Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

காதல் கொண்டு கரம் பிடித்த பெண்ணவளே....6

  • Thread Author
அத்தியாயம்….6..

ஸ்வர்ணாம்பிக்கை நேற்று வரை கூட தன் வாழ்க்கை இப்படி ஆகும் என்று யோசித்து இருந்து இருக்க மாட்டாள்.. ஏன் இன்று காலை அவள் வெற்றி மாறனை திருமணம் செய்து முடித்த பின் கூட தன் அன்னை தந்தை கோபப்டுவார்கள் எப்படி அவர்களை சமாளிக்க வேண்டும் என்று தான் அவள் அதிகம் யோசித்தது..

மாறன் குடும்பத்தை பற்றி தெரிந்ததால், பழமை வாதியாக இருப்பதினால் சின்ன சின்ன பிரச்சனைகள் வர கூடும்… பொறுத்து பார்க்கலாம்.. முடியாது போனால் வெற்றி மாறனோடு தனிக்குடுத்தினம் சென்று விடலாம்..

இது வரை மாறன் குடும்பம் கூட்டு குடும்பம் தான்.. அதுவும் இரண்டு பெண்டாட்டியோடு ஒரே வீட்டில் வாழும் அளவுக்கு கூட்டு குடும்பம்… தனித்து இது வரை யாரும் சென்றது கிடையாது… ஆனால் அதே போல் தானே வெளியில் திருமணம் செய்து கொடுத்தது கிடையாது…

கூட காதல் திருமணமே கெட்ட வார்த்தை என்று சொன்ன குடும்பத்தில் இருக்கும் வெற்றி மாறன் தானே தன்னை விரும்பி திருமணமும் செய்து கொண்டது…

அப்போது காதல் திருமணம் நடக்கும் என்றால், தனி குடித்தனமும் நடக்கும் தானே… தன் காதலின் மீது இருந்த நம்பிக்கையை விட தன் காதல் கணவனின் மீது அவள் அதிக அளவு நம்பிக்கை வைத்தாள்…

ஆனால் இன்று காலையில் நடந்த விசயங்களில் அவளின் அந்த நம்பிக்கையை திருமணம் ஆன முதல் நாளே ஆட்டம் காண வைத்தது… யாரை நம்பி இந்த திருமணம் செய்து கொண்டானோ அவனே… அவளின் வீட்டவர்கள் பேசிய அத்தனை பேச்சுக்கும்..

“அவங்க நம்பிக்கையை நாம உடச்சி இருக்கோம்… கோல்ட்…. அதுல கொஞ்சம் திட்ட தான் செய்வாங்க….” இது தான் அவன் பேச்சாக இருந்தது…

அதில் வீட்டவர்களை எதிர்த்து செய்த இந்த திருமணமே வேண்டாம் என்று சொல்லி விட கூட முடியாது மாட்டிக் கொண்ட உணர்வோடு தான் இதோ மாமியார் வீட்டிற்க்கு வந்தாள்..

அனைத்தும் இங்கும் முறையாக செய்தார்கள். இதே முன் என்றால், அந்த வீட்டவர்கள் தன்னை பார்க்கும் அந்த பார்வைக்கு கணவன் பின் நின்று கொள்வாள்.. இப்போது அவளுக்கு அனைவரையும் விடவும் கணவன் மீது தான் அவளுக்கு அதிகம் கோபம் வந்தது..

நான் உன்னை நம்பி தானே வந்தேன்.. என்னை கெளரவமாக பார்த்து கொள்வது உன் கடமை தானே… பொறுத்துக்கோ பொறுத்துக்கோ என்றால், எது வரை பொறுத்து கொள்ள முடியும்..

அதுவும் அனைத்து சம்பிராதயங்கள் முடிந்து வெற்றி மாறன் அறையை காட்டிய அந்த வீட்டின் சின்ன பாட்டி வைஜெயந்தி…

“அது தான் வெற்றி ரூம் போய் ஒய்வு எடு….” என்று சொன்னதோடு விடாது..

அடுத்து… “ அதுக்கு அத்துக்கு ஒரு நேரம் நாள் இருக்கு…. அது படி இரு…” என்று சொன்னவர்.. அதோடாவாவது விட்டாரா..

