Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

அத்தியாயம்...7.1

  • Thread Author
அத்தியாயம்….7.1

மகனின் பேச்சுக்கு “சரிப்பா…” என்று திரிபுர சுந்தரி சொன்னாலுமே…. அவர் மனதில் ஏதோ தவறாக பட்டது… ஏதோ சரியில்லை… ராஜேந்திர பூபதியின் பேச்சு இப்போது எல்லாம் குறைந்தது போல் இருப்பதாக அவருக்கு தோன்றியது…

அதை கணவனிடமும் கூட அன்றே திரிபுர சுந்தரி சொன்னார் தான்… ஆனால் எதையுமே நேர் கொண்டு யோசிக்கும் நீல கண்ட பூபதியோ…

“இந்தியாவில் இருந்து போகும் போது ராஜேந்திரனுக்கு இருபத்திரெண்டு வயது தாயி… இப்போ இருபத்தியெட்டு வயது ஆகுதும்மா … அதோடு அங்கு வேலை பார்க்கிறான்… கொஞ்சம் வேலை மீது கவனம் போகும் தானே….

அதோட புதுசா அங்கு அங்கு நட்பா ஒரு சிலர் புதுசா அறிமுகமா ஆகி இருப்பாங்க…. அதுல அங்கும் கொஞ்சம் பேச்சும் இருக்கும் தானே…. ” என்று மனைவி தந்த வெற்றிலையை வாயில் அதக்கி கொண்டே சொன்னதை திரிபுர சுந்தரி மனது ஏற்க தான் மறுத்தது….

இன்னுமே மனைவியின் முகத்தில் தெளிவு வராததை கவனித்த நீல கண்ட பூபதி… “ என்ன தாயி…” என்று அழைத்து தன் மனைவியின் தாடையை நிமிர்த்தி தன்னை பார்க்கும் படி செய்தவர்..

“எது தாயி உன் மனசை போட்டு உழட்டுது… எது என்றாலும் சொல்லு தாயி.. நான் உன் பக்கம் இருக்க. உன் முகம் இப்படி கலக்கத்தில் இருந்தா அப்புறம் என்ன நான் ஆம்பிள்ளை என்று மீசையை முறுக்கிட்டு இருக்குறது….” என்ற கணவனின் இந்த பேச்சில் திரிபுர சுந்தரியின் முகம் முன்பு இருந்த கலக்கம் முகத்தில் மட்டும் தான் மறைந்தது…

“அதை ஏன் முறுக்கிட்டே இருக்கிங்க… இந்த மீசையை பார்த்து தானே நான் கட்டுனா உங்களை தான் கட்டுவேன் என்று நின்னு கட்டிக்கினது…” என்று சொன்ன மனைவியின் கண்ணில் தெரிந்த அந்த காதலில் கணவனின் முகம் கர்வத்தில் கொஞ்சம் மிளிர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்….

அப்படியுமே மனைவி இது போல் பேச ஆரம்பித்தால் கணவனாக அந்த பேச்சை வளர்க்கும் நீல கண்ட பூபதியோ…

“மீசை அப்படியே தான் இருக்கு.. ஆனா வெள்ளை முடி வந்து நான் கிழடு தட்டிட்டேன் என்று எனக்கு அது சொல்லுதே தாயி….” என்று சொன்னார்..

இந்த பேச்சுக்கு மனைவியின் பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தே தான் அவர் அப்படி சொன்னது..…. அவர் நினைத்தது போல் தான் அவரின் மனைவியும்…

“ஆமா ஆமா கிழடு தான்… அதை நீங்க தான் சொல்லிக்கனும்.. நல்ல வேல குடும்ப கட்டுப்பாடு பண்ணிட்ட தொட்டு என் மானம் காப்பாந்தா இருக்கு.. இல்லேன்னா மருமகள் எடுக்கும் நேரத்தில் கையில் குழந்தையோடு தான் கல்யாண வேலையை பார்க்குறது போல ஆகி இருக்கும்…” என்று சொன்ன மனைவியின் பேச்சையும் ரசித்தார்… மனைவியின் முகத்தையும் ரசித்தார்.

