Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் நினைவுகளில் நானிருக்க....17

  • Thread Author
அத்தியாயம்…17

திரும்பவும் வசுந்தரா… “என்ன மணி கண்டுக்கவே மாட்டேங்குற...ஓ நாத்தனார் கெத்தை காட்டுறியா…?” என்று கிண்டல் செய்வது போல் வீரேந்திரன் முன் அவளிடம் சாதரணமாக பேசுவது போல் பேசினாள்.

எப்போதும் மணிமேகலை தன் சித்தி மகனிடமும் சரி...அவள் குடும்பத்தில் இருப்பர்களோடும் சரி பேசுவது என்ன…?அவர்கள் எதிரில் மற்றவர்களிம் கூட பேச மாட்டாள். அந்த தைரியத்தில் தான் வசுந்தரா மணிமேகலையிடம் பேச்சை வளர்த்தது.

அவளின் திட்டத்தை புரிந்துக் கொண்ட மணிமேகலை… “நாத்தனாரா...யார்…?என் அம்மா அப்பாக்கு நான் ஒரே பெண் தானே… என்னை பத்தி எல்லா தெரிஞ்சி பேசுற நீ. உனக்கு இது தெரியாதா…?” என்று மணிமேகலை கேட்டாள்.

சத்தியமாக இது வசுந்தரா என்ன…?அங்கு இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இருந்த வாசுதேவனும் சரி. வீரேந்திரனும் சரி, அவளின் இந்த பேச்சை எதிர் பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

வீரேந்திரன் மணிமேகலையை ஆராயும் பார்வை பார்த்துக் கொண்டே, அவளின் சூட்கேசை தான் எடுத்துக் கொண்டான் என்றால்..

வாசுதேவனோ அதிர்ச்சியோடு மணிமேகலையை பார்த்திருந்தான். அவனுக்கு தெரிந்தது மணிமேகலை வாய் திறாக்காத பரம சாதுவான பெண். அதை வைத்து தான் அவன் அடுத்து அடுத்து தன் திட்டத்தை வகுத்து வசுந்தராவுக்கு கொடுத்தது.

ஆனால் மணிமேகலையின் இந்த பேச்சு...என்ன இவள் இவ்வளவு தைரியாக பேசுறா...அதுவும் என் முன்னே நான் அண்ணன் இல்லை என்பது போல் பேசுகிறாள் என்றால், வீட்டில் தங்களை பற்றி சொல்லி விடுவாளோ என்று கொஞ்சம் பயத்துடன் தான் வசுந்தராவை திரும்பி பார்த்தான்.

வசுந்தராவும் முதலில் மணிமேகலையின் பேச்சில் கொஞ்சம் ஆட்டம் கண்டாள் தான். ஆனால் அடுத்து அவள் நினைவுக்கு வந்தது மணிமேகலையின் பலவீனமான அவள் சிறுவயதில் செய்த அந்த சிறுசெயலை மனதில் கொண்டு வாசுதேவனை பார்த்து கண் காட்டி….

“நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்பது போல் வசுந்தரா சொன்னாள். இந்த சைகை பாஷையும், வீரேந்திரன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். அவனுக்கு ஒன்று மட்டும் தெள்ள தெளிவாக புரிந்தது.

அது மணிமேகலையை வைத்து, வாசுதேவனும், வசுந்தராவும் ஏதோ செய்கிறார்கள் என்று. அத்தோடு இந்த வசுந்தரா இனி மணிமேகலைக்கு தோழியாக இருக்க மாட்டாள். அவள் சொன்னது போல் அண்ணியாக மட்டுமே தான் நடந்துக் கொள்வாள்.

ஆனால் இப்படி வசுந்தரா தைரியமாய் மணிமேகலையை வைத்து திட்டமிடுகிறாள் என்றால், ஏதோ ஒன்று இருக்கிறது என்று வீரேந்திரனின் மனது சொன்னது. மணிமேகலை எப்போதும் சொல்லும் வட்டிக்காரன் புத்தி...கணக்கிட ஆரம்பித்த நொடி… அவர்களின் செயல்களையும் கண்காணிக்க ஆராம்பித்து விட்டது.

