அத்தியாயம்….8
தன் வீட்டின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் ராஜ சுந்தர மாறன் கூட அந்த வீட்டின் மாப்பிள்ளை சுபாஷ் பேச்சை ஏற்று..
அந்த வீட்டின் மூத்த பெண்மணிகளை பார்த்து “ம் மாப்பிள்ளை சொல்றது சரி தான்…” என்று சொன்னவர் பின் பொதுவாக..
“அதுக்கு உண்டான வேலைகளை பாருங்க ..” என்றும் சொல்லி விட்டார்.. ஆனால் அதை வைஜெயந்தியினால் தான் சட்டென்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை…. தான் நினைத்தது எதுவும் நடக்க மாட்டேங்குதே….
இந்த வீட்டில் இரண்டாம் தாரமாக தான் அவர் வாழ வந்தது.. தன் கணவன் முதலில் தன் அக்காவுக்குமே கணவனாக இருந்தவர் தான்..
அதுவும் அவர் கண் முன்பே தான் தன் அக்கா மணிமேகலையோடு மணமேடையில் அமர்ந்து தாலி கட்டி.. அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்ததை மணிமேகலை தாய் வீட்டிற்க்கு சீராட வரும் போது எல்லாம் தன் அக்காவின் முந்தானையை பிடித்து கொண்டு பின் வரும் தன் அக்காவின் கணவனாக ராஜ சுந்தர மாறனை பார்த்து வைஜெயந்தியே தன் அக்காவிடம் பேசி கிண்டல் கூட செய்து இருக்கிறார் தான் …
ஆனால் பின்பு அவரையே ஐந்து ஆண்டுகள் கடந்து தன்னை திருமணம் செய்ய சொல்லி கேட்ட போது வைஜெயந்தி முதலில் மறுத்தார் தான்..
ஆனால் இந்த குடும்பத்தில் இப்போதே பெண்கள் பேச்சை காதில் கேட்க மாட்டார்கள் எனும் போது அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு கேட்டு இருக்க போகிறார்களா என்ன..?
வைஜெயந்தி மறுத்துமே தன் அக்கா கணவனே… அவருக்குமே கணவனாக ஆன பின் பெரும் பாலும் பெண்கள் தனக்கு தானே செய்து கொள்ளும் அந்த சமாதானத்தை செய்து கொண்டார்..
அதுவும் அவர் அக்கா மணிமேகலையே…. “ எப்படி இருந்தாலும் உன் மாமாவுக்கு அவங்க வீட்டு ஆட்கள் இன்னொரு திருமணத்தை செய்து தான் தீருவாங்க… இன்னொரு பெண் வந்து அந்த வீட்டில் என் நிலை மோசமா ஆவதை விட… நீ வந்தா நல்லா இருக்கும் ஜெயந்தி…. உன் மூலம் அந்த வீட்டிற்க்கு வாரிசு வந்தா அந்த குழந்தை மீது எனக்கு உரிமை இருக்கும்… நீ தான் அந்த வீட்டு உரிமையா இருப்ப….” என்ற இந்த பேச்சை வைஜெயந்தி முற்றுமாக நம்பினார்…
கூடவே… தன் அக்கா கொடுக்க முடியாத குழந்தை பாக்கியத்தை தான் இந்த வீட்டிற்க்கு கொடுக்க போகிறோம்…. இரண்டாவதாக தான் வந்தாலுமே, இந்த வீட்டின் வாரிசை நான் தானே கொடுக்க போகிறேன் என்று நினைத்து கொண்டு இருந்தவரின் அந்த எண்ணத்திலும் மண் அள்ளி விழுந்தது..இவர்கள் திருமணம் செய்து கொண்ட ஆறே மாதத்தில் மணிமேகலை கற்பம் என்று தெரிந்ததில்,
பின் என்ன மணிமேகலை முதலில் ஆண்மகனாக அந்த குடும்பத்தின் மூத்த வாரிசு… அதுவும் அந்த குடும்பம் போற்றும் ஆண் வாரிசாக ஜெய மாறனை பெற்றெடுத்தார் என்றால், வைஜெயந்தி பெண் குழந்தை. அதுவும் கொஞ்சம் கை ஊனோத்தோடு இவருக்கு பிறந்தது..
