அத்தியாயம்….5
வழி அனுப்பி வைக்க வந்த வீரா, கூடவே தன்னோடு வருவதை பார்த்து… மணிமேகலை அவனை கேள்வியோடு பார்த்தாள்.
‘இவள் வாயை திறக்கவே மாட்டாளா…?’ என்று மனதில் நினைத்தவன், அவள் கேள்வியான பார்வைக்கு பதிலாய்… “சென்னையில் எனக்கு ஒரு வேலை இருக்கு. அதான் உன்னை சென்னை ஏர்போர்ட்டில் வழி அனுப்பிட்டு, என் வேலையையும் முடிச்சிட்டு கிருஷ்ணகிரிக்கு ரிட்டான் ஆயிடுவேன்.” தன்னிலை விளக்கம் கொடுத்தான்.
இவ்வளவு விளக்கம் கொடுத்த வீராவுக்கு, பதிலாய் மணிமேகலை… “ஓ…” என்று ஒரே வார்த்தையில் ஒருத்தி பதில் கொடுக்க முடியுமா…? அதுவும் தனக்கு இந்த அளவு உதவி செய்தவனுக்கு, செய்பவனுக்கு, முடியும் இதோ நம் மணிமேகலையால் கொடுக்க முடியும்.
வீரா மணிமேகலையிடம் என்ன எதிர் பார்க்கிறான்...தெரியவில்லை. ஆனால் அனைத்தும் செய்தான். சென்னையில் வேலையே இல்லாத போதும், வேலை இருப்பதாக தன் அன்னையிடம் சொல்லி…
இதோ சென்னை விமானநிலையம் வந்து, அவளை வழி அனுப்பி விட்டவன். சொன்ன பொய்க்கு ஏற்றவாறு சென்னையில் இருக்கும் **** மாலில் நேரத்தை செலவிட்டான். பின் மாலை அதே சென்னை விமானம் மூலம் கோயம்பத்தூர் வந்து இறங்கினான்.
***********************************************************
பயத்தால் அடிவயிறு ஏதோ இழுத்து பிடிக்கும் என்றும, படத்தில் பார்த்தோ...கதையில் படித்தோ தான், இது வரை மணிமேகலைக்கு தெரியும். அப்போது எல்லாம் வசுவிடம் இதை பற்றி பேசி கிண்டல் கூட செய்து உள்ளாள்.
ஆனால் இன்று அவள் செய்த அந்த கிண்டல் அவளை பார்த்து கேலி செய்து சிரிப்பது போல் இருந்தது. முதல் விமானப்பயணம். அதுவும் தனியாக பக்கத்தில் ஒரு வெள்ளைக்காரன் உட்கார்த்துக் கொண்டு…
“எனி ஹெல்ப் மீ...எனி ஹெல்ப் மீ…” என்று கேட்க தான் செய்கிறான்.
ஆனால் இவள் தான் அவனிடம் தனக்கு எந்த உதவி கிடைக்கும் என்று எதுவும் சொல்லாது… அவன் கேட்டதற்க்கு பதில் சொல்லும் நிலையிலும் கூட இல்லாது…
“ஒன்னும் இல்லை.” என்பது போல் தலையாட்டி விட்டு, வயிற்றில் கையை இறுக்கிக் பிடித்துக் கொண்டு, கண் மூடி பின் பக்கம் தலை வைத்து சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள்.
எப்போதும் கூப்பிடாத அந்த பகவான் நாமம் …
“பெற்ற தாய் தனை மக
மறந்தாலும்,
பிள்ளையைய் பெரும் தாய்
மறந்தாலும்
என்ற பாடலை தன்னால் மணிமேகலையின் உதடு உச்சரித்துக் கொண்டு இருந்தது. அதுவும் நேரிடையாக கலிபோனியா செல்ல விமானம் இல்லை என்பதால், துபாய் வந்து இறங்கியவள். மணிக்கணக்கில் காத்திருந்து, பின் மறுவிமானம் ஏறி வந்து இறங்கியளுக்கு, போதும் போதும் என்றாகி விட்டது.
