அத்தியாயம்….28
வீரேந்திரன் கேட்டதற்க்கு, மணிமேகலைக்கு என்ன பதில் சொல்வது என்பதை விட எங்கிருந்து ஆராம்பிப்பது என்பது தெரியாது சிறிது நேரம் அமைதியாகி விட்டாள்.
“உன்னால சொல்ல முடியலேன்னா விட்டு விடு சிட்டு.” மணிமேகலை தன்னிடம் சொல்ல தயங்குகிறாளோ என்று நினைத்து வீரேந்திரன் இப்படி சொன்னான்.
வீரேந்திரனின் பேச்சுக்கு அவனை முறைக்கிறேன் என்று நினைத்து அவனை ஆசையாக பார்த்துக் கொண்டே… “நான் சொல்ல கூடாதது கூட எல்லாத்தையுமே உங்க கிட்ட சொல்லிட்டேன் வீர் அத்தான். இது எல்லாம் ஒன்னுமே இல்லாத விசயம்.உங்க கிட்ட என்னிடம் ஓளிவு மறைவே இருக்க கூடாது.” என்று சொன்னவளின் பேச்சையும் அவளின் இருந்த கோலத்தையும் பார்த்து…
“ஆ அது நல்லாவே தெரியுது.” என்று சொன்னவனின் பேச்சில்...இவ்வளவு நேரம் இல்லாத கூச்சம் அவளுள் புக...பக்கத்தில் இருக்கும் போர்வையை தேடிய கையை பற்றிக் கொண்ட வீரேந்திரன்…
“எங்க அம்மா ஒன்னு சொல்வாங்க.வெள்ளம் தலைக்கு மேல் போன பின்னே …ஜான் போனா என்ன…?முழம் போனா என்ன…? என்று. இப்போ அதே தான் நான் உன்னிடம் சொல்றேன்.” என்றவனின் பேச்சி சத்தியமாக மணிமேகலைக்கு புரியவில்லை.
“முதல்ல என் கையை விடுங்க. நான் போர்வையை எடுக்கனும்.” என்று சொன்னவள்.
பின்… “அது என்ன தலைக்கு மேல வெள்ளம் போற விசயம்…?” என்று கேட்டதற்க்கு…
“வெள்ளம் இந்த போர்வை…” என்று சொன்னவன் அந்த போர்வையை எடுத்து காட்டினானே ஒழிய அவளிடம் கொடுக்கவில்லை.
தலை என்பது அவளிடன் உடலை காண்பித்து… “அனைத்தையும் பார்த்த பிறகு...இந்த போர்வை போத்தினா என்ன…?போத்திக்கலேன்னா என்ன…?” என்று அவளின் சந்தேகத்தை தெளிவாக விளக்கினான் வீரேந்திரன்…
“சீ..என்ன வீர் அத்தான் நீங்க இப்படி எல்லாம் தப்பு தப்பா பேசுறிங்க…?. நான் உங்கல ரொம்ப ஜென்டில்மேனுன்னு நினச்சிட்டு இருந்தேன்.” என்று மணிமேகலை சொன்னாலும்,
அவனின் பேச்சை அவள் வெகுவாகவே ரசித்தாள். அவளின் அந்த ரசிப்பு அவளின் கன்னத்தில் தோன்றிய சிவப்பிலேயே காட்டி கொடுக்க…
மீண்டும் மீண்டும் அந்த கன்னத்தில் எச்சில் படுத்தியவனாய்… “மனைவியிடம் இருந்து ஜென்டில் மேன் பட்டம் வேண்டாம். காதல் மன்னன் பட்டம் தான் வேண்டும். அது தான் இப்போ நம்ம வாழ்க்கைக்கு தேவையான ஒன்னு.” என்று சொன்னவனின் பேச்சை தொடர்ந்து கேட்க வேண்டும் போல் இருந்தது.
தன் கணவனிடம் இனி ஒளிவு மறைவு இல்லை என்று ஆன பின் என்ன…?தன் மனதில் தோன்றியதை சொல்லியும் விட்டாள்.