பின் வசுந்தரா மணிமேகலையின் பேச்சை கவனிக்காத வாறு வீரேந்திரனிடம்… “இப்போ என்ன அண்ணா நேர நகை கடைக்கு போகலாமா துணிகடைக்கு போகலாமா…?” என்று என்னவோ வீரா வசுந்தராவின் ஒட்டி பிறந்த சகோதரனை போல அண்ணா என்று அழைத்து பேசினாள்.

இதை கேட்ட மணிமேகலை… ‘இது எப்போத்திலிருந்து என்று நினைத்தவள்’

வீரேந்திரனிடம்… “எனக்கு ரொம்ப டையடா இருக்கு. எதுன்னாலும் நீங்க போங்க.” என்று சொன்னவளின் பேச்சில்…

வாசுதேவன் முதன் முறையாக மணிமேகலையிடம்… “நீ இங்கு எங்கே இருப்ப...அதுக்கு எங்களோட வந்தா உன் கல்யாண பர்சஸையும் சேர்த்து முடிச்சிடலாம். இல்லேன்னா திரும்பவும் நாம சென்னை வருவது போல ஆயிடும்.” என்று பேசியவனின் பேச்சை கேளாது போல வீரேந்திரன் பக்கம் திரும்பிய மணிமேகலை…

“நீங்க போறதுன்னா போங்க. எனக்கு ரொம்ப டையடா இருக்கு. இங்கே எங்காவது ஒரு ஓட்டல்ல ரூம் புக் பண்ணி கொடுத்தா நான் ரெஸ்ட் எடுத்துக்குவேன். நீங்க உங்க ஷாப்பிங்கை பார்த்துக்குங்க.” என்று சொன்னாள்.

மணிமேகலை வாசுதேவன் பேச்சை சட்டை செய்யாது அவனுக்கு பதில் அளிக்காது… வீரேந்திரனை பார்த்து பேசியது வசுந்தராவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

“உன்னோட அவர் ஏழு வயசு பெரியவர். உன் அண்ணா அது உனக்கு நியாபகம் இருக்கா…?” என்று வசுந்தரா மணிமேகலையை பார்த்து கேட்டாள்.

வீரேந்திரன் முன் சாதரணமாக நடக்க வேண்டும் என்று தான் நினைத்ததை, மணிமேகலையின் இந்த அலட்சிய பேச்ச தகர்த்தெரிந்து விட்டது. அதனால் கோபமாக சண்டை போடுவது போல் தான் வசுந்தரா பேசினாள்.

மணிமேகலையும்… “என் இந்த பேச்சு உனக்கு இப்போ தான் தெரியுதா…?நான் எப்போவும் இது போல் தானே உன்னிடம் அவங்கல பத்தி பேசி இருக்கேன்.” என்பது போல் பேசி வைத்தாள்.

ஆம் மணிமேகலை எப்போதும் அவள் சகோதரர்களை பற்றி பேச்சு எடுத்தாலே… “எனக்கு அவங்க பேச்சு எல்லாம் தேவையில்லை. நீ அவனை பாக்குறியா உன் வரை பார்த்துக்கோ…” என்று சொல்வாள்.

கூடவே… “பாத்து ஏமாந்து போயிடாதே...ஏன்னா எனக்கு அவங்கல பத்தி அவ்வளவா தெரியாது.”

தன் சித்தி மகனின் நலனை விட தன் தோழி அவனிடம் ஏமாந்து போயிட போறா என்ற நல்ல எண்ணத்தில் தான் மணிமேகலை அப்போது அப்படி பேசியது. ஆனால் இருவரும் சேர்ந்து தன்னை இப்படி ஏமாற்றுவார்கள் என்பது அவள் எதிர் பாராத ஒன்று.

