அத்தியாயம்…. 21
தன் பேரன் தன்னையே இப்படி அனைவரின் முன்னும் எதிர்த்து நிற்ப்பான் என்று தெய்வநாயகி துளியும் எதிர் பார்க்கவில்லை. அதுவும் தன்னை அடிப்பது போல் விரல் நீட்டிக் கொண்டு வந்த வீரேந்திரனின் செயலில் தெய்வநாயகி பெரியதாய் அடி வாங்கினார் என்று தான் சொல்ல வேண்டும்.
அதுவும் தன் பேரனுக்கு மணிமேகலையை மணம் முடிக்க சிறிதும் விருப்பம் இல்லாது தான் இந்த கல்யாணத்திற்க்கே தெய்வநாயகி சம்மதித்தார். அதற்க்கு காரணம் இதோ என் முன் விரல் நீட்டி பேசிக் கொண்டு இருக்கும் இவன் முகத்தில் அன்று…
அதாவது மணிமேகலை அமெரிக்காவுக்கு போகும் முன்...அமெரிக்கா போக அனுமதி கிடைத்த அன்று...மணிமேகலையின் திருமனம் விசயம் பேசும் போது தெய்வநாயகி தன் பேரன் வீரேந்திரன் முகத்தை பார்த்துக் கொண்டு தானே இருந்தார்.
மணிமேகலை அந்த திருமணத்தை மறுக்கும் போது அவன் முகத்தில் தோன்றிய அந்த சந்தோஷம்..இதோ இன்றும் அவர் நினைவில் இருக்கிறதே...அடுத்து மணிமேகலை தன் விருப்பம் என்று படிப்பை சொன்ன போது வீரேந்திரன் முகத்தில் தெரிந்த யோசனையான முகம். பின் அதில் தெரிந்த தெளிந்த தோற்றம்.
இவை அனைத்தையுமே அன்று தெய்வநாயகி கவனித்துக் கொண்டு தானே இருந்தார். மணிமேகலையின் விருப்பத்தை அன்று அனைவரும் மறுக்க… வீரேந்திரன் மட்டும் அனைத்தும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஏதோ முடிவு செய்தது போல் பேசியவனை பார்த்து தானே ...
தெய்வநாயகியும் மணிமேகலையை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்ப சம்மதித்ததே… இப்படி அனைத்துக்கு அவனின் விருப்பமே முக்கியம் என்று நான் செயல் பட…
இவன் இவளுக்காக இன்று என்னை இப்படி அனைவரும் முன்னும் அவமானப்படுத்துவது போல் பேசுவதா...என்று இன்னும் இன்னும் தெய்வநாயகிக்கு கோபம் தான் அதிகமாகியது.
அதன் வெளிப்பாடாய்… “பேசுவடா...பேசுவ...என் வயசுக்கு என்ன எனக்கே மதிப்பு கொடுக்காம தான் இனி பேசுவ…” என்று சொன்ன தெய்வநாயகி…
தொடர்ந்து… “இதோ இந்த சிறுக்கியை காதுல, மூக்குல மாட்டி கட்டி கொடுக்கனும் என்று தான் நினைத்து இருந்தேன்.
எப்போ உனக்கு அவள் மேல் விருப்பம் என்று தெரிஞ்சுதோ…என் மனசை மாத்தி...என் பேரன் படிக்காத படிப்பை கூட படிக்க வைக்க அவளை வெளிநாட்டுக்கு எல்லாம் அனுப்பி படிக்க வெச்சி...இதோ இவ விருப்பமுன்னு...இந்த ஒழுக்கம் கெட்டவளையும் நம்ம குடும்பத்தில் சேர்த்துட்டு...இதோ இந்த ஊரையே வளச்சி போட்டு கல்யாணம் செய்யிறேன்லே...நீ இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ…” என்று தெய்வநாயகி தன் ஆவேசம் தீரும் அளவுக்கு பேசினார்.
அனைத்தையும் பொறுமையாக கேட்ட வீரேந்திரன்… “அம்மத்தா நீங்க என்ன சொன்னாலும், இங்கு இருப்பவங்க...அதாவது உங்க மூன்று பிள்ளைங்க..அந்த மூன்றில், இரண்டு பேரும் பெத்த மக்குங்க நம்புவாங்க… ஆனா நான் நம்ப மாட்டேன் அம்மத்தா…
என்ன சொன்னிங்க.. சிட்டுவை நீங்க படிக்க வெச்சிங்களா…? முதல்ல அவ படிப்புக்கு எவ்வளவு செலவாச்சின்னாவது உங்களுக்கு தெரியுமா…? முதல்ல அதை சொல்லுங்க. அதுக்கு அப்புறம் நீங்க அவ படிப்புக்கு எவ்வளவு செலவு பண்ணிங்கன்னு சொல்லலாம்.” என்று சொன்னவன்…
பின்…” ஆ அப்புறம் என்ன சொன்னிங்க...பேரனை படிக்க வைக்காத படிப்பை அவள படிக்க வெச்சேன்னு...முதல்ல உங்க பேரனை அதுக்கு நுழைவு தேர்வு ஒன்னு இருக்கு...அதை எழுதி முதல்ல தேர்ச்சி பெற சொல்லுங்க..
