Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

ஏங்கும் கீத்ம்... 24...1 pre final....

  • Thread Author
அத்தியாயம்….24…1 pre final

மருது பாண்டியன் மகளிடமும் மருமகளிடமும் அத்தனை வற்புறுத்தியுமே இவர்கள் தனி வீடு பார்த்து தான் சென்றது… கடல் மாதிரி அவ்வளவு பெரிய வீடு இருக்க… இப்படி குருவி கூடு மாதிரி ஒரு வீட்டில் இந்த பாண்டியன் வீட்டு பெண் இருக்கனுமா…? என்று கேட்டார்..

அவர் கேட்டதில் பணத்திமிரோடு, மகள் இந்த சின்ன வீட்டில் கஷ்டப்படுவாளே… என்ற ஆதங்கம் தான் மேலோங்கி இருந்தது..

மாமனார் மகள் மீது இருந்த பாசத்தில் இந்த வார்த்தை சொன்னாலுமே மகிபாலனுக்கு அந்த வார்த்தை பிடிக்கவில்லை தான்.. இருந்துமே தன் மாமனாரிடம் அதை பற்றி ஒன்றும் பேசாது அமைதியாக இருந்தான்..

ஆனால் அவனி ஆழி மகி பாலனை ஒன்றும் பேச விட்டு அமைதியாக இருந்து விடுவாளா என்ன…?

இதோ தந்தையின் பேச்சுக்கு மறு பேச்சாக நம் மகி பாலனின் ஆழியானவள்…

“நான் பாண்டிய வீடு பெண் இல்லேப்பா.. மகி பாலனோட மனைவி.. என் கணவர் இரண்டு சகோதரியோடு பிறந்த அரசாங்க ஊழியர்.. சமீபத்தில் தான் தங்கைக்கும் அவருக்குமே கல்யாணம் முடிச்சி இருக்கார்.. அந்த கடன் அடைக்கனும்.. ஆடம்பரத்துக்கு பெரிய வீட்டில் குடி வைத்து பின் சமாளிக்கனும் லே..” முரை வைத்து அழைக்காது தான் செந்தாழினி இதை சொன்னது.

அது என்னவோ செந்தாழினிக்கு இப்போது கூட மருது பாண்டியனை தந்தை என்று அழைத்து பேச முடியவில்லை… காரணம் தன் மீது அத்தனை பெரிய பழியை போட்டு கொண்டது தந்தை மீதும் தன் குடும்பத்தின் மீதும் இருந்த அந்த நம்பிக்கையினால் தான். அதே பொய்த்து போன பின்.. அவளுக்கு மனது விட்டு விட்டது தான்..

இப்போது கூட முகம் திருப்பாது தன் தந்தையிடமும் தன் குடும்பத்திடமும் பேச காரணம். தெரிந்தோ தெரியாதோ தன் தந்தை தன் மனதுக்கு பிடித்தவனை திருமணம் செய்து வைத்ததே..

மகளிடன் பேச்சில்.. “ அது தான் ஏன் மாப்பிள்ளை இத்தனை கஷ்டப்படனும் என்று சொல்றேன்.. நான் கொடுத்த சொத்திலேயே அத்தனை வருமானம் வரும்.. ஏன் அதை நீங்க வாங்கிக்க மாட்டேங்குறிங்க… அதோட அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் இருந்தா கூட போதும்… மாப்பிள்ளை ம் என்று ஒரு வார்த்தை சொல்லட்டும்.. கடனை ஒரு நிமிஷத்தில் நான் அடச்சி விடுறேன்.. மாப்பிள்ளை அத்தனை கஷ்டத்தில் எல்லாம் வேலைக்கு போக வேண்டியதும்.. மத்தவங்க கிட்ட கை கட்டி நிற்கனும் என்ற அவசியம் இல்ல.. உன் பாட்டி உனக்கு கொடுத்த அந்த நகை கடையில் ராஜாவா வந்து உட்கார சொல்லும்மா நம்ம மாப்பிள்ளையை.. என்று சொன்ன மருது பாண்டியனின் மனது மகி பாலன் பல அடி உயரத்தியோ உசந்து தான் இருந்தான்.

