அத்தியாயம்….18
“மணி கிட்ட ஏதோ மாற்றம் தெரியல…?” என்று வசுந்தரா வாசுதேவனிடம் கேட்டாள்.
“எனக்கு என்ன தெரியும்.” என்று வாசுதேவன் வசுந்தராவை எடுத்தெரிந்து பேசுவத போல் பேசினான்.எப்போதும் வசு தான் சின்ன விசயத்திற்க்கு கூட, முறுக்கிக் கொள்வாள்.
வாசு தான் அவளிடம் சமாதானம் பேசி தன் வழிக்கி கொண்டு வருவான். வாசுதேவனின் இந்த எடுத்தெரிந்து பேசுவது வசுந்தராவுக்கு புதியது.
“என்ன பேச்சு எல்லாம் ஒரு மாதிரியா இருக்கு வாசு …?” என்று எப்போதும் கேட்பது போல் தான் வசுந்தரா வாசுதேவை பார்த்து கேட்டாள்.
“ஆமா ஆமா மத்தவங்க பேச்சு எல்லாம் புதுசா போனதால …இப்போ என் பேச்சும் உனக்கு புதுசா தான் தெரியும்.” என்று சொல்ல.
“வாசு என்ன ஒரு மாதிரியா பேசுற…?” என்று அவனை உலுக்கி கேட்டதற்க்கு….
“பின் என்ன வசு. மணி நம்ம என சொன்னாலும் அவ வீட்டில் வாய் திறக்க மாட்டாள். அவ பேசுவதே என்னிடம் மட்டும் தான். அதனால் கவலை படாதேன்னு சொன்ன…
அதை நம்பி நான் பாட்டுக்கு வீட்டில் எக்க சக்கமா கதை அளந்து விட்டு இருக்கேன். இப்போ எல்லாம் என்னன்னு தெரியல… அப்பத்தா மணிய பத்தி பெருமையா பேசிட்டு இருக்காங்க. போதாதுக்கு இந்த வீரா வேற சிட்டு சிட்டுன்னு அவள் சொன்னத கேட்டுட்டு...
சமயத்துக்கு நாம காதல் கல்யாணம் செய்துக்குறோமா… இல்ல அவங்களான்னு… எனக்கே கொஞ்சம் குழப்பமா இருக்கு.
இதோட நாம செஞ்சது மட்டும் என் வீட்டுக்கு தெரிஞ்சது… அவ்வளவு தான். என் குடும்பம் என்னை வீட்டை விட்டே வெளிய அனுப்பிடுவாங்க. உன்னை நம்பிய பாவத்துக்கு எனக்கு நடுதெருவு தான் போல…”
விமான நிலையத்தில் மணிமேகலை வந்து இறங்கியதில் இருந்து, அவள் பேசும் பேச்சும்...அவள் நடந்துக் கொள்ளும் முறையும், வசுந்தரா சொன்னதற்க்கு எதிர் பதமாகவே இருந்தது.
கூட இந்த வீரா வேறு, என்னவோ பல வருஷம் காதலிச்சி ...பல வருட காதல் கைய் கூடுவது போல சிட்டு சிட்டுன்னு சுத்திட்டு இருக்கான். அவள் என்னன்னா யாரு மாப்பிள்ளைன்னு தெரியாமயே இவன் கண் அசைவுக்கு ஆடுறாள்.
வசுந்தரா சொன்னதை நம்பி நாம் இப்படி இறங்கியது தவறோ… என்று மனதில் வந்த பயத்தில், வாசுதேவனின் நாக்கு வார்த்தைகள் சாட்டையாய் கொட்டியது.
வசுந்தராவுக்கு வாசுதேவனின் இந்த பேச்சுகள் புதியதாய் இருந்தது. இது வரை வாசு வசுந்தராவை கடிந்து கூட ஒரு வார்த்தை பேசியது கிடையாது. வெறும் பார்வையால் இரண்டு வருடம் காதல் கடக்க…
இவன் தன்னிடம் பேச மாட்டானா...இவன் சும்மா தான் நம்மை பார்த்தானா… என்று யோசிக்கும் வேளயில் அவனாய் வந்து தான் பேசி, தான் வேலை பார்க்கும் இடத்திலேயே தனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்து...தன்னோடு தங்க வைத்து...ஒரு கணவன் மனைவி போலவே தான் இருவரும் வாழ்ந்து வந்த காலத்தில் கூட…
வசுந்தரா தான் கோபத்தில் வார்த்தைகளை விட்டு இருக்கிறாள். ஆனால் வாசு...எப்போதும் பொறுமை தான். அப்போது எல்லாம் நாம் வாசுவை தேர்ந்தெடுத்தது தப்பே இல்லை என்று தான் நினைத்துக் கொள்வாள்.
ஆனால் இன்றைய அவன் பேச்சில்...கோபத்தோடு அந்த விட்டெறிந்த தனமான அவன் சொற்கள் அவளை பலமாக தாக்கியது.