அதுக்கு அப்புறம் அவங்க அமெரிக்கா போய் படிப்பாங்களா...ஆப்பிரிக்கா போய் படிப்பாங்களான்னு அவங்க முடிவு செய்துக்கட்டும்..இங்க இருக்கும் சென்னையில் அவங்க படிச்ச அந்த இன்ஞீனியர் படிப்பையே அரியஸ் வெச்சி அரியஸ் வெச்சி தான் க்ளீயர் பண்ணாங்க.
அதுவும் உங்க சின்ன பேரன் அதை கூட முடிக்காது...நானும் இன்ஞீனியர்...நானும் சென்னையில் வேலை பாக்குறேன்னு சுத்திட்டு இருக்காங்க...இந்த லட்சணத்துல தான் உங்க பேரன்களின் போஷி இருக்கு...அந்த பேரன்களில் நானும் தான் அடக்கம்.
ஆனா நம்ம சிட்டு அவள் படிக்க ஆராம்பித்ததில் இருந்து, எப்போவும் அவள் தான் வகுப்பில் முதல்ல வர்றா..முதல்ல அது இந்த குடும்பத்தில் இருக்குறவங்க யாருக்காவது தெரியுமா…?” என்று கேட்டவன்..
பின்…. “கண்டிப்பா இது உங்களுக்கு தெரிஞ்சி இருக்காதுன்னும் எனக்கு தெரியும்.மேல் படிப்பு படிக்க காசு மட்டும் இருந்தா போதாது…” என்று சொன்ன வீரேந்திரன் தன் மூளை பகுதியை சுட்டி காட்டி…
“இது தான் ரொம்ப ரொம்ப முக்கியம். அது சிட்டுக்கு இருந்தது அது தான் படிச்சிட்டு வந்தா… இன்னும் ஏதேதோ சொன்னொங்கலே…” என்று நியாபகப்படுத்திக் கொள்வது போல் யோசித்தவன்..
பின் நியாபகம் வந்தவனாய்… “நான் ஆசை பட்டேன். அந்த ஒரே காரணத்துக்காக தான் உங்களுக்கு பிடிக்கலேன்னாலும், இவளை எனக்கு திருமணம் செய்ய சம்மதம் கொடுத்திங்க…
“அம்மத்தா உண்மைய சொல்லுங்க…எங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் நடக்க என் விருப்பம் ஒன்று தான் காரணமா…?” என்ற கேள்வியை கேட்டு விட்டு வீரேந்திரன் தெய்வநாயகியை பார்த்திருந்தான்
தெய்வநாயகிக்கு முதலில் வீரேந்திரன் தன்னை அவமானப்படுத்தியது போல் பேசியதும், கோபம் வந்து பேசியவருக்கு பதில் அடியாய் வீரேந்திரன் பேசிய வார்த்தைகள் கேட்க… கேட்க.. தெய்வநாயகியின் கோபம் இன்னும் கொஞ்சம் தான் அதிகமாகியது.
ஆனால் கடைசியாய வீரேந்திரன் கேட்ட… “எங்க இருவர் திருமணத்திற்க்கு என் விருப்பம் மட்டும் தான் காரணமா…?” என்ற கேள்வியில் தெய்வநாயகியின் முகத்தில், முத்து முத்தாய் வியர்வை அரும்ப அதை துடைக்க கூட தோன்றாது நின்று இருந்தவர்…
பின் என்ன நினைத்தாரோ… “இந்த கல்யாணத்துக்கு எது காரணம் என்று ஆற அமர பொரவு யோசிக்கலாம். இப்போ மூகூர்த்ததிற்க்கு நேரம் கடக்குது. சீக்கிரம் கீழே போகலாம் வாங்க. நம்ம உறவு முறைய எல்லாம் அழச்சிட்டு இப்படி நாம தனியா பேசுறது அவ்வளவு சரியா படல எனக்கு.” என்று அவசர அவசரமாக செல்ல பார்த்தவரின் கையை ஒரு கை பிரித்து நிறுத்தியது.