நல்ல வேளை இங்கு இருந்து அவளை அழைத்து செல்ல, வட்டிகாரன் யாரையோ ஏற்பாடு செய்து உள்ளேன் என்று சொல்லி இருக்கிறான். அது வரை தப்பித்தேன், என்று நினைத்து, அனைத்து பார்மால்டீஸ்களையும் முடித்து விட்டு வந்தவள் மனதில் இது தான் தோன்றியது…
‘யாருடா கண்டு பிடித்தா இத்தனை பார்மால்டீசும்.’ என்று நினைத்தவள், சரி நம்ம வேலையை பார்ப்போம் என்று நினைத்து தன் பெயரை தாங்கிய அட்டையை யாராவது பிடித்து இருக்கிறார்களா…?என்று அவள் கண்கள் ஆண்களாக பார்த்து வலம் வந்தது. (இந்த தடவை சைட் அடிக்க இல்லேம்மா...நம்புங்க.)
ஆண்களின் கை பிடித்த, பெயர் தாங்கிய போர்டை பார்த்துக் கொண்டு வந்தவளுக்கு, ஏதோ பட சட்டென்று தான் வலம் வந்து முடித்த பகுதியை பார்த்தவள் அசந்து போனாள்.
தன் லக்கேஜை கீழே வைத்து விட்டு தான் பார்த்தது சரியா…? என்பது போல் கண்ணை துடைத்தும் பார்த்தாள். அந்த கை … தமிழில் செல்வி க. மணிமேகலை என்ற தன் பெயரை தாங்கி இருந்த அந்த கையின் உருவத்தை பார்த்தவளுக்கு…
‘பாருடா வட்டிக்காரனுக்கு இவ்வளவு அழகான பாரின் கேள் பிரண்டா…?.’ என்று நினைத்தவளின் மனதில், நம்ம போலவே இவனும் வெளிநாட்டில் செட்டில் ஆக ஐடியா பண்றான்னோ…’ மனது தன் பாட்டுக்கு இப்படி நினைத்தாலும், அவள் கால் தன்னால் அப்பெண் அருகில் போய் நின்றது.
“மை செல்ப் மணிமேகலை.” என்று அந்த வெளிநாட்டு பெண்ணிடம் தன் கைய் நீட்டி தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவளின், கைய் பற்றிய அந்த வெளிநாட்டு பறவை.
அழகான தமிழில் குழந்தை பேசும் மழலையாக… “ தெரியும். தெரியும். வீரா உங்க படத்தை அனுப்பி இருக்காரு…” என்று சொல்லிக் கொண்டே, தன் கை பேசியில் இருக்கும் மணிமேகலையின் புகைப்படத்தை அந்த வெளிநாட்டு பெண் காண்பித்தாள்.
பின் முறையாக தன்னை… “என் பெயர் லாலீ.” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
லாலீ காண்பித்த அந்த புகைப்படத்தில் தான் இப்போது அணிந்திருந்த சுடிதாரில் இருந்தாள். விமானத்திற்க்கு போடுவதற்க்கு என்று வசதியாக இது தான் இருக்கும் என்று, வீரா தான் இந்த உடையை தேர்ந்தெடுத்து தந்தான்.
மணிமேகலைக்கும் அந்த உடையே விமானத்தில் செல்ல ஏதுவாக இருக்கும் என்று நினைத்து, அன்று தான் அந்த உடையை அணிந்தாள். பார்டா பைய்யன் சுட சுட போட்டோவை பிடிச்சி தன் கேள் பிரண்ட்டுக்கு அனுப்பி இருக்கான்.
அது தான் என் போட்டோ இருக்கே...ஏன் போர்ட்டை பிடித்து இருக்கனும் இந்த பெண்...என்று நினைத்த மணிமேகலை அந்த போர்ட்டில் தன் பார்வையை செலுத்தினாள்.
“நான் கவனிக்காம போனாலும், நீ பாத்து வருவே வீரா சொன்னார்.” என்று சொன்ன லாலீயை பார்த்து சிரித்து வைத்தாள்.
