Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Prithariyaa Pithana Podhum-3

  • Thread Author
அத்தியாயம்….3

மதுவுக்கு விடியற்காலையில் எழ வேண்டும்.. உடற் பயிற்ச்சி.. நடை பயிற்ச்சி …ஏன் குறைந்த பட்சம் யோகா செய்வது போன்ற இவற்றில் ஒன்று கூட செய்யும் பழக்கம் அவளுக்கு கிடையாது..

இரவு முழுவதும் எப்போதும் தன் மடி கனிணி முன் தான் அமர்ந்து இருப்பாள்.. அதில் அவள் கேம் விளையாடுவதோ..இல்லை படம் சீரியல் பார்ப்பதோ.. இல்லை படிப்பு சம்மந்தமாக பார்ப்பதோ.. அது அவள் மூடை பொறுத்து மாறுப்படும்..

அதற்க்கு என்று படிப்பில் மக்கு என்பது எல்லாம் கிடையாது.. அதே போல் தான் உடலை பேணும் உடற்பயிற்ச்சி எதுவும் செய்யாத போதும்.. அவளின் உயரமான..5.5 க்கு சரியாக ஐம்பத்து மூன்று கிலோவில் இருந்தாள்..

நிறம் எலுமிச்சை நிறம்.. வடிவு பெண்களுக்கு என்று குறிப்பிட்டு இருந்த அளவில் மூக்கு முழி என்று அனைத்திலுமே அனைவரும் பார்க்கும் படியான அழகு பெண் தான் மது என்று சொல்ல வேண்டும்.. என்ன ஒன்று இவ்வளவு இருந்துமே, இது வரை அவளுக்கு ஒரு காதல் கடிதம் கூட வந்தது கிடையாது..



அதற்க்கு காரணம் பள்ளி படிப்பு படித்தது இவர்கள் பள்ளி.. இதோ இப்போது படித்து கொண்டு இருக்கும் கல்லூரியும் இவர்களுடையது என்பதால், காதல் கடிதம் என்ன குறைந்த பட்சம் அவளை சைட் அடிக்க கூட ஆள் இல்லாது வெறுமையாக தான் அவள் நாட்கள் நகர்கின்றன.

இடையில் இரண்டு வருடம் யூ.எஸ் தன் பள்ளி படிப்பை முடித்த பின் மேல் படிப்புக்கு சென்றாள்.. சென்றவள் அங்கு இருக்கும் சூழ்நிலையை கிரகித்துக் கொள்ளும் முன்னவே இந்தியா வர வேண்டிய சூழ்நிலை..

அதனால் அவளின் படிப்பு இரண்டு வருடங்கள் பின் தங்கி மீண்டும் திரும்பவும் பி.ஈ. ஈசி தங்கள் கல்லூரியிலேயே முதலாம் ஆண்டில் இருந்து தொடங்கியதால், இருபத்திரெண்டு வயதில், பி.ஈ மூன்றாம் ஆண்டில் இருக்கிறாள்..

அன்று ஞாயிற்று கிழமையானதால், மது அன்று தூக்கத்திற்க்கு காலம் நேரம் வைக்காது இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கி கொண்டு இருந்தாள்..

மற்ற நாட்களிலும் கால நேரம் வைக்க மாட்டாள் தான். அது வேறு விசயம். ஆனால் கல்லூரிக்கு சரியான நேரத்தில் சென்று விட வேண்டும்.. இதை தாத்தா இவள் முதல் நாள் கல்லூரிக்கு கிடையாது பள்ளிக்கு செல்லும் போதே தீர்த்து சொல்லி விட்டார்.. அதில் எல்லாம் அவர் ரொம்ப ஸ்டிட்டான ஆபிசர் தான்..

இன்று கல்லூரிக்கும் போகும் வேலை இல்லாததாலும், இரவு இரண்டு மணி வரை மடி கணினியில் இருந்ததாலும், எட்டு மணிக்கு கண் திறவாத அளவுக்கு தூங்கி கொண்டு இருந்தவளின் காதில் ஏதோ இடிப்படும் சத்தம் கேட்டது..