தெய்வநாயகி யார் கை பிடித்து தன்னை தடுத்து நிறுத்தியது என்று கூட பாராமல்… “வீரா மூகூர்த்ததுக்கு நேரம் ஆயிடுச்சி. நம்ம வூட்டு பஞ்சாயத்தை பொரவு கூட பாக்கலாம். இப்போ இங்கு கல்யாணம் நடக்கலேன்னா அசிங்கமாயிடும்.” என்று சொன்னவரின் பேச்சுக்கு…
எதிர் பேச்சாய்… “நீங்க கேட்டாப்பல நான் மாசம் எல்லாம் இல்ல அப்பத்தா...அதனால இன்னைக்கு என் கல்யாணம் நடக்கலேன்னாலும் எனக்கு எந்த அசிங்கமும் இல்ல...இப்போ வீரா அத்தான் என்ன என்னவோ உங்க கிட்ட கேட்டாரே...அது என்னன்னு சொல்லுங்க…” என்று கேட்ட மணிமேகலையின் பேச்சிலும், குரலிலும் நீங்க எனக்கு சொல்லி தான் ஆகனும் என்ற ஸ்திரமான நிலை இருந்தது.
தெய்வநாயகிக்கு முதலில் தன் கை பிடித்து தன்னை தடுத்து நிறுத்தியது மணிமேகலை என்று நம்புவதே கடினமாக இருந்தது. அதோடு அவள் பேசிய பேச்சில் தோரணையை பார்த்து…
தான் கட்டிய கோட்டை தகர்ந்து விழுவது போல் இருக்க…”என்னடி உனக்கு ஏத்தம் ரொம்ப கூடி போச்சோ...என்ன இவனை கல்யாணம் செய்தால் இனி என் தயவு தேவையில்லைன்னு இருக்கியா..இப்ப கூட இந்த கல்யாணத்தை என்னால் தடுத்து நிறுத்த முடியும்.” என்று சவால் போல் பேசினார்.
தெய்வநாயகி பேசிய பேச்சில் மணிமேகலை சட்டென்று வீரேந்திரனை தான் திரும்பி பார்த்தாள். வீரேந்திரன் முகத்தில் தெரிந்த ஏதோ ஒன்றில் தைரியம் பெற்றவளாய்…
“பரவாயில்ல இன்னைக்கு என் கல்யாணம் நடக்கலேன்னாலும் பரவாயில்ல…” என்று சொன்னவள். சட்டம் திட்டமாய் கை கட்டி நின்றுக் கொண்டாள்.
அவளின் அந்த தோற்றம் நீங்கள் சொல்லாமல் யாரும் இந்த இடத்தை விட்டு செல்ல முடியாது என்பது போல் இருந்தது.
“என்னடி பயமுறுத்திறியா..இதோ இவன் இருக்கும் தைரியத்தில் இத்தனை நாள் சோறு போட்ட என்னையே எதிர்த்து பேசுறியா…
தோ பாருடீ இந்த தெய்வநாயகி யாருக்கும் பயப்பட மாட்டா...இப்போ உங்களுக்கு என்ன தெரியனும். இந்த கல்யாணம் நடக்க காரணம் தானே...
ஆமா வீரா சொல்ற மாதிரி இந்த கல்யாணம் நடக்க அவன் விருப்பம் மட்டும் காரணம் இல்ல. இந்த சொத்து வெளியில் போவதில் எனக்கு விருப்பம் இல்லை. எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னா இருக்கட்டும் என்று தான் உன்னை என் பேரனுக்கு கட்ட சம்மதித்தேன்.” போதுமா…? என்பது போல் தெய்வநாயகியின் பேச்சில், மணிமேகலைக்கு இல்லை இதில் இன்னும் ஏதோ ஒன்று இருப்பது போல் இருந்தது. சந்தேகத்துடன் திரும்பி வீரேந்திரனை பார்த்தாள்.
அவளின் தோள் மீது கைய் வைத்த வீரேந்திரன்.. “இன்று நமக்கான நாள் சிட்டு..அதை நாம யாருக்காகவும் கெடுத்துக்க கூடாது. இப்போ நான் சொல்றது தான். நம்ம சந்தோஷம் நம்ம கையில தான் நாம வெச்சி இருக்கனும்.
மத்தவங்க சொல்லிலோ...செய்யலிலோ தீர்மானிக்க விட்டா நம்ம சந்தோஷம் நம்ம கைய் விட்டு பறந்து போயிடும்.” என்று சொன்னவன்..
“முதல் முகூர்த்தம் நம்மோடது தான். அதனால இந்த கோப முகத்தை கொஞ்சம் சிரிச்சாப்பல கொண்டு வா பார்க்கலாம்.” என்று சொல்லிக் கொண்டே அவளின் இதழை விரிப்பது போல் செய்தான்.
