Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் நினைவுகளில் நானிருக்க...15

  • Thread Author

“பயப்படும் படி ஒன்னும் இல்ல. அதிர்ச்சியில தான் மயங்கி விழுந்து இருக்காங்க. “ என்று சொல்லி விட்டு அந்த மருத்துவர் சென்று விட்டார். அந்த மருத்துவர் சொன்னதை கேட்ட பின்னும் வில்சன் விக்டரின் பயம் போகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

“டாட் அது தான் டாக்டர் ஜஸ்ட் அதிர்ச்சின்னு சொல்லிடாரே இன்னும் ஏன் டாட் டென்ஷனா இருக்கிங்க…ஒன்னும் இல்ல அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது.” என்று தந்தைக்கு தைரியம் சொன்ன ஜான் விக்டர், அன்னை இருக்கும் அறைக்கு அழைத்து சென்றான்.

படுக்கையில் படுத்துக் கொண்டு இருந்த மலர்விழியை பார்த்ததும் வில்சனுக்கு என்னவோ போல் ஆனது. திருமணம் முடிந்து இத்தனை வருடத்தில் ஒரு முறை கூட நோய் நொடி என்று அவள் படுத்து அவர் பார்த்தது கிடையாது.

வீட்டில் அத்தனை வேலையாள் இருந்தும் சமைப்பது, சாப்பாடு பரிமாறுவதை மலர்விழி தான் பார்த்துக் கொள்வார். எத்தனையோ முறை வில்சன் கேட்டு இருக்கிறார்…

“இதை எல்லாம் வேலையாள் பார்த்துக்க மாட்டாங்கலா..?நீ ஏன் உன்னை சிரமப்படுத்திக்கிற என்று…”

அவர்கள் எல்லாம் நீங்க கொடுக்கும் பணத்திற்க்கு சமைக்கிறவங்க..அவங்க சமையல் நல்லா இருக்கனும் என்று எண்ணை அதிகமாக நெய் தூக்கலாக மசாலா..வாரி கொட்டியும் சமைப்பாங்க…

ஆனா நான் சமைக்கும் போது உங்க ஆரோக்கியமும், மகன் ஆரோக்கியமும் நினச்சி எது எவ்வளவு போடனும்… என்று பார்த்து பார்த்து போடுவேன். அதே போல் தான் உங்களுக்கும் ஜானுக்கு என்ன பிடிக்கும்...எது பிடிக்காதுன்னு எனக்கு தான் தெரியும்.

பிடிச்சது அதிகமாவும் பிடிக்காததை கம்மியாவும் வைப்பேன். இது எல்லாம் வேலையாள் பார்த்து செய்வாங்களா….?” என்ற மனைவியின் பேச்சில்...வாயை பொத்திய வில்சன் விக்டர்.

“சமையல் சாம்ராஜ்ஜியத்தை நீயே வெச்சிக்க மலர் அதை யார் கிட்டேயும் கொடுத்துடாதே…” என்று சரண்டர் ஆகிவிடுவார்.

அப்போதும் மலர் விழி விடாது… “கொடுப்பேன். என் மருமக கிட்ட கொடுப்பேன்.” என்று சொல்லும் மனைவியிடம்…

“இந்த காலத்து பெண்ணுங்க கிட்ட நீ இதை எல்லாம் எதிர் பார்க்காதே மலர். அப்புறம் உனக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும்.” என்று அவர் தன் மனைவி பின் ஏமாந்து போக கூடாதே என்று நிதர்சனத்தை சொல்வார்.

அதற்க்கும் மலர் விழி… “எனக்கு மருமகளா வரவ..எங்க ஊரு பொண்ணா இருந்தா நல்லா இருக்கும். அவங்க எல்லாம் எடுத்து செய்வாங்க.”

பாவம் காலம் மாற்றம் தெரியாது மலர் விழி பேசிக் கொண்டு இருக்க...வில்சன் விக்டர் நிதர்சனம் என்று வரும் போது புரியட்டும் என்று அப்போதைக்கு அந்த பேச்சை விட்டு விட்டார்.

இன்று அவள் ஆசைப்படி மகனின் திருமணம் அவள் ஊரை சேர்ந்த பெண்ணோடு நடைபெற உள்ள போது...இப்படி அதிர்ச்சியாகியது. அதுவும் மணிமேகலையின் பேசியை பார்த்து தான் ஏதோ அதிர்ச்சி. இதை மலர் விழியின் பக்கத்தில் வில்சன் நின்றுக் கொண்டு இருந்ததில் இருந்து அவர் அறிந்தது.

இப்படி அதிர்ச்சியாகி விழும் அளவுக்கு அந்த பேசியில் என்ன…? என்று வில்சன் விக்டர் யோசனையில் ஆழும் வேளயில்…

மலர் விழி மெல்ல கண் திறந்தார். கண் திறந்த மலர் விழி இருப்பக்கமும் தன் மகன், கணவன் நின்றுக் கொண்டு இருப்பதை பார்த்து இருகையையும் அவர்களை நோக்கி நீட்ட… இருவரும் அதை பற்றிக் கொண்டனர்.

ஜான் விக்டர்… “அம்மா ஒன்னும் இல்ல. பயப்படாதிங்க.” மலர்விழியின் கையில் உள்ள நடுக்கத்தை உணர்ந்தவனாய் சொன்னான். ஆனால் வில்சன் விக்டர் எதுவும் கூறாது தன் மனையின் முகத்தையே பார்த்திருந்தார்.

