Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

ஏங்கும் கீதம்... 22.2

  • Thread Author
அத்தியாயம்….22.2

அந்த நடுயிரவில் அரசாங்கம் அவனுக்கு கொடுத்து இருந்த தன் வீட்டில் தன் முன் அமர்ந்திருந்த செந்தாழினி மகிபாலனையே முறைத்து பார்த்து அமர்ந்திருந்தான் வேதாந்த்..

இருவரும் வந்து ஒரு மணி நேரம் கடந்து விட்டது.. இருவரும் ஒரு வார்த்தை பேசவில்லை… நன்கு உறங்கி கொண்டு இருந்த வேதாந்தின் படுக்கை அறையில் அவனின் தனிப்பட்ட பேசி இசைத்தது…

இந்த சமயம் யார்… ?” ராகவ் ட்ரையினிங்கில் இருக்கிறான்.. அவனா…? இந்த நேரத்தில் அழைக்கிறான் என்றால் ஏதாவது பிரச்சனையா…? தூக்கம் சட்டென்று கலைந்து போக ஒரு வித பதட்டத்துடன் தான் தன் கைய் பேசியை எடுத்த வேதாந்த் அழைத்தது யார்…? என்று பார்த்தது.

அழைத்தது செந்தாழினி என்றதுமே, அவனின் பதட்டம் இன்னும் தான் கூடியது.. இந்த நேரத்தில் அழைத்து இருக்கிறாள்..

அவள் சாதாரணமாகவே வேதாந்த் என்று இல்லை யாரையுமே அழைக்க மாட்டாள்.. அவளுக்கு வீட்டில் அத்தனை பிரச்சனை என்று தெரிந்த பின்.. அவளை பேசியில் அழைத்து.

“ஓன்று என் வீட்டிற்க்கு என் தங்கையா வா… இல்ல மகி பாலன் கிட்ட நான் பேசுறேன்.. அவன் வீட்டிற்க்கு மருமகளா போ…” என்று எத்தனையோ முறை இவன் தான் செந்தாழினியை அழைப்பானே தவிர… அவள் இவனை அழைக்க மாட்டாள்…

“நீங்க உங்க பிரண்ட் கிட்ட எல்லாம் சொல்லி என்னை கல்யாணம் செய்து என் கூட அப்படி ஒன்றும் வாழ தேவையில்லை.. அந்த வாழ்க்கையும் எனக்கு தேவையில்லை ண்ணா. நீங்க என்ன நானே எதுவும் சொல்லாமலேயே அவர் என்னை நம்பனும் என்று நினைக்கிறேன்… என் அப்பா என்னை நம்புவார் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.. அந்த என் நம்பிக்கை தான் எனக்கு பொய்த்து போனது.. உங்க பிரண்டாவது என் நம்பிக்கையை காப்பாத்துவாரா என்று பார்க்கலாம் ண்ணா..”

வேதாந்த் மகிபாலனை பற்றி பேசும் போது எல்லாம் செந்தாழினி இதை சொல்லி தான் இவன் வாயை அடைத்து விடுவாள்.. வேதாந்த் எப்போதும் இதை பற்றி பேசுவதால் இவனை அவள் பேசியில் கூட அழைக்க மாட்டாள்..

அப்படிப்பட்டவள் இந்த நடுயிரவில் அழைத்து இருக்கிறாள்.. என்றால், அழைப்பது தம்பியா என்று நினைத்து பயந்ததை விட , இந்த நேரத்தில் செந்தாழினி அழைத்ததை தான் வேதாந்த் மிக அதிகமாக பயந்து அழைப்பை ஏற்றவன்..

“செந்து.. என்ன என்ன பிரச்சனை…?” என்று வேதாந்த் பதட்டமாக கேட்ட கேள்விக்கு, செந்தாழினி …

“அதை உங்க வீட்டுக்குள் வந்து சொல்லுறேன் ண்ணா.. இப்போ நீங்க உங்க வாட்ச் மேன் கிட்ட கேட்டை திறக்க சொல்லுங்க..” என்று செந்தாழினி சொன்னதில், அவள் தன் வீட்டு முன் தான் நின்று கொண்டு இருக்கிறாள் என்பதை புரிந்து கொள்ளவே வேதாந்துக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது..