வீரேந்திரனின் அந்த செயலில் தன் கோபம் முழுவதுமாய் மறையவில்லை என்றாலும், வீரா சொல்வது போல் திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முறை தான் வரும் நிகழ்வு..இதை ஏன் நான் கெடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நாளை கெட நான் காரணமாக அமைந்து விட கூடாது. அதுவும் எப்போதையும் விட வீரேந்திரன் தன்னை மணக்க என்ன என்ன எல்லாம் செய்து இருக்கிறான் என்று, இன்று தன் அப்பத்தாவின் வாய் மொழி மூலமே கேட்டு தெரிந்துக் கொண்டவளுக்கு...
தனக்காக இல்லை என்றாலும், இந்நாளை மிக ஆவாளோடு எதிர் பார்த்திருக்கும் வீரேந்திரனுக்காகவாவது...தன் முகத்தில் இருக்கும் இப்போதையே மகிழ்ச்சி குறையாது பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவோடு தான் அவள் மணவறை நோக்கி செல்ல படியின் முதல் படிக்கட்டில் அவள் கால் வைக்கும் நேரம்..
தெய்வநாயகி வசுந்தராவிடம் சொன்ன… “அங்கு மணவறையின் வாந்தி எடுத்து எங்க குடும்ப மானத்தை வாங்காம இருந்தா போதும்.” என்று வசுந்தராவை திட்டியவர்…
பின் தன் பேரனிடம்… “இதோ பாருடா உனக்கு நல்லா தெரியுமா இது உன் குழந்தை தானே…?” என்று தன் சந்தேகத்தை தெளிவு படுத்திக் கொள்ள தன் பேரன் வாசுதேவனை கேட்டாள்.
அதை கேட்ட வசுந்தரா இது வரை கூனி குறுகியது போல் இருந்தவள். இந்த வார்த்தையில்… “என்ன பாத்தா உங்களுக்கு எப்படி தெரியுது…?உங்க எதிரில் தானே நான் வளர்ந்தேன். நான் அப்படி பட்ட பெண்ணா…?சொல்லுங்க. சொல்லுங்க.” என்று வசுந்தரா ஆவேசமாக கேட்டாள்.
“ஏன்டியம்மா கல்யாணத்துக்கு முன்ன கற்பமானவளை யாராவது நல்ல பொண்ணுன்னு சொல்வாங்கலா…?நீயே சொல்லு…” என்று வசுந்தரா கேட்ட கேள்விக்கு விடையை நீயே சொல் என்பது போல் தெய்வநாயகி பேசினாள்.
“அப்படின்னு பார்த்தா உங்க பேரனுக்கும் இதில் பங்கு இருக்கு தானே...அப்போ அவன் நல்ல குடும்பத்தில் இருந்து வரலையா…?” என்று வாசுதேவன் தன்னிடம் பயன் படுத்திய வார்த்தைகளை வைத்தே வசுந்தரா தெய்வநாயகியை மட்டக்க பார்த்தாள்.
ஆனால் நம் தெய்வநாயகியோ...நீ புள்ளியில் நுழைந்தால் நான் கோலத்தில் நுழைவேன் என்பது போல்… “அவன் நல்ல குடும்பத்தில் பிறந்ததால் தான் உன்னையே கட்டுறான். இல்லேன்னா உன் வயித்துல வளர்த்துக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லேன்னு கை கழுவி விட்டு இருப்பான்.” என்று அவன் ஆண் மகன்...அவன் எப்படி வேண்டுமானலும் இருப்பான். பெண் நீ தான் பார்த்து நடந்துக்க வேண்டும் என்பது போல் தான் அந்த பெரிய மனிஷி பேசி வைத்தார்.
இதை எல்லாம் கேட்டுக் கொண்டே தான் மணிமேகலை படியில் இறங்கியது. கூடவே அவள் மனம் என்ற தராசில்..அவள் செய்த செயல்கள் எல்லாம் கண் முன் வர…
தன்னை விரும்பும் வீரா அத்தான். நான் செய்தது எல்லாம் தெரிந்தால் இதே போல் விருபுவாறா...?இல்லை இதோ இப்போது தன் அப்பத்தா பேசுவது போல் பேசி தன்னை ஒதுக்கி வைத்து விடுவாரா...?
என்ன தான் இன்று தங்கள் திருமண நாள். தனக்காக இல்லை என்றாலும், வீரேந்திரனுக்காகவாவது தான் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று மனதில் உருப்போட்டு கொண்டு வந்தாலும், மணிமேகலை மணவறையில் வந்து அமரும் போது, அவள் முகம் வாடி தான் தெரிந்தது.
