Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

உன்னோடு யென் இதயம்...2

  • Thread Author
அத்தியாயம்---2

“குட்டிம்மா எழுந்துடுடா..டைம் பத்து ஆகுது பாரு. என்ன தான் காலேஜ் லீவா இருந்தாலும் இவ்வளவு நேரம் எழுந்துக்காம இருப்பது நல்லதில்லைடா. பாட்டி ஊரில் இல்லாததால் நான் தப்பிச்சேன். இல்லன்னா என்னால் தான் கெட்டு போகிறாய் என்று எனக்கு தான் திட்டு விழுகிறது.” என்ற அவன் பேச்சை ஒன்றையும் காதில் வாங்காமல் அவன் அன்பு தங்கை பரினிதா தூங்கிக் கொண்டு இருந்தாள்.

தன் பேச்சிக்கு அவளிடம் எந்த மதிப்பும் கிடைக்கவில்லை என்றாலும் தூங்கும் தன் தங்கையையே பார்த்திருந்தான்.அவள் உடல் மெலிவை பார்த்து மிகவும் வருந்தினான்.நம் படிப்பு நம் பதவி என்று பார்த்து நம் தங்கையை நாம் சரியாக கவனிக்க வில்லையோ என்று வருந்தினான். நம் அம்மா இருந்திருந்தால் தன் பெண்ணை ஊட்டமாக வளர்த்திருப்பாரோ நாம் படிக்க போக பாட்டி ஊரில் உள்ள பஞ்சாலை ,கரும்பாலை, அரிசி ஆலை மற்றும் குத்தகைக்கு விட்ட நிலத்தில் வரும் பணத்தை சரி பார்க்க என்று அனைத்தையும் அவரே பார்க்க வேண்டியிருப்பதால் தன் பேத்தியை அவர் சரியாக கவனிக்க முடியாது என்று பரினிதாவை அவளின் பன்னிரண்டாவது வயது முதலே ஆஸ்டலிலேயே வளர்ந்ததால் இப்படி வீக்காக இருக்கிறாளோ என்று கண் அவளை பார்த்திருந்தாலும் அவனின் நினைவு தன் கடந்த காலத்துக்கு பயணம் ஆனாது.

ஊரே மதிக்கும் அந்த கலெக்டரும் தன் தங்கை என்றால் தன் படிப்பு தன் பதவி என்று அனைத்தையும் மறந்து அவள் நிலையில் இருந்து பழகுவான். அவனுக்கு எல்லாம் அவன் தங்கை தான். தன்னுடைய இருபதாவது வயது வரை கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமல் தான் தன் தாத்தாவின் வழி காட்டுதளில் வளர்ந்தான்.

அவன் அப்பா அம்மாவுடன் இருந்ததை விட தன் தாத்தாவின் அருகில் இருந்தது தான் அதிகம்.எப்போதும் தன் தாத்தாவின் கைய் பிடித்து தான் அவன் செல்வான். அது போல் அவன் தாத்தாவும் எங்கு சென்றாலும் தன் பேரன் சித்தார்த்தை அழைத்துக் கொண்டு போவார்.

அப்படி ஒரு தடவை ஊரு விஷயமாக கவர்மன்ட் ஆபிஸில் சென்று வந்துக் கொண்டு இருக்கும் போது தான். அவர் தன் பேரனிடம் “சித்தார்த் நம்மிடம் பணம் இருக்கிறது அதை வைத்து நம் ஊருக்கு ஏதாவது நல்லது செய்யலாம் என்று நினைத்தாலும், உடனடியாக செய்ய வேண்டும் என்றால் இந்த கவர்மன்ட் ஆபிஸருக்கு லஞ்சம் கொடுத்தால் தான் முடியும் என்று கூறுகிறார்கள்.