அதுவும் அவன் வார்த்தையில் இருந்த என் வீடு. நான் நடுத்தெருவில் தான் நிற்கனும். எதிலும் தன்னை சேர்க்காது அவன் மட்டும் பேசுவது போல் பேசியதை கேட்டு…
“இந்த அறிவு இதோ இதை கொடுக்கும் போதே இருந்து இருக்கனும்.” என்று வசுந்தரா தன் வயிற்றை காட்டி சொன்னாள்.
“நான் என்னவோ உனக்கு இதை வலுக்கட்டாயமா கொடுத்த்து போல சொல்ற...நீயும் பிடிச்சி தானே இருந்த…”என்ற வாசுதேவனின் இந்த பேச்சுக்கு வசுந்தராவால் பதில் சொல்ல முடியாது சிலையாக நின்று விட்டாள்.
அவளின் தோற்றம் வாசுதேவனுக்கு என்னவோ போல் இருக்க…
“சரி வசு விடு. நீயும் ரொம்ப பேசிட்ட… நானும் அதுக்கு பதில் சொல்றேன்னு ரொம்ப பேசிட்டேன். இதோட இந்த பேச்சை விடு. நமக்கு இதோட பெரிய விசயம் தலைக்கு மேல இருக்கு. நான் மணியிடம் பேச சொன்னனே பேசினியா…?”
மனதை தைப்பது போல் பேசி விட்டு...பின் எதுவும் நடவாதது போல் அடுத்து என்ன என்று பேசும் வாசுதேவை எதிர்த்து பேச முடியாது…
“ம் பேசுறேன். தனியா கிடைக்க மாட்டேங்குறா கிடச்சதும் தான் பேசனும்.” என்று சொன்ன வசுந்தராவின் பேச்சில் அவ்வளவு சோர்வு தெரிந்தது.
மற்றைய மசக்கை பெண்கள் போல் இல்லாது, வசுந்தராவுக்கு வாந்தி என்பது அவ்வளவாக இல்லை. காலையில் ப்ரஷ் செய்யும் போது மட்டும் வெறும் வயிற்றில் கொஞ்சம் குமட்டுவது போல் இருக்கும். அதுவும் வாந்தி போல் எல்லாம் வராது.
அதனால் இந்த விசயம் யாருக்கும் தெரியாது அவளாள் பார்த்துக் கொள்ள முடிகிறது. ஆனால் மசக்கைக்கே உண்டான சோர்வு...சாப்பாடு ஏற்றுக் கொள்ளாதது. பின் இது போல் இருக்கும் சமயத்தில் ஒரு சில பெண்களுக்கு ஏற்பாடும் ஹார்மோன் மாற்றம்..இதனால் அவள் கொஞ்சம் தடுமாறிக் கொண்டு தான் இருந்தாள்.
ஆனால் இந்த தடுமாற்றங்கள் அனைத்தும் வாசுதேவனின் காதல் கொண்டு...நாம் கடந்து விடலாம் என்று அவள் இருக்க..இன்றைய அவனின் பேச்சில் வசுந்தராவின் காதல் கொஞ்சம் ஆட்டம் கண்டது.
அதனால் அவளின் சோர்வு அப்பட்டமாய் முகத்தில் தெரிய அதை பார்த்த வாசுதேவனுக்கு என்ன தோன்றியதோ…
“மணி பேச்சில் நான் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன் வசு. மனசுல வெச்சுக்காதே…”என்று சொன்னவனுக்கு, வசுந்தரா எதுவும் சொல்லாது அமைதியாகி விட்டாள்.
ஆனால் மனதில் ‘இவனுக்கு இருக்கும் டென்ஷன் எனக்கும் தானே...இதோ இவனே இப்போது நான் உன் விருப்பம் இல்லாமலாயா தொட்டேன் என்கிறானே...என் விசயம் வெளியில் தெரிந்தால்...இதோ இவனை விட்டு விடுவார்கள்.
ஆம்பிள்ளை அப்படி தான் இருப்பான். பொம்பளைங்க தான் பாத்து பதுவுசா நடந்துக்கனும். அது தான் பழ மொழி எல்லாம் இருக்கே… முள்ளு மேல் சேலை விழுந்தாலும், சேலை மீது முள் பட்டாலும் சேதாரம் சேலைக்கு தான் என்று.
அது போல் ஊர் சனங்கள் வாய்க்கு வந்ததை பேசி விட்டு சென்று விடுவார்கள். அப்படி இருக்கும் போது இவனோடு எனக்கு தானே டென்ஷன் அதிகமாய் இருக்கும்.நான் இது போல் ஏதாவது பேசினா.. என்னை விட்டு விடுவானா...முதலில் விட்டு தான் இருந்தான்.இப்போது மட்டும் ஏன்… இப்படி…? நிஜமாகவே அவளுக்கு புரியாது மனதில் எதை எதையோ நினைத்து குழம்பி போனவளாய்...ஷாப்பிங்காவது ஒன்றாவது என்று அவள் கிடைத்த இடத்தில் படுத்துக் கொண்டாள்.