வைஜெயந்திக்கு அது வாழ்க்கையில் பெரிய இடி என்று தான் சொல்ல வேண்டும்.. பின் கூட அவர் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்…
அதன் பின் தன் பெண் சாரதாவை கிரிதனுக்கு கட்டி கொடுக்க நினைத்தார்…வசதி இல்லை என்றாலும் கிரிதரன் படித்து இருக்கிறான்.. பார்க்கவும் நன்றாக இருக்கிறான் என்று நினைத்து…
ஆனால் அதுவும் தான் நிறைவேறாது… தன் பெண்ணின் இந்த குறையினால் சொந்தம் பெண் கேட்காது போக தூரத்து உறவான வசதி குறையோடு.. அதுவும் இந்த காலத்திற்க்கு ஏற்ப பிழைக்க தெரியாத சுபாஷுக்கு திருமணம் செய்து கொடுத்தது…
கூடவே சுபாஷுக்கு ஒரு அக்கா இரண்டு தங்கை.. அவர்களுக்கு நல்லதிற்க்கு கெட்டதிற்க்கு அனைத்தும் செய்யும் கடமை சுபாஷுக்கு இருந்தது..
இந்த செய் முறை செய்வது எல்லாம் இவர்களுக்கு ஒன்றும் இல்லை தான்.. ஆனால் அதை கொடுத்தால் தான் மானம் உள்ள மாப்பிள்ளை சுபாஷ் வாங்கி கொள்ள மாட்டாரே…
ஏன்…. “ நாமே இத்தனை பேருக்கு வேலை கொடுக்கிறோம்.. நீங்க ஏன் வெளியில் வேலை பார்க்கனும்..?” என்று இந்த வீட்டு ஆண்கள் கேட்ட போது…
“அது எல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது…” என்றும் சொல்லி விட்டார் அதனால் அம்மா வீடு இத்தனை வசதி இருந்தும் தன் மகள் சாரதா வசதி குறைவாக வாழ்வதா என்று தான் தன் மகளை அவ்வப்போது இங்கு அழைத்து கொள்வது… அது என்னவோ அனைவரையும் விட தன் மகள் கீழாக இருக்கிறாளே என்ற எண்ணம் வைஜெயந்திக்கு….
அதனால் தான் சாரதா மகள் மயூராவை இந்த வீட்டின் மூத்த பேரன் வெற்றி மாறனுக்கு திருமணம் செய்து வைத்து. அதை சரி செய்ய நினைத்து கொண்டு இருந்தார்…
அவரின் அந்த ஆசையிலுமே கிரிதரன் மகள் தீயை வைத்து விட்டதில், அதுவும் தன் கணவன் அதை ஏற்று கொண்டதில் அந்த மூத்த பெண்மணிக்கு கணவன் மீது மட்டும் அல்லாது அனைவரின் மீது தான் கோபம் எழுந்தது…
ஆனால் அதை எப்போதும் போல் காட்டி கொள்ளாது தான் தன் அக்காவும் தன் கணவனை முதலில் மணந்தவருமான மணிமேகலையுடன் சேர்ந்து… அன்று இரவுக்கு உண்டான வேலையை வேலைக்காரர்களின் மூலம் செய்ய தொடங்கினார். செய்து தான் ஆக வேண்டும்.. இல்லை என்றால் கணவர்…
“உன் அக்கா தானே ஜெயந்தி மேகலை… அவள் எப்படி நான் சொல்றதை ஏற்று நடந்துக்குறா…” என்று வேறு கணவனிடம் பேச்சு வாங்க வேண்டி வரும்.. அதுவும் தனித்து கூட இல்லாது அனைவரின் முன் நிலையிலும் சொல்லி விடுவார்..
