Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் நினைவுகளில் நானிருக்க....7

  • Thread Author


அத்தியாயம்….7

எப்போதும் போல் அந்த கல்லூரி விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தவன் பின்னாலேயே…”அத்தான் எப்போ மாடிக்கு போவிங்க…?” என்று கேட்டாள்.

மணிமேகலை சென்ற வாரம் திரையரங்கில் ஒரு படம் பார்த்தாள். அதில் நாயகன் கவிழ்ந்த வாறு தண்டால் எடுத்துக் கொண்டு இருக்க...நாயகி அவன் முதுகில் ஏறி அமர்ந்த வாறு ஒரு காட்சி இடம் பெற்று இருந்தது.

அதை பார்த்தம் ‘நம் அத்தான் மேல் நோக்கி தானே நம்மை புஷ்ஷப் செய்தார். இது போல செய்யலையே...” என்று நினைத்தவள்…

‘சரி அடுத்த தடவை வீரா அத்தான் ஊருக்கு வந்தா… இது போல் செய்ய சொல்லனும்.’

வளர்ந்தும் வளராத அந்த குழந்தை மனதுக்கு, அந்த காட்சியில் காட்டிய காதலோ...காமமோ தெரியவில்லை. தன் அத்தான் தன்னை கையில் தாங்கிக் கொண்டு மேலும் கீழும் ஊஞ்லாடுவது போல் செய்யும் போது, அவளுக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்பாடும்.

‘இது போல் செஞ்சா எப்படி இருக்கும்…?’ இது தெரிந்துக் கொள்ளவே … மணிமேகலை தன் வீரா அத்தானை அந்த தடவை மிக ஆவளோடு எதிர் பார்த்தாள்.

தன் ஆவள் மிகுதியில் சமையல் கட்டில் சங்கரியிடம்… “அத்த அத்தான் எப்போ வருவார்…?” என்று ஆசையுடன் கேட்டாள்.

மணிமேகலையின் முகத்தை கொஞ்சிய வாறே… “அடுத்த வாரம் வந்துடுவான்மா…” என்று தகவல் சொன்ன சங்கரி…

கூடுதலாக… “பட்டணத்தில் இருந்து ஏதாவது வாங்கிட்டு வரனுமாடா…” என்று கேட்டார்

எப்போதும் இல்லாது, இந்த தடவை மணிமேகலை தன் மகனை கேட்கிறாளே...ஒரு சமயம் சென்னையில் இருந்து ஏதாவது வேணுமா...என்று தான் கேட்டாள்.

“அய்யோ அத்த எனக்கு பொருள் எல்லாம் ஒன்னும் வேண்டாம்.” என்று மணிமேகலை மறுத்து விட்டாள்.

“அப்போ எதுக்குமா அத்தானை கேட்ட…” என்றூ சங்கரி கேட்டதற்க்கு,

இது என்ன என்று சொல்வது என்று யோசித்தவள்...எதுவும் சொல்லாது… “இது வேற அத்த. எனக்கும் அத்தானுக்கும் மட்டுமானது.” என்று சொல்லி விட்டு மணிமேகலை சிட்டாக அந்த இடத்தை விட்டு பறந்து விட்டாள்.

தான் ஆவளோடு எதிர் பார்த்த வீரா அத்தான் வந்ததில் இருந்து, மணிமேகலை அவன் பின்னவே சுற்றிக் கொண்டு இருப்பதை பார்த்து சங்கரி கூட…

“என்ன வீரா சின்ன சிட்டு உன் பின்னாடியே சுத்துது.” என்று கேட்டார்.

வீராவின் நாக்கில் அன்று என்ன இருந்ததோ… “அது சிட்டுக்கும் எனக்கும் உண்டானது.” என்று பதில் அளித்தான்.

அதற்க்கு சங்கரியும்… “சரிப்பா நான் உங்க நடுவுல வரல.” என்று சங்கரியின் மனதிலும் எந்த வித விகல்பமும் இல்லாத காரணத்தால் சொல்லி விட்டார்.

