Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

ஏங்கும் கீதம்... 24...2 final

  • Thread Author
அத்தியாயம்….24…2

ஒரு படுக்கை அறை கொண்டு அந்த திட்டமான வீட்டில் சமையல் முதல் கொண்டு மேல் வேலைகள் அனைத்துமே செந்தாழினி தான் பார்த்துக் கொண்டது… தன் வாழ்நாளில் இதை விட மகிழ்ச்சியாக நாம் இருந்து இருக்கிறோமா…? என்று நினைக்கும் அளவுக்கு தான் செந்தாழினி மிக மகழ்ச்சியாக இருந்தாள்..

ஆனால் மகி பாலனுக்கு தான் அவ்வப்போது மனது ஒரு மாதிரியாகி விடும்.. அதுவும் செந்தாழினியின் தாய் வீட்டிற்க்கும் இந்த வீட்டிற்க்கும் ஏணி வைத்தாலுமே எட்டாது தானே…

தன் அம்மா வீடு என்பது வேறு.. அது சொந்த வீடு.. அதோடு அனைத்து வேலைகளையும் அவள் பார்த்து கொண்டு அவள் படிப்பையுமே பார்த்து கொள்வதை பார்த்து…

“ஆழி மேல் வேலைக்காவது ஒரு ஆலை வைத்து கொள்ளலாம்.. நாம இரண்டு பேர் என்பதினால், ரொம்ப கூட கேட்க மாட்டாங்க…” என்று மனைவியைடம் ஒரு வேலையாளை வைத்து கொள்ள சொல்லி எவ்வளவோ வற்புறுத்தியும்..

“அவள் வேண்டாம்..” என்று ஒரே அடியாக மறுத்து விட்டாள்.. காசை பார்த்து பார்த்து செலவு செய்யும் நிலையில் தான் இப்போது மகிபாலன் இருக்கிறான்..

அதுவும் திருமணம் கடனோடு செந்தாழினியின் படிப்பு செலவையுமே மகி பாலன் தான் பார்த்து கொள்கிறான்.. அதோடு அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வாடகை, வணிகவளாகத்தில் வரும் வாடகை அன்னையின் வங்கி கணக்கில் செல்ல கூடாது.. எப்போதும் போல நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள்…என்று தன் மாமனார் சின்ன மாமனாரிடம் தீர்த்து சொல்லி விட்டான்..

மனைவி சொன்னது போல தங்கள் வாரிசுக்கு மற்ற வாரிசுக்கு வருவது போல வரட்டும்.. ஆனால் இப்போது எங்களின் ஜீவதத்திற்க்கு உண்டான செலவை அனைத்துமே நான் தான் பார்த்து கொள்வேன்.. அதிலுமே மகி பாலன் மிக தெளிவாக இருந்தான்…

மகளின் படிப்பு செலவையாவது நாங்க பார்த்து கொள்கிறோம் என்று செந்தாழினியின் வீட்டில் கேட்ட போது அதற்க்கும் மகிபாலன் ஒத்து கொள்ளவில்லை.

வேதாந்த் ராகவ்.. அவன் நண்பர்களை மனைவிக்கு படிப்புக்கு உண்டான புக் நோட்ஸ்.. இதை தவிர அவர்களிடம் இருந்தும் அவன் எந்த உதவியும் பெறவில்லை…. அதனால் மகிபாலனின் நிலை கொஞ்சம் பார்த்து பார்த்து செலவு செய்யும் படியான நிலையில் தான் அவன் இருக்கிறான்.

ஆனால் மனைவி அனைத்து வேலைகளையும் ஒன்டியாக பார்த்துக் கொண்டு படிப்பு, அதோடு ஆன்லைனில் வகுப்பு எடுப்பதில் அவனுக்கு துளி அளவுக்கு கூட விருப்பம் இல்லை…

“ நான் இந்த ஆன்லைன் க்ளாஸ் நம்ம மேரஜ் முன் இருந்தே எடுத்துட்டு இருக்கேன்பா… புதுசா எடுப்பது போல என்ன ஒரு கோபம்..” என்று கணவனின் மூக்கை பிடித்து ஆட்டியவள் எப்போதும் போல கணவனிடம் மிகவும் பிடித்த அவனின் விடுப்பட்ட புருவத்தை தன் ஒற்றை விரல் கொண்டு தடவிக் கொண்டு இருந்தவளின் கையை தட்டி விட்ட மகிபாலன்..