ஒரு முறை இரண்டு முறை அந்த சத்தத்தையும் மீறி தூங்க தான் முயன்றாள்.. ஆனால் அது முடியாது போக கோபமாக எழுந்தவள் குளியல் அறைக்கு அதே கோபத்துடன் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு சத்தம் வந்த இடமான வீட்டின் முன் கார்டன் பகுதியை நோக்கி தன் நடையை கட்டினாள்..

கோபம் அவள் ஒரடி.. ஈரெடி .. எடுத்து வைக்க மெல்ல மெல்ல குறைந்தது.. காரணம் கட்டிட பணி நடக்கிறது என்பது போலான சூழ்நிலையை பார்த்து கொண்டே நடந்து வந்து கொண்டு இருந்தவளின் முன் சட்டென்று பக்க வாட்டில் இருந்து வந்த லிங்கா இடையில் வர.

மது வலிமையான லிங்காவின் நெஞ்சி பகுதி மேல் மோதி நின்றாள் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு… லிங்கா இடையில் அவள் எதிர் பாராது வந்ததில் மது அடுத்த அடி எடுத்து வைக்க இருந்த காலை எடுத்து வைக்காது இருந்ததால் அவளின் பேலன்ஸ் கொஞ்சம் தவறியது என்பது என்னவோ உண்மை தான்..

ஆனாலுமே அவனை பற்றாமலும்.. அவன் மீது மோதாமலும், பக்கத்தில் இருந்த மரத்தின் கிளையை பற்றிக் கொண்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தவள்..

பின் ஏதோ ஒரு நினைவில் சட்டென்று குனிந்து தன் முன் பகுதியை பார்த்தாள்.. நல்ல வேளை இன்று அந்த இரவு உடையை உடுத்தவில்லை..

அந்த உடை முன் பகுதி கொஞ்சம் என்ன ரொம்பவே கீழ் இறங்கி இருக்கும்.. எப்போதாவது சாப்பிட வரும் போது ஒரு கையில் உணவு இருக்க மறு கை தன் மேல் சட்டையின் பின் பக்கத்தை பிடித்த வாறு தான் சாப்பிடுவாள்..

அவள் அம்மா கூட. “ அந்த ட்ரஸை தான் தூக்கி ஒழியேன் டி..” என்று எத்தனையோ முறை கத்தி இருக்கிறார்.. ஆனால் அதை இன்று வரை தூக்கி எறியாது இருக்கிறாள் என்றால் அந்த இரவு உடை அவளுக்கு எவ்வளவு முக்கியம் என்று பாருங்கள்..

அந்த பயத்தில் தான் மது தன் உடையை குனிந்த பார்த்தது… பின் லிங்கா ஏதோ பேசவும் என்ன சொல்கிறான்.. அதுவும் முகத்தை இப்படி வைத்து கொண்டு. கோபம் என்று சொல்ல முடியாது… ஆனால் கிண்டல் நைய்யான்டி.. இல்லை இரண்டும் கலந்து முகத்தில் காட்டியா.?

ஏதோ ஒன்று ஆனால் அவன் முகத்தை நல்ல மாதிரியாக வைத்து கொள்ளவில்லை என்பது மட்டும் நிச்சயம்.. முகத்தை கவனித்தவள் பின் தான் அவன் பேச்சை கவனித்தாள்..

கவனித்ததில் தன் முகத்தை எப்படி வைத்து கொள்வது என்று தெரியாது இவள் தான் முழித்து இருந்தாள்.. காரணம் லிங்கா பேசிய பேச்சு அப்படி பட்டது..

லிங்கா மது முகத்தை ஒரு விதமாக வைத்து கொண்டு நடந்து வந்ததை பார்த்தவன் பின் அங்கு வேலை செய்தவர்களை கவனித்தான்.. அதில் ஒரு சில இளைஞர்கள் ஆர்வமாக.. அதுவும் மதுவின் முன் பகுதியை பார்ப்பதை கவனித்து தான் கோபத்துடன்..