இந்த செயலில் எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை.அதனால் நம்மிடம் பணம் இருக்கிறது.நீ இந்த கவர்மன்ட் ஆபிஸருடன் உயர்ந்த பதவியில் இருந்தால் தான் நம்மிடம் இருக்கும் பணத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்யமுடியும். அதனால் நீ உயர்ந்த பதவியான ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.” என்று தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் தன் தாத்தாவின் பேச்சைக் கேட்டு தன் ஆசை லட்சியம் அனைத்தும் ஐ. ஏ. எஸ் ஆவாது தான் என்று முடிவுக்கு வந்து இதோ இப்போது அவர் ஆசையை நிறைவேத்தி விட்டான். ஆனால் அதை பார்க்க தான் அவர் இன்று உயிரோடு இல்லை.

சித்தார்த் சென்னையில் பி .காம் மூன்றாம் வருடம் படிக்கும் போது பொள்ளாச்சியில் இருந்து அவனை பார்க்க வரும் போது தான் விபத்து ஏற்பட்டு தன் அன்னை, தந்தை, குருவுக்கும் மேலான தன் தாத்தாவை பறி கொடுத்தான்.

முதலில் அனைவரும் கிளம்புவதாக தான் இருந்தது. ஆனால் பரினிதா வயிறு வலி என்று சொல்லி விட்டதால் பாட்டிக்கு அந்த வயதுக்கே உண்டான சூழ்ச்சுமத்தில் நான் என் பேத்தியுடன் இருக்கிறேன் என்று சித்தார்த்தின் பாட்டி வரலட்சுமி கூறி விட்டதால் பாட்டி பேத்தியை தவிர அனைவரும் சித்தார்தை பார்க்க சென்னை கிளம்பினார்கள்.ஆனால் சென்னை வரும் வழியில் செங்கல்பட்டில் குடி போதையில் ஒட்டிக் கொண்டு வந்த லாரி ஒன்றினால் பெரும் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சித்தார்த்தின் அப்பா ராஜ் குமார், அம்மா மஞ்சுளா, இறந்து விட்டார்கள்.

ஆனால் சித்தார்த்தின் தாத்தா சுந்தரமூர்த்தி தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தன் பேரனின் வருகைக்காக காத்திருந்தார். தாத்தாவின் அனைத்து ஆசையும் நிறை வேற்றும் சித்தார்த்தும் தன் தாத்தா உயிர் செல்வதற்க்கு முன் சென்று விட்டான்.

சித்தார்த்தை பார்த்த அவர் தாத்தா கடைசியாக இது தான் அவனிடத்தில் சொன்னது. “உன்னை நம்பி தான் அனைத்தையும் விட்டு செல்கிறேன். நீ அனைத்தையும் பார்த்துக் கொள்வாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது .” என்று சொல்லிக் கொண்டே சித்தார்த்தை பார்த்து புன்னைகைத்துக் கொண்டே தன் உயிரை விட்டார்.

அவர் எப்போதும் சிரித்த முகத்துடன் தான் இருப்பார் .அது போலவே சிரித்த முகத்துடன் தன் உயிரை துறந்தார்.பின் அனைத்தும் மிக விரைவில் நடந்து முடிந்தது. ஆனால் இந்த விஷயத்தில் தன் பாட்டியை பாராட்டியே ஆக வேண்டும்.தன் பாட்டியை நினைத்து அவனுக்கு பெருமையே விபத்தில் தன் கணவன் மகன் மருமகளை மொத்தமாக பறிகொடுத்தும் தன் பொருட்டும் தன் தங்கையை பொருட்டும் தன் துக்கத்தை காட்டாது.அடுத்து நடக்கும் காரியத்ததை பார்த்தார்.

சித்தார்த்தின் அப்பா, அம்மா, தாத்தாவின் இறுதி காரியம் முடிந்ததும். அன்று இரவு துக்கத்துடன் அனைவரும் ஒவ்வொரு மூலையில் முடங்கியிருந்தனார். ஆனால் பரினிதா மட்டும் சத்தம் போட்டு அழுது கொண்டிருந்தாள்.

