Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

காதல் கொண்டு கரம் பிடித்த பெண்ணவளை....1

  • Thread Author
அத்தியாயம்….1.

சென்னையில் முக்கிய பகுதியில் இருக்கும் அந்த முருக கோயிலில் தான் நம் கதையின் நாயகி ஸ்வர்ணாம்பிகையும், நாயகன் வெற்றி மாறனும் கழுத்தில் மாலையோடு நின்று கொண்டு இருந்தனர்…

பார்த்த உடனே தெரிந்து விடும் அங்கு இப்போது நடக்க போவது திருமணம் என்பது.... கூடவே இது ஒரு காதல் திருமணம் என்பதையும் கிரகித்து கொள்ளலாம்…

காதல் திருமணம் என்றால், உடனே அவர்கள் பக்கத்தில் யாரும் இல்லாது எல்லாம் இல்லை.. இருந்தனர்.. அனைத்து வயதுடயோரும் ஏதோ அலுவலகத்திற்க்கு வந்து இருப்பது போல் தான் வந்து இருந்தனர்..

ஆம் உண்மையில் வந்தவர்கள் அனைவரும் வெற்றி மாறனிடம் வேலை செய்பவர்கள் தான்… காலையிலேயே தன் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரான்ச் ஊழியர்களின் பேசிக்கு மட்டும் வெற்றி மாறனின் உதவியாளர் விவேக் பாவம் எந்த விவேகமும் இல்லாது தான் தன் பாஸ் கட்டளைக்கு இணங்க ஒரு மெசஜை தட்டி விட்டான்..

“இந்த கோயிலுக்கு இந்த நேரத்தில் அனைவரும் வந்து விட வேண்டும்.” என்று.. இவனுமே அதே நேரம் வெற்றி மாறன் சொன்னதிற்க்கு இணங்க சென்றான்… அனைவரும் நினைத்தது போல் தான் அவனுமே இன்று வெற்றி மாறனின் பிறந்த நாள் அதற்க்கு தான் அழைத்தாரோ என்று தான் நினைத்தது..

ஆனால் அங்கு சென்று பார்த்த போது தான் தெரிந்தது.. வெற்றி மாறன் தன் பிறந்த நாளையே திருமண நாளாக மாற்ற உள்ளான் என்பது..

வெற்றி மாறன் திருமணத்திற்காக நான் தான் அனைவருக்கும் மெசஜில் சொன்ன இந்த விசயம் பாஸோட தாத்தா ராஜ சுந்தர மாறனுக்கு மட்டும் தெரிந்தது,. அவ்வளவு தான் என்று நினைத்து பயந்தாலுமே, தன் பாஸ் செய்ய சொன்னதை ஒன்று விடாது செய்து முடித்து விட்டு வெற்றி மாறன் பக்கத்தில் நின்று கொண்ட விவேக் அப்போது தான் ஒன்றை கவனித்தான்..

அது. தன்னை விட கல்யாண பெண் இன்னுமே பயந்து போய் இருக்கிறாள் என்பது.. என்ன டா இது.. அப்போ இங்கு நடப்பது காதல் கல்யாணம் இல்லையா….? கடத்தல் கல்யாணம் தான் நடக்குதா…?

பெண் அழகா தான் இருக்கு… பார்த்த உடனே பிடிக்கும் தோற்றம் தான்… ஆனாலும் ஏன் இவன் யோசிக்கும் போதே வெற்றி மாறன்..

ஸ்வர்ணாம்பிகையிடம்… “கோல்ட் என்ன இது இப்படி பயந்தது போல நிற்கிற.. பார்க்கிறவங்க உனக்கு என்னை மேரஜ் செய்ய விருப்பம் இல்லை .. நான் என்னவோ உன்னை போஸ் செய்து மேரஜ் செய்வது போல தானே நினைப்பாங்க….” என்று கேட்டவனின் குரலில் அத்தனை கோபம்…

அதற்க்கு பெண்ணவள்… மனதில் உண்மையில் இன்று திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தினாய் தானே… என்று நினைத்தாலும்..

அவனிடம்.. “ இல்லேங்க… பயமா இருக்கு.. அது தான்…” என்று தயங்கி தயங்கி சொன்னாள்..

இன்று ஸ்வர்ணாம்பிகையின் இந்த பயந்த தோற்றத்தையும்.. இந்த தயங்கிய பேச்சையும் வைத்து பெண்ணவள் பயந்த சுபாவமோ என்று நினைத்து விட வேண்டாம்.