மணிமேகலையின் இந்த எடுத்தெரிந்த பேச்சு...இந்த தைரியமான அணுகு முறை அனைத்தும் ச்சுந்தராவுக்கு புதியது தெரிந்தது. தன்னை விட்டு இரண்டு வருடம் தானே பிரிந்து இருந்தாள். இந்த குறுகிய காலத்தில் இத்தனை மாற்றங்கலா…?என்று வசுந்தரா வியந்து போனாள்.

அமெரிக்காவில் இருந்தது கொஞ்ச காலமே ஆனாலும், அவளுடம் இருந்த தோழி சோனாலியின் எந்த ஒரு செயலிலும் தெரியும் தைரியம். தன்னம்பிக்கையான பேச்சு. இதை பார்த்து இருந்தவளுக்கு இவள் போல தான் பெண்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பாள்.கூடவே நாம் ஏன் இவள் போல் இருக்க மாட்டேங்கிறோம் என்றும் தான்.



ஜான் விக்டர் உடனான,திருமண பேச்சு பாதியில் தடைப்பட்ட போதும், நான் ஏன் தனக்கு திருமணம் பேசுகிறார்கள் என்று தெரிந்ததும் வீட்டுக்கு அழைத்து…

“எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்ய எண்ணம் இல்லை.” என்று சொல்ல வில்லை.

கூடவே மூட்ட பூச்சுக்கு பயந்து வீட்டையே கொளுத்துவது போல், வீட்டில் பார்த்தவனை மணக்க பயந்து, தானே இங்கு ஒருவனை திருமணம் செய்ய நினைத்து அதுவும் தோல்வியில் தழுவி ...நான் என்ன மாதிரியான பெண் என்று தனக்குள் மறுகியவளை…

சோனாலி … “ நீ ஒரு தப்பும் செய்யல மணி. சின்ன வயசுல இருந்தே...நீ தனியா முடிவு எடுக்காது மத்தவங்க சொல் பேச்சு கேட்டு தான் நடந்து இருக்க…

நீயா முடிவு எடுத்த விசயம்..இங்கு வந்து படித்த்து தான். அது தான் அதை காப்பத்திக்க இப்படிஎல்லாம் செஞ்சிட்ட...போனது போகட்டும். இனி நீயா யோசிச்சி நட...உன் அறிவு என்ன சொல்லுதோ அதை கேட்டு நடந்துக்க...

உன்னை மீறி யாரும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது. அதை மனசுல நல்லா நியாபகத்துல வெச்சிக்க…”

இந்த இரண்டு வாரம் காலமாக சோனாலி மணிமேகலையின் மனதில் பதியும் படி பேசிய பேச்சு தான் மணிமேகலைக்கு இப்போது கை கொடுத்தது.

வசுந்தராவால் என்னை என்ன செய்து விட முடியும்…?ஒன்னும் செய்ய முடியாது. என்னை பத்தி ஏதாவது சொல்வது என்றால்,சொல்லட்டும்.

நான் தப்பு செய்தால் என் மன்னிப்பை என் அப்பா அம்மாவிடம் கேட்டுக் கொள்கிறேன். அதை வைத்து என்னை இவள் ஆட்டி படைக்கலாம் என்று நினைத்தாள். இனி அவ்வளவு தான்.

இதை நினைத்து தான் மணிமேகலை அமெரிக்காவை விட்டு கிளம்பியதே...அவளுக்கு தெரிந்து விட்டது. வசுந்தராவின் இந்த செயல் தன்னை தொடரும் என்று. இனி என்னை வைத்து உன்னால் ஒரு காரியமும் நடத்தி கொள்ள முடியாது.