ஆனால் பாவம் நீல கண்ட பூபதிக்கு தெரியவில்லை.. இன்று தன் மனைவி இந்த முகத்தை கணவனிடம் காட்ட மனதில் இருக்கும் குழப்பத்தை அனைத்தும் மறைத்து கொண்டு இது பேச எத்தனை கஷ்டப்பட்டார் என்பது…

அதுவும் கணவனுக்காக தான்.. ஆனால் மனதில் மட்டும் ஏதோ தவறாக நடப்பதாக பட்டது.. அதனால் தான் கணவனிடம் மருமகள் எடுக்கும் வயதில் என்று பேசும் போதே கணவன் சொன்ன மகன் இங்கு இருந்து போகும் போது இருபத்திரெண்டு வயது.. இப்போது இருபத்தியெட்டு என்றது நியாபகத்தில் வர.

இதை நான் எப்படி மறந்தேன்.. அவர் இனத்தில் பையனுக்கு இருபத்தி ஐந்து எல்லாம் பெரிய வயது… அந்த வயதில் ஒரு குழந்தையோ இல்லை இரு குழந்தைக்கோ அப்பாவாக மாறி இருப்பார்கள்.

மகன் கண் எதிரில் இருந்தால், மகனுக்கு வயது ஆகிறது என்று நினைத்து இருந்துப்பேன் போல்… அவன் எங்கே போன இரண்டு வருடத்தில் வந்தா கொஞ்சம் தங்கிட்டு தான் போனான். ஆனால் கடந்த நாளு வருடமா… மின்னல் போல வரான். மின்னல் போல போறான்.. அதுல இதை பத்தி யோசிக்க மறந்துட்டேன் போல… ஆனால் இனி அப்படி மெத்தனமா விட்டு விட கூடாது… கூடிய சீக்கிரம் ஒரு நல்ல பெண்ணாக பார்த்து திருமணத்தை முடித்து விட வேண்டியது தான்.

அதன் பின் அவன் அங்கு இருப்பதோ.. இல்லை இங்கு இருப்பதோ… அவன் விருப்பம். அவன் மனைவியின் விருப்பம்…. என்று நினைத்தவர் நினைத்ததை செயல் படுத்த உடனே தொடங்கி விட்டார்..

கையில் பணம் இருந்தால் செயல் படுத்துவது என்ன அவ்வளவு கடினமா என்ன… கணவனிடம் சொன்னவர் பின் ஒரே வாரத்தில் அடுத்த ஊரில் இவர்கள் அளவுக்கு வசதியும், செல்வாக்கும் நிறைந்த இடத்தில் இருந்து ராஜேந்திர பூபதிக்கு பெண் தேடுவது தெரிந்ததும்… அவர்களாகவே முன் வந்து பெண் எடுத்து பெண் கொடுக்கலாம் என்று சொல்ல.

இவர்களும் அந்த குடும்பத்தை பற்றி அனைத்தும் தெரியும் என்பதினால் சரி என்று ஒத்து கொண்டனர்.. மகன் இங்கு இருந்து செல்லும் முன்பு…

“நான் அந்த நாட்டு பெண்ணை எல்லாம் கல்யாணம் செய்துக்க மாட்டேன் ம்மா. இந்த ஊரு பெண்ணை தான் கல்யாணம் செய்துப்பேன்…. உங்க விருப்படி தான்..” என்ற மகனின் வாக்கை நம்பி தட்டை மாற்றிக் கொள்ள. அது தான் அவர்கள் குடும்பமே மாறி போக காரணமாக ஆக போகிறது என்பது தெரியாது….

ஆம் ராஜேந்திர பூபதிக்கு பெண் பார்க்கிறார்கள் என்று தெரிந்ததும் பக்கத்து ஊரில் இருந்து தானாக வரன் தழைய…. நீல கண்ட பூபதி திரிபுர சுந்தரி இருவருக்கும் பிடித்து விட…

அப்போது எல்லாம் கை பேசி எல்லாம் இல்லாத காலம் கட்டம் என்பதினால் தொலை பேசி மூலம் தான் மகனுக்கு தெரியப்படுத்தியது…

போட்டோ எல்லாம் நினைத்த நேரத்தில் அனுப்ப முடியாது.. அதன் தொட்டு திரிபுர சுந்தரி…

“ஒரு எட்டு வந்து பார்த்துட்டு போ ராஜேந்திரா…” என்று சொன்னதும் ராஜேந்திர பூபதி எடுத்த உடனே..

