Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

ஆசைகள் அடங்காது....19

  • Thread Author
அத்தியாயம்….19

கவிதாவுக்கு நினைக்க நினைக்க.. அப்படி ஒரு ஆத்திரம் வந்தது,, தன் பெற்றோர் தங்களை விட்டு சென்ற அன்று கூட இந்த அளவுக்கு கவிதா அழுதாளா என்று தெரியவில்லை.. அப்படி ஒரு அழுகை..

அந்த வயதில் அத்தை மகன் தன்னை தவறாக தொடுகிறான்.. என்று தன்னிடம் சொன்னவளா..? இன்று… அதை நினைக்க தான் அப்படி ஒரு ஆத்திரம் வந்தது அவளுக்கு…

உறவுகள் எல்லாம் தெரியாத ஊரில் எப்படி சின்ன பெண்ணை வைத்து கொண்டு உனக்கு கஷ்டம் தானே… நீயுமே வயது பெண் தானே.. எப்படி இருப்பிங்க…? “ என்று அத்தனை சொல்லி கூட.. கவிதா தைரியத்தோடு தான் தெரியாத இந்த ஊருக்கு வந்தாள்.. காரணம் தன் தங்கையும் தன்னை போலவே தைரியமானவள்..

அந்த சின்ன வயதிலேயே தங்கள் அத்தை மகனின் மிரட்டலுக்கு பயப்படாது தன்னிடம் சொன்னவளாச்சே… என்ற நம்பிக்கை தங்கை மீது கவிதாவுக்கு இருந்தது.. யாராவது அவளை தவறாக பார்த்தால் கூட, தன்னிடம் சொல்லி விடுவாள் என்று தான் நினைத்தது…

ஆனால் தங்கையின் தைரியம் தன்னை விட மிகவும் மிஞ்சி போய் விட்டதில். அடுத்து என்ன என்று நினைக்க கூட அவளுக்கு பயமாக தான் இருந்தது…

யார் அவன்…? எப்படி பழக்கம்…? ஒன்றும் புரியவில்லை கவிதாவுக்கு.. காலையில் போனால் மாலை நேரம் சென்று தான் கவிதா வீட்டிற்க்கு வருவது.. தங்கைக்கு இந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பு என்பதினால் ஸ்பெஷல் கிளாஸ் என்று அவளுமே நேரம் கழித்து தான் வீட்டிற்க்கு வருவது..

காலை இரவு இருவரும் ஒன்றாக தான் சாப்பிடுவது.. ஏதாவது சிறிய அளவில் சமைத்து விட்டு தான் கவிதா தன் அலுவலகத்திற்க்கு செல்வாள்.. சின்ன வயதில் இருந்தே அத்தையோடு இருந்த சமயம் அக்கா தங்கைக்கு அனைத்து வேலைகளும் செய்து பழக்கம் என்பதினால், வேலைகளும் இருவரும் சேர்ந்து தான் செய்தது.. அதனால் கஷ்டம் இல்லாது தான் நாட்கள் சென்றது…

சனி ஞாயிறு தான் அலுவலகம் விடுமுறை என்பதினால். ஏதாவது விசேஷமாக சமைத்து உண்பது.. சில சமயம் ஆனந்துமே வீட்டிற்க்கு வந்து சாப்பிட்டு விட்டு செல்வது தான்.. கிருஷ்ண வேணிக்கும் தங்கள் காதல் விசயம் தெரியும்..

ஆனந்தை மாமா என்று தான் அழைத்து பேசுவதும்… ஆனந்துமே வீட்டிற்க்கு அடிக்கடி எல்லாம் வருவது கிடையாது.. வீட்டில் தனித்து இரண்டு பெண்கள் மட்டும் இருக்கும் வீட்டில் தான் அடிக்கடி சென்றால், பெண்களுக்கு கெட்ட பெயர் வந்து விடும் என்று பெரும் பாலும் இவர்களின் பேச்சு கூட கை பேசியின் மூலமாக தான் இருக்குமே..