மனதில்.. ‘அட பார்டா என் பார்வை பார்த்தே பதில் சொல்றா இந்த வெளிநாட்டு பறவை.’ என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே, லாலீயின் கண் அசைவில் அங்கு வந்த ஒருவன் மணிமேகலையில் லக்கேஜ்களை எடுத்து கொண்டு சென்றான்.
“ஏய் அது எந்து…” என்று மணிமேகலை எப்போதும் ஆபத்து என்றால் வரும் தன் தாய் மொழியில் கத்தினாள்.
அவள் கத்தல் லக்கேஜை எடுத்து கொண்டு சென்றவனுக்கு கேட்கவில்லையோ...இல்லை இவள் பேசிய தமிழ் புரியவில்லையோ...நிற்காது அவன் பாட்டுக்கு விடு விடு என்று சென்றுக் கொண்டு இருந்தான்.
அவன் நிற்காது செல்வதை பார்த்த மணிமேகலை அவன் பின் செல்ல பார்த்தவளின் கை படித்து தடுத்து நிறுத்திய லாலீ … “என் கார் ட்ரைவர் தான்.” என்று சொன்னதும் தான்…
மணிமேகலை “அம்மாடி…” என்று மூச்சை இழுத்து விட்டாள்.
வீரா படித்து படித்து சொல்லி அனுப்பியது இது தான். “பாஸ்போர்ட்டை உன் கைய் பையில் வைத்துக் கொள். அது எப்போதும் உன் கையில் தான் இருக்கனும். அது தொலைந்தால் பெரிய பிரச்சனை ஆகிவிடும்.” என்று.
மணிமேகலை விமானம் விட்டு இறங்கும் வரை, அந்த கைய் பை கையில் தான் வைத்துக் கொண்டு இருந்தாள். எப்போதும் கைய் பை எடுத்து போய் பழக்கம் இல்லாத மணிமேகலை.
இன்று புதியதாய் தன் கையிலேயே ஒரு பொருளை வைத்துக் கொண்டு இருப்பது ஒரு மாதிரியாக இருந்தது.
அதனால் தன் கையில் லக்கேஜ் கிடைத்ததும், மேல் உள்ள சூட்கேசின் ஜிப்பை திறந்து அதில் தன் கைய் பையை திணித்து விட்டு தான் தன்னை அழைக்க வந்தது யார் …? என்றே பார்த்தாள்.
இப்போது தன் லக்கேஜை ஒருவன் எடுத்துக் கொண்டு போவதை பார்த்து… ‘அய்யோ அந்த வட்டிக்காரன் சொன்னானே…” என்று நினைத்து தான் ஓட பார்த்ததே… லாலீ அது நம்ம ஆளு என்று சொன்னதும் தான் அவளுக்கு போன உயிரே திரும்பி வந்தது.
லாலீ மணிமேகலையின் பதட்டம், பின் வந்த நிம்மதி இதை பார்த்து… “பாஸ்போர்ட் அதிலா வைத்து இருக்க…? ” என்று சரியாக யூகித்து கேட்டாள்.
“ஆமாம்.” என்பது போல் தலையாட்டவும்…
“வீரா சொல்லி அனுப்பி இருப்பாரே...” என்று சரியாக வீராவை அனுமானித்து கேட்டவளிடம்… “உங்களுக்கு வீராவை எப்படி தெரியும்…?” என்ற வார்த்தை மணிமேகலையின் தொண்டை வரை வந்து விட்டது.
பின் தன்னை அடக்கியவளாய்… “ம் சொன்னாங்க. சொன்னாங்க.” என்று ஒரு வித அசட்டு சிரிப்பு சிரித்த வாறே சொல்லி முடித்தாள்.