இந்திய திருமணத்தை பார்த்திராத லாலி, மணவறை அருகிலேயே நின்றுக் கொண்டு இருந்தவள். ஐய்யர் சொல்லும் ஸ்லோகத்தை என்ன கவனித்தும் அதை தெளிவாக காதில் விழாது போக..இன்னும் கூர்மையுடன் ஐய்யர் உதட்டின் அசைவையே ...புகையால் தன் கண்ணில், எரிச்சல் பட்டு கண்ணில் நீர் வழிந்தாலுமே...அதை துடைத்து விட்டு மிக ஆர்வமுடன் அனைத்து சடங்கையும் பார்வை இட்டுக் கொண்டு இருந்தவள்…
மணிமேகலை மணவறையில் வந்து அமர்ந்ததும், அவள் பின் நின்றுக் கொண்டவள்...அவளின் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை ஆசையுடன் வருடி விட்டவள்…
மணிமேகலையிடம்… “பெல் என் வீரா உன்னிடம் எதுக்கு இப்படி விழுந்து கிடக்கிறான் என்று எனக்கு இப்போது தான் தெரியுது… நீ அவ்வளவு அழகா இருக்க…”
வெள்ளை மனதுடன் பாராட்டிய லாலியின் தூய்மையான பேச்சில், தன் மன குறை அகல..சிரித்த முகத்துடன் வீரேந்திரனின் தாலியை மணிமேகலை ஏற்றுக் கொண்டாள்.
அத்தியாயம்….22
அடுத்த முகூர்தத்தில் வாசுதேவன் வசுந்தரா கழுத்தில் தாலி கட்டி தன் மனைவியாக ஆக்கி கொண்டான்.தாலி கட்டிய வாசுதேவனின் முகத்திலும் சிரிப்பு இல்லை. என்றால், தலை குனிந்து தாலியை ஏற்றுக் கொண்ட வசுந்தராவின் முகத்தில் சிரிப்புக்கு பதிலாய் அங்கு பயம் தான் குடிக் கொண்டு இருந்தது.
ஆம் பயம் தான். அந்த புகை நடுவில் அமர்ந்து இருப்பது அவளுக்கு குடலை புரட்டிக் கொண்டு வரும் அளவுக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.
தெய்வநாயகி… “வாந்தி எடுக்காதே …” என்று சொல்லாமல் இருந்து இருந்தால், அந்த நினைப்பு இல்லாது வசுந்தரா இருந்து இருப்பாள் போல…
தெய்வநாயகி குறிப்பாய் வாந்தி எடுக்காதே என்று சொன்னதையே மனதில் உருப்போட்டு வந்து மணவறையில் அமர்ந்தவளுக்கு, அந்த நினைப்போடு புகையும் சேர்ந்துக் கொள்ள…
எங்கு அனைவரின் முன்னும் வாந்தி எடுத்து தானே தன்னை காட்டிக் கொண்டு விடுவோமோ என்று பயந்துக் கொண்டு, பக்கத்தில் அமர்ந்திருந்த வாசுதேவனை பார்த்தாள்.
அவன் எங்கு இவள் பக்கம் பார்க்கிறான். அந்த ஓம குண்டலத்தையே வெறிக்க பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவன், கடமையே என்று அவள் கழுத்தில் தாலியையும் கட்டி விட்டான்.
அவனுக்கு வசுந்தரா மேல் கோபம். அது என்ன காலையில் காபி குடித்தால் வாந்தி வருகிறது என்று இரண்டு நாள் முன் தான் தன்னிடம் சொன்னாள்.
தலை முழுவதும் அலங்காரம் பண்ணியதில் தலை வலித்ததாம்...அதனால் காபி குடிச்சா நல்லா இருக்கும் போல இருந்ததாம்...அதனால காபிய குடிச்சாளாம்…
அறிவு வேணாம். நாம என்ன நிலையில் இருக்கோம். இப்போ காபி குடிச்சி வாந்தி எடுத்தா என்ன ஆகும்…?அதை யோசிக்க மாட்டாள். முட்டாள் முட்டாள். இவளோடைய முட்டாள் தனத்தால என் மானம் போச்சி…
என் குடும்பத்தில் இருக்கிறவங்க எல்லோரும் என்னை பத்தி என்ன நினைப்பாங்க...இவள் செய்த முட்டாள் தனத்தால் நான் அவமானப்பட்டு நிற்க்கிறேன் என்று ஐய்யர் ஒரு பக்கம் மந்திரம் சொல்லிக் கொண்டு இருந்தார் என்றால்…
இவன் மனதில் வசுந்தராவை அர்ச்சித்துக் கொண்டு இருந்தான். அந்த அளவுக்கு அவள் மேல் கழுத்து அளவுக்கு கோபம் இருக்க...அவன் எங்கு மனைவியாக போகிறவளை திரும்பி பார்க்க போகிறான். இருவரும் இருவேறு குணம் வேறு பட்ட நிலையில், அந்த திருமண பந்தத்தில் அடி எடுத்து வைத்தனர்.