அதனை பார்த்த சித்தார்த் இருபது வயதான நமக்கே இப்படி இருக்கிறதே பன்னிரண்டு வயதான அந்த சிறுமிக்கு எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டே தன் துக்கத்தை மறைத்து அவளை சாமதானம் படுத்த அவள் அறை நோக்கி சென்றான்.

அவள் தலையில் கைய் வைத்து “குட்டிம்மா என்னை பாருடா செல்லம்.இந்த இழப்பு நமக்கு தாங்க முடியாது தான்.ஆனால் நாம் இதில் இருந்து மீண்டு தான் ஆகவேண்டும். நம் பாட்டி வயதானவர்கள் நம் இழப்போடு அவர்கள் இழப்பும் எந்த வகையிலும் குறைந்தது கிடையாது.

ஆனாலும் நம் பொருட்டு அதனை காட்டாது அனைத்து காரியத்தையும் அவர்களே செய்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் நாம் கஷ்டத்தை கொடுக்கலாமா சொல்.இனிமேல் நாம் தான் அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். அதற்க்கு உன்னுடைய ஒத்துழைப்பும் எனக்கு தேவை. கிடைக்கும் அல்லவா…?” என்ற அண்ணவாவின் பேச்சை கேட்டும் தன் அழுவதை நிறுத்தாமல் அவனை பார்த்து வயிற்றை பிடித்துக் கொண்டே இன்னும் சத்தம் போட்டு தான் அழுதாள்.அதனை பார்த்த சித்தார்த்.

“குட்டிம்மா என்னடா செய்கிறது.”

அதற்க்கு எந்த பதிலும் சொல்லாது தன் அண்ணாவை தயக்கத்துடன் பார்த்துக் கொண்டே வலியை மறைத்து தலை குனிந்தாள்.

“குட்டிம்மா அழதேடா இனி மேல் உனக்கு அப்பா அம்மா தாத்தா அனைத்துமாக நான் இருப்பேன்.சொல்லுடா என்ன வயிறு வலிக்கிறதா.இரு மாத்திரை எடுத்து வருகிறேன் .” என்று செல்பவனை கைய் பிடித்து நிறுத்திய பரினிதா எழுந்து நின்றுக் கொண்டு தன் ப்ராக்கின் பின் பக்கம் படிந்திருந்த கரையைய் காட்டினாள்.

அதனை பார்த்த சித்தார்த் சட்டென்று தன் கண்ணை மூடிக் கொண்டு பரினிதாவோடு பெரும் குரலேடுத்து சத்தம் போட்டு அழ ஆராம்பித்து விட்டான்.அவனுக்கு அனைத்தும் விளங்கி விட்டது.அவன் இருபதின் முடிவில் இருப்பதால் பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சினைகள் அவனுக்கு தெரியும்.அவனுக்கு தன் தங்கை பெரிய மனிஷியாகி விட்டாள் என்று விளங்கி விட்டது.

ஆனால் அவனால் இதை எப்படி கைய்யாள்வது என்று விளங்கவில்லை. அவனுக்கு தெரியும் இந்த சமயத்தில் தான் ஒரு பெண்ணுக்கு தாயின் அரவணைப்பு தேவை என்று. எல்லாமாக நான் இருக்கிறேன் என்று கூறிய மறுநிமிடமே அவளின் தேவையை நம்மால் செய்து கொடுக்க முடிய வில்லையே என்று வருந்தினான்.

தன் அண்ணன் அழுவதை பார்த்த பரினிதா “அண்ணா அழுவாதே அண்ணா...எனக்கு ரொம்ப எல்லாம் வலிக்க வில்லை அண்ணா.” என்று தான் வலிக்கிறது என்று சொன்னதால் தான் தன் அண்ணன் அழுவதாக நினைத்துக் கொண்டு தன் வலியை மறைத்து தன் அண்ணனுக்கு ஆறுதல் கூறினாள்.