மணிமேகலை ஏன் வாயை திறக்க போகிறாள்.. அனைத்துமே அவளுக்கு நல்லவிதமாக நடக்கும் போது… மனதில் இத்தனை இருந்துமே கணவன் சொன்னதை செய்து கொண்டு தான் இருந்தார்…
ஒரு பக்கம் வந்தவர்களுக்கு உணவு ஒரு பக்கம் தயாராகி கொண்டு இருக்க மற்றோரு பக்கம் விசயம் கேள்விப்பட்டு வந்த சொந்தங்களை நல்ல மாதிரியாக பேசி அனுப்பி கொண்டு என்று இருக்க..
அந்த வீட்டின் இளைய வாரிசில் இன்றைய மணமகனாக வெற்றி மாறனும் மயூராவையும் தவிர்த்து…
அடுத்த தலை முறை ஒன்று கூடி பேசிக் கொண்டு இருந்தனர்… இதில் வெற்றி மாறனின் சித்தப்பா மகள்கள் கிருத்திகா தீபிகா தான் தன் அண்ணன் வீட்டுக்கு தெரியாது.. அதுவும் காதல் திருமணம் செய்து கொண்டு வந்ததை நம்ப முடியாது மாய்ந்து மாய்ந்து பேசினர்..
“வெற்றி அண்ணா எப்போவும் விரைப்பா தானே திரிஞ்சிட்டு இருப்பாரு… எப்படி லவ் பண்ணி கல்யாணம் செய்து கொண்டாங்க….” என்று கிருத்திகா கேட்ட போது..
தீபிகாவோ… “ ஆமாம் அக்கா அது தான் எனக்குமே ஆச்சரியமே இருக்கு….” என்று சொன்னாள்..
அப்போது இவர்களின் இந்த பேச்சை கேட்ட வேல் மாறன்…. “ இதுல என்ன இருக்கு… பார்க்க அழகா இருக்காங்க.. நல்லா படிச்சி இருக்காங்க…. அண்ணனுக்கு பிடிச்சி இருக்கு மேரஜ் செய்துக்கிட்டாங்க… இதுல என்ன அதிசயம் இருக்கு…?” என்று அண்ணன் வெற்றி மாறன் காதல் திருமணம் செய்து கொண்டதை மிக இலகுவாக எடுத்து கொண்டு சொன்னான்..
அக்காக்கள் இருவருமே… “ இவன் பேச்சு சரியில்லையே.. ஏன்டா. என்ன நீயுமே லவ் பண்றியா என்ன….? என்று கிருத்திகா கேட்டாள் என்றால், தீபிகா..
“அண்ணன் காதலை ஏத்து கொண்டது போல உன் காதலை ஏத்துப்பாங்க என்று நினச்சிக்காதே ராசா… உனக்கே தெரியும்.. வெற்றி அண்ணன் இந்த வீட்டுக்கு ஸ்பெஷல் என்று… அதோடு இன்னும் நீ படிப்பை கூட முடிக்கல… பஸ்ட் இயரில் வைத்த அரியர்ஸ் முதல்ல அதையாவது முடி ராசா..” என்று கிண்டல் அடித்து விட்டு.. அக்காக்கள் இரண்டு பேரும் சென்று விட.
வேல் மாறனுக்கு எப்போதும் போல் இந்த வார்த்தை பலமாக தாக்கியது.. இருந்தும் என்ன செய்ய முடியும்.. தன் கோபத்தை அங்கு இருந்த தலையணை மீது காட்டுவதை தவிர…
வைஜெயந்திக்கு பிடிக்கவில்லை என்றாலுமே தன் அக்கா மணிமேகலையோடு சேர்ந்து… அனைத்துமே செய்தார் தான்..
இடையே… மணிமேகலையிடம் “ அக்கா உங்களுக்கு கஷ்டமா இல்லையா.. இந்த வீட்டின் மூத்த பேரன்.. நம்ம பேச்சை கேளாது இப்படி அவன் விருப்ப படி கல்யாணம் செய்து கொண்டு வந்தது.. அதுவும் நம்ம குடும்பத்திற்க்கு ஆகாத வீட்டு பெண்ணை..” என்று கேட்ட போது.