தான் நம்பாத தன் மகளை மாப்பிள்ளை நம்பியதில், அதோடு தன் மகளுக்காக அவர் அம்மாவிடம் பேசியது அனைத்தையும் விட… என்ன தான் மகிபாலன் நல்லவன் தன் இனத்தவன் என்று பெண் கொடுத்தாலுமே, பணம் வாங்கி கொண்டு தானே தன் மகளை திருமணம் முடித்தது என்று மனதில் ஒரு எகத்தாளம் இருக்க தான் செய்தது.

ஆனால் அந்த சொத்து விவரம் தன் மாப்பிள்ளைக்கு தெரியாததிலும், இதோ இத்தனை பெரிய சொத்தை அனுபவிக்காது ஒரு படுக்கை அறை கொண்ட இந்த வாடகை வீட்டில் இருப்பதில் மகி பாலன் இருப்பதில் மருது பாண்டியன் மாப்பிள்ளை மீது அப்படி ஒரு மதிப்பு மரியாதை உண்டாகி விட்டது..

அதனால் தான் மகள் மருமகனை அழைப்பது… ஆனால் அவருக்கு தெரியாத ஒரு விசயம் செந்தாழினிக்கு தன்னை விட தன் கணவன் மீது ஒரு சிறிது மதிப்பு குறைந்தாலுமே, அவள் சும்மா இருக்க மாட்டாள்..

கணவனை அவன் தாய் பேசுவதையே பொறுத்து கொள்ளாதவள் மற்றவர்கள் பேசும் படி செய்து விடுவாளா என்ன.?

அத்தனை முறை அழைத்தும் செந்தாழினி “ இதுவே எனக்கு வசதியாக தான் இருக்கு… இதே வீட்டிலும் காலம் முழுவதும் இருந்துட மாட்டோம்… கண்டிப்பா பெரிய வீட்டிற்க்கு போவோம் தான். ஆனா அது என் கணவன் சம்பாதித்த சம்பாத்தியமா இருக்கனும்.. இல்லை என்னுடையதா இருக்கனும்..” என்று தீர்த்து சொல்லி விட்டாள்..

இந்த பேச்சுக்கள் எல்லாம் மகி பாலன் முன் நிலையில் தான் நடந்தது.. மகி பாலன் ஒன்றும் பேசாது ஒரு பார்வையாளனாக மட்டும் கேட்டு கொண்டான். மனைவி தன்னை விட்டு கொடுப்பது போல நிலையில் தான் தன் சுயமரியாதை தக்க வைத்து கொள்ள பேசுவான்..

ஆனால் இங்கு தான் அவன் மனைவி கணவன் மீது சிறு துரும்பை கூட விழாது பார்த்து கொள்கிறாளே… தன் மனைவியின் பேச்சை ரசித்து கேட்டு கொண்டு இருந்தானே தவிர. தந்தை மகள் பேச்சுக்கு இடையே இடை புகவில்லை…

ரசித்து கேட்டுக் கொண்டு இருந்தவனின் ஆதரவை தேடினார் அவனின் மாமனார்..

“ நீங்களாவது சொல்லலாம் லே மாப்பிள்ளை…” என்று உதவிக்கு அழைக்க.

மகிபாலனோ தான் ஒரு நல்ல கணவன் மட்டும் அல்லாது சமார்த்திய சாலி என்பதை நிரூபிப்பது போல.

“ நாம இருப்பதே மதுரை… இந்த ஊரில் இருந்து கொண்டு மனைவி பேச்சுக்கு எதிர் பேச்சு பேசி விட முடியுமா என்ன..?” என்று சொன்னவனை செந்தாழினி பொய் கோபமாக முறைத்து பார்க்க. அவர்களின் அந்த அன்னியோனியத்தை மருது பாண்டியன் மனது நிறைவோடு பார்த்தவர்…

அதே மன நிறைவோடு தன் வீடு வந்தவர் தன் மனைவி வளர்மதியிடம் மாப்பிள்ளை பற்றியும் மகளை பற்றியும் புகழ்ந்து பேசி தள்ளி விட்டார்..