சிறு விசயத்திற்க்கு எல்லாம் தன் மனைவி விழும் அளவுக்கு அதிர்ச்சியாக மாட்டாள். அவரின் இத்தனை வருட திருமணவாழ்க்கையில் இருந்தும்...அந்த வயதிலேயே ஒரு சிறு கிராமத்தில் பிறந்து, அந்த அளவுக்கு படிக்காத போதே...தன் குடும்ப சூழ்நிலைக்காக நாடு விட்டு நாடு வந்தவள். அந்த அளவுக்கு தைரியமானவள் இப்படி அதிர்ச்சியாகி இருக்கிறாள் என்றால் ஏதோ இருக்கு...என்று நினைத்துக் கொண்டே எதுவும் பேசாது அமைதியாக..மனைவியின் கையை அழுத்தி பிடித்த வாறு நின்றுக் கொண்டு இருந்தார்.

அவர் நினைத்தது போல் தான் மலர் விழி தன் மகனை பார்த்து… “ஜான் இந்த கல்யாணம் நடக்காது.” என்று சொல்லி விட்டு அவர் கண்ணை மூடிக் கொண்டார். மூடிய கண்ணோரத்தில் வழிந்த கண்ணீர் அவரின் துக்கத்தை எடுத்துரைத்தது.

வில்சன் எதுவும் பேசாது தன் மனைவியின் கண்ணீரை திடைத்தார். ஆனால் ஜான் விக்டர்… “அம்மா நீங்க ராசிய பாக்குறிங்களா…? இந்த அதிர்ஷ்ட்டம் துரதிஷ்ட்டம்...இப்போவும் நீங்க நம்புறது எனக்கு ஆச்சரியமா இருக்கும்மா...அதுவும் இந்த நாட்டில் இருந்துக் கொண்டு.” என்று சொல்லிக் கொண்டு வந்த ஜான் விக்டர் அன்னை கண்ணை திறந்து தன்னை பார்த்த பார்வையில், அடுத்து பேசாது வாய் மூடிக் கொண்டாலும், பார்வையில் தன் எதிர்ப்பை தன் அன்னையிடம் காட்டினான்.

“இந்த காலம்...எந்த காலம் ஆனாலும்...இந்த நாடு எந்த நாடு ஆனாலும்...தங்கையை கல்யாணம் செய்துக்க முடியாது ஜான்.” என்ற மலர்விழியின் பேச்சில்...தந்தை மகன் இருவரும் அதிர்ச்சியாகி ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

வில்சன் விக்டருக்காவது....ஏதோ இப்படி இருக்குமா…?என்ற சந்தேகத்துடன் தன் மனைவியை பார்த்தார்.ஆனால் ஜான் விக்டருக்கோ எப்படி அவள் என் தங்கையாவள் என்று குழம்பி போனவனாய் தன் தந்தையை பார்த்தான்.

மகனின் பார்வையும்...அதில் தெரிந்த குழப்பத்தையும் பார்த்து...தந்தையிடம் ஏதாவது ஏடா கூடமாக பேசி விட போகிறான் என்று…

“மணி என் அக்காவோட மகள்.” என்று பேச்சை நீடிக்காது சொல்ல வேண்டியதை சொல்லி விட்டார் மலர் விழி.

வில்சன் விக்டர்… “உங்க அக்கா பேரு கயல் விழின்னு தானே சொல்வீங்க…” என்று தன் சந்தேகத்தை கேட்டார்.

“ஆமா எங்க அக்கா பேரு கயல் விழி தான்.” என்று மலர் விழி சொன்னதும்…

ஜான் வில்சன் அவரசமா… “மணி அம்மா பேரு வரலட்சுமி...நீங்க யாரையோ நினச்சி பேசிட்டு இருக்கிங்கமா..கொஞ்ச நேரத்துல எனக்கு எப்படியோ ஆயிடுச்சி...மணியே நான் கல்யாணம் செய்துக்குறனோ இல்லையோ..

.ஆனா ஒரு தங்கை உறவு முறை உள்ள பெண்ணை கல்யாணம் செய்துக்க பார்த்தேன் என்று நினைச்சாலே...சீ...சீ...போம்மா நான் ரொம்ப பயந்துட்டேன்.நீங்க சொன்னதை பார்த்து.” என்று சொல்லிக் கொண்டே அங்கு இருந்த இருக்கையில் ஆசுவாசமாய் அமர்ந்து கண்ணை மூடிக் கொண்டான்.

மலர் விழி சொன்ன கல்யாணம் நடக்காது என்ற வார்த்தையில் ஜான் விக்டருக்கு கோபம் வந்தது தான். அந்த கோபம் கூட கல்யாண புடவை எடுக்க சென்ற இட்த்தில் இப்படி ஆகி விட்டதே என்று மேகலையின் ராசியை நினைத்து கல்யாணம் செய்துக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று நினைத்து தான் தன் அன்னை மீது கோபம் கொண்டான்.

ஆனால் அடுத்து மலர் விழி சொன்ன அவள் உன் தங்கை என்ற வார்த்தையில் எந்த முறையில் அவள் எனக்கு தங்கையாகிறாள் என்று நினைத்தை விட...தங்கையை கல்யாணம் செய்ய நினைத்தது நினைத்து தான் அவன் வெட்கி போனான்.