அதே போல் அன்று மாலை வரவேற்ப்பிலும் இரு ஜோடிகளும் இருவேறு மனநிலையில் அங்கு புகை படக்காரனுக்கு போஸ் கொடுத்து கொண்டு இருந்தனர்.
“சார் மேடம் மேல் லேசா கொஞ்சம் அனச்சா மாதிரி நில்லுங்க.” என்று அந்த புகைப்படக்காரர் வீரேந்திரனிடம் சொல்ல…
லேசாக்கு எதிர் பதமாய் மணிமேகலையை தன் உடலோடு ஒட்டிக் கொள்ளும் அளவுக்கு தன் நெருக்கத்திற்க்கு கொண்டு வந்து...அந்த புகைப்பட காரரே அலரும் அளவுக்கு போஸ் கொடுத்து கொண்டு நின்றான்.
அதுவும் மணிமேகலையின் முகவாயை பிடித்துக் கொண்டு அவள் கண்ணோடு கண் நோக்கி காதல் பார்வை பார்க்க வேண்டும் என்று அந்த புகைப்படக்காரர் தன் மனதில் ஒரு பிம்பத்தை உருவகப்படுத்திக் கொண்டு வீரேந்திரனிடம் சொன்னார்.
அவர் சொன்னதற்க்கு பிரதிபலிப்பாய் வீரேந்திரன் மணிமேகலையின் முகவாயை தன் ஒற்றை விரல் கொண்டு தன்னை பார்ப்பது போல் மேல் நோக்கி நிற்க…
அவன் உயரத்திற்க்கு, அரை அடி குள்ளமாக இருக்கு மணிமேகலை, வீரேந்திரனை அன்னாந்து பார்க்கும் படி தான் இருக்க வேண்டியதாயிற்று.
அந்த தோற்றத்தில் வீரேந்திரன் மணிமேகலையின் விழிபிரையை அங்கும் இங்கும் நகர விடாது தன் கண்ணை மட்டுமே பார்க்கும் படி செய்து..அவன் அவளிடம் வீசிய அந்த காதல் பார்வை...அழகாய் அந்த புகைப்பட கருவியில் பதிவாகியது.
தான் பிடித்த புகைப்படம் சரியாக இருக்கிறதா…?என்று திரும்பவும் ஒரு முறை அந்த புகைப்படத்தை பார்த்த அந்த புகைப்படக்காரர்… அதில் இடம் பெற்று இருந்த பகைப்படம் தன் மனதில் கற்பனை செய்து வைத்திருந்த பிம்பத்துக்கும் கூடுதலாகவே .இயற்யாக அமைந்ததை பார்த்து…
வீரேந்திரனை பார்த்து… தன் இரு விரலை மடக்கி வைத்த வாறு…. “சூப்பர் சார். சமையா இருக்கு.” என்று தன் பாராட்டை தெரிவித்தார்.
சரி ஒரு ஜோடியை அட்டகாசமாய் தன் திறமை வெளிப்படும் அளவுக்கு எடுத்து விட்டோம். அடுத்த ஜோடியான வாசுதேவனையும், வசுந்தராவிடம் தன் திறமையை காண்பிக்க…
“இப்படி நில்லுங்க சார். கொஞ்சம் அவங்கல ஒட்டினாப்பல நில்லுங்க சார்.” என்று வாசுதேவனிடம் கெஞ்சோ கெஞ்சு என்று கெஞ்சிய அந்த புகைப்படக்காரார்…
சரி இவரிடம் சொன்னால் தான் வேலைக்கு ஆகவில்லை. நாம் மேடமிடம் சொல்லுவோம் என்று… “ மேடம் நீங்கலாவது சார் பக்கத்தில் கொஞ்சம் நெருக்கமா நில்லுங்கலேன்.” என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.
ஆனால் தன் கழுத்தில் தாலி கட்டியவுடன் தனிமையில் பேச சந்தர்ப்பம் கிடைத்ததும், வாசுதேவன் தன் மனதில் நினைத்ததை அனைத்தையும் வார்த்தைகளாய் கொட்டியதை இப்போது நினைத்தாலும்...தன் கழுத்தில் தொங்கி கொண்டு இருந்த மாலையை பிய்த்து எரித்து விட்டு இந்த இடத்தை விட்டு ஓடி விட வேண்டும் என்று தோன்றியது.
ஆனால் கழுத்தில் மாலையோடு, வயிற்றில் பிள்ளையையும் சுமந்து இருப்பதால் அவளாள் இந்த பந்தத்தில் இருந்து விடு பட முடியாது பல்லை கடித்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தவளிடம்…
“அவன் பக்கத்தில் நெருங்கி நில்.” என்று சொன்ன அந்த புகைப்படக்காரரை வெட்டவா… குத்தவா… என்ற ரீதியில் தான் வசுந்தரா பார்த்து வைத்தாள்.