புரிந்த நொடி வாட்ச் மேனுக்கு எல்லாம் அவன் அழைக்கவில்லை.. அவனே தான் இருந்த கோலத்தை எல்லாம் மறந்தவனாக கேட் அருகில் ஓடி சென்றான்.

அவன் செல்லும் போது வாட்ச் மேன். “ பாருங்க சார் என்னை கேட் திறக்க சொல்லலே.. உங்க பேச்சை கேட்டு திறந்து இருந்தா..” என்று அந்த வாட்ச் மேன் பேசிக் கொண்டு இருக்கும் போதே வேகமாக ஓடி வந்ததில் வேதாந்துக்கு சிறிது மூச்சு வாங்கியது போல…

தன் முன் வந்து நின்ற தன் முதலாளியை பார்த்த அந்த வாட்ச் மேனும் வேதாந்த் பார்வையில் சட்டென்று கேட்டை திறந்து விட்டார்…

செந்தாழினி மட்டும் அல்லாது கூட மகிபாலனும் அவள் பக்கத்தில் நின்று கொண்டு இருப்பதை பார்த்த பின் தான் வேதாந்த் சிறிது ஆசுவாசம் அடைந்தான்..

பின் என்ன மணி நடியிரவு பன்னிரெண்டு.. இந்த சமயத்தில் தனியாக வருவதில் எத்தனை ஆபத்து அதை நினைத்து தான் அவன் பதட்டமாகி விட்டான்.. கூட மகிபாலனை பார்த்ததுமே.

இப்போது பதட்டம் போய் கோபம் வந்து விட்டது… அதில் மகி பாலனை கோபமாக பார்த்தவன்..

“செந்து வை ஏன்டா போன் செய்ய சொன்ன. நீ பேசுறதுக்கு என்ன டா..?” என்று கேட்டவனுக்கு.. மகிபாலன் அவனை விட கோபமாக பார்த்தவன் அவனை போல கத்த எல்லாம் இல்லை.. வேதாந்தை கோபமாக பார்த்தவன் அதே பார்வையை மனைவிக்கும் கொடுத்து விட்டு தான் ஹாலுக்கு வந்து இதோ இப்போது அமர்ந்து இருக்கிறானே அந்த இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டது..

மகிபாலன் கோபத்துடன் செல்வதை பார்த்த வேதாந்த் இப்போது செந்தாழினியை என்ன என்பது போல் பார்த்தான்.. அவளோ கணவனுக்கு மேல் கோபமாக முன் சென்ற கணவனையும் அருகில் நின்று கொண்ட வேதாந்தையும் கோபமாக பார்த்தவள் அவளுமே விறு விறு என்று வீட்டிற்க்குள் சென்றவள் கணவன் அருகில் இருந்த இருக்கையில் இன்னுமே மகி பாலன் அருகே இழுத்து விட்டு கொண்டு அமர்ந்து கொண்டவள் கணவனை கோபமாக முறைத்து பார்த்து அமர்ந்திருந்தாள்..

இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் கோபத்துடன் பார்த்து கொண்டு இருப்பதை அவர்கள் இருவரின் பின் வந்தவன் பார்த்து… அவர்கள் இருவரின் எதிர் இருக்கையில் அமர்ந்த வேதாந்த்..

“என்ன பிரச்சனை டா.. உங்களுக்குள் பிரச்சனையா..? இல்ல வீட்டுக்கும் உங்களுக்கும் பிரச்சனையா….?” என்ற வேதாந்தின் இந்த கேள்விக்கு மகிபாலன் பதில் அளிக்காது போக..

சரி என்று விட்டு செந்தாழினியிடம் கேட்டான்.. அவளுமே பதில் அளிக்காது போக… அவர்களை இருவரையும் ஆராயும் பார்வை பார்த்தவன் கோபத்தையும் மீறி இருவரின் முகத்தில் தெரிந்த சோர்வை பார்த்தவன் சாப்பிடவில்லை போல என்று சரியாக நினைத்தவன்.