தங்கையின் பேச்சைக் கேட்ட சித்தார்த் அவள் தனக்காக தான் தன் வலியை மறைத்து பேசுகிறாள் என்று அவள் முகத்தை வைத்தே தெரிந்துக் கொண்ட சித்தார்த் தன் மனவருத்தைதை மறைத்துக் கொண்டு இப்போது நாம் நம் வருத்தத்தை அவளுக்கு காட்டாக் கூடாது.இனி தான் நான் மிக பொறுப்பாக நடந்துக் கொள்ள வேண்டும். கடைசியாக தன் தாத்தா தன்னிடம் சொன்ன வார்த்தையும் நியாபகத்துக்கு வர இன்றிலிருந்து நாம் அவளுக்கு அண்ணன் மட்டும் அல்ல ஒரு தாயாக நாம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து தன் தங்கையை பார்த்தான்.

“குட்டிம்மா இது ஒன்றும் இல்லடா. எல்லா பெண்களுக்கும் இந்த வயதில் ஏற்படும் உடல் மாற்றத்தின் வெளிபாடு தான் இது. இது பயப்பட வேண்டிய விஷயம் இல்லை.இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இன்று தான் நீ பெண்ணுக்கான முழுதகுதியும் பெற்று இருக்கிறாய். இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் தான்.” என்று அவளுக்கு தைரியம் அளித்து விட்டு தன் அப்பா அம்மா ரூம் நோக்கி சென்றான்.

அங்கு தன் அன்னையின் கப்போடில் இருக்கும் நாப்கினை எடுதுக் கொண்டு தன் பாட்டியை நோக்கி சென்று அவரிடம் அதனை கொடுத்து தங்கையிடம் கொடுத்து அது எப்படி பயன் படுத்துவது என்று சொல்லும் படி கூறிவிட்டு ஒரு முடிவோடு தன் அறை நோக்கி சென்றான்.

அதனை கைய்யில் வாங்கிய வரலஷ்மி ஒன்றும் பேசாமல் தன் பேத்தியின் அறை நோக்கி சென்றாள். பரினிதா வயிறு வலி என்று சொன்னதும் இந்த மாதிரி இருக்கும் என்ற சந்தேகத்தோடு தான் அவர் சென்னைக்கு கிளம்பாமல் தன் பேத்தியோடு இருந்தார். அவர் நினைத்தா மாதிரி தான் நடந்து இருந்தாலும் அவர் அதனை நினைத்து சந்தோஷம் பட முடியவில்லை.

இந்த நிகழ்ச்சியால் அவருக்கு கடமை இன்னும் கூடி விட்டதாக தான் கருதினார். தன் வருத்ததை முகத்தில் காட்டாது அதனை பரினிதாவிடம் கொடுத்து எப்படி பயன் படுத்த வேண்டும் என்று ஒரு இயந்திர கதியில் சொல்லி விட்டு தன் அறை நோக்கி சென்றார்.

தன் அறைக்கு வந்த வரலஷ்மிக்கோ நாளை தொழிற்சாலையில் தொழிற்சங்க தலைவரிடம் எப்படி பேச வேண்டும் என்று தன் மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டு இருந்தார்.

ஒரு மணி நேரத்துக்கு முன் தான் தங்கள் தொழிற்சாலையின் மனேஜர் வீட்டுக்கு வந்து சட்டென்று சின்ன முதலாளியும், பெரிய முதலாளியும், இறந்து விட்டதால் நமக்கு எதிரானவர்கள் இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்த பார்க்கிறார்கள். நம் தொழிற்சங்க தலைவர்களிம் பேசி மொத்தமாக நம் தொழிற்சாலையை மூடுவதற்க்கு ஏற்பாடு செய்கிறார்கள் என்று கேள்வி பட்டதிலிருந்து அதை எப்படி கையாள்வது என்ற சிந்தனையிலேயே இருப்பதால் அவர் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.