ஸ்வர்ணாம்பிகை மிகவும் தைரியமான பெண் தான்… சின்ன வயது முதலே மனதில் பட்டத்தை வெளிப்படையாக சொல்லி விடும் பெண்ணும்… அதே போல் எந்த மறைவும் இல்லாது தன் பெற்றோரிடம் அனைத்தும் சொல்லி விடும் பெண்ணுமே… அத்தனை சுதந்திரம் கொடுத்து தான் அவளின் பெற்றோர் அவளை வளர்த்தது..

ஆனால் எப்போது இந்த பாழா போன காதல் அவளுக்குள் வந்ததோ.. அனைத்தும் தலை கீழாக மாறி போயின…

இன்னுமே தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், எப்போது வெற்றி மாறன் தன் பின் காதல் என்று வந்தானோ.. அப்போதே தன் பெற்றோரிடம் இவள் பொய் சொல்ல ஆரம்பித்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்..

வெற்றி மாறன் யாரோவாக இருந்து இருந்தால், இவளின் பெற்றோர் இவளின் இந்த காதலை ஏற்று திருமணம் செய்து வைத்து இருப்பர்.. ஆனால் தான் காதலித்தவன் வெற்றி மாறன் என்பதினால் தான் தன் பக்கம் யாரும் இல்லாது தன் திருமணம் இங்கு நடக்க இருப்பது..

அதை நினைத்த நொடி பெண்ணவளின் கண்கள் கலங்கி போயின…. அதை பார்த்த வெற்றி மாறனுக்கு இன்னும் கோபம் தான் வந்தது.. அதில் தன் கழுத்தில் இருக்கும் மாலை மீது கை வைத்தவன்.

“வா போகலாம்… இன்னைக்கு உன் நிச்சயம் உன் வீட்டவங்க ஏற்பாடு செய்தவனோடு நடக்கட்டும்.. கல்யாணமும் செய்து கொள்… இப்படி அழுது எல்லாம் நீ என்னை மேரஜ் செய்து கொள்ள தேவையில்லை.. இந்த வெற்றி மாறன் அந்த அளவுக்கு தாழ்ந்தும் போயிடவில்லை. .. வா… “ என்று சொன்னவன் இரண்டு அடி எடுத்தும் வைத்து விட்டான்.

ஆனால் பெண்ணவள் தான் வெற்றியின் கை பிடித்து தடுத்து நிறுத்தி.. “இல்லேங்க உங்களை பிடிக்காது எல்லாம் அழல… யாரும் இல்லாது.. மேரஜ் செய்து கொள்வது ஒரு மாதிரி இருக்கு. அதோட பயமும்..” என்று சொன்னவளின் பேச்சு..

யாரும் இல்லாது திருமணம் நடப்பது பிடிக்கவில்லை.. அது என்ன பயம்.. அவள் ஏன் இத்தனை பயப்படுகிறாள் என்பது இன்னுமே பெண்ணவளுக்கு தெளிவாக புரியவில்லை என்பது தான் உண்மை… ஒரு வேளை பெண்ணின் மனது பின் நடக்கப்போவதை முன் கூட்டிய தெரிந்ததினால் பயப்படுகிறதோ… அதை பெண்ணவள் உணரவில்லை…

ஆனால் பெண்ணவளின் இப்போது பயப்படுவதற்க்கு காரணம் வெற்றி மாறன் தெரியாதவன் கிடையாது.. பணம் பிகழ் இதை கொண்டு தான் மாறனின் குடும்பம் தெரியும் என்றால், அதுவும் ஒரு வகையில் சரி என்றாலுமே, ஒரு வகையில் மாறனின் குடும்பம் இவளின் அப்பாவுக்கு சொந்தம் என்பதினால் , மாறன் குடும்பத்தை பற்றி அனைத்து விவரங்களும் அவளுக்கு தெரியும், அதன் தொட்டே தன் காதலை உடனே வீட்டில் சொல்லாமல் போனதும்..

பின் சொல்லியும் அதை தன் வீட்டில் ஏற்றுக் கொள்ளாது போனது மட்டும் அல்லாது தனக்கு மாப்பிள்ளை பார்த்து இதோ இன்று மாலை மாறன் சொன்னது போல் எல்லாம் நிச்சயம் எல்லாம் கிடையாது.. இன்று தன்னை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டவர்கள் வருகிறார்கள்..