வளர்மதியோ.. “ நீங்க சொல்வது எல்லாம் சரி தானுங்க. ஆனா நம்ம பெண் வசதியா இருந்தவ. இப்போ அந்த சின்ன வீட்டில் கஷ்டப்படுவா தானே.. அதோடு அவள் நகையில் எதையுமே அவள் எடுத்துட்டு போகல…

நம்ம வீட்டுக்கு வாழ வந்த பொண்ணுங்க அத்தனை நகைகளை அள்ளி போட்டுட்டு போகும் போது நம்ம மகள் சின்னதா புல்லு போல ஒரே ஒரு சரடு மட்டும் போட்டு வருவது நல்லாவா இருக்கும்… “

என்ன தான் இருந்தாலும் மகள் மகள் தான் மருமகள் மருமகள் தான் என்பதை வளர்மதி இந்த பேச்சில் நிருபித்தார்…

“ நகையில் என்ன டி பெருமை வாழுது.. நம்ம மாப்பிள்ளை நம்ம பொண்ணை கலெக்ட்டர் ஆக்குவாரு டி… மாப்பிள்ளை மட்டுமா நம்ம ஊரு கலெட்டர் வேதாந்த் தம்பி.. அவர் தம்பி ராகவ்,.. இன்னொ ஏதோ பேரு கபில் எல்லோருமே நம்ம பொண்ணு கலெக்க்ட்டர் ஆக என்ன என்ன செய்யனுமோ எல்லாம் செய்யிறாங்க டி இதுல கபில் ஐ.பி.எஸ்… எல்லோரும் அரசாங்கத்தில் பெரிய பெரிய பதவியில் தான் இருக்காங்க..

எல்லோரும் அவங்களை மதிக்க.. அவங்க நம்ம பொண்ணை மதிக்கிறாங்க டி.. இத்தோட என்ன பெருமை இருக்கு சொல்லு…” என்றவரின் பேச்சில் அத்தனை பெருமை..

“என் பெண் எல்லோரும் போல நகை புடவை என்று ஆசைப்பட்டு வீடு மட்டும் ஆளுபவள் இல்ல டி.. மாவட்டத்தை ஆள பிறந்தவள் டி.. “ என்று பெருமை பட்டுக் கொண்டார்..

இதை அனைத்துமே அந்த வீட்டில் இருந்த இரண்டு மருமகள்களும் கேட்க தான் செய்தனர்…

பெரிய மருமகள் செண்பகம்.. “ பார்த்தியா இந்த பெண்ணுக்கு வந்த பாராட்டை…” என்று சொல்ல.

அதை கேட்ட சின்ன மருமகளான செளமியா.. “ மெல்ல அக்கா சத்தமா பேசாதிங்க.. அவங்க காதில் கேட்டுட போகுது.” என்று கிசு கிசுக்க. தன் ஒரவத்தியின் இந்த பேச்சில் செண்பகம் உஷார் ஆகி மெல்ல தான்.

இப்போது.. “ என்ன டி.. இப்படி ஆயிடுச்சி… ஐந்து பெருமே அண்ணனாடி…” என்று நம்ப முடியாது.. அப்படி இல்லாது இருந்து இருக்கலாம் என்பது போலான ஆதங்கம் தான் செண்பகம் பேசிய பேச்சில் தோரணை காணப்பட்டது..

செளமியாவுமே.. “ ஆமா க்கா… அதுவும் அவள் எந்த தப்பும் செய்யல என்று மருத்துவ அறிக்கை எல்லாம் வாங்கி வைத்து இருக்கிறாளே…” என்று சொன்ன செளமியாவின் குரலிலுமே ஆதங்கம் தான் தெரிந்தது..

பின் என்ன இதை வைத்து தான் அந்த வீட்டின் இரு மருமகள்களுமே… “ எங்க வீட்டில் அப்படி வளர்ந்தாங்க இப்படு வளர்த்தாங்க.. நாங்க எல்லாம் கல்யாணம் ஆவதுக்கு முன் சமஞ்சி வீட்டில் இருக்கும் போது ஆம்பிளைங்கலே கண் கொண்டு பார்த்தது கூட கிடையாது..” என்பது போல் தான் ஒரவத்தி இருவரின் பேச்சுக்களும் இருக்கும்..

சம்மந்தம் இல்லாது இந்த பேச்சு இவர்கள் ஏன் பேசுகிறார்கள் என்று புரியாதவர்கள் இல்லையே அந்த வீட்டில் இருப்பவர்கள்..

செந்தழினியின் அன்னை வளர்மது தன் ஒரவத்தி மரகதத்திடம். “ இந்த பெண் நல்ல மாதிரி இருந்தா நம்ம முன் எல்லாம் இவளுங்க வாயை திற்ப்பாளுங்களா.. இப்படி செய்துட்டு என்னை மொக்க குலைய வெச்சிட்டாளே இந்த பெண்..” என்று சொல்லி ஆத்து ஆத்து போவாரே ஒழிய.. இதை பற்றி அந்த வீட்டின் மருமகள்களிடம் பேச மாட்டார்.. அவர் என்ன என்று பேசுவார்..

