அத்தியாயம்…3
வெற்றி மாறன் கெஸ்ட் அவுசில் வேலை செய்பவர்களிடம் தாங்கள் வருவதை முன் கூட்டியே தெரியப்படுத்தி விட்டான் போல்.. இதோ தங்களை வர வேற்று அமர வைத்து பால் பழம் கொடுத்து என்று அனைத்தும் அந்த தம்பதியர் செய்து கொண்டு இருந்தாலும். அந்த தம்பதியரில் பெண்மணி தன்னை ஒரு வித யோசனையுடன் கூர்ந்து பார்ப்பதும்..
பின் ஒரு வித பயத்துடன் அந்த கெஸ்ட் அவுசின் முகப்பை பார்ப்பதுமாக இருந்தார்… ஸ்வர்ணாம்பிகைக்கு தான் அந்த பெண்மணி அப்படி தன்னை பார்ப்பது ஒரு மாதிரியாக இருந்தது…
அதனால் இவர் கண் முன் அமர்ந்திருப்பதில் இருந்து சிறிது நேரம் தப்பித்தால் போதும் என்று இருக்க.. கூடவே காலையில் ஒரு தோழிக்கு திருமணம் என்று சொல்லி தான் ஸ்வர்ணாம்பிக்கை வீட்டில் இருந்தே இந்த பட்டு புடவையை கட்டிக் கொண்டு வந்தது…
ஐந்து மணி நேரமாக இந்த புடவையை கட்டி கொண்டு இருப்பதும் அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.. இந்த புடவையை மாற்றி விடவும்… கூடவே கொஞ்சம் ஒய்வும் எடுத்தால் தான் ஆச்சு என்று அவள் உடல் நிலை அவளுக்கு எடுத்து உரைக்க…
அதனால் பெண்ணவள் மெல்ல கணவன் அருகில் நகர்ந்தமர்ந்து… அவன் தான் மற்றவர்கள் முன் தன்னை மாறன் என்று அழைக்க கூடாது சொல்லி விட்டானே…
அதனால் பெண்ணவள் பழைய காலம் போலவே… கை பேசியில் ஏதோ பார்த்து கொண்டு இருந்தவனின் தொடையை தன் ஒற்றை விரல் கொண்டு சுரண்டி…. “ ஏங்கே…” என்று இவள் அழைத்தது தான் தாமதம்..
சட்டென்று அமர்ந்திருந்தவன் எழுந்து விட்டு.. தங்களையே ஆர்வமாக பார்த்து கொண்டு இருந்த வேலை செய்யும் பெண்மணியிடம்..
டீப்பாவின் மீது இவர்கள் பருகி விட்டு வைத்து இருந்த பால் கோப்பையை சுட்டி காட்டி… “ இதை எடுத்துட்டு போ…” என்று அந்த பெண்மணியிடம் கடுமையாக சொன்னான். கடுமையாக சொன்னான் என்பதை விட எரிந்து விழுந்தான் என்று தான் சொல்ல வேண்டும்..
அந்த பெண்மணியும் உடனே பணிந்து போய்… “மன்னிச்சிக்கங்கோ ஐய்யா….” என்று சொல்லி விட்டு அந்த பால் கோப்பையை எடுத்து கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடி விட்டாள்..
ஒரு நிமிடம் ஸ்வர்ணாம்பிக்கை மாறன் சொன்ன விதத்திலும், அந்த குரலிலும் அதிர்ந்து தான் போய் விட்டாள்.. என்ன இது இப்படியா வேலை செய்பவர்களை அதட்டுவது…? என்ன தான் தங்களிடம் வேலை செய்தாலும் இப்படி பேசலாமா…? கூடவே மாறனின் அந்த முகபாவனை…
இந்த ஆறு மாத காலத்தில் ஸ்வர்ணாம்பிக்கையிடம் மாறன் இது போலான குரலோ முகமோ காட்டியது கிடையாது.. இது தப்பு என்று கணவனிடம் சுட்டி காட்ட வேண்டும் என்று கணவனிடம் பெண்ணவள் ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் முன்பே.