அதற்க்கு லாலீ ஒன்றும் சொல்லாது, தன் கார் இருக்கும் இடத்திற்க்கு அழைத்து சென்றாள். தன் லக்கேஜை எடுத்து(ஓடி) வந்தவன் அமர்ந்திருந்த, காரின் பின் கதவை திறந்து தன்னை அமரும் படி செய்தவள், பின் தானும் தன் பக்கத்தில் அமர்ந்து பேச ஆராம்பித்தவள், பேசினாள்… பேசினாள்… பேசிக் கொண்டே இருந்தாள்.
“வீரா ஹான்சம்...வீரா பிரன்லீ...வீரா கேரிங்…” என்று சொல்லிக் கொண்டே இவளை போரிங் ஆக்கி விட்டு தான், தான் தங்க வேண்டிய இடத்திற்க்கே கொண்டு வந்து சேர்த்தாள்.
பின் லாலீயே அந்த கல்லூரியிலேயே தங்க வசதியோடு இருப்பதால், செய்ய வேண்டிய பார்மால்டீஸ் அனைத்தும், முன் நின்று செய்து முடித்து கொடுத்தவள், அவள் தங்கும் அறை வரை வந்து, அனைத்து வசதியும் இருக்கிறதா என்று சரி பார்த்து விட்டு, லாலீயின் கைய் பேசி எண்ணும் தந்தவள் …
“எதுன்னாலும் என்னை அழைக்கலாம். கூச்சம் எல்லாம் பார்க்க தேவையில்லை.” என்று சொன்னவளை இது வரை கிண்டல் கேலி என்று பார்த்திருந்தவள் அவளின் அந்த அக்கறையில் …
ஏனோ கண்கள் கலங்க… “தேங்ஸ்.” என்ற வார்த்தையை உள்ளார்ந்து சொன்னாள்.
மணிமேகலையின் முகத்தை பார்த்த லாலீ… “நோ தேங்ஸ். நீ என் வீரா சொன்ன பெண். நான் எதுன்னாலும் செய்வேன்.” என்று சொல்லி விட்டு சென்றவளின் முதுகையே பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை.
அப்படி என்ன இருக்கு…?அந்த வீராவிடம். இந்த பெண் என் வீரா என்று சொல்லும் அளவுக்கு. லாலீயின் செல்வநிலை அவள் வைத்திருந்த காரில் இருந்தே மணிமேகலைக்கு தெரிந்தது.
அதோடு அவள் காதில் போட்டு இருந்த கம்பல், கழுத்தில் ஜெயினில் போட்டு இருந்த பென்டெட்டின் அதன் ஜொலிப்பில், நான் உயர்ந்த வகை ஜாதி வைரம் என்று, பட்டயம்கட்டி கூறியது. செல்வ நிலை தான் இப்படி என்றால், அழகு...முட்டிக்கு மேல் போட்டிருந்த ஸ்கர்ட்டில் சும்மா வெண்ணையை உருக்கி தேயோ… தேய் என்று தேய்ப்பாள் போலவே...மணிமேகலையின் கண்ணுக்கு தெரிந்த பகுதியான தொடையில் இருந்து, அவள் பாதம் வரை சும்மா வெண்மை நிறத்தில், சும்மா வழ வழ என்று மணிமேகலை கண்ணுக்கு காட்சி தந்தது.
குணமும்… யார்…? என்று தெரியாத தனக்கே இந்த அளவுக்கு உதவி செய்கிறாளே… இதில் இருந்து தெரியவில்லையா…?அவள் நல்ல குணம்.
எந்த வகையில் பார்த்தாலும், அந்த வட்டிக்காரனுக்கு இந்த வெளிநாட்டு பறவை செட்டாகலையே...ம் ...இதுக்கு தான் காதலுக்கு கண் இல்லை என்பதோ…? என்று நினைத்தளுக்கு, கூடவே இது போல் தனக்கும் ஒரு கண் இல்லாதவன் மாட்ட வேண்டும் என்ற வேண்டுதலையும் வைத்தாள்.
மணிமேகலை வேண்டுதல் வைத்த அதே வேளயில்… நட்சத்திர அந்தஸ்த்து கொண்ட தங்கள் ஒட்டலில்... அதில் வேலை செய்பவனை காயோ காய் என்று காய்த்துக் கொண்டு இருந்தான் ஜான்.