மணிமேகலை எப்போதும் போல்… “ நாம என்ன தான் தடுத்தாலும் நடப்பது தான் நடக்கும் ஜெயந்தி… அதோடு கிரிதரன் நாம பார்த்து வளர்ந்த பையன் ஜெயந்தி.. இதுல என்ன ஆகாத வீடு என்று சொல்வது…. இதோ இன்னைக்கு வெற்றிக்கு இத்தனை பேரு இருந்தும்.. ஒரு பெண்ணை பிடிச்சதினால் நம்ம யார் கிட்டேயும் சொல்லாது கல்யாணம் செய்து கொண்டு வந்துட்டான்..
ஆனால் அன்று கிரிதரனுக்கு யாரும் இல்லை.. தனக்கு பிடித்த பெண்ணை… கல்யாணம் செய்துக்கிட்டான்… இதுல என்ன தப்பு இருக்கு ஜெயந்தி…?” என்ற பேச்சில் வைஜெயந்தி உண்மையில் அன்று அக்காவின் இந்த பேச்சில் தான் பெரியதாக அதிர்ந்ததே….
அதில் தன் அதிர்வு மாறாது… “ க்கா என்ன க்கா சொல்றிங்க. நாம அன்னைக்கு சாரதாவை கிரிக்கு கல்யாணம் செய்து வைக்கலாம் என்று நமக்குள் பேசிட்டு இருந்தோம்…” என்ற இந்த பேச்சில் மணிமேகலை…
“அது தான் சொல்றேன் ஜெயந்தி.. நமக்குள் பேசிட்டோம்.. கிரிதரன் கிட்ட சொன்னோமா….?.” என்று கேட்டவர்..
பின்.. “ போனது போகட்டும் ஜெயந்தி… இப்போ ஆக வேண்டிய வேலையை பார்ப்போம்.. இல்லேன்னா அவர் சத்தம் போடுவார்.” என்று அவர் சொல்லி கொண்டு இருக்கும் போதே…
ராஜ சுந்தர மாறன்.. “ மேகலை…” என்று குரல் கொடுக்க… மணிமேகலையும்,.
“தோங்க..” என்று குரல் கொடுத்தவர்.. தன் வயதை மறந்து கணவன் அருகில் விரைந்து சென்று நிற்க.
ராஜ சுந்தர மாறனோ…. “ எதுக்கு இப்படி ஓடி வர…” என்று ஒரு அதட்டல் போட்ட பின்பு தான்..
அவர் எதற்க்கு மனைவியை அழைத்தாரோ…. “ அந்த பெண்ணை கூப்பிட்டு சாப்பிட வை மேகலை…” என்று சொன்னது..
அடுத்து அதோடு… “ என்ன என்ன செய்யனும் என்று வீட்டு ஆம்பிள்ளை நான் தான் அதையும் சொல்லனுமா என்ன….? இத்தனை நல்லது கெட்டது பார்த்து பேரன் பேத்தி எடுத்திட்ட பின்னும்… சொல்லி தான் நீ செய்வீயா… போ போ…. என்ன தான் நம்ம கிட்ட சொல்லாம கல்யாணம் செய்தாலுமே… அவன் இந்த வீட்டின் மூத்த ஆண் வாரிசு…. அவனுக்கு நடக்க வேண்டியது எல்லாம் முறையா நடக்கனும்….” என்றுமே சேர்த்து சொன்னார்..
இது தான் அந்த வீடு…. என்ன செய்தாலும், முதலில் மனம் வருத்தத்தில் திட்டினாலுமே, ஆண் என்றால், அந்த வீட்டில் ஒரு தனி சட்டம் தான்….
மணிமேகலையிடம் பேசி கொண்டு இருந்த வைஜெயந்தியோ….தன் அக்காவின் பேச்சில் முதலில் சிலையாக நின்று விட்டார்..
பின் மனதிற்க்குள்… ‘ நீ ஏன் பேச மாட்டே… உனக்கு சொல்லி வைத்தது போல எல்லாம் நல்லதா நடக்குதுலே… அதுல நீ இதுவும் பேசுவ. இதுக்கு மேலேயும் பேசுவ….’ என்று நினைத்து கொண்டார்…
இப்போது ராஜ சுந்தர மாறன்… “ ஜெயந்தி….” என்ற அழைப்பில் அவருமே… “ வந்துட்டேன் மாமா….” என்று அழைத்து கொண்டு அவருமே அக்காவை போல் தான் ஓட வேண்டி இருந்தது..
