Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

அத்தியாயம்...8

  • Thread Author
  • அத்தியாயம்----8
  • அவிநாத் அன்று வீட்டுக்கு எப்படி தான் வந்து சேர்ந்தான் என்று கேட்டால் அவனுக்கே தெரியாது.அப்படி பேய் அடித்தது போல் வந்தவனை பார்த்த அனுஷியா “என்ன அவி என்ன ஆச்சி….? என்ற கேள்விக்கு பதில் என்ன தன் தாய் முகத்தை கூட பார்க்க முடியாது வெட்கி கட கட வென்று தன் அறைக்கு நுழைந்து கதவை அடைத்தவன்.
  • அதன் மீதே சாய்ந்து தான் என்ன தவறு செய்து விட்டேன். என்று தலையில் அடித்து கதற…அய்யோ அண்ணா முகத்தை எப்படி பார்ப்பது. ஒரு தம்பியா இல்லாது தந்தையா வளர்த்த அண்ணாவுக்கு என்ன மாதிரி துரோகம் செய்து விட்டேன்.
  • அம்மா அன்றே அண்ணி என்று கூப்பிட சொன்னார்களே ...அப்படி கூப்பிட்டு இருந்தால் எனக்கு இந்த மாதிரி நினைப்பு வந்து இருக்காதோ….நான் அப்படி அழைக்காததுக்கு காரணம் அன்றே என் மனதில் இது மாதிரி எண்ணம் வந்து விட்டதோ….
  • கிருத்திகாவை நந்திதாவோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு கடைசியில் அய்யோ….. நான் நந்திதாவிடம் எப்படி அப்படி நடந்துக் கொண்டேன். எப்படி இப்படி நடக்க தோன்றியது.
  • பெண்களை பார்த்தால் பாயும் ஆளா நான் இல்லை...இல்லவே இல்லை. காலேஜில் என் அருகில் இல்லாத பெண்களா…..?என்னிடம் நெருங்கி பழக நினைக்காத பெண்களே இல்லையே…..
  • கிருத்திகா என்னை பார்க்கவில்லை என்று நண்பர்கள் உசுப்பேத்த தானே ஒரு வைராக்கியத்தோடு நான் காதலிக்கிறேன் என்று சொன்னேன். ஏன் மூன்று வருடமாக காதலித்த கிருத்திகாவின் மீது கூட நான் அத்து மீறி பழக வில்லையே...என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே….
  • அப்படி மீற நினைத்து இருந்தாலும் கிருத்திகா அதுக்கு அனுமதித்து இருக்க மாட்டாள் என்று முதன் முறையாக அவளை போல் நந்திதா இருந்து இருந்தால் இந்த தவறே நடந்து இருக்காதே…..என்று நினைக்க தோன்றியது.
  • இப்போது என்ன நினைத்து என்ன பிரயோசனம் அது தான் எல்லாம் நடந்து முடிந்து விட்டதே…..நாளை கல்யாணம் இதை எப்படி தடுத்து நிறுத்துவது என்று புரியாது தவித்தான்.
  • என்ன சொல்லி நிறுத்துவது...உண்மையையா….அந்த அளவுக்கு தைரியம் இருக்கா….தைரியத்தோடு சொல்லும் செயலையா நான் செய்து இருக்கேன் என்று இவன் அறையில் யோசித்துக் கொண்டு இருக்கும் போது.
  • அப்போது தான் அவன் அறையில் எழுந்த விக்ரநாத் படுக்கை விட்டு எழ மனது இல்லாது படுத்திருந்தான். இன்று மாலை எனக்கு திருமண வரவேற்ப்பு ஆனால் மகிழ்ச்சி என்று துளியும் இல்லை.
  • பெண் தன் தம்பியைய் போல் விளையாட்டு தனத்துடன் இருக்கிறாள். எனக்கு என் தம்பியை பிடிக்க வில்லையா…?அது போல் அவளையும் பிடித்து விடும் என்று நினைத்தது தவறோ…..?
  • திருமணத்துக்காக ஒப்புத்தாம்பூலம் மாற்றியதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தோன்றிய சந்தேகம் நேற்று அவள் நடந்துக் கொண்ட முறையில் அதுவும் மதுவும் அருந்தி இருக்கிறாள். தன் திருமண வாழ்க்கைய் நினைத்தாலே எப்படி இவளோடு என்று தான் நினைக்க தோன்றியது.