என்னுடைய இந்த பயந்த சுபாவமும், வீட்டில் நான் யாரிடமும் எதுவும் பேச மாட்டேன் என்று கணக்கிட்டு தானே...நீயும் வாசுவும் என்னை வைத்து கேம் ப்ளே செய்யிறிங்க… இனி தான் இருக்கு என்பது போல் தான் தன் பேச்சை இன்று பேசினாள்.

மணிமேகலையின் இந்த தைரியம் வீரேந்திரன் தான் தன்னை மணக்க இருப்பவன் என்று தெரிந்தாலும் நிலைக்குமா…? மணந்த பின்னும் தொடருமா…? பார்க்கலாம்.

மணிமேகலையின் பேச்சு வீரேந்திரனுக்கும் வித்தியசமாக தான் தெரிந்தது.இருந்தும் அதை வெளிக்காட்டாது…

வாசுதேவனிடம்… “உங்களுக்கு ஷாப்பிங் செய்யனும் என்றால் செய்துக்கோங்க. நான் மணியை ஓட்டல் அறைக்கு கூட்டிட்டு போறேன்.” என்று சொல்லி விட்டு மணிமேகலையை பார்த்து…

“வா போகலாம்.” என்று அழைத்தான்.

இவனோடு ஒட்டல் அறையில் தனியாகவா… என்று மணிமேகலைக்கு அவனோடு செல்வதில் கொஞ்சம் தயக்கம் ஏற்ப்பட்டது.

இந்த தயக்கம் கூட வீரேந்திரன் மீது நம்பிக்கை இல்லாது இல்லை. அவள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையோடு, அவன் மீது அதிகம் நம்பிக்கை வைத்திருந்தாள்.

அப்படி இருந்தும் மணிமேகலையின் இந்த தயக்கத்திற்க்கு காரணம், சின்ன வயதில் வெட்ட வெளியில் மொட்டை மாடியில் விளையாட்டு தனமாக செய்த செயலை வைத்தே, தன் வீட்டில் இருந்தவர்கள் அப்படி பேசி வைத்தார்கள்.

இப்போது இவனோடு அறையில் இருந்தால்...மத்தவங்க வேண்டாம். இதோ என்னையே குறு குறுன்னு பார்த்துட்டு இருக்க இந்த வசுந்தரா போதும்…

என்னை கட்டிக்கிறவன் கிட்ட சொல்லிடுவேன் என்று சொல்லி அவளின் மத்த காரியத்தை நடத்திக்க பார்ப்பாள். இப்படி நினைத்து அவள் தயங்கி நிற்க…

வீரேந்திரன் மணிமேகலையின் தயக்கத்தை பார்த்து விட்டு… “அம்மா அப்பா எல்லாம் கூட ஒட்டல் அறையில் தான் இருக்காங்க. ஓட்டல் பக்கத்தில் கூட ஜவுளி கடை. நகை கடை இருக்கு... இப்போ கொஞ்சம் ரெஸ்ட்டு எடுத்துக்கோ...சாயங்கலாமா கூட ஷாப்பிங் போகலாம்.” என்று வீரேந்திரன் சொன்னான்.

“அத்தை மாமா எதுக்கு வந்து இருக்காங்க.” என்று கேட்டவள்...பின் ஏதோ நினைவு வந்தவளாய்…

“ஓ உங்களுக்கும் கல்யாணம்லே…ஏதோ ஒரு நியாபகத்தில் மறந்துட்டேன்.” என்று தலையில் அடித்துக் கொண்ட மணிமேகலை, கூடவே வீரேந்திரனிடம்.. அவனின் திருமணத்திற்க்கு வாழ்த்தும் தெரிவித்தாள்.

இப்போது வசுந்தராவும், வாசுதேவனும் குழம்பி போய் பார்த்து இருந்தனர். முதலில் வசுந்தரா தான் அனைத்தும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னவள் கடைசியில் மணிமேகலைக்கு விசயம் தெரிந்து தன்னை திட்டியதும்..

