அத்தியாயம்-----1
அந்த வீதியிலேயே பெரிய மாளிகை போல் காட்சி அளிக்கும் அந்த வீட்டின் முன் ஏகப்பட்ட கார்கள் நிற்க. வீட்டின் முன் நின்ற இரு ஜோடிகளையும் ஆலம் சுத்தி வரவேற்க ஆலதட்டை கையில் எடுத்துக் கொண்டு வந்த பெண் அந்த வீட்டின் முதலாளியம்மா அனுஷியாவை பார்க்க.
அவர் கண் அசைவில் சுத்து என்றவர் தன் இரு மகன்களையும் பார்த்தார். ஒருவன் முகத்தில் கூட மகிழ்ச்சி சுத்தமாக இல்லை. கடமையே என்று இரு ஜோடிகளும் நிற்க.
அந்த வீட்டின் மூத்த மகனான விக்ரநாத்தை மணந்த கிருத்திகா ஆலம் தங்களுக்கு முதலில் சுத்துவார்களா….?இல்லை அவர்களுக்கா என நினைத்து தன் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த ஜோடியான தன் கணவனின் தம்பியைய் பார்க்க.
“என்ன பார்த்தாலும் அவன் பக்கத்தில் நிற்க முடியாது.” என்று தன் காதுக்கருகில் சொன்ன தன் கணவனை கலவரத்துடன் பார்க்க.
அவன் தான் தன்னிடம் பேசினனா….? என்ற வகையில் ஆலத்தட்டை ஏந்திக் கொண்டு நின்ற தன் சித்தாப்பவின் மகளை பார்த்து புன் சிரிப்புடன் “ காசு கணிசமாவே போடுறேன் சீக்கிரம் சுத்து.” என்றவன்.
சொன்னது போலவே கட்டிக்கோ ஒட்டிக்கோ என்ற விளம்பரத்தில் வந்த பட்டு வேஷ்ட்டியை கட்டிக் கொண்டு இருந்தவன்அதில் கூடவே வைத்து தைத்து இருந்த பாக்கெட்டில் இருந்து ஒரு கட்டு நோட்டை எடுத்து காமிக்க.
அவனின் சித்தாப்பாவின் மகளும் வாயெல்லாம் பல்லாக ஆலத்தை சுத்தி அதை பெற்றுக் கொண்டு அடுத்த மகனான அவிநாத்துக்கு சுத்தி விட்டு அவன் முகத்தை பார்க்க.
அவனோ தன் அண்ணனை பார்த்தான். அவன் பார்வையைய் புரிந்துக் கொண்டு இன்னொரு கட்டை எடுத்து அவனிடம் நீட்ட அதை கன்றிய முகத்துடன் வாங்கி தன் சித்தாப்பவின் மகளிடம் கொடுத்து விட்டு தன் அருகில் இருக்கும் தன் மனைவியான நந்திதாவின் பார்வைய் பார்க்க முடியாது தலை கழிந்து நின்றான்.
அவனை அதிக நேரம் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தாது “ வாங்க….” என்று அழைத்த தான் தாயின் அழைப்பில் இரு ஜோடிகளும் உள் நுழைந்தனர். பின் அடுத்து அடுத்து நடக்க வேண்டிய சடங்கான விளக்கு ஏத்துவது பால் பழம் கொடுப்பது என்ற அனைத்தும் இரு ஜோடிகளுக்கும் ஒரு இயந்திர கதியில் நடந்து முடிந்திட.
அன்று இரவு நடக்கும் சாந்தி முகூர்த்தம் பற்றி பேச்சி எழும் போது இரு சம்மந்தி காரரிடமும் அனுஷியா “எங்க வீட்டு வழக்கப் படி என் வீட்டில் தான் நடக்கும்.” என்று கண்டிப்பாக பேசி விட.
பெரிய இடத்தில் அதை மறுத்து பேசவும் முடியாது என்று பெரிய சம்மந்தி வீட்டார் சென்று விட்டார்கள் என்றால்…..சின்ன சம்மந்தி வீட்டவர்கள் இந்த திருமணத்தில் தன் மகளாள் ஏற்பட்ட குழப்பத்தில் வாய் திறக்க முடியாது சென்று விட்டனர்.
அன்றே சொந்த பந்தம் அனைவரையும் மூட்டை கட்டி அனுப்பி விட்டு ஹாலில் அக்கடா என்று அமர்ந்த அனுஷியாவின் முகத்தில் துளி கூட மகிழ்ச்சி இல்லை.
இந்த திருமணம் எப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று எதிர் பார்த்தேன் அதனால் தானே ஊரில் உள்ள பெரிய மனிதர்களுக்கு எல்லாம் அழைப்பு விடுத்தேன்.
ஆனால் என்ன மாதிரி நடக்க வேண்டிய திருமணம் என்ன மாதிரி சூழ் நிலையில் நடந்து முடிந்தது என்று நினைத்துக் கொண்டு இருந்தவரின் முன் தன் இருமகன்களும் வந்து நிற்க.