  • நேற்று அவள் சொன்னது போல் அவளே திருமணத்தை நிறுத்தி விட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் போதே….சே சே என்ன நினைவு இது. அப்படி நடந்தால் அம்மாவுக்கு எவ்வளவு மன வேதனை...அது மட்டும் இல்லாது இரு குடும்பத்துக்கு எப்படி பட்ட தலை குனிவு என்று நினைத்திருந்தான். இதற்க்கு மேலான தலை குனிவான காரியத்தை தம்பி செய்து வந்து இருக்கிறான் என்று அறியாது.
  • நந்திதாவை பற்றி நினைக்கும் போதே கிருத்திகா அவிநாத்தை நினைத்தான். அவிநாத் எப்படி கிருத்திகாவை அத்தனை பேர் முன்னிலையில் அப்படி பேசினான்.
  • கிருத்திகாவை பார்த்த நாள் முதல் இவன் மனதில் இது தான் ஓடிக் கொண்டு இருந்தது. இந்த பெண்ணா மூன்று வருடம் காதலித்தால் என்று. அவன் பார்த்த வரை எது இருந்தாலும் தன் அப்பாவின் அனுமதி இல்லாது அவள் செய்தது இல்லை.
  • ஏன் பெண்ணுக்கு புடவை எடுக்க கிருத்திகாவை அம்மா கூப்பிட்ட போது கூட அவள் அப்பா வேண்டாம் நாங்கள் எடுத்து கொடுப்பதை தான் கட்டுவாள் என்று சொன்னதுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காது தானே நின்றாள்.
  • அப்படி பட்டவள் எப்படி தனக்கு கணவனாக வருபவனை அவளே தேர்வு செய்தாள். நேற்று கூட அவி கூட ஏதோ சொன்னானே ஆ எல்லா பெண்ணும் என்னை பார்த்த போது நீ தான் என்னை பார்க்கவில்லை. அதனால் தான் உன்னிடம் காதல் சொன்னேன் என்று.
  • அது மாதிரி அவள் அவி காதலை ஏற்றுக் கொண்டதுக்கு அது மாதிரி காரணம் ஏதும் இருக்குமோ என்று சரியாக யோசித்தான். நேற்று அவள் வீட்டு முன்னிலையில் தன் முகத்தை பார்த்து பேசிய கிருத்திகாவின் முகம் வந்து சென்றது.
  • இது வரை தன் முகத்தை நேருக்கு நேர் பார்த்து பேசியதே இல்லை அவள். திருமண விஷயமாக ஏதாவது பேச தான் சென்றால் கூட தரையைய் தான் பார்த்திருப்பாள்.
  • அப்படி பட்டவள் நேற்று தன் முகத்தை பார்த்து “அப்பாவிடம் அங்கு நடந்தது ஏதும் சொல்லி விடாதிங்க.” என்று தன் வீட்டை பார்த்துக் கொண்டே சொல்ல.
  • “கவலை படாதே நான் சொல்ல மாட்டேன்.” என்றதும்.
  • “நாளை உங்க தம்பி ஏதும் பிரச்சனை செய்ய மாட்டாரே….?”
  • “பிரச்சனைன்னா….?”
  • “தெரியலே…. ஏதோ என் உள் மனசு சொல்லுது உங்க தம்பி நாளை ஏதாவது பிரச்சனை செய்வார் என்று.” என்று பயந்துக் கொண்டு கூற…
  • “ஏன் இவ்வளவு பயப்படுறே…..?”
  • “ அப்பாக்கு ஆறுமாதம் முன் தான் பி.பி எக்க சக்கமா ஏறி ஹாஸ்பிட்டலில் சேர்த்தோம்….நாங்க ரொம்ப பயந்துட்டோம். அப்புறம் மூன்று நாள் கழிச்சி தான் டிச்சார்ஜ் செய்தாங்க.
  • அப்போ டாக்டர் இது மாதிரி பி.பி இவ்வளவு ஏறுவது அவருக்கு நல்லது இல்லை என்று. அதனால் தான் அவர் என்னுடைய கல்யாணத்தை பற்றி பேசியதும் சரி என்று உங்க தம்பியிடமும் சொன்னேன்.