இந்த பேச்சுக்களை அந்த வீட்டில் இருந்த இரு சித்திகளும் கேட்க நேர்ந்தது.ஆனால் சங்கரி போல் அதை விகல்பம் இல்லாது எடுத்துக் கொள்ள அவர்களால் முடியவில்லை.

அதுவும் இல்லாது வசதியில் தாங்கள் என்ன தான் உயர்ந்து இருந்தாலும், அழகில்...குரல் வளத்திலும் மணிமேகலையின் அன்னை வரலட்சுமியின் அருகில் கூட அவர்களால் செல்ல முடியாது.

அதுவும் சாதாரண காட்டன் புடவையில் கூட ஜொலிக்கும், வரலட்சுமியின் லட்சுமி களாட்சமான முகத்தை பார்க்க பார்க்க...ஏனோ அவர்கள் மனதில் பொறாமை எழும்.

அதே அழகோடு மணிமேகலை பிறக்க..தங்களை கொண்டு தன் மைந்தர்கள் பிறக்க...அவர்கள் பொறாமை கூடியதே தவிர குறையவில்லை.

தன் அத்தை என்ன தான் வரலட்சுமியையும் அவள் மகள் மணிமேகலையையும் தங்களோடு கீழ் நடத்தினாலும், தங்களோடு ஏதோ ஒரு தனிப்பட்ட அக்கறை அவர்கள் மீது செலுத்துவது போல் இருக்கும் அந்த வீட்டின் அடுத்த வந்த இருமருகள்களுக்கும்.

ஒரு முறை வரலட்சுமி வீட்டின் வேலையாளை.. “முதல்ல சாப்பிட்டு அடுத்த வேலை பாருங்க.” என்று சொன்னதோடு உணவும் பரிமாறியவளை பார்த்த இருவரும் தன் அத்தையிடம்..

“அத்தை அக்கா கமலா அத்தானோடு, வேலையாளை கூடுதலா கவனிப்பது போல இல்ல.” என்று சொன்னது தான் தாமதம்..

இது வரை தெய்வநாயகியை அது போல் ஒரு அவதாரத்தை பார்த்தது இல்லை. இனி பார்க்க போவதும் இல்லை என்பது போல்…

“பாத்து பேசுங்க. நீங்க எனக்கு அண்ணன் பொண்ணு தான். ஆனா அவ இந்த வீட்டு கவுரவம். அண்ணன் பொண்ணா...கவுரவமா…? என்று ஒரு நிலை வந்தா...எனக்கு என் வீட்டு கவுரவம் தான் முக்கியது. இனி இது போல் பெரிய மருமகளை பற்றி பேசுவது என்ன…? மனசுல கூட அது போல நினைப்பு உங்களுக்கு வரக்கூடாது.” என்று திட்ட வட்டமாக தெய்வநாயகி சொன்ன பிறகு.. அதற்க்கு பிறகு ஏன் அதை பற்றி இவர்கள் வாய் திறக்க போகிறார்கள்.

இருந்தும் அவர்கள் இருவரின் மனதிலும் அந்த ஓட்டாண்டி குடும்பத்தில் இருந்து வந்தவளுக்காக, சொந்த அண்ணன் மகள்களை இப்படி பேசுவாங்களா..என்ற ஆதாங்கம், அவர்கள் மனதில் இருந்துக் கொண்டு தான் இருந்தது.

இப்போது மணிமேகலையின் இந்த பேச்சால் தங்களுக்கு ஏதும் ஆதாயம் கிடைக்குமா என்று அவர்களையே கண் காணித்துக் கொண்டு இருந்தனர்.

வீரா வந்ததில் இருந்து மணிமேகலை, அவன் பின் சுற்றுவதையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். எப்போதும் வீரா மாடிக்கு போனால் மணிமேகலை பின் பக்கம் கோழி இடும் நாட்டு முட்டை இரண்டை எடுத்துக் கொண்டு தான் போவாள்.