இப்படி காலை முகூர்த்தமும் மாலை வரவேற்ப்பும் முடிந்து , அன்று இரவு சாந்தி முகூர்த்த்திற்க்கு உண்டான ஏற்பாட்டை அந்த பெரிய வீடு குடும்பம் செய்துக் கொண்டு இருந்தது.
அப்போது தன் தாத்தாவின் அறைக்குள் நுழைந்த வீரேந்திரன்… “தாத்தா நாங்க எங்க வீட்டுக்கு போறோம்.” என்று அனுமதி கோராது தகவலாக தான் தன் தாத்தாவிடம் வீரேந்திரன் சொன்னான்.
வீரேந்திரன் தாத்தா… “ஏன்ப்பா...இங்கயே…” என்ற அவர் வார்த்தையை முழுவதும் முடிக்க விடாது...அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு வந்த தெய்வநாயகி..
“ஏன் அங்க போற...இது எல்லாம் பொண்ணு வீட்ல தான் பண்ணுவாங்க...இந்த வீடு ராசியானது. இங்கு தான் இந்த சடங்கு நடத்தனும்.”என்று எப்போதும் போல் தெய்வநாயகி அதிகாரமாக தான் சொன்னார்.
வீரேந்திரனோ… “அப்போ வாசுவுக்கு ஏன் அவங்க வீட்ல ஏற்பாடு செய்யாம இங்கு செய்யுறிங்க…?” என்று கேட்டான்.
“ஆமா அவங்களுக்கு சாந்தி முகூர்த்திற்க்கு நேரம் பார்க்க கூடாது. சீமந்த்திற்க்கு தான் நேரம் பார்க்க வேண்டும். அவங்க லட்சணத்துக்கு இது போதும்.” என்று சொன்னார்.
அப்போதும் வீரேந்திரன் விடாது… “எனக்கு அவங்க விசயம் எல்லாம் தேவையில்லாதது அம்மத்தா...நான் என் மனைவிய கூட்டிட்டு எங்க வீட்டுக்கு போறேன்.” என்று இது தான் என் முடிவு என்பது போல் பேசினான்.
“என்னங்க அவன் பாட்டுக்கு பேசிட்டு இருக்கான். நீங்க எதுவும் சொல்லாம அமைதியா இருக்கிங்க…? நீங்க இப்படி அமைதியா இருக்க தொட்டு தான், நேத்து முளச்ச பையன் எல்லாம் என்னை கை நீட்டிட்டு பேச வர்றான்.” என்று தெய்வநாயகி தன் கணவனிடம் குறைப்பட்டு பேசினார்.
“இதுல நான் சொல்ல என்ன இருக்கு…? வீராவுக்கு அவன் வாழ்க்கை எங்க ஆராம்பிக்கனும் என்று தோனுதோ அதை சொல்றான். இதுல நான் சொல்ல எதுவும் இல்லை.” என்று ஒரு ஊர் தலைவராய், அந்த பெரிய மனிதர் தன் மனைவியிடம் நியாயம் பேசினார்.
“ஏன் இங்கு வாழ்க்கை ஆராம்பித்த நம்ம வம்சம் தழைத்து வரலையா...நம்ம வாரிசு எல்லாம் இங்கு இதோ இந்த வீட்டில் தானே தங்களோட வாழ்க்கையே ஆரம்பித்தது.
ஏன் இவனோட அம்மாவுக்கு கூட இங்கு தான் செய்தேன். சிங்க குட்டி மாதிரி ஒரு பிள்ளைய பெத்து கொடுத்துட்டு, இதோ இப்போ என்னையே எதிர்க்கும் அளவுக்கு ஆளாய் நிக்கலையா…? இந்த வீடு தான் நம்ம வம்சத்துக்கு ராசியானது. அதனால இங்கு தான் அந்த சடங்கு நடத்தனும். அதுக்கு உண்டான வேலைய இப்போ புதுசா போட்ட அறையில ஆராம்பித்தாகி விட்டது.” என்று அவ்வளவு தான் என்பது போல் பேசி விட்டு செல்ல பார்த்த தெய்வநாயகியின் காதில்…
“உங்க வம்சத்துக்கு இந்த வீடு ராசியானதா இருக்கலாம். ஆனா சிட்டுக்கு இந்த வீடு ராசியான்னு எனக்கு தெரியலையே அம்மத்தா…” என்ற வீரேந்திரனின் பேச்சில் நெஞ்சம் பதை பதைக்க தன் கணவர் முகத்தை பார்த்தார்.