அந்த தொழிற்சாலையை காப்பது தான் தன் கணவருடன் வாழ்ந்த இத்தனை வருட வாழ்க்கைக்கு பெருமை சேர்ப்பது என்று கருதினார்.அவர் இந்த தொழிற்சாலைகளை ஆராம்பித்ததே தன் ஊர் மக்கள் வேலைக்காக வெளியிடத்திற்க்கு சென்று கஷ்டப்படகூடாது என்று கருதி தான் ஆராம்பித்தார்.அவர் எப்போதும் இது தான் சொல்வார் நான் மறைந்தாலும் நம் தொழிற்சாலை எப்போதும் போல நடக்க வேண்டும் என்று கூறுவார்.

தன் கணவரின் எண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டு அவர் தன் பேத்தியை சென்னையில் உள்ள ஒரு நல்ல ரெசிடென்ஸியில் சேர்த்து விட்டு பேரனை தன் கணவரின் ஆசையான ஐ.ஏ. எஸ். கோச்சிங் சென்டரில் சேர்த்து விட்டு அவரின் அறுபது வயதில் தன் கணவர் மகன் பார்த்த தொழிற்சாலையை தொடர்ந்து நடத்தி அதில் வெற்றியும் பெற்றார்.

இதோ இந்த எட்டு வருடத்தில் தாத்தாவின் ஆசையான சித்தார்த் ஐ.ஏ.எஸ் ஆகிவிட்டான்.பாட்டி ஊரில் உள்ள தொழிற்சாலையை தன் தந்தை, தாத்தாவோடு திறம்பட லாபத்தோடு நடத்திக் கொண்டு வருகிறார்.

ஆனால் இதனை எல்லாம் ஒழுங்காக செய்து நம் தங்கையை கவனிக்க தவறி விட்டோமோ என்று வருந்தினான். பரினிதா இப்போ மூன்று மாதமாக தான் தன் அண்ணனுடன் பங்களாவில் இருக்கிறாள். அவள் தன் பன்னிரண்டு வயதிலிருந்து மூன்று மாதம் முன் வரை ஆஸ்ட்டல் வாசம் தான். அங்கு சாப்பாடு தான் கொடுப்பார்கள் அன்போடு பரிமாற யாரும் இல்லாமல் தன் விருப்பம் போல் சாப்பிட்டு கொஞ்சம் வீக்காக தான் இருப்பாள்.

ஆம் அவன் வருந்துவது சரியே பரினிதா காலேஜீன் மூன்றாம் ஆண்டில் இருந்தாலும் பார்ப்பதற்க்கு பள்ளி இறுதியாண்டு மாணவி போல் தான் தோன்றுவாள்.

இந்த நினைவோடு தன் தங்கையின் மெலிந்த கையைய் தடவி விட்டுக் கொண்டு இருந்தான். பரினிதா ஐந்தரை அடி உயரத்தில் இருந்தாலும் உயரத்துக்கு ஏற்ற உடல் இல்லாததால் இன்னும் உயரமாக தெரியும்.

அவள் முகமும் கன்னத்தில் சதைபற்று இல்லாததால் கண் இன்னும் பெரியதாக தோன்றும்.முடியும் அவள் வளரவிடாமல் வெட்டி வெட்டி விடுவதால் போனி டேரியல் போடும் அளவுக்கு தான் இருக்கும். இதனின் மொத்த வடிவமாக பார்த்தால் அவளுக்கு வயது குறைந்து தான் மற்றவர்கள் பார்ப்பார்கள்.

