Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

ஆசைகள் அடங்காது....7

  • Thread Author
அத்தியாயம்…7

யமுனா தன் கணவனுக்கு பரி மாறிவிட்டு கணவன் சொல்ல அவன் பக்கத்தில் அமர்ந்து உணவு உட் கொண்டு இருந்த போது சாருகேசன் கேட்ட..” உன் பிரண்ட் இந்துமதி எப்படி?” என்ற கேள்வியில், அதிர்ச்சியில் விக்கித்து போனவளுக்கு, உணவு தொண்டை குழியில் சிக்கி அது வேறு அவளுக்கு இருமலை வர வழைத்து விட்டது.

பக்கத்தில் இருந்த தண்ணீரை அவளிடம் கொடுத்த சாருகேசன். “ உன் பிரண்ட் பத்தி தானே கேட்டேன்.. நீ ஏன் இவ்வளவு அதிர்ச்சி ஆகுற.?” என்று கேட்டுக் கொண்டே யமுனாவின் தலையை தட்டி அவளின் இருமலை போக்க முயற்சி செய்தான்.

சிறிது நேரம் கழித்து தான் யமுனாவின் இருமல் அடங்கியது. அந்த சிறிது நேரத்தில் தன்னை திடப்படுத்திக் கொண்ட யமுனா.

“ ம் நல்ல பெண் தான்.” என்று திக்கி திணறி சொன்னவள், தொண்டை குழியில் மிச்சம் இருந்த எச்சிலை முழுங்கி கொண்டவளாக.

“ என்ன திடிர் என்று இந்துவை பத்தி கேட்கிறிங்க.?” என்று கேட்டு என்ன விசயம் என்று அறிந்து கொள்ள கேட்டாள்.

அவளுக்கு இந்துமதியை தான் சொன்னதை வைத்து அவளுக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்று பயந்து போனவளாக கேட்டாள். இந்துமதியும் சரி, யமுனாவும் சரி கெட்டவர்கள் கிடையாது.

பேச தெரியாது பேசுவதும் . நட்புக்களிடம் எதை சொல்வது எதை சொல்ல கூடாது என்று தெரியாது போனதும். அவர்களின் பேச்சை கடை பிடிப்பதும் தான் அவர்களின் தவறாக போனது.

யமுனா தன் வாழ்க்கையை காப்பாற்றி கொள்ள இந்துமதி சொல்லாததையும் சேர்த்து சொல்லி விட்டாள் தான். ஆனால் இதனால் அவளுக்கு ஒரு பிரச்சனை என்றால், கண்டிப்பாக யமுனாவின் மனசாட்சியே அவளை கொன்று விடும். அதனால் எதற்க்கு என்று அதிர்ந்து போய் தான் யமுனா கேட்டாள்

“ அது ஒன்றும் இல்ல. நம்ம வீரூக்கு அந்த பெண்ணை தான் அவங்க வீட்டில் பார்த்து இருக்காங்க.” என்று சாருகேசன் சொன்னது தான் தாமதம், அமர்ந்து இருந்தவள் எழுந்து நின்று விட்டாள்.

“என்ன யம்மீ இப்படி அதிர்ச்சி ஆகுற.? ஏன் அந்த பெண் நல்ல பெண் கிடையாதா..? உன் கிட்ட ஏதோ சொன்னா அது வரை தானே.. இல்ல வேறு ஏதாவது” என்று இழுத்தவனின் பேச்சில் அவசர அவசரமாக.

“ இல்ல .இல்ல நல்ல பெண் தான். அது எல்லாம் ஒன்னும் இல்ல.” என்று சொன்னவளை கை பிடித்து மீண்டும் தன் அருகில் அமர வைத்துக் கொண்ட சாருகேசன்.

“ அப்போ ஏன் இப்படி அதிர்ச்சி ஆகி போற.?” என்று கேட்டவனின் குரல் ஏதோ குற்றவாளியை விசாரணை செய்யும் பாவம் போல் தான் யமுனாவுக்கு தோன்றியது.

