Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

ஆசைகள் அடங்காது....17

  • Thread Author
அத்தியாயம்…17

இந்து மதியின் அண்ணன் சொன்னது போல் தான் அவள் அறைக்கு சென்ற போது அவளின் கை பேசியில் இருந்து அழைப்பு வருகிறது என்பதை அந்த பேசியில் இருந்து வெளிச்சம் வந்ததை கொண்டு தெரிந்து கொண்டவள் அழைத்தது யார் என்று கூட பாராது பேசியை ஏற்றவள்…

“சொல்லுங்க…” என்று பேசவும் ஆரம்பித்து விட்டாள்… அவளுக்கு தெரியும் அழைப்பது வீர ராகவன் என்று…

அவள் நினைத்தது போல் அழைத்தது வீர ராகவ் தான்.. ஆனால் இந்து மதியில் பேச்சுக்கு வீர ராகவ் பக்கத்தில் இருந்து எந்த பதிலும் இல்லாது போக..

இந்து மதிக்கு சட்டென்று மனதில் பதட்டம்… அழைத்து இருப்பது வாசு தேவ்வோ என்று… அதில் காதில் வைத்திருந்த பேசியை எடுத்து அழைத்தது யார் என்று பார்த்தவளுக்கு, அவள் நினைத்தது போல வீர ராகவ் தான் என்பதில் அவளுக்கு சிறிது ஆசுவாசம் கிட்டியது…

அதில் தன்னால் அவளின் கை தன் பேசியை காதுக்கு கொடுத்தவள்.. வாய்… “ நீங்க தானே.. நீங்க ஒன்னும் பேசாததில் நான் பயந்தே போயிட்டேன்…”

அளவுக்கு அதிகமான பயத்தின் விளைவு மனதில் நினைத்ததை பேச செய்து விட்டது..

இப்போது வீர ராகவ் பக்கத்தில் இருந்து… “ நீங்க தானே என்றால், யார் போன் செய்து இருப்பாங்க என்று நீ பயந்து போய் இருக்க…?” என்று கேட்டவனின் கேள்விக்கு பெண்ணவளாள் பதில் சொல்ல முடியவில்லை..

வீர ராகன் மீண்டுமே அதே கேள்வியை கேட்க.

“இது கேட்க தான் என் போனுக்கு போட்டு என் அண்ணன் போனுக்கும் போனை போட்டு என்னை கூப்பிட சொன்னிங்கலா..?”

இந்து மதியிடம் இருந்து இது போலான உரிமையான பேச்சை வீர ராகவ் இது வரை கேட்டது கிடையாது…. ஏன் இன்று வரை இந்து மதியிடம் இருந்து ஒரு சாதாரண பேச்சு கூட மிக குறைந்த பேச்சுக்கள் தான் அவளிடம் இருந்து அவனிடம் பெண்ணவள் பேசி இருப்பது..

இந்த பேச்சு கூட அளவுக்கு அதிகமான பயம் பதட்டம். கூடவே பதில் சொல்ல முடியாத கேள்விக்கு, மனதர்களின் இயல்பான தன் இயலாமையை கோபமாக வெளிப்படுத்தும் பேச்சாக இந்து மதியும் பேச..

இப்போது மீண்டும் வீர ராகவ் பக்கத்தில் இருந்து அமைதி நிலவ… அந்த அமைதியில் தான் இந்து மதி தான் பேசிய பேச்சின் தவறு அவளுக்கு புரிந்தது..

உடனே… “ சாரி.. சாரி.. வீர்.. ஏதோ டென்ஷனில் இப்படி பேசிட்டேன்.. சாரி சாரி…” என்று இந்து மதி வீர ராகவ்விடம் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டதினாலா..? இல்லை இந்து மதியின் தற்போதைய நிலமை வீர ராகவ்வுக்கு தெரியும் என்பதினாலோ…

வீர ராகவ் எந்த பிகுவும் செய்யாது… “ ஒகே… “ என்றவன் . பின் ஆழ்ந்த குரலில்.. “ஏதுக்கு டென்ஷனா இருக்க..?” என்று கேட்டான்.. ஏன் என்று காரணம் தெரிந்தே…

வீர ராகவ்வின் இந்த கேள்விக்கும் இந்து மதி பதில் அளிக்கவில்லை.. அமைதி தான் காத்தாள்..