அதுவும் சமையல் செய்யும் அறையில், அவர்கள் சமையல் செய்யும் மின் அடுப்பில் ஏதோ ஒரு மூலையில் இருந்த எண்ணை பிசுக்கை தன் விரலால் தொட்டு காண்பித்து…
“என்ன இது…? ஒரு ஒரு ஆயிட்டம் சமைத்த பின்னும் மின் அடுப்பை துடைக்க வேண்டும் என்று டாடி சொல்லி இருக்கார் தானே...ஏன் துடைக்கவில்லை.” என்று திட்டிக் கொண்டு இருந்தான்.
“சார் நான் துடச்சேன் சார். நல்லா தான் சார் துடச்சேன்.” என்று ஜான் விக்டர் நம்ப வேண்டுமே என்று, நல்லா என்பதில் அழுத்தம் கொடுத்து சொன்னான் அந்த தமிழ்நாட்டு நளபாகன் .
“துடச்சேன் என்று சொல். நல்லா துடச்சேன் என்று பொய் சொல்லாதே...இனி இது போல் பார்த்தேன் வேலைய விட்டு தூக்கிடுவேன்.” என்ற மிரட்டலோடு அந்த சமையல் அறையை விட்டு, அடுத்த கண்காணிப்பான நீச்சல் குளத்தை நோக்கி சென்றான்.
இதை எல்லாம் தன் நிர்வாக அறையில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த வில்சன்…”மொத்த பொறுப்பையும் இவன் ஏத்துட்டா நான் நிம்மதியா என் மலர் கூட இருப்பேன். எங்கே விடறான். வயசுல சம்பாதிக்கனும் என்று பணத்து பின் ஓடுறோம். பின் அதை காப்பந்து பண்ண ஓடுறோம்.
ஆனால் இந்த காலத்து பசங்க மட்டும் தன் விருப்பம்…தங்கள் ஆத்ம திருப்தின்னு சொல்லி அவங்க வழிய பார்க்குறாங்க.” என்று புலம்பிக் கொண்டு இருந்தார் வில்சன்.
அவர் சொல்வதும் ஒருவகையில் சரியே…வயதில் மலர்விழியை விரும்பி திருமணம் செய்தவர், மனம் ஒத்து வாழ்க்கை வாழ்ந்தாலும், அதிக நேரம் தன் மனைவியோடு செலவிட முடியவில்லையே…என்ற ஏக்கம் அவர் மனதில் இருந்து கொண்டு தான் இருந்தது.
மகன் வளர வளர..சரி கொஞ்ச காலம் தானே… தன் அத்தனை ஓட்டல்களையும் தன் மகன் பார்த்துக் கொள்வான் என்று நினைத்தாலுமே...மகன் விரும்பிய படிப்பையே படிக்க வைத்தார்.
அவரை பொறுத்த வரை தொழில் செய்ய, அதன் படிப்பு தேவையில்லை. அனுபவம் இருந்தால் போதும் என்பதே வில்சனின் எண்ணம். அவர் எண்ணத்திற்க்கு ஏற்ப தான் வில்சனின் அப்பா ஆராம்பித்த இந்த ஒட்டலை, அதன் சார்ந்த படிப்பை படிக்கா விட்டாலும், இதோ தன் தந்தை கொடுத்த ஒட்டல்களை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறேன் என்று நிரூபித்து இருக்கிறார்.
அதனால் மகன் ஆசைப்பட்ட படிப்பை படித்து முடித்ததும், தன் தொழிலை கையில் எடுப்பான் என்று காத்திருந்த வில்சனுக்கு, அவர் மகன் ஜான் ஏமாற்றத்தையே பரிசாய் கொடுத்தான்.