ஆனந்து சென்னையில் இருந்து பெங்களூர் வருவதும் எப்போதாவது தான்.. அப்போது வெளியில் எங்காவது சந்தித்து பேசினால் தான் உண்டு. அப்போது கூட கவிதா தன் தங்கையை கூட அழைத்து தான் செல்வாள்..

தங்கையோடு காதலனை சென்று பார்க்கும் அளவுக்கு தான் இவர்களின் காதல் நாகரிகமாக இருக்கும்..

ஆனால் இப்போது கவிதாவுக்கு ஒரு குற்றவுணர்ச்சி. தன் காதலை பார்த்து தங்கை தடம் மாறி போய் விட்டாளா என்று..

காரணம் கவிதா தன் தங்கையை கிருஷ்ண வேணியை அடித்த போது அவள் சொன்னது இது தான்..

“ஆனந்து மாமாவை போலவே ரொம்ப ரொம்ப டீசண்டா நடந்துக்கிட்டாருக்கா அவரு… நம்ம ப்ளாட்ல இருக்கும் பெண்கள் எல்லோரும் அவர் மீது வழிந்து போய் பேசும் போது எல்லாம் ரொம்ப ரொம்ப டீசண்டா அவங்களை விலக்கி நிறுத்தி வைத்து விடுவாருக்கா.. “ என்று சொன்னவளின் பேச்சில் கவிதாவுக்கு கோபமும் ஆற்றாமையும் தான் வந்தது.

“ரொம்ப ரொம்ப டீசண்டான ஆளு தான். சின்ன பெண்ணை இப்படி செய்து வைத்து இருக்காரா.” என்று சொல்லி இன்னுமே அடித்து விட்டாள்..

தங்கையை அடித்து அடித்து கவிதாவுக்கு தான் கை வலி எடுக்க ஆரம்பித்து விட்டது.. இன்னுமே தன் தங்கை… என் நிலை தெரிந்தா கண்டிப்பா என்னை மேரஜ் செய்துக்குவாருக்கா.. அவர் ரொம்ப ரொம்ப நல்லவரு அக்கா… என்று சொல்வதையே திரும்ப திரும்ப சொன்னதை கேட்க கேட்க…

தவறு செய்து விட்டோமோ.. தன் காதல் என்று நினைத்து தான் இங்கு வந்தது தவறோ… என்ன தான் என்றாலுமே சின்ன பெண் தானே.. இதோ ஏமாந்து நின்ற போது கூட விவரம் பத்தாது அவர் என்னை ஏமாத்த மாட்டார் என்று சொல்வதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டு இருக்கிறாளே என்பதில் இன்னுமே ஒடுங்கி போய் ஒரு மூலையில் அமர்ந்து விட.

மதியம் நடந்த கலோபரம். இரவு ஆன பின்னுமே அந்த கலோபரத்தின் பாரம் குறைவதாக காணும்… அக்காவும் தங்கையும் ஆளுக்கு ஒரு மூலையில் முடங்கி கொண்டு விட பகலின் வெளிச்சம் போய் இரவின் ஆதிக்கம் அந்த வீட்டை ஆக்கிரமித்து கொண்டது போல அவர்களின் மனது போலவே அவர்களின் வீடுமே இருள் சூழ்ந்து தான் இருந்தது…

கதவை திறந்து யாரோ தங்கள் வீட்டிற்க்கு வருவது போலான சத்தம் கேட்டு தான் கவிதா யார் என்று நிமிர்ந்து பார்த்தாள்..

வந்ததோ ஆனந்த் தான். வந்ததுமே இந்த வீட்டின் சுவீட்ச் போர்ட் எங்கு இருக்கும் என்று தெரிந்ததினால், விளக்கை போட்ட உடன் தான் கவிதா வந்தது ஆனந்த் என்றே தெரிந்தது.. இது போல ஒரு சுவிட்ச் போட்ட உடனே வெளிச்சம் வந்தது போல… ஏதாவது ஒன்று நடந்து தன் தங்கை முன்ன போலவே தனக்கு தங்கையாக மட்டுமாக இருக்க மாட்டாளா என்று நினைத்த கவிதா,,

அவனை பார்த்ததுமே தன் நினைப்பும் சேர்ந்து கவிதாவுக்கு அடங்கி இருந்த அழுகை மீண்டும் வந்தது..