அவரை போல் தான் அந்த வீட்டின் பெரும்பாலோர்…. மனதில் ஒன்று நினைத்தாலும், அந்த வீட்டின் சட்ட திட்டதிற்க்கு உட்பட்டு… மனம் திறந்து வெளியில் எதையும் சொல்ல முடியாது… அதன் போக்கில் வாழ்க்கையை செலுத்தி கொண்டு உள்ளனர்.
மேகலையும் கணவனின் கட்டளைக்கு ஏற்ப… தன் மூத்த மருமகள்.. வெற்றி மாறன் அன்னை சுபத்ராவை அழைத்து…
“இந்த வேலை மட்டும் பார்த்தா போதுமா. போய் உன் மருமகளை கூப்பிட்டு அடுத்து ஆக வேண்டிய வேலையை பாரு…” என்று சொல்லவும்,.,
சுபத்ரா மாமியாரின் பேச்சை கேட்கும் நல்ல மருமகளாக ஸ்வர்ணாம்பிக்கையை அழைக்க மாடிக்கு சென்றார்…
அங்கு அவர் புதுமணப்பெண் அறையில் இல்லாது போக…. பால்கனிக்கு சென்று பார்த்தார்.. அங்கு தான் ஸ்வர்ணாம்பிக்கை அங்கு இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்தாள்…
அவள் அழுது வடியவில்லை என்றாலும் புதுமணப்பெண்ணுக்கு உண்டான பொலிவு இல்லாது யோசனையில் அமர்ந்து கொண்டு இருப்பதை பார்த்த சுபத்ராவுக்கு ஒரு பெரு மூச்சு ஒன்று வந்தது..அவருமே என்ன செய்வார்…
பெத்த படித்த குடும்பம் தான் இது.. ஏன் இவருமே அந்த காலத்திலேயே எம்.ஏ ஆங்கிலம் படித்தவர் தான். இருந்தும் என்ன பயன்… ஜெய மாறனுக்கு தான் சொந்த அத்தை பெண்ணாக போனதினால் இந்த வீட்டிற்க்கு மருமகளாக ஆக வேண்டிய நிலை.
அன்று அந்த வயதில் தன் மாமன் மகன் ஜெய மாறன் மீது மயக்கத்தில் இருந்தவர் தான் இந்த சுபத்ராவுமே…. படித்தவர்.. அழகானவர்.. வசதியானவர்… மொத்த உறவுமே மதிக்கும் மாறன் குடும்பத்தின் மூத்த மகன்.. இவை அனைத்தையும் மீறி… சின்ன வயது முதலே உனக்கு இவன் தான் என்று சொல்லி வளர்த்ததினால், இவை அனைத்தும் சேர்ந்த இளஞன் ஜெய மாறனை பிடித்து தான் அன்று திருமணம் செய்து கொண்டு இங்கு வந்தது..
ஆரம்பத்தில் ஒரு சிலதை தவிர்த்து பார்த்தால், அவரின் வாழ்க்கையுமே வண்ண மயமாக தான் சென்றது… ஆனால் அவர் படித்த படிப்புக்கு வேலை செய்ய ஆசைப்பட்டு… அதுவும் அது அவர்களின் கல்வி நிறுவனத்தில் தான்…
முதலில் பெரியவராக தன் மாமனார் ராஜ சுந்தர மாறனிடம் தான் கேட்டது…
அதுவும் அப்போது தன் கணவன் அவரின் அப்பாவிடம்….
“ப்பா நம்ம ஸ்கூலுக்கு இங்கிலீஷ் டீச்சருக்கு விளம்பரம் கொடுக்கனும் ப்பா….” என்று சொன்ன போது..
“மாமா நானே இங்கிலீஷ் லிட்ரேச்சர் தானே மாமா படிச்சது…. எல்லாத்துக்குமே வேலையாள் இருக்காங்க…நானே நம்ம ஸ்கூலுக்கு வேலைக்கு போறேன்னே…….” என்று சொன்ன போது,
தன் மாமனார் தன்னை திட்டாது தன் கணவனை… அதாவது அவரின் மகனை பார்த்து பேசிய பேச்சான.