“நீங்க ரொம்ப நல்லா பேசுறிங்க…?” என்று…
“ரொம்ப நல்லான்னா…?” என்று வீரேந்திரன் கேட்க…
“ம் ரொம்ப நல்லான்னா…?” என்று தான் சொன்னதையே மீண்டும் ஒரு முறை சொல்லி பார்த்துக் கொண்டு அதற்க்கு சரியான வார்த்தையாக…
“நீங்க ரொம்ப ரோமான்டிக்கா பேசுறிங்க…”
“ஓ அப்படியா.. என் சிட்டுவே என்னை ரொமான்டிக் பர்சன் என்று சொல்லிட்டா...அப்புறம் என்ன…?” என்று கேட்டவன்..
பின் அவனே… “அய்யா பேச்சில் மட்டும் இல்லேம்மா செயலிலும், ரொம்ப ரொம்ப ரொமான்டிக்கானவன் தான். ஆனா அதை உனக்கு நிரூபிக்க நாம முதலில் பேசி முடிச்சிடனும்.
இல்லேன்னா முக்கியமான நேரத்தில் தான்..வீர் அத்தான் என் மனச திறக்கமா…” அதற்க்கு மேல் அவனை மேச விடாது அவனின் உதட்டின் மீது தன் கைய் வைத்து மூடியவள்.
“போதும் இதுக்கு மேல நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்.நான் ஏன் அங்கயே இருந்திடனுமுன்னு நினச்சேன்னா...என் அப்பா அம்மா இங்கே இருக்க கூடாது. என் கூட கூட்டுட்டு போயிடனும் என்று நினச்சேன்.” என்ற அவளின் பேச்சில் குழம்பி போய்…
“நீ சொல்றது எனக்கு புரியல சிட்டு.” என்று கேட்ட வீரேந்திரனுக்கு தெளிவாக விளக்கி கூற ஆராம்பித்தாள்.
“சின்ன வயசுல இருந்தே வீட்டில் என்னை ஊமையன் மகள். அம்மாவை ஊமையன் மனைவி. இது தான் எங்களுக்கு உண்டான அடையாளம். இதை வெளி ஆளுங்க கூப்பிட்டா கூட பரவாயில்ல. சித்தி சித்தப்பா..அவங்க பசங்க இப்படி வீட்டு ஆளே கூப்பிடும் போது…
அப்படியே கத்தனும் போல இருக்கும். எனக்கும் எங்க அம்மாவும் பேரு இருக்கு. அதுவும் நீங்க ஊமையன் ஊமையன்னு பேச்சுக்கு பேச்சு சொல்றிங்கலே...அவருக்கு நீங்க தான் கமலக்கண்ணன் என்ற அழகான பெயர் வெச்சிங்க என்று அப்பத்தா கிட்ட கத்த தோனும்.
ஆனா அப்போ நான் ரொம்ப சின்ன பெண். அதுவும் இல்லாம்மே அம்மா சின்ன வயசுல இருந்தே…நீ வீட்ல இருக்குறவங்க கிட்ட எதுவும் எதிர்த்து பேச கூடாது.
உன்னால வீட்லஎந்த பிரச்சனையும் வர கூடாது. அப்படி தான் சொல்வாங்க. ஆனா அம்மா ஏன் எல்லாத்துக்கும் இப்படி பணிந்து போக சொல்றாங்கன்னு அப்போ புரியல.
அதுவும் இல்லாம்மா எல்லோரும் கால் ஆட்டி சாப்பிட… அம்மா மட்டும் எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதல. அந்த சமையல்கட்டே கதின்னு கிடப்பாங்க. நான் பள்ளிக்கூடம் போகும் போது கூட…
அவங்க கிட்ட போயிட்டு வர்றேன்னு சொல்ல… சமையல்கட்டுக்கு தான் போக வேண்டி இருக்கும். அதே போல் தான் சாயங்கலாம் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தா, அதே சமையல்கட்டில் தான் அம்மா எல்லோருக்கும் மாலை டிபனுக்கு ஏதாவது தயார் செஞ்சிட்டு இருப்பாங்க.
மத்தவங்க கூடத்தில் இருந்து அதை கொண்டா… இதை கொண்டான்னு அதிகாரம் செய்துட்டு இருப்பாங்க. அதை எல்லாம் பார்க்கும் போது எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா…?