ஆம் அவன் படித்த நான்கு பட்டத்திற்க்கு பின் ஏதோ டாக்ட்டரேட் பண்ண போறேன் என்று சொன்னவனை… ஏதோ யோசனையில் பார்த்தவர்…
சரி அவனுக்கு படிப்பு பிடித்தம். படித்த பிறகு நம் தொழிலுக்கு தானே வரவேண்டும் என்று நினைத்தவர் முன் ஒரு நாள்… “டாடி நான் டாக்ட்டரேட் பண்ணி முடிச்சிட்டேன். நான் ஆசை பட்டது போல் நான் படித்த கல்லூரியிலேயே நான் கற்பிக்க போக போகிறேன்.” என்று சொல்லி கூடை நெருப்பை அவர் தலையில் அள்ளிக் கொட்டினான்.
வில்சன்… “ஜான் அப்போ நம்ம தொழில்…” என்று கேட்டதற்க்கு,… “அது தான் நீங்க இருக்கிங்கலே…” என்று சர்வ சாதாரணமாக ஜான் சொன்னான்.
“எனக்கு அடுத்து இதை நீ தானே பார்த்துக்கனும் ஜான்.” என்று வில்சனை தொடர்ந்து பேச விடாது…
“அது தான் நீங்களே சொல்லிட்டிங்களே டாட். உங்களுக்கு அடுத்து. நீங்க இப்போவும் யங்கா தான் இருக்கிங்க டாட். நீங்க அம்மாவை லவ் பண்றதை பார்த்து எனக்கே லேசா பொறாமை வருதுன்னா பாருங்க. நீங்க அதுக்குள்ள எல்லாம் ரிட்டேர்மென்ட் வாங்க நான் விட மாட்டேன். வேணும்னா நான் அப்போ அப்போ வந்து ஒட்டலை பார்த்துக்குறேன்.” என்று பொறுப்பை தன்னிடம் தள்ளி விட்ட மகனை தன் அறையில் இருந்த கேமிரா மூலம் ஜான் வந்தது சமையல் அறைக்குள் சென்றது.
பின் இதோ நீச்சல் குளத்தின் அருகில் சென்றுக் கொண்டு இருப்பதை அனைத்தையும் தன் முன் இருந்த கணினி மூலம் பார்த்துக் கொண்டு இருந்தவருக்கு, ஒரு பெரும் மூச்சு தன்னால் எழுந்தது.
தன் மகனிடம் இருந்த ஆளுமை திறமையை பார்த்து பெருமை படுவதா…? தன் திறமையை தொழிலில் காட்டாது தன் விருப்பம் போல் வேலைக்கு செல்பவனை நினைத்து வருத்தம் கொள்வதா…? என்று தெரியாது இருந்தார்.
இனி தான் என்ன சொன்னாலும் தன் மகன் கேட்க மாட்டான். சிறு வயது முதலே...ஜான் தான் நினைத்ததை மட்டும் தான் மற்றவர்களை செய்ய வைப்பான். அவனுக்கு பிடித்தம் இல்லாத ஒன்றை அவனிடம் திணிக்க முடியாது. என்று அவன் தந்தையாய் நன்கு உணர்ந்து இருந்ததால்...இனி அவனே விரும்பி தொழிலை ஏற்றால் தான் உண்டு.
தன் முன் இருந்த மனைவியின் புகைப்படத்தை பார்த்து… “மலர் உன்னோட செலவிட எனக்கு நேரம் எப்போ கிடைக்குமோ…?” என்று மனைவியின் நிழலிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது அங்கு வந்த ஜான்…
“டாட் எப்போவும் உங்களுக்கு அம்மா நியாபகம் தானா...அம்மா பார்த்த நேரம் போய் பிஸ்னஸையும் கொஞ்சம் பாருங்க டாட்.” என்று ஜான் தன் தந்தையை கிண்டல் செய்தான்.
“ஜான் அது தான் மொத்தமா உன்னை பார்த்துக்க சொல்றேன்.” தன் முன் இருந்த கணினியை காண்பித்து… “இங்கு வந்ததில் இருந்து நீ செய்த்தை பார்த்துட்டு தான் இருந்தேன். நீ மட்டும் நம் தொழில் மீது கவனம் செலுத்தினா.. இந்த கலிபோனியாவிலேயே இன்னும் முன்று ஸ்டார் ஒட்டல் ஆராம்பிச்சிடலாம்.”
