அத்தியாயம்….12
அன்றும் எப்போதும் போல் வகுப்பறைக்குள் நுழையும் போதே மணிமேகலையை பார்த்துக் கொண்டே வந்த ஜான் விக்டர்… “குட் மார்னிங்க…” என்ற தொடக்கத்தோடு தன் வகுப்பை ஆராம்பித்தவன் முடித்த பின் வகுப்பறையை விட்டு போகும் முன் மணிமேகலையை பார்த்து…
“நீ போகும் போது என்னை பார்த்துட்டு போ…” என்று ஜான் விக்டர் சொன்னான்.
இதனை கேட்ட மணிமலையோடு சோனாலிதான் …’கடவுளே இன்றுமா…’ என்பது போல் தன் பக்கத்தில் அமர்ந்து இருந்த மணிமேகலையை பார்த்தாள்.
அப்போது மணிமேகலையும் சோனாலியை பார்க்க… ‘ இவ ஏன் என்னை பார்க்குறா…?’ என்று அவள் நினைக்கும் போதே மணிமேகலை சோனாலியின் காதில் குசு குசு என்று… “நீ தானே இதை பத்தி யோசி ஆனா பதிலே சொல்லாதேன்னு சொன்ன. இப்போ சார் கூப்பிடுறார்...நான் என்ன பண்ண…” என்று சிறுபிள்ளை போல் தன்னை கேட்டவளை பார்த்து…
‘இவ என்னை நல்லா வெச்சி செய்யிறாளே…கடவுளே சார் கிட்ட என்ன மாட்டி விடாம விடா மாட்டா போல…’ என்று நினைத்தாலும், மணிமேகலையின் கேள்விக்கு பதிலாய்…
“அது தான் நீ யோசிக்கிறேன் என்றதை சொல்.” என்று சொன்னவள் ...ஜான் விக்டரை கண் காட்டி… “ஏய் சார் நம்மையே பாக்குறார். அவருக்கு இப்போ என்னன்னு பதில் சொல்.” என்று சொன்னதும் தான் மணிமேகலை ஜான் விக்டரை பார்த்தாள்.
பின் பொத்தாம் பொதுவாக… “வர்றேன்.” என்பது போல் தலையாட்டி வைத்தாள்.
ஜான் விக்டர் மணிமேகலையின் தலையாட்டலை பார்த்த பின் தான் வகுப்பறையைய் விட்டே சென்றான். இதை அனைவரும் பார்த்து தான் இருந்தனர்.
ஜான் விக்டரின் அழைப்புக்கு ஏற்ப மணிமேகலை கல்லூரியில் அன்றைய வகுப்பு அனைத்தும் முடிந்த பின் ஜான் விக்டர் அமர்ந்து இருந்த அறையை நோக்கி சென்றாள்.
மணிமேகலையை பார்த்த்தும் தன் மடிகணினியில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டு இருந்த ஜான் விக்டர் அதன் மேல் இருந்த கண்ணை நகர்த்து மணிமேகலையை பார்த்தான்.
பின்…“டாட் ஏதோ டாகுமெண்ட்ஸ் அனுப்பி இருந்தார். அதை தான் பார்த்துட்டு இருந்தேன்.” என்று விளக்கம் சொல்லியவனிடம்…
“நான் டிஸ்ட்டப் பண்ணிட்டேனா சார்.” என்று தயங்கிய வாறு மணிமேகலை கேட்டாள்.
“நோ..நோ...நீ எனக்கு எப்போவும் டிஸ்ட்டப் இல்ல. நீ வந்ததை விட… எனக்கு எந்த வேலையும் முக்கியம் இல்லை.” என்று ஜான் விக்டர் சொன்னான்.
மணிமேகலை அவன் வார்த்தைகள் காதில் விழுந்தன. ஆனால் அவனை தலை நிமிர்ந்து பாராது தரையை பார்த்து குனிந்த வாக்கில் நின்றுக் கொண்டு இருந்த மணிமேகலையின் யோசனை அடுத்து என்ன சொல்வானோ… அடுத்து அவன் வாயில் இருந்து என்ன வார்த்தை வருமோ என்று ஒரு வித பதட்டத்துடன் தான் நின்றுக் கொண்டு இருந்தாள்.
