Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

ஏங்கும் கீதம்...23...

  • Thread Author
அத்தியாயம்..23

இருவரும் மாறி மாறி இது போன்று முதலில் கோபமாகவும் பின் ஆதங்கமாகவும் சண்டை இட்டுக் கொண்டு இருப்பவர்களை ஒன்றும் புரியாது பார்த்து கொண்டு இருந்த வேதாந்த் ஒரு நிலைக்கு மேல் அவனால் தாங்க முடியவில்லை…

சுகர் பாடி டா என்பது போல.. … “ நாளைக்கு மினிஸ்டர் கூட மீட்டிங் இருக்குடா என்ன விசயம் சொல்லி தொலைங்கடா…” என்று கத்திய பின் தான் இருவரும் வேதாந்திடம் நடந்த விசயங்களை ஒரு சேர சொன்னது..

அதாவது… கெளசல்யா… “ உன் பொண்டாட்டி ஒழுக்க கேட்டை மறைக்க நீ என் பொண்ணு மேல பழியை தூக்கி போடுறியா…? என்று கேட்டதுமே மகிபாலனுக்கு பொறுக்கவில்லை..

அதுவும் கெளசல்யா சொன்ன இத்தனை வயது வரை கல்யாணம் செய்து கொடுக்காது வீட்டில் வைத்து கொண்டு இருந்த போது கூட என் பொண்ணுங்க ஒழுக்கத்தோடு தான் இருந்தனர்…” என்ற பேச்சில்..

சொல்லி விட்டான்.. முதலில் தனக்கு துளி கூட விருப்பம் இல்லாத

போதும் தான் இந்த திருமணத்திற்க்கு சம்மதம் சொன்ன காரணம் ஆன…

செந்தாழினியை தனக்கு திருமணம் செய்யலாம் என்று அம்மா கேட்ட உடனே.. “ முடியாது..” என்று தான் முதலில் மகி பாலன் திட்ட வட்டமாக மறுத்தது..

காரணம் அந்த பெண் நல்ல பெண்ணா கெட்ட பெண்ணா. ஊரு சொல்வது உண்மையா பொய்யா அவன் அதை எல்லாம் நினைத்து கூட பார்க்கவில்லை…

இந்த திருமணம் தன்னை விலை பேசுவது போலான ஒரு செயல்… அவனை பொறுத்த வரை வரதட்சணை தவறான ஒரு விசயம்.. . ஒரு விபச்சாரி பணம் வாங்கி கொண்டு தன் உடலை விற்பது போலான ஒரு செயல் தான் வரதட்சணை வாங்கி கொண்டு தாலி கட்டும் செயல்.

அதோடு அம்மா இப்போதே அந்த பெண்ணை பற்றி இப்படி பேசும் போது .. அந்த பெண் இந்த வீட்டிற்க்கு மருமகளாக வந்தால், அது நன்றாக இருக்காது. அந்த பெண்ணும் கஷ்ப்படுவாள்.. தனக்குமே நிம்மதி இல்லாது போய் விடும் என்று நினைத்து தான் மகி பாலன் மறுத்தது…

ஆனால் அவன் தங்கை மகிளா தனியே அவனிடம்.. முதலில் “நரேனை எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு ண்ணா.” என்றதுமே அதை மகி பாலன் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை தான்…

பெண் பார்த்து பின் முடியாது போவது என்பது எல்லாம் சின்ன விசயம் .. சுதா அக்காவை எத்தனையோ பேர் பெண் பார்த்து சென்ற பின் தான் பாஸ்கரன் முடிந்தது..

அதனால் மகிபாலன்… “விடு மகி… அவங்க நிறைய கேட்கிறாங்க… இப்போவே இப்படி இருக்காங்க.. கல்யாணம் ஆன பின் என்ன கேட்பாங்க.. செய்வாங்க என்று தெரியாது.. நீயே சுதாவை பார்த்தே தானே.. நகைக்காக இங்கு அனுப்பியதை.. அதனால் வேண்டாம்.” என்று மகி பாலன் மறுத்த போது தான் மகிளா உண்மையை சொன்னது..