ஆனால் மேகலையின் அம்மா பெயரை அம்மா மாற்றி சொல்லவும் தான் ஜான் விக்டருக்கு அப்பாடி நான் உறவு முறை கெட்டு நடக்கவில்லை என்று நினைத்து அவன் மனம் ஆசுவாசம் ஆனது.

ஆனால் அந்த ஆசுவாசம் ஜான் விக்டருக்கு கொஞ்ச நேரம் கூட கிட்டவில்லை. “மன்னிச்சிக்க ஜான் உன்னுடைய இந்த நிம்மதியை கெடுப்பதற்க்கு.” என்று சொன்ன மலர் விழி…

தன் கணவனின் கையில் அழுத்ததை கூட்டியவர் தன் மகனை பார்த்து… “மணி அம்மா என் அக்கா தான். உடன் பிறந்த சகோதரியின் முகம் எனக்கு மறக்காது ஜான். சரி முகம் சாயல் ஒருவர் போல் ஒருவர் இருப்பர். ஆனால் அந்த நெற்றி ஓரத்தில் ஒரு சிறு தழும்பு இருக்கும். அதே போல் அவர்கள் வலது கையில் ஆறுவிரல் இருக்கும்… இது இரண்டையும் மணியின் அம்மா புகைப்படத்தில் பார்த்தேன் ஜான்.”

அப்புகைப்படத்தை ஜான் கூட பார்த்து இருக்கிறான். அந்த புகைப்படத்தில் மணிமேகலையின் அம்மா தன் முடியை ஒதுக்கி விடுவது போல் இருக்கும். அந்த புகைப்படத்தின் அப்பட்ட தன்மையை பார்த்து தான் ஜான் விக்டர் மணிமேகலையிடம்..

“உங்க அம்மா ரொம்ப அழகா இருக்காங்க..” என்று சொல்லி விட்டு .அந்த ஆறுவிரலையும் சுட்டிக் காட்டி கூட அப்போது ஏதோ ஜான் விக்டர் சொன்னதாக நியாபகம்.

ஆனால் தன் அன்னை சொன்ன அடையாளங்கள்..உருவம் ஒத்து போகும் ஆனால் அம்மா சொன்னது போல்...அந்த நெற்றி தழும்பு கூட ஏதோ என்று விட்டு விடலாம். ஆனால் அந்த ஆறுவிரல்…

தன் இரு கையையும் தலை மேல் தாங்கி அப்படியே சோர்ந்து போய் விட்டான். என்ன இது..?எப்படி…?என்று ஜான் யோசிக்க யோசிக்க அவன் தலையில் யாரோ அடிப்பது போல் விண் விண் என்று வலி எடுக்க ஆராம்பித்ததும்…

அதன் பாரம் தாளாது… “ஆ...ஆ…” என்று கத்தியவன் அங்கு இருக்கும் பொருட்களை தூக்கி போட்டுக் கொண்டு இருந்தான்.

மலர் விழியும், வில்சன் விக்டரும், தன் மகனின் செய்கையில் ஆடி போய் அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டனர்.

அறையில் கேட்ட சத்தத்தில் செவிலியர்கள் இருவர் ஓடி வந்து பார்த்து,

அங்கு இருந்த எச்சரிக்கை மணியை அடித்து துணைக்கு இருவரையும் அழைத்து ஜானை ஒரு நிலையில் அமர வைக்க அங்கு இருந்தவர்களுக்கு போதும் போதும் என்று ஆகி விட்டது.

பின் டாக்டர் வந்து ஜான் விக்டருக்கு தூக்கம் வர ஒரு ஊசியை போட்டவர்… வில்சன் விக்டரிடம்.. “தூங்கி எழுந்ததும் அடுத்து என்னன்னு பாக்கலாம். ஆனா இது போல எமோஷனல் அவர் உடம்புக்கு நல்லது இல்லை.” என்ற அவர் பேச்சில் அடுத்து என்ன என்பது போல் கணவன் மனைவி இருவரும் ஜான் விக்டர் எழுவதற்க்காக காத்திருந்தனர்.

அதே போல் தான் கல்லூரி விடுதியில் இருக்கும் மணிமேகலையும் மாலில் ஆன்ட்டி விழுந்ததும் அங்கிள் சொன்ன… “நேரம் ஆயிடுச்சி நீங்க உங்க விடுதிக்கு போங்கமா.” என்ற வில்சன் பேச்சில்…

“இல்ல அங்கிள் நானும் வர்றேன்னே...” காரை பார்க்கிங்கில் இருந்து எடுத்து வந்த ஜான் விக்டரை பார்த்துக் கொண்டே மணிமேகலை வில்சன் விக்டரிடம் சொன்னாள்.

அதற்க்கு ஜான் விக்டர்… “மேகலை டைமாயிடுச்சி..நீ போ நாங்க அம்மாவை கூடிட்டு போகனும். நீ நேரம் ஆக்காதே…” என்று அவன் பட பட பேச்சில்…

அப்போது தான் தன்னால் ஆன்ட்டியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நேரம் ஆகிறது என்று உணர்ந்தவளாய்…

“சரி.” என்று தலையாட்டினாள்.