“மேகலை நீ இந்த ஆபிசுக்கு போனா...படிக்கிற ஸ்டுடண்டுகளுக்கு வேலைக்கு உண்டான ட்ரைனிங் இங்கு கொடுப்பாங்க.இன்னைக்கு வேண்டாம். டைமாயிடுச்சி...நாளைக்கு காலேஜ் முடிஞ்சதும் இங்கு போய் பார். நீ வருவேன்னு நான் சொல்லிட்டேன். தனியா போக பிடிக்கலேன்னா உன் பக்கத்துல உட்கார்ந்து இருப்பாளே…” என்று அவன் யோசிக்க…
மணிமேகலை… “சோனாலி சார்.” என்று சொன்னாள்.
“ஆ சோனாலி அவங்களையும் கூட அழச்சிக்க...அப்புறம் க்ளாஸ்லே எல்லோர் கிட்டேயும் சொல்லிடாதே…அத்தனை பேருக்கு எல்லாம் இப்போதைக்கு அங்கு இடம் இல்லை.” என்று சொல்லி விட்டு அவளிடம் ஒரு விசிட்டிங் கார்ட்டை கொடுத்து விட்டு...நீ போகலாம் என்பது போல் அவன் வேலையை பார்க்க தொடங்கி விட்டான்.
அவ்வளவு தான் என்பது போல் அவன் வேலை பார்ப்பதை பார்த்து மணிமேகலை தான் ஙே...என்று நிற்க்கும் படி ஆனது.
சிறிது நேரம் கழித்து நிமிர்ந்து பார்த்த ஜான் விக்டர்...போகாது அங்கேயே நின்றுக் கொண்டு இருந்த மணிமேகலையை பார்த்து…
“என்ன மேகலை என்னிடம் ஏதாவது கேட்கனுமா…?” என்பது போல் கேட்டான்.
அவன் கேள்வியில் தான் நாம் போகாமல் இங்கேயே நின்று விட்டோம் என்பதை உணர்ந்த மணிமேகலை…
“இல்ல சார். இல்ல.” என்று அவசரமாய் சொல்லி விட்டு அங்கு இருந்து சென்றாள்.
அவள் சென்ற பின் ஒரு மர்ம புன்னகையை சிந்திய ஜான் விக்டர்…’ நான் என் விருப்பத்தை சொல்வேன்னு நினச்சி இருப்ப... அப்படி சொல்லி இருந்தா கண்டிப்பா இன்னைக்கு எனக்கு சாதகமான பதிலை நீ கொடுத்து இருக்க மாட்ட…
மூன்று நாள் முன் கூட என் விருப்பத்தை சொல்லி இருந்தா அன்றே என்னை பேசி கட் பண்ணி விட்டு இருப்ப....அதான் என் விருப்பத்தை அன்றும் சொல்லலே...இன்றும் சொல்லலே… ஆனா நான் என்னைக்கு சொல்றேன்னோ அன்று நீ என் விருப்பத்துக்கு சம்மதம் கொடுப்ப...கொடுக்கும் அன்று தான் நான் சொல்வேன்.
இப்போ நான் என் விருப்பத்தை சொல்லாது உன் ஆசைக்கு ஆராம்பத்தை ஆராம்பித்து வைத்திருக்கும் என்னை தான் இன்று முழுவதும் நினச்சிட்டு இருப்ப’ என்று ஜான் விக்டர் நினைத்துக் கொண்டான்.
ஜான் விக்டர் எண்ணம் போல் தான் விடுதிக்கு வந்ததில் இருந்து… மணிமேகலை சோனாலியிடம்.. “நீ சொன்னது போல் அவர் விருப்பத்தை சொல்லலே சோனு..”
தன் கையில் உள்ள விசிட்டிங்க கார்ட்டை காண்பித்து… “இங்கு போய் நம்ம பாக்க சொன்னார். நமக்கு ட்ரையிங் கொடுப்பாங்கலாம்.” என்று இதையே எத்தனை தடவை எத்தனை எத்தனை முறையில் சொன்னாள் என்று சொன்னவளுக்கும் தெரியாது.
அதை கேட்டுக் கொண்டு இருந்த சோனாலிக்கும் தெரியாது. ஏன்னா கேட்ட எண்ணிக்கை அவ்வளவு.
“நான் எங்கே அவர் விருப்பத்தை சொல்வாருன்னு சொன்னேன். நீ தான் சொன்னா என்ன சொல்வதுன்னு என் கிட்ட கேட்ட...நான் யோசிக்கனும் என்று சொல்ல சொன்னேன்.