மாலையில் எழுந்த மணிமேகலையின் உடம்பு மட்டும் இல்லை. மனதும் கொஞ்சம் தெம்பானது போல் தான் இருந்தது. இனி எதையும் மாத்த முடியாது.
அதனால் பதட்டத்தோடு ஏன் இந்த கல்யாணத்தை எதிர் நோக்க வேண்டும். சோனாலி சொன்னது போல் மாப்பிள்ளை எனக்கு ஏத்த மாதிரி நல்லவனாய் அமைந்தால்…
முதலில் வீரேந்திரனிடம் யார்…? மாப்பிள்ளை என்று கேட்க வேண்டும் என்று அவள் நினைக்கும் போதே வீரேந்திரனே அவள் முன் வந்து நின்றான்.
“இப்போ பெட்டரா இருக்கா சிட்டு.” என்று கேட்டவன் அவளிடம் காபி கப்பை நீட்டினான்.
“ம்...” என்று மணிமேகலை ஒரே எழுத்து சொன்னாலும், அவள் முகம் ஆயிரம் வார்த்தை சொல்வது போல் பிரகாசித்து இருப்பதை பார்த்து வீரேந்திரன்…
“பரவாயில்ல. நான் நினச்சதுக்கு மேலேயே தெளிஞ்சிட்ட போல.” என்று கேட்டுக் கொண்டே தன் கையில் உள்ள காபியை ஒரு முழுங்கு குடித்து விட்டு, அவளின் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.
பக்கத்தில் என்றால் நெருக்கமாக எல்லாம் இல்லை. கொஞ்சம் இடைவெளி விட்டு தான் வீரேந்திரன் அமர்ந்தான். ஆனால் அமர்ந்த இடம் கட்டில். மணிமேகலைக்கு அவன் பக்கத்தில் வந்து அமர்ந்ததுமே ஒரு மாதிரியாகி விட்டது.
அதற்க்காக வீரேந்திரனை தவறாக எல்லாம் மணிமேகலை நினைக்கவில்லை. ஆனால் தனி அறையில் கட்டில் மேல் இப்படி அருகருகே அமர்ந்து இருப்பது அவளுக்கு ஒரு மாதிரி கூச்சத்தை கொடுத்தது.
அதுவும் இல்லாது இப்போது யாராவது வந்தால் என்ன நினைப்பார்கள் என்றும் கூடவே எண்ணம் எழ...எழுந்து விடலாமா…? என்று யோசித்தவளுக்கு, விடை வேண்டாம்.
இப்போது நீ சட்டென்று எழுந்தால், அது அவனின் ஒழுக்கத்தை தாக்குவது போல் ஆகும் என்று நினைத்து கொஞ்சம் நெளிந்து கொண்டே தான் அவன் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டு இருந்தாள்.
“நீ இப்போ வரும் போது லாலி பர்சனல் விசயமா ஜெர்மனி போக வேண்டியதா ஆயிடுச்சி. அதான் உன்னை வழி அனுப்ப வர முடியலேன்னு சொன்னா…” என்று வீரேந்திரன் சொன்னதற்க்கு…
“ம் என் கிட்ட அவங்க சொன்னாங்க...வுட்பிய சந்திக்க போறாங்கன்னு. எனக்கு தான் அதை கேட்டு கொஞ்சம் ஷாக்.” என்று யாராவது வந்து விடுவார்களோ...தங்களை தப்பா நினைப்பார்களோ என்றே மணிமேகலையின் மனதில் இருந்ததால், வீரேந்திரனிடம் தான் என்ன சொல்கிறோம் என்று தெரியாது, தன் மனதில் இருந்ததை அப்படியே சொல்லி விட்டாள்.
“லாலி அவ ப்யூச்சர் ஹஸ்பெண்ட்டை பாக்க போவதில் உனக்கு என்ன ஷாக்.” என்று வீரேந்திரன் கேட்கவும் தான்…’அய்யோ உலறி வெச்சிட்டனே...என்று தன் நாக்கை கடித்துக் கொண்டு என்ன சொல்வது என்று யோசித்தாள்.
மணிமேகலை சிறு வயதில் ஏதாவது தப்பு செய்து விட்டால், இப்படி தான் நாக்கை கடித்துக் கொள்வாள். அதே போல் செய்யவும்..
“சிட்டு உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும்.என் கிட்ட என்ன சொல்லி தப்பிக்கலாம் என்று எல்லாம் யோசிக்காதே....நான் தப்பா எல்லாம் நினச்சிக்க மாட்டேன். சொல்லு நிஜத்தை சொல். என்ன நினச்சி நீ அதிர்ச்சி ஆனாய்.” என்று கேட்கவும்,
வீரேந்திரன் சொன்ன… “உன்னை தப்பா நினைக்க மாட்டேன்.” என்ற வார்த்தையில் தைரியம் பெற்றவளாய்…
“இல்ல நான் அங்கு போனதில் இருந்து அவங்க எனக்கு ஏதாவது உதவி செய்தா...தேங்ஸ் சொல்லுவேன். அதுக்கு அவங்க நீ என் வீரா அனுப்பிய பெண். உன்னை என் வீரா நல்லா பார்த்துக்க சொன்னார்.