அதாவது நரேனும் அவளும் இரண்டு வருடங்களாக காதலித்து கொண்டு இருப்பது… இந்த விசயம் மகிபாலனுக்கு அதிர்ச்சி தான்..

“என்ன இது,..? என்பது போல் தான் தங்கையை மகிபாலன் அதிர்ந்து பார்த்தது,.. பின்னும் கூட மகி பாலன்.

“காதலித்தவளையே கல்யாணம் செய்துக்க இத்தனை கேட்கிறான். இவனை நீ எப்படி காதலித்த மகி… வேண்டாம் எனக்கு என்னவோ நரேனை சரியாக படவில்லை….”

தங்கை காதலித்து மட்டும் தான் இருக்கிறாள் என்று நினைத்து தான் மகிபாலன் இப்படி சொன்னது..

ஆனால் மகிளா அடுத்து சொன்ன… “ அண்ணா போன மாதம் சென்னைக்கு ஆபிஸ் விசயமா போறேன் என்று சொன்னேன் லேண்ணா.” என்று சொல்லி விட்டு மகிளா இழுத்து நிறுத்தவுமே மகி பாலனுக்கு பதட்டம் ஆகி விட்டது தான்.

இருந்தும் வாயை திறந்து என்ன என்று கேட்காது அதிர்ந்து போனவனாக தான் தங்கை மகிளாவை பார்த்து நின்றான்..

மகிளாவுமே அண்ணனிடம் ஒரு வித சங்கடத்துடன் தான்.. “அன்னைக்கு நரேன் பர்த்டே ண்ணா.. சென்னையில் அவர் பிரண்ட் கெஸ்ட் அவுஸ் இருக்கு… மதுரையில் யாராவது பார்த்துட போறாங்க என்று பயந்தே நாம எங்கேயும் போறது இல்ல.. போனில் பேசுவது தான் என்று சொன்னாரு.. எனக்குமே அவர் பர்ட்த்டேக்கு அவர் கூடவே இருக்கனும் என்று நினச்சேன் ண்ணா…. “



இது வரை மகிளா சொன்ன போது கூட தங்கை குடும்ப கஷ்டத்தை பார்த்து வளர்ந்தவள். அது போலான தப்பு எல்லாம் செய்து இருக்க மாட்டாள் என்ற நம்பிக்கையோடு தான் பாவம் மகிபாலன் தங்கை சொல்வதை கேட்டு கொண்டு இருந்தான்..

ஆனால் அவனின் அந்த நம்பிக்கை பொய்த்து போகும் படியாக அடுத்து சொன்ன.

“நானும் சரி அவரும் சரி தப்பு செய்யனும் எல்லாம் திட்டம் போடலேண்ணா ஆனா சூழ்நிலை…” என்று சொல்லி விட்டு தலை குனிந்து நின்றவளிடம் அடுத்து பேசாது வீட்டிற்க்குள் வந்தவன்.

செந்தாழினியை திருமணம் செய்ய ஒத்து கொண்டு விட்டான்..

அப்போது கூட வரதட்சனை எல்லாம் வேண்டாம்.. தங்கைக்கு உண்டான நகை மட்டுமே போதும்.. அது கூட நாளை பின் என் பிரச்சனை எல்லாம் முடிந்து விட்டால், என் மனைவிக்கு அவங்க கொடுத்த நகையை செய்து போட்டு விடுவேன் என்று தான் சொன்னது..