அதனால் தன் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டவளாக, தன் குரலை சாதாரணமாக மாற்றிக் கொண்டு. “ இல்ல திடிர் என்று உங்க பிரண்ட் இந்துவை கல்யாணம் செய்யிறார் என்றதும், நீங்க தப்பா எடுத்துக்காதிங்க, நம்ம பிரச்சனைக்கு அவள் தான் காரணம் என்று ஏதாவது பழி வாங்குவது போல் உங்க பிரண்ட் இந்துவை திருமணம் செய்ய நினைக்கிறாரோ என்று நினைத்தேன் அவ்வளவு தான்.” என்று சொன்னவள் .

மீண்டும் “ அப்படி எல்லாம் இல்லை தானே.” என்று கேட்டாள்.

“நானும் முதலில் அப்படி தான் நினைத்தேன். அவன் அவங்க அம்மா மீது ப்ராமிஸ் பண்ணவும் தான் நான் நம்பினேன். அவனுக்கு இந்துவை நம்ம கல்யாணத்தில் பார்த்ததும் பிடித்து விட்டதாம். வீட்டில் அந்த பெண் போட்டோவையும் காண்பித்ததும் ஓகே சொல்லிட்டான்.

நம்ம பிரச்சனையும் மீறி அந்த பெண்ணை அவன் கல்யாணம் செய்ய ஆசைப்படுறான் என்றால், கண்டிப்பாக இந்துவை அவனுக்கு ரொம்ப பிடித்து இருக்கு என்று தான் நான் சொல்வேன். ஏன்னா யாருக்காகவும் அவன் வாழ்க்கையை பாழாக்க அவன் விரும்ப மாட்டான்.” என்று தன் மனைவியிடம் சாருகேசன் சொன்னான்.

இங்கு வீர ராகவ் வீட்டில் அவள் அம்மா யசோதா. “ ஏன்டா நான் பெண் பார்க்க வரல . ஆனா இந்த இடத்தையே முடித்து விடு என்று சொல்ற. என்னடா நினச்சிட்டு இருக்க.

உனக்கு இந்த பெண்ணை பிடித்து இருக்கா. இல்ல அம்மா சும்மா கல்யாணம் கல்யாணம் என்று நச்சரிச்சிட்டு இருக்காங்களே, அவங்களுக்காக ஒரு பெண் கழுத்தில் தாலி கட்டிட்டு வீட்டில் கொண்டு வந்து வெச்சிடுவோம் என்று நினச்சிட்டியா.?” என்று யசோதா சந்தேகத்தோடு தன் மகனை பார்த்து கேட்டார்.

வீரவேசத்துடன் கை வீசி வீசி பேசும் அம்மாவின் கையை பிடித்து பக்கத்தில் அமர வைத்தவன்.

“ அம்மா வீட்டில் சும்மா இருக்கட்டும் என்று யாராவது ஒரு பெண்ணை கல்யாணம் செய்துப்பாங்களா? அவளை நான் சும்மா வைத்து கொண்டு இருந்தால், நீங்க எப்படி பாட்டி ஆக முடியும்.” என்ற மகனின் பேச்சில்,

“சீ போடா.என்ன பேச்சு பேசுற. “ என்று அவர் வெட்கப்பட்டு கொண்டு எழுந்து சென்ற அன்னையின் முதுகையே பார்த்துக் கொண்டு இருந்த வீர ராகவின் மனதிலும் பலவித குழப்பம் தான்.

நான் நினைத்ததை சரியாக செய்து முடிப்பேனா.? இல்லையா.? என்று. ஆனால் என்ன தான் அவன் மனது குழம்பி போய் இருந்தாலுமே, இந்த திருமணம் நடத்தி கொள்வதில் மட்டும் அவன் மிக தெளிவாக இருந்தான்.

அன்று தான் வீர ராகவுக்கும் இந்துமதிக்கும் நிச்சயம். வீர ராகவ் பெண் பார்க்க போகாது இதோ இன்று மாலை நிச்சயம் அன்று மாப்பிள்ளை வருவார் என்று இந்துமதி வீட்டில் யசோதா சொல்லி விட்டார்.