மணிமேகலையின் கவலை படர்ந்த முகத்தை பார்த்து… “நான் எதுன்னாலும் உனக்கு கால் பண்றேன்மா…” என்று சொன்னவர்கள் இன்னும் அழைக்காததை பார்த்து…

“ஏன் இன்னும் கூப்பிடல...ஆன்ட்டிக்கு ஏதாவது பெரிய பிரச்சனையா…?” என்று பயந்தவள். அவர்கள் நேரம் சென்று கூட அழைக்காததை பார்த்து, சரி நாமே அழைக்கலாம் என்று முதலில் ஜான் விக்டருக்கு அழைத்தவள்...அந்த அழைப்பு ஏற்காமல் போக...பின் வில்சன் விக்டருக்கு அழைத்தாள்.

அந்த அழைப்பும் ஏற்காமல் இருக்க...அவளின் பயம் அதிகமாக… சோனாலியிடம்… “எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஆன்ட்டிக்கு ஏதாவது பெரிய பிரச்சனையோ…?” என்று பயந்த படி கேட்டாள்.

சோனாலியும் இருவரும் அழைப்பை ஏற்காததை பார்த்து மனதில் பயம் எழுந்தாலும் அதை மணியிடம் காட்டாது…

“சேச்சே சும்மா சும்மா பயப்படாதே மணி. பயப்படும் படி எல்லாம் ஒன்னும் இல்ல.” என்று மணிமேகலைக்கு ஆறுதல் கூரும் போதே, இருவரும் அழைக்காதது ஏன் என்று அவளுக்கு புரியவில்லை.

இப்படியே அந்த இரவு கழிந்தது. காலையில் சோனாலியே பயந்து போய் … “வா நாம ஆன்ட்டியை பார்த்துட்டு வரலாம்.” என்று மணிமேகலையை அழைத்தாள்.

“எங்கே போய் பார்ப்பது…?” என்ற மணிமேகலையின் கேள்வியில்...அப்போது தான் சோனாலி ஆம் அவர்கள் எந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள் என்று கூட என்று தெரியதே...என்று யோசித்தவள்..

பின்… “ வீட்டுக்கு போன் போடுடி…” என்று சொல்ல…

மணிமேகலை.. “ஆமாம்லே…” என்று தன் கைய் பேசியில் பதித்து வைத்திருந்த ஜான் வீட்டில் அலைபேசிக்கு அழைத்தாள்.

அந்த பக்கம் அழைப்பு எடுக்கப்பட்டதும்.. . தான் என்ன என்று கேட்கும் முன்னவே… “சாரும் மேடமும் இன்னும் ஹாஸ்பிட்டலில் இருந்து வரல.” என்று ஏதோ சொல்லிக் கொடுத்தவன் ஒப்பிப்பது போல பேசினான் அந்த வேலையாள்.

“எந்த ஹாஸ்பிட்டலில் சேர்த்து இருக்காங்க…?” என்ற மணிமேகலையின் கேள்விக்கு, கொஞ்ச நேரம் அந்த பக்கத்தில் இருந்து பதில் இல்லை.

பின்… “எனக்கு தெரியாது மேடம்…” என்ற சொல்லோடு அந்த பக்கம் அழைப்பு அணைத்து வைக்கப்பட்டு விட்டது.

இது மணிமேகலைக்கு ஏதோ ஒரு முரன்பாடாய் தோன்றியது. எப்போதும் தான் அவர்களிடம் ஒதுக்கம் காமிக்க...அவர்கள் தான் ஆசையோடு தன்னிடம் பேசுவர். ஜான் சார் அல்லாது அவர்கள் குடும்பமே தன்னிடம் பாசம் காண்பிக்க தான்..

தன் வீட்டில் தன்னை கேட்காது நடைபெறும் இந்த திருமணத்தை நிறுத்தவும்...தான் இங்கு குடியேறவும் தான் ஜான் விக்டரை திருமணம் செய்ய சம்மதித்தது..

அதோடு ஜான் விக்டர் குடும்பத்திற்க்கும் தன்னை பிடித்து இருப்பதால். திருமணம் முடிந்து கொஞ்ச நாள் கழித்து தன் பெற்றோரையும் இங்கு அழைத்துக் கொள்ளலாம்...என்ற திட்டத்தோடும் தான் இந்த திருமண பேச்சையே இவளே ஆராம்பித்தது.

இப்போது அவர்களின் ஒதுக்கம்...ஏன்…? ஒரு சமயம் தன்னை தவறாய் நினைத்து விட்டார்களா...தானே வலிய சென்று திருமணம் செய்ய கேட்டதை நினைத்து தன் ஒழுக்கத்தை பற்றி….ஏதாவது…? என்று இப்படி அவளுக்குள்ளே யோசித்தவளுக்கு பதில் தான் கிடைத்த பாடில்லை.

இப்படியே ஒரு வாரம் சென்று விட்ட நிலையில் கூட ஜான் விக்டர் வீட்டில் இருந்து அழைப்பு அவர்களுக்கு வராது போனது. திருமணத்திற்க்கு இன்னும் மூன்றே நாள் இருக்கும் வேளயில்...இன்னும் இத்திருமணம் நடக்கும் என்று மணிமேகலை எதிர் பார்க்கவில்லை.

ஆனால் கரணம் தெரிய வேண்டும். அவர்களே வலிய வந்தவர்கள், தான் செல்ல இப்படி ஒன்றும் சொல்லாது இருப்பது அவளை அவமானப்படுத்துவது போல் உணர்ந்தாள்.

அவள் தன் அவமானம் உணர்ந்த நொடி...சோனாலியோடு ஜான் விடர் வீட்டுக்கு சென்று விட்டாள்.