ஆனா நீ என்னை இப்படி கடுப்பேத்துவேன்னு தெரிஞ்சி இருந்தா… நான் உன் கிட்ட சொல்லவே யோசிச்சி இருந்து இருப்பேன்.” என்று மிக கடுப்போடு சொன்ன பிறகு தான் மணிமேகலை அமைதியானாள்.
தினம் தினம் மணிமேகலை சோனாலியோடு கல்லூரி… பின் ஜான் விக்டர் சொன்ன பயிற்ச்சி வகுப்புக்கும், சோனாலியோடு செல்வது. அங்கும் பயிற்ச்சி கொடுப்பவரில் ஒருவனாய் ஜான் விக்டர் இருந்தான்.
இப்போது சோனாலிக்கு ஜான் சார் எதற்க்கு மணிமேகலையை பயிற்ச்சி எடுக்க பக்குவமாய் சொன்னார் என்று புரிந்து விட்டது. ஆனால் புரிந்த விசயத்தை வாய் திறந்து மணிமேகலையிடம் சொல்லவில்லை.
சோனாலியை பொறுத்த வரை மணிமேகலை குழந்தை இல்லை. தனியே நாடு விட்டு நாடு வந்து, படிக்க வந்து இருக்கிறாள். எந்த முடிவும் அவள் சுய சிந்தனையில் எடுக்கட்டும்.
அதே போல் ஜான் விக்டர் சாரும் கெட்டவர் கிடையாது. ஜான் விக்டருக்கு மணிமேகலையை பிடித்து இருக்கிறது. அவள் மனதை அடைய இப்படி முயற்ச்சி செய்கிறார். அதில் சோனாலிக்கு தவறு இருப்பது போலவும் தெரியவில்லை.
மணிமேகலைக்கும் ஜான் விக்டர் சாரை பிடித்து இருந்தால்...ஒன்று கூடட்டுமே…என்ற எண்ணத்தில் தெரிந்த விசயத்தை சொல்லாது அமைதி காத்தாள்.
தனக்கு கிடைத்த வாய்ப்பினையும் நன்கு பயன் படுத்திக் கொண்டாள்.சோனாலி வலை தளத்தில் இந்த பயிற்ச்சி வகுப்பை பற்றி போட்டு பார்த்ததில்,
தாங்கள் இந்த பயிற்ச்சியில் நல்ல முறையில் வெற்றி பெற்றால், தங்களுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்பினை பார்த்து மலைத்து போன சோனாலி.. அதை மட்டும் மணிமேகலையிடம் பகிர்ந்தும் கொண்டாள்.
“பரவாயில்ல மணி. சார் நமக்கு நல்லது தான் செய்து இருக்கார்.” என்று சொல்லவும் மணிமேகலையும் மற்றதை எதை பற்றியும் யோசிக்காது , படிப்பு பயிற்ச்சி என்று அவள் காலம் கடந்தும் விட்டது.
ஆம் மணிமேகலை கலிபோனியாவுக்கு வந்து இரண்டு வருடம் முடியும் நிலையில் இருந்தது. அவள் படிப்புக்கு எந்த இடையூறும் இல்லாது இருந்தது.
இடை இடையே லாலி வந்து தனக்கு தேவையானதை ஏதாவது வாங்கி கொடுப்பாள். அப்படி அவள் வாங்கி கொடுக்கும் பொருட்கள் அனைத்தும் முன் நாள் வீராவிடம் பேசும் போது ஏதோ பேச்சு வாக்கில்…
“இது வாங்க வேண்டும்…ஆனால் அது எங்கு கிடைக்கும் என்று எனக்கு தெரியவில்லை. யாரு கிட்டயாவது கேட்டு தான் பார்க்கனும்.” என்று மணிமேகலை சொன்ன பொருள்களாய் தான் இருக்கும்.
லாலியிடம் யார் இதை வாங்கி கொடுக்க சொல்லி இருப்பார் என்று தெரியாத அளவுக்கு மணிமேகலை முட்டாள் இல்லையே…
பரவாயில்ல வட்டிக்காரன் முழுசா இன்னும் மாறல...சின்ன வயசு நல்லவன் அவனுக்குள் ஒளிந்துக் கொண்டு தான் இருக்கிறான் என்று அவள் நினைத்துக் கொண்டாள்.