ஆனால் அதற்க்கு பதிலாக எதோ ஒரு காரணத்தை வைத்து அவர்கள் வீட்டின் அம்மா வீட்டை பற்றி இழுத்து பேசி விடுவார் என்பது வேறு விசயம். ஆனாலுமே தன் மகளை பற்றி பெருமையாக பேச முடியவில்லையே என்ற ஆதங்கள் வளர்மதிக்கு இருக்க தான் செய்தது…

இப்போது தன் மகள் ஒழுக்கத்தில் அப்பழுக்கற்றவள் என்று தெரிந்ததில் இருந்து வளர்மதியும் சரி செளமியாவும் சரி … அந்த வீட்டின் இரு மருமகள்களை நேரம் கிடைக்கும் போது எல்லாம் வைத்து பேசி விடுவர்.. சில சமயம் நேரம் ஏற்படுத்தியும் பேசுவார்கள் அது வேறு விசயம்..

ஆனால் மொத்தத்தில் அந்த வீட்டின் இருமருமகளான செண்பகமும் செளமியாவும் பல் புடுங்கிய பாம்பு என்று தான் சொல்ல வேண்டும்..

செந்தாழினி திருமணத்தின் போதே செந்தாழினியின் அத்தைகளை வைத்து இந்த வீட்டின் இருமருகள்கள் அடித்த கூத்தில் மகள் திருமணம் முடிந்த பின்…

மருது பாண்டியனும், சரவண பாண்டியனும் இரண்டு சம்மந்தி வீட்டவர்களை அழைத்து விட்டனர்..

அவர்களிடம் ஏற்கனவே அந்த வீட்டின் பெண்கள் விசயம் இது என்று சொல்லவும், அவர்கள் இருவருக்கும் தாய் வீட்டிலேயே அத்தனை பேச்சு வாங்கினார்கள் தான் பாண்டியன் வீட்டு மருமகள்கள் …

“என்ன செய்து வைத்து இருக்கிங்க பெண்ணுங்களா..அந்த வீட்டு சம்மந்தி என்று தான் தொழிலில் எனக்கு ஒரு சிலதில் ஆதாயம் கிடைக்குது… இப்போ நீங்க செய்து வைத்த காரியத்தில் நீங்களும் வேண்டாம் உங்க பொண்ணும் வேண்டாம் என்று சொன்னா என்ன ஆவது…” என்று கடிந்து கொண்ட தந்தையிடம் …

அப்போது கூட செளமியா…. “ என்னப்பா ரொம்ப தான் பயம் முறுத்துறிங்க… கல்யாணம் ஆகி இத்தனை வருஷன் குடும்பம் நடத்தியவளை அவ்வளவு சீக்கிரம் தான் வீட்டை விட்டு வெளியே துரத்தி விட முடியுமா…?” என்று தன் தந்தையிடம் நியாயம் கேட்க..

பக்கத்தில் நின்று கொண்டு இருந்த செண்பா கூட. “ அது தானே… அதுவும் அந்த வீட்டுக்கு வாரிசையும் பெத்து வைத்து இருக்கோம்..” என்று கூட பேசிய பாண்டி வீட்டு மருமகள்களை பாண்டியன் வீட்டிற்க்கு பென் கொடுத்த அந்த இரு தகப்பன் மார்களுமே தலை மீது கை வைத்து தான் அமர்ந்து விட்டனர்…

மருது பாண்டியனும், சரவண பாண்டியனும்.. செந்தாழினியின் திருமணம் முடிந்ததுமே ஒரு சம்மந்திகளிடம் விசயம்.. இது என்று சொன்னதுமே இரு சம்மந்திகளுமே ஒருவருக்கு ஒருவர் ஆலோசனையில் ஈடுப்பட்டனர்..

ஒரே ஊர் ஒரே வீட்டில் பெண் கொடுத்தது என்று எப்படி பார்த்தாலுமே, ஒரே இனத்தில் இருந்தால் ஒருவருக்கு ஒருவர் ஏதாவது ஒரு வழியின் சொந்தமாக தான் இருப்பர்..