“எனக்கு இப்படி எல்லாம் உடனே லீவ் தர மாட்டாங்கம்மா.. நான் ஆறு மாசம் கழிச்சி ஊருக்கு வரும் போது பார்த்து கொள்ளலாம் ம்மா….” என்றும் சொல்ல..

திரிபுர சுந்தரி… “ஆறு மாசம் வரை பொண்ணை அவங்க ஊருக்காய் போட்டு வைத்து இருப்பாங்கலா ராஜேந்திரா. அதோடு சொன்னனே.. பெண் கொடுத்து பெண் எடுப்பது என்று … அந்த மாப்பிள்ளை யை உன் பெரிய தங்கைக்கு ரொம்ப பிடிச்சிடுச்சி போல” என்றும் சேர்த்து சொல்ல.

இப்போது மீண்டும் ராஜேந்திர பூபதியிடம் அமைதி… அப்போது திரிபுர சுந்தரி…

“ராஜேந்திரா என் கிட்ட இருந்து ஏதாவது மறைக்கிறியா என்ன….?” என்று கேட்டதற்க்கு மட்டும் ராஜேந்திர பூபதி…

“இல்லேம்மா அது எல்லாம் இல்ல….” என்று பதட்டத்துடன் சொன்னவர்..

பின்… “ நீங்கலே பார்த்து முடிவு பண்ணுங்கம்மா…” என்று விட்டார்..

ராஜேந்திர பூபதி செய்ததில் மிக பெரியு தவறு.. அது தான்…. நான் இங்கு காவ்யாவை திருமணம் செய்து கொண்டேன்… எனக்கு மூன்று வயதில் ஒரு ஆண் மகன் இருக்கான்.. இரண்டாவதாக காவ்யா உண்டாகி இருக்கிறாள்… “ என்பதை சொல்லவில்லை…

சேக்கிழார் சொல்லாதே என்று விட்டார்… இப்போது சொன்னால் என் பெண்ணை ஏத்துக்க மாட்டாங்க…. உன் கல்யாணம் அன்னைக்கு ஊரு பார்க்க என் பெண்ணோடு வந்து இறங்கினா…. என் மகளை மருமகளா ஏத்துட்டு தான் ஆகனும் .” என்ற பேச்சை நம்பி விட்டான்..

அப்போது கூட ராஜேந்திர பூபதி… “ மாமா என் பெரிய தங்கைக்கும் சேர்த்து சம்மந்தம் முடிச்சு இருக்காங்க… நான் இப்படி செய்தா.. அது அவள் வாழ்க்கையையும் தானே பாதிக்கும் …” என்று சொன்னான் தான்.. ஆனால் ..

அதற்க்கும் சேக்கிழார்… “ நீ வேறு மாப்பிள்ளை… அந்த பையன் உங்க பெண் மீது பைத்தியமா இருக்கான்…. நீங்க அவன் தங்கையை கல்யாணம் செய்யாது போனா எல்லாம் உங்க தங்கையை விட்டு விட மாட்டான்… இப்போவே வைரமா வங்கி குவிக்கிறான்… நிங்க வேறு.” என்று சொன்னவரின் பேச்சை ராஜேந்திர பூபதி அப்படியே நம்பி விட.

இங்கு இந்தியாவில் சேக்கிழார் சொன்னது போல் ராஜேந்திர பூபதியின் பெரிய தங்கை மீது மாப்பிள்ளை வேதவன் உயிராக இருக்கிறான் தான்..

ஆனால் வேதவனும் தாய் தந்தை தங்கை என்ற குடும்ப அமைப்பிற்க்கு கட்டுப்பட்டு நிற்பவன் தானே.. சேக்கிழார் சொன்னது போல் வேதவன் தன் வருங்கால மனைவிக்கு என்று வைரத்தை வாங்கி குவித்தான் தான்..