அவளே அந்த முட்டையை உடைத்து வீராவின் வாயில் ஊற்றுவதில் மணிமேகலைக்கு ஒரு அல்ப சந்தோஷம் என்று கூட சொல்லலாம். எப்போதும் போல் வீரா மொட்டை மாடிக்கு சென்றதும், மணிமேகலை முட்டையோடு அவன் பின் சென்று அவள் வாயில் ஊற்றியவள்…

“அத்தான் நீங்க இப்படி படுத்துட்டு என்னை முதுகுல ஏத்தி பண்ணுங்க அத்தான்.” என்று மணிமேகலை சொன்னதும்…

“ஏய் சிட்டு உனக்கு எப்படி தெரியும்…?” என்று முட்டையை குடித்ததும், உடற்பயிற்ச்சி செய்ய ஏதுவாக, தான் போட்டு இருந்த பனியனையும் கழட்டிய வாறே வீரேந்திரன், மணிமேகலையிடன் கேட்டான்.

மணிமேகலையும் எந்த விகல்பமும் இல்லாது, தான் பார்த்த திரைகாட்சியை சொல்லி… “அத்தான் அத்தான் அது போல செய்யிறிங்களா…?” என்று ஆவளோடு கேட்டாள்.

மணிமேகலை இளம் குறுத்து. அவளுக்கு ஒன்றும் தெரியாது. ஆனா வீரா அவள் சொன்ன காட்சி என்ன என்று தெரியும் அளவுக்கு, பத்தொன்பது வயதை தொட்ட இளைஞன் அல்லவா… அதனால் வீரா தயங்கினான்.

அவனின் தயக்கத்தை பார்த்த மணிமேகலை.. “அத்தான் அது போல உங்களுக்கு செய்ய வராதா... ரொம்ப கஷ்டமா…?அப்போன்னா பரவாயில்ல அத்தான்.உங்களுக்கு ஈஸியானதே செய்யுங்க” என்ற மணிமேகலையின் வார்த்தையில்…

“சே சே..எனக்கு செய்ய வரும். ஆனா நீ என் மேல விழாமா இருந்தா சரி.”

எப்போதும் வீரா மணிமேகலையை தன் கைய் மீது அவளை படுக்க வைத்து செய்த உடற்பயிற்ச்சியில், அவள் தன் மேல் விழாமல் பார்த்துக் கொள்வது அவன் கையில் இருந்தது.

ஆனால் இந்த முறை முதுகில் அவள் தன் இரு கைய் கொண்டு தன் உடல் மேல் படாது அவள் தன் உடல் பாரத்தை சுமக்க வேண்டும்.

அதனால் வீரா திரும்ப திரும்ப… “உன் கை வழுக்குவது போல் இருந்தால், சொல்லு சிட்டு.” என்று பார்த்து பார்த்து ஒரு முறைக்கு இரு முறை அவளுக்கு எச்சரிக்கை செய்த பின்னே அவன் தன் இரு கையையும் தரை மீது பதித்து தன் உடலை கூடிய மட்டும் மேல் நோக்கி தரை தொடாது ஒரு நிலைக்கு வந்ததும்…

மணிமேகலையிடம் … “சிட்டு பார்த்து.” என்று சொன்னதும் மணிமேகலை அவன் முதுகில் தன் கைய் கொண்டு பேலன்ஸ் செய்து அவன் தரையில் இருப்பது போல் மணிமேகலை அவன் முதுகில் இருந்தாள்.