வெற்றி மாறன்.. “ என்ன இது பழக்கம் ஸ்வர்ணா…. மத்தவங்க முன் இப்படி ஓட்டிட்டு உட்காருவது.. இது எல்லாம் நம்ம வீட்டில் பழக்கம் கிடையாது…” என்ற அவனின் அதட்டலில்… பெண்ணவள் சிலையாகி போய் விட்டாள்.. காரணம் வெற்றி மாறன் அந்த வேலை செய்யும் பெண் மணியிடம் பேசிய முறையில் தான் இவளிடமும் பேசியது…
பின்… “என்ன விசயம்… எதுக்கு என் தொடையை சுரண்டுன…?” என்று அதே குரல் மாறாது கேட்டவனுக்கு பெண்ணவள் பதில் அளிக்கவில்லை…
இப்போது பெண்ணவளுக்கு உடலின் கசகசப்பையும் மீறி மனது கசங்கி போனது.. உடல் சோர்வோடு உள்ளம் சோர்ந்தது போலான நிலை..
கூடவே தன் அப்பா அம்மா சொன்ன.. பிறந்ததில் இருந்தே வளர்ந்த முறை ஒன்று உள்ளது… அதை மாற்ற முடியாது… இப்போது அது பெண்ணவளுக்கும் லேசாக புரிவது போலானது..
ஆறு மாதமாக காதலியாக இருக்கும் போது புரியாத விசயங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கழுத்தில் தாலி ஏறிய பின் இந்த இரண்டு மணி நேரத்தில் புரிய ஆரம்பித்து இருந்தது..
இப்போது பெண்ணவளின் முகத்தை பார்த்த வெற்றி மாறன் என்ன நினைத்தானோ.. இவள் பக்கத்தில் அமர்ந்து மனைவியின் கை பிடித்து கொண்டவனை நிமிர்ந்து பார்த்த ஸ்வர்ணாம்பிகை..
“இப்போ மத்தவங்க பார்க்க மாட்டாங்கலா ….?” என்று ஒரு மாதிரி குரலில் கேட்டவளிடம்..
“இல்ல கோல்ட். பாரு நம்மை சுத்தி யாருமே இல்ல.. இவங்க வேலைக்காரங்க.. நான் சொன்னதும் போயிட்டாங்க. ஆனா நம்ம வீட்டிற்க்கு போனா அங்கு எல்லோர் முன்னாடியும் இது போல எல்லாம் பக்கத்தில் எல்லாம் உட்கார கூடாது… புரியுதா..?” என்று சொன்ன வெற்றி மாறனின் இந்த பேச்சும் குரலும் முன்பு பெண்ணவளை காதலிக்கும் போது இருப்பது போல் தான் இருந்தது..
ஆனால் பெண்ணவளுக்கு தான் இந்த பேச்சும் அவளுக்கு ரசிக்கவில்லை. அதே போல அவன் சொன்ன விசயமும் பிடிக்கவில்லை..
கணவன் மனைவி பக்கத்துல கூட உட்கார கூடாதா.? என்ன இது.? தன் வீட்டில் தந்தைக்கு பிறந்த நாள் வந்தால் அன்னையும்.. அன்னைக்கு பிறந்த நாள் வந்தால் தந்தையும் தன் முன்னும் தன் அண்ணன் முன்னும் நெற்றியில் இதழ் வைத்து எடுப்பார்கள்..
அதை பார்த்தவளுக்கு அவர்களின் அன்பும் காதலும் தான் தெரியும்… வேறு எதுவும் தெரியாது… ஆனால் இங்கு என்ன இது…? அதுவும் இதை எல்லாம் செய்ய கூடாது என்று சொல்பவன் கணவன் என்ற பட்சத்தில், திருமணம் ஆன அன்றே.. தன்னால் தாக்கு பிடிக்க முடியுமா ….? என்ற பயம் பெண்ணவளுக்கு உண்டாயிற்று..