ஆனால் வெற்றி மாறனோ… நான் காதலிக்கும் பெண் இன்னொருத்தன் முன் நின்றால், அது எனக்கு அவமானம்… அதோடு உன் பெற்றோர் உனக்கு கல்யாணத்திற்க்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று உன் புகைப்படம் எவன் எவனோ பார்ப்பான். ஓரு ஆணின் பார்வை எப்படி இருக்கும் என்று ஒரு ஆணாக எனக்கு தெரியும்…

அதனால் உடனே நாம் திருமணம் செய்து கொள்ளலாம்… இதை சொன்னது இரண்டு நாட்கள் முன்… இதோ இன்று மணகோலத்தில் இருவரும் நிற்கிறோம்…

நீங்கள் நினைக்கலாம் வெற்றி மாறன் அழகன்.. உண்மையில் அவன் ஆண் அழகன் தான்… அதோடு படிப்பு பணம் சமூகத்தில் நல்ல அந்தஸ்த்து… இருக்கிறது.. இதை எல்லாம் விட சொந்தமும்.. சாதி கூட இங்கு தடை கிடையாது… அப்படி இருக்க ஸ்வர்ணாம்பிகை வீட்டில் ஏன் வெற்றி மாறனை மாப்பிள்ளையாக்க ஒத்து கொள்ளவில்லை என்பது..



காரணம் எந்த அளவுக்கு சொந்தத்தின் முன் மாறன் குடும்பத்தை பற்றி பெருமையாக பேசி கொள்வார்களோ அந்த அளவுக்கு அந்த வீட்டின் ஆண் அடக்கு முறையை பற்றியும் பேச்சு பரவலாக உறவு முறைகளில் பேசி கொள்வார்கள்..

அதன் தொட்டு தான் வெற்றி மாறன் தன்னை பார்த்து காதல் சொன்னதும் அதை உடனே அவளாள் ஏற்று கொள்ள தயங்கியது…

இன்னும் கேட்டால் ஊரில் நடக்கும் குலதெய்வ வழி பாட்டின் போது உறவு முறைகள் மொத்த பேரும் அங்கு செல்வர்..

சென்ற முறை இவளுமே தன் அண்ணன் அப்பா அம்மாவோடு சென்று இருந்தாள்.. அப்போது வெற்றி மாறனுக்கு தான் முதல் மரியாதை கொடுக்கப்பட்டது..

பார்த்த உடனே… அழகா இருக்கானே யார் என்று பார்த்த போது தான் தெரிந்தது.. வெற்றி குடும்பத்தின் இளைய வாரிசுகளில் மூத்த பேரன் என்பதும் பெயர் வெற்றி மாறன் என்பதும்…

அப்போ தூரம் நின்று பார்ப்பதோடு இருக்கனும் பா என்று நினைத்து கொண்டவள் தான் ஸ்வரணாம்பிகை … காரணம் அந்த குடும்பத்தை பற்றிய பேச்சுக்கள் அப்படி பட்டது..

ஏன் அன்று இவனை பார்த்ததுமே தன் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த இவளின் அன்னை ஜெயசுதா கூட..

“ம் பார்க்க நல்லா தான் இருக்கான்… பணம் படிப்பு குடும்ப பெருமை எல்லாம் தான் இருக்கு.. ஆனா வீட்டு பெண்களை எல்லாம் ஒரு மனுஷியா கூட நடத்த மாட்டேங்கலே… எந்த பெண் வந்து இவன் அழகுல மயங்கி போய் மாட்ட போகிறாளோ… .”

பாவம் அன்று அந்த அன்னைக்கு தெரியாது.. அந்த அழகில் மயங்கி மாட்ட போவது தன் மகள் தான் என்பது..

அப்போது இவளின் தந்தையும் கூட… “ வெளியில் ஏன் வந்து மாட்ட போகுது.. அவங்க ஒன்னுக்குள் ஒன்னா உறவில் தானே கல்யாணத்தை முடிச்சிப்பாங்க…” என்று சொன்னவரிடம் மீண்டுமே இவளின் அன்னை..

“ஆமா ஆமா இவங்க வீட்டு ஆண்களுக்கு கீழ் அடங்கி நடக்கனும் என்றே பெண்களை அதுக்கு என்று ட்யூன் பண்ணி தானே வளர்ப்பாங்க…. வெளியில் இருந்து வந்தா அவ்வளவு தான். ஒரு வருஷத்தில் டைவஸ்ல தான் வந்து நிற்கும்…” இந்த பேச்சுக்கு இவளின் தந்தை..