தன் கணவர் முகத்தில் காணப்பட்ட வெறுமையில்… “என்னங்க…” என்று ஏதோ சொல்ல ஆராம்பித்தவரின் பேச்சை தடை செய்தவராய்..
“என் கிட்ட எதுவும் சொல்லாதே...பேச வேண்டிய நேரத்தில் பேசாத வார்த்தைகளுக்கு மதிப்பு கிடையாது. உன் உண்மை மதிப்பு இழந்து பல வருடங்கள் ஆகி விட்டது தெய்வா…வேண்டாம்.
நம்ம உறவு சனம் எல்லாம் கூடி இருக்கு...இதை இதோட விட்டு விடு.” என்று பேசி விட்டு தன் மனைவி முன் நிற்க கூட பிரிய படாதவராய் அந்த இடத்தை விட்டு அகன்று விட்டார்.
தெய்வநாயகி சிலை போல் நின்று இருக்க...அவரின் தோளை தொட்டு அவரை சுய நினைவுக்கு கொண்டு வந்த வீரேந்திரன்…
“வீடு ராசியோட...எனக்கு நல்ல உள்ளங்களின் ஆசியோடு வாழ்க்கை ஆராம்பிக்கனும் என்று நினைக்கிறேன் அம்மத்தா...அதான்.” என்று அவன் அதோடு தன் பேச்சை நிறுத்தினான்.
“வீரா நான் உன்னை நல்ல மனசோட ஆசிர்வாதம் செய்ய மாட்டேன்னு நினைக்கிறியாடா…?” அடைக்கும் தன் நெஞ்சை நீவி விட்ட வாறே கேட்டார்.
அவரின் கையை பற்றிக் கொண்ட வீரேந்திரன்… “என் மேல உங்களுக்கு எவ்வளவு கொள்ளை பிரியமுன்னு எனக்கு தெரியும். அம்மத்தா..ஆனா சிட்டு...வேண்டாம்.வேண்டாம் அம்மத்தா வேண்டாம். இந்த பேச்சை இதோட விடுங்க.” என்று சொல்லி விட்டு அவனும் தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு தன் வாழ்க்கையின் முதல் கால் பதிக்க தன் வீட்டிற்க்கு சென்றான்.
வீரேந்திரன் சொல் படி தான், அவன் அறை எப்போதும் போல் தான் எந்த அலங்காரமும் இன்றி இருந்தது. அதே போல் தான் மணிமேகலையிடம் பால் சொம்பு அது போல் முறை எல்லாம் செய்யாது சங்கரி..
“போடா உன் அத்தான் ரூம் எதுன்னு நான் சொல்ல தேவையில்லை..போ.” என்று சொல்லி விட்டு, அனைத்து தாழ்ப்பாளும் போட்டு இருக்கிறதா…?என்று பின் கட்டுக்கு போய் பார்த்து விட்டு, முன் கட்டுக்கு வரும் போது...நின்ற இடத்திலேயே நின்றுக் கொண்டு இருந்த தன் மருமகளை பார்த்த சங்கரி…
“ஏன்டாம்மா இங்கயே நிற்குற…?” என்று கேட்டவர் அவள் முகத்தில் தெரிந்த பயத்தை பார்த்து…
தன் முந்தியில் அவளின் வியற்வையை துடைத்து விட்டு…”என்னடா என்ன பயம். இது உன் அத்தை வீடு. உன் புருஷன் என்ன வெளி ஆளா...பயப்பட...நீ சின்ன வயசுல இருந்து பார்த்துட்டு வர்ற அதே உன் வீரா அத்தான் தான்.
எப்போவும் நீ கேட்பியே அவன் கிட்ட, வீரா அத்தான் உனக்கு அத்தைய பிடிக்குமா…?என்னைய பிடிக்குமான்னு…? இப்போவும் போய் அதே கேள்விய கேளு. அன்னைக்கு பதில் சொல்லலே…ஆனா இன்னைக்கு சொல்வான்.” என்று சொன்ன சங்கரி..
முகத்தில் குறும்பு மின்ன… “நீ என்ன பண்ற…நாளைக்கு அவன் யாரை பிடிக்குமுன்னு சொன்னான் என்று மட்டும் சொல். அப்புறம் இருக்கு அவனுக்கு…” என்று சொன்னவர் கண் சிமிட்டி விட்டு…
“போ...போ...சீக்கிரம் போ...நாளையில் இருந்து மாமியார் மருமகள் சண்டையில நம்ம வீடே கலகட்ட போது.” என்று சொல்லி தன் மருமகளின் முகத்தில் இருந்த பயம் தெளிந்து அந்த இடத்தில் சிரிப்பு குடி கொண்ட பின் தான் தன் மகன் அறைக்கு வீராவின் சிட்டாக அவளை அனுப்பி வைத்தார்.