வெற்றி மாறன் மீண்டும் என்ன என்று கேட்ட போது ஸ்வர்ணாம்பிகைக்கு எதை பற்றியும் யோசிக்காது கொஞ்சம் படுத்து எழுந்தால் போதும் என்பது போல் ஆகி விட்டது.
அதில்.. “ இல்ல ட்ரஸ் மாத்தனும்.. அதோட ரொம்ப டையாடா இருக்கு.. ரெஸ்ட் எடுக்கனும்.. இங்கு எந்த ரூமில் தங்கனும் என்று சொன்னா..” என்று சொன்ன மனைவியின் பேச்சை வெற்றி மாறன் முடிக்க கூட விடவில்லை..
“என்ன கோல்ட் விளையாடுறியா….?” என்று கேட்டான்.. இதை கேட்ட விதம் முன்பு போல் கோபமாகவும் இல்லை.. அதன் பின்பு.. தன்மையாக பேசிய பேச்சு போலவும் இல்லை… குரலை உயர்த்தி மட்டும் கேட்டான்…
ஆனால் அவன் கேட்டதில் நம் ஸ்வர்ணாம்பிக்கை தான் இதில் என்ன விளையாட்டு இருக்கு என்பது போல் அவனை நிமிர்ந்து பார்த்தது..
பெண்ணவளின் இந்த பாவனையில் மீண்டும்.. தன் தலையை கோதிக் கொண்டவனாக மனைவியின் கை பற்றி இன்னுமே பக்கத்தில் அமர்ந்த வெற்றி மாறன்..
“கோல்ட்.. நாம பெரியவங்களுக்கு தெரியாம மேரஜ் செய்து இருக்கோம்…” என்று கணவன் சொன்னதும்…
ஸ்வர்ணாம்பிக்கை… “ நீங்க தானே இன்னைக்கே கல்யாணம் செய்தா தான் ஆச்சு… என்று சொன்னது..”
இப்போது பெண்ணவளுக்கும் கோபம் வந்து விட்டது.. அதை முகத்தில் காட்டிய வாறு தான் கேட்டது.
அதற்க்கு வெற்றி மாறன்.. “ ஆமாம் நான் தான் இன்னைக்கே நம்ம கல்யாணம் நடக்கனும் என்று அடம் பிடிச்சேன்…” என்று சொன்னவன்..
பின்…. “ நான் இன்னொன்னும் சொன்னேன்.. நம்ம கல்யாணம் இன்னைக்கு நடந்தா உண்டு.. இல்லேன்னா ப்ரேக்கப் செய்துக்கலாம்… ஏன்னா எனக்கு மனைவியா ஆகும் ஒரு பெண்.. இன்னொருவன் முன் நிற்க கூடாது…. உனக்கு இன்னைக்கு மேரஜ் செய்துக்க விருப்பம் இல்லேன்னா நான் உனக்கு கொடுத்த இரண்டாவது சாய்ஸ் எடுத்துட்டு போக வேண்டியது தானே…” என்று அவனும் சூடாக தான் கேட்டான்..
இப்போது பெண்ணவள் மெளனம் காத்தாள்.. ஆம் அவன் சொல்வது உண்மை தான்… எனக்கு வர போகும் மனைவி இன்னொருவன் முன் நிற்க கூடாது… ப்ரேக்கப் செய்துட்டா நீ யாரோ நான் யாரோ.. அப்புறம் நீ யார் முன் நின்னாலுமே என்னை அது பாதிக்காது என்று சொன்னான் தான்..