அதை வீடு என்று சொல்ல முடியாது. ஓட்டலின் அந்தஸ்த்து இங்கும் காணப்பட்டது. வீட்டின் வெளியில் அணிவகுத்து நின்ற காரின் எண்ணிகைகளை பார்த்து அனைவரும் இருக்கிறார்கள் என்று நினைத்து தான் வீட்டின்னுள் சென்றனர்.

ஆனால் தங்களை பார்த்ததும் வீட்டின் வேலையாள் அரக்க பறக்க...ஒடி வந்து… “வீட்டில் யாரும் இல்லை.” என்று சொல்லிக் கொண்டே அவர் கண்கள் மேல் தளம் நோக்கி பாய்வதை பார்த்து…

“சரி அவங்க இல்ல தான். நீங்க சொன்னதை நான் நம்பிட்டேன்.” என்று சொன்ன மணிமேகலை…

தொடர்ந்து… “ அவங்க கிட்ட இனி அவங்க ஓடி ஒளிய வேண்டாம். நான் அடுத்த வாரம் இந்தியா போறேன் என்று மட்டும் உங்க முதலாளிங்க கிட்ட சொல்லிடுங்க.” என்று தைரியமாக சொல்லி விட்டே சோனாலியின் கைய் பற்றி இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு போனாள்.

மணிமேகலைக்கு வீட்டுக்குள் இருந்த தைரியம் வெளியில் வந்ததும் ஆட்டம் கண்டு விட்டது…

“எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு சோனா..இப்படி நான் போய் கல்யாணம் செய்துக்கலாமுன்னு கேட்டு அவங்க என்னை பாத்து ஓடி ஒளிவது...நான் என்ன மாதிரி பொண்ணுன்னு அவங்க நினச்சி இருப்பாங்க…

எங்க ஊரில் தான் அவமானப்பட்டு இருந்தேன். இங்கு வந்து படிச்சி வேலைக்கு போய் நல்லா சம்பாதிக்கனும். எங்க அப்பா அம்மாவை என் கூட கூட்டிக்கனும். இனியாவது அவங்க மரியாதையோடு வாழனுமுன்னு நினச்சேன்.

ஆனா இப்போ நானே மரியாதை கெட்டு இந்த நாட்டை விட்டு போக போறேன். நான் எதை நினச்சி மேல் படிப்பு படிக்க ஆசைப்பட்டனோ...அது நிறைவேறாமலேயே போக போகுது.” என்று சொல்லிக் கொண்டு வந்தவளுக்கு… என்ன கட்டுப்படுத்தியும் அழுகையை அடக்கமுடியாது , தாங்கள் வெளியில் இருக்கிறோம் என்பதை கூட மறந்தவளாய் கதறி அழுது விட்டாள்.

சோனாலி பதறி போய்… “மணி இங்கு பாரு அழாதே… அழாதேடி.. நாம வெளியில் இருக்கோம் என்று சொல்லியும்…” மணியின் அழுகை நிற்க்காது போக..

அங்கு வந்த டேக்சியில் அவளை ஏற்றியவளாய் தங்கள் இருப்பிடத்திற்க்கு வந்த பிறகு தான், சோனாலிக்கு கொஞ்சம் நிம்மதி ஏற்ப்பட்டது.

அதே போல் அழுதுக் கொண்டு இருந்த மணிமேகலை ஒரு நிலைக்கு மேல் இனி ஒன்றும் இல்லை போய் அவள் உடல் சோர்வு ஏற்பட...கண்ணை மூடியவளுக்கு தூக்கம் தன்னால் வந்தது.

இங்கு ஜான் விக்டர் வீட்டில் மலர் விழி மணி சென்ற உடன் ஓடி கீழ் தளத்திற்க்கு வந்தவர், மணி சோர்ந்து போய் தங்கள் வீட்டில் இருந்து செல்வதை பார்த்து…

‘கடவுளே...நான் என்ன பாவம் செய்தேன்…? காதல் மணம் புரிந்து என் வீட்டுக்கு போன போது அவர்கள் என்னை ஏற்காது விரட்டி விட்டனர். அதே காதலால் என் ரத்த சொந்தம் என்னை தேடி என் வீடு வந்த போதும் அவளை வெளியேற்றும் நிலையில் வைத்து விட்டாயே...நான் செய்த காதல் என்ன அவ்வளவு பெரிய பாவச்செயலா…?’

நினைக்க நினைக்க மனது ஆறவில்லை. ‘இனி நான் என் தாய் வீடோடு சேரவே முடியாதா…’ என்று மனது வெதும்பி இருக்க...தன் தோள் மீது விழுந்த கை பரிசத்தில் நிமிர்ந்து தன் கனவனை பார்த்த மலர் விழி..

“என்னால முடியலேங்க...முடியல...நான் என்ன பாவம் செய்தேன்.மணி இந்த வீட்டுக்கு மகளா உரிமையுடம் வர வேண்டிய பெண்...ஆனால் இப்படி ஆயிடுச்சே…?” என்று தன் கணவனின் மார்பில் சாய்ந்து கதறி அழுத்தாள்.

வில்சன் விக்டர் மலர் விழியின் தலையை தடவி விட்டாரே தவிர … அழாதே என்று சொல்லவில்லை. சொன்னால் நிறுத்தும் கண்ணீரும் அல்ல மலர் விழியின் கண்ணீர்.