ஆனால் அது எல்லாம் திரிபுர சுந்தரி… குடும்ப ஆச்சாரியாரை கொண்டு ஒட்டியாணம் முதல் கொண்டு தன் வருங்கால மருமகளுக்கு செய்து கொண்டு இருக்கிறார் என்று கேள்வி பட்டு அவனின் தாயே…

“தோ பாருடா.. நம்ம பொண்ணுக்கு அத்தனை செய்யும் போது நாமும் அதுக்கு மேல செய்யனும்.. புரியுதா. என்ன தான் நம்ம கிட்ட அவங்க அளவுக்கு சொத்து பத்து இருந்தாலும், நீல கண்ட பூபதி என்றால் ஊரே மரியாதையா பார்க்குது…

அந்த பெரிய மனுஷருக்கு நாம செய்யும் சீரை பார்த்துட்டு ஊரே நம்மை வியந்து பார்க்கனும்.” என்று சொன்னதினால் தான். விவேகன் அதனை கொண்டு தன் அவன் தன் வருங்கால மனைவிக்கு வாங்கியது என்று தெரியாது போய் விட்டது…. அதோடு வருங்காஅ மனைவி என்பவள் இனி வர போகிறவள்..

ஆனால் தற்சமயத்து நிஜம்… அவனின் தங்கை பொற்கொடி…. ராஜேந்திர பூபதி எப்படியோ… விவேகன் தன் தங்கை மீது அத்தனை பாசம் வைத்து இருந்தான்.. அதை தொட்டு தான் இந்த பெண் கொடுத்தல் பெண் எடுத்தலுக்கு சம்மதித்தது. கூட கொசுறாக ராஜேந்திர பூபதியின் தங்கையை பிடித்து இருக்கு அவ்வளவே…

இப்படியாக இருக்கும் சமயம் இங்கு நிச்சயம். இரு ஜோடிகளுக்கும் ஊரே வியக்கும் வண்ணம் அத்தனை பெரிய அளவில் ராஜேந்திர பூபதி இல்லாமலேயே நிச்சயத்தை முடித்து விட்டனர்.

அந்த பெண் வீட்டு சார்பாக பக்கத்து ஊர் சனம்… “ இது என்ன மாப்பிள்ளை வராது.. வெளி நாட்டில் வேறு இருக்கார்… அவர் வந்து சம்மதம் சொன்ன பின் இது எல்லாம் செய்யலாமே….” என்று சொன்ன போது கூட ராஜேந்திர பூபதிக்கு பெண்னை கொடுக்கும் தந்தை.

தன் ஊர் மக்களை பார்த்தே… கோபத்துடன்… “ யார் கிட்ட வந்து என்ன பேசுற…. பூபதி அய்யா குடும்பம் அவங்க வாக்கு மாற மாட்டாங்க.. அவங்க சொன்னா சொன்னது தான்.. அது தெரியாதா….” என்று சொன்னவரை அடக்கி வைத்து தான் அன்று அந்த நிச்சயம் விமர்சையாக செய்து முடித்தது..

அப்போது சேக்கிழாரும் அங்கு தான் இருந்தார். எப்போதும் கை கட்டி நிற்க்கும் சேக்கிழார் அன்று கொஞ்சம் தோரணையாக தான் நின்று கொண்டு இருந்தார்.

அதை பார்த்த திரிபுர சுந்தரி கூட “என்ன இது ஆள் ரொம்ப மாறிட்டு வராரு.. உங்க வேஷ்ட்டியோட… சேக்கிழார் வேஷ்ட்டியில் வெள்ளை கொஞ்சம் தூக்கலா இருக்கு…” என்று தன் கணவனிடம் சொன்ன போது.

“என்ன தாயி இப்போது அவன் எம்.எல்.ஏ அதுக்கு தக்கன தானே இருக்கனும்…” என்று சொன்னார்..

ஆம் நீல கண்ட பூபதி ஆரம்பித்த கட்சி வெற்றி பெற்று.. சேக்கிழார் எம்.ஏல்.ஏவாக ஆகி விட்டார்… அத்தனை வாக்கு வித்தியாசத்தில் சேக்கிழார் வெற்றி பெற்றார்..