ஆனால் இவளாள் தான் எப்படி முடியும்… என்று இருந்தது… பெண்ணவளின் இந்த மெளனத்தை பார்த்த வெற்றி மாறன் என்ன நினைத்தானோ…
“தோ பார் கோல்ட்.. நாம லவ் பண்ணி மேரஜ் செய்து இருக்கோம்…. நாம ஒன்னா இருந்து தான் மத்தவங்களை கன்வீன்ஸ் செய்யனும்.. நாமலே ஒருவருக்கு ஒருவர் இப்போது பேசி கன்வீன்ஸ் செய்துட்டு இருக்க கூடாது புரியுதா…
இப்போ என் வீட்டில் இருந்தும் உன் வீட்டில் இருந்தும் வந்துட்டு இருக்காங்க.. நீ என்ன என்றால், நாம செய்த இந்த மேரஜ் தப்பு என்பது போல பேசுற… ரெஸ்ட் எடுக்கனும் என்று சொல்ற…?” என்று கேட்டான்..
ஸ்வர்ணாம்பிகைக்கு கணவனின் மற்ற பேச்சை எல்லாம் விட்டு விட்டு.. அமர்ந்து கொண்டு இருந்தவள் சட்டென்று எழுந்து விட்டு.
“என்ன சொல்றிங்க…? என் வீட்டில் இருந்து வராங்கலா…. ஏன்..?” என்று கேட்டவள்.. கணவனின் பார்வையில்..
“இல்ல அவங்களுக்கு எப்படி தெரியும்..?” என்று கேட்டாள்..
ஏன் என்றால் ஸ்வர்ணாம்பிகை காலையில் வீட்டில் இருந்து கிளம்பும் போது தன் அம்மாவிடம் ..
“மாம் என் பிரண்ட் மேரஜிக்கு போறேன்… அது முடித்து கொண்டு கைய்யோடு ஒரு ட்ரஸ் எடுத்துட்டு போறேன்.. அங்கு இருந்தே ஆபிசுக்கு சென்று விடுவேன்.. இன்னைக்கு சீக்கிரம் கனக ராஜ் சார் வர சொல்லி இருந்தார்..” என்று சொல்லி தான் கிளம்பியது..
அதனால் இன்று மாலை வரை தனக்கு திருமணம் ஆனது அவர்களுக்கு தெரிய போவது இல்லை என்று தான் நினைத்தது..
கூட ஏற்கனவே மனது குழம்பி போய் இருக்கும் இந்த சமயத்தில், தன் வீட்டவர்களையும் உடனே எதிர் கொள்ள எல்லாம் அவளிடம் சக்தி இல்லை…
அதனால் ஸ்வர்ணாம்பிகை.. “ அவங்களுக்கு எப்படி தெரியும் …?” என்று கேட்டாள்..
வெற்றி மாறனும்.. “ தெரியப்படுத்தி தானே ஆகனும்… அது தான் இன்ஸ்டாகிராம் பேஸ் புக்… அப்புறம் மீடியாவுக்கும் நம்ம போட்டோவை அனுப்பி விட்டேன்…” இதை மிக கூலாக தான் சொன்னான்..
இன்று ஒரு நாளிலேயே இவனின் பேச்சுக்கும், செயலிலும் எத்தனை முறை தான் அதிர்வது என்று ஸ்வர்ணாம்பிகையும்… அதிராது தான்..
“எங்க வீட்டவங்க கிட்ட சொல்லும் முன் என் கிட்ட கேட்டு இருக்கனும் தானே….?” என்று கேட்டாள்..
அதற்க்கு வெற்றி மாறன்… “ எப்படியாவது சொல்லி தானே ஆக வேண்டும்…?” என்று கேட்டவன் பின் ஒரு மாதிரியான குரலில்..
“ஏன் உன் வீட்டில் சொல்லாது விட நினச்சியா…. இந்த சினிமாவில் காட்டுவாங்கலே.. வீட்டுக்கு தெரியாது கல்யாணம் செய்துட்டு அவங்க அவங்க வீட்டுக்கு போவது போல.. அது போல செய்யலாம் என்று நினச்சியா…?