அவள் வயது குறைந்து காணப்படுவதற்க்கு அவள் தோற்றம் ஒரு காரணம் என்றால் மற்றொரு காரணம் அவளின் நடவடிக்கைகள். அவள் எப்போதும் சிறு பிள்ளைகளோடு தான் விளையாடுவாள். இந்த வயதிற்க்கு உரிய செயல் பாடு எதுவும் அவளிடத்தில் இருக்காது. பேசுவதும் அப்படி தான் யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியாமல் வள வளத்துக் கொண்டு இருப்பாள்.மொத்தத்தில் வளர்ந்த குழந்தை என்றே சொல்லலாம்.

சித்தார்த் இந்த நினைவோடு தன் தங்கையையே பார்த்துக் கொண்டு இருக்கும் போது தன் செல்லின் அழைப்பால் தன் நினைவுகளை கலைத்து செல்லை ஆன் செய்துக் கொண்டே பால்கனி நோக்கி நகர்ந்தான்.

செல்லில் அந்த பங்களாவின் வாச்மேன் தான் அழைத்து இருந்தான். அவன் ஆபிஸ் வண்டி காத்திருப்பதாக கூறியதும் இதோ வந்து விடுகிறேன் என்று கூறிக் கொண்டே தங்கையின் டிரஸ்ஸிங் டேபிளிலேயே தன்னை சரிசெய்துக் கொண்டிருக்கும் போது அப்போது தான் கண்முழித்த பரினிதா தன் அண்ணனை விழியாகளாது பார்த்திருந்தாள்.

தன்னை சரி படுத்துக் கொண்டு தன் தங்கையை பார்த்த சித்தார்த அவள் தன்னையே பார்த்திருப்பதை பார்த்து “குட்டிம்மா எழுந்துட்டிங்களா…..இன்னிக்கி காலேஜ் லீவா இருந்தாலும் எட்டு மணிக்காவது எழுந்துக்கலாம் இல்லையா…? பாரு காலையில் இவ்வளவு நேரம் வெரும் வாயித்தோடு இருப்பது சரியில்லை.” என்று கூறியதற்க்கு எதுவும் கூறாமல் எழுந்து வந்து தன் அண்ணனின் பக்கத்தில் நின்றுக் கொண்டு கண்ணாடியில் தன் இருவர் உருவத்தையும் பார்த்திருந்தாள்.

அவள் செயலை பார்த்த சித்தார்த் “என்னடா குட்டி செல்லம் பார்க்கிறாய்.”

அண்ணணின் கேள்விக்கு பதில் அளிக்காமல் இன்னும் தன் அண்ணனை அருகில் வந்து நின்றுக் கொண்டு “என் அண்ணா எவ்வளவு ஹான்சம். பார்த்தாலே தெரியும். என் அண்ணன் கலெக்டர் என்று.” ஆம் அவள் சொல்வது சரி தான். சித்தார்த் ஐந்தடி பத்து அங்குலத்திலும் அதற்க்கு ஏற்ற உடல் எடையிலும், மொழு மொழு கன்னத்தோடும் பார்ப்பதற்க்கு இந்தி பட கதாநாயகன் போல் காட்சி அளிப்பான்.

“என் குட்டிம்மா மட்டும் என்ன? பார்ப்பதற்க்கு ஏஞ்சல் மாதிரி பெயருக்கு ஏற்ற மாதிரி இருக்கிறாய்.” என்றதற்க்கு.

“ஆம் ஏஞ்சல் மாதிரி தான் இருக்கிறேன். என்ன ஒன்று வீக்கான ஏஞ்சல்.”

“குட்டிம்மா உன் உடம்பு போல் இருப்பதற்க்கு மாடலிங் எல்லாம் எப்படி டையட் அது இது என்று சிரமம் படுகிறார்கள் தெரியுமா..? என்று தன் தங்கையிடம் கூறினாலும். மனதுக்குள் இவள் கொஞ்சம் சதை போட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கருதினான்.