“ஆழி நான் சீரியஸா பேசிட்டு இருக்கும் போது என்ன இது.?” என்று கடிந்து கொண்டவன்.

பின்… “ நீ மேரஜிக்கு முன் இருந்தே ஆன் லைன் க்ளாஸ் எடுத்தாலுமே, இவ்வளவு நேரம் இத்தனை பேருக்கு எடுத்தியா.?” என்று கேட்டதற்க்கு செந்தாழினியிடம் பதில் இல்லை…

அவளிடம் தான் பதில் இல்லை.. ஆனால் நம் மகி பாலனிடம் இருந்தது…

“எனக்கு தெரியும் ஆழி… உன் கை செலவுக்கு உன் அப்பா கிட்ட கூட கேட்க கூடாது என்று உன் செலவுக்க்கு வேண்டி தான் நீ அந்த ஆன் லைன் க்ளாஸ்ஸையே எடுத்தே… அதே சமயம் உன் படிப்பும் கெட கூடாது என்று.. ரொம்ப எல்லாம் எடுக்காது குறிப்பட்ட க்ளாஸ் மட்டும் தான் நீ எடுத்த என்பதும் எனக்கு தெரியும்..” என்றவனுக்கு பதில் சொல்ல வில்லை தான்..

ஆனால் அடுத்து கணவன் பேசிய.. “ எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு ஆழி.. கல்யாணம் செய்து கொண்டு வந்தவ அடிப்படை தேவையை கூட நீ பூர்த்தி செய்யாது இருக்குறவன்.. எதுக்கு டா நீ கல்யாணம் செய்த என்று என் மனசாட்சியே என்னை கேட்கும் ஆழி…” என்றவனின் முகத்தை பற்றிக் கொண்ட செந்தாழினி…

“கேட்கிற உங்க அந்த மனசாட்சி கிட்ட சொல்லுங்கப்பா… நான் கல்யாணம் செய்யாது இருந்து இருந்தா என் மனைவி இன்னுமே அந்த வீட்டில் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்து இருப்பா என்று சொல்லுங்கப்பா..”

“நீங்க சொன்னது சரி தானுங்க. நான் மேரஜூக்கு முன் ஆன் லைன் க்ளாஸ் அதிகம் எடுக்கல தான்.

“அதுக்கு ஒரு காரணம் படிப்பு என்றாலுமே, இன்னொரு காரணம் அந்த வீட்டில் என் மனசு ஒரு நிலையில் எப்போதுமே இருக்காது.. என்ன தான் நான் எந்த தப்பும் செய்யல என்று நான் தைரியமா இருந்தாலுமே, அதையும் தான்டி அந்த வீட்டில் பேசுறவங்க பேச்சு என்ன சில சமயம் என்னை பாதிக்க தான் செய்யும்… அதுவும் என் அப்பா ஏதாவது சொன்னா கண்டிப்பா.. அன்னைக்கு என்னால என் படிப்பின் மீது முழு கவனம் செலுத்த முடியாது…” என்று செந்தாழினி அவள் அப்பாவை பற்றி சொல்லும் போதே அவளின் கண்கள் கலங்கி விட்டது…

இந்த பேச்சு மகிபாலனுக்கு அவளுக்கு அன்னையோடு தந்தையிடம் எத்தனை பாசமாக இருந்தாள் என்பதை அவனுக்கு உணர்த்தியது.

மனைவியின் இந்த கலங்கிய கண்களை மகிபாலனால் பார்க்க முடியவில்லை… அந்த கண்களின் மேல் அவன் தன் உதட்டை பதிக்க.. கலங்கிய செந்தாழினியின் முகம் சட்டென்று மலர்ந்து தான் விட்டது…

அதை பார்த்த மகிபாலன் கூட. “ எதுக்கு டி என் மேல நீ இத்தனை காதலை வைத்து இருக்க.?” என்று கேட்டான்.

அதற்க்கு செந்தாழினி. “ தெரியல… ஆனா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் பா…” என்று சொன்னவளின் உதடு மகிபாலனின் உதட்டின் மீது படிந்தது..

அவளுக்கு மிகவும் பிடித்த அவளின் தந்தையை இப்போது எல்லாம் அவள் அப்பா என்று அழைப்பது இல்லை.. அதை இப்போது தன் கணவனுக்கு கொடுத்து விட்டாள்.