எங்க அம்மா இந்த வீட்டு மருமகள். அதுவும் மூத்த மருமகள். வேலையாள் கிடையாது என்று கத்தி சொல்லனும் போல தோனும். அப்போ நான் சின்ன பெண். இப்போ சொன்னா என்னை அடிப்பாங்க. நான் பெரியவள் ஆன பின் சொல்லனும் என்று நினச்சிட்டு இருந்தேன்.
ஆனா நான் சின்ன பெண்ணில் இருந்து பெரிய பெண்ணாக ஆன பின் குடும்பம் நிலவரம் தெரிய ஆராம்பிச்சது. சித்தப்பாக்கள் தொழிலை பார்க்க அப்பா வீட்டில் இருப்பது. வயதான தாத்தா கூட தொழிலை பார்ப்பார்.
ஆனா அப்பா வெளியில் போய் கூட பார்க்கவில்லை. ஏன் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க கூட அப்பா போக மாட்டார். அப்போ தான் எனக்கு ஒன்னு உரச்சது.
அம்மா ஏன் எல்லாத்துக்கு வாய் மூடிட்டு இருக்காங்கன்னு…? கத்தனும் எல்லோர் கிட்டேயும் கேள்வி கேட்கனுமுன்னு நினச்ச நான்...அம்மாக்கு துணையா நானும் அவங்க கூட ஒத்தாசை செய்ய ஆராம்பிச்சேன்.
ஆனா அப்போ எல்லாம் இது தான் தோனும். இங்கே இருந்தா எங்க நிலை இது தான். இது தொடர கூடாது. இதற்க்கு ஏதாவது செய்ய வேண்டும் நினச்சப்ப தான்.
நாங்க இங்கு இருந்தா தானே இந்த பெயர்.ஊமையன் குடும்பம் என்பது போல..எங்களுக்கு முன்ன ஊமையன்னு வர…
வெளிநாடு அங்கு யார் எங்கு போறாங்க…?யார் என்ன பண்றாங்க…?இந்த வம்பு தும்பு எல்லாம் கிடையாது. அங்கு உழைப்பும், திறமையும் தான் கண்ணுக்கு தெரியுமே தவிர..அவங்க குறை தெரியாது. அதை பெருசா எடுத்துக்கவும் மாட்டாங்க. அதான் நான் அங்கு படிச்சி வேலை பார்த்து…”
இது வரை தொடர்ந்து சொல்லிக் கொண்டு வந்த மணிமேகலை இப்போது கொஞ்சம் தயக்கத்துடன் வீரேந்திரனை பார்த்தாள்.
அவள் விடுத்த மீதி கதையை வீரேந்திரன் சொல்ல ஆராம்பித்தான். “அங்கு இருப்பவனை கல்யாணம் செய்தா...அங்கயே தங்கலாம். உன் அப்பா அம்மாவையும் உன்னோட அழச்சிக்கலாம். அது தானே…
அதுக்கு தானே இங்கு உனக்கு கல்யாணம் ஏற்பாடு செஞ்சாங்கன்னு தெரிஞ்ச உடனே...உன் மீது கவனம் செலுத்திய உன் சாரை கேட்ட…” என்று சொன்னவன்..
பின் யோசிப்பது போல் அவளை பார்த்தவன்… “சிட்டு ஒரு பொருளை எங்கே தொலைத்தோமோ அங்கு தேடினா தான் அது கிடைக்கும். அதை விட்டு வேறு இடத்தில் தேடுவது அது மடத்தனம் இல்ல” என்று சொன்னவனின் பேச்சை புரியாது குழப்பத்துடன் பார்த்த மணிமேகலையிடம்…
“என்ன புரியலையா…?” என்று கேட்டவன்...தொடர்ந்து..
“உனக்கும் உன் அம்மா அப்பாவுக்கு மரியாதை குறைவா...இங்கு அதாவது இந்த ஊரில்...உன் வீட்டில் நடந்தது.
அப்போ நீ உன்னை எங்கு நிரூபிக்கனும். இந்த ஊரில் அந்தச் வீட்டில்...நான் பார் எங்க அம்மா அப்பாவை எப்படி வைத்திருக்கிறேன் என்று..
அதை விட்டு ஏதோ திருட்டு தனம் செய்துட்டு தப்பிப்பது போல...ஊரு விட்டு இல்லாம நாடு விட்டு நாடு போய் அவங்க அப்பா அம்மாவை கூட்டி நல்லா வாழ வைப்பாங்கலாம்.
