Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

ஆசைகள் அடங்காது...14

  • Thread Author
ஆசைகள் அடங்காது….14

வீட்டிற்க்கு வந்தும் இந்துமதியின் முகம் தெளிவு இல்லாது தான் இருந்தது.. இதை கவனித்த அவளின் அன்னை …

“உனக்கு என்ன தான்டி பிரச்சனை…? கல்யாணம் முடிவு ஆனதில் இருந்தே ஒரு மாதிரியாவே இருக்க…? சரி மாப்பிள்ளை பிடிக்கலையோ.. நாம அவசரப்பட்டு விட்டோமோ என்று கூட நான் நினச்சேன்.. ஆனா நேத்து மாப்பிள்ளை கூட வெளியில் போயிட்டு வந்த போது நீ சந்தோஷமா தானே இருந்த.. அப்புறம் உனக்கு வேறு என்ன தான் பிரச்சனை இந்து..” என்று ஒரு தாயாக மகள் கல்யாணம் முடிவு ஆகி இருக்கும் இந்த சமயத்தில் இப்படி இருக்கிறாளே..

முன் நடந்த விசயத்தை நினைத்து இப்போது பயம் வந்து விட்டது… முன் நடந்த போது… கணவன் சொன்ன.

“ சின்ன பெண் தெரியாது செய்து விட்டாள்.. இதை பெரிது படுத்தாது விட்டு விட்டாலே.. அவள் தப்பு உணர்ந்து அந்த தப்பை திரும்ப அவள் பண்ண மாட்டா.. கணவன் சொன்னாலுமே, ஒரு தாயாக மகள் மீது ஒரு கண் வைத்து கொண்டு தான் இருந்தாள்..

இதில் கூடுதலாக இவள் பிரண்ட் யமுனா வேறு கல்யாணம் முடிந்து கொஞ்ச நாளிலேயே தற்கொலைக்கு முயன்றதில்.

“என்ன தான்டி அவளுக்கு பிரச்சனை…? ஒரே பெண் வசதி. அவள் அப்பா அம்மா மாப்பிள்ளையையும் பார்த்து பார்த்து தான் தேர்வு செய்து கட்டி வைத்து இருப்பாங்க… எதுக்கு இப்படி இவள் செய்து கொண்டாள்…?” என்று இந்து மதியிடம் இதை வித விதமாக கேட்டாலுமே இது தான் காரணம் என்று சொல்லாது போனது வேறு… இப்போது இந்துமதியின் அம்மாவுக்கு பயம் வந்து விட்டது.

திருமணம் நெருங்க நெருங்க ஒரு அன்னையாக மட்டும் அல்லாது ஒரு நடுத்தர வர்க்கத்து வீட்டில் குடும்ப தலைவியாகவும் யோசித்தார்…

இந்த பெண் ஏதாவது ஏடா கூடமாக செய்து குடும்ப மானத்தை வாங்கி விடுவாளோ என்று..

அதன் தொட்டு தான். என்ன என்ன பிரச்சனை…?” என்று மகளை நச்சரித்து கொண்டு இருந்தார்..

ஏற்கனவே அலுவலகத்டில் வாசு தேவ்வின் பேச்சில் அருவெருப்பும் கோபமாக இருந்தவள்.. இவனை என்ன செய்வது…? என்று குழம்பி தலை வலியில் வீடு வந்தவளுக்கு அன்னையின் இந்த தொன தொனப்பில்..

“ம்மா உங்களுக்கு இப்போ என்ன தான்மா பிரச்சனை…? அது தான் நீங்க பார்த்த மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டுறேன் என்று சொல்லிட்டேன் தானே.. இன்னும் என்ன வேண்டும் உங்களுக்கு…?” என்று தலை வலியில் தலையை பிடித்து கொண்டு கோபமாக கத்தியவள் தன் அறைக்குள் புகுந்தும் கொண்டாள்..

ஆனால் அவளின் அன்னை அவளை அப்போதும் விடாது தான் அவள் அறையின் வாசலில் நின்று கொண்டு…

“அது தான்டி எனக்கு பயமாவே இருக்கு.. நீங்க பார்த்த மாப்பிள்ளை என்று இப்படி சலிச்சிட்டு சொல்றியே.. ஏன் நீ ஏதாவது பார்த்து வைத்து இருக்கியா என்ன….?”