அவன் எண்ணம் இப்படி போகும் போது திரும்பவும் செல்லின் இசையில் எடுத்து பார்த்து அதனை கட் செய்து விட்டு “சரிம்மா என் ஆபிஸ் வண்டி ரொம்ப நேரமா காத்திட்டு இருக்கு நீ போய் பிரஷ்ஷாகி விட்டு சமையல் அம்மா செய்து வைத்திருப்பதை சாப்பிட்டு கொஞ்சமாவது படிம்மா எட்டு சப்ஜெக்ட் அரியஸ் வைத்திருக்கிறாய். அதை கிளியர் செய்கிறாயோ இல்லையோ இன்னும் விழாமலாவது பார்த்துக் கொள்ளு குட்டிம்மா.” என்று சொல்லிக் கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறும் போது வழி மறைத்த பரினிதா.

“ அதெல்லாம் இருக்கட்டும் போன வாரம் நீங்க என்ன சொன்னீங்க.”

அவள் கேட்டவுடன் தான் என்ன சொன்னோம் என்று நியாபகத்துக்கு வந்தாலும் அதனை காட்டிக் கொள்ளாமல் “என்ன சொன்னேன். எனக்கு நியாபகம் இல்லையே…”

“ என் விஷயம் அது எப்படி உங்களுக்கு நியாபகம் வரும்.அதுவே ஊரு விஷயமுன்னா நியாபகத்தில் இருப்பதோடு அதை செய்தும் குடித்திருப்பீர்கள். இதே நான் ஊருக்குல் யாருக்காவது தங்கச்சியா இருந்திருந்தலாவது என்னை கவனித்து நான் கேட்டதை செய்து முடித்திருப்பீர்கள் போல்.” என்று இடுப்பில் கைய் வைத்துக் கொண்டு மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்க தன் அண்ணனிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் பேசும் குழந்தைதனமான பேச்சை ரசித்தாலும் இப்போது எல்லாம் அவளின் இந்த செயலால் சித்தார்த்துக்கு புது கவலை ஏற்பட்டு இருந்தது.இவள் செயல் அனைத்தும் வயதுக்கு ஏத்த மாதிரி இல்லையோ… அவள் செயல் அனைத்திலும் இன்னும் குழந்தை தனத்துடன் இருப்பது போல் தான் அவனுக்கு தோன்றியது.

அவள் உடைக்கூட அப்படி தான் இருக்கும். இப்போது இருக்கும் பெண்கள் விரும்பி அணியும் சுடிதார்,ஜீன்ஸை அணியா மாட்டாள். அவள் பெரும்பாலும் உடுத்துவது புள்ஸ்கட் தான் அது இன்னும் அவளை வயது குறைத்து காண்பிக்கும்.

சரி ஒரு வேளை நமக்கு தான் அவள் குழந்தை போல் தோன்றுகிறாளோ என்று நினைத்தால் போன மாதம் தன் ஊரில் நடக்கும் திருவிழாவில் கலந்துக் கொள்ள பாட்டி அங்கிருந்து போன் செய்து கண்டிப்பாக இந்த தடவை நீயும் பரினிதாவும் வரவேண்டும் என்று கூறிவிட்டதால் இவன் பரினிதாவை கூட்டிக் கொண்டு ஊருக்கு சென்ற போது ஒருத்தர் பாக்கி இல்லாமல் அனைவரும் இது தான் கூறினார்கள்.

பரினிதா ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறாள். அதுவும் இல்லாமல் அவள் செயல் இன்னும் குழந்தை தனத்துடன் தான் இருக்கிறது என்று அவர்கள் கூறியதில் இருந்து அவன் கவலை இன்னும் அதிகம் தான் ஆகிவிட்டது.அதனோடு அவனுக்கு குற்ற உணர்ச்சியும் அதிகமாகி விட்டது.

தன் பாட்டி தொழிலை பார்க்கிறேன் என்று அவர்களும் நான் மக்களுக்கு சேவை செய்கிறேன் என்று என் வேலையிலும் தங்கையை கவனிக்காமல் விட்டு விட்டோமோ…என்று அவன் மனசாட்சியே அவனை குற்றம் சாட்டியது.