ஏன் சிட்டு நான் ஒன்னு உன்னை கேட்பேன் நீ தப்பா நினைக்க கூடாது” என்று கேட்டவன்…
“நான் தப்பா நினைக்கல..நினைப்பேன்…” என்ற மணிமேகலையின் பதிலை எதிர் பாராது…
“அந்த நாட்டில் நீங்க அமோகமா வாழ்ந்தா என்ன...?இல்ல பிச்சை எடுத்தா என்ன…? இங்கு யாருக்கு தெரிய போகுது…?” என்ற வீரேந்திரனின் பேச்சில்…
தன் கையில் போர்வை கிடைத்தும் அதை போர்த்திக்காது கையில் வைத்துக் கொண்டு இருந்த போர்வையை அவன் மீது வீசி எரிந்தாள்.
“ஓ உனக்கு இது தேவையில்லையா…?அது தான் நானும் சொன்னேன்.” என்று சொன்னவன்…
அதை கட்டிலுக்கு கீழே வீசியவனாய்… “எனக்கும் தேவையில்லை.” என்று சொன்னவன் விட்ட கதையை இரவு முழுவதும் எழுதி முடித்தான்.
காதலித்து மணக்காத மணிமேகலை காதலோடு வாழ...காதலுக்காக எதையும் செய்ய துணிந்த வசுந்தரா...காதலும் இல்லாது...கல்யாணத்திற்க்கு முன் வாழ்ந்த காமமும் இல்லாது, தன் அறையில் தனியாக படுத்திருந்தவளின் மனகிடங்கில் என்ன என்னவோ நினைவுகள் வந்து அலை மோதின…
அதுவும் மணிமேகையுடனான தன் நட்பை நினைத்தவள். அதை முறிந்த தானே முறித்ததை நினைத்து, இப்போது வெட்கி தலை குனிந்து போனாள். நல்ல நட்பை இழந்ததோடு ஒரு கவுரவமான வாழ்க்கையையும் சேர்ந்து இழந்து நிற்கிறோம் என்று நினைத்தவளுக்கு, திருமணத்திற்க்கு பின்னான வாசுதேவனின் செயலும் பேச்சும் மாறி போனதை நினைத்து கவலையோடு…
இது தான் அவனின் சுபாவமா…?மணி சொன்னாளே...எனக்கு அவனை பத்தி ஒண்ணும் தெரியாது என்று...அவள் சொன்னது சரி தானே...அவள் எனக்கு நல்லது தான் நினைத்து சொல்லி இருக்கிறாள்.
நான் தான் வாசுவின் மீது இருக்கும் காதலில்...இப்படி செய்து வாழ்க்கையோடு நட்பையும் இழந்து நிற்கிறேன் என்று காலம் கடந்து வருந்தி என்ன பிரயோசனம்…?
தெய்வநாயகியோ சொத்தை துச்சமென மதித்து தன்னிடம் அனைத்தையும் கொடுத்து விட்டு சென்ற வரலட்சுமியை நினைத்துக் கொண்டு வேலையாள் சமைத்து வைத்த சுவை இல்லாத உணவை விழுங்கி கொண்டு இருந்தவர்…
வரலட்சுமியின் பேச்சான வார்த்தைகள் நெஞ்சுக்குழியை விட்டு அகலாது அங்கயே நின்று இருந்ததால்…
இந்த ஒரு வாரமாக என்னவோ உணவு தொண்டையை விட்டு போவேனா என்று அடம்பித்து நின்றது. அப்போது அங்கு வந்த சங்கரலிங்கம்…
சமையல் செய்யும் அம்மாவான… கல்யாணியிடம்..சாப்பிடும் மேசையில் அமர்ந்து… “ஆயிடுச்சாம்மா...எனக்கு நேரம் ஆகுது.” என்று குரல் கொடுத்து தட்டில் கை வைத்து பத்து நிமிடம் கழித்தே தோசையை எடுத்து வைத்த கல்யாணி கூடவே தேங்காய் சட்டினியையும் அந்த தட்டின் ஓரத்தில் வைத்து விட்டு, தன் கடமை முடிந்தது என்று மீண்டும் சமையல்கட்டில் தஞ்சம் புகுந்து கொண்டார் கல்யாணி.