ஆனந்தை பார்த்து கிருஷ்ண வேணியுமே அழுதாள் தான்.. அவள் அழுவதை பார்த்து கவிதாவுக்கு கோபம் தான் வந்தது…

தன் பக்கத்தில் இருந்த க்ளீப்பை எடுத்து அவள் மீது விட்டெரிந்த கவிதா..

“அழுவாதடி. எனக்கு எரிச்சலா இருக்கு…” என்று மீண்டும் கத்தியவளின் அருகில் சென்ற ஆனந்து அவளின் தோள் பற்றி எழுந்து நிற்க வைத்தவன்..

“இது போல சத்தம் போட்டா அழுதா… எல்லா பிரச்சனையும் தீர்ந்து விடுமா.?” என்று கேட்டவன்.. தன் கையில் இருந்து உணவு பொட்டலத்தை காண்பித்து.

“உங்களை பார்த்தாலே தெரியுது சாப்பிடலேன்னு.. முதல்ல சாப்பிடுங்க.. சாப்பிட்ட பின்… என்ன என்று பார்க்கலாம்..” என்று ஆனந்த் கவிதாவிடம் கூறினான்..

அதற்க்கும் கவிதா. “ முதல்ல அவள் கிட்ட கொடுங்க. சாப்பிட்டு இன்னுமே உடம்பு குழுப்பு எடுத்து திரிவா..” என்ற கவிதாவின் பேச்சில் ஆனந்த்.

“என்ன கவி இது.. படித்த பெண் பேசுவது போலவா பேசுற…?” என்று அதட்டலுக்கு இப்போது கவிதாவுக்கு அழுகை தான் வந்தது..

“நான் என்ன செய்வேன் ஆனந்த்… என்ன செய்யிறது.. எனக்கு ஒன்னுமே புரியலே ஆனந்த்.. புரியலையே.. இனி அடுத்து என்ன என்று நினச்சாலே பயமா இருக்கு ஆனந்த்…” என்று தன்னை மறந்து புலம்பி கொண்டு இருந்தவளை தோளோடு அணைத்து கொண்டவன்..

“கவி தோ பாரு.. நீயே இப்படி இருந்தா. அவள்.. பாரு நீ அழுவதை பார்த்து பயந்து உன்னை பார்க்கிறாள்..” என்று ஆனந்து சொல்ல..

மீண்டுமே கவிதாவுக்கு அழுமை போய் இப்போது கோபம் வந்து விட்டது..

“அவள் பயந்து எல்லாம் பார்க்கல ஆனந்த்.. நான் உங்க தோள்ள சாய்ந்து இருப்பதை பார்த்து ஓடி போனவன் இருந்து இருந்தா..” என்று பேசி சென்றவளை அடுத்து பேச விடாது ..

“கவி என்ன பேச்சு இது… இதுக்கு மேல நீ இதை பத்தி வாய் திறக்க கூடாது.. என்னை நம்பி தானே கூப்பிட்ட இனி நான் பார்த்து கொள்கிறேன்.. அவள் கிட்ட நான் பேசுறேன்.. நீ அமைதியா இரு அது போதும்.” என்று சொன்னவன்..

கோபத்தோடு கவிதா சாப்பிட அடம் பிடிக்க.. அழுகையில் கிருஷ்ண வேணி சாப்பிடாமல் முரண்டு பிடிக்க. இருவரையும் அதட்டி மிரட்டி சாப்பிட வைத்தவன். தானும் சாப்ப்பிட்ட பின்..