அந்த நாளில் செந்தாழினி தன்னை விரும்பியது பற்றி ஒன்றும் தெரியாது.. அது மட்டும் கிடையாது வேறு எதுவுமே தெரியாது தான்.. ஆனால் ஒன்றில் மட்டும் மகிபாலன் உறுதியாக இருந்தான்.. செந்தாழினியை எந்த காரணம் தொட்டும் மற்றவர்கள் சொல்வதை வைத்து கஷ்டப்படுத்த கூடாது என்று…

ஆனால் இன்று செந்தாழினியின் காதல் மட்டும் அல்லாது அவள் செய்தவை.. எந்த ஒரு பெண்ணும் யோசிக்க கூடாத வார்த்தையை சொன்னது எதற்க்காக…? தன் மீது அவளுக்கு இருக்கும் காதலினால் தானே.. ஆனால் நான் அவளுக்கு என்ன கொடுத்து இருக்கிறேன்..

பெண்களுக்கு இது போலான சமயத்தில் கிடைக்கும் ஒய்வு… வசதி வேண்டாம்.. பேட் மாத்த கூட பின் கட்டுக்கு சென்று.. ஆயாசமாக படுத்து தூங்க கூட அறை இல்லாது.. இவை அனைத்தையும் விட தப்பு செய்தவள் தலை நிமிர்ந்து இருக்க.. ஒன்றும் செய்யாதவள் ஒழுக்கம் கெட்டவள் என்ற பெயரோடு அனைவரின் முன்னும் நிற்க வேண்டுமா…? அனைத்தையும் விட… வரதட்சணை என்ற பெயரில் தன்னை இவர்கள் என்னை விற்று இருக்கிறார்கள்..

அத்தனை பெரிய சொத்து.. எத்தனை லட்சங்கள் வாடகை.. தன்னிடம் ஒன்றும் சொல்லாது.. அதுவும் இப்போது சிலது அவனின் நியாபகத்திலும் வந்து தொலைத்தது..

அது மகிபாலன் இது வரை செந்தாழினி வீட்டிற்க்கு இரண்டு முறை தான் சென்று இருக்கிறான்..

அந்த இரண்டு முறையுமே செந்தாழினியின் அண்ணிகளின் பார்வை ஒரு விதமாக தன் மீது படிந்தது தான்..

அனைத்தையும் யோசித்தவன்.. மகிளாவின் உண்மையை போட்டு உடைத்து விட்டான்..

அவன் தங்கையை பற்றி இதை சொல்ல வேண்டும் என்று எல்லாம் நினைக்கவில்லை..

ஆனால் கெளசல்யா மீண்டும் மீண்டும்… “ அத்தனை வயசு வரை என் பொண்ணுங்க பத்திர மாத்து தங்கமா வீட்டில் இருந்தாங்க. ஆனா உன் பொண்டாட்டி அந்த வயசுலேயே.. ஒன்றுக்கு ஐந்து பேரு கூட இருந்துட்டு வந்தாடா.. “ அதோடு மட்டும் விடாது..

“பார்த்துடா. அப்புறம் வேறு யாரோ குழந்தைக்கு உன் பொண்டாட்டி உன்னை அம்மாவா ஆக்கிட போறா..” என்று வாயையும் விட்ட பின் தான் மகிபாலன் உண்மையை போட்டு உடைத்தது..

ஆம் மகிளா சொன்ன விசயத்தை சொன்னதோடு தன் மனைவி செந்தாழினி இருந்த அந்த ஐந்து பேருமே தன் நண்பனும் அவன் தம்பி ராகவ் அவனோடான நட்புக்களே என்று சொன்னதோடு செந்தாழினி அப்படி சொன்னதற்க்கு உண்டான காரணம் அதற்க்குமே தன் மனைவிக்கு தன் மீது இருக்கும் காதல் தான் காரணம் என்று விட.

கெளசல்யா மட்டும் அல்லாது அங்கு இருந்த அந்த வீட்டின் இரண்டு மாப்பிள்ளைகளுமே ஆச்சரியத்தோடு செந்தாழினியை பார்த்தனர். இப்போது அவர்களின் பார்வையில் மதிப்பு இருக்க..