இந்த வயதில் தொழில், பணம் பெருமை என்று பேசினால் மசிந்து விடுவார்கள். பேசி பார்க்கலாமே..தன் மகனை பற்றி தெரிந்திருந்தும், ஒத்துக் கொண்டால் நல்லா இருக்குமே என்ற ஆசையில் வில்சன் பேசினார்.
“டாட் டாட்...நான் பிஸினஸை பார்த்துக்க மாட்டேன்னா சொன்னான். இப்போ என் விருப்ப படி இருக்கேன். பின் எனக்கு எப்போ தோனுதோ… கண்டிப்பா நீங்க நினச்சது போல் நம்ம பிஸினஸை கையில் எடுத்ததும் எல்லாம் இடத்திலும் … நம்ம விக்டர் ஓட்டல் தான் பார்க்கும் இடத்தில் எல்லாம் கண்ணில் படும்.” என்று சொன்னவன்..
பின் தன் கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவன்… “சரி டாட் நான் கிளம்புறேன். ஈவினிங் பிரண்ஸ் கூட ஒரு பார்ட்டி இருக்கு. நாளையில் இருந்து காலேஜ் ஓபன். இதுக்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியாது.” என்று சொல்லி சென்று விட்டான்.
மணிமேகலைக்கு தங்கும் விடுதியில் தன்னோடு தங்கி இருக்கும் பெண்ணின் பெயர் சோனாலி. அவளும் இந்தியன் தான். என்ன ஒன்று அவள் நார்த்தில் இருந்து வந்து இருக்கிறாள். மொழி பிரச்சனை கொஞ்சம் இடித்தாலும், இந்தியா என்ற அந்த உணர்வே இருவருக்கும் ஏகாத்திற்க்கு வித்தியாசம் இருந்தாலும், அவர்களை நட்பு வட்டத்திற்க்குள் இணைக்க, இந்தியன் என்ற ஒன்றே போதுமானதாய் இருந்தது.
இன்று முதல் நாள் கல்லூரி செல்ல இருப்பதில், என்ன உடை உடுத்துவது என்று மணிமேகலை தான் எடுத்து வந்த ட்ரஸ் அனைத்தையும் மெத்தையில் போட்டு… தன் விரலை உதட்டில் வைத்து தட்டிக் கொண்டே அவள் யோசித்து முடிப்பதற்க்குள், சோனாலி குளித்து முடித்து விட்டு, ஒரு சாயம் போன ஜீன்ஸை மாட்டியவள் தன் செம்பட்டை முடியை ஒரு ஹார் பேண்டில் அனைத்தையும் சேர்த்து இணைத்து விட்டு உதட்டுக்கு லேசாக லிப் பாமை பூசியவள் மணியை கண்ணாடியின் வழியாக பார்த்துக் கொண்டே…
“இன்னுமா நீ டிசைட் செய்யல…?” என்று கேட்டவளின் முகத்தை மணிமேகலை பார்க்காது, அங்கு பரப்பி போட்ட தன் உடைகளை பார்த்துக் கொண்டே…
“ஒரே குழப்பமா இருக்கு சோ…” என்று இப்போதும் குழப்பமாகவே சொல்லும் மணியின் அருகில் சென்ற சோனாலி…
நீல நிற அனார்க்காலி உடையை எடுத்து அவள் கையில் திணித்தவள்… “இதை போட்டுட்டு வா…” என்று சொன்னாள். சோனாலி எடுத்து கொடுத்த உடை அழகாக இருந்தாலுமே…
மணிமேகலை உடையை பார்த்த வாறே… “இது கொஞ்சம் பட்டிகாடு மாதிரி இருக்காது.” என்று மணிமேகலை சோனாலியை பார்த்து சந்தேகத்துடன் கேட்டாள்.