இந்துமதியின் அண்ணன் வீர ராகவ் பற்றி விசாரித்த வரை அனைத்தும் நல்ல விதமாக இருந்ததால், தன் அன்னை தந்தையிடம். “ இந்துக்கு இந்த இடத்தையே முடித்து விடலாம்பா.. நான் விசாரித்த வரை நல்ல விதமாக தான் சொல்றாங்க.” என்று இந்துமதியின் அண்ணன் ஆனந்த் சொல்லவும்.

தந்தை ஜெயபிரகாஷ் “ எல்லாம் சரி தான்டா. ஆனால் பெண் பார்க்க வராது. நேராக நிச்சயத்துக்கு வருவார் என்று சொல்வது தான் ஒரு மாதிரி இருக்கு. “ என்று ஒரு தந்தையாக ஆதாங்கத்துடன் கூறினார்.

“அப்பா அவர் வேலை அப்படி. தெரியும் தானேப்பா அந்த வேலைக்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது.” என்ற ஆனந்தின் பேச்சு ஏற்றுக் கொள்ளும் படியாக இருந்ததால், ஜெயபிரகாஷும் ஒத்துக் கொண்டார்.

ஆனால் மகளிடம் மிக தெளிவாக பேசி விட்ட பின்னே. “ தோ பாரும்மா உனக்கு விருப்பம் இல்லேனா நீ இப்போவே சொல்லிடலாம். போலீஸ் வேலை என்பது நேரம் காலம் எல்லாம் பார்க்க முடியாது.

இந்த நேரத்துக்கு வீட்டில் இருப்பார். இருக்க மாட்டார் என்று எல்லாம் திட்ட வட்டமாக சொல்ல முடியாத வேலை தான் அவருடையது.

இதோ உன்னை பார்க்க கூட வர முடியாத அளவுக்கு கூட அவர் பிஸியா இருக்கார் பார். இது எல்லாம் ஓகேன்னா சொல்லும்மா இந்த இடத்தை முடித்து விடுகிறேன். இல்ல எனக்கு வேண்டாம் என்றால் இப்போவே சொல்லி விடு,

ஆனால் கல்யாணத்திற்க்கு பின் எந்த பிரச்சனையும் என்று என் காதுக்கு வர கூடாது அவ்வளவு தான்.” என்று ஜெய பிரகாஷ் சொன்னதிற்க்கு இந்துமதி.

“சரிப்பா.” என்று சொன்னவள், கல்யாணத்திற்க்கும் சம்மதித்து விட்டாள்.

அவள் தோழிகள் அனைவரும் ஒவ்வொரு கம்பெனிக்கு போய் விட்டனர். ஐடி தொடக்கம் தான் தடுமாற்றமாக இருக்கும். ஆரம்பம் நல்ல விதமாக அமைந்து விட்டால், அடுத்து அடுத்து நல்ல கம்பெனிக்கு போய் கொண்டே இருக்க வேண்டியது தான்.

அடுத்து அடுத்து கம்பெனிக்கு ஜம்ப் ஆகும் போது தான் அவர்களுக்கு சம்பளம் அதிகம் ஆகும். அதன் தொட்டு அவர்கள் போய் விட, இந்துமதிக்கு இந்த ஒரு மாதம் காலமும் தனித்து இருப்பது போல் ஆகி விட்டது.

அதோடு இது வரை தன் தோழிகளிடம் கல கலத்துக் கொண்டு இருந்ததால், அவளுக்கு பழைய நியாகம் வராது இருந்தது . இப்போது எல்லாம் ஏனோ பழைய நினைவுகளில் அவள் மனது ஆழ்ந்து விடுகிறது. அவளும் வேறு கம்பெனிக்கு போக தான் பார்த்தாள்.