அவள் இவ்வாறு நினைப்பதற்க்கு ஒரு காரணம் இருக்கிறது. அவள் வசுந்தராவுடன் பள்ளிக்கு சென்று கொண்டு இருக்கும் சமயம். அப்போது அவள் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தாள்.
பொது தேர்வு என்பதால், இவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடந்துக் கொண்டு இருக்கும் சமயம். அனைத்து வகுப்பு மாணவ மாணவியர்களும் சென்று விட்டனர்.
பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, படிக்கும் பிள்ளைகள் மட்டும் தங்கள் சிறப்பு வகுப்பு முடிந்த பின் அவர்கள் தத்தம் வீட்டுக்கு செல்ல வேண்டும்.
அதனால் அவர்கள் நடந்து வந்துக் கொண்டு இருந்த வீதியில் ஜன நடமாட்டம் அவ்வளவாக இல்லை. வசுவிடம் எப்போதும் போல் பேசிக் கொண்டே கீழ் கண்ணால் பார்த்துக் கொண்டு வந்தவள் கண்ணில் மாட்டியது…
தடி தடியான முரட்டு ஆண்களின் பாத சுவடு. சட்டென்று அந்த கீழ் பார்வையை மேல் நோக்கிய மணிமேகலை...அங்கு ஒரு ஆணை நான்கு தடி தாண்டவராயர்கள் அடித்து தும்சம் செய்துக் கொண்டு இருந்தனர்.
அடி வாங்கியவன்.. “சார் ஒரு மாதம்… ஒரு மாதம் போதும் சார். நான் அந்த ஒரு மாதம் வட்டியும் சேர்த்து பணத்தை கொடுத்துடுறேன் சார். பெண்டாட்டிக்கு பிரசவம் சார். அதான் பணத்தை எனக்கு டைமுக்கு கொடுக்க முடியல சார்.” என்று அடித்தவனின் காலில் விழாத குறையாக அடி வாங்கியவன் கெஞ்சிக் கொண்டு இருந்தான்.
அதற்க்கு அடி கொடுத்தவனில் ஒருவன்… “உன் பொண்டாட்டிக்கு மாசம் மாசம் பிரசவம் நடக்குமா…?” என்று கேட்க…
அதற்க்கு இன்னொருவன் சிரித்துக் கொண்டே… “அது தான் வேலைக்கும் போகாம, முழு நேரமா இதே வேலையா இருக்கியா…?” என்று கிண்டல் அடித்தான்.
திரும்பவும் அடி வாங்கியவன் அவர்கள் பேசுவதை பொருட்படுத்தாது… “சார் சார் ஒரு மாதம் டைம் கொடுங்க சார். நான் எப்படியாவது கொடுத்துடுறேன்.” என்று இந்த தடவை அடி வாங்கியவன், அவர்கள் காலிலேயே விழுந்து விட்டான்.
“இதையே தான்டா நீ ஒவ்வொரு மாதமும் சொல்லிட்டு இருக்க...அதுவும் எங்க கிட்ட அடமானம் வெச்ச பத்திரத்துக்கு, மாற்று பத்திரம் ரெடி பண்ணிட்டு இருக்கியாமே…” என்று அடியாட்களில் ஒருவன் கேட்டதும்,
அடிவாங்கியவன் ஒரு நிமிடம் திகைத்து பின்… “அய்யயோ… நான் அப்படி செய்யல சார். எனக்கு தெரியாதா…V.N பைனான்ஸ்சில் ஏதாவது தில்லு முல்லு செய்தா...வீரா சார் பிண்ணி எடுத்துடுவாருன்னு...நான் செய்யல சார் நான் செய்யல.” என்று கெஞ்சிக் கொண்டு இருந்தவனின் பேச்சை காதில் வாங்காது…
அவர்கள் வந்த வேலையான அடித்து விட்டு பின்… “நாளைக்கு ரிஜிஸ்ட்டர் ஆபிசுக்கு வர்ற...எங்களுக்கு எழுதி கொடுத்த கடன் பத்திரத்தில் இருக்கும் இடத்தை எங்க பைனான்ஸ் பேருக்கு பதிவு செய்து தர்ற…” என்று சொல்லி விட்டு செல்லும் வரை, அனைத்தும் பார்த்த மணிமேகலைக்கு…
வீரா அத்தானா...அன்று தான் மணிமேகலை மனதில் கூட வீரா அத்தான் என்று கடைசியாக நினைத்தது. அடுத்து வீட்டில் வீரா என்ற பெயர் அவள் காதில் விழுந்தால், மணிமேகலையின் மனது தன்னால் வட்டிக்காரன் என்று நினைக்கும் அளவுக்கு மனதில் ஆழ பதிந்து போனது.