தலை வலிக்கு ட்ராவில் தைலத்தை தேடிக் கொண்டு இருந்த இந்துமதியின் கைகள் அப்படியே நின்று விட்டது.. தைலம் கைக்கு அக்கப்பட்டும் அதை எடுக்காது அன்னையை திரும்பி பார்த்தவள்..

“ம்மா என்ன ம்மா.. சொல்றிங்க..?” பெண்ணவளுக்கு அழுகை வந்து விட்டது.. இத்தனை நேரம் கோபத்தில் ஆவேசமாக பேசியவளுக்கு, இயலாமையில் இப்போது தொண்டை குழியில் இருந்து வார்த்தைகல் வருவேனா என்று சத்தியா கிரகம் செய்தது..

மகளின் குரல் மாற்றத்தை எல்லாம் கவனிக்கும் நிலையில் அவள் அன்னை இல்லை.. திருமணம் நெருங்கும் இந்த சமயத்தில் பெண் இப்படி இருப்பது அவருக்கு சரியாக படவில்லை.. ஒன்று கிடக்க ஒன்று செய்து வைத்து விட போகிறாள் என்ற பயம் வேறு அவருக்கு..

அதில்.. “ நீ அந்த வயசுலேயே முளச்சு முணு இலை விடாத போதே ஒரு பையனுக்கு காதல் கடிதம் நீட்டியவள் தானே டி.. அந்த பையன் படிக்க மட்டுமே பள்ளிக்கு வந்த நல்ல பையன் என்று தொட்டு அதை எட்மாஸ்ட்டர் கிட்ட கொடுத்தான்..

இதே அந்த பையனுக்குமே உன்னை போல புத்தி இருந்து இருந்தா கண்டிப்பா அவன் கூட சுத்தி இருந்து இருக்க மாட்ட….”

கல்யாணம் நெருங்க நெருங்க. மகள் இப்படி இருக்க மகனுமே என்னவோ போல இருக்க..

மத்திய வர்க்கம் பெண்ணுக்கு திருமணம் வைத்து விட்டால், பணத்திற்க்கு நாயா பேயா அலைவது போல அலைந்து கொண்டு இருக்கும் கணவரிடமும் தன் மனதின் பயத்தை சொல்ல முடியாது தத்தளித்து கொண்டு இருக்கும் அன்னையின் மனமானது இன்று…

மகள் ஒரு வித சலிப்போடு சொன்ன…. “ நீங்க காட்டினா மாப்பிள்ளைக்கு தானே கழுத்தை நீட்டுகிறேன்…” என்ற பேச்சில், அப்போ மகளுக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லையா.? ஏன்.? எதற்க்கு.? என்று மனதில் குழப்பமானது இப்படி வார்த்தையாக மகளிடம் கொட்டிட வைத்து விட்டது…

வரும் வழி முழுவதுமே வீர ராகவை அழைத்து உண்மையை சொல்லி விடுவோமா..? இது போல பயந்து பயந்து எல்லாம் தினம் தோறும் தன்னால் இருக்க முடியாது…

தன்னை நம்பவில்லை என்றால், இந்த திருமண ஏற்பாட்டை இப்போதே ட்ராப் செய்து விடலாம்.

இப்படியாக வீர ராகவிடம். சொல்லலாம் என்று இந்து மதி நினைக்கும் போதே..

இது வரை தந்தை திருமணத்திற்க்கு என்று செலவு செய்து இருந்த பணம் நினைவுக்கு வந்தது..

மகளுக்கு திருமணம் என்பது தாங்கள் இது வரை சேமித்து வைத்த பணத்தை அனைத்துமே கொட்டி தானே செய்கிறார்கள்… அதற்க்கு தான் நியாயம் செய்ய வேண்டாமா…? அதோடு ஒரு முறை செய்தி தாளில் படித்த …

யார் திருமணம் நிற்க காரணமோ.. அந்த குடும்பம் தான் பாதிக்கப்பட்ட மற்ற குடும்பத்திற்க்கு திருமணம் செலவு செய்த பணத்தை கொடுக்க வேண்டும்.. என்பது வேறு அவள் நியாபகத்திற்க்கு வந்து தொலைத்தது..