இவள் வெளியில் வரும் போது ட்ரஸ் எப்படி இருக்கு என்று கவனிக்க மாட்டாளா.. என்று பல்லை கடித்து கொண்டு தான் அவள் முன் நின்றான்..

மது உடை இறங்கி இருக்கா ஏறி இருக்கா என்று கவனித்தாளே தவிர.. தான் உடுத்திக் கொண்டு இருக்கும் உடையின் அளவை கவனிக்கவில்லை..

அதனால் தான் இரண்டு வருடங்கள் முன் எடுத்த அந்த இரவு உடை.. வயதின் வனப்பினால் மதுவின் முன் பகுதி சிறிது அதிகமானதில் அந்த உடையின் அளவு பத்தாது.. அது பார்க்க கொஞ்சம் என்ன. அதிகமாகவே கவர்ச்சியாக தெரிந்தது..

அந்த வீட்டின் ஆண்களை பொறுத்த வரை. மதுவை அந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது கிடையாது.. அதனால் அதை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை.

ஆனால் வெளி ஆண்கள்.. கிழவி என்றாலே ஒரு சில ஆண்களின் கண்கள் அங்கு தான் மேயும்.. ஒரு சில ஆண்கள் பார்த்த உடனே… கணவன் கூட கொஞ்சம் முன் பின் மனைவியின் அளவை சொல்ல கூடும்.. ஆனால் பெண்களின் அந்த அளவை மட்டுமே கவனிக்கும் ஆண்கள் நினைக்கும் அளவு மிக சரியாகவே இருக்கும்..

அந்த ஆண்களின் ஒரு சிலர் அங்கு வேலை செய்து கொண்டு இருக்கும் போது தான் மது அந்த இறுக்கி பிடித்த அந்த இரவு உடையோடு கீழே வந்தது.

லிங்கா அவளை கண்டித்து வீட்டுக்குள் அனுப்ப அவள் முன் நிற்க. அவளோ அவன் பார்க்கவும்.. அதுவும் அவன் அவள் முகத்தை தான் பார்த்தான்..

ஆனால் மது லிங்காவை பார்த்த உடன் தன் முன் பகுதியை பார்க்கவும் தான் லிங்காவின் கண்ணும் அங்கு சென்றது..

மேலும் இவ்வளவு நேரமும் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு நடந்து கொண்டு வந்தவளுக்கு தன்னை பார்த்ததும் தான்.. அது நியாபகத்தில் வருகிறதோ.. என்ற கோபம்..

அதோடு இவள் தன்னை எது மாதிரி நினைத்து கொண்டு இருக்கிறாள். நேற்று இவள் பெரியப்பன் தன்னை பற்றி சொன்னானே.. அப்படி தான் இவளும் தன்னை நினைக்கிறாளோ.. என்ற கோபத்தில்..

முகத்தில் அளவுக்கு அதிகமான கிண்டலை காட்டிய வாறும், குரலில் அதற்க்கு மேல் நைய்யாண்டியை கூட்டிக் கொண்டும்.

“இதுக்கு மேல எல்லாம் பெருசா பார்த்து இருக்கேன்.. நீ அந்த அளவுக்கு எல்லாம் வெர்த் கிடையாது.” என்று சொல்லி விட்டு சென்றவனின் பேச்சில் மது விக்கித்து நின்று விட்டாள்..



அவள் விக்கித்து நின்றது சிறிது நேரம் தான்… அவளின் பெரியப்பா சிவ பிரகாஷ் அவளின் அதிர்ந்த முகத்தையும் கோபத்துடன் லிங்கா சென்றதையுமே கவனித்து விட்டு ஒரு வித ஆர்வத்துடன்..

“என்னம்மா சொன்னான்.. அவன் என்ன சொன்னான்.. உன் கிட்ட ஏதாவது வம்பு பேசினானா.? சொல்லும்மா .” என்று அவளின் பெரியப்பா கேட்கவும் தான் மது சுயநினைவுக்கு வந்தது..