இப்படி தான் அவங்க சொல்வாங்க. நான் அவங்க பேசுனதை வெச்சி...வெச்சி…” என்று மணிமேகலை அடுத்து சொல்ல முடியாது கொஞ்சம் இழுத்து நிறுத்தவும்.
“ம் சொல்லு. நான் தான் தப்பா நினைக்க மாட்டேன்னு சொல்றேன்ல...தைரியமா சொல்.” என்று சொல்லவும்…
“நீங்களும் அந்த வெளிநாட்டு பறவையும் விரும்புறிங்களோன்னு நினச்சிட்டேன்.” என்று மணிமேகலை சொல்லி முடிக்கவும்…
வீரேந்திரன் புரை ஏறும் அளவுக்கு சிரிக்கவும்…
“இப்போ நான் அவ்வளவு பெரிய ஜோக் எல்லாம் சொல்லலே…இன்னும் சொல்ல போனா நான் ஜோக்கே சொல்லலை…” மூச்சில் அணல் காற்று வீச பேசினாள்.
தான் சொன்னதற்க்கு வீரேந்திரன் கோப்ப்பட்டு இருந்தாலும் அவளுக்கு பரவாயில்லையாக இருந்து இருக்கும். இது போல் சிரிப்பது தன்னையே பார்த்து சிரிப்பது போல் இருக்க.. சிறுவயது பழக்கத்தில் பேசுவது போல் மணிமேகலை வீரேந்திரனிடன் பேசினாள்.
மணிமேகலையின் இந்த உரிமை பேச்சை வீரேந்திரன் ரசித்தாலும், அதை வெளியில் காட்டாது… “சாரி சிட்டு. சாரி. அது நீ லாலியை வெளிநாட்டு பறவைன்னு சொன்னலே அதை கேட்டு தான் எனக்கு சிரிப்பு வந்துடுச்சி… இனி சிரிக்கல சரியா…” என்று கேட்டவன்..
பின்… “இது போல் நீ என்னை பத்தி என்ன நினச்சாலும், தைரியமா கேட்கலாம் சிட்டு. நான் தப்பா நினைக்க மாட்டேன்.
அதே போல் தான் உன்னை பத்தியும் நீ எதுன்னாலும், என் கிட்ட தைரியமா சொல்லலாம். என்ன புரியுதா…?” என்று கேட்டவன் மணிமேகலையின் பதிலை எதிர் பாராது அவள் கேட்ட கேள்விக்கு பதிலாய்…
“லாலியோட அண்ணனும் நானும் M.B. A ஒன்னா தான் சென்னையில் படிச்சோம். அப்போ லாலி அவன் பிரண்சுங்க கூட இந்தியாவை சுத்தி பாக்க வந்த போது தான் நான் அவளை முதன் முதலா பார்த்தது.
இங்கு அவங்களுக்கு சுத்தி காட்டினது நான் தான். அப்போ ஒரு நாள் இங்கு ஏதோ பார்ட்டி அட்டண் செய்யனும் என்று என்னை கழட்டி விட்டுட்டு...அவ பிரண்ஸ் கூட போனா…
நானும் சரின்னு அன்னைக்கு போகமா வீட்ல இருந்தேன். அப்போ நடுயிரவு ஒரு பதினொன்னு இருக்கும் லாலி கிட்ட இருந்து போன்…
“வீ..ரா நீ.. வா…” என்று அவள் அழைத்த அழைப்பில் அவள் பேச்சில் அவ்வளவு தெளிவு இல்லாததை பார்த்து…
முதல்ல அவ அளவுக்கு மீறி மது எடுத்துட்டு இருக்கா..அதான் இப்படி குழறி பேசுறான்னு தான் முதல்ல நினச்சேன்.
ஆனா அவ சொன்ன… “இ..ங்கு உ..ன் பிர..ண்ஸ் எ..னக்கு தெரியாம ஏதோ கல..க்கிட்டாங்க. எ..னக்கு கொஞ்..சம் கொஞ்..சமா நினைவு தப்புதுன்னு.” சொன்ன அவள் பேச்சை கேட்டு நான் ரொம்ப பயந்துட்டேன்.
“உன் அண்ணா எங்கேன்னு …?” கேட்டேட்டே அவ எங்கு இருக்கான்னு கேட்டுக் கொண்டே என் வண்டிய எடுத்துட்டேன்.