மனைவிகள் மாமா மச்சான் டார்லிங்க்… அத்தான், ஏன் ஒரு சிலர் ஏன்டா என்று கூட கூப்பிடுவாங்க. ஆனா நீ ஒருத்தி தான் ஆழி கணவனை ப்பா போட்டு கூப்பிடுற…?” என்று ஒரு சில அந்தரங்கமான சமயத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் அழைக்கும் ப்பா இந்த அழைப்பில் கேட்கும் போது..

“முதல்ல எல்லாம் எனக்கு எங்க அப்பாவை ரொம்ப பிடிக்கும்.. இப்போ உங்களை.. அதனால் தான் அந்த அழைப்பை உங்களுக்கு கொடுக்கிறேனோ என்னவோ.. ஆனா என் அப்பா என் நம்பிக்கையை தகர்த்தியது போல நீங்க தகர்த்த மாட்டிங்க.. அது எனக்கு தெரியுமுங்க…” என்றவளின் முத்தம் கணவனின் உதட்டில் மிக ஆழமாக உள் இறங்கியது..

இது அனைத்துமே காலையில் கணவன் வேலைக்கு கட்டி செல்வதற்க்காக செந்தாழினி சமைத்து கொண்டே… ஒரு பக்கம் அவ்வப்போது விழும் பாத்திரத்தையும் துலக்கி கொண்டு இருந்தவளின் கையில் இருந்து அந்த பாத்திரத்தை அவன் வாங்கி கழுவிக் கொண்டே..அடுத்து மனைவிக்கு சமையலுக்கு உதவியாக பூண்டு உரித்து கொடுத்து கொண்டு இருக்கும் போது தான் இந்த பேச்சு நிகழ்ந்தது…

செந்தாழினி ஆழ்ந்த முத்தம் கொடுப்பது அவ்வளவு வசதிப்படாது கஷ்டப்பட்டு கொண்டு இருந்தாள்.. காரணம் கணவனின் உயரத்திற்க்கு மனைவியினால் ஈடுக் கொடுக்க முடியாததே காரணம்.

கணவன் அவளை அப்படியே தூக்கி சமையல் மேடை மீது அமர வைத்தவன் மனைவி முத்தம் கொடுக்க எதுவாக வழி வகை செய்து கொடுக்க. அவனுக்கு தேவையானதை கொடுத்தவள்.. தனக்கு தேவையானதை எடுத்து கொண்ட பின்.. மீண்டும் தன் சமையலை தொடர்ந்த வாறே..

“நீங்க இப்போ கேட்டிங்கலே.. வேலைக்காரியை வைக்கலாம் என்று… வைக்கலாம் தான்.. ஆனா பாருங்க நானுமே நீங்க கிளம்பும் சமயம் என் க்ளாஸ் இருப்பதால் உங்க கூடவே கிளம்பிடுறேன்.. வேலையாளை வைப்பது இருந்தால் இதோ இந்த சமயம் வருவது போல் தான் வைக்க முடியும்.. அவங்க இங்கு இருக்கும் போது நாம இப்படி அப்படி இருக்க முடியுமா…?” என்று கேட்டவள் கணவனை ஒரு பார்வை பார்த்தாள்..

மனைவியின் முத்தத்திலேயே கிரங்கி கொண்டு இருப்பவன் அவளின் அந்த பார்வையில்..

“வேண்டாம்.. வேண்டாவே வேண்டாம்… இதே போல தினம் தினம் நான் உனக்கு மேல் வேலைக்கு மட்டும் இல்ல சமையல் எல்லாத்துக்குமே நான் உதவி செய்யிறேன்…” என்று சொல்லி விட்டான்.