பின் சிவ பிரகாஷ் மீண்டும் அதையே கேட்கவும்.. “ ஒன்னும் இல்ல பெரியப்பா..” என்று அவசரமாக சொல்லி விட்டு தன் அறைக்கு ஒடியவள் வந்து நின்ற இடம் கண்ணாடி முன்னாடி தான்..

மது கண்ணாயில் தெரிந்த தன் வடிவத்தை, அதுவும் குறிப்பாக தன் முன் பகுதியை தான் உத்து உத்து பார்த்து கொண்டு இருந்தாள்..

லிங்கா எதை வைத்து.. “ நான் பார்த்ததை விட அதிகம் இல்லை என்று கூறினான்.. அளவையா.. ?இல்லை வெளியில் தெரிந்த பகுதியையா…? அரை மணி நேரமாக இந்த ஆராய்ச்சி தான் அவள் மண்டைக்குள் ஒடிக் கொண்டு இருந்தது.



லிங்காவுக்கோ. அந்த சமயம்.. மதுவை திட்டியதோடு அவளை மறந்து தன் அடுத்த வேலை. இல்லை இல்லை சரியாக சொல்வது என்றால், வீட்டில் மற்றவர்கள் அவனுக்கு கொடுத்த பிரச்சனையை கவனிக்க ஆரம்பித்தான்..

முன் எல்லாம் அந்த வீட்டில் சாப்பாடு அறை என்பது சாப்பிட மட்டுமே பயன் பட்டுக் கொண்டு இருந்தது.. அதுவும் அமைதியாக..

ஆனால் லிங்கா வந்த பின்.. சரியாக சொல்வது என்றால் மூன்று நாட்களாக உணவு உண்ணும் இடம் வார்த்தையாடல்கள் இடமாக மாறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்…

லிங்கா தன் அறைக்கு சென்று குளித்து முடித்த பின் உணவு உண்ணும் இடத்திற்க்கு வந்த பின் சமையல் காரம்மாவை அழைக்க.

அவர் . “இதோ தம்பி .” என்று அவருக்கு பரிமாறிக் கொண்டு இருந்த போது தான் மற்றவர்களும் உணவு உண்ண வந்தது.. ஏன் சோமசுந்தரம் கூட அப்போது தான் வந்தார்..

சிவ பிரகாஷூக்கோ இதை எல்லாம் பார்க்கும் போது இத்தனை ஆண்டுகள் தன் வாரிசுக்கு தான் என்று நினைத்த ஒன்று.. இன்று மற்றவன் வந்து அதிகாரமாக இருப்பதை பார்க்க பார்க்க அப்படி இருந்தது..

ஆனாலும் இப்போதைக்கு அவரால் லிங்காவை எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் எதாவது செய்ய வேண்டும் என்ற வெறி.. எப்போதும் பதட்டத்தோடு இல்லாது அமைதியாக அனைத்தும் செய்து முடிக்கும் அவர் இயல்பு மாறி போனது.. அதன் விளைவால்..

மது சாப்பிட வந்த போது சிவ பிரகாஷ் சோமசுந்தரத்திடம்… “ மாமா உங்க பேரன் நம்ம மதுவை என்னவோ சொல்லி இருக்கான்,, மது முகமே ஒரு மாதிரி வெளிறி போய் இருந்தது தெரியுமா.. என்ன என்று கேளுங்க.” என்று சொல்ல.

சிவ பிரகாஷின் பேச்சில் லிங்காகை விட மது தான் மிகவும் பதட்டப்பட்டாள்.. அவன் சொன்னதை என்ன என்று சொல்வது என்று..

முகத்தில் வியர்வை துளிகள் அளவுக்கு அதிகமாக சுரந்தது தன் பெரியப்பாவின் பேச்சில் முழித்து கொண்டு இருந்தவளிடம் சோமசுந்தரம்..