அப்போ அவ சொன்ன… “அவனுக்கும் கொடுத்துட்டாங்க...எனக்கு கொஞ்சமா கொடுத்தாங்க. எனக்கு ரொம்ப கொடுத்தா செத்தது போல ஆயிடுவேன் நல்லா இருக்காது என்ன என்னவோ சொல்றாங்க வீரா. சீக்கிரம் வா...சீக்கிரம் வா.எனக்கு ரொம்ப பயமா இருக்கு.வீரா அவங்க வர சத்தம் கேட்குது.” என்று சொன்னது மட்டும் தான் கடைசியா அவ பேசியில் என்னிடம் பேசியது.
அவள் சொன்ன ஓட்டல், நான் தங்கி இருந்த இடத்தில் இருந்து ரொம்ப பக்கம் தான். அதனால் தான் அவள் கடைசியா பேசிக் கொண்டு இருக்கும் போதே நான் அந்த ஓட்டலின் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்து சேர்ந்து விட்டேன்.
அவ சொன்ன உன் பிரன்சுங்க என்றதில் இருந்து, அங்கு இருந்த ரிசப்ஷனிஸ்ட்டிடம் என் பிரன்டில் நான்கு பேரின் பெயர் சொல்லி, ரூம் புக் செய்து இருக்காங்காலான்னு கேட்டேன்.
நான் ஒரு பெயர் சொல்லாது நான்கு பெயர் சொல்லி கேட்கவும், அவங்க என்னை சந்தேகமா பார்த்ததை பார்த்துட்டு நிலைமையின் தீவித்தை சொன்னதும்…
அவங்களும் ஆமா ஆமா ஒரு வெளிநாட்டு பெண்ணோடு தான் வந்தாங்க. ஆனா மூன்று ரூம் புக் செய்து இருக்காங்க என்று சொல்லி கொண்டே அந்த ரூமோட சாவிய எடுத்துட்டு என் கூட வந்தாங்க.
அதிர்ஷ்ட்ட வசமா நாங்க திறந்த முதல் அறையிலேயே தான் லாலி இருந்தா...நல்ல வேலை நிலமை ரொம்ப மோசமாக ஆகலே..ஆனா கொஞ்சம் லேட் செய்து இருந்தாலும், நிலமை எங்க கை மீறி போய் இருக்கும்.
அப்புறம் அந்த ஓட்டலின் மேனஜர் வந்து, இதை வெளியில் சொல்லாதிங்க. எங்க ஓட்டல் நேம் தான் கெட்டு போயிடும் என்று சொன்னதை கேட்டு, நானும் அமைதியா லாலியின் மயக்கம் தெளியும் வரை காத்திட்டு இருந்தேன்.
அதுவும் இல்லாம அந்த ஓட்டல் மேல எந்த தப்பும் இல்லை. அதனால் தான் அந்த ஓட்டல் மேல் எந்த ஆக்க்ஷனும் எடுக்கல..லாலிக்கு மயக்க மருந்தின் அளவு குறைவா கொடுத்ததாலே சீக்கிரத்திலேயே அவ தெளிஞ்சிட்டா…
காலையில் தான் லாலியோட அண்ணனுக்கு மயக்கம் தெளிந்து ஒரு நிலைக்கே வந்தான். ஓட்டல் மேல ஆக்ஷன் எடுக்கலேன்னாலும் அந்த நாளு பசங்க மேல காலேஜ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் படி செய்துட்டேன்.
நான் முதலிலேயே லாலி இந்தியா வந்ததும், இந்த பசங்க பார்வை சரியில்லேன்னு நான் லாலி கிட்டேயும் சொன்னேன். லாலியோட அண்ணன் கிட்டேயும் சொன்னேன்.
ஆனா கேட்காம அவங்க சொன்ன வீரா ஒரு பட்டிக்காடு. அவன் குளம், கோயில். இப்படி தான் சுத்தி காட்டி இருப்பான்.
நாங்க கூட்டிட்டு போறேன் பாருங்க ஒரு இடம். சும்மா சமையா இருக்குமுன்னு சொன்னதோடு, வீரா கிட்ட சொல்லாதேன்னு லாலிகிட்டேயும் அவ அண்ணன் கிட்டேயும் சொல்லி கூடிட்டு போய் இருக்காங்க.
அப்புறம் இப்படி ஆனதில் , நீ சொன்ன வீரா. நான் தான் கேக்கல...அதுவும் அவங்க சொன்ன வெளிநாட்டு பெண் தானே இது எல்லாம் அங்கு சாதரணம் தானே…இதுக்கு ஏன் இப்படி அடம் பிடிக்கிற…
நாங்களும் எத்தனை நாளுக்கு தான் உள்நாட்டு சரக்கையே அடிக்கிறது. எங்களுக்கும் பாரின் சரக்கு அடிக்க ஆசை இருக்காதேன்னு கேட்டு இருக்கானுங்க.