இதுவும் ஒரு வகையில் நமக்கு நல்லது தான் என்று விட்டு விட்டாள்.’ அப்போ கல்யாணம் என்று தெரிந்தவளுக்கு, அது யாருடன் என்று தெரியவில்லையா…?’ என்று மனதில் நினைத்துக் கொண்டவள் யோசனையுடன் வீரேந்திரனை பார்த்தாள்.

வீரேந்திரனும் மணிமேகலையின் வாழ்த்தில் அவன் முகம் யோசனைக்கு சென்றது தான். ஆனால் நொடியில் தன் முகபாவனையை மாற்றிக் கொண்டவனாய்…

“உனக்கு நீயே வாழ்த்திப்பியா…?” என்று கேட்டு விட்டு…

“வா.” என்று திரும்பவும் அழைத்தான்.

இப்போது மணிமேகலைக்கு எந்த வித தயக்கமும் இல்லை. அங்கு அத்தை, மாமா இருக்கும் போது யாரென்ன சொல்ல முடியும் என்று நினைத்தவள் வீரேந்திரன் பின் சென்றாள்.

தங்களோடு வசுந்தராவும், வாசுதேவனும் வருவதை பார்த்து,மணிமேகலை யோசனையுடன் அவர்களை பார்த்தாளே ஒழிய வாய் திறந்து… “நீங்க ஷாப்பிங் போகலையா…?” என்று கேட்கவில்லை.

ஆனால் வீரேந்திரன் கேட்டு விட்டான். “ஏன் நீங்க உங்க வேலைய பார்க்கலாமே…” என்று.

அதற்க்கு வசுந்தரா… “என்ன அண்ணா எல்லோரும் ஒன்னா வந்தோம். ஒன்னாவே வாங்கலாம். ஒரே குடும்பத்தில் எதற்க்கு தனி தனியா போய் வாங்கிட்டு.” என்று என்னவோ திருமணத்திற்க்கு குடும்பமாக போய் தான் வாங்க வேண்டும் என்ற ரீதியில் வசுந்தரா பேசினாள்.

ஆனால் உண்மை காரணம். தங்கள் திட்டம் திருமணம் வரையாவது யாருக்கும் தெரியாது இருக்க வேண்டும் என்று நினைத்தே...வாசுவுடன் தனியே ஷாப்பிங் செய்ய மனதில் அவ்வளவு ஆசை இருந்தும், அவர்களோடு அவர்கள் தங்கி இருந்த ஓட்டலுக்கு அனைவரும் சென்றனர்.

இரண்டு வருடத்திற்க்கு பின் பார்க்கும் அத்தையையும் மாமாவையும் கண்டதும்..மணிமேகலைக்கு ஏனோ அவர்களை அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.

எப்போதும் மணிமேகலை யாரிடமும் இது போல் செல்லம் கொஞ்சியது இல்லை. செல்லம் கொஞ்ச நினைத்ததும் இல்லை.

அது என்னவோ… நீண்ட நாட்களுக்கு பிறகு தன் நெருங்கிய சொந்தத்தை பார்த்ததினாளோ… இல்லை எப்போதும் தன் மனதில் இருப்பதை வசுந்தராவிடம் தான் எந்த ஒளிவு மறைவும் இல்லாது பழகுவாள்.

அவளே இன்று பொய்யாய் போனதை கண் எதிரில் கண்டாதாளோ...இன்று சங்கரி அத்தையை இறுக்கி அணைத்துக் கொள்ள வேண்டும் என்று போல் இருந்த்து.

ஆனால் மணிமேகலை அப்படி செய்யாது… எப்போதும் போல் ஒரு மெல்லிய புன்னகையோடு கேட்கும்… “அத்தை, மாமா எப்படி இருக்கிங்க…?” என்ற நலன் விசாரிப்பை தான் கேட்டாள்.

ஆனால் அவளோட சங்கரி அத்தை அவள் செய்ய நினைத்த அணைப்பில் அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டு… “நல்லா இருக்கேன் சிட்டு...நீ எப்படி இருக்க…?” என்று கேட்டவள்..