மகிளா தான் தலை குனிந்து நின்று இருந்தாள்.. அண்ணன் இப்படி அனைவரின் முன்னும் தன் ரகசியத்தை போட்டு உடைப்பான் என்று அவள் நினைக்கவில்லை. கண்கள் கலங்கி போயின.. அதுவும் அவளின் கூட பிறந்த அக்காவே.. தன்னை ஒரு மாதிரியாக பார்த்த அந்த பார்வையில் இன்னுமே கூசி போய் நின்றவள் தன் அன்னையை பார்த்தாள்..

கெளசல்யாவுக்குமே தன் மகளா…? என்று முதலில் அதிர்ச்சியாகி தான் போனார்.. அதில் தன் சின்ன மகளை பார்த்தவர் மகள் நின்று இருந்த கோலமே சொன்னது தன் மகன் சொன்னது உண்மை தான் என்பதைய்.

ஆனால் என்ன தான் உண்மை என்றாலுமே, வீட்டில் மற்றோரு மாப்பிள்ளை இருக்கும் போது இது சொன்னது சரியா…? அதுவும் செந்தாழினி இனி தன் மகளை என்ன என்று மதிப்பாள்..

இத்தனை நேரம் தன் மருமகளின் ஒழுக்கத்தை பற்றி தரம் தாழ்ந்து பேசியதை மறந்தவராக மகளை பேசியது… அது உண்மையே என்றாலுமே எப்படி சொல்லலாம்.. அது தான் அந்த தாய்க்கு பெரியதாக தோன்றியது.. அதுவும் தன் பொண்டாட்டிக்காக கூட பிறந்தவளை அசிங்கப்படுத்துவானா இவன். என்பது தான் முதன்மையாக நின்றது.

அதில் இன்னுமே கெளசல்யா அதிகமாக… “ ஒழுக்கம் கெட்ட உன் பொண்டாட்டியை காப்பாத்த என் மகள் மீது பழி போடுறியா… டா.. உன் தங்கை பத்தி இல்லாது பொல்லாதது சொல்ல எப்படி டா உனக்கு மனசு வந்தது…” என்று மகனை பார்த்து ஆவேசத்துடன் கத்தினான்…

ஆனால் மகி பாலன் தன் தன்கை நின்று இருந்த கோலத்தையும் தன் அன்னையையும் ஒரு பார்வை பார்த்தவனின் அந்த பார்வையில் கெளசல்யா…

இன்னுமே வார்த்தைகளை விட்டு விட்டார்…

“அதாவது என் மகள் யார் கூட இருந்தாளோ அவரை தான் டா கல்யாணம் செய்தா இவளை போல இல்ல…” என்று சொல்ல.

மகிளாவுக்கு இப்போது அசிங்கம் போய் ஆவேசம் வந்து விட்டது போல.. தன்னை அசிங்கப்படுத்தியவர்களை திரும்ப தான் அசிங்கப்படுத்தியே ஆக வேண்டும் என்ற நினைப்போ தெரியவில்லை…

“அப்படி பார்த்தா இவள் யாரை திருமணம் செய்துப்பா ஐந்து பேரையுமா.?” என்று எகத்தாளமாக சொன்னவள் பின்..

“பணம் வேண்டாம் வேண்டாம். என்று சொல்லிட்டு பணம் உள்ள பொண்டாட்டி எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று சப்போர்ட் பண்றியாண்ணா பரவாயில்லை. நானுமே உன்னை வேறு மாதிரி தான் என்று நினைத்தேன்.. பரவாயில்லை ண்ணா…” என்று வீட்டில் உள்ளவர்கள் மகி பாலனை தரம் தாழ்த்தி பேசவும் தான்.. தங்கள் அறைக்கு சென்றவள் திருமணத்திற்க்கு ஒரு வாரம் முன் அவள் தனக்கு எடுத்து கொண்ட வெர்ஜின் சர்பிகேட்டை கொண்டு வந்து மகிளாவின் கையில் தான் கொடுத்தாள்..