அதோடு மான நஷ்டம் என்று வேறு …? அய்யோ என்று யோசித்து யோசித்து தான் இந்து மதிக்கு தலை வலியே அதிகம் ஆனது.

இருந்தும் என்ன ஆனாலுமே சொல்லி விடலாம் என்று நினைத்து கொண்டு இருந்தவளுக்கு, அன்னையின் இந்த பேச்சில் அதிர்ச்சியாகி விட்டாள்..

பெற்ற தாயே தன்னை நம்பாது.. ஏதோ தெரியாத வயதில் தான் செய்த அந்த முட்டாள் தனமான செயலை சொல்லி குத்தி காட்டும் போது…

என்னை பற்றி ஒன்றும் தெரியாத வீர ராகவ் மட்டும் எப்படி நல்ல விதமாக நினைக்க போகிறான்… அதோடு வாசு தேவ்… என்னை தான் நம்புவாங்க என்று சொன்னது எத்தனை உண்மை என்று கண்கள் கலங்கி போய் தன் அன்னையே பார்த்து கொண்டு இருக்க.

இந்து மதியின் அம்மாவுமே… வார்த்தையை விட்ட பின் தான்… தான் பேசியது தப்பே என்று உணர்ந்தார்.

அதில் மகளின் அறைக்குள் சென்று… “ இந்தும்மா…” என்று மகளின் கை பிடிக்க பார்த்தவரின் கைக்கு தன் கையை கொடுக்காது அன்னையை விட்டு கொஞ்சம் விலகி நின்று கொண்டவள்..

“என் மனசுல யாரும் இல்லேம்மா. அன்னைக்கு நான் செய்த அந்த முட்டாள் தனத்தின் வலியை நான் இப்போ வரை அனுபவிக்கிறேன் ம்மா….” என்ற மகளின் இந்த பேச்சில், அவள் அன்னை..

“இல்ல டி…” என்று சொல்லி ஏதோ பேச வர.

“ப்ளீஸ் ம்மா என்னால முடியல…ஒன்னு மட்டும் நிச்சயம். “ என்று சொல்லி அறையில் புகுந்து கொண்டு விட்டாள்..

அவள் அன்னைக்குமே மகளின் தோற்றத்திலும் பேச்சிலும் என்னவோ போல் ஆகி விட அவருமே அமைதியாக கூடத்தில் அமர்ந்து விட்டார்..

இத்தனை பேச்சுக்களையும் அமைதியாக கேட்டு கொண்டு இருந்த வீர ராகவன் வந்த தடையம் தெரியாது சென்று விட்டான்..

ஆம் வீர ராகவன் இவர்களின் இந்த பேச்சை அனைத்துமே கேட்டு விட்டான்… வீர ராகவனுக்கு வாசு தேவ் பற்றி விசாரித்து மண்டை காய்ந்து போய் தான் இருந்தான்.

வீர ராகவ் வாசு தேவ்வை பற்றி விசாரித்த தகவலாக.. இதற்க்கு முன் பெங்களூரில் உள்ள ஒரு ஐ.டி கம்பெனியில் தான் வாசு தேவ் வேலை பார்த்து இருக்கிறான்.

மூன்று வருடங்கள் எக்ஸ்பிரியன்ஸ் வைத்து இந்து மதி வேலை செய்யும் கம்பெனிக்கு முயற்ச்சிக்க அதிக சம்பளத்தோடு கூப்பிட்டு கொண்டது.

வீர ராகவ் விசாரித்த வரை வாசு தேவ் வேலையில் கெட்டி.. படிப்பிலும் கெட்டி என்று அவனை பற்றி தவறாக ஒரு விசயம் வரவில்லை..

அதோடு பெங்களூரில் கூட வேலை பார்த்த பெண்ணை காதலித்து நிச்சயமும் செய்து இருக்கிறான்.. கல்யாணம் வாசு தேவ் தங்கை திருமணம் முடிந்த பின் என்று முடிவு செய்து…

இதில் எங்கு இருந்து இந்து மதி இவனோடு..யோசித்து யோசித்து பார்த்து விட்டான் விடை தான் தெரியவில்லை…

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அவன் போலீஸ் கண் சொன்னது அன்று வாசு தேவ் இந்து மதியை பார்த்த பார்வை சரியில்லை என்பது..