அவன் புஷ்ஷப் செய்ய செய்ய...மணியும் மேலே கீழே மேலே கீழே என்று ஜிக் ஜாக் போல் இருக்க...அந்த சிறு பெண்ணுக்கு ஏக குழி...அந்த குழியில் …”அத்தான் நல்லா இருக்கு.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…

ஆடை அணியாத அவன் உடலின் வியர்வையில் இவளின் கை வழுக்கி விட, சட்டென்று வீராவின் முதுகில் ஒட்டிய வாறு படுத்துக் கொண்டாள். படுத்தும் கூட அவள் பதறி எழவில்லை…

“வழுக்கிடுச்சி...அத்தான்.” என்று சொல்லிக் கொண்டே திரும்பவும் அவன் முதுகு பகுதியில் கை ஊன்றி எழ பார்த்தவளுக்கு முடியாது, திரும்பவும் வீரா முதுகிலேயே படுத்துக் கொள்ளும் படி ஆகிவிட்டது.

வீராவும் அவளை திட்டாது… “என்ன சிட்டு என் முதுகு உனக்கு மெத்தை போல இருக்க…” என்று கேட்டவன்…

“இரு இரு எழாதே நானே உன்னை இறக்கி விடுகிறேன். என்று சொல்லிக் கொண்டே, அவன் சாஷ்ட்டங்கமாய் தரையில் படுத்துக் கொள்ளவும், அவள் தரையில் கை ஊன்றி எழ பார்க்கவும்... அந்த வீட்டின் மொத்த குடும்பமும் அங்கு வரவும் சரியாக இருந்தது.

“ஓ இதுக்கு தான் அத்தான் எப்போ மேல போவ எப்போ மேல போவேன்னு கேட்டுட்டு இருந்தியா…?” என்று இரண்டாம் மருமகள் இப்படி சொல்ல…

மூன்றாம் மருமகள்… “இன்னும் குந்த கூட வைக்கல..அதுக்குள்ள பார்த்தியா…?” என்று சொன்னார்.

இவர்கள் வந்து இப்படி பேசுவதற்க்குள் வீராவும் மணிமேகலையும் எழுந்து நின்று விட்டனர். இவர்களின் பேச்சு மணிமேகலைக்கு தான் புரியாது…

“ஏன் இவர்கள் நம்மை திட்டுறாங்க….” ஏதோ திட்டுறாங்க என்ற அளவுக்கு தெரிந்தவளாய் குழம்பி போய் மணிமேகலை அவர்களை பார்த்தாள்.

ஆனால் இவர்களின் பேசியதின் அர்த்தம் புரிந்த வீரா… “பேச்சு பார்த்து வரட்டும்.” இது வரை என்ன என்று மரியாதையாக பேசிய வீரா தன் விரல் நீட்டி பார்த்து என்பது போல் சொல்லவும்…

சங்கரியிடம்.. “பார்த்து அண்ணி உங்க பையனை இப்போவே இப்படி பேச வைக்கிறா...இன்னும்.” என்று அதற்க்கு அடுத்து என்ன பேசி இருப்பார்களோ…

சங்கரி… “அண்ணி போதும். என்ன இது சின்ன பசங்களை பார்த்து பேசும் பேச்சா இது…?அதுவும் மணி குழந்தை.” என்று சொல்லி தன் இரு அண்ணிமார்களையும் அடக்கியவர்..

தன் அன்னையை பார்த்து… “என்னம்மா உங்க மருமகள்களை பேச விட்டுட்டு சும்மா இருக்கிங்க. இந்த பேச்சு எல்லாம் அவர் காதில் போச்சு அவ்வளவு தான்.” என்று சொன்னதற்க்கு…

மணிமேகலையின் சித்திமார்கள் திரும்பவும் ஏதோ பேச வந்தார்கள் தான்...ஆனால் தெய்வநாயகி… “சும்மா இருங்க.” என்று ஒரு அதட்டல் போட்டவர்…

“மணி இங்கே வா…” என்று தன் பேத்தியை அழைத்தார்.

மணிமேகலைக்கு, முதலில் இரு சித்தியும் பேசியது புரியவில்லை தான். ஆனால் வீரா அத்தான் பேசியது. அத்தை சொன்ன சின்ன பெண் என்ற வார்த்தைகள். ஏதோ புரிந்தும் புரியாதது போல் ஒரு கோர்வையாக, அவள் மனதில் அர்த்தம் கண்டு பிடித்தவள், தயங்கிய வாறே தன் அப்பத்தாவின் முன் நின்றாள்.