அது தான் லாலி என் கிட்ட சொன்னா...நான் இப்போ வர்ஜீன் கிடையாது. நான் இரண்டு பாய் பிரண்ட் கூட லிவிங் டு கெதரில் இருந்து இருக்கேன். ஆனா அது எல்லாம் நான் ஆசை பட்டு..நடந்த விசயம் அது. இப்படி போஸ் பண்றது தப்பு இல்லையா...இது ஏன் உங்க பிரன்சுங்களுக்கு புரியலேன்னு கேட்டா…
அது தான் நான் இங்கு இப்படி தான். பெண்கள் மனதை பாக்க மாட்டாங்க..சொல்லி அனுப்பி வெச்சேன். அது தான் என் பெயரை சொன்னாலே என்னவோ கடவுள் பெயர் சொன்னது போல் பீல் ஆவா.
அது தான் நான் உன்னை பாத்துக்கனும் என்று சொன்னதும், லாலி அப்படி பார்த்துக்கிட்டா..அதுவும் இல்லாம அடுத்த வாரம் அவ இந்தியா வர்றா…” என்று லாலியுடனான தன் நட்பை வீரேந்திரன் சொல்லி முடித்தான்.
முதலில் வீரா லாலியை காப்பாற்றியது...அதை கேட்டு பரவாயில்ல வட்டிக்காரனுக்கு பணம் மட்டுமே முக்கியம் இல்லை. மனமும் இருக்கிறது என்று நினைத்த மணிமேகலை.
லாலி இந்தியா வர்றா...என்று வீரேந்திரன் சொன்னதும்...மணிமேகலைக்கு மிகவும் சந்தோஷமாக ஆகிவிட்டது.
நம்மை அந்த வெளிநாட்டு பறவை எப்படி கவனித்தாள். நாமும் அவளை நன்கு பார்த்து அனுப்பனும் என்று நினைத்தவள்…
பின் மணிமேகலைக்கு ஏதோ நியாபகம் வந்து… “ஓ உங்க கல்யாணத்துக்கு வர்றாங்கலா…? என்று கேட்டு விட்டு…
தொடர்ந்து… “நீங்க லாலியை பத்தி கவலை படாதிங்க. கல்யாண மாப்பிள்ளையா நீங்க உங்க கல்யாணத்தை அனுபவிங்க. நான் லாலியை கவனித்து கொள்கிறேன்.” என்று சொன்னாள்.
வீராவின் இன்றைய பேச்சில்...வட்டிக்காரன் ஒன்றும் அவ்வளவு கெட்டவன் கிடையாது. கொஞ்சம் கொஞ்சம் நல்லவன் தான். சின்ன வயசு வீரா, அவன் கிட்ட உள்ளே ஒளிஞ்கிசிட்டு தான் இருந்து இருக்கான் என்று நினைத்தவளாய்...வீரேந்திரனின் சிட்டாய் பேசினாள்.
பதிலுக்கு வீரேந்திரனும்… “கல்யாண பெண் நீ… லாலியை கவனிச்சிப்பியா…? “ என்ற வீராவின் பேச்சை சரியாக உள்வாங்காது…
“ஏன் பாத்துக்க மாட்டேனா…?” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே... வீராவை அதிர்ச்சியுடன் பார்த்தவள்…
“நீ...ங்..க எ..ன்ன சொன்...னிங்க…?” தான் கேட்டது சரியா…? என்ற வகையில் திரும்பவும் கேட்டாள்.
“என் கல்யாணத்தில் கல்யாண பெண்ணே நீ தான். நீ லாலியை கவனிக்க முடியுமா…?” என்று தெள்ள தெளிவாக விளக்கிய வீராவின் பேச்சை நம்ப முடியாது அவனை பார்த்தவள்…
“ஏன்…?” என்ற கேள்விக்கு...வீராவின் பதில்…
“உனக்கு வசு, வாசுவின் காதலியா மட்டும் தான் தெரியும். எனக்கு வசு வாசு குழந்தையின் அம்மாவா தெரிந்ததால்…” தன் வார்த்தையை முடிக்காது மணிமேகலையை வீரேந்திரன் பார்க்க…
அவள் முகத்தில் தெரிந்த அதிகப்பட்ட அதிர்ச்சியை பார்த்த வீரேந்திரனுக்கு…. ‘இவளின் இந்த அதிர்ச்சிக்கு காரணம்...தன்னோடனான இவளின் திருமணமா…?இல்லை வசு கற்பமாக இருப்பதினாளா…?’ என்று மனதில் நினைத்ததை வீரேந்திரன் கேட்டு விட்டான்.
“இப்போ எதுக்கு இவ்வளவு ஷாக் சிட்டு. உனக்கும் எனக்கும் கல்யாணம் செய்துக்க வேண்டிய முறை இருக்கு தானே...வாசு உன்னை வெச்சி ஏதோதே வீட்டில் பேசும் போதே எனக்கு அவங்க விசயம் தெரிஞ்சிடுச்சி…
வசு அவ கற்பத்தை கன்பாம் பண்ண போன ஹாஸ்பிட்டலில் தான் என் பிரன்ட் டாக்டரா இருக்கான். அவனுக்கு வசுவை தெரியலேன்னாலும், வாசுவை தெரியும். அன்னைக்கே போன் போட்டு என் கிட்ட சொல்லிட்டான். அப்புறம் விசாரிச்சதில் அவங்க இரண்டு பேரும் ஒரே வீட்டில் தான் இருந்தாங்கன்றதும் எனக்கு தெரிய வந்தது.