அப்படி பார்த்தால் செண்பகா தாய் வீடும் செளமியா தாய் வீடுமே தூரத்து சொந்தம் தான்.. அந்த பழக்கத்தில் பாண்டியன் வீட்டு இரு சம்மந்தியர்களும் இதோ காலையிலேயே ஒரே வீட்டில் இது என்ன என்று முதலில் பெண்களிடம் பேசி விட்டு பின் எப்படியாவது சம்மந்தி காலில் விழுந்த பெண்களை வாழ வைத்து விட இரு பெண்களின் தகப்பன்மார்களும் பார்த்தால், இவர்கள் என்ன இப்படி பேசுகிறார்கள் என்பது போல பார்த்தனர்..

செளமியாவின் தந்தை மகளிடம் … “ நீ கல்யாணம் ஆகாத நாத்தனார் வீட்டில் இருப்பது எனக்கு பிடிக்கவில்லை.. இவர் என் கிட்ட பேச கூட தங்கை வீட்டில் இருக்கா வீட்டில் இருக்கா..என்று சொல்லிடுறார் என்று நீ சொன்னதினால் தானே நான் இதில் தலையிட்டு பக்குவமா மகி பாலன் அம்மா கிட்ட பேசி அந்த பெண் கல்யாணத்தை முடிச்சு கொடுத்தேன்…”

ஆம் முதன் முதலில் மகி பாலன் வீட்டில் சம்மந்தம் பேசிய பாண்டியன் வீட்டு சம்மந்தியான செளமியாவின் அப்பா கூட அந்த பெண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் என்று நினைத்து எல்லாம் பாலா வீட்டில் பேசவரவில்லை…

தன் பெண் வாழும் வீட்டில் இந்த பெண் அந்த வீட்டில் இடஞ்சலாக இருக்கிறாள் என்று நினைத்து தான் மருது பாண்டியனிடம் பேசும் வகையில் பக்குவமாக பேசி.. அதே போல மகிபாலன் அம்மாவிட பேசி இந்த திருமணத்திற்க்கு அடிக்கல் நாட்டினார்..

இப்போது அதை சொல்லி விட்டு… “ இப்போ நீங்களே அந்த பெண்ணின் இரண்டு அத்தை மார்களை இடையில் கொண்டு வந்து இந்த கல்யாணத்தை நிறுத்த பார்த்து இருக்கிங்க… உங்க மனசுல என்ன தான் நினச்சி இருக்கிங்க…” என்று கேட்டதற்க்கு..

செண்பகம்.. “ சித்தப்பு அந்த வீட்டு பெண்ணை தான் அந்த வீட்டை விட்டு போனா என்று இருந்தும்.. சொத்தை இல்ல சித்தப்பு… அவ்வளவு பெரிய இரண்டு சொத்தை தான் என் மாமனாரும் இவள் மாமனாரும் சேர்ந்து வீட்டு பொண்ணுக்கு தூக்கி கொடுக்குறாங்க என்று பார்த்தா..

போன கிழவி இவங்களுக்கு முன்னவே.. நகை கடையை வீட்டு பெண் மேல எழுதி வைத்து போய் இருக்கு… இது தெரிந்து எங்களை எப்படி சும்மா இருக்க சொல்றிங்க..” என்று ஆவேசத்துடன் கேட்கவும்..

“ சும்மா இருக்காதிங்கம்மா சும்மாவே இருக்காதிங்க.. இரண்டு பேரும் வாழா வெட்டியா அவங்க அவங்க அம்மா வீட்டிற்க்கு வந்துடுங்க. உங்க அம்மா வீட்டில் இருக்கும் மருமகளுங்க உங்களை சும்மாவே இருக்க விட மாட்டாங்க..

உங்க மாமியார் வீட்டில் அத்தனை வேலையாட்கள் இருந்தும்… சமையலுக்கு மட்டுமே நீங்க.. அதுவும் முக்கால் வாசி சமையலை உங்க இரண்டு மாமியாரும் முடிச்சு விடுவாங்க..