அத்தியாயம்….7(2)

அந்த இரண்டும் கெட்டான் வயதில் மணிமேகலைக்கு, இவர்கள் தன்னை அசிங்கப்படுத்தி பேசுகிறார்கள் என்ற அளவுக்கு தான் அந்த சிறு பெண்ணுக்கு தோன்றியது.

அப்பத்தா தன்னை அழைக்கவும் பயம் பாதியும், தயக்கம் மீதியுமாக தான் தயங்கி தயங்கி தன் அப்பாத்தாவின் முன் நின்றாள். அவளுக்கு அவள் அப்பத்தா என்றாலே பயம் என்பதை விட, தன் அம்மாவை திட்டியும், தன் அப்பாவை ஊமையனும் என்று அழைக்கும் தன் அப்பத்தாவின் மீது கோபம் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

அதனால் தன் அப்பத்தா என்று ஆசையாக அவர் அருகில் மணிமேகலை எப்போதும் சென்றது கிடையாது. தெய்வநாயகியும் பேத்தியோடு பேரனையே செல்லம் கொஞ்சியதால்… தன் அப்பத்தா தன்னை ஆசையோடு கூப்பிடாது இருந்ததில் நிம்மதி உற்று...அவர்கள் விட்டு ஒதுங்கியே இருப்பாள்.

தன் அப்பத்தா மட்டும் அல்லாது, அந்த வீட்டில் இருக்கும் அனைவரிடமும் இருந்து கொஞ்சம் தள்ளி தான் இருப்பாள். அதற்க்கு காரணம் அவர்கள் தன் அன்னையையும் தந்தையையும் சரியாக நடத்த வில்லையோ என்று அவளுக்கு எப்போது தோன்றியதோ அன்றில் இருந்து மணிமேகலை அனைவரிடம் இருந்தும் ஒதுங்கி தான் இருந்தாள்.

மற்றவர்களும் மணிமேகலையை தன் வீட்டில் அவள் தானே சின்ன பெண் என்று கொஞ்சி சீராடவும் இல்லை. அனைவரிடமும் ஒதுக்கம் காட்டிய மணிமேகலை, தன் வீரா அத்தானிடம் மட்டும் எப்போதும் ஒதுக்கம் காட்ட மாட்டாள்.

அதற்க்கு காரணம் தன் அன்னை தந்தையை முறையே “அத்தை …மாமா…” என்று வீரேந்திரன் ஒழுங்காக அழைத்ததால் இருக்கலாம். இல்லை தன் தந்தையின் மொழி தெரியா விட்டாலும் அவர் பார்க்க நின்று பேசினால், பேசியவர்களின் உதட்டசைவில் அவர் புரிந்துக் கொள்கிறார் என்று தெரிந்து…

தன் தந்தையை பார்க்கும் போது எல்லாம்… அவர் கண் பார்க்க… “மாமா சாப்பிட்டிங்கிலா…?” என்று அவரை ஒரு மனிதராய் மதித்தவன் என்பதாளோ...மணிமேகலை வீராவிடம் அவன் பேசவில்லை என்றாலும், வலிய போய் பேசுவாள்.

சிறு பெண் தானே வலிய வந்து பேச்சு கொடுக்கும் போது, வீரா எப்படி அவளை தள்ளி நிறுத்துவான். அதனால் தன் மாமன் மகன்களிடம் பேசாத வீரா, தன் மாமன் மகளிடம் மட்டும் பேசுவான்.

தான் ஒதுக்கிய… தன்னை ஒதுக்கிய ஒட்டு மொத்த குடும்பமும் அங்கு நிற்க...தப்பு செய்யாமலேயே கால் கை எல்லாம் நடு நடு என நடுங்கிக் கொண்டே மணிமேகலை தெய்வநாயகியின் முன் நின்றாள்.