அப்போது அந்த இடத்திற்க்கு வந்த ஜான் விக்டர்… “சாரிம்மா...சாரி டாட் என்னாலே தானே இவ்வளவும். நான் மணியை பார்த்ததும், அம்மாவை பார்ப்பது போல இருக்குன்னு சொன்னேன். அவ அம்மாவோட ரத்தமுன்னு தெரியாம...நீங்களும் அம்மாவும் வாழும் வாழ்வை அவளை...க…”

மணியோடு கல்யாணம் என்ற வார்த்தையை கூட அவனால் சொல்ல முடியவில்லை. என் ரத்த சொந்தத்தை திருமணம் செய்ய நினைத்தேனே...நான் என்ன மாதிரியான ஜென்மம் அதை நினைக்க நினைக்க அவன் கண்கள் சிவந்து போனது.

அதை பார்த்த மலர் விழி தன் துக்கத்தை மறந்தவராய்… “ஜான் அதெல்லாம் ஒன்னும் இல்லேப்பா...உன் மேல எந்த தப்பும் இல்ல. நான் என்னுடைய உறவை சொல்லாம வளர்த்தது என் தப்பு தான்.

நீ எந்த தப்பும் செய்யல...நீ எந்த தப்பும் செய்யல…” என்று மலர் விழி மீண்டும் மீண்டும் நீ தப்பு செய்யல என்ற வார்த்தையை ஜானின் மனதில் பதிய வைக்க முயன்றார்.

அன்று மருத்துவமனையில் ஜான் விக்டர் கத்தி கலாட்டா செய்த பின், தூக்கம் வர மருந்து ஏற்றி விட்ட பின் மீண்டும் கண் முழித்தவன் பிதற்றியது…

“நான் மோசமானவன். நான் எல்லாம் என்ன ஜென்மம்…? சொந்த தங்கையையே… “அடுத்து அந்த வார்த்தை சொல்ல கூட முடியாது அவன் கண்கள் சிவந்து போவதை பார்த்து மீண்டும் அவன் மயங்க மருந்தை கொடுத்த மருத்துவர்…

வில்சன் விக்டரை பார்த்து… “இவர் என்ன பேசுறார் என்று தெரிஞ்சா தான் என்னால அவருக்கு ட்ரிட்மெண்ட் கொடுக்க முடியும். அவர் ஏதோ குற்றவுணர்ச்சியில் இருக்கிறார். அவர் அதே மன நிலையில் இருப்பது தவறு.

இந்த குற்றவுணர்ச்சி அவர் மனதில் பதிந்து போனால், பின் அவரை நார்மல் ஆக்குவதில் பிரச்சனை ஏற்படும். இதை தவிர்க்க இந்த குற்றவுணர்ச்சி எதனால் வந்தது என்று எனக்கு தெரியனும். உங்க முகத்தை பார்த்தாலே உங்களுக்கு தெரியுமுன்னு தெரியுது. அதை சொன்னால் தான் என்னால் மருத்துவம் பார்க்க முடியும்.” என்று மருத்துவர் சொன்னதும்..

வில்சன் விக்டர் தன் மகனை பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் அனைத்தையும் சொன்னதும்…

அனைத்தையும் பொறுமையாக கேட்ட மருத்துவர்… “இது அவருக்கு ரொம்ப ரொம்ப இக்கட்டான சூழ்நிலை. தான் ஆசைப்பட்ட பெண் தன் தங்கை முறை. இது எந்த ஒரு ஆண் மகனுக்கும் வரக்கூடாது. ஆனால் வந்துடுச்சி..இப்போ நீங்க அதுல இருந்து வெளியே வரப் பாக்கனும். அதுவும் உங்க மகன் மனது பாதிக்காது. அது தான் ரொம்ப ரொம்ப முக்கியம்.” என்று சொன்னவர்.

பின்… “ நீங்க சொன்னதை வெச்சி பார்த்தா உங்க மனைவி அவங்க பிறந்த வீட்டோட தொடர்பு இல்லைன்னு தெரியுது. இனியும் அப்படியே இருப்பது தான் உங்க மகனின் மன நிலைக்கு நல்லது. ஏன்னா அவங்க உறவு முறை தொடர்வது உங்க மகன் மனநிலைக்கு ஆபத்தாய் முடியும்.” என்று ஜானின் மனநிலையை தெள்ளி தெளிவாக விளக்கி விட்டு அந்த மருத்துவர் சென்று விட்டார்.

ஆனால் ஜான் விக்டர் கண் விழித்து மலர் விழியை பார்த்து கேட்ட முதல் கேள்வி… “உங்க அம்மா வீட்டை பத்தி சொல்லுங்க.” என்பதே…

மலர் விழி என்ன சொல்வது…? இப்போது தான் தன் தாய் வீட்டின் தொடர்பு இவனின் மனநிலையை பாதிக்கும் என்று சொல்லி விட்டு சென்றார். இப்போது இவன் கேட்பதற்க்கு என்ன பதில் சொல்வது என்று மலர் விழி யோசிக்கும் வேளயில்…

ஜான் விக்டர் கண் விழித்ததும் சொல் என்று சொன்ன செவிலியரின் அழைப்பில் அங்கு வந்த அந்த மருத்துவர்...ஜான் விக்டரின் கேள்விக்கு பதில் சொல்லுங்க..