ஏனோ அந்த உணவையின் சுவையையும் வைத்த முறையையும் பார்த்து சங்கரலிங்கத்திற்க்கு தன் மூத்த மருமகள் வரலட்சுமியின் நினைவு வந்தது.
இவ்வீட்டில் அடி எடுத்து வைத்த அன்றே….அன்றைய இரவே வரலட்சுமியின் உணவை தயாரித்து கொடுக்க ஆராம்பித்தவள்..
இதோ போன வாரம் இந்த வீட்டில் போகும் வரை...அந்த சமையல் கட்டு மட்டும் அல்லாது இந்த வீட்டின் ஆரோக்கியமும் அவள் வசம் இருந்தது.
உணவுக்கு சுவை எவ்வளவு முக்கியமோ...ஆரோக்கியம் அதை விட மிக மிக முக்கியமான ஒன்று...அதை தன் மருமகள் நன்கு தெரிந்து வைத்திருந்தாள்.
வாரத்திற்க்கு இரண்டு நாள் கீரை. வாரத்திற்க்கு இரண்டு நாள் வாழை பூ…இப்படி பார்த்து பார்த்து சமைப்பது ஆகட்டும்.
எண்ணையை விட வேண்டிய பொருளுக்கு விட்டு, குறைக்க வேண்டிய உணவில் குறைந்து, தங்கள் ஆரோக்கியத்தை தன் கையில் வைத்திருந்த தன் மூத்த மருமகளின் நினைவில் அவரால் அடுத்து அந்த தோசையை பிட்டு தன் வாயில் வைக்க முடியாது அப்படியே அமர்ந்து விட்டார்.
இதை அனைத்தும் எதிரில் அமர்ந்திருந்த தெய்வநாயகியும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார். அவரால் இப்போது எதுவும் செய்ய முடியாது.
தன் கணவர் எதை நினைத்து இப்படி வருந்துகிறார் என்று இத்தனை வருட வாழ்க்கை அனுபத்தை கொண்டு தெரிந்துக் கொண்டவருக்கு, அதற்க்கு ஆதரவாய் பேச முடியாத ஊமையாய் அமர்ந்திருந்தார்.
ஆம் ஊமையாக தான் இருக்க வேண்டி இருந்தது. தன் கணவர் பத்து வருடமாக ஒட்டும் ஒரசாது வாழ்ந்த வாழ்க்கை...கடந்த ஒரு வாரமாய் அதற்க்கும் முடிவு கட்டுவது போல்…
“இனி நானும் நீயும் ஒரே வீட்டில் இருக்கோம். அவ்வளவு தான் நமக்கான உறவு...இதை மீறி என்னோட பழைய படி இருக்கலாம் என்று நினச்ச...நான் நம்ம தோட்டத்து வீட்டுக்கு போயிடுவேன். அங்கு போனா ஊர் என்ன என்ன பேசுமுன்னு நான் உனக்கு சொல்ல தேவையில்லை.”
அது தான் சங்கரலிங்கம் தெய்வநாயகியிடம் பேசிய கடைசி பேச்சு.இதோ இன்று இப்போது வரை தன் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்காது அவர் சொன்னதை செய்துக் கொண்டு இருக்கிறார்.
ஆனால் தெய்வநாயகியால் அப்படி இருக்க முடியாது..இதோ அவர் முகத்தை முகத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறார். பேச முயற்ச்சி செய்தாலே எங்கு வீட்டை விட்டே போய் விடுவாரே என்று அஞ்சியவராய், அவர் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தாரே ஒழிய…
“ஏன் சாப்பிடல. நான் பரிமாறட்டுமா…?” என்று கேட்காது கேட்க உரிமையும் இல்லாது இருந்தார்.
சங்கரலிங்கம் இது வரை சமையல்காரி கையால் சாப்பிட்டது கிடையாது. கல்யாணத்திற்க்கு முன் அம்மா கையில்...கல்யாணம் ஆன பின் மனைவி ...பின் எப்போது வரலட்சுமி இவ்வீட்டில் காலடி எடுத்து வைத்தாளோ…
அன்றில் இருந்து சமைப்பது பரிமாறுவது அனைவருக்கும் அவளே…இன்று ஏனோ தானோ என்று சமைத்த உணவை அதே போல் பரிமாற...சாப்பிட பிடிக்காது அதுவும் வரலட்சுமியின் மங்கலகரமான முகம் நினைவுக்கு வர…
கைய் உதறி எழுந்தவரை தெய்வநாயகி … “என்…” என்னங்க என்று கூட முடிக்க விடாது சங்கரலிங்கம் பார்த்த பார்வையில் வாயை மூடிக் கொண்டு விட்டார்.