மூத்த மகனை வாஞ்சையுடன் பார்த்த அனுஷியா இளைமகனை குற்றம் சாட்டும் பார்வையுடன் பார்க்க. அந்த பார்வையை எதிர் நோக்க முடியாது தலைகவிழ்ந்த அவிநாத் பின் என்ன நினைத்தானோ….
“அம்மா இந்த சம்பிரதாயம் எல்லாம் தேவையா….?” என்று பூ கூடையுடன் போகும் வேலைகாரனை காண்பித்து கேட்க.
“ஆமாம் ஆமாம் உனக்கு எந்த சம்பிரதாயம் தான் தேவை பட்டது இது தேவைபட. ஆனால் உன் போல் உன் அண்ணன் இல்லை பார். அவனுக்காக தான் இது.
ஆ எனக்கு மறந்துடுச்சி பார். இது என்ன உங்களுக்கு முதல் இரவா….? வேண்டாம் அவிநாத் இதுக்கு மேல் என்னை பேச வைச்சிடாதே…..ஒரு அம்மாவா இது பேசினதே அதிகம்.” என்று விட்டு.
தன் மூத்த மகன் விக்ரநாத்திடம் “என்னப்பா என்ன விஷயம்….?” என்று அன்புடன் கேட்க.
“ஒன்னும் இல்லேம்மா…..” என்று சொன்னவனை சந்தேகத்துடன் பார்க்க.
அவிநாத் சொன்னதை தான் நானும் சொல்ல வந்தேன் என்று சொல்லவா முடியும். தன் தாயின் சந்தேக பார்வையை மாற்றும் பொருட்டு அவர் காலில் விழுந்து வணங்கி இதுக்கு தான் வந்தேன் என்பதை போல் காட்ட.
தாய் அறியாத சூலா என்பது போல் மகனின் முகத்தில் என்ன கண்டாரோ…..”எனக்கு என் பையனை பத்தி நல்லா தெரியும். எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமா ஆக்கிப்பான் என்று.
அது அவன் தொழிலா இருக்கட்டும் இல்லே அவன் வாழ்க்கையா இருக்கட்டும். நான் சொன்னது உனக்கு புரிஞ்சி இருக்கும். சரி போப்பா கிருத்திகா உனக்காக காத்துட்டு இருக்கா.” என்று தன் மூத்த மகனை வழி அனுப்பியவர்.
தன் இளைய மகனை திரும்பியும் பாராது தன் அறைக்கு செல்ல. தன் அம்மா சென்ற திசையையே பார்த்திருந்த அவிநாத் பின் தனக்கான அறைக்கு சென்றான்.
தன் அன்னையின் ஆசிர்வாதத்துடன் தன் அறைக்கு வந்த விக்ரநாத் தன் கட்டிலில் அமர்ந்திருந்த கிருத்திகா இவனை பார்த்ததும் எழுந்து நிற்க. இவள் என் தம்பிக்கு மனைவியைய் வர இருந்தவள் அதுவும் காதல் மனைவியாய்.
என்ற அந்த நினைவை என்ன நினைத்தும் அவனால் தடுக்க முடியவில்லை. இரண்டு நாட்கள் முன் வரை இவளை என் தம்பியின் வருங்கால மனைவியைய் பார்த்தேன்.
இப்போது என் மனைவியாய் என் கட்டிலில் இதை நான் நேற்று கூட நினைத்து பார்க்கவில்லையே…..விதி விதி என்று சொல்வார்களே அது இது தானா….?
தன்னையே ஒரு வித பயத்துடன் பார்த்திருந்த கிருத்திகாவை பார்த்ததும் என்ன நினைத்தானோ….கட்டிலை காண்பித்து “படுத்துக்கோ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.” என்று சொல்லி படுக்கை அறையைய் ஒட்டி இருந்த அறைக்கு சென்று கதவை அடைத்தான்.
மூடிய கதவையே பார்த்திருந்த கிருத்திகா “இனி என் வாழ்க்கையும் இது தானா….என்ற நினைவலையில் என்ன நினைத்தும் தன் கடந்த காலத்தை சேர்க்காமல் நினைக்க முடியவில்லை. வேலை என்று அடுத்த அறைக்குள் நுழைந்த விக்ரநாத்தும்,
தன் அன்னையே தன்னை வெறுக்கும் படியான காரியத்தை செய்து விட்டோமே என்ற வேதனையிலேயே தன் அறைக்கு நுழைந்த அவிநாத்தும் தன்னையே பார்த்திருந்த தன் மனைவி நந்திதாவின் பார்வையும் பார்க்காது பால் கனிக்கு சென்றவன்.
தன் முட்டாள் தனத்தால் எத்தனை பேருக்கு தர்ம சங்கடமாகி விட்டது என்ற நினைவில் தன் கடந்த காலத்துக்கு சென்றான் என்றால் பால்கனிக்கு சென்ற தன் கணவனின் முதுகையே பார்த்திருந்த நந்திதாவின் நினைவலையிலும் அதே தான் இருந்தது.