“படிச்சி வேலைக்கு போற தானெ அதுல என்ன இருக்கு என்று பாரு. பார்த்துட்டு எல்லோருக்கும் உன் வாயில் சொல்றியோ.. இல்லை நீ சொன்னாலும் நான் நம்ப மாட்டேன் என்றா இதை காமி..” என்று விட்டாள்..

கெளசல்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை.. ஏன் மகி பாலனுக்குமே அது என்ன என்பது போல் தான் மகிளாவின் கையில் இருந்த அந்த மருத்துவ அறைக்கையை ஒரு வித யோசனையுடன் பார்த்தவன் அவளிடம் இருந்து வாங்கினான்..

மகிளா அண்ணன் வாங்குவதற்க்குள் அதை பார்த்து விட்டாள்.. அவளுக்குமே இது அதிர்ச்சி தான்.. அண்ணன் சொன்ன போது கூட அது உண்மையாக தான் இருக்கும் என்பதை ஒரு சதவீதம் கூட நம்பிவில்லை…

ஆனால் இது நம்பி தான் ஆக வேண்டும் என்று மருத்துவ சாட்சியாக இருக்க.. மகிளா அதிர்ந்து பார்த்தாள் என்றால் மகி பாலனுக்கு அப்படி ஒரு கோபம்..

“ இது தான் என்னை நீ காதலித்த லட்சணமாடி… எனக்கு தான் உன்னை பத்தி ஒன்றும் தெரியாது.. ஆனால் உனக்கு என்னை பத்தி தெரியும் தானே…” என்று சொன்னதற்க்கு தான் செந்தாழினி..

“அது தான் சொல்றேன் பாலா.. உங்களை பத்தி எனக்கு தெரியும்.. ஆனால் என்னை பத்தி உங்களுக்கு தெரியாது தானே.. சப்போஸ்… மத்தவங்க போல நீங்களும் என்னை..” என்று சொன்ன நொடி மகி பாலனுக்கு அப்படி ஒரு ஆத்திரம்…

தன் கையில் உள்ளதை காட்டி… இது வரை மத்தவங்க உன்னை தப்பா பேசினாங்க.. ஆனா இது எடுத்து நீ உன்னை மட்டும் இல்ல என்னையுமே அசிங்கப்படுத்தி விட்ட… எப்படி இது காண்பித்து தான் நீ என் கூட வாழனும் என்றால், என்னை விடு.. இது உனக்கு தன்மானம் பிரச்சனையா தெரியலையா ஆழி..” என்று சொன்னவனின் பேச்சில் அத்தனை வேதனை. இது என்ன சின்ன விசயமா எப்படி இவளாள் இது முடிந்தது.. நினைக்கும் போதே அவனுக்கு அவ்வளவு ஆத்திரம்.. அடக்கி கொண்டவனாக மனைவியை பார்த்தான்..

“இது எடுக்கும் போதே உங்க கிட்ட இதை காண்பிக்கும் சூழ்நிலை வராது என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது..” என்று செந்தாழினி சொன்னதுமே மகி பாலனுக்கு இன்னுமே தான் கோபம் கூடியது..

“அப்போ எதுக்கு டி. இதை எடுத்த.. இவங்களை போல இருக்கிறவங்களுக்கு காண்பிக்கவா..” என்று தன் கையில் உள்ளதை கிழித்து கொண்டே கேட்டவனை பார்த்து மறுப்பாக தலையாட்டி மறுத்த செந்தாழினி.

“எங்க அப்பா அம்மா என்னை பத்தி அப்படி நினைக்கும் போதே நான் இப்படி என்னை நிருப்பிக்கனும் என்று நான் நினைக்கல.. இவங்களாம்..” என்று சொல்லி விட்டு செந்தாழினி அவர்களை பார்த்த பார்வை சொன்னது.. இவர்கள் எல்லாம் எனக்கு ஒன்றுமே இல்லை என்று..

“அப்போ எதுக்கு இப்போ நீ இதை காண்பித்த…?” என்று கேட்டவனின் கோபம் இன்னும் அடங்குவதாக இல்லை..