சொல்லாமல் போனால் என்ன என்று அவர் மனது அதிலேயே நிலைத்து விடும். அதுவும் அவன் மனநிலையை பாதிக்கும். அதனால் சொல்லுங்க..ஆனால் அதை அவனுக்கு திரும்ப திரும்ப சொல்லும்படி இல்லாமல்...அனைத்தையும் தெளிவா சொல்லிடுங்க...ஆனா எந்த காரணத்திற்க்காகவும் அந்த பெண்ணை ஜான் பார்க்க கூடாது.” என்று சொல்லி விட்டு ஜான் விக்டரின் உடல் நிலையை திரும்பவும் பரிசோதித்து விட்டு…

“நீங்க வீட்டுக்கு போகலாம். அவர் உடல் நிலைக்கு எந்த பிரச்சனையும் இல்ல. மனநிலையை கெடாது பார்த்துக்க வேண்டியது உங்க கையில தான் இருக்கு.” என்று சொல்லி விட்டு அவர் கடமை முடிந்து விட்டது என்பது போல் கிளம்பி விட்டார்.

இனி தங்கள் நடத்தையில் தான் தன் மகனின் எதிர் காலம் என்பது போல் வில்சன் விக்டர் மலர் விழி இருவரும் ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

அதன் முதல் படி தான் மணிமேகலையின் அழைப்பை ஏற்காது இருந்தனர். அடுத்து மணிமேகலையை தாங்கள் பார்க்க கூடாது. தங்களை அவள் முழுவதும் மறந்து விடுவதோடு தங்களை நினைத்தும் பார்க்க கூடாது.

அது மணிமேகலையின் வாழ்க்கையை பாதிக்கும் என்று நினைத்து தான் வில்சன் விக்டர் அவரின் செல்வாக்கை பயன் படுத்தி அவள் பயிற்ச்சி பெற்ற நிறுவனத்தில் அவள் பயிற்ச்சில் தேர்வு பெறவில்லை என்று சான்றிதழ் வழங்கியதோடு…

மணிமேகலைக்கு அங்கு வேலை கிடைக்காது இருக்க என்ன என்ன செய்ய வேண்டுமோ அனைத்தும் செய்து முடித்திருந்தார். இதை வில்சன் விக்டர் செய்து முடிக்க காரணம் தன் மகனின் மனநிலை மட்டும் கருத்தில் கொள்ளாது மணிமேகலையின் வாழ்க்கையையும் மனதில் கொண்டே இதை அனைத்தையும் செய்தார்.

ஏற்கனவே மணிமேகலையின் வீட்டில் அவள் திருமணத்திற்க்கு ஏற்பாடு செய்திருப்பது அவருக்கு தெரியும். அந்த திருமணம் நடப்பது தான் மணிமேகலைகு நல்லது என்று அவர் கருதினார்.

இந்த ஊரிலேயே அவள் தொடர்ந்து இருந்தால், தன் மகன் எதை மறக்க வேண்டுமோ அதை மறக்க விடாது, அவளை நியாகப்படுத்தும் படி ஆகிவிடும்.

அதே போல் மணிமேகலை இங்கு இருந்தால், ஜானோடான உறவு முறை அவளுக்கு தெரிய நேர்ந்தால் ஜானோட நிலை தான் அவளுக்கும். ஜானுக்காவது அவனின் இந்த குற்றவுணர்வில் இருந்து வெளியில் கொண்டு வர நாங்கள் இருக்கிறோம்.

ஆனால் மணிமேகலைக்கு வீட்டில் இவர்களை பற்றி தெரியாத போது.. வெளிநாட்டில் உறவுகள் கூட இல்லாத போது...யாரின் ஆதாரவும் இல்லாது இங்கு இருந்தால் அவளின் மனநிலை என்ன ஆகும்.

அதை நினைத்து தான் வில்சன் விக்டர் அனைத்தையும் செய்து முடித்தார். கூடவே அவளை தாங்கள் தவிர்த்தால்...தங்கள் மீது அவளுக்கு கோபம் ஏற்படும். தங்கள் மீது இருக்கும் கோபத்திலும், தொடர்ந்து வேலை இல்லாது இங்கு இருக்க முடியாத காரணத்தால் மணிமேகலை இந்தியாவுக்கு சென்று தான் ஆக வேண்டும்.

அங்கு சென்றால் அவள் திருமணம் அவளின் பெற்றோர்களின் எண்ணப்படி நல்ல முறையில் நடைப்பெறலாம். மனிமேகலைக்கு அந்த புதுவாழ்வு அவளின் மனநிலையை மாற்றலாம் என்று நினைத்து தான் அனைத்தும் செய்தார்.

வில்சன் விக்டர் எண்ணப்படி தான் அனைத்தும் நடந்து முடிந்தது. ஆனால் அவர் நினைத்து பார்க்காதது, மணிமேகலை ஏற்கும் அந்த வாழ்க்கையே அவளை குற்றவுணர்ச்சியில் தள்ள காத்திருப்பது, அவருக்கு தெரியாது போய் விட்டது.

வில்சன் விக்டர் மகனிடமும் மருத்துவர் ஆலோசனைப்படி அனைத்தையும் சொல்ல நினைத்தவர் மகனிடம்…

“முப்பது வருடம் முன் என் மனைவி இந்தியாவில் இருந்து இரண்டு வருட ஒப்பந்தத்தில் என் ஓட்டலுக்கு சமையல் வேலைக்கு வரவழைக்க பட்டாள்.