“என்ன ஜெயா இது கோயிலில் வைத்து என்ன பேச்சு.” என்று மனைவியை அதட்டினார்..

பெற்றவர்களின் பேச்சை கேட்ட ஸ்வரணாம்பிகை சைட் அடித்து கொண்டு இருந்ததை கூட விட்டு விட்டாள்..

ஆனால் அன்று அனைவரும் பார்த்த ஒருவன் தன் முன் மண்டியிட்டு… “ உன்னை காதலிக்கிறேன்… நாம மேரஜ் செய்து கொள்ளலாமா…?” என்று கேட்ட போது… பெண்ணவளின் மனம் கொஞ்சம் தடுமாறி தான் போய் விட்டது..

அதிலும் இவர்களின் முதல் சந்திப்பில். பெண்ணவளுக்கு தான் வெற்றியை தெரியும்.. வெற்றி மாறனுக்கு ஸ்வர்ணாம்பிகை யார் என்பது தெரியாது இவள் வேலை பார்க்கும்.. இடத்தில் ஆடிட்டர் வெற்றி மாறனின் கனரகம் தயாரிக்கும் மாறன் குழுமத்திற்க்கு ஒரு கணக்கு விசயமாக பேச சென்ற போது தான் முதல் முறையாக வெற்றி பெண்ணவளை பார்த்தது..

இவளுமே பார்த்தாள் தான்.. பார்த்தது என்ன தொர இருக்கார் என்று மனதில் கிண்டலாக நினைத்து கொண்டு பார்த்தாள்.. பார்த்தவள் அவனுமே தன்னை பார்க்கவும் தான் என்ன இது இவன் இப்படி பார்க்கிறான் என்று பயந்து போய் தலையை குனிந்து கொண்டது.

ஸ்வர்ணாம்பிகைக்கு மனதில் பயமும்… அந்த பயத்தில் தலை குனிவதும்.. அது தான் முதல் முறை… அன்றே வெற்றி மாறன் பெண்ணவளின் மனதில் அவளை அறியாமலேயே பயப்படவும் வைத்து விட்டான் தலை குனியவும் செய்து விட்டான்..

ஆனால் இந்த செயல் தான் இவனை திருமணம் செய்து கொண்டால் தன் வாழ்க்கை முழுவதும் தொடரும் என்று தெரியாது…

அன்று வெற்றி மாறன் முதன் முதலில் தன்னிடம் பேசிய அந்த பேச்சை இப்போது நினைத்தாலும் அவள் முகத்தில் புன்னகை வந்து ஒட்டிக் கொள்ளும்…

தான் பார்த்ததும் தலை குனிந்து கொண்டதும் பார்த்தவன் தன் அருகில் வந்தவன்… “ என்ன சைட் அடிக்கிறியா….?” என்று கேட்டவன் பின்..

“ஆனா ஏன் குனிஞ்சிட்ட.. நான் பார்த்தேன் என்றா….” என்ற இந்த பேச்சில் பெண்ணவள் பதறி தான்..

“அய்யோ இல்ல… அப்படி எல்லாம் இல்ல….” என்று சொன்னவள் பின் வெற்றி மாறனின் அந்த கிண்டல் பார்வையில்…

பெண்ணவளின் இயல்பு குணம் தலை தூக்கி… “ஆமா நீங்க ஏன் என்னை பார்த்திங்க….?” என்று கேட்டவளுக்கு வெற்றி மாறன்..

“இந்த பெண் அழகா இருக்கே … கூட ஆடிட்டிங்க படிக்கிற என்று கார்மேகம் சொன்னார். அது தான் சைட் அடிக்க பார்த்தேன்.. நான் எல்லாம் மறைக்க மாட்டேன் ப்பா..” என்று கிண்டலாக வேறு பேசினான்..

ஆனால் ஒன்று சொல்லியே ஆக வேண்டும்… ஸ்வர்ணாம்பிகைக்கு எப்படி இந்த பயம் பதட்டம் புதியதோ.. அதே போல் தான் வெற்றி மாறனின் அந்த கிண்டல் பேச்சு… புதியது.. அதுவும் ஒரு பெண்ணிடம் இத்தனை இலகுவான பேச்சும் புதியது தான்..