கவிதாவிடம் மீண்டுமே.. “ நீ ஒன்னும் பேச கூடாது.. நான் அவள் கிட்ட பேசிக்கிறேன் புரியுதா..” என்று அதட்டி விட்டு தான் ஆனந்த் கிருஷ்ண வேணியை பார்த்தது..

கிருஷ்ண வேணி.. ஆனந்த் என்ன நடந்தது என்று கேட்காததிற்க்கு முன்னவே… அனைத்தும் சொல்ல தொடங்கினாள்..

அதாவது கிருஷ்ண வேணி சொன்ன விசயத்தின் சாரம்சம் இது தான்..

வாசு தேவ்… இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருக்கிறான்.. அவன் தான் பார்க்க ஜென்டில்மேன் தோற்றத்தில் சுற்றுபவன் ஆயிற்றே… பார்க்க அழகாக. சிரித்த முகத்துடன்…

தான் மின் தூக்கியில் வந்து கொண்டு இருந்து யாராவது பெண்க்ஸ்ள் குழந்தைகள் முதியவர்கள் மின் தூக்கியில் ஏற இடம் இல்லை என்றால், இவன் அதில் இருந்து வெளி வந்து நான்காவது மாடியில் இருந்து நடந்து வந்து.. ஒரு முறை.. ஒரு பெண்மணிக்கு நடியிரவு பிரசவ வலி வந்து விட்டது.

கணவன் வெளி ஊருக்கு சென்று இருந்த சமயம் அது… வீட்டில் பெரியவர்கள் மட்டுமே இருந்த சமயத்தில் வாசு தேவ் தான் தானாக முன் வந்து தன் காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றது..

காரிலேயே அந்த பெண்ணுக்கு கொஞ்சம் பிளீட்டிங் ஆகி விட. குழந்தை எல்லாம் பிறந்த பின் குழந்தையில் தந்தை வாசு தேவ்வை வந்து சந்தித்து..

“நன்றி சொன்னதோடு மட்டும் அல்லாது கார் வாஷ் செய்ய பணமும் கொடுக்க.. அதை வாசு தேவ் வாங்காது.

“என்ன சார்… எனக்கு பணத்தை கொடுத்து அசிங்கப்படுத்துறிங்க… உண்மை சொல்ல வேண்டும் என்றால், அன்னைக்கு உங்க மனைவி பிரசவ வலியில் துடித்ததை பார்த்த பின் தான்.. பெண்கள் மீது இருக்கும் என்னுடைய மதிப்பு இன்னுமே உயருது சார்..

நான் என் வருங்கால மனைவியை இன்னுமே நல்லா பார்த்துக்க தோனுது சார்..” என்றவனின் பேச்சில் …

அந்த குழந்தையின் தகப்பனோ… “ எனக்கு மட்டும் ஒரு சிஸ்டர் இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு தான் சார் மேரஜ் செய்து வைப்பேன்..” என்று சொல்லி விட்டு செல்லும் அளவுக்கு தான் அன்று வாசு தேவ் பேசியது..

இப்படி பேச காரணம்.. இது நடந்தது.. அந்த குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் கார் நிறுத்தும் இடத்தில் நடந்தது..

அப்போது இரண்டு கல்லூரி பெண்கள் தங்களின் இரு சக்கர வாகனத்தை எடுக்க வந்தவர்கள் வாசு தேவ்வின் இந்த பேச்சில் அவனையே சிறிது நேரம் பார்த்து விட்டு தான் சென்றது… அன்று அந்த கல்லூரி பெண்களோடு வாசு தேவ்வை பார்த்ததும் அவன் பேச்சை கேட்டு கொண்டு இருந்ததில் நம் கிருஷ்ண வேணியுமே அடக்கம் தான்..

கிருஷ்ண வேணியில் பள்ளி பேருந்து வர நேரம் அது… அதனால் அவள் காத்திருக்கும் சமயத்தில் தான் வாசு தேவ்வின் பேச்சை கேட்டது.

உடனே கிருஷ்ண வேணியின் மனதில் வாசு தேவ் உயர்ந்து நின்று விட்டான்..