ஆனால் வீட்டில். “மாப்பிள்ளை பார்க்கிறோம். இந்த சமயம் வேண்டாம். மாப்பிள்ளை எங்கு அமைகிறதோ அதை பொருத்து பார்த்து கொள்.” என்று சொல்லி விடவும், இவள் அமைதியாகி விட்டாள்.

இப்போது மாப்பிள்ளை சென்னை என்றாகி விட்டது. வீட்டிலும். “ வேலை மாற்றம் தேவை இல்லை. இப்போது நீ வாங்குவதே நல்ல சம்பளம் தானே. “ என்று அவள் அண்ணன் ஆனந்த் சொல்லவும், அமைதியாகி விட்டாள்

தோழிக்கு மாப்பிள்ளை பேசாத போது நீ ஏன் வலிய போய் பேச வேண்டும் என்று சொன்னவள் தான், தன்னை பெண் பார்க்க கூட வராதவனை திருமணம் செய்ய சம்மதித்து இதோ இன்று மாலை நிச்சயம் எனும் அளவுக்கு வந்து நிற்கிறது.

தோழிகள் யாரும் அருகில் கிடையாது. ஒவ்வொரு வரும் ஒவ்வொரு மூலையில் வேலைக்கு என்று சென்று விட, சென்னையில் இருப்பது யமுனா மட்டுமே. அவளையாவது அழைக்கலாமா.? என்று அவள் யோசிக்கும் போதே யமுனாவிடம் இருந்து அழைப்பு வர.. மகிழ்ச்சியுடன் அதை ஏற்றவள்.

“ எப்படி இருக்க யம்மீ.?” என்று கேட்ட இந்துமதிக்கு யமுனா உடனே எல்லாம் பதில் சொல்லவில்லை. பின். “ ம் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க.?” என்ற யமுனாவின் அமைதியான குரலை கேட்டு,

“ யம்மீ என்ன குரல் ஒரு மாதிரி இருக்கு, ஏதாவது பிரச்சனையா.?” என்று பதட்டத்துடன் கேட்டாள். அவளுக்கு பயம் தான். சொன்ன ஒரு விசயத்தை வைத்து அவளுக்கு பிரச்சனை இந்த அளவுக்கு வரும் என்று அவளே எதிர் பார்க்கவில்லை.

அதுவும் அவள் தற்கொலை வரை சென்றது. அவளுக்கு பயத்தை ஏற்படுத்தி விட்டது. இப்போதும் குரல் ஒரு மாதிரியாக கேட்கவும், அவளுக்கு இன்னும் பிரச்சனை சரியாக வில்லையோ என்ற பயத்தில் பதட்டத்துடன் பேசினாள்.

“ இல்ல இல்ல நான் நல்லா தான் இருக்கேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.” என்று யமுனா அழுத்தி சொல்லவும் தான் இந்துமதிக்கு நிம்மதி ஆனது.

பின் இந்துமதி சாதாரணமாக. “ எப்படி இருக்க. என்ன திடிர் என்று என் நியாபகம். நம்ம பிரன்ஸ் எல்லோரும் ஒவ்வொரு மூலைக்கு போயிட்டாங்க தெரியும் தானே.” என்று ஏதேதோ பேசிக் கொண்டு இருந்த இந்துமதியின் பேச்சை அமைதியாக கேட்டு கொண்டு இருந்த யமுனா பேசியை வைக்கும் போது தான் .

“ நீ மாப்பிள்ளை கிட்ட பேசுனியா இந்து.?” என்று அவள் கேள்வி கேட்டதும் தான் இந்துமதிக்கு ஒன்று உரைத்தது. இது வரை அவளிடம் இன்று மாலை தனக்கு நிச்சய தார்த்தம் என்று சொல்லவே இல்லை என்பதும், பின் எப்படி மாப்பிள்ளை பற்றி அவள் கேள்வி கேட்கிறார் என்று யோசித்தவள்.