அன்று வீரா அத்தானையும் தன்னையும் சேர்த்து வைத்து பேசியதில் இருந்து, வீராவை மணிமேகலை நிமிர்ந்தும் பார்த்தது இல்லை. அவன் பேச்சையும் வீட்டில் எடுத்தது கிடையாது. அதனால் வீராவின் இந்த செயலை யாரிடமும் தன் அன்னை தந்தையிடம் கூட சொல்லவில்லை.
ஆனால் வீராவை பற்றிய தரம் அவளின் மனதில் கொஞ்சம் குறைந்து தான் போனது. எப்போதும் மணிமேகலை வீராவை பார்க்காத போது, அவளின் இந்த வெறுப்பு யாருக்கும் தெரியாது போனது. குறிப்பாய் நம் வீரேந்திரனுக்கு தெரியாமலேயே போய் விட்டது.
பின் இந்த மேல் படிப்பு படிக்க பேச்சு ஆராம்பித்ததில் இருந்து தான், வீராவிடம் கொஞ்சம் கொஞ்சம் பேச தொடங்கியது. அதுவும் பர்சனலாய் இல்லாது, படிப்புக்கு தேவையானதை பேசிக் கொள்ளும் அளவுக்கு.
அங்கு போக என்ன என்ன செய்ய வேண்டும் என்று. அங்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்களை கூட இருந்து வாங்கி கொடுத்தது. இப்படி பொதுவாக தான் அவர்கள் பேச்சு வார்த்தை நடந்தது.
அப்போது எல்லாம் மணிமேகலைக்கு… “மத்தவங்க வயிற்றில் அடித்து நீங்க ஏன் சம்பாதிக்க வேண்டும்…? அது உங்க சந்ததியரை தான் தாக்கும்” என்ற வார்த்தை வாய் வரை வந்து விடும்,
பின் அவளே.. ‘நமக்கு எதுக்கு வம்பு. நம்ம படிப்புக்கு கொடுத்த பணத்தை ஒழுங்கா கொடுத்திடனும். இந்த அடி உதைக்கு, எல்லாம் நம்ம உடம்பு தாங்காது.’ என்று நினைத்துக் கொண்டும் இருந்து இருக்கிறாள்.
இப்போது அதை எல்லாம் நினைத்து பார்த்த மணிமேகலையின் நிலை… “வீரா...நீ வீரா அத்தானா...?வட்டிக்காரனா…?’ என்று புலம்பிக் கொண்டு இருந்தது.
இப்படியாக அவள் வாழ்க்கை, எந்த மாற்றமும் இல்லாது தெளிந்த நீரோடை போல் சென்றுக் கொண்டு இருக்கும் போது தான் வசுந்தராவிடம் இருந்து கைய் பேசியில் அழைப்பு என்ற பெயரில் அவளுக்கு ஒரு வெடி குண்டு வந்தது.
தன் கைய் பேசியில் வசுவின் பெயரை பார்த்து அந்த அழைப்பை ஏற்காது தன் கைய் பேசியில் அவள் பெயரையே பார்த்துக் கொண்டு இருந்தாள். மணிமேகலை கலிபோனியா வந்த புதியதில் இந்த நாட்டின் நம்பரை வசுவுக்கு சொல்லி…
“நீ எப்போ என்றாலும் பேசுடி. நானும் எனக்கு டைம் கிடைக்கும் போது எல்லாம் பேசுறேன்.” என்று சொன்னதற்க்கு…
வசுந்தரா… “ஆ நீ எனக்கு போன் போட போற..போடி நீ என்னை மறந்துடுவ.” என்று சொன்னவளுக்கு…
மணிமேகலை தவறாது வாரம் இரு முறை அழைத்து விடுவாள். முதல் ஒரு மாதத்திற்க்கு வசுவும் மணிமேகலையிடம் நன்றாக தான் பேசினாள்.