அதே வாரத்தில் ஒரு நாள் வீட்டுக்கு வந்த வாசு ...உனக்கு என்னை பிடிக்குமுன்னு நீ வசுவிடம் சொன்னதாகவும், உனக்கு வசு அண்ணியா வந்தா நல்லா இருக்கும் என்று சொன்னாதாவும் சொன்னான்.
அது பொய்யுன்னும் எனக்கு தெரியும். ஆனா நான் அமைதியா இந்த கல்யாணத்திற்க்கு உன் கிட்ட கேக்காம ஒத்துக்க காரணம்...வசு வாசுவின் காதலியா மட்டும் இருந்து இருந்தா பரவாயில்லை.
ஆனால் இப்போ நான் ஏதாவது பேசி, வீட்டில் இருக்க பெரியவங்களுக்கு இந்த விசயம் தெரிய வந்தா...சொல்லு இந்த விசயம் நம்ம வீட்டுக்கும்,ஊருக்கு தெரிஞ்சா...என்ன ஆகும். அதான் நான் அமைதியா இருந்துட்டேன்.
ஒரு சில வாட்டி இதை பத்தி நான் உன் கிட்ட பேசலாமுன்னு கூட யோசிச்சேன். ஆனா அப்போ உனக்கு அந்த பயிற்ச்சியின் தேர்வு நடந்துட்டு இருக்க சமயம்.
இந்த சமயத்தில் இதை பத்தி பேசி உன்னையும் ஏன் குழப்பனும். அதுவும் இல்லாம வேறு சாய்ஸ்..அதாவது நம்ம கல்யாணம் நடக்க வேண்டாம் என்ற எண்ணம் இருந்தா இதை பத்தி உன் கிட்ட பேசி இருக்கலாம்.
நடந்து தான் ஆக வேண்டும் என்ற பட்சத்தில்...சரி நீ இங்கே வந்த பிறகே சொல்லிக்கலாம் என்று விட்டு விட்டேன்.”
என்ன நிலை என்று அனைத்தும் சொல்லி முடித்த வீரா...தான் இவ்வளவு சொல்லியும் மணிமேகலையின் முகத்தில் இருந்த குழப்பம் தெளியாததை பார்த்து…
“உனக்கு இதில் விருப்பம் இல்லேன்னா வேண்டாம். இதை இப்படியே இந்த இடத்திலேயே நிறுத்திடலாம் சிட்டு.
நாம மத்தவங்களுக்கு பார்க்க வேண்டியது தான். ஆனால் அந்த மத்தவங்களுக்கு பார்ப்பது என்பது, நம்மை எந்த விசயத்திலும் பாதிக்காது இருக்கனும். அப்படி இல்லேன்னா நாம யாரையும் பாக்கனும் என்ற அவசியம் இல்ல. நம்மோடு தான் மத்தது எல்லாம். என்று வீரேந்திரன் சொல்லி முடிக்க…
“அய்யோ நான் எனக்காக யோசிக்கல...உங்களுக்காக தான்.” என்று அடுத்து என்ன சொல்வது என்று மணிமேகலை தயங்கினாள்.
“எனக்காகன்னா எனக்கு புரியல சிட்டு…”
“இல்ல வசுவும், வாசுவையும் பாத்து, உங்களுக்கு விருப்பம் இல்லாத கல்யாணம் நீங்க செய்துக்கனுமா..?அதை பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன்.” என்று மணிமேகலை ஒரு வழியாக தன் மனதில் நினைத்ததை சொல்லி விட்டாள்.
“அப்போ உனக்கு இதில் விருப்பமா...சிட்டு…?” என்று கேட்ட அவன் குரலில் என்ன இருந்தது… என்று மணிமேகலைக்கு தெரியவில்லை.
ஆனால் அவன் குரலில் இருந்த மென்மையில், எனக்கு விருப்பம் இல்லை என்று மணிமேகலையால் சொல்ல முடியவில்லை.
“எனக்கு விருப்பம் தான். ஆனா நீங்க…” என்று சொல்லிக் கொண்டே வீரேந்திரனை தயக்கத்துடன் மணிமேகலை நிமிர்ந்து பார்த்தாள்.
மணிமேகலையின் முகத்தை மறைத்துக் கொண்டு இருந்த முடியை அவளின் காதுக்கு பின் புறம் விட்ட வாறே… “நான் சொன்னதை நீ கவனிக்கலையா சிட்டு. யார் என்றாலும், நமக்கு பாதகமா இல்லாததை தான் செய்யனும். மத்தவங்களுக்காக என் வாழ்க்கையை நான் அழிச்சிக்க மாட்டேன்.