“ உனக்கு எப்படி தெரியும் யம்மீ.?” என்று கேட்டதற்க்கு, “ இவர் பிரண்ட் தான்பா.” என்ற அவளின் பதிலில் இந்துமதி என்ன மாதிரி உணர்ந்தாள் என்று சொல்ல முடியவில்லை

ஆனால் முன் போல் வீட்டில் பார்த்தாங்க. போட்டோவில் நல்லா தான் இருக்கார். மாப்பிள்ளை பற்றி விசாரித்து இருக்காங்க. எல்லோரும் நல்லவங்க என்று தானே சொல்றாங்க.

அதோடு தோழிகள் அனைவரும் போன பின் அவளுக்கும் ஒரு மாற்றம் வேண்டியும், அடுத்து தனக்கு திருமணம் முடிந்த பின் தானே அண்ணனுக்கு செய்ய முடியும் என்று நினைத்தும் ஒத்துக் கொண்டு விட்டாள்.

ஆனால் இப்போது யமுனாவின் பேச்சில் அதிர்ந்து போனவளாக “ நீ என்ன சொல்ற யம்மீ. வீர் உங்க ஹஸ்பண்ட் பிரண்டா.?” என்று இந்துமதி கேட்பதிலேயே அவளுக்கு இது தெரியாது போல என்று நினைத்த யமுனாவுக்கும் ஒரு மாதிரியாக தான் இருந்தது.

“ உன் கிட்ட அவர் சொல்லலையா.?” என்று கேட்டதற்க்கு,

“ இல்ல. அவர் என்னை பார்க்கவே வரல. அவர் அம்மாவும் ஒரு சில உறவுகளும் தான் வந்தாங்க. போட்டோ பார்த்து என் மகனுக்கு பிடித்து இருக்கு என்று தான் அவங்க அம்மா சொன்னாங்க.” என்று இந்துமதி சொல்லும் போதே, தன் பேச்சில் இருக்கும் அபத்தம் அவளுக்கு புரிந்தது.

பேசியில் அந்த பக்கம் இருந்த யமுனா அதிர்ச்சியாகி. “ என்னடீ சொல்ற. அப்போ நீ.?” என்று யமுனா கேட்டதற்க்கு.

“நா.னும் தா.ன்.” என்று அதை அவள் சொல்லும் போதே சொன்னதின் அபத்தம் முழுமையாக இந்துமதிக்கு புரிந்து போனது.

அதை கேட்ட யமுனா.. “ என்னை சொன்ன. இப்போ நீ என்ன செய்து வெச்சி இருக்க இந்து. அது எப்படி லாங் லைப் வர போறவளை பார்க்காது பேசாது கல்யாணம் செய்துக்க ஒத்துப்பார்.

சரி அவராவது எங்க கல்யாணத்தில் உன்னை பார்த்தாராம் ஆனால் நீ .” என்று பேசிக் கொண்டு வந்த யமுனா.

பின். “ எங்க கல்யாணத்தில் நீயும் பார்த்தியா என்ன.?” என்று கேட்டாள்.

அதற்க்கு இந்துமதி.” இல்ல.” என்று சொன்னவளுக்கு அடுத்து என்ன பேசுவது என்று கூட தெரியாது அமைதி காத்தாள். அதுவும் இப்போது யமுனா சொன்ன அவள் கல்யாணத்தில் தன்னை பார்த்தது. அதுவும் அவளுக்கு புது செய்தி தான். இந்துமதி அதிர்ந்து போனால் என்றால், அதே நிலையில் தான் யமுனாவும் இருந்தாள்..

“சரி வைத்து விடுகிறேன் இந்து.” என்றதற்க்கும்,

இந்துமதி.. “ ம்.” என்ற பதிலை மட்டுமே தந்தாள். மனதில் ஆயிரம் குழப்பத்துடன் தான் அவள் அன்று மாலை நடக்கும் நிச்சயதார்த்த விழாவுக்கு தயாராகினாள். இன்னும் குழப்ப வீர ராகவ் வருவது தெரியாது.








 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Indhumathi kku ippo enge pochi antha moolai???

Veera thoppai ellam vechi vera madiri get up la varuwano???
 
Top