“இவங்க என்னை பேசினா காண்பித்து இருக்க மாட்டேன்.. ஆனா என்னை வைத்து உங்களை பேசியதினால் தான் காண்பித்தேன்..” என்று சொல்லி கூட மகி பாலனின் கோபம் குறைவதாக இல்லை…

அவனை பொறுத்த வரை.. இது வரை மற்றவர்கள் தான் உன்னை தப்பா பேசியது.. நீ இந்த விசயம் செய்து நீயே உன்னை அசிங்கப்படுத்திட்ட ஆழி.. இது வைத்து தான் நீ உன் வாழ்க்கை வாழனும் என்றால்.. அது உனக்கு கேவலம் தானே…” என்று மகி பாலன் கெட்டதற்க்கு செந்தாழினி இதை தான் சொன்னாள்..

“எனக்கு என்னை விட உங்க மீது நம்பிக்கை இருக்கு.. சப்போஸ் என் நம்பிக்கை பொய்த்து போனால் இது காட்டி என்னை நிருபித்து உங்க கூட நான் வாழ்ந்து இருக்க மாட்டேன்…” என்று சொன்னவளின் இந்த பேச்சை கூட மகிபாலன் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால்.

கெளசல்யாவோ… தன் மகள் தாழ்ந்து இவள் உயர்ந்து நிற்பதா..? அதில் காசு இருந்தா இது போல ஆயிரம் வாங்கலாம்..”

இவர்கள் பேசும் இந்த இடைப்பட்ட நேரத்திற்க்குள் அது என்ன மருத்துவ அறிக்கை என்று தெரிந்ததோடு. செந்தாழினி வெர்ஜின் தான் என்பதும் தெரிவித்து விட.அப்போது கூட நம்பாது கெளசல்யா இப்படி சொல்லவும்.

இனி ஒரு நிமிஷம் நாங்க இங்கு இருக்க மாட்டோம் என்று சொன்னவள் கட்டின துணியோடு நடுயிரவிக் மனைவியின் கை பிடித்து அழைத்து வந்த வீடு தான் வேதாந்த் இல்லம்..

அனைத்தும் சொன்ன மகிபாலன்.” நீயே சொல்லுடா. இது என்னை அசிங்கப்படுத்தியது தானே…?” என்று கேட்க வேதாந்தோ திரு திரு என்று முழித்து நின்று கொண்டு இருந்தான்..

அவனின் அந்த பார்வையில் மகிபாலன் பார்வை கூர்மையாக அதில் செந்தாழினி ஏதோ மறுப்பாக தலையசைத்த அந்த ஜாடையும் கண்டு கொண்டவன்…

வேதாந்த் சட்டையை பிடித்து விட்டான்.. மகிபாலன்..

“டேய் டேய் சட்டையை விடு டா.. விடிந்து விட்டது டா… சர்வெண்ட் வரும் நேரம் டா.” என்று வேதாந்த் கெஞ்சிக் கொண்டு இருக்க.

மகிபாலனோ சட்டையின் மீது இருந்த தன் கையை எடுக்காது.

“வரட்டும்..” என்று விட்டான்.

“டேய் நான் கலெக்ட்டர் டா. விடு டா.” என்று இன்னுமே கெஞ்சியதில் சட்டையை விட்டவன்..

“நீ செய்த செயல் கலெக்ட்டர் என்ன சாதாரணவன் கூட செய்ய மாட்டான் டா. ஒரு தங்கைக்கு எடுக்கும் டெஸ்ட்டா டா இது..” என்று கத்த..