ஆனால் இது பெண்ணவளுக்கு தெரியாது தானே…. இவன் இத்தனை இலகுவானவனா என்று வியந்து பின்..

“ஆனா நான் பார்த்தது நம்ம சொந்தக்காரர் ஆச்சே என்று தான் பார்த்தது…” என்று சொல்லி விட.

வெற்றி மாறனுக்கு அத்தனை நேரம் இருந்த அந்த இலகு தன்மை மறந்து… “என்ன நாம சொந்தமா…. எந்த வகையில் சொந்தம்…” என்று ஆரம்பித்தவன்..

பின்.. “இல்ல அது எல்லாம் வேண்டாம்.. நீ எனக்கு தங்கை முறை இல்லை தானே…” என்று பர பரத்து கேட்ட கேள்வியில் அன்று பெண்ணவள் சிரித்து விட்டாள்..

ஆனால் வெற்றி மாறன்.. “ பீ சீரியஸ்… நீ எனக்கு சிஸ்டர் முறை இல்லை தானே….?” என்று கேட்ட அவனின் தீவிரத்தில் பெண்ணவளின் முகம் தன்னால் இல்லை என்று ஆடியதோடு…

“மாமா பெண்..” என்று வேறு உறவு முறை சொல்ல.

“ஓ…” என்று சொன்னவன் பின்..

“உன் அப்பா யார்..?” என்று கேட்டவனிடம் பெண்ணவள்…

“கிரிதரன்…” என்று இவள் சொன்னதும்.

வெற்றி மாறன் முகம் கொஞ்சம் மாறியதோ.. இன்றும் அவளுக்கு அந்த சந்தேகம் இருந்தது.. ஆனால் வெற்றி மாறன் இவள் கேட்ட பொது அன்றே அவன் அதை மறுத்து விட்டான்…

“ ஏன் எங்க அப்பா பெயரை சொன்ன போது உங்க முகம் ஒரு மாதிரி ஆகி விட்டது..?” என்று கேட்டவளிடம்..

“அப்படி இல்லையே…” என்று சொன்னவன் ஆனால் தன் தந்தை எந்த கிரிதரன் என்று தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டி..

“பேங்கில் மேனஜரா இருக்காரே அந்த கிரிதரனா….?” என்று கேட்டவன் பின்..

“உங்க அம்மா கூட பேங்க மேனஜர் தான் இல்லையா… ?” பின் சிரித்து கொண்டே..

“அவங்க லவ் மேரஜ் லே…” என்று அதையும் கேட்டவன்..

பின்.. “ அப்போ நாம லவ் பண்ணா உங்க வீட்டில் எதிர்ப்பு இருக்காது என்று சொல்…” என்றும் கேட்டான்…


 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
214
அறிமுகத்திலே நாயகன் நாயகி என்று சொல்லியாச்சு 🤩 🤩 🤩 🤩 அப்போ ஜோடி மாறாது 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️

ஆணாதிக்க குடும்பம் என்று தெரிஞ்சும் காதல்ல விழுந்துட்டா 😕😕😕😕😕 பெத்தவங்களை எதிர்த்து கல்யாணமும் செய்ய வந்தாச்சு 🤔🙁🙁🙁

அடக்குமுறையில் அதிகம் பாதிக்கப்பட போறா 🤭🤭🤭🤭 கல்யாணத்துக்கு பிறகு வேலைக்கு விட மாட்டான் என்று தோணுது 🙁 🙁
 
Last edited:
Well-known member
Joined
May 28, 2025
Messages
67
அய்யோ கடவுளே கதையோட யூடிய மாத்தி படிச்சு இப்போ தான் தெளிவானேன்.

அடக்குமுறை உள்ள வீடுனு சொல்லாறாங்களே ஆனால் அவுங்க தனியா அவுக ஜோடிய கொஞ்சுவாங்க பா அது நிஜம் நான் பார்த்து இருக்கிறேன் அவுங்க லவ் நாம உத்து பார்த்தால் தெரியும்

என் சொந்த நாத்தனார் வீட்டில் நான்கு பேரும் அந்த அடக்கு முறை தான் ஆனால் அந்த அண்ணன் தம்பி நாலு பேரும் செம ரொமான்ஸ்
அந்த நாலு அண்ணங்களும் நல்ல மாதிரி

மற்றபடி கதையில் விஜி மேம் எப்படி கொண்டு வராங்கானு பார்ப்போம்
 
Top