இன்னுமே. “ ம் யாருக்கு தெரியும்.. அதுவுமே…” என்று சொல்லி இழுத்து நிறுத்தினால், அதற்க்கு என்ன அர்த்தம்.. அதில் தான் அந்த பாட்டியை இல்லை இல்லை கிழவியை முறைத்து பார்த்து விட்டேனா…

அதற்க்கு அறைக்கு வந்ததும்.. வெற்றி மாறன்… “ என்ன கோல்ட்.. உன் கிட்ட இருந்து நான் இதை எதிர் பார்க்கல… அவங்க இந்த வீட்டின் பெரியவங்க…. நீ அவங்களை அப்படி முறைக்கிற..” என்று சொன்னவன் நல்ல வேள யாரும் பார்க்கவில்லை என்று சொன்னவனிடமும் ஸ்வர்ணாம்பிக்கை தன் கோபம் முகத்தை தான் காட்டியது..

மூச்சு வாங்க. “ என்னது பெரியவங்கலா..? அவங்க பேசினது பெரியவங்க பேசுவது போலவா இருக்கு… அவங்க என்ன சொன்னாங்க உங்களுக்கு புரியுதா…?” என்று கேட்க.

இதற்க்கு மட்டும் தன் தலை கோதி ஒரு விதமாக மனைவியை பார்த்த வெற்றி மாறன்.. முன் இருந்த கோபம் முகம் காட்டாது.. இவர்கள் இருவரும் காதலிக்கும் போது இருந்த அந்த முக பாவனையோடு மனைவியை நெருங்கியவன்…

“ என்ன செய்யிறது கோல்ட்.. எப்போவும் வீட்டு பெரியவங்களுக்கு மதிப்பு மரியாதை கொடுக்கும் பெரிய பேரன்… யார் கிட்டேயும் சொல்லாது இப்படி திருமணம் செய்தா …. அவங்க நினைக்க தானே தோன்றும்.. நம்ம பேரன் எத்தனை உன் கிட்ட மயங்கி இருக்கான் என்று…. அப்போ அந்த மயக்கத்தில் நான் ஏதாவது செய்து இருப்பேன் என்று நினைக்கலாம்…” என்று காதல் மன்னனாக பேசும் கணவனையே ஸ்வர்ணாம்பிக்கை ஒரு மாதிரி… இயலாமையாக பார்த்து கொண்டு இருந்தாள்..

பெண்ணவளின் இந்த பார்வையில் வெற்றி மாறன்… என்ன நினைத்தானோ…

“தோ பார் கோல்ட்.. ஆரம்பத்தில் கொஞ்சம் இங்கு பிரச்சனை இருக்கும் தான்.. உனக்கு பொருந்தி போவது கூட கஷ்டம் தான்.. நான் இல்லேன்னு சொல்லலே… ஆனா அப்போ எல்லாம் நீ நம்ம காதலை நினை.. புரியுதா.. எல்லாம் சரியா போகும்…” என்று சொன்னவன் பின் அடுத்து மனைவியை பேச விடாது வாய் அடைத்தவன் பின் நிமிரும் சமயம்..

பெண்ணவளின் உதட்டில் இருந்த உதட்டு சாயம் அனைத்தும்… ஆணவனின் உதட்டின் மீது இருந்தது…

பின் அவன் அந்த அறையை விட்டு செல்லும் போது … “ நான் இப்போ உனக்கு கொடுத்தது தான் நியாபகத்தில் இருக்கனும்… யோசிக்கனும் புரியுதா….?” என்று கேட்டும் பெண்ணவள் வெட்கம் படாது தன்னையே முறைத்து கொண்டு இருப்பதை பார்த்தவன்..

ஒரு பெரும் மூச்சுடன்… “ நமக்கு இன்னைக்கு தான் மேரஜ் ஆச்சு கோல்ட்… அதை என்னை பீல் பண்ண விடு…. என்று சொல்ல..

