இருப்பார்கள்.. ஆனால் தீக்ஷேந்திரனோ… நீல கண்ட பூபதியே நேரில் வந்து நின்றது போல் நிற்க..

இத்தனை நேரம் இருந்த… அந்த கம்பீரம் கொஞ்சம் குறைந்து போனது போல்.. அவர் கண்கள் ஓரம் நீர் துளிர்த்து விட.

“பாட்டிம்மா..” என்று அழைத்து தன் தோளோடு அணைத்துக் கொண்ட தீக்ஷேந்திரன்….

“உங்க குரலுக்கே… நான் உங்க பேனா ஆகிட்டேன் பாட்டிம்மா.. அதுவும் இப்போ நேரில் … உண்மையில் அந்த காலத்து ராணியை படத்தில் பார்ப்பது போல இருக்கிங்க… பாட்டிம்மா. உங்களுக்கு இந்த கண்ணீர் செட்டாகல பாட்டிம்மா என்று சொல்லி அந்த கண்ணீர் துளிகளை துடைத்து விட்டான்…

இதை எல்லாம் வினோத்தின் அருகில் நின்று வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்த மந்ராவை பார்த்தாலுமே தீக்ஷேந்திரன் அவளிடம் கவனம் செலுத்தவில்லை..

அதற்க்கு பதிலாக அவன் பக்கம் நின்று கொண்டு இருந்த வினோத்தை அணைத்து விடுவித்தவன்..

“வெல்கம் பிரதர்….”என்று வர வேற்றான்….




 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
205
தீஷா💃🏻💃🏻💃🏻

ஜீவிதாவுக்கு பழைய நினைவுகள் இல்லையா 🤔 🙁 🤫

சேக்கு 😂😂😂😂😂 உன் மக அதிகாரம் செய்வாளா 😏😏😏😏இனி தான் இருக்கு 🤗 🤓 🤗 🤓
 
Last edited:
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
217
சேக்கிழார் கில்லாடி தான்.... சரியா கணக்கு போட்டு பேரனை மடக்கப் பார்த்தாரு அவன் அவருக்கு மேல கேடி 😂😂😂😂

இவர் பொண்ணு அதிகாரத்துல அடங்கி இருக்குற ஆளா சுந்தரி பாட்டி 🤭🤭🤭

ஜீவிதாவுக்கு என்ன ஆச்சு பழையது எதுவும் நினைவில்லயா 🤔🤔🤔

தீக்ஷா அத்தை பொண்ணை நீ பார்க்கவே இல்லல்ல 😜😜
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,370
விஜி மேம் நல்லா இருக்கீங்களா ஏன் சைட் பக்கமே வரல
கொஞ்சம் பர்சனல் ஒர்க் பா.. இன்று இரவு இரண்டு கதையில் ஒரு கதை பதிவு கொடுத்து விடுவேன் பா
 
Member
Joined
Jul 23, 2024
Messages
40
கொஞ்சம் பர்சனல் ஒர்க் பா.. இன்று இரவு இரண்டு கதையில் ஒரு கதை பதிவு கொடுத்து விடுவேன் பா
Intha story ah update panunga akka
 
Top