இப்போது அவர்களிடம் ஒன்றும் பேசாது சமையல் அறைக்கு சென்றவன் இருக்கும் மாவை வைத்து ஆளுக்கு இரண்டு தோசை சுட்டவன் தொட்டுக் கொள்ள இட்லி பொடியையும் கலந்து வந்து இருவரின் முன்னும் இரண்டு தட்டுக்களை வந்து வைத்தான்..

இதற்க்கு மட்டும் இருவரும் அவனை முறைக்காது தோசையை சாப்பிட்டு முடித்தனர்.. அவர்கள் சாப்பிட்ட வேகம் சொன்னது அவர்கள் எவ்வளவு பசி என்பது..

மாவூ அவ்வளவு தான் இருந்தது.. அதனால் பெரிய க்ளாஸில் இருவருக்கும் காபியை கலந்து வந்து கொடுக்க. அதையுமே குடித்து முடித்து விட்டனர்.

சரி சாப்பிட்ட பின் இப்போதாவது சொல்வார்கள் என்று நினைத்த வேதாந்த்..

“என்ன நடந்தது…?” என்று வேதாந்த் இப்போது இருவரையும் பொதுவாக பார்த்து கேட்க. பசி போனதாலோ என்னவோ முன்பை விட அதிகமாகவே இருவரும் கோபமாக முறைத்து கொண்டு அமர்ந்து இருந்தனரே தவிர இவனிடம் வாயை திறக்கவில்லை..

சாப்பிட மட்டும் தான் வாயை திறப்பாங்க போல என்று நினைத்த வேதாந்த் சரி அவர்களே சொல்லட்டும் என்று நினைத்து அமைதியாக அமர்ந்து கொள்ள.. இதோ இப்போ வாயை திறந்து சொல்வார்கள் .. அதோ இப்போ என்று வேதாந்த் இப்போது வரை இருவரையும் தான் பார்த்து கொண்டு இருந்தானே தவிர.. இருவரும் வாயை திறப்பதாக காணும்…

சரி என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.. பிரச்சனையை ஆற போட்டால் இவர்களின் கோபம் குறையும் என்று நினைத்த வேதாந்த்… இருக்கையில் இருந்து எழுந்தவன்.

“சரி செந்தும்மா போய் தூங்குறிங்கலா. நான் அந்த அறையில் படுத்துக்குறேன்.. நீங்க இரண்டு பேரும் இந்த அறையில் படுத்துக்கோங்க” என்று தான் உறங்கி இருந்த தன் அறையான வசதியான பெரிய அறையை அவர்கள் படுக்க காட்டியவன். இப்போது தான் படுத்து எழுந்ததினால் சுருங்கிய படுக்கையை சரி செய்யலாம் என்று நினைத்து தன் அறை நோக்கி சென்றவனின் முதுகில் ஒரு திண்டு வந்து விழ. அதில் வேதாந்த் இருவரையும் திரும்ப பார்த்தான்..

அவர்கள் இருவரும் கோபமாக இவனை முறைத்து பார்த்து கொண்டு இருப்பதை பார்த்தவன் இப்போது வேதாந்த் என்ன என்று கேளாது முன்னவே மகிபாலன்…

“ எங்க வீட்டில் தூங்க இடம் இல்லை என்று தான் நாங்க இங்கு வந்தோம்மா…?” என்று வேதாந்திடம் கோபமாக கேட்க தொடங்கிய மகிபாலனின் பேச்சு மனைவியின் அந்த பார்வையில் தழை தழைத்து…

“ அங்கு எங்களுக்கு என்று தனிப்பட்டு தூங்க ரூம் இல்ல தான் … ஆனா தூங்க எல்லாம் நான் வரல.. உன் தங்கச்சியை வேணா கூட்டிட்டு போய் தூங்க வை…” என்று மகிபாலன் கோபமாக சொல்ல. இப்போது செந்தாழினி கோபமாக முதுகிலேயே இரண்டு சாத்து சாத்தினாள்..