இப்படி தான் செந்தாழினி கணவனுக்கு ஒன்று நன்மை என்றால் அதை தான் செய்வாள்.. அதுவும் இது தான் என்று கணவனுக்கு கட்டளை இடாது.. அவன் வாயின் மூலமே அதுவும் அவன் மகிழ்ச்சியோடு சொல்லும் படி செய்து விடுவாள் மகிபாலனின் ஆழி…

மகிபாலனின் ஆழி அவன் மீது காட்டும் அந்த காதலில் மகிபாலன் தினம் தினம் காதலில் ஆழம் வரை சென்று வந்தான். கடல் ஆழம் சென்றாள் முத்து கிடைக்கும் அவனின் ஆழி அவன் மீது காட்டும் அந்த காதலின் ஆழத்தி மகிபாலனுக்கு ஒரு மகிழ்ச்சியான நிறைவான வாழ்க்கை கிட்டது.. சொல்வதற்க்கு இல்லை முத்து போல குழந்தை இப்போது கிடைக்குமா..? இல்லை செந்தாழினியின் கனவு நிறைவுற்ற பின் தான் குழந்தை என்று அவர்கள் முடிவு செய்து இருக்கிறார்களா என்று.ஆனால் அதற்க்கு உண்டான பாதுகாப்பை அவன் எடுத்து கொள்ளாததை பார்த்தால் கண்டிப்பாக முத்து போல குழந்தை கிட்டும் என்பது நிச்சயம்.

இது சினிமா கிடையாது ஒரே பாட்டில் பணக்காரனாகவும் கலெக்ட்டராகவும் ஆகுவதற்க்கு நிஜத்தில் இரு சில கனவுகள் உடனே எட்டும் ஒரு சில கனவுகள் எட்ட கொஞ்சம் ஆண்டுகள் பிடிக்க கூடும்.. ஆனால் செந்தாழினி தன் கனவை கண்டிப்பாக எட்டி விடுவாள் என்பது நிச்சயமே..

ஆனால் அது உடனவா..? கண்டிப்பாக முடியாது தானே. படிப்பு முன் பயி₹சி என்று குறைந்தது ஐந்து ஆண்டுகள் காத்திருக்க தானே வேண்டும்..

அவள் கனவை தொட.. கணவன் தந்தை என்ற அந்த பதவியை தொட விடாது தடுப்பதில் செந்தாழினிக்கு துளி கூட விருப்பம் கிடையாது… அதற்க்கு என்று இப்போது அவள் குழந்தை உண்டாகி விட்டாள் என்று சொல்லவில்லை..

குழந்தை உண்டாகினாலுமே, பெற்றுக் கொள்ளும் எண்ணத்தில் தான் செந்தாழினி இருந்தால், என்ன ஒன்று தன் கனவின் லட்சியத்தை அடைய கொஞ்சம் காலம் கூடுதல் எடுக்கும்..

தனக்கு வயது சின்னது.. ஆனால் கணவனுக்கு.. மகிபாலன் கணவன் இல்லாத போதே அவனுக்காக அத்தனை பெரிய பழியை தன் மீது போட்டுக் கொண்டவள் செந்தாழினி… இப்போது கணவனாக காதலோடு வாழ்பவனுக்காக இதை கூட செய்ய மாட்டாளா என்ன…?

இவர்களின் இல்லரம் மகிழ்ச்சியோடு தான் சென்று கொண்டு இருக்கிறது.. ஆனால் கெளசல்யாவின் ஒரு மகள்களின் நிலை தான் சொல்லி கொள்ளும் படி இல்லை எனலாம்..

காரணம் மகிளாவின் திருமண வாழ்க்கை தான்.. அது காதல் திருமணம் என்றாலுமே, அதை மறைத்து பெரியவர்கள் பார்த்து பேசியது போல் தான் அவர்களின் காதல் திருமணத்தை பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணமாக முடித்துக் கொண்டது…

இப்போது அப்படி இல்லை என்பது தான் தெரிந்து விட்டதே.. மகி பாலன் அன்று சொன்ன போது அவனின் குடும்பமான சுதா அவள் கணவன் மகிளா அவள் கணவன் கெளசல்யா பின் செந்தாழினி என்று இவர்கள் மட்டும் தான் இருந்தனர்…

கெளசல்யா மகளை பற்றி இதை சொல்லி அவளின் வாழ்க்கையை விளையாடுவாரா. இதே மருமகள் என்று இருந்தால் ஒன்றுக்கு இரண்டாக கதை பரப்பி இருக்க கூடும்.. மகள் என்றதினால் அமைதியாகி விட்டார்..

ஆனால் சுதாவின் கணவன் அப்படி அமைதியாக இருந்து விடுவானா என்ன..? தன் அம்மாவிடம் சொல்லி விட.. அம்மா நெருங்கிய உறவுகளில் சொல்ல இப்படி சங்கிலி போல தான் இந்த கதை பரவி விட்டது..