பின்… “எனக்கு சென்னையில் வேலை கிடச்சி இருக்குடி.” என்று சொன்னவள்..அந்த வேலை எப்படி கிடைத்தது…? யார் வாங்கி கொடுத்தது…? என்று கூட சொல்லாது சென்னைக்கும் பறந்து விட்டாள்.
சென்னைக்கு போனதும் பேசியில் அழைக்கிறேன் என்று சொன்னவள். அழைக்காது போகவே மணிமேகலை தான், புது இடம். புது சூழலில் நம்மை அழைக்க மறந்து இருப்பாள்.
நானும் அவளுக்கு கல்லூரியில் சேர்ந்து மூன்று வாரம் கழித்து தானே அழைத்தது என்று நினைத்து, வசுவுக்கு அழைத்து பேசினாள்.
வசுவும் மணிமேகலையிடம் பேசினாள் தான். ஆனால் வசுவின் பேச்சில் முன் இருந்த அந்த ஒட்டுதல் இல்லையோ என்று அவளிடம் பேசி போனை வைக்கும் ஒவ்வொரு நாளும் நினைப்பாள்.
ஒரு சமயம் கிடையாது. பல சமயம்…மணிமேகலை பேசிக் கொண்டு இருக்கும் போது… வசு… “மணி எனக்கு வேற கால்ல இருந்து போன் வருதுப்பா…வெச்சிடு நான் உன்னை கூப்பிடுறேன்.” என்று சொல்லி விட்டு வைத்தவளிடம் இருந்து திரும்ப அவளே ஒரு நாளும் அழைத்தது கிடையாது.
இது போல் ஒரு நாள் பேசியில் அவளிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது… வசு… “மணி அம்மாவிடம் இருந்து போன் வருதுடி நான் அவங்க கிட்ட பேசிட்டு அப்புறம் பேசுறேன்.” என்று சொல்லி பேசியை அணைத்து விட்டாள்.
எப்போதும் போல் அவள் அழைக்காது இருக்க… சரி நாமே அழைக்கலாம் என்று நினைத்து அரை மணி நேரம் கழித்து வசுவுக்கு பேசியில் அழைத்தாள்.
அப்போது அவளின் பேசி வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளது போல் எங்கேஜ்ட்டாக வந்தது.
சரி வீட்டுக்கு பேசுகிறாள் என்று நினைத்து. திரும்பவும் அரை மணிநேரம் கழித்து அழைக்க...அப்போதும் அவளின் பேசி வேறு ஒருவருடன் தான் தொடர்பில் உள்ளதாக தகவல் வந்தது.
சரி என்று பேசியையை வைத்த அடுத்த நொடி, வீராவிடம் இருந்து வந்த அழைப்பில் வசுவின் அம்மா பேசினார்கள்.
பேசிய விசயம் இது தான்…“நீ சொல்லி தான் உன் அண்ணன் வசுவுக்கு வேலை வாங்கி கொடுத்தாராமே ரொம்ப நன்றிம்மா..
நீயும் அவளும் தான் எப்போவும் சுத்திட்டு இருப்பிங்க. நீ போயிட்டு அவ ஒருத்தி இங்கு வெட்டு வெட்டுன்னு இருந்தா...அதை உன் கிட்ட சொன்னதும் உடனே நீ உங்க அண்னாவுக்கு சொல்லி அவன் ஆபிசிலேயே வேலை வாங்கி கொடுத்ததில் சந்தோஷம் தான்மா…
என்ன ஒன்னு பிள்ளைய பிரிஞ்சி கொஞ்சம் கஷ்டமா இருக்கும்மா...அவளுக்கு அங்கு வேலையும் ஜாஸ்தி போல...வாரத்துக்கு ஒரு தடவை தான் போன் பண்ற…
இந்த தடவை பத்து நாள் ஆச்சி இன்னும் அவ கிட்ட இருந்து போன் வரல… வேலை தான் ஜாஸ்தி போல.” என்று சொல்லி விட்டு திரும்பவும் வீராவின் பேசியை வீராவிடம் கொடுத்து விட்டார் போல..
வீரா பேசியை வாங்கியவன்… “உன் கிட்ட கொஞ்ச நேரம் கழிச்சி பேசுறேன்.” என்று சொல்லி வைத்தவன்..சொன்னது போலவே அழைத்தான்.