இந்து மதியின் இந்த அமைதி தான் வீர ராகவுக்கு கோபத்தை கொடுத்தது.. எது என்றாலும் என்னிடம் சொல்வதற்க்கு என்ன…?

எந்த ஒரு பதவி அந்தஸ்த்து இல்லாதவனே… தன் மனைவி.. இல்லை எதிர்கால மனைவி.. இது போலான பிரச்சனைகளை தன்னிடம் சொல்ல வேண்டும் என்று தான் எதிர் பார்ப்பான்..

இதில் இது போலான பிரச்சனை வந்தால், பொது மக்களுக்கே உதவி செய்யும் பதவியில் இருக்கும் தன்னிடம் இவள் சொல்வதற்க்கு என்ன.? என்றெஉ உரிமையான கோபம் வீர ராகவ்வனுக்கு பெண்ணவள் மீது ஏற்ப்பட்டது தான்…

இருந்தும் அவன் அவளிடம் அது காட்டது… “ இல்ல பெங்களூர் வந்ததில் இருந்து நான் உன் கிட்ட பேசலலே அது தான்… அது தான் நான் கூப்பிட்டேன்.. எனக்கு தான் இங்கு வேலை.. மேடம் நீங்களாவது என்னை கூப்பிட்டு இருக்கலாம்” என்று சொன்னவனின் பேச்சில், ஆதங்கம் தான் மேலோங்கி இருந்தது..

வீர ராகவ் பெங்களூரில் இருந்தாலுமே, இந்து மதியின் தற்போதைய பிரச்சனை அவனுக்கு தெரிய தான் செய்தது.. எவ்வளவு பெரிய பிரச்சனையில் அவள் இருக்கா… அதை உடனடடியா என் கிட்ட தானே சொல்லி இருக்கனும்.

ராஸ்க்கல்.. என்ன தைரியம் இருந்தா எனக்கு பொண்டாட்டியா வரப்போறவளுக்கு இவன் ரூமை புக் பண்ணி இந்துவை கூப்பிட்டு இருந்து இருப்பான்…

ஆம் வாசு தேவ்… நட்சத்திர ஓட்டலில் ரூம் புக் செய்தது முதல் இந்து மதியை மிரட்டியது வரை வீர ராகவ்வுக்கு அனைத்தும் தெரிந்து தான் இருந்தது.

இவன் பெங்களூர் கிளம்பும் முன் வாசு தேவ்வால் இந்து மதிக்கு தான் இல்லாத போது பிரச்சவை வந்து விட போகிறது என்று தான் வாசு தேவ்வை கண்காணிக்க ஒரு ஆளை ஏற்பாடு செய்து விட்டு தான் சென்னையில் இருன்டு கிளம்பியது..

இவன் சென்னையை விட்டு கிளம்பிய அன்றே. வாசு தேவ்.. சென்னையில் ஸ்டார் ஓட்டலில் ரூம் புக் செய்து இருக்கிறான்.. அதுவும் ஒரு நாள் இரவுக்கு மட்டும் என்றதில் வீர ராகவ்வுக்கு சந்தேகம் ஏற்பட்டு விட்டது.

சென்னையில் அவனின் பழைய நண்பனோடு தங்கி இருக்கும் போது ஏதற்க்கு ஓட்டலில் ரூம் புக் செய்து இருக்கிறான்… சந்தேகம் வந்த நொடி… வாசு தேவ்வின் கை பேசியை கண்காணிக்கு ஏற்பாடு செய்து விட்டான்..