அப்படி பரவியது மகிளாவின் மாமியார் வீட்டிற்க்கு தெரியாது போகுமா..? என்ன..? தெரிந்து விட்டது..

அவ்வளவு தான் நரேனின் அம்மா இங்கு வந்து ஒரு ஆட்டம் ஆடி தீர்த்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்…

பையன் நல்ல வேலையில் இருக்கான்.. சொந்த வீடு என்றதோட்டு எதுக்கும் துணிந்து அவன் கூட போனியா…?” என்று மகிளாவை வீட்டின் முன் வந்து நின்று கத்தி அப்படி அசிங்கம் படுத்தி விட்டார்..

இந்த தவறில் அவர் மகன் மீதும் தவறு இருக்கிறது தான்… கெளசல்யா ..

“என் மகள் மீது மட்டுமா தப்பு உங்க மகனும் தானே அதில் சம்மதப்பட்டு இருக்கிறார்.?” என்று மகள் என்று வந்து விட்டார் நியாயம் பேசும் அம்மாவை போல கெளசல்யா இந்த விசயத்தில் சரியாக தான் பேசினார்.

ஆனால் என் மகன் ஆம்பிள்ளை.. அவன் கூப்பிட்டா இவள் போவாளா.. நீ பேசுவதை பார்த்தா நல்ல பசை உள்ள பார்ட்டி.. என்று நீயே பழக விட்டு இருப்ப போல…”

கெளசல்யா தன் மருமகளை இந்த வீட்டிற்க்கு வாழ வந்தவள் என்று பார்க்காது பேசியது போல நரேனின் அம்மா இவர்களை பார்த்து பேசியவர்.

அந்த பேச்சோடு…. “ பெரிய இடத்துல பென் எடுத்து இருக்கிங்க என் மகனுக்கு நாளைக்கு கொஞ்சம் உதவியா இருக்கும் என்று நினைத்து தான் உங்க வீட்டில் பெண் எடுத்தோம்.. வாழ வந்த பெண்ணை வாழ விடாது அனுப்பி விட்டு விட்டிங்க… அந்த நல்ல பெண் இது போல வீட்டில் எப்படி வாழும்..” என்று ஒரு சின்ன பஞ்சாயத்து வைத்து விட்டு தான் சென்றது…

இதில் சுதா வீட்டில் வேறு.. “இந்த ஆஸ்பிட்டலில் பாரு சீமந்தம் நாங்க நல்லா செய்யிறோம் .. அதுக்கு தகுந்தது போல சபை நிறைய வரிசை வைக்கனும் கைக்கு தங்க வளையல் குறைந்தது மூன்று சவரனிலாவது போடனும்…” என்று கழுத்தை நெருக்குவது போல கேட்டுக் கொண்டு இருந்தனர்..

கெளசல்யாவுக்கு தான் என்ன செய்வது என்று புரியாத ஒரு நிலை… எப்போதும் போல அந்த மாதம் தன் சம்பளத்தில் இருந்து ஒரு தொகையை தன் அன்னையிடம் கொடுக்க மகிபாலன் அம்மா வீட்டிற்க்கு வந்தான்..

மகனை பார்த்ததும் பெண் வாழ்க்கைக்காக சம்மந்தியிடம் காட்ட முடியாத கோபத்தை எல்லாம் மகன் மீது கொட்டினார்..

மகன் பணம் கொடுக்க தான் வந்து இருக்கிறான் என்று தெரிந்து… “ என்ன டா பிச்சை போட வந்து இருக்கியா. நீ இப்போ சம்பாதிப்பதே என் புருஷன் கொடுத்த அந்த வேலையினால் தான் டா..”

ஐடியில் லட்ச கணக்கில் வாங்கிய சம்பளத்தை அம்மாவின் ஆசைக்காக அப்பா வேலையில் சேர்ந்த மகனை பார்த்து கெளசல்யா கேட்க.

அதற்க்கு மகிபாலன் சண்டை இடவோ. குறைந்த பட்சம் கத்தி பேசவோ இல்லாது..