எனக்கு பிடிக்காததை எதையும் எனக்கு திணிக்க முடியாது. அதுக்கு நான் விடவும் மாட்டேன். உன்னை பிடிக்கலேன்னா...வாசு வசு என்ன என் அப்பா அம்மாக்காக கூட உன்னை நான் கல்யாணம் செய்துக்க மாட்டேன். உன்னை பிடிச்சி இருக்கு...அதுக்காகவும் தான் உன்னை நான் கல்யாணம் செய்ய ஒத்துக் கொண்டேன் போதுமா…இப்போ சொல். உனக்கு என்னை பிடிச்சி இருக்கா…?” என்ற அவன் கேள்வியில் கொஞ்சம் திணறி போனவளாய் வீரேந்திரனை பார்த்தாள்.
“நான் ஒன்னும் அவ்வளவு கஷ்ட்டமான கேள்வி எல்லாம் கேட்கலையே...பிடிச்சி இருக்குன்னா பிடிச்சி இருக்குன்னு சொல்லு...இல்லேன்னா இல்லேன்னு சொல்லு,” என்ற அவன் பேச்சில்…
மணிமேகலைக்கு சட்டென்று அவனை பிடிச்சி இருக்கு என்று சொல்ல ஏனோ மனம் வரவில்லை. இரு வாரம் முன் ஒருவனை திருமணம் செய்ய இருந்தேன்.
அவன் இல்லாது போக இவன்...இப்போது எப்படி நான் என் விருப்பதை சொல்வது. என்னால் சரியாக எதுவும் யோசிக்க கூட முடியவில்லை.
அதுவும் தன்னிடம் அவன் எந்த ஒளிவு மறைவும் இன்றி பேசுகிறான். ஆனால் நான்…?என்னை பற்றி என்னால் சொல்ல முடியுமா…?சொன்னால் என்ன நினைப்பான்.
கடவுளே இவன் தான் மாப்பிள்ளை என்று முன்னவே சொல்லி இருக்கலாமே...ஒரு சமயம் சொல்லி இருந்தால் நான் இன்னொருவருடனான என் திருமணத்தை பற்றி பேசி இருக்க மாட்டனே… என்ன சொல்வது என்று ஒரு முடிவு தெரியாது…
பொதுவாய்… “உங்கல பிடிக்கலேன்னு சொல்ல எந்த ஒரு ரீசனும் இல்ல.” என்று சொல்லும் போதே மணிமேகலைக்கு நாக்கு கூசியது என்று சொல்லலாம்.
என்னை பத்தி தெரிந்தால் என்ன நினைப்பான்…?அவள் மனதில் அதுவே குழம்ப…
வீரேந்திரன் சொன்ன… “பரவாயில்ல பிடிக்கலேன்னு சொல்லலையே அதுவே போதும்.” என்று சொன்ன குரலில் இருந்த பேதத்தை உணர்ந்து..
மணிமேகலை ஏதோ சொல்ல வர… “இல்ல சிட்டு உன் மனசுல இருக்கிறதை சொன்னதே எனக்கு போதும். பரவாயில்லை.” என்று மணிமேகலையிடம் வீரேந்திரன் சொல்லும் போதே…
‘இவளுக்காக நான் வருட கணக்கில் காத்திருக்க. இவள் சொல்கிறாள் என்னை மறுக்க காரணம் இல்லையாம். அதனால் திருமணம் செய்துக் கொள்கிறாளாம்.’
சரி அடுத்த காரியம் பார்க்கலாம் என்று வீரேந்திரன்.. “என்ன ஷாப்பிங் போகலாமா…?” என்று அழைத்தான்.
தயக்கத்துடன் தன்னை பார்த்த மணிமேகலையிடம் வீரேந்திரன்… “ஏதாவது கேட்கனுமா…?” என்று கேட்டதற்க்கு,
மணிமேகலை… “ஆமாம்.” என்று தலையாட்டினாள்.
ஆடிய அவள் தலையை பிடித்து நிறுத்தியவன்… “கேள்…” என்று சொல்ல…
“இல்ல நாம கல்யாணத்திற்க்கு அப்புறம் நாம அதே ஊரில் தான் இருக்கனுமா…?” என்ற கேள்வியில்..
‘இது என்ன பேச்சு என்பது போல் அவளை பார்த்தவன்… “ஆமா அது நம்ம ஊரு தானே...நாம அங்கயே தான் இருக்க போறோம். அதுவும் இல்லாம..என் பணத்தின் முக்கால் வாசி பாகம் அந்த ஊரில் தான் முடங்கி இருக்கு.” என்ற அவன் பேச்சில்…
‘ஆமா உன் பணத்தையும் அங்கயே முடக்கு...என்னையும் அங்கயே முடக்கி போடு..’ என்று நினைத்ததை சொல்லாது அவனோடு கடைக்கு கிளம்பினாள்.