  • அப்போ கூட எனக்கு ரொம்ப பயம் தான் அவி ஏதாவது பேச கூடாததை பேசி திரும்பவும் எங்க அப்பாவுக்கு ஏதாவது வந்துட போகுது என்று. நல்ல வேலை அத்தை நல்லவிதமா பேசிய தொட்டு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இப்போ என்னவோ பயமா இருக்கு.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே கேட்டை திறந்துக் கொண்டு கிருத்திகாவின் அப்பா வர.
  • அவரை பார்த்த கிருத்திகா தன் பேச்சை நிறுத்தி விட்டு காரில் இருந்து இறங்குவதுக்கும் அவர் அருகில் வருவதுக்கும் சரியாக இருந்தது.
  • காரில் இருந்த விக்ரநாத்தை பார்த்து சம்பத் குமார் “கார் நின்று ரொம்ப நேரமாயிடுச்சே இன்னும் யாரும் உள்ளே வரலியேன்னு பார்த்துட்டு தான் நான் வந்தேன்.” என்றதுக்கு …
  • கிருத்திகா அவசர அவசரமாக “ நந்திதா அக்கா சொன்னாங்களாம் நாளை அவங்களுக்கு ஏற்பாடு செய்த பியூட்டிஷனே… எனக்கும் செய்துடுவாங்கன்னு அது தான் சார் சொல்லிட்டு இருந்தார் அப்பா….” என்றதுக்கு.
  • “வாய் மேலையே ஒன்னு போடுறேன் ….” என்ற அவர் பேச்சில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்க்க.
  • “அது என்ன சார். பக்கத்து வீட்டு ஆளு போல்...மாமான்னு கூப்பிட்டு பழகு. தம்பி எவ்வளவு உரிமையா என்னை மாமான்னு கூப்பிடுறார்.” என்று சொன்னதும் தான் தன் தவறை உணர்ந்த கிருத்திகா “சாரிப்பா….” என்று சொல்லி விட்டு விக்ரநாத்திடம்.
  • கண்களாலேயே சாரி என்று சொல்ல அது பார்க்க கவிதையாக இருந்தது.
  • இவனும் பரவாயில்லை என்று கண்களால் மூடி திறந்தவன். சம்பத் குமாரிடம் “நான் வர்றேன் மாமா…” என்றதுக்கு.
  • “வீட்டுக்கு வந்து சூட பால் குடிச்சிட்டு போங்களே ….” என்று கேட்க.
  • “பரவாயில்லை மாமா நேரமாகி விட்டது.” என்று சொல்லி விட்டு அவன் விடை பெற்று வரும் போது தான் கிருத்திகாவின் அப்பாவை எவ்வளவு ஈஸியாக மாமா என்று அழைக்கிறோம். ஆனால் நந்திதாவின் அப்பாவை அப்படி கூப்பிட ஏன் முடியவில்லையே,...என்று நினைத்துக் கொண்டே தான் வீட்டு வந்தடைந்தான்.
  • நேற்று நடந்ததையே நினைத்துக் கொண்டு படுக்கை விட்டு எழாமல் இருந்தவனை அனுஷியாவின் “விக்ரா விக்ரா….” என்ற அழைப்பில் எழுந்தவன் அறையை விட்டு வெளியில் வந்து கீழே பார்க்க.
  • அங்கு நந்திதா நந்திதாவின் பெற்றோர்கள் இன்னும் நான்கு பேர் அனுஷியாவை சூழ்ந்து இருக்க. அனுஷியா கைய் பிசைந்துக் கொண்டு இருப்பதை பார்த்து ஏதோ சரியில்லை என்று நினைத்துக் கொண்டே…
  • இரண்டு இரண்டு படிக்கட்டுகளாக இறங்கி அன்னையின் அருகில் தோள் மீது கைய் போட்டு நின்றவன்.
  • அனைவரையும் பார்த்து “என்ன பிரச்சனை ….?” என்று கேட்டான்.
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
244
அவங்க பொண்ணுக்கு நியாயம் கேட்க வந்துருக்காங்களா.... 🥱🥱🥱
 
Top