“உன் அண்ணனோடு எல்லாம் பேசாம இருக்க நீ..எதுக்கு அத்தானோடு மட்டும் பேசுற…?” என்ற கேள்வியை தெய்வநாயகி கேட்டார்.

தெய்வநாயகி இந்த கேள்வி கேட்டதற்க்கும் ஒரு காரணம் இருக்கிறது. தன் அண்ணன் மகள்கள் தங்களை இங்கே அழைத்து வரும் முன்… வராண்டாவில்...பேசிய பேச்சு அப்படி பட்டது.

வரலட்சுமியிடம்… “உன் பொண்ணு இந்த வீட்டில் யாரு கிட்டவாவது பேசி இருக்காளா…? நான் கூட சமையத்துக்கு நினச்சிப்பேன். கமலா அத்தான் தானே ஊமை. பொண்ணும் ஊமையா பிறந்துடுச்சோன்னு. எனக்கு இருந்த சந்தேகத்தை நம்ம வீரா மூலம் தீர்ந்ததுன்னா பாருங்க…” என்று சொல்லி நிறுத்திய அந்த வீட்டு இளைய மருமகள்…

எப்படி …?என்று கேட்பாங்க. நாம அதுக்கு பதில் சொல்லலாம் என்று அனைவரையும் பார்த்து நிற்க...அவள் எதிர் பார்த்தது போல் யாரும் அவளிடம் கேள்வி கேட்கததால் தானே…

“அது தான் அவன் பின்னாடியே வீரா அத்தான். வீரா அத்தான்னு சுத்துதே…” என்று இழுத்து நிறுத்துயள்..

தெய்வநாயகியிடம்.. “அத்த நீங்க என்ன தான் சொல்லுங்க. மணி குட்டி வீரா பின்னாடியே சுத்துவது எனக்கு சரியா படல…”

தெய்வநாயகியோ நீ எது வரை போவ என்பது போல் பார்த்துக் கொண்டு இருந்தார். ஆனால் இவளின் பேச்சை காது கொடுத்து கேட்க முடியாத அவள் கணவனே…

“தோ பாருடி நீ பேசுவது பச்சை மண்னை பத்தி பார்த்து பேசு.”

எப்போதும் கண்டிக்காதன் தன் கணவன் தன்னை கண்டித்து பேசவும். கோபம் இன்னும் அதிகமாக… “அது எல்லாம் நம்ம காலம். இந்த வயசுல குழந்தையா இருக்க...இப்போ தான் டீவிலேயே எல்லாத்தையும் காட்டிடறானே...பின் என்ன…?” என்று சொன்னவள்.

அங்கு இருக்கும் அனைவரையும் பார்த்து… “நான் சொல்றதை நம்பலேன்னா நீங்கலே மேல வந்து பாருங்க.” என்று அனைவரையும் கூட்டிக் கொண்டு வந்து விட்டாள்.

மொட்டை மாடிக்கு அனைவரையும் கூட்டி வரும் முன்னவே, ஒரு எட்டு இந்த மாடிக்கு வரும் போது தான் நம் மணி அந்த சினிமாவில் வந்த காட்சியை சொல்லி அது போல் செய்ய சொல்லி தன் வீரா அத்தானை கேட்டுக் கொண்டு இருந்தது.

இந்த பேச்சு போதுமே...நான் ஈரை பேணா என்ன ...பெருமாளாக கூட காட்டி விட மாட்டேன். அவள் நினைத்த காட்சியை இதோ அரங்கேற்றியும் விட்டாள்.

அதனால் தான் அனைவருக்கும் தெரியப்படுத்த தன் பேத்தியை அழைத்து என்ன நடந்தது என்று கேட்டது. அவர்கள் கேட்டதும், என்ன நடந்தது என்று சொல்ல தான் மணிமேகலை வாய் திறந்தது.

ஆனால் வீரா… “குட்டி நீ கீழே போ…” என்று அவளை அனுப்ப பார்த்தான்.