“ஆமா டா. உன் பொண்டாட்டி நான் சொன்னதை அப்படியே கேட்டுட்டு தான் மறு வேலை பார்ப்பாடா போ டா. மூன்று வருஷன் முன் இருந்து… உண்மை சொல்லி விடலாம் அத்தனை முறை சொன்னேன்.. நீங்க சொன்னா நான் ஏதாவது செய்துப்பேன் என்று சொல்லி என் வாயை அடைத்து விடுவது…”

“ சரி பாலா கிட்டவாது சொல்லலாம்.. அதுக்குமே நான் செய்த்துடுவேன்.. சரி நீ இவ்வளவு கஷ்ட்ட்ப்பட்டு அங்கு இருக்கனுமா என் கிட்ட வந்து டு.. அதுக்குமே நான் உங்க கூட இருந்தா உங்க பிரண்ட் பாலாவுக்கு விசயம் தெரிந்து என்ன ஏது என்று விசாரித்து உண்மை தெரிந்து விடும் என்பது.. எதுக்குமே என் வார்த்தையை அவள் கேட்டது இல்ல.. இதுல கேட்டு விட போறாளா என்ன.. ?” என்று சொன்னவனின் பேச்சில் உள்ள நியாயத்தில் மகி லானால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

செந்தாழினி வுசயத்தில் மகி பாலன் மட்டுமா.? ஒன்றும் சொல்ல முடியாது இருக்கிறான். அவளின் அப்பா அம்மா அண்ணன் சித்தப்பா… சுதா கணவன் பாஸ்கர் அன்று இரவே தன் அம்மாவை அழைத்து விசம் சொல்லி விட்டான்..

“பரவாயில்லை ம்மா .. என் மச்சான் அதிர்ச்ஷ்ட்டகாரன் தான்மா. நான் கூட பணம் மட்டும் தானே பெண் அப்படி தானே என்று நினைச்சேன்.. ஆனா அப்படி எதுவும் இல்லை.. அதோட அந்த பெண் அப்போ இருந்தே பாலாவை விரும்பி இருக்கு…” என்று அனைத்துமே சொல்ல.

பாஸ்கரனின் அன்னை செந்தாழினியின் தாய் வீட்டிற்க்கு தூரத்து உறவு… விசயம் தெரிந்து செந்தாழினியின் தாய் வீட்டிற்க்கு அவர் அனைத்துமே சொல்லி விட..

பின் என்ன மறு நாளே வேதாந்த் வீட்டிற்க்கு செந்தாழினியின் தாய் வீட்டு குடும்பமே வந்து இறங்கி விட்டது…

செந்தாழினியில் காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டும் அவள் அவர்களை மன்னிக்கவில்லை… மகிபாலனின் மாப்பிள்ளை..

"சொல்லுங்க மாப்பிள்ளை..” என்று மருமகனின் உதவியை நாடினார் மருது பாண்டியன்…

மருமகன் சொன்னால் மகள் கேட்பாள் என்ற நம்பிக்கை அவருக்கு.. அது தான் தெரிந்து விட்டதே தன் மகளுக்கு மகிபாலனை எத்தனை பிடிக்கும் என்பது..

மகிபாலன் தன் மனைவியிடம் ஒன்று சொல்லவில்லை.. காரணம் எத்தனை வேதனைப்பட்டு இருந்து இருப்பாள் தன் மனைவி.. அதை பற்றி ஒன்றும் பேசாது..

தன் திருமணத்திற்க்கு கொடுத்த சொத்தை பற்றி பேசினான்..

“எனக்கு வேண்டாம்… திரும்ப அதை உங்க பேருக்கே மாற்றிக் கொள்ளுங்கள்..” என்று.

ஆனால் அதற்க்கு மருது பாண்டி… “ சொத்து உங்க பேருக்கோ என் மனைவி பேருக்கோ எழுதி வைக்கல. உங்களுக்கு பிறக்கும் பேரனோ பேத்திக்கோ தான் அந்த சொத்து சேரும் . அதனால அதை மாத்தி எல்லாம் நான் எழுத மாட்டேன்..” என்று சொல்லி விட..