இதற்க்கு மட்டும் பெண்ணவள் வாயை திறந்தாள்…

“உங்களுக்கு இன்னைக்கு மேரஜ் ஆச்சுன்னா யாரோடு…. என்னோடு தானே.. அப்போ என்னை யார் பீல் பண்ண விடுறா…?” என்று கேட்டவளையே ஒரு மாதிரி பார்த்தவன்.

பின்.. “ கவலை படாதே இன்னைக்கு நையிட் பீல் பண்ண விடுறேன்..” என்று சொன்னவனிடம்.

“நினைப்பு தான் போங்க போங்க…. கீழே என்னை இந்த வீட்டை விட்டு அனுப்ப என்ன என்ன திட்டம் போடுறாங்க என்று தெரியல.. இதுல சாருக்கு பஸ்ட் நையிட் நடக்கும் என்று வேறு நம்புறாரு…

நம்பிக்கை இருக்கலாம்.. ஆனால் ஓவர் நம்பிக்கை. ம் ம்…” என்று ஒரு வித கிண்டலாக பேசியவளிடம் சொன்னான்..

“இந்த வீட்டில் யாரையும் அப்படி வாழாது விட மாட்டாங்க.. அது இந்த வீட்டு பழக்கம் கிடையாது….இன்னொரு முறை இது போல கிண்டல் பேச்சு எல்லாம் பேச கூடாது… ஸ்வர்ணா.. நான் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்…” என்று முன் பேச்சும் போல் இல்லாது தான் பேசி விட்டு சென்றது.

கணவன் பேச்சில் ஸ்வர்ணாம்பிக்கை சொல்ல நினைத்தால் தான்..

“நீங்கள் ஒரே மாதிரி இல்லை தான்… காதலிக்கும் போது ஒரு முகமும்… இப்போது வேறு முகமும் தான் காண்பிக்கிறிங்க..” என்று சொல்ல தான் நினைத்தாள்.. ஆனால் சொல்லவில்லை.

காரணம் அவளுக்கே மனதில் ஒரு வித பயம்… இருந்தது… அதுவும் மாறன் குடும்பத்தை மீறிய தன் திருமணத்தினால் தன் அண்ணன் நிச்சயத்த பெண்ணோடான திருமணம் நின்று விட்டது என்றதில் பெண்ணவளுக்கு குற்றவுணர்ச்சியும்..

அதோடு கூட அண்ணனுக்கு திருமணம் ஒன்று நடக்க வேண்டும் என்றால், தான் இங்கு நல்லப்படியாக இருந்தால் தான் உண்டு என்பது போல் அம்மா பேசிய பேச்சில் பெண்ணவள் கணவனின் பேச்சுக்கு பதில் அளிக்காது அமைதியாகி விட்டாள்…

பின் யோசித்தவள் ஒரு முடிவோடு தன் அண்ணனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை தொடர்பு கொண்டாள்… வருங்கால அண்ணி என்று இவளுமே இரண்டு முறை அண்ணனின் வருங்கால மனைவியிடம் பேசி இருக்கிறாள்…

ஸ்வர்ணாம்பிக்கை அந்த பெண்ணுக்கு மூன்று முறை அழைத்தும் அந்த பக்கம் எடுக்கவில்லை.. பின் மெசஜில் ப்ளீஸ் போனை எடுங்க என்று சொன்ன பின் சிறிது நேரம் கழித்து அந்த பெண்ணே தான் ஸ்வர்ணம்பிக்கைக்கு அழைத்தது..

அழைத்தவள் அவளே… “ என்ன அம்பிக்கை இப்படி செய்துட்ட….?” என்று ஆதங்கத்துடன் கேட்டது தான்..

ஆனால் ஸ்வர்ணாம்பிக்கையோ… “ நான் செய்ததை விடுங்க அண்ணி.. நீங்க என்ன செய்யிறிங்க.. என் இங்கு கல்யாணம் செய்ததினால உங்க கல்யாணத்தில் என்ன பிரச்சனை எனக்கு புரியல அண்ணி…” என்று ஆதங்கத்துடன் கேட்டவளிடம்…

இவள் அண்ணனுக்கு நிச்சயம் செய்த பெண்ணான ஸ்வேதா…. “ எங்க ஒரு சில பிசினஸ் அவங்களை வைத்து தான் இருக்கு அம்பிகை.. அதோடு என் அக்காவை அவங்க பங்காளி வீட்டுக்கு தான் கொடுத்து இருக்கு.. இன்னுமே நம்ம உறவு அவங்க சொல்றது தான் கேட்பாங்க..” என்று ஸ்வேதா சொல்ல சொல்ல..