அது எது போல் காட்சி என்பது இப்போது வரை மணிமேகலைக்கு தெரியவில்லை. ஆனால் வீராவுக்கு தெரியுமே...ஏற்கனவே மணிமேகலையை பிஞ்சியில் பழுத்தது என்பது போல் பேசிக் கொண்டு இருக்கின்றனர்.

இதை மட்டும் மணிமேகலை சொன்னால், அவ்வளவு தான்.அதனால் தான் அவளை வாயை திறக்க விடாது அந்த இடத்தை விட்டு அனுப்ப பார்த்தான்.

ஆனால் மணிமேகலை அங்கு இருப்பவர்கள் தன்னை கோபத்தோடு முறைப்பதை பார்த்து விட்டு, இங்கு நடந்ததை சொன்னால் தான், தன் மேல் இருக்கும் கோபம் போகும்.

இல்லேன்னா தன்னை பார்க்கும் போது எல்லாம் திட்டுவார்கள் என்று நினைத்து, அந்த இடத்தை விட்டு அகலாது அங்கயே நின்றிருந்தாள்.

வரலட்சுமியும்… “குட்டிம்மா சொல்லிடுடா…” அவளின் தலை முடி கோதி சொன்னவளின் குரல் உடைந்து இருநத்து.

அந்த தாயின் உள்ளம் தன் வயிற்றில் பிறந்த ஒரே பாவத்திற்க்காக தன் மகன் இன்னும் என்ன எல்லாம் கேட்க நேரிடுமோ…

புகுந்த வீட்டில் தனக்கு ஏதாவது அநியாயம் நடந்தால், தட்டி கேட்க...பிறந்த வீடு வலுவானதாக இருக்க வேண்டும் என்பதை திருமணம் முடிந்து இத்தனை ஆண்டுகளில் நடை முறையில் தெரிந்துக் கொண்ட விசயம்.

இந்த இல்லாத பட்ட வயிற்றில் பிறந்த பாவத்திற்க்கு தானே, இந்த வயதில் சுமத்த கூடாத பழியை எல்லாம் தன் மகள் மீது போடுகிறார்கள் என்று நினைத்து அந்த தாயுள்ளம் தன் மகளுக்காக கண்ணீர் சிந்த தான் முடிந்தது.

அம்மா அழுவதை பார்த்து மணியும் அழுது கொண்டே தன் பாட்டியிடம்… “அப்பத்தா போன வாரம் படம்.” என்று ஆராம்பித்தவளின் கன்னத்தில், பளார் என்று ஒரு அரை விட்ட வீரா…

“போ...நீ போ…” என்று திட்டினான் என்பதை விட கத்தினான் என்று தான் சொல்ல வேண்டும்.

மணிமேகலை இது வரை அந்த வீட்டில் சீராட்டி யாரும் வளர்க்கவில்லை. வரலட்சுமியே தன் மகளை கொஞ்ச முடியாது. அப்போது தான் அவ்வீட்டில் யாருக்காவது ஏதாவது தேவைப்படும். அதனால் அவள் தாய் கூட அவளிடம் அதிக நேரம் செலவிட்டது கிடையாது.

ஆனால் அடித்தது. அந்த பன்னிரெண்டு வயது வரை அவள் நியாபகத்தில் யோசித்து பார்த்ததில் அவளுக்கு விடை இல்லை. அந்த வீட்டிலேயே அத்தான் அத்தான் என்று ஆசையோடு அழைத்த வீரா தன்னை அடித்தது மட்டும் அல்லாது தன் உடல் நடுங்க அவன் போட்ட… “போ…” என்ற சத்தத்தில் கடைசியாக அவன் முகத்தை பார்த்தவளின் முகத்தில் என்ன இருந்தது.