“என்னம்மா லிங்கா உன் கிட்ட என்ன சொன்னான்..” என்று தாத்தா கேட்க என்ன சொல்வது என்று மது யோசிப்பதற்க்குள் தாத்தா மீண்டும் கேட்க..



அதற்க்குள் சிவ பிரகாஷ்.. “பயப்படாதே மது. தைரியமா சொல்.” என்று அவர் ஒரு பக்கம் ஊக்கம் கொடுக்க..

லிங்காவோ. “அது தான் சொல்றாங்கலே… சொல்லும்மா தைரியமா சொல்..” என்று சொன்னவனின் பார்வை அவள் முகத்தில் இருந்து கீழ் வாட்டாக இறங்க மதுவின் கை தன்னால் தன் முன் பகுதியை மறைத்தார் போல் வைத்து கொண்டு.

“அது ஒன்னும் இல்ல தாத்தா… என்ன படிக்கிற…? எங்கு …? என்ன க்ரூப்…? அதை பத்தி தான் விசாரிச்சிட்டு இருந்தார்.” என்று சொல்லி விட்டு.

யப்பா எப்படியோ தான் சமாளித்து விட்டோம் என்று நினைக்கும் போது சிவ பிரகாஷ் சந்தேகத்துடன் மது லிங்கா இருவரையும் பார்த்து.

“இதுக்கு ஏன் உன் முகம் அப்படி பதட்டத்துடன் இருந்தது..” என்று கேட்டார்..

சிவ பிரகாஷின் இந்த கேள்விக்கு மது சமாளிக்கும் முன் அவள் தாத்தா சோமசுந்தரமே..

“அவள் படிப்பை பத்தி பேசுனா அவள் பதட்டப்படுவா என்று உங்களுக்கு தெரியாதா மாப்பிள்ளை..” என்று கேட்க..



இவ்வளவு நேரமும் ஒரு கிண்டலுடன் அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டே சாப்பிட்டுக் கொண்டு இருந்த லிங்கா தாத்தாவின் இந்த பேச்சில். யோசனையுடன் மதுவின் முகத்தை பார்த்தான்..

லிங்காவின் முக பாவனையில் “அது ஒன்னும் இல்ல லிங்கா.. ப்ளஸ் டூ முடித்தது, மேல் படிப்பு படிக்க யூ எஸ் க்கு உன் சின்ன அத்தையும் மாமாவும் அனுப்பினாங்க.”

“அப்போவே மது வேண்டாம்.. நான் நம்ம காலேஜிலேயே படிக்கிறேன் என்று சொன்னா தான்.. ஆனால் நம்ம வீட்டு பசங்க எல்லோரும் மேல் படிப்பு படிக்க அங்கு தானே அனுப்புறோம்..’நீயும் போய் தான் ஆக வேண்டும் என்று வம்படியா தான் அவளை அங்கு அனுப்பியது.”

“ஒரு வருடம் நல்ல படியா தான் போனது. ஆனால் அடுத்த வருடம் சாப்பிடாம.. தூங்காம உடம்பு சரியில்லாம ஆஸ்பிட்டலில் சேர்ப்பது போல ஆனதால் உன் சின்ன அத்தையும் மாமாவும் அங்கு போய் கைய்யோட கூட்டிட்டு வந்துட்டாங்க..



“உனக்கும் தெரியும்.. உன் சின்ன அத்தைக்கு எட்டு வருடம் கழித்து அவ்வளவு ட்ரீட் மென்டில் பிறந்தவள் மது என்று .அடுத்தும் எந்த குழந்தையும் இல்லாது போனதில் அவளுக்கு லேசா காச்சல் அடித்தாலும் இவங்க பயந்து போயிடுவாங்க..” என்று தன் பேரனிடம் அனைத்தும் சொன்னார்..

கேட்ட லிங்காவுக்கு தான்.. இதில் வேறு எதுவோ இருப்பது போல் தோன்றியது.. அதுவும் சோமசுந்தரம் மதுவை பற்றியதான இந்த விசயங்கள் பேச பேச லிங்காவின் பார்வை முழுவதும் மதுவின் முகத்தில் தான் நிலை பெற்று இருந்தது..