எனக்கு பார்த்ததும் பிடிச்சிடுச்சி...கல்யாணமும் செய்து கொண்டோம். திருமணம் முடிஞ்சி ஆறு மாசம் கழித்து என் மனைவியை அவள் அம்மா வீட்டுக்கு அழச்சிட்டு போனேன்.

மலர் விழிக்கு கூட பிறந்தவங்க இவளோட சேர்த்து ஐந்து பெண்கள். இவ இரண்டாவது இவளுக்கு மூத்தவ அக்கா பேர் கயல் விழி...அடுத்து இது போல் விழின்னு பெயர் வெச்சி தான் பேர் இருக்கும்.

எங்க கல்யாணம் அவங்களுக்கு முன்னவே தெரிஞ்சி தான் இருந்தது. எங்கல பார்த்தும் அவங்க அப்பா ரொம்ப சத்தம் போட்டு எங்கல வீட்டிக்குள்ள சேர்த்துக்கவே இல்ல.

ரொம்ப சத்தம் போட்டு என்னை பொறுத்தவரை நீ செத்துட்ட..அப்படி இப்படின்னு ரொம்ப பேசினார். நான் அது வரை அது போல பேச்சை எல்லாம் கேட்டது கூட இல்லேன்னு சொல்லலாம். நான் அவ்வளவு பொறுமையா இருக்க காரணம் என் மனைவி.

அவ என்னை கல்யாணம் பண்ண அவ்வளவு யோசிச்சா..எனக்கு முன்ன அக்கா இருக்கா...எங்க அப்பாவுக்கு ஐந்து பெண்ணுங்க. வீட்டு கஷ்டத்துக்காக தான் நான் இங்கு வேலைக்கே வந்தேன்.

அக்கா இருக்க நான் கல்யாணம் செய்துக்க முடியாது. அதோட வீட்டு கஷ்ட நிலையில் இருக்கும் போது, நான் என்னை மட்டும் பார்த்துட்டு சுயநலமா இருக்க முடியாதுன்னு எவ்வளவோ சொல்லி மறுத்தா…

நான் தான் என்னை கல்யாணம் செய்தா உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. இன்னும் கேட்டா நல்லது தான் நடக்கும். உங்க அக்கா தங்கையின் எதிர் காலத்தை நான் பாத்துக்குறேன் என்று வாக்கு கொடுத்து தான் உங்க அம்மாவை நான் கல்யாணம் செய்தேன்.

ஆனா நான் கொடுத்த வாக்கை என்னால காப்பத்த முடியல. அந்த ஆறுமாசத்துல மலரோட அப்பா நான்கு பெண்களையும் கல்யாணம் கொடுத்து இருப்பாருன்னு நான் நினச்சி கூட பாக்கல.

உங்க அம்மா சொல்வா எங்க வீட்டிலே நான் தான் சுமாரா இருப்பேன் மத்த நான்கு பேரும் அவ்வளவு அழகுன்னு. அழகா இருக்க உங்க அம்மாவ அவ வீட்டில் சுமாருன்னா அப்போ அந்த நான்கு பெண்களின் அழகு எப்படின்னு நீயே நினச்சி பார்.

அப்படி பட்ட பெண்களுக்கு… மலரோட அக்காவுக்கு வாய் பேச முடியாதவரை கல்யாணம் செய்து கொடுத்து விட்டார் மலரோட அப்பா..

மத்த பெண்களுக்கு கூட அப்படி தான். ஒருவருக்கு இரண்டாம் தாரம். இப்படி அந்த ஆறுமாசத்துல அவசர அவசரமா கட்டி கொடுத்துட்டார். காரணம் உங்க அம்மா போல மத்த பெண்களும் அவங்க விருப்பத்துக்கு கல்யாணம் செய்து போயிட போறாங்கன்னு...இது எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம்…

என்னால தான் எங்க சகோதரி வாழ்க்கை இப்படி ஆயிடுச்சின்னு இங்கு வந்த பிறகும் பேசிட்டே இருந்தா...அதில் இருந்து அவளை வெளியில் கொண்டு வரத்தான் நான் எப்போவும் வேறு எதை பத்தியும் யோசிக்க விடாது...என்னை பத்தி மட்டும் யோசிக்க பழக்க படுத்தினேன். இது சுயநலம் தான். ஆனால் எனக்கு வேறு வழி தெரியல.

முதல்ல மணிமேகலை அவ ஊரு பத்தி சொன்னது அவ அப்பா பத்தி சொன்னத கேட்டு உடனே அவ அம்மா பெயரை உங்க அம்மா கேட்டா...ஆனா அவ சொன்ன வரலட்சுமி பேரை கேட்டு தான் அவளுக்கு கொஞ்சம் ஆசுவாசம் ஆச்சி...ஆனா அவங்க பெயரை மாத்திட்டு இருப்பாங்கன்னு நாங்க நினச்சிகூட பாக்கல.” என்று அனைத்தையும் சொல்லி முடித்த வில்சன் விக்டர்.

“இது தான் கடைசி இனி மணியோட சம்மந்த பட்டது எதுவும் உன் வாயில் இருந்து வரக்கூடாது. புரியுதா..இனி அதை பத்தி பேசக்கூடாது.” என்று ஜான் விக்டரிடம் வாக்குறுதியும் வாங்கிக் கொண்டார்.

வில்சன் விக்டரின் திட்டப்படி இந்தியா வந்த மணிமேகலையின் திருமணம் நடக்குமா…?
 
Top