“நீ என் கிட்ட இருந்து ஏதாவது மறைக்கிறியா…?” என்று நேரிடையாகவே வீரா கேட்டு விட்டான்.
அவள் என்ன என்று சொல்லுவாள்…? தான் அங்கு இருக்கும் போது வசு சித்தி மகனை பார்வையிட்டு இருந்தாள் என்றா சொல்லுவாள்.
இல்லை நெருங்கிய தோழியே தன்னை ஒரு பகடை காயாக உபயோகித்து இருப்பதையும், அதை கூட தன்னிடம் சொல்லாமல் அனைத்தையும் தன்னிடம் இருந்து மறைத்து விட்டாள் என்றா சொல்ல முடியும்…?
எதுவும் தெரியாதது போல்… “நீங்க என்ன சொல்றிங்க…?” என்று தான் மணிமேகலை கேட்டு வைத்தாள்.
“நீ வாசுவிடம் பேசுனியா…?” என்ற வீராவின் கேள்வி எதற்க்கு என்று புரிந்தமையால்….
“ஒரு நாள் அம்மாவை கூப்பிடும் போது… பெரிய சித்தியின் பையன் தான் போன எடுத்தாங்க...அப்போ பேசினேன்.”
“ஓ உன் அம்மா போனை வாசு எடுத்தான். சரி நம்புறேன். அவன் எடுத்ததும் உன் பிரண்ட்டுக்கு வேலைக்கு கேட்கும் அளவுக்கு நீ அவன் கிட்ட சகஜமா பேசு இருக்க...ஆனா பாரு இவ்வளவு சகஜமா பேசி கூட உன் வாயில் இருந்து அவனை பெயர் சொல்லியோ...இல்ல உறவு முறை சொல்லியோ கூட கூப்பிட முடியாதது தான் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு.” என்று சொன்ன வீராவின் பேச்சு ஒவ்வொன்றும் நான் உன் பேச்சை சுத்தமாய் நம்ப வில்லை என்று சொல்லாமல் சொல்லியது.
அதற்க்கு மணிமேகலையிடம் இருந்து ஒரு வார்த்தை கூட வராது அமைதியாக இருக்க… “சரி என்னவோ செய்யிற...உனக்கு எந்த பிரச்சனையும் வராம பார்த்துக்க. அது தான் என்னால சொல்ல முடியும்.” என்று சொல்லி வீரா வைத்து விட்டான்.
அடுத்து வீரா பேசும் போது தப்பி தவறிக்கூட ஒரு வார்த்தை கூட வசுவுக்கு எப்படி வேலை கிடைத்த்து என்று கேட்கவில்லை.
அதே போல் தான் அடுத்து மணிமேகலை வசுவை அழைக்கவில்லை. தன்னிடம் ஏன் இதை மறைத்தே…? இதில் தன் பெயரை ஏன் உபயோகிச்ச என்று கேட்க கூட அழைக்கவில்லை.
அதோடு அந்த சம்பவத்தை மட்டும் இல்லை, அவளையே மறந்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும். அவளும் அழைக்கவில்லை என்பது வேறு விசயம். அது நடந்து ஒரு வருடம் ஆகிறது.
இன்று ஏன் அழைக்கிறாள்…? என்று மணிமேகலை யோசித்து முடிக்கும் வரை அவளின் பேசி ஐந்து முறை அடித்து அடித்து ஓய்ந்து போனது.
சோனாலி தான்… “யாருடி போன்ல...? பிடிச்சா பேசு. இல்லேன்னா என் கிட்ட இனி பேசாதேன்னு சொல்லிட்டு போனை வெச்சிடு. எதற்க்கும் ஓடி ஒளியக்கூடாது. தைரியமா எதிர் கொள்ளனும்.” என்று சொன்னதும்…
‘சரி என்ன தான் சொல்றான்னு பார்க்கலாம்.’ என்று நினைத்து மணிமேகலை வசுவின் அழைப்பை ஏற்றாள்.
அந்த பக்கம் அழைப்பி விடுத்த வசு… “ஏய் கல்யாண பொண்ணு எப்படி இருக்க…? நல்லா இருக்கியா…?” என்று ஏதும் நடவாது போல...அதுவும் அவள் தன்னிடம் தினம் பேசுவது போல அவள் பேச்சில்… அவள் சொன்ன கல்யாண பொண்ணு என்ற வார்த்தையை கவனிக்க தவறினாள்.