அவள் பதில் சொல்லும் முன்னவே சங்கரி தன் அணைப்பில் இருந்து மணிமேகலையை விலக்கி அவளை எதிரில் நிறுத்தி வைத்து விட்டு, அவளை மேலில் இருந்து கீழ் வரை ஒரு ஆராய்ச்சி பார்வையை செலுத்தியவர்…

“ம்...கலர் நல்லா சிவந்த நிறத்தில் ஆயிட்டே...ஆனா என்ன இப்படி இளச்சி போய் வந்து இருக்க…” என்று சொல்லி அவளின் கழுத்து எலும்பை சுட்டி காட்டி கேட்டாள்.

அப்போது தான் வீரேந்திரனுக்கும் அவளின் மெலிவு தெரிய...என்ன இவ அங்கு சாப்பிட்டாளா…?இல்லையா…?என்பது போல் அவளை பார்த்திருந்தான்.

மணிமேகலைக்கு தான் இந்த விசாரிப்பு கவனிப்பு ஒரு வித கூச்சத்தை ஏற்படுத்தியது. சங்கரி அத்தையும் சரி...அத்தைமாமாவும் சரி, மற்றவர்களை போல் இவளை திட்டியது இல்லை. அதே போல் தான் வீரேந்திரனும். அதனால் தான் அந்த சிறுவயதில் வீரேந்திரனை பிடித்து இருந்தது.

பின் நடந்த அந்த சம்பவத்திற்க்கு பின்...சங்கரி அத்தை...மாமா வந்தால்… “எப்படி இருக்கிங்க…?” என்று கேட்டு விட்டு சென்று விடுவாள்.

அவர்களும்… “நாங்க நல்லா இருக்கோம். நீ நல்லா படி. உனக்கு பிடிச்ச பால்கோவா வாங்கிட்டு வந்து இருக்கேன். போய் சாப்பிடு.” அவ்வளவு தான் அவர்கள் பேச்சாய் இருக்கும்.

ஆனால் இன்று சங்கரி அத்தையின் இந்த அதிகப்படி பாசத்தில் குழம்பி போனவளாய்… “ஒல்லி எல்லாம் ஆகல. இந்த ட்ரஸ் பாக்க அது போல இருக்கு.” என்று மணிமேகலை கொஞ்சம் கூச்சத்துடன் தான் சொன்னாள்.

ஆனால் சங்கரி அப்போதும் விடாது… “இல்ல இல்ல நீ இளச்சி தான் போய் இருக்க...என்னோட முதல் வேலை உன்னை நல்லா சாப்பிட வெச்சி கொஞ்சம் உடம்பை ஏத்துறது தான்.” என்று சொன்னவர் பின் தன் மகனிடம்…

“ஏய் நீ தான் உடம்பை ஏத்த இளைக்கன்னு என்ன என்னவோ உடற்பயிற்ச்சி செய்வீயே...சொல்லு சொல்லு என் மருமக உடம்பை ஏத்த என்ன செய்ய வேண்டும்.” என்று கேட்டதற்க்கு…

வீரேந்திரன் பதில் அளிக்காது மணிமேகலையையே பார்த்திருந்தான். அதே போல் தான் சங்கரி அத்தை சொன்ன உடற்பயிற்ச்சி என்ற வார்த்தையில் மணிமேகலையின் கண் தன்னால் வீரேந்திரன் பக்கம் செல்ல...அப்போது தன்னையே பார்த்திருந்த வீரேந்திரனின் பார்வையில் என்ன இருந்தது என்று அவளுக்கு விளங்கவில்லை என்றாலும், அவன் பார்வையில் இருந்து தன் பார்வையை விலக்கவும் செய்ய முடியாது அவனையே பார்த்திருந்தாள்.