அதோடு அவன் பேச்சும் சரியில்லை என்பது.. அன்று தூரத்தில் வாசு இந்துவோடு பேசும் போது இந்துவின் முக பாவனையில் இருந்தும் , பின் புடவை எடுக்கும் போது பேசியின் பேசியதும் சரியில்லை என்பதும்…

இப்படி குழம்பி போய் தன் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு இருந்தவனை பார்க்க வந்த சாருகேசன்.. நண்பனை பார்த்ததுமே அவன் மன நிலை சரியில்லை என்பதை புரிந்து கொண்டவன்.

“உன் குழப்பத்திற்க்கு இந்து தான் காரணம் என்றால். நீ இந்து கிட்ட பேசுறது தான் சரி என்று நான் சொல்லுவேன்… அதோட எது என்றாலும் திருமணம் நடக்கும் முன் பேசிடறது பெட்டர்.. ஏன்னா அந்த பெண் மத்தவங்களையே குழப்புற கேசு…” என்று சொல்லி கொண்டு வந்தவன் வீர ராகவ் தன்னை பார்த்த பார்வையில்..

“நீ கோபப்பட்டாலும்.. அது தான் டா உண்மை.. மத்தவங்களையே அத்தனை குழப்புறவள்.. அவள் எப்படி எப்படி எல்லாம் குழம்பி போவா. எது என்றாலும் கல்யாணத்திற்க்கு முன் பேசிடு.. எங்கேஜ் மெண்ட் நடந்து கல்யாணம் நடக்காம போவது எல்லாம் பெரிய விசயம் இல்ல.. ஆனா கல்யாணம் நடந்து பின்.. வேண்டாம்..” என்று சொன்ன நண்பனின் பேச்சு சரியே தான்..

ஆனால் அதை ஏற்றுக் கொள்ள தான் வீர ராகவுக்கு மனது இல்லை. அதுவும் நிச்சயம் செய்து திருமணத்தை நிறுத்தி விடலாம் என்றதில் வீர ராகவ் இன்னுமே கோபமாக தான் தன் நண்பனை பார்த்தான்..

“என்னை முறைக்கிறதை விட்டுட்டு… போல் இந்து கிட்ட பேசுற வழியை பாரு.. புரியுதா.” என்று சொல்லி விட்டு சென்றவனின் பேச்சில்..

வீர ராகவும். சரி பேசி விடலாம்.. என் கிட்ட ஏதாவது சொல்லனுமா.? சொல்லனுமா..? என்று கேட்பதை விட.. எது என்றாலும் என் கிட்ட தைரியமா சொல்.. என்று கேட்டு பார்க்கலாம் என்று நினைத்து இந்து மதியை பேசியில் அழைக்க பார்க்க.

ஆனால் அது ஸ்வீச் ஆப் என்று வரவும் தான்.. இந்து மதி வேலை பார்க்கும் அலுவலகத்திற்க்கு சென்றது..

அங்கு வீட்டிற்க்கு சென்று விட்டாள் என்ற செய்தியில் நேத்தும் தன்னோடு வந்ததில் லீவ் போட்டு விட்டாள்.. இன்றுமே வீட்டிற்க்கு சென்று விட்டாள்.. அதுவும் பேசியை அணைத்து வைத்து விட்டு… சரி வீட்டிற்க்கு போய் பார்த்து விடலாம் என்று நினைத்து தான் வீர ராகவ் இந்து மதியின் வீட்டிற்க்கு வந்தது..

வந்தவன் காதில் சரியாக இந்து மதியின் அன்னை சொன்ன அந்த வயதிலேயே.. என்ற ஆரம்பம் முதல் அனைத்துமே கேட்டவனுக்கு புரிந்து விட்டது… பள்ளியில் ஒரு பையனிடம் காதல் சொல்லி இருக்கிறாள் போல என்று…




 
Active member
Joined
May 11, 2024
Messages
170
சின்ன வயசுல தெரியாம ஒரு தப்பை செஞ்சிட்டு எவ்வளவு தான் அதனால அசிங்கப்படுவா
 
Top