நீ எப்படி நினச்சியோ.. ஆனா நான் இந்த மேரஜ் உன்னோடு செய்து கொண்டது.. நாம வாழ. ஊருக்கு தெரிந்து வாழ….” என்று சொன்னவனிடம் ஸ்வர்ணாம்பிகை ஒன்றும் பதில் சொல்லவில்லை..
போதுமடா சாமீ என்பது போல் அமர்ந்து விட.. ஆனால் இப்படியும் உன்னை அமர விட மாட்டேன்… என்பது போல முதலில் வெற்றி மாறன் குடும்பத்தினர்.. அனைவரும் வந்து விட்டனர்..
அந்த கெஸ்ட் அவுஸ் ஹாலே அத்தனை பெரியது.. அதில் முழுவதுமே நிறைந்தது போல் தான் வந்தவர்களின் எண்ணிக்கை இருந்தது..
பார்த்த உடனே ஸ்வர்ணாம்பிகை பக் என்று ஆகி விட்டது..தன்னால் அமர்ந்து கொண்டு இருந்தவள் எழுந்து நின்று கொண்டவள் கணவனின் பின்னும் ஒளிந்து கொள்ள முயன்றாள்..
ஆனால் எங்கு விட்டான் அவன்… மெல்ல. “ என்ன கோல்ட்.. கொஞ்சம் தள்ளி நில்..” என்று முனு முனுக்க… தள்ளி நில் என்று சொன்னவன் அவனே தள்ளியும் நின்று கொண்டான்.
முதலில் வெற்றி மாறனின் தாத்தா ராஜ சுந்தர மாறன் தான்.. ஸ்வர்ணாம்பிகையை காட்டி..
“இந்த பெண் நம்ம வீட்டிற்க்கு ஒத்து வராதுன்னு நான் சொன்னேன் தானே….?” என்ற அவரின் கேள்வியில்..
ஸ்வர்ணாம்பிகை. திரும்பி தன் கணவனை பார்த்தாள்.. இவன் தங்களின் காதலை வீட்டில் சொன்னான் என்பதே அவளுக்கு புதிய செய்தி.. இதில் இவன் சொல்லி இவர்கள் என்னை மறுத்தது.. எப்படி இவளுக்கு தெரியும்..
இவர்கள் தன்னை மறுத்தது எல்லாம் அவளுக்கு அதிர்ச்சியாக வில்லை.. தெரியும்.. அவர்கள் சொந்தத்திற்க்குள் தான் திருமணம் செய்வர் என்று.. தானுமே ஒரு வகையில் சொந்தம் தான்..
ஆனால் அவர்கள் மணம் முடிப்பது இன்னும் நெருங்கிய சொந்தமான சொந்த அத்தை பிள்ளைகள்.. தாய் மாமன் பிள்ளைகள் இப்படியாக தான் திருமணம் செய்வர்.. அதனால் அதிராது தான் இருந்தாள்..
ஆனால் வெற்றி மாறனின் தாத்தா அடுத்து சொன்ன…
“இந்த பெண் அம்மாவே அந்த காலத்திலேயே வேலை பார்க்கும் இடத்தில் காதலித்து கிரிதரனை கட்டிட்டு வந்தா…. அவள் பெண்… எப்படி இருப்பாள் என்று சொல்லி தானே நான் வேண்டாம் என்று சொன்னேன்..” என்ற பேச்சு இவளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது என்றால்,
அதற்க்கு இவள் கணவன் சொன்ன.. “ தாத்தா கோல்ட் அப்படி எல்லாம் இல்லே தாத்தா… இனி . நம்ம குடும்பத்திற்க்கு ஏத்தது போல இருப்பாள்..” என்ற பேச்சு ஸ்வர்ணாம்பிக்கைக்கு ஆத்திரத்தை வர வழைத்தது….