அவன் சந்தேக்கப்பட்டது போல தான் வாசு தேவ் இந்துமதியை தினம் இரவில் அழைத்து பேசியது.. அதுவும் என்னோடு ஒரு இரவு மட்டும் இருந்தால் போதும் இல்லை..

நீ என் கிட்ட காதல் சொன்னதை சொல்லி விடுவேன். என்று சொன்னவனின் பேச்சில் வீர ராகவுக்கு அப்போதே சென்னைக்கு போய் அவனை முட்டிக்கு முட்டி தட்ட வேண்டும் என்று தான் நினைத்தான்.

ஆனால் அவனை உடலால் அடிப்பதை விட முதலில் அவனின் அந்த கனவு கோட்டையை அழிக்க வேண்டும் … பின் அவனை சென்னையில் போய் கவனித்து கொள்ளலாம் என்று அவன் பெங்களூர் போன வேலையை பார்க்க கல்பனாவின் தந்தையை பார்க்க சென்றான்..

இவனிமே ஐ.பி. எஸ் என்பதினால் மற்றோரு ஐ.பி எஸ்ஸை உடனே வீர ராகவ் பார்த்து விட்டான்…

கல்பனாவின் கை அவ்வளவு சுத்தம் கிடையாது தான். கல்பனாவின் அண்னன் ஐ.[பி. எஸ் இப்போது தான் பதவியில் வந்து உட்கார்ந்து இருக்கிறான்… அதனால் அவர் எப்படி என்பது இனி தான் தெரிய வரும்..

ஆனால் என்ன தான் ஆயோக்கியனாக இருந்தாலுமே, தன் வீட்டு பெண்னை ஒரு நல்லவனுக்கு தான் திருமணம் செய்து வைக்க எந்த தந்தையும் விரும்புவார். அதுவும் பெண்கள் விசயத்தில் தன் பெண்ணுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்.

வீர ராகவ்வின் அந்த நம்பிக்கை வீண் போகவில்லை… வாசு தேவ்வை பற்றி அனைத்து விவரங்களையும் சொல்ல.// முதலில் கல்பனாவின் தந்தை நம்பவில்லை தான்..

ஆனால் ஆதரப்பூர்வமாக ஆதரத்தோடு வீர ராகவ் கல்பனாவின் தந்தையிடம் கொடுத்த போது நம்பி தானே ஆக வேண்டும்..

ஆனால் தன் முன் இருந்த ஆதரங்களை பார்த்து கல்பனாவின் தந்தைக்கு அப்படி ஒரு ஆத்திரம்…

ஒரு போலீஸ்க்காரனையே ஏமாத்தபார்த்து இருக்கான்.. அதுவும் அண்ணன் காரன் ஐ.பி.எஸ்… இது போல பதவியில் இருக்கும் வீட்டு பெண்னையே ஏமாத்த பார்த்து இருக்கான் என்றால் மத்த பெண்ணுங்க நிலை..” என்று கோபமாக பேசியவர் தன் மகனையும் அழைத்து பேச. அவருக்குமே கோபம்..

அந்த ஐ.பி. எஸ் அதிகாரியோ… “ நாம் கல்பனா ஒரு பையனை விரும்புகிறேன் என்று சொன்னதுமே அவனை பற்றி நல்லா விசாரித்து விட்டு தானே நான் அவள் கிட்ட அவள் காதலுக்கு ஓகே சொன்னது… அதற்க்கு அடுத்து தானே நாம நம்ம கல்பனாவை அவனுக்கு நிச்சயமும் செய்தது…. அப்போ அவனை பத்தி விசாரித்த போது… “ தன் முன் இருந்த வாசு தேவ்வை பற்றிய ஆதாரத்தை கை காட்டி..

“இது எல்லாம் என் பார்வைக்கு கூட வரவில்லையே…”

தான் ஒரு ஐ.ஏ எஸ் அதிகாரி தானே ஏமாந்து போய் உள்ளமே… என்ற ஆதங்கம் அவரின் வார்த்தையில் வெளிப்பட்டது..