இது என்ன …? அவளுக்கு மாறன் குடும்பத்தை பற்றி தெரிந்த விசயம் என்ன தான் படித்து பணம் இருந்தாலுமே பழைய பஞ்சாங்கம்.. பெண்கள் ஆண்களுக்கு கீழ் என்பது போலான எண்ணம் இது தான் நினைத்து கொண்டு இருந்தால், ஆனால் ஸ்வேதா சொல்வதை பார்த்தால், உறவு முறையில் இருக்கிறவங்க எல்லோருமே… இவங்க பேச்சு தான் கேட்டு நடக்கனும் என்று ஒரு கட்ட பஞ்சாயத்து செய்வது போல இது என்ன அராஜகம்..? என்று இவள் நினைத்து கொண்டு இருக்கும் போதே..

ஸ்வேதா…. “எனக்கு உங்க அண்ணனை கல்யாணம் செய்ய தான் விருப்பம் அம்பிகை….” என்ற பேச்சில்..

“அப்புறம் என்ன நான் என் அண்ணன் கிட்ட பேசுறேன்…” என்று இவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே ஸ்வேதா…

“ஆசை தான்… ஆனால் பெரியவங்க விருப்பம் இல்லாது முடியாது அம்பிகை…எனக்கு உன் அளவுக்கு எல்லாம் தைரியம் கிடையாது… எனக்கு என் அப்பா அம்மா கெளரவமும் முக்கியம் எனக்கு ” என்று விட்டாள்..

அவளின் இந்த பேச்சு அவளை குத்துவது போல் தான் இருந்தது… முன் போல். முன் போல் என்றால் மாறன் குடும்பத்திற்க்கும் தன் குடும்பத்திற்க்கும் இருக்கும் பிரச்சனை தெரியாது… இருந்து இருந்தால் ஸ்வேதாவை எதிர்த்து கூட பேசி இருந்து இருப்பாள் தான்.

ஆனால் இப்போது அதுவும் அவள் கண் முன் சுந்தர தாத்தா பேச பேச தன் வீட்டவர்கள் தலை குனிந்து நின்றது தான் கண் முன் வந்து நின்றது.. தன்னால் தானே தன் அப்பா அம்மா அண்ணாவுக்கு இந்த தலை குனிவு என்று.. அதில் இவள் அமைதியாகி போக..

ஸ்வேதா பேசினாள்… “ அபிக்கை நீ அங்கு நல்ல மாதிரி நடந்தா. அந்த சுந்தர தாத்தா என் அப்பா கிட்ட ஏதாவது பேசலாம்.. அம்பிகை.” என்று சொன்னவளுக்கு..

“ம் சரி…” என்று தான் சொன்னாள்.. ஆனால் நல்ல விதமாக எப்படி நடப்பது…

சொல்லி தந்தார்கள்.. அவர்கள் தினம் தினம்.. பெண்கள் இப்படி தான் உட்காரனும்.. சாப்பிடனும்… ஆம்பிள்ளைங்க முன் பேச மூடாது… இப்படி பல பல விசயங்கள் ஒவ்வொரு நாளும் அவளுக்கு ஒவ்வொரு விதமாக தான் அமைந்தது..

அந்த வீட்டவர்கள் நடந்து கொள்வதை பார்த்து நாம எந்த நூற்றாண்டில் வாழ்கிறோம் என்பதே அவளுக்கு சந்தேகமாகி விட்டது..








 
Well-known member
Joined
May 11, 2024
Messages
182
அம்பிகா தன் அண்ணன் திருமணதிற்காக அடங்கி போவது எத்தனை நாள் 🤔🤔🤔அவள் மன நிலைமை 🤔🤔🤔🌺🌺🌺
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
214
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
மண்குதிரைய நம்பி ஆத்தைகடக்க ஏறுன கதையா போச்சே
 
Top