“என்ன ஜெயா இது… நீ உன் பொண்டாட்டி கிட்ட நம்ம வீட்டு பழக்க வழக்கம் எல்லாம் சொல்லி தரலையா….? ரூமுக்கு போன உடணே கதவை அடச்சிடுவீயா என்ன…?” என்ற இந்த மாமனாரின் பேச்சில், ஜெய மாறன் எப்படி உணர்ந்தாரோ… ஆனால் சுபத்ரா…. கூனி குறுகி போய் தான் அதுவும் அத்தனை பேர் நடுவில்…
அதோடு தன் அம்மா வீட்டையும்… “ என் தங்கச்சி என்ன சொல்லி பொண்ணை வளர்த்து இருக்கா என்று தெரியல.” என்று தன் அம்மாவையும் திட்டிய பின் தான் கடைசியாக சுபத்ராவிடம்..
“தோ பாரும்மா… நம்ம வீட்டு பொம்பளைங்க வெளியில் போய் சம்பாதித்து தான் வீடு நிறையனும் என்றது இல்ல.. இந்த வீட்டு ஆம்பிள்ளைங்க பொண்டாட்டி சம்பாதியத்தில் தான் காலம் தள்ளனும் என்பதும் இல்ல… அப்படி பட்ட பொட்ட பயல்கலும் இல்ல என் பையனுங்க…. புரியுதா.. இனி இது போல எல்லாம் ஆம்பிள்ளைங்க பேசும் போது பொட்டச்சி மூக்கை நுழைக்க கூடாது…..” என்று மருமகளிடம் சொன்னவர்… கடைசியாக தன் இரு மனைவிமார்களிடமும்..
“ஒன்னுக்கு இரண்டா இருக்கிங்க. கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆச்சு.. மருமகளுக்கு என்ன சொல்லி தந்து இருக்கிங்க…” என்றும் முடித்தார்.
அன்று ராஜ சுந்த மாறன் பேச்சு தான் முடிந்தது.. ஆனால் அன்று இரவு சுபத்ரா தன் கணவனிடம் முதல் முறையாக கடுமையான முகத்தை பார்த்தார்.
“உன்னால தான் காலையில் என் அப்பா கிட்ட அப்படி பேச்சு வாங்கும் படி ஆகிடுச்சி… நீ என்ன இந்த வீட்டிற்க்கு புதுசா …? . சொல்லி தர.. சின்ன வயசுல இருந்தே நம்ம வீட்டு பழக்க வழக்கம் தெரியும் தானே…” என்று அத்தனை பேச்சு வாங்கி கொண்ட பின்… அடுத்து வேலை விசயமாக என்ன.. தான் என்ன படித்து உள்ளோம் என்பதை கூட மறந்தவராக தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்..
அந்த வீட்டு சட்டம் மருமகள்களுக்கு மட்டும் அல்லாது… அந்த வீட்டில் பிறந்த பெண் பிள்ளைகள் அனைவருமே.. பிடித்த படிப்பை படித்து முடித்து விட்டு… வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு சுபத்ராவை போல் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்…
இவை அனைத்தையும் நினைத்து கொண்டு தான் சுபத்ரா ஒரு பெரும் மூச்சு விட்டது… கூடவே சொந்தத்தில் இவர்கள் பார்த்து வளர்ந்து பெண் எடுத்த தங்களையே இப்படி நடத்தும் போது..
அதுவும்… இப்படி தான் என்று அனைத்தும் தெரிந்து திருமணம் செய்து வந்த தங்களாளேயே ஒரு சிலது பிரச்சனை ஆகும் போது…
காதலித்து.. அதுவும் வீட்டுக்கு தெரியாது… கூடவே இந்த வீட்டு பெண்ணை கட்டவில்லை என்று கிரிதரன் மீது அத்தனை கோபமாக இருக்கும் இந்த வீட்டின் பெரியவர்… கிரிதரனின் மகளை எப்படி நடத்துவாரோ… கூடவே தன் சின்ன மாமியாரை நினைத்துமே அவருக்கு பயம் தான்… ஸ்வர்ணாம்பிக்கையை நினைத்து மாமியாரான சுபத்ராவுக்கே அத்தனை பயம் எனும் போது பெண்ணவளுக்கு எத்தனை பயம் இருக்கும்..