“அப்போ நான் இந்த வேலையை விட்டு விடுகிறேன் ம்மா… ஐடியில் என் ஆறு வருடங்கள் எக்ஸ்பிரியன்ஸ்க்கு ஒரு வேலையை வாங்கிடுவேன்.. அதில் சம்பளம் கண்டிப்பா நான் இப்போ வாங்குவதை விட அதிகமாவே கிடைக்கும்.. என் பொண்டாட்டியும் பணம் தேவைக்காக அத்தனை மணி நேரம் ஆன் லைன் க்ளாஸ் எடுக்க தேவையில்லை… அவள் படிப்பதற்க்கும் நேரம் கிடைக்கும்..” என்று விட.

இப்போது கெளசல்யா தன் கோபத்தை கை விட்டு இரு சம்மந்திகளும் தன் கழுத்தை நெருக்குவதை சொல்ல.

“தீர்த்து சொல்லி விடுங்க. பழியை என் மீதே போட்டு விடுங்க… என் பையன் இது தான் முடியும் என்று சொல்லி விட்டான் என்று..

நாம ஒன்னும் கவர்மெண்ட் ஆஸ்பிட்டலில் டெலிவரி பார்க்கல தானே… பிரவேட் ஆஸ்ப்பிட்டலில் நம்ம வசதிக்கு ஏற்ப பார்க்க போறொம்.. இவங்க சொல்ற ஆஸ்பிட்டல் பெரிய பெரிய வி.ஐ.பிக்கள் பார்க்கும் ஆஸ்பிட்டலில் பார்க்க சொன்னா. அது நம்மால முடியுமா என்ன.?” என்று மகி பாலன் இருக்கும் நிலையை சொல்ல.

“ஏன்டா நமக்கு இந்த தலை எழுத்து அந்த வாடகை பணம் வேண்டாம் என்று சொல்லிட்ட மகனுக்கு உரிமை இருப்பது போல தானே மகளுக்கும் இருக்கு.. அது கொடுத்தார்.. நீ ஏன் அதை அவமானமா நினைக்கிற.”

இப்போது கெளசல்யாவின் குரலில் அத்தனை குழைவு… கெளசல்யா என்ன தான் சொல்லியும் மகிபாலன் அந்த பணம் எங்களுக்கு வேண்டாம்… நம்ம வசதி இது தான் .. இது நீங்க சொல்றிங்கலா நான் சொல்லட்டுமா..?” என்ற மகனிடம்..

“வேண்டாம் நானே சொல்லிக்கிறேன்..” என்று சொன்ன கெளசல்யாவின் குரலில் மீண்டும் கோபம் எட்டி பார்த்தது..

இது போலான பச்சோந்திகள் நம்மை சுற்றி இருக்க தான் செய்கிறார்கள்.. இவர்களுக்கு இடையில் தான் நாம வாழ வேண்டி இருக்கிறது..

இவர்களுக்காக நம் சந்தோஷத்தை அனுபவிக்காது இருக்க கூடாது.. அதே போல அவர்களின் பச்சோந்தி வலையில் நாம் மாட்டி கொள்ளாது நாம் கொண்டு செல்லும் வாழ்க்கையில் தான் இருப்பது நம் சந்தோஷம்.. மகிழ்ச்சி நிம்மதி எல்லாம்..

செந்தாழினி விட்டிலும் அவளின் இரண்டு அண்ணிகள் வீட்டின் நிலை அறிந்து அடக்கி வாசிக்கிரார்களே தவிர திருந்த எல்லாம் இல்லை.

அதனால் ஒரு சில முறை அவர்கள் மாமியார் இல்லாத சமயமாக பார்த்து ஏதாவது செந்தாழினியிடம் பேசுவது தான்.. செந்தாழினியும் அவர்கள் முறையை பின் பற்றி பதிலுக்கு கொடுத்து விடுவாள் தான்..

தாய் வீடு என்று ஈஷிக் கொள்ளவில்லை என்றாலுமே, முற்றிலும் தவிர்க்கவும் இல்லை..

அதே போல் தான் மாமியார் வீட்டு உறவையும் செந்தாழினி வைத்து இருந்தாள்… கணவன் அம்மாவுக்கும், அக்கா தங்கைக்கும் செய்வதை அவள் தடுக்கவில்லை.. ஆனால் விரகுக்கு ஏற்ற வீக்கம் போல உங்களின் சக்திக்கு உட்பட்டு செய்யுங்கள் போதும்.. கடன் வாங்கி எல்லாம் செய்ய வேண்டாம் என்பது தான் செந்தாழினியின் எண்ணம்..