கூடவே.. “உங்களுக்கு மட்டும் எப்படி அவனை பற்றி இத்தனை ஆதாரம் கிடைத்தது.. அதோடு… அவனை பற்றி விசாரிக்க என்ன காரணம்.. அதை எங்க கிட்ட காட்ட என்ன காரணம்…” என்றும் கேட்டவனிடம்..

வீர் ராகவ்.. அனைத்துமே சொன்னான். ஆம் அனைத்துமே தான்.. இந்து மதி தன் பதினைந்தால் வயதில் வாசு தேவ்விடம் காதலை சொன்னது முதல் அனைத்துமே தான் சொன்னான்..

அதற்க்கு கல்பனாவின் அண்ணனும் தந்தையுமே…. “ உங்க பியான்ஸிய பத்தி தெரிந்ததும்.. இந்த விசயம் இந்து மதியை பத்தி உங்களுக்கு தப்பா காட்டலையா..?” என்று கேட்டதற்க்கு.

“தப்பா காட்ட அவள் என்ன தப்பு செய்தா.? சின்ன பெண் அவள் அப்போ ரொம்ப சின்ன பெண்.. பெரும்பாலும் இந்த வயது பெண்களுக்கு யாராவது ஒரு கிரேஸி இருக்க தான் செய்வாங்க. அது ஆக்ட்டரா இருக்கலாம்.. ஸ்போர்ட்ஸ் மேனா இருக்கலாம்.. ஏன் நமக்கு டீச்சிங்க சொல்லி கொடுப்பங்கலா கூட இருக்கலாம்.. இது பெண்களுக்கு மட்டும் இல்ல. ஆண்களுக்குமே நம்ம சின்ன வயசுல ஏதாவது ஒரு கிரேஸ் இருக்க தானே செய்யும்…?” என்று கேட்ட வீர ராகவ் கல்பனாவின் தந்தை அண்ணனை பார்க்க.

வீர ராகவ்வின் கேள்வியிலும், அவனின் அந்த பார்வையிலும்.. இருவரும் சிரித்து விட்டனர்.. அந்த சிரிப்பே சொன்னது… அவர்களுக்குமே அது போலான ஒரு ஈர்ப்பு இருந்தது என்பதை…

வீர ராகவனும் சிரித்து விட்டவன்.. பின்… “ இந்து மதியின் ஈர்ப்பு தன் பள்ளியில் படிக்கும் மாணவன் மீது.. அதனால் சொல்லி விட்டாள்.. என்னை போல சொல்லி கொடுத்த அசிரியர் மீது இருந்து இருந்தால், என்னை போல பயந்து போய் சொல்லாமல் இருந்து இருப்பாள்… இதோ என்னை போல அதை நினச்சி சிரிச்சி கொண்டு இருந்து இருப்பாள்..” என்று சொன்னவனின் பேச்சில் மீண்டும் இருவரும் சிரித்து விட..

பின் பேச்சுக்கள் அனைத்துமே வாசு தேவ்வை எப்படி கட்டம் கட்டுவது என்று தான் இருந்தது..

பின் சும்மா விடுவார்களா.? வாசு தேவ்வின் இப்போதைய குறி… கல்யாணம் செய்ய நிச்சயத்த பெண்ணின் வீட்டு ஆண்கள் இருவருமே. அரசாங்க உயர் பதவியில் இருப்பவர்கள்..

அதே போல இப்போது வாலாட்ட நினைத்த இந்து மதியின் வருங்கால கணவனுமே ஒரு காவல் துறையில் உயர்ந்த பதவியில் இருப்பவன்.. பாம்பு புத்துக்குள் கை விட்டது போலான நிலை தன்னுடையது என்று தெரியாது…

இங்கு சென்னையில் வாசு தேவ்.. மீண்டும் இந்து மதிக்கு கை பேசியில் அழைத்தான்..


 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Paravalla Kalpana family Veer ah nambiche… Indhu madhi inimelum silent ah iruntha avlo than…

Konjam spelling mistakes irukku… correct pannunga
 
Top