அதுவும் சற்று முன் கணவன் வந்து பேசி விட்டு சென்ற விசயமான….
“இன்னைக்கு நமக்கு பஸ்ட் நையிட் கோல்ட்….ஜோதிடர் இந்த நேரம் என்று குறிச்சி தந்து இருக்காங்க…” என்ற கணவனின் பேச்சில் பெண்ணவள் விக்கித்து தான் நின்று விட்டாள்..
அவள் இதை சுத்தமாக எதிர் பார்க்கவில்லை… ஏதோ ஒரு காரணத்தை சொல்லி இன்று மட்டும் என்ன என்றும் நடவாது தான் இந்த வீட்டவர்கள் பார்ப்பார்கள் என்று தான் அவள் நினைத்தது…
கூட பெண்ணவளுக்கு கூட இன்று சத்தியமாக முடியவே முடியாது என்ற மனநிலையில் தான் இருந்தாள்.. அடுத்து அடுத்தாக தாக்கிய விசயத்தில் கொஞ்சம் என்னை விட்டால் போதும் என்பது தான் அவள் எண்ணமும்…
பின் காலத்தில் அதை அப்போது பார்த்து கொள்ளலாம் என்று இருந்தவள் கணவன் வந்து இப்படி சொல்லவும்.. அதில் அவளின் அதிர்ச்சி அப்பட்டமாக அவள் முகத்தில் காட்டி கொடுக்க.
அதை பார்த்த வெற்றி மாறனுக்கு தான் மனைவியின் இந்த அதிர்ச்சி பிடிக்கவில்லை…
அதில் …” எதுக்கு உனக்கு இத்தனை அதிர்ச்சி.. கல்யாணம் ஆனா இது எல்லாமும் தானே…” என்று கேட்டவனிடம் பெண்ணவள் முதலில் சொல்ல கூடாது என்று நினைத்ததை சொல்லி விட்டாள்..
அதாவது நம்மை சேர விடாது ஜோதிடரை வைத்து ஏதாவது செய்வார்கள் என்று…. பெண்ணவளுக்கு மனதில் ஒன்றை ஒளித்து வைத்து கொண்டு வெளியில் இன்னொன்றை வைத்து பேசி பழக்கம் இல்லை…
அதனால் தான் நினைத்ததை மறந்து சொல்லி விட்டாள்..
அதற்க்கு வெற்றி மாறன். “ நீ என் குடும்பத்தை பற்றி என்ன நினச்சிட்டு இருக்க. எனக்கு புரியல…” என்று கோபமாக கேட்டவன்.. பின்…
“ எனக்கு புரியல.. உனக்கே இதுல ஆர்வம் இல்லாதது போல் தெரியுது… நம்ம லவ் பண்ணி மேரஜ் செய்து இருக்கோம் அம்பிக்கை… நம்ம மேரஜிக்கு முன்னவே… நான் சொன்னது தான்.. மேரஜிக்கு பின்.. நம்ம லைப் வாழுவோம்.. என்று.. அதோடு இனி இந்த வீடு உன் வீடுமே தான்… இனி பேசும் போது பார்த்து பேசு…” என்று சொல்லி விட்டு கணவன் சென்று விட.
பெண்ணவள் தான்…முதலில் இன்றே ஏன் என்ற குழப்பம். அடுத்து இந்த வீட்டில் தன் வாழ்க்கை என்ன மாதிரியாக இருக்கும் என்ற குழப்பம். இரண்டும் சேர்ந்து குழம்பி போய் இருந்தவளை மேலும் குழப்பும் படியாக தான் சுபத்ரா அங்கு வந்து…
தன் மருமகளை அன்றைய இரவுக்காக தயார் செய்தார்.. தான் ஒரு நல்ல மருமகள் என்று தன் மாமியாரிடம் நிருபிக்க வேண்டி….