சங்கரலிங்கத்திற்க்கு பின்… அவரின் இரு மகன்கள் மருமகள்கள் சாப்பிட வந்து அமர்ந்தனர்கள். அவர்களும் கல்யாணி பரிமாறிய சமையலை ஏனோ தானோ என்று சாப்பிட்டுக் கொண்டு இருக்க…
அப்போது தெய்வநாயகியின் வயிற்றில் பிறந்த முதல் குழந்தை தில்லை… ஆனாலும் உங்களுக்கு இந்த தைரியம் வந்து இருக்க கூடாதும்மா…?” என்று சொன்னான்.
தெய்வநாயகி அது என்ன தைரியம் என்று கேட்கவில்லை. கடந்த வாரம் முழுவதும் வீட்டில் இது தானே பேச்சாய் இருக்கிறது.
“ஆமா ஆமா...யப்பா என்ன தைரியம் என்ன தைரியம்.” என்று தில்லையின் பேச்சை அவன் மனைவி முடித்து வைத்தாள்.
கடைசி மகனோ… “சரி செஞ்சது தான் செஞ்சிங்க. அவங்கல நல்ல முறையில் வளர்த்து இருக்கலாம்ல...பாருங்க நீங்க செஞ்ச அட்டகாசத்தை தாங்க முடியாது மணி அவங்கல அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டா…” என்று பேச்சை…
அவனின் மனைவி… “இன்னைக்கு வீரா அவங்க அவன் வாங்கிய தோப்பு வீட்டில் தனியா வைக்கிறான்.” என்று தனக்கு தெரிந்த தகவலை சொன்னாள்.
அதற்க்கு வாசுதேவன்… “ஏன்மா வீரா வீட்டிலேயே இருக்கலாம்ல...மணி மீது இருக்கும் காதலுக்காக நம் வீரா தான் எதுன்னாலும் செய்வானே…” என்று சொன்னதற்க்கு…
வசீகரன்… “செய்வான் செய்வான் தான். ஆனா என்ன பெரியம்மா தனியா போகனுமுன்னு சொல்லி இருப்பாங்க. பார்த்தோமே அவங்க சுயமரியாதையை… எவ்வளவு சொத்து...அவ்வளவு சொத்தையும் சும்மா கொடுத்துட்டு…
அவங்க பேசிய பேச்சான… “இவரை ஒன்னும் தெரியாம ஆக்குன சொத்து எனக்கு வேண்டாம். நீங்கல வெச்சிக்கோங்க. ஆனா நீங்க அவரை அவங்க அம்மா கிட்டவே விட்டு இருந்தா...கொஞ்சம் நல்லா வந்து இருப்பார்.
ஏன்னா அம்மா வளர்ப்பு அம்மா வளர்ப்பு தானே...அவங்கலால மட்டும் தான் மத்த குழந்தைகளை காட்டிலும், இவங்க மேல கூடுதல் கவனம் செலுத்தி வளர்க்க முடியும்.
அவர் அறியாமையா இருக்கவும், அவங்க அம்மாவை நேரில் பார்த்தும் இவங்க தான் அம்மா என்று தெரியாம யாரோ போல் கடந்து.. தெரிஞ்ச அப்போ அவங்க இல்லேன்னு...ஆனா நிலைக்கு கொண்டு சென்ற இந்த பணம் எங்களுக்கு வேண்டாம்.”
இத்தனை நாள் வாய் திறக்காது, மகளையும் வாய் திறக்க விடாது, இருந்த வரலட்சுமி அன்று அனைவருக்கும் முன் தெய்வநாயகியிடம்.. “உன் சொத்தெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை.” என்பது போல் அனைத்தையும் இவ்வீட்டில் வீசி எரிந்து விட்டு, தன் கணவனின் கைய் பற்றி இவ்வீட்டை விட்டு போன அந்நாளை யாராலும் மறக்க முடியாது.