மது தலை குனிந்து கொண்டு தான் இருந்தாள்.. அதனால் அவளின் முகத்தில் வந்து போன பாவனைகளை லிங்காவால் கவனிக்காது போனாலுமே, அவளின் பாடிலேங்க்வேஜ்.. சரியாக இல்லாது போல் தோன்றியது லிங்காவுக்கு.

ஒரு வித பதட்டம்.. அவளை பற்றியதான அந்த விசயம் பிடித்தம் இன்மை என்பது போல்.. ஏதோ ஒன்று.. ஆனால் அது சரியானதாக அவனுக்கு படவில்லை..

அதை பற்றி மேலும் அவனை யோசிக்க விடாது சிவ பிரகாஷ் புதிய பிரச்சனையாக.

“உடனே நாளைக்கு எல்லாம் நிர்வாகம் கை மாற்ற முடியாது. இது என்ன அங்கு அவர் வைத்து நடத்தி கொண்டு இருந்தாரே.. டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர். அது என்று நினைத்து கொண்டாரா..” என்று சொல்ல.

லிங்காவோ.. “எல்லாம் சரியாக இருந்தால் இந்த காலேஜ் பள்ளி நிர்வாகம் என்ன. இந்த நாட்டின் நிர்வாகம் கூட ஒரே நாளில் மாற்றி அமைத்து விடலாம்.” என்று சிவ பிரகாஷை பார்த்து கூறிய லிங்கா.

தன் தாத்தாவிடம்.. “நாளையே ஆக வேண்டும்..” என்று சொல்ல..

“ஏன் நாளையே என்று சொல்ற லிங்கா..” என்று சோமசுந்தரம் கேள்விக்கு.. நாளை என் அம்மாவின் இறந்த நாள் ..” என்று கூறினான்…
























 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
270
மதுவுக்கு என்ன பிரச்சனை... 🤔 படிக்க போன இடத்துல யாரும் லவ் டார்ச்சர் பண்ணிருப்பாங்களா.... 🧐

சிவப்பிரகாஷ் 😡😡😡😡 குள்ளநரி.... என்ன பண்ணி லிங்காவை துரத்தி விடலாம்ன்னு தான் எப்போவும் யோசிட்டு இருக்காரு......😈

லிங்கா அம்மாவோட நினைவுகளை அழிச்சவங்களா அவங்க இறந்த நாளை நினைவு வச்சுருக்கப் போறாங்க..... 😤😤😤😤
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
மதுவுக்கு என்ன பிரச்சனை... 🤔 படிக்க போன இடத்துல யாரும் லவ் டார்ச்சர் பண்ணிருப்பாங்களா.... 🧐

சிவப்பிரகாஷ் 😡😡😡😡 குள்ளநரி.... என்ன பண்ணி லிங்காவை துரத்தி விடலாம்ன்னு தான் எப்போவும் யோசிட்டு இருக்காரு......😈

லிங்கா அம்மாவோட நினைவுகளை அழிச்சவங்களா அவங்க இறந்த நாளை நினைவு வச்சுருக்கப் போறாங்க..... 😤😤😤😤
லிங்கா தன் மனதில் ரணத்திற்க்கும் ஆறுதல் அளித்து கொள்வான்.. தன் அன்னைக்குமே நியாயத்தை வாங்கி கொடுத்து விடுவான்...
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
Thatha vuke maranthuduchi pola
ஆமாம் பா.. தொடர்ந்து படித்து கருத்துகள் சொல்லவும் நன்றி பா🙏💕
 
Member
Joined
May 11, 2024
Messages
83
மது ங்க இருந்து வந்தது ஏதோ பிரச்சனை ஆகி தான் போல உடம்பு முடியாம இல்லையோ...

சிவப்பிரகாசம் பொய் கணக்கு ரெடி பண்ண நேரம் வேணுமா
 

grg

Well-known member
Joined
Oct 18, 2024
Messages
234
😍😍😍
 
Top