அதே எண்ணம் தான் மகிபாலனுக்குமே அதனால் தான் அக்காவின் சீமந்ததிற்க்கு பட்டு புடவை வரிசை என்று அவன் எந்த குறையும் இல்லாது செய்து விட்டான்..

ஆனால் தங்கத்தின் வளையல் என்பது இப்போதைக்கு என்னால் முடியாது… பின் என் நிலை கண்டிப்பாக உயரும் அப்போது செய்கிறேன் என்பதை சுதாவின் மாமியாரிடம் சொல்லி விட்டான்..

சுதாவின் மாமியாரும் கெளசல்யாவிடம் பேசியது போல மகி பாலனிடன் பேச முடியவில்லை. அதனால் சரிப்பா சரிப்பா. என்றவர்..

சுதாவின் சீமந்தத்தின் அன்று.. “ நீ எப்போ வளையல் போட்டுக்க போறா. படிப்பு படிப்பு என்று விட்டு விடாதே.. குழந்தை பேரை நாம தள்ளி வைத்தா. அது நம்மை தள்ளி வைத்து விடும்..” என்றதற்க்கு செந்தாழினி சிரித்து கொண்டு இருந்தாள்.

ஆனால் மகிபாலன் அப்படி இருக்கவில்லை… அவள் மகளுக்கு ஏழு ஆண்டுகள் கழித்து தான் குழந்தை பாக்கியது கிடைத்தது.

அதை வைத்து.. “ நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் அத்தை.. “ என்று அவரை ஒட்டி பேசியன் பின்..

“உங்க மகள் அப்படி செய்ததினால் தான் ட்ரீட்மெண்ட் செய்து அத்தனை வருஷம் கழித்து குழந்தை பிறந்ததா அத்தை…” என்று கேட்டு விட்டான்..

ஒரு சிலர் இப்படி தான் தன் வீட்டில் என்ன நடந்தது… ? என்ன நடக்கிறது என்பதை ஆராயாது.. அடுத்த வீட்டு கதையை பேசுவர்…

மகிபாலனின் இந்த பேச்சில் சுதாவின் மாமியார் கப் சிப் தான்…

மகிபாலன் செந்தாழினியின் வாழ்க்கையில் ஒரு சில இது போலான உறவுகளின் வழியே இது போலான பேச்சுக்கள் கேட்கும் படி தான் உள்ளது..

ஆனால் நாம் இவர்கள் இப்படி தான் என்று ஒரு சில உறவுகளை நாம் முற்றிலுமே தவிர்க்க முடியாது தானே..

ஆனால் மகிபாலன் போல கணவன் இருந்தால் உறவுகளின் இந்த பேச்சு என்ன எந்த பேச்சுமே இவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இடையூறாக இருக்காது.. இதை வைத்து ஒரு பழ மொழியும் இருக்கிறது கொண்டவன் சரியாக இருந்தால் கூரை மீது நின்று கூட கூவலாம் என்று..

உறவுகள் எப்படி இருந்தாலும், எப்படி பேசினாலுமே மகி பாலன் செந்தாழினியின் மகிழ்ச்சிக்கு ஒரு குறையும் இருக்காது..

அந்த மனநிறைவோடு.. இந்த கதையில் இருந்து விடை பெறுவோம்.. என் அடுத்த கதையான யென்னை கொண்டாட பிறந்தவன் கதையில் உங்களை சந்திக்க வருகிறேன் வாசகர்களே.. நன்றி …. நன்றி நன்றி…






 
Active member
Joined
May 11, 2024
Messages
167
படிப்பும் குழந்தையும் வாழ்க்கை ஓட்டத்தில் வருதை ஏற்க தயாராகிட்டாங்க
 
Active member
Joined
Jul 13, 2024
Messages
165
Arumai ma. Nice closure to everyone, kowsslya deserves this, Mahila got her share too. Aazhi and Bala eppovum santhosama irunga.
 
Last edited:
Active member
Joined
Aug 16, 2024
Messages
267
Nice story. மகிபாலன்,செந்தாழினி பெயர் மட்டுமல்ல இரண்டு பேரின் கதாபாத்திரமும் சூப்பர்.அவர்ரவர் குணாதிசயங்களை அப்படி அப்படியே விட்டு விட்டது அருமை.
 
Top