இவர்களின் பார்வையை கூட பாராது சங்கரி அத்தை தொடர்ந்து பேசிய…. “பிள்ள பெத்துக்காவாவது உடம்புல தெம்பு வேணாமா...இப்படி இருந்தா எப்படி நீ பிரசவ வலிய தாங்குவ…?”

சங்கரி சொன்ன அந்த வார்த்தையில் ஏனோ மணிமேகலையின் கன்னம் தன்னால் சிவந்து போக...வீரேந்திரனின் விழி வீச்சையும் தாங்கிக் கொள்ள முடியாது வெட்கத்தில் தலை குனிந்துக் கொண்டாள்.

சங்கரி அத்தை பேச்சில் இது வரை யார் மாப்பிள்ளை என்று அறிந்துக் கொள்ள கூட விருப்பம் இல்லால் இருந்தவளின் மனதில்...என் குழந்தைக்கு தகப்பனாய் யார் வர உள்ளான் என்று மனதில் கேள்வி எழ…

யாரிடம் கேட்பது என்று நிமிர்ந்து பார்த்தவளின் எதிரில் வீரேந்திரன் நின்றுக் கொண்டு இருந்தான். வீரேந்திரனின் பார்வை இப்போது தன் மீது இல்லாது தன் அன்னையிடம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தான்.

வீரேந்திரனிடம் கேட்கலாமா… “மாப்பிள்ளை யார்…?” என்று யோசனையுடன் அவனையே பார்த்திருக்க...தன் அன்னையிடம் பேசிக் கொண்டு இருந்த வீரேந்திரனுக்கு என்ன தோன்றியதோ சட்டென்று திரும்பி மணிமேகலையை பார்த்தான்.

தன்னையே பார்த்திருந்த மணிமேகலையை பார்த்து… “என்ன…?” என்பது போல் தன் புருவத்தை உயர்த்தி கேட்டதில், என்ன கேட்க நினைத்தோம் என்பதை கூட மறந்தவளாய்…

“ஒன்றும்.” இல்லை என்பது போல் உதட்டசைவில் சொல்ல...வீரேந்திரனின் பார்வை அவள் கண்ணில் இருந்து கொஞ்சம் கீழ் இறங்கி அவள் உதட்டையே பார்த்திருந்தான்.

இதை எல்லாம் பார்த்திருந்த வசுந்தராவுக்கு, தாங்கள் விரும்பி மணக்கிறோமா...இல்லை இவர்கள் விரும்பி மணந்துக் கொள்கிறார்களா…? என்று குழம்பி போய் அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தாள்.

வாசுதேவனும் இதை எல்லாம் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். இவர்களின் இந்த செயல் அவனுக்கு கொஞ்சம் நிம்மதியை கொடுத்தது என்று கூட சொல்லலாம்.

வீரேந்திரனுக்கு மணி தான் பெண் என்று தெரிந்து தான் இதோ கல்யாணம் வரை வந்து இருக்கிறது. மணிமேகலையின் பேச்சில் இருந்து அவளுக்கு மாப்பிள்ளை யார்…? என்று கூட தெரியாது இருக்கிறாள்.

மாப்பிள்ளை வீரேந்திரன் தான் என்று தெரிந்தால், அவளின் ரியாக்க்ஷன் என்னவாக இருக்கும்…?இந்த திருமணத்திற்க்கு ஒத்துக் கொள்வாளா…? அதுவும் வசுந்தராவின் மூலம் அவளின் எண்ணமான வெளிநாட்டு மாப்பிள்ளை..அங்கேயே இருக்க தான் அவளின் திட்டம் என்பதை கேட்டதில் இருந்து...வீரேந்திரனை மறுத்து விட்டால் என்ன செய்வது…? என்று கொஞ்சம் பயந்து போய் தான் இருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

இப்போது இவர்களின் இந்த பார்வையை பார்த்து அப்பாடா என்று ஆனான். இப்படி பலர் பலவாரு அவர்கள் அவர்கள் எண்ணத்திற்க்கு ஏற்ப யோசனை செய்துக் கொண்டு இருந்தனர்.