சாத்தியது அவள் கணவனை கிடையாது வேதாந்தை தான்..

வெறும் கட் பனியன் மட்டும் போட்டு இருந்து வேதாந்தின் முதுகில் சாப்பிட்ட தெம்பில் செந்தாழினியின் அடி நல்ல பலமாகவே வேதாந்து முதுகில் சுளீர் என்று விழுந்தது..

பின் முதுகை தடவிக் கொண்டே.. “ உங்களுக்கு என்ன தான்டா பிரச்சனை.. நாளைக்கு ஒரு மினிஸ்ட்டர் கூட மீட்டிங்க இருக்குடா. என்ன எது என்று சொன்னா தானே பேசிட்டு போய் தூங்க முடியும்..” என்று வேதாந்த் சொன்னது தான்…

இதற்க்கு மட்டும் கணவன் மனைபி இருவரும் ஒன்று போல . “ ஆமா ஆமா மினிஸ்ட்டர் தான் முக்கியம் … நாங்க என்ன…?” என்ற பெச்சுக்கு பாவம் வேதாந்த் அழுவது போல.

“சத்தியமா முடியலடா என்ன தான் பிரச்சனை பாலா..” என்று அழுவது போல பேசியதில் இருவரும் மனம் இறங்கினர் போல…

பிரச்சனை பெரியது என்பதினால் இருவரும் முன் அமர்ந்திருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொள்ள. பாவம் வேதாந்த் தான் மீண்டுமா என்று நினைத்து அவனுமே முன் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தவனிடம்..

மகிபாலா.. “ உன் தொங்கச்சி என்ன காரியம் செய்து வைத்து இருக்கா தெரியுமாடா..?” என்று இப்போதும் என்ன பிரச்சனை என்பதை நேரிடையாக சொல்லாது குறைந்து இருந்த கோபம் மகிபாலனுக்கு மீண்டும் வர. சத்தமாக தான் சொன்னான்..

“என்ன செய்தாடா…?” என்று கேட்டவனிடம்.

“ம் வெர்ஜின் சர்ட்டிப்பிக்கெட் வாங்கி வெச்சி இருக்கா..?” என்று மகிபாலன் சொன்னதில்.. வேதாந்த் அதிர்ந்து போய் தான் செந்தாழினியை பார்த்தது…

“ என் மீது அந்த அளவுக்கு கூட நம்பிக்கை இல்லை என்றால் எதுக்கு டா என்னை மேரஜ் செய்துக்கனும்.. எதுக்கு.? சொல்லு…?” என்று ஆபேசத்துடன் கத்திய மகிபாலனின் கோபத்தில் நியாயம் இருப்பதால் வேதாந்த் ‘செந்தாழினியிடம் ..

“என்னம்மா இது… அந்த டெஸ்ட் எடுப்பது என்றால் மூன்று வருஷம் முன்பே எடுத்து உன் அப்பா வீட்டில் காட்டி இருந்து இருக்கலாமே.. நீ அந்த வீட்டில் இத்தனை நாள் பட்ட கஷ்டமாவது இல்லாமல் இருந்து இருக்கும்…” என்று வேதாந்த் கேட்டதற்க்கு..

செந்தாழினி… “ நான் தூய்மையானவா என்று அவங்களுக்கு நிருப்பிக்கனும் என்று எந்த அவசியமும் எனக்கு இல்ல…” என்று ஒரு வித திமிர்த்தனத்துடன் தான் செந்தாழினி இதை சொன்னது…

“அப்போ அந்த டெஸ்ட் எடுத்ததே என் கிட்ட உன்னை நிருப்பிக்க தான் இல்லையா…?” என்று ஆவேசத்துடன் கேட்ட மகிபாலன்..

பின்.. “ என்னை நீ இந்த அளவுக்கு மாங்கு மாங்கு என்று லவ் பண்ணியும் இருந்து இருக்க வேண்டாம்.. நீ என்னை இந்த அளவுக்கு அசிங்கம் படுத்தியும் இருந்து இருக்க வேண்டாம்…” என்று செந்தாழினியை பார்த்து கேட்ட மகிபாலனின் குரலில் இப்போது கோபம் இல்லாது வேதனை நிறைந்து இருந்தது.