அந்த வெற்றிக்கு எல்லாம் காரணம் நீல கண்ட பூபதி சொன்ன. “ என்னை போல இவரை நீங்க பாருங்க… என்னை நம்பும் அளவுக்கு இவரை நம்புங்க… நான் வேறு இல்லை இவரு வேறு இல்லை …” என்று ஊர் மக்களிடம் சொன்னதே காரணம்….

நீல கண்ட பூபதி இல்லை என்றால் சேக்கிழார் எல்லாம் கவுன்சிலராக நின்று இருந்தால் கூட இவன் யார்…? என்று தான் கடந்து சென்று இருப்பார்கள் அந்த ஊர் மக்கள்…

அரசியல் அமைப்பே… அந்த தேர்தலில் சேக்கிழார் அடைந்த வெற்றியை வியந்து பார்த்தது.. காரணம் அத்தனை வாக்கு வித்தியாசத்தில் சேக்கிழார் வெற்றி பெற்று இந்திய அரசியல் கட்சிகளே சேக்கிழாரை திரும்பி பார்த்ததோடு… அவரிடம் கூட்டணி வைத்து கொள்ள அழைப்பும் விடுத்தனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள்….

சேக்கிழார் தந்திரமாக தான் அனைத்து காய்களும் நகர்த்திக் கொண்டு இருந்தார்…. பாவம் நீல கண்டன் மட்டும் மனைவி சொன்ன சேக்கிழாரிடம் பார்த்து நடந்து கொள்ளுங்கள்.. என்பதை கேட்டு இருந்தால், அதுவும்… அரசியலே வேண்டாம் என்று சொன்னதை கேட்டு இருந்தால் நீல கண்டன் தன் உயிரை மட்டும் அல்லாது தன் இரண்டு பெண்களின் உயிர் இழந்து… தன் ஒரு பெண்ணின் மானம் இழந்து… என்ற நிலைக்கு தள்ளப்படாது இருந்து இருப்பார்.. மொத்ததிற்க்கு தன் குடும்பம் பாதுகாப்பாக இருந்து இருக்கும்…
 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
214
ராஜேந்திரன் 🥶🥶🥶🥶 எவ்வளவு பெரிய துரோகம் 🤨🤨🤨 யார் என்ன சொன்னாலும் பெத்தவங்களை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கலையே 😑😑😑😑😑

கல்யாணத்து அன்னைக்கு வந்து சொன்னா பெத்தவங்களுக்கு எவ்வளவு அவமானம் 😨😨😨😨😨 அத்தோடு ஒரு பொண்ணோட வாழ்க்கையும் இருக்கு என்று யோசிக்கவே இல்லை 🤧 🤧 🤧

ராஜேந்திரன் தகுதிக்கு காவ்யா தான் சரி 🤭 🤭 🤭 🤭
 
Last edited:
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
244
சேக்கிழார் விட ராஜேந்திரன் தான் பெரிய குற்றவாளி 😡😡😡 எத்தனை பெரிய நம்பிக்கை துரோகம்.... ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையை கூட யோசிக்கல..... ஊரே கூடி இருக்க இவர் குடும்பத்தோட வந்து நிற்பாராமாம் எவ்வளவு பெரிய அவமானம் பெத்தவங்களுக்குன்னு கூட யோசிக்கல....
காவ்யாவை குத்தம் சொல்ல இவருக்கு என்ன தகுதி இருக்கு 🤬🤬🤬🤬
 
Active member
Joined
May 7, 2025
Messages
67
நைஸ் எபிசோட் 🤩🤩
ராஜேந்திர பூபதி... பெற்றோர் உடன் பிறந்தோர் என்று யாரையும் எண்ணாத சுயநல பிண்டம் 😤😤🤬🤬😠😠😡😡
 
Well-known member
Joined
May 12, 2024
Messages
329
Raja mela than thappu and kowam…
Evan enna sonna enna… pethavanga kitta oru vaarthai solli irukkanum
 
Top