இந்த மூன்று மாதத்தில் அவன் தங்கையின் பேச்சில் தெரிந்துக் கொண்டது இது தான். அவள் ஆஸ்ட்டலில் சாப்பாடு ருசியாக இல்லாத காரணத்தால் சரியாக உண்ணாமல் இருந்திருக்கிறாள் என்பதும் .பின் ஆஸ்ட்டலின் பக்கத்தில் பூங்கா இருப்பதால் அங்கு சென்று பூங்காவில் விளையாட வரும் குழந்தைகளிடம் தன் நேரத்தை செலவிட்டு இருக்கிறாள் என்பதும்.

ஒரு சமயம் சாப்பாடு சரியில்லாமல் ஒல்லியாக இருப்பதாலும்,அவளின் பெரும் நேரத்தை குழந்தைகளுடம் செலவிட்டதால் தான் அவள் செயல் இப்படி இருக்கிறதோ என்று யோசிக்க ஆராம்பித்திருந்தான்.

பரினிதாவோ தன் பேச்சிக்கு எந்த பதிலும் கொடுக்காமல் இருக்கும் தன் அண்ணனின் தோள் பற்றி உலுக்கினாள்.

அவள் உலுக்கலில் பரினிதாவை பார்த்த சித்தார்த் இனிமேல் நாம் இவளுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற முடிவோடு “ என் குட்டி செல்லம் சொன்னது எனக்கு மறக்குமா…? இப்போ என்ன நீ போகனும் என்று சொன்ன சொர்க்க பூமிக்கி கண்டிப்பாக அடுத்த வாரம் கூட்டிட்டு போகிறேன். எனக்கு இன்னும் ஒன்றும் நியாபகத்தில் இருக்கு நீ சொன்ன ஆஸ்ரமத்து பிள்ளைகளையும் கூட்டிட்டு போகனும் என்று சொன்னது.

அதற்க்காக தான் நான் டைம் கேட்கிறேன். அவ்வளவு குழந்தைகளை கூட்டிட்டு போகும் போது அதற்க்கு உண்டான பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்திட்டு தான் நாம் போகனும்.” என்று கூறிக் கொண்டே “சரி குட்டிம்மா நான் கிளம்புகிறேன். நான் சொன்னது நியாபகம் இருக்கட்டும். சாப்பிட்டு கொஞ்சம் படிடா” என்ற வார்த்தைக்கு தலையை பலமாக ஆட்டியதிலிருந்தே அவள் படிக்காமல் கார்ட்டூன் தான் பார்ப்பாள் என்று அவன் மனதுக்கு தெரிந்தது.

இருந்தும் இதற்க்கு மேல் சித்தார்த்துக்கு நேரம் இல்லாததால் டைம் பாத்துக் கொண்டே அவன் காரை நோக்கி சென்றான்.பரினிதாவும் சித்தார்த் சென்றவுடன் சமையல் அம்மா செய்ததை எதுவும் சாப்பிடாமல் தானே மேகி செய்து சாப்பிட்டு விட்டு அன்று லீவ் என்பதால் பக்கத்தில் உள்ள பிள்ளைகளை போனின் மூலம் அழைத்து தன் அண்ணன் வரும் வரையில் தன் ரூமில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தாள்.
 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
110
ப்ரணிதா இப்படி விவரம் இல்லாமல் வளர்ந்து நிக்குறா 😑😑😑😑😑ஆஷிக்கு இதை நல்லா பயன்படுத்திக்குவான் 🤭🤭🤭🤭🤭

சித்தார்த் பொது சேவையோடு கொஞ்சம் தங்கையும் கவனிச்சுக்கோ 😏😏😏😏😏

சொர்க்கபூமிக்கு தான் போக போறாளா 🤗 🤗 🤗 🤗
 
Last edited:
Top