கணவனின் கோபத்தை தாங்கி கொண்ட செந்தாழினிக்கு கணவனின் இந்த வேதனையை தாங்கி கொள்ள முடியவில்லை..

“நான் தான் சொன்னேனுங்கலே..” என்று கணவனின் கை மீது கை வைத்து அவனை சமாதானம் படுத்த முயன்றவளிடம் இருந்து தன் கையை இழுத்து கொண்டவன்..

“என்ன டி சொன்ன. என்ன சொன்ன..? நான் உன்னை சந்தேகம் படாது இருந்தா அந்த மருத்துவ அறிக்கையை என் கிட்ட காட்ட மாட்ட. சப்போஸ் நான் பட்டா… அதை என் கிட்ட காட்டிட்டு அப்படியே எனக்கு டாடா பை பை என்று சொல்லிட்டு போயிடுவ.. இது தானே சொன்ன… நான் கேட்கிறேன்… நீ என்னை மேரஜ் எதுக்கு செய்துக்கிட்ட .. இவனை காதலிச்சி தொலச்சிட்டோம்.. கல்யாணம் செய்துப்போம் என்று செய்துக்கிட்டியா.. இல்ல என் தங்கைங்க நகை பிரச்சனையினால் வீட்டோட இருக்காங்க. காதலிச்ச பாவத்துக்கு இது செய்து கொடுத்து விடுவோம் என்று நினைத்து என்னை கல்யாணம் செய்து எனக்கு உதவி செய்து இருக்கியா சொல்லு டி… “ என்று ஆதங்கமாக கேட்டவனின் கையை இறுக்கப்பிடித்து கொண்டவள்..

“கடமைக்கும் காதலிச்ச பாவத்துக்கும் தான் நான் உங்களை மேரஜ் செய்து கொண்டேனா.. என்னை பார்த்து சொல்லுங்க..” என்று கேட்ட குரலில் தெரிந்த கலக்கத்தில் இது வரை அவள் கண்ணை பாராது பேசிக் கொண்டு இருந்த மகிபாலன் இப்போது பார்க்க… அது கலங்கி போய் இருந்ததில்.

“ஆழி…” என்று அவனுமே தன்னை பிடித்து இருந்த கை மீது கை வைத்தவன்..

“நீ என்ன தான் சொன்னாலுமே அது அது.. மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு ஆழி.. முடியல.” இப்போது மகிபாலனின் கண்களுமே கலங்கி தான் போயின…

“ நான் உங்க கிட்ட அதை காட்டலையேங்க. உங்க அம்மா கிட்ட தானே காட்டினேன்… நான் அதை காட்டி இருக்கவே மாட்டேனுங்க. என் ஒழுக்கத்தை பத்தி மட்டும் பேசி இருந்து இருந்தா கூட நான் அந்தை வெளியில் எடுத்து இருந்து இருக்க மாட்டேன்.. ஆனா அதை வைத்து உங்க அம்மா அந்த நரேன்.. பேசியதில் தானுங்க அதை காட்டினேன்…” என்று செந்தாழினி என்ன தான் விளக்கம் கொடுத்த போதுமே மகிபாலனால் அதை ஏற்றுக் கொள்ள தான் முடியவில்லை…




 
Active member
Joined
Aug 16, 2024
Messages
267
Nice. கதை விறுவிறுப்பாக போகிறது அடுத்த பதிவு எப்போது வரும்.
 
Active member
Joined
Jul 13, 2024
Messages
165
Arumai. Naren Elam oru manushan, ithai patri pesa? Please give the next update soon. Mandai vedithu vidum pola irukku.
 
Last edited:
Active member
Joined
May 12, 2024
Messages
199
Moonjila thooki adichidu antha certificate ah…
Appdiye Magila kum onnu vangi irukkanum 🥴🥴🥴
 
Top