சமையலுக்கு சும்மா இந்த எடு பிடி வேலை செய்வதற்க்கே அப்படி அலுத்து கொள்வீங்க. வாழாது அம்மா வீட்டிற்க்கு வந்தால் உங்களை சும்மா விடாது வேலைவாங்குவாங்க அப்போ தெரியும்..’ஆ இன்னொன்னும் சொல்லி ஆகனுமா உங்க இரண்டு பேருக்கும் உங்க புருஷன் போல எல்லாம் இல்லை.. உங்க இரண்டு பேரோட அண்ணனுங்க.. தங்கச்சி அப்பா பேச்சை கேட்டு நடக்க. புரிந்து புத்தியோட நடந்தா.. உங்க வாழ்க்கை தப்பிச்சது..” என்று ஒரு தந்தையாக செளமியா செண்பகம் தந்தைமார்கள் புத்தி சொல்லி தான்.. சம்மந்தி வீட்டிற்க்கு கூட்டி சென்றது…

அப்போதுமே அந்த இரு பெண்களுக்கும் ஒரு நம்பிக்கை தான்.. அந்த வீட்டு வாரிசை பெத்து வைத்து இருக்கோம்.. அப்படி எல்லாம் நம்மளை விட்டு விட முடியாது என்று..

ஆனால் பாவம் அந்த பெண்களுக்கு அந்த நம்பிக்கை எல்லாம் தன் பெற்றோர்களுடன் பஞ்சாயத்து செய்ய தன் மாமியார் வீடு வரும் வரை தான்..

அங்கு இவர்களுக்கு முன்னவே மதுரையின் இரண்டு பெரிய தலை சம்மந்தி வீட்டில் அமர்ந்து இருப்பதை பார்த்ததுமே பெண் கொடுத்த தாய் தகப்பனுக்கும், பஞ்சாயத்து பெரிய அளவில் போகும் என்று தான் அவர்கள் எதிர் பார்த்தார்கள்..

ஆனா பாருங்க பேச்சு எல்லாம் பெரியதாக எல்லாம் இழுத்து அடிக்காது சும்மா நச்சு என்று மதிரையின் பெரிய தலையில் ஒருவர்.

“ஆ சட்டு புட்டுன்னு இந்த பொண்ணுங்களை பைசல் செய்யும் வழிய பாருங்க பாண்டியரே… நாளைக்கே நல்ல ஒரு முகூர்த்தம் இருக்கு.. இரண்டு கல்யாணத்தையும் ஒரே மேடையில் வைத்து விடலாம்..” என்று சொல்ல…

அதற்க்கு எந்த வித மறுப்பும் சொல்லாது கதிர் பாண்டியவும் வேலவ பாண்டியனும் தந்தைக்கு பின் கை கட்டி நின்று கொண்டு இருப்பதை பார்த்து பொத்தினாப்பல அமைதியாக நின்று விட ..

இது போன்ற பெண்ணை பெத்த பாவத்துக்கு அந்த பெண்களின் தந்தைமார்கள் தான் காலில் விழாத குறையாக விழுந்து.. பெண்களை அங்கு விட்டு வந்தது..

தனித்து இருக்கும் போது பெண்கள் தன் ஆதங்கத்தை தன் கணவன் மார்களிடம் கேட்டார்கள் தான்…

“அப்படி சுலுவா எங்களை அறுத்து விட்டுட்டு இன்னொருத்திய கல்யாணம் செய்யும் அளவுக்கு போயிட்டிங்கலே.” என்று..

ஆனால் பாருங்க.. அவர்கள் கேட்ட… “ இந்த வீட்டு பெண் வாழ்க்கையை நீ மட்டும் அவ்வளவு ஈசியா கெடுக்க பார்த்தியே அது மட்டும் நியாயமா..? என்று.. பின் இதுவுமே சொன்னார்கள்..

“பார்த்து சூதனமா நடந்தா ஆச்சு…?” என்று கண்டித்து வைத்த தொட்டு இப்போது எல்லாம் செண்பகமும், செளமியாவும் கை அசைவில் காற்று அசைவில் தான் இது போல பேசிக் கொள்வது…

அதே போல் செந்தாழினியை பற்றி அறிந்த விசயத்தில் அவர்கள் இருவரையும் இன்னுமே மூச்சு அடக்கி தான் வைத்து விட்டது எனலாம்..

அதனால் செந்தாழினி தன் கணவனோடு தாய் வீட்டிற்க்கு வந்தால்..

“வா ஆழி…” என்ற வரவேற்க்க..

கணவன் என்ராலெ செந்தாழினிக்கு தனி தான்.. இதில் கணவன் அழைக்கும் அந்த செல்லப்பெயரை இவர்கள் அழைத்ததில் செந்தாழினி..