நான்கு பேரும் வெவ்வேறு வகையில் யோசித்தாலும் விஷயம் என்னவோ ஒன்று தான். விக்ரநாத் எத்தனை சிகரெட் பிடித்தான் என்று அவனுக்கே கணக்கு தெரியாது பிடிக்க.
அந்த புகையுடன் அவன் நினைவு கடந்த மூன்று மாதத்துக்கு முன் சென்றது. மதியம் நடக்கும் மீட்டிங்குக்கா சில குறிப்புகளை தன் பிஏ உதவியின் மூலம் எடுத்து கொண்டு இருக்க.
அறை கதவை தட்டாது உள்ளே நுழைந்தது யார் என்று கோபத்துடன் நிமிர்ந்து பார்க்க. தன் எதிரில் நின்றுக் கொண்டு இருந்த அவிநாத்தை பார்த்ததும் தன் கோபம் சட்டென்று வடியே தன் பிஏவை போகும் படி கண் ஜாடை காட்டி அவள் சென்றதும்.
“என்னடா அதிசயமா ஆபிஸ் பக்கம் எல்லாம் வந்து இருக்க என்ன விஷயம்….?” என்று கேட்டதுக்கு.
பதில் சொல்லாது தன் முகத்தை தயக்கத்துடன் பார்த்த தம்பியைய் பார்த்து “என்னடா என்ன வேண்டும் உனக்கு.” என்று அவன் மனம் அறிந்தவனாய் கேட்டான்.
ஆம் அவன் முகத்தை பார்த்தே கண்டு பிடித்து விடுவான் விக்ரநாத். அவன் தந்தை இறக்கும் போது விக்ரநாத்துக்கு இருபத்தி ஒன்று என்றால்….அவிநாத்துக்கு பதினைந்து வயதே முடிவடைந்த டீன் ஏஜ் பையன்.
நானாவது அப்பாவின் பாசத்தை அனுபவித்தவன் தன் தம்பி அது கூட இல்லையே என்று தன் தம்பியை தம்பியாக பார்க்காமல் தன் மகனாய் பார்த்தான்.
அதனால் தான் அவன் முகத்தை வைத்தே அவன் எதற்க்காக வந்து இருக்கிறான் என்று நினைத்து அவன் கேட்க. இன்று அவன் அளவுக்கு அதிகமாக தயங்குவதை பார்த்து “என்ன அவி …” என்று கேட்டதுக்கும் பதில் இல்லாது போக.
பெரிய பொருளா கேட்க நினைக்கிறானோ அதனால் தான் இப்படி தயங்குகிறானோ என்று நினைத்து “ஏ அவி எது என்றாலும் கேளுடா….உன் அண்ணா நான் வாங்கி தர்றேன்.” என்று சொன்னதும்.
“அண்ணா எனக்கு கல்யாணம் செய்து வைங்கண்ணா….” என்று தன் காது கேட்டதை நம்ப முடியாது அவன் முகத்தை பார்க்க.
முன்பு இருந்த தயக்கம் விடுத்து “ஆமாண்ணா எனக்கு கல்யாணம் செய்து வைங்க.” என்று திரும்பவும் சொன்னதை கேட்டு.
எங்காவது தப்பு ஏதாவது செய்துட்டானா...அது பின் விளைவாக தான் இந்த அவசரமா கல்யாணம் செய்ய சொல்றானோ என்று நினைத்து தன் தம்பியைய் பார்ர்க்க.
சே சே என் தம்பி அது மாதிரி எல்லாம் செய்ய மாட்டேன் நான் தான் கன்னா பின்னா என்று யோசிக்கிறேன் வேறு ஏதாவது காரணம் இருக்கும் என்று தன்னையே திருத்திக் கொண்டு தன் தம்பியைய் பார்த்து.
“என்னடா சொல்ற கொஞ்சம் புரியும் படி சொல்.” பாவம் அப்போது அவனுக்கு தெரியவில்லை இதை விட பெரிய தப்பு தன் தம்பி செய்ய போகிறான் என்று.
“அண்ணா நானும் அவளும் மூன்று வருடமா காதலிக்கிறோம்.”
“என்ன மூன்று வருடமாவா…..?ஏன்டா உனக்கு வயதே இருவத்திமூன்று தான். அப்போ இருபதில் இருந்தே லவ் பண்ண ஆராம்பிச்சிட்டியா….?” என்று கேட்க.
அந்த கேள்விக்கு ஏனோ பதில் அளிக்க முடியாது தலை குனிந்தான். பின் இருக்க தானே செய்யும் இருபத்திஒன்பது முடிந்த தன் அண்ணாவே திருமணத்தை பற்றி யோசிக்காது தொழில் தொழில் என்று இருக்க.
தன் அண்ணா தொழில் கற்றுக் கொள்ள வா என்று கூப்பிடும் போது எல்லாம் இன்னும் வயது இருக்கு என்று சொல்லி விட்டு இப்போது கல்யாணத்துக்கு மட்டும் வயது வந்து விட்டது என்று நின்றால் எப்படி….?