ஆனால் அவள் அடுத்து சொன்ன… “நட்பில் இருந்து சொந்தமா நாம ஆக போறோம். அதை நினச்சி எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா...இனி நாம ஒரே ஊரு. ஒரே குடும்பம்.” என்ற அவள் வார்த்தையில்…
அவளிடம் பேசக்கூடாது என்ற தன் வைராக்கியத்தை விட்டு… “நீ என்ன சொல்ற…?எனக்கு புரியல…?” என்று மணிமேகலை கேட்கவும் தான்..
“ஒன்னும் இல்ல. ஒன்னும் இல்ல.” என்று அவசரமாக ஏதோ உலறி கொட்டுயவளின் பேச்சில் அவளுக்கு ஏதோ உறுத்தியது.
“வசு நீ என்னிடம் நிறைய மறச்சிட்ட...நான் உன் கிட்ட உண்மையா இருந்த அளவுக்கு, நீ என் கிட்ட உண்மையா இல்ல. சரி நாம ஒதுங்கிடலாமுன்னு நினச்சி ஒதுங்கிட்டேன்.
இப்போ நீயே என்னை அழச்சி பேசுற...அதுவும் ஒரே ஊர். ஒரே குடும்பம் எல்லாம் சொல்ற...திரும்பவும் நீ என்னை வெச்சி ஏதாவது விளையாடுனா நான் சும்மா இருக்க மாட்டேன்.” என்று இது வரை மணிமேகலை வசுந்ராவிடம் பேசாத தோனியில் பேசினாள்.
“என்ன மணி என் கிட்ட நீ இப்படி பேசுற…?நான் உன் கிட்ட இதை எதிர் பார்க்கல” என்னவோ மணிமேகலையின் மீது தான் தவறு என்பது போல் வசுந்தரா பேசி வைக்க…
“இப்போ எதுக்கு என்னை அழச்ச எனக்கு வேலை இருக்கு.” என்று கட்டன்ரைட்டாக பேச..
“இல்ல அடுத்த மாசம் வாசுவுக்கும் எனக்கும் கல்யாணம் அப்புறம்...மத்ததை உன் அமாவே உன் கிட்ட சொல்லுவாங்க.” என்று அவசரமாக பேசியை அணைத்து விட்டாள்.
அப்போது தான் மணிமேகலைக்கு ஒன்று உரைத்தது..அது கடந்த ஒரு வாரமாக வீரா தன்னிடம் பேசாதது. எப்போதும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தன்னை கைய் பேசியில் அழைத்து பேசிவிடுவான்.
இங்கு வந்த இந்த இரண்டு வருடமாக இது தான் தொடர்கிறது. முதலில் எல்லாம் இந்த வட்டிக்காரன் ஏன் நம்ம கிட்ட அடிக்கடி பேசுறான் என்று நினைத்தவள்…
பின் தெரியாத ஊரில். தெரிந்த நபர் அழைத்த அந்த அழைப்பை மணிமேகலையே எதிர் பார்க்க தொடங்கினாள்.
அதுவும் வீரா பேச்சு மொத்தமும், என் தேவைகள். என் நலன். எனக்கு எதாவது பிரச்சனை இருக்கா…? என் உடல் நலம்...இதுவாக தான் இருக்கும். அவனின் அந்த அக்கறை அப்போதைக்கு அவளுக்கு மிக தேவையாக இருந்தது.
அதுவும் இருந்த ஒரே நட்பு வசு தன்னிடம் இப்படி நடந்துக் கொண்ட சமயத்தில், வீராவின் அந்த பேச்சு அவளுக்கு மிக தேவையாகவும் இருந்தது. அப்படி தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தவன், ஒரு வாரமாய் ஏன் தன்னை அழைக்கவில்லை…? என்ற நெருடல் அவள் மனதில் ஆராம்பித்த நொடி… மணிமேகலை முதன் முதலாய் அவளாகவே வீராவுக்கு பேசியில் அழைப்பு விடுத்தாள்.
அந்த பக்கம் வீரா அழைப்பை ஏற்றதும்.. அவன் கேட்ட முதல் கேள்வி… “சிட்டு ஏதாவது பிரச்சனையா…?” என்பதே...நீண்ட வருடத்திற்க்கு பின் அவனின் இந்த சிட்டு என்ற அழைப்பு அவளை ஏதோ செய்தது.