“நீங்க எப்போவும் போல என்னை இந்த வீட்டு இளவரசி என்று சொல்லுவீங்கலே.. அது வைத்தே கூப்பிடுங்க…” என்றதில் பாவம் பாண்டியன் வீட்டு இரு மருமகள்களும் தான் அய்யோ மாட்டி விடுறாளே என்று வெள வெலத்து போய் விட்டனர்..

செந்தாழினி தாய் வீட்டிற்க்கு வந்து தான் செல்கிறாள்.. ஆனால் தங்குவது என்பது கிடையாது… ஒரு சில உறவுகள் என்ன தான் என்றாலும் ஒரே அடியாக வெட்டி விட முடியாது.. அதனால் இது போன்று பட்டும் படாமலும் இருந்து கொள்ள வேண்டியது தான்.

அதே போல் தான் மகிபாலன் அவன் தாய் வீட்டின் உறவுகளும்.. மகிபாலனை கெளசல்யா அவ்வளவு எளிதாக எல்லாம் தனியே அனுப்பி விடவில்லை…

“எப்படி நீ போகலாம்… ஒரே மகன் என்னை விட்டு போய் விடுவீயா.. ஊரு என்ன பேசும் நம்ம சொந்த பந்தம் உன்னை பத்தி தான் பொண்டாட்டி வந்ததுமே.. பெத்த அம்மாவையும் கூட பிறந்தவங்களையும் கை விட்டு விட்டான் என்று சொல்லுவாங்க.” என்று முதலில் சென்டிமெண்டாக பேசி லாக் செய்து பார்த்து பின் அது முடியாது கோபத்தில் பேசி அதுவும் முடியாது போக கடைசியில் கெளசல்யா…

“ என்ன தான்டா சொல்ற…?” என்று கேட்டதற்க்கு…

மகிபாலன்.. “ என் கடமையை நான் கண்டிப்பா செய்து விடுவேன் மா… மகனா தம்பியா அண்ணனா.. என் கடமையை செய்து விடுவேன்.. அதற்க்கு இந்த வீட்டில் இருந்து தான் செய்ய வேண்டும் என்பது இல்ல..

ஏன்னா மகனா அண்ணனா தம்பியா கடமை இருப்பது போல ஒரு கணவனாவும் எனக்கு ஒரு சில கடமைகள் இருக்கும்மா… அதுக்கு நான் இந்த வீட்டில் இருந்தால், என்னால அதை சரியா செய்ய முடியாது…” என்றவனின் பேச்சில் கெளசல்யா…

“ அப்படி என்னடா உன் பொண்டாட்டி இந்த வீட்டில் பொல்லாத கொடுமையை எல்லாம் அனுபவித்து விட்டாள்…” என்று கேட்டார்..

ஒரு சின்ன விரக்த்தியான சிரிப்பு மகிபாலனிடம் இருந்து வந்தது….

“கொடுமையா. ம்மா இன்னைக்கு அவளுக்கு மூன்றாவது நாளு… கொஞ்ச நேரம் அவள் படுத்து இருந்து இருப்பாளா.? இதே சுதாவுக்கும் மகிளாவுக்கும் இது போல இருந்தா அன்னைக்கு முழுவதும் அவங்களை நீங்க ஒரு வேலையும் செய்ய விட மாட்டிங்க.

அதே போல அந்த சமயத்துக்கு ஏத்தது போல சமையலை செய்து கொடுப்பிங்க.. இன்னும் கேட்டா சுதாவும் மகிளாவும் வேலை செய்து பழகினவங்க.” என்ற மகனின் பேச்சில் கெளசல்யா மற்றதை எல்லாம் விட்டு விட்டார்.

கடைசியாக மகி பாலன் சொன்ன… செந்தாழினிக்கு வேலை செய்து பழக்கம் இல்லை என்று மகன் சொன்னதை மட்டும் கெட்டியாக பிடித்து கொண்டவராக பேச..

ஒரு சிலரை கடைசி வரை திருத்த முடியாது.. அதில் இவரும் ஒருவரே… என்று நினைத்து மனைவியுடன் தனித்து வந்தவன்.. மகனுக்கு உண்டான கடமையும் செய்து கொண்டு தான் இருக்கிறான்..














 
Active member
Joined
Aug 16, 2024
Messages
267
கௌசல்யா பெண்கள் மூலமாக கொஞ்சம் மாறினால் தான் உண்டு.
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Kowshalya innum thirunthala… 😏😏😏
Avalukku innum punishment podhathu… antha veettu vaadagai inimel ava kaiyila kidaikka koodathu
 
Top