இது மட்டும் கிடையாது மின் தூக்கியை விட்டு வந்தது கூட இளம் பெண்கள் இருக்கும் போது தான். அவனின் இது போலான காய் நகர்த்தல்கள் மிக நன்றாகவே அவன் நினைத்து பார்த்ததை விட மிக நன்றாகவே வேலை செய்தது..

அதன் விளைவு தான் இன்று கிருஷ்ண வேணி வாசு தேவ்வின் குழந்தை வாங்கி நிற்க காரணமும் ஆகும்..

அனைத்தும் சொல்லி முடித்த கிருஷ்ண வேணி… “அவர் ரொம்ப நல்லவர் மாமா….” என்று சொன்னவளின் இந்த பேச்சுக்களை கேட்டு ஆனந்துக்கு புரிந்து விட்டது..திட்டம் இட்டு தான் அனைத்தும் செய்து இருக்கிறான் என்று..

இப்படி குழந்தையை போய் எப்படி..? அவனுக்கு மனம் வந்தது. என்று நினைத்தவன்.. அதை கேட்டும் விட்டான்..

“அப்படி நல்லவனுக்கு தெரியலையா…? நீ சின்ன பெண் என்று…”

அதற்க்கும் ஒரு காரணம் சொன்னாளே கிருஷ்ண வேணி..

“எனக்கு தான் வயசு பதினெட்டு தான் என்று தானே அவர் கிட்ட சொன்னேன்.. நான் தான் பிரபோஸ் செய்தேன்.. அவர் தான் சொன்னார்… நீ சின்ன பெண் மைனர். .. இது போல பேசுவது தப்பு என்று… அதுக்கு தான் பொய் சொன்னேன். எனக்கு பதினெட்டு வயசு ஆகிடுச்சி.. ஒரு வருஷன் எனக்கு உடம்பு சரியில்லே என்று வீட்டில் இருந்துட்டேன் என்று.”

கிருஷ்ண வேணியின் இந்த பேச்சில் கவிதாவும் ஆனந்துமே என்ன இது என்பது போல அதிர்ச்சியாகி தான் அவளை பார்த்தனர்.

“அவர் என் கிட்ட மட்டும் இல்ல.. மத்த பெண்ணுங்க விரும்புறேன் என்று சொன்ன போது நீங்க சின்ன பெண் தான் சொன்னதா அந்த பெண்ணுங்க சொன்னாங்க.

அதனால தான் நான் சட்டுன்னு பொய் சொன்னேன்.. எனக்கு பதினெட்டு என்று…”

ஆனந்துக்கோ இப்படியும் ஒரு பெண் இருப்பாளா என்பது போல பார்த்தவன் கேட்டும் விட்டான்…

“ஓரு வயசு கூட என்பது காதலுக்கு தகுதியான வயசா. சரி காதலிச்சான்.. அப்போ கூட இது எல்லாம் என்ன. இது. இப்படி பட்டவன் எப்படி நல்லவனா இருப்பான்.. அதோட அவன் போன் நம்பர் போன விவரமும் ஒன்னும் தெரியல என்ற என்ன வேணி இது..” என்று கேட்டதற்க்கு கூட அந்த பேதை இதை தான் சொன்னாள்..

“நான் அவர் கிட்ட பொய் சொன்னது என் மீது கோபம் போல..” என்று.

“நீ சொல்லிட்டியா.. உன் வயசை அதனால தான் உன் கிட்ட ஒன்னும் சொல்லாம ஊரை விட்டு ஓடிட்டானா..?” என்று ஆனந்த் கேட்டதற்க்கு.

“நான் என் வயசை சொல்லலே மாமா. என் கிட்ட சொல்லாம போனதுக்கு அது தான் ரீசனா இருக்கும் ..” என்று சொன்னவள் கூடவே…

“ஓடி போனார் எல்லாம் சொல்லாதிங்க மாமா…” என்று கூட சேர்த்தும் சொன்னாள்….
 
Top