மணிமேகலை எப்போதும் உடை விசயத்தில் குழப்பம் கொள்ளவே மாட்டாள். அனைத்து உடையுமே அவள் உடலுக்கு கச்சிதமாய் பொருந்தும். அது அவளுக்கே தெரியும் தான். இன்று குழம்ப காரணம், இந்த கல்லூரியில் அனைத்து நாட்டில் இருந்தும் வருவர். அவர்கள் முன் தான் எந்த விதத்திலும் தாழ்ந்து போக கூடாது என்ற காரணத்தினால் தான், இன்று உடை விசயத்தில் இவ்வளவு நேரம் எடுத்தது.
மணிமேகலையின் கேள்வியில் அப்போது தான் எதிர் அறையில் இருந்து மிகவும் மெல்லியதாகவும், மிக மிக சின்னதாகவும் அபாயமான வளைவு கொண்ட உடையை உடுத்திக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பி இருந்தவளை காண்பித்து…
“இது போல் போட்டுக்கிறியா…?” என்று மணிமேகலையிடம் அப்பெண்ணை காண்பித்து சோனாலி கேட்டாள்.
உடனே மணிமேகலை… “அய்யே...” என்று முகத்தை அஷ்ட கோணலாக்கி சொன்ன மணிமேகலையை பார்த்து…
“அவங்க அவங்க பழக்கமான உடையை போட்டா தான் சவுகரியமா இருக்கும். இந்த குளிருக்கு ஜர்க்கின்...அது போல் கையில் எடுத்துக்கலாம். “ என்று சொன்ன சோனாலி தான் உடுத்தி இருந்ததை காண்பித்து…
“எனக்கு இந்த உடையில் இருந்தால் தான், சவுகரியமா உணர்வேன்.” என்று சொன்னவள்.
அங்கு பரப்பி இருந்த உடையை காண்பித்து… உன்னிடம் இது போல் தானே நிறைய இருக்கு. நீ போடுவே என்று தானே காசு கொடுத்து வாங்குன. அதான் அதில் இருந்து எனக்கு பிடிச்ச கலரை எடுத்து கொடுத்தேன். உனக்கு என் டேஸ்ட் பிடிக்கலேன்னா உனக்கு பிடிச்ச கலரை எடுத்து போட்டுக்க… ஆனா எந்த இடத்திலும் நீ நீயா தான் இருக்கனும்.” என்ற அவள் வார்த்தைகள் அனைத்தும் ஏற்க கூடியதாக இருந்ததாலும், அவள் எடுத்து கொடுத்த நிறம் மணிமேகலைக்கும் பிடித்தமானதாக அமைந்ததாலும்…
சிரித்த முகத்துடன்… “இதுவே போட்டுக்குறேன் குட்டிப்பெண்ணே…” சோனாலி உயரத்தில் கொஞ்சம் குள்ளமாகவும், ஒல்லியாகவும் இருப்பாள்.
அதுவும் இது போல் ஜீன்...வயிற்றை ஒட்டிய வாறு போட்ட பனியனில், இன்னும் சின்ன பெண் போல் மணிமேகலை கண்ணுக்கு தெரிய...எப்போதும் பட்ட பெயர் வைப்பது போல் சோனாலிக்கு அந்த நிமிடம் அவள் நாமத்தை சோனாலியில் இருந்து, குட்டி பெண்ணுக்கு மாற்றி அமைத்து… அவள் அழைத்த குட்டி பெண் என்ற அழைப்பில் சோனாலி கோபம் கொண்டு இடுப்பில் கை வைத்து மணிமேகலையை முறைத்து பார்த்தாள்.
அப்போதும் மணிமேகலை….“இன்னையில் இருந்து உன் பெயர் குட்டி பெண்ணாக என் நாவில் இருந்து உதிக்கும்.” என்ற அரட்டையோடு தங்கள் முதல் நாள் கல்லூரி வாழ்க்கைக்கு அடித்து எடுத்து வைத்தனர்…
ஜான் வகுப்பு எடுக்கும் அறைக்குள்….