வீரேந்திரன் தங்கள் அறைக்கே உணவை வர வழைத்தவன் மணிமேகலையிடம் … “சாப்பிட்டு ரெஸ்ட் எடு. ஈவினிங் கூட உன்னால முடிஞ்சா போகலாம். இல்லேன்னா ஷாப்பிங் நம்ம ஊரிலேயே பார்த்துக்கலாம்.” என்று சொன்னவனுக்கு…

“சரி...சரி…” என்பது போல் தலையாட்டிவளின் முன் வைக்க பட்ட உனவு அனைத்துமே அவளுக்கு பிடித்ததாய் இருக்க…ஏதோ யோசனையில் வீரேந்திரனை நிமிர்ந்து பார்த்தாள்.

“எதுவும் யோசிக்காதே..சாப்பிட்டு தூங்கு.” என்று வீரேந்திரன் சொல்லவும், மணிமேகலை அமைதியாக உண்ண ஆராம்பித்தாள்.

ஆனால் அந்த அமைதியை கெடுக்கும் வகையாக வசுந்தரா சொன்ன… “நம்ம ஊரில் ஷாப்பிங்கா...?என்ன அண்ணா... சென்னை வரை வந்துட்டு இங்கு வாங்காம்மால் அந்த பட்டிக்காட்டில் போய் வாங்க சொல்றிங்க.” என்ற அவள் பேச்சில்…

“இத்தனை வருசம் அதே பட்டிக்காட்டில் வாங்கிய ட்ரஸை தானே உடுத்திட்டு இருந்த…” என்று கேட்ட வீரேந்திரன்..

பின்… “நான் சொன்னது மணியிடம் அங்கே வாங்கிக்கலாமுன்னு...உனக்கு இங்கே தான் வாங்கனும் என்றால் வாசுவை கூட்டிட்டு நீங்க எப்போவும் போகும் மாலுக்கு போய் கூட வாங்கிக்கலாம்.” என்று சொன்னவனின் பேச்சு..

அத்தோடு நில்லாது…. “அந்த மால் கூட நீங்க தங்கி இருக்கும் பக்கத்தில் தானே இருக்கு…?”

என்னிடம் உங்கள் நரித்தனம் பலிக்காது என்பது போல் வசுந்தாராவையும், வாசுவையும் பார்த்துக் கொண்டே சொன்னவன்…

மணிமேகலையின் பக்கம் திரும்பி… “நீ சாப்பிட்டேனா போய் ரெஸ்ட் எடு. உன்னை யாரும் தொந்தரவு செய்யாம நான் பாத்துக்குறேன்.” என்று வசுந்தராவின் எண்ணம் புரிந்தவனாய், வீரேந்திரன் அவர்கள் எடுத்து இருந்த பக்கத்து அறைக்கு மணிமேகலையை அனுப்பி வைத்தான்.

மணிமேகலையும் வசுந்தராவை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே வீரேந்திரன் சொன்ன அறைக்கு சென்றாள். இங்கு வந்ததில் இருந்து மணியிடம் தனியே பேசி எப்படியாவது இந்த திருமணம் நல்ல முறையில் நடந்து முடிய வேண்டும் என்று சொல்ல நேரம் கிடைக்காதா...என்று காத்துக் கொண்டு இருந்தவளுக்கு, வீரேந்திரனின் இந்த பேச்சும், அதை கேட்டு மணிமேகலை சென்றதும் பிடிக்காது போனது.

வீரேந்திரன் தான் மாப்பிள்ளை என்று தெரியாது அவன் சொல் பேச்சு கேட்கும் மணிமேகலை, அவன் தான் மாப்பிள்ளை என்று தெரிந்தால்…என்ன ஆகும். பார்க்கலா
 
Top