ஏன் நம் தெய்வநாயகியே… வரலட்சுமியின் பேச்சை கேட்டு அறண்டு தான் போய் விட்டார். அதுவும் உன் சொத்து வேண்டாம் என்று சொன்ன அந்த வார்த்தையில் தெய்வநாயகி மனதில் பலமாக அடிவாங்கி தான் போனார்.
அதோடு தன் மகள் சங்கரியும்… “இப்படி பட்ட அம்மாவே எனக்கு தேவையில்லை. அதோடு நீங்க எனக்கு கொடுக்க நினச்ச சொத்தும் தேவையில்லை.” என்று சொன்னதற்க்கு…
தெய்வநாயகி பதறி போய்… “இது எல்லாம் உனக்கு சேர வேண்டியது. உனக்கு உரிமை பட்டது.” என்ற பேச்சுக்கும்.
அன்று தன் மகள் பேசிய… “எனக்கு உரிமை பட்டவர் என் கணவர். உரிமையானவன் என் மகன். என் வீட்டு லட்சுமி என் மருமகள் சிட்டு…
நீங்க கொடுத்த இந்த சொத்தை நான் ஏத்துக்கிட்டா...இந்த உரிமைகள் எல்லாம் என்னை விட்டு போயிடும். உங்கல போல உயிர் இல்லா சொத்துக்காக..உயிர் உள்ள சொந்தத்தை இழக்க நான் தாயாராய் இல்லை.” என்று சொல்லி சங்கரி தாய் மகள் உறவையே வெட்டிக் கொண்டு போய் விட்டார். ஆம் என் மகள் சொன்னதும் ஒருவகை சரி தானே…
எதை காப்பாத்திக்க நான் இவ்வளவு செய்தேனோ… அது எதுவும் இப்போது என்னிடம் இல்லையே...தன் கணவன் தன்னை விட்டு இரண்டாம் திருமணம் செய்துக் கொள்ள போகிறாரோ என்று நினைத்து தான், வேலைக்காரி குழந்தையை தன் குழந்தை என்று சொன்னாள்.
அதே போல் வேலைக்காரி குழந்தைக்கு சொத்து சேரக்கூடாது என்று நினைத்து தான், அவனின் குறையை காரணம் காட்டி...ஏதும் தெரியாதவனாய் வளர்த்து...அதே போல் ஏன் என்று கேட்க வசதி இல்லாத வீட்டில் பெண் எடுத்து அவளையும் தன் வீட்டு வேலைக்காரி ஆக்கி… இத்தனையும் செய்தது எதற்ககாக…?
அனைத்தையும் எதற்க்காக செய்தாரோ இப்பது எதுவும் அவரிடம் இல்லை. கணவரின் பாசம் இல்லாது பிள்ளைகளின் இளக்காரம் பேச்சை கேட்டுக் கொண்டும்… மகள் உறவு அறுந்தும்...இப்படி நிர்கதியாக அவர் இருக்க..
அங்கு வரலட்சுமி தன் மருமகன் வாங்கி கொடுத்த பண்ணை வீட்டில்...ஒரு பக்கம் பூக்களும்...மறுபக்கம் காய்கறி செடிகளும்...என்று ஒரு பக்கம் தங்கள் வருமானத்திற்க்கு வழி வகுத்த வரலட்சுமி…
இன்னொறு பக்கம்... தன் அம்மா வீட்டு குடும்ப தொழில் சமையலை கையில் எடுத்தவர்… தங்களுக்கு சொந்தமாக வர வேண்டிய கல்யாண மண்டபத்தில் சொந்தம் கொண்டாடவில்லை என்றாலும், அங்கு நடைப்பெறும் அனைத்து திருமணத்திற்க்கும்...உணவை தயாரிப்பது நம் வரலட்சுமி தான்.
கமலக்கண்ணன்...முதலில் காய்கறி வெட்ட சிரம பட்டாலும் போக போக….சர சர என்று வெட்டி தள்ளியதோடு...இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாய் தன் மனைவியிடம் சமையலை கற்றுக் கொண்டு இருக்கிறார்.
கூடிய விரைவில் அவரும் ஒரு நளபாகன் ஆகி விடுவார் என்பதில் உங்களுக்கு அதில் சந்தேகமா வேண்டாம்.