செந்தாழினி தன் கணவனை அமைதியாக இருக்கும் படி சாடை காட்டி விட்டாள்.. காரணம் அந்த சொத்து வைத்து தானே தன் இரண்டு அண்ணிகளும் தன்னை அப்படி பேசியது.. தான் வேண்டாம் என்று மறுத்தால் அந்த சொத்து அவர்களுக்கு தான் போய் சேரும்.. அதே போல தன் பாட்டி எழுதி வைத்த அந்த நகை கடையையுமே அவள் மறுக்கவில்லை..

எனக்கு வேண்டாம்.. அதில் வரும் வருமானம் கூட எங்களுக்கு வேண்டாம்… ஆனால் என் குழந்தைகளுக்கு பாட்டனிடம் கிடைக்கும் உரிமையை மறுக்க எனக்கு உரிமை கிடையாது. என்பதே அவள் எண்ணம் …

அதனால் அமைதியாக கணவனை இருக்க செய்தவள்.. ஆனால் தனக்கு இவர்களுடையது ஒன்றும் வேண்டாம் என்று திட்டவட்டமாக மறுத்து விட்டாள்…

மகிபாலனுக்கும் மனைவியின் எண்ணம் தான்.. சரி எதுவும் தான் வாங்கி கொள்ளவில்லை…

உங்க குழந்தைக்கு என்று எழுதி வைத்த வீட்டிலாவது இருக்கலாமே…

அவர்கள் தற்போது குடியிருக்கு ஒரு படுக்கை அறை உள்ள அந்த வீட்டை பார்த்து ஆதங்கமாக சொன்னார்கள்.. செந்தாழினியின் அப்பாவும், சித்தப்பாவும்..

“என் கணவரின் வருமானத்துக்கு இந்த வசதியில் தான் நாங்க இருக்க முடியும்.. ஆனா நான் இதே போல எப்போதும் இருந்து விட மாட்டோம்… கண்டிப்பா எங்க வசதியை பெருக்கி கொள்வோம் தான். ஆனால் அது என்னுடையதா இருக்கனும்.. இல்லை என் கணவருடையதா மட்டும் இருக்கனும்… என் படிப்பையும் பார்ப்பதினால் தான். இப்போ கொஞ்சம் டைட்.. பரவாயில்லை.. இன்னும் மூன்று இல்லை நாளு வருஷத்தில் எங்க நிலை கண்டிப்பாக உயரும் என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டாள்..

வேதாந்த் செய்ய வந்த உதவியை கூட செந்தாழி மறுத்து விட்டாள்..

கடைசியாக வேதாந்த்… “ உன் படிப்பையாவது நான் பார்த்துக் கொள்கிறேனே.” என்று கெஞ்சியவனிடம்…

வேண்டாவே வேண்டாம் என்று விட்டாள்… அவள் கனவான ஐ,ஏ.எஸ் நோக்கி அவளின் பயணம் அடுத்த கட்ட நகர்வாக நகர்ந்தது…










 
Active member
Joined
Jul 13, 2024
Messages
165
Arumai. Kowsalya should not get the rent. Bala should go back to his high paying job . Sentha should become collector. Bala should not have stupid sentiments towards his family and completely ditch all of them.
 
Last edited:
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
சூப்பர் அப்டேட் 😍😍😍😍😍

அந்த பிசாசுங்ககிட்ட இருந்து தனியா வந்துட்டாங்க.....

மருது உங்க பொண்ணையே துரத்தி விட்டுட்டாங்க சொத்தை அவங்க அனுபவிக்கலாமா வாடகையை நிறுத்துங்க....

கௌசல்யாவும் மகள்களும் பேசுன வார்த்தை ரொம்ப அதிகம் அதுக்கு கொஞ்சம் அனுபவிக்கட்டும் 😡😡😡😡

மகியும் ஆழியும் மத்தவங்க முன்னாடி நல்ல நிலைக்கு வரணும் 😊😊😊
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Super Balan and Sentha…
Antha vadagai money kooda antha Kowshalya veetukky poga koodathu…
Inime ivanga thaniya kudithanam pannattum… appovachum magan arumai puriyattym
 
Top