கோபம்...ஆதாங்கம்…வெறுப்பு...கைய்யாலகத தனம்...இது வரை குழந்தை தனத்தை மட்டுமே பார்த்திருந்த மணிமேகலையின் முகத்தில், அன்று பார்த்த அவளின் அந்த முகம், இன்று நினைத்தால் கூட தன் தலை உதறிக் கொள்வான் வீரா.

பின்… வீரா தன் பெற்றோர்களிடம்… “நாம் இனி இங்கு இருக்க கூடாது.”

அவர் தந்தையும் ஒன்றும் இல்லாதவர் கிடையாது. அந்த ஊரிலேயே பெரிய வீடு குடும்பம், தன் பெண்ணை கொடுப்பது என்றால்...தனக்கு இணையான இடம் பார்த்து தானே கொடுப்பார்கள்.

அப்படி சிமெண்ட் பாக்ட்ரி வைத்திருக்கும் குடும்பத்தில் தான் பெரிய நாயகி பெண் கொடுத்தது. என்ன ஒன்று மருமகன் செல்வரத்தினத்திற்க்கு பெற்றோர் இல்லாது போக, பெண் கொடுத்து விட்டு தனியே கஷ்டப்பட வேண்டாம் என்று தான் வீட்டோடு வைத்துக் கொண்டது.

செல்வரத்தினமும் பெரியவர்களுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து தான் மாமியார் சொல்லுக்கு கட்டுப்பட்டு இருந்தார்.

எப்போது தன் மகன் … “இங்கு வேண்டாம்.” என்றானோ அடுத்த வாரமே அந்த ஊரிலேயே இவர்களுக்கு அடுத்து பெரிய வீடான தன் வீட்டை சீர் செய்து போய் விட்டார். பெரிய நாயகியும் இதை தடுக்கவில்லை.

பின் எப்போதாவது விசேஷம் என்றால் மட்டும் சங்கரி தன் கணவனோடு வந்து போவார். வீரா வந்த நாட்கள் மிக மிக சொர்ப்பமே…

பழைய நினைவுகளில் திளைத்திருந்த வீரா மனதோடு… மணிமேகலையை நினைத்து…“உன்னை குழந்தையா மட்டும் பார்த்துட்டு இருந்த என்னை எப்போடி குமாரியா பார்க்க ஆராம்பித்தேன்.” மீண்டும் அவன் நினைவுகள் பின் நோக்கி சென்றது.

அந்த சமபவத்திற்க்கு பிறகு தன் பெற்றோர்களோடு தனியாக வந்து விட்ட வீரா...பின் அந்த வீட்டுக்கு போக மனது வராது ஒரு ஒதுக்கத்துடன் தான் இருந்தான்.

சங்கரி எப்போதாவது… பாட்டியை பத்தியோ அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் பற்றியோ பேசினால்…

“என் காது பட அவங்க வீட்டு விஷயத்தை பேசாதிங்க.” என்று சட்ட திட்ட மாக சொல்லி விடுவான்.

சென்னையில் அவனின் M.B.A படிப்பின் தேர்வை எழுதி முடித்து விட்டு வீட்டுக்கு வந்தவனுக்கு, ஹாலில் பரப்பி வைத்திருந்த பட்டு புடவையையும் பட்டு புடவை விற்பனை செய்பவனையும் பார்த்து விட்டு…

“உங்களுக்கு எவ்வளவு புடவை இருந்தாலும் பத்தாதே...புதுசா ஏதாவது டிசைன் வந்தா… உடனே அது உங்க பீரோவில் வந்து உட்கார்ந்துடனும்.” என்று சொல்லிக் கொண்டே வீட்டு வேளையால் கொடுத்த காபியை குடித்துக் கொண்டே அன்னையின் பக்கத்தில் அமர்ந்தான்.

“இந்த புடவை என் பீரோவில் உட்காராதுடா...மணிகுட்டி பீரோவில் உட்கார தான் வாங்குறேன்.”

“அந்த குட்டிக்கா…? இல்ல அத்தைக்கா…?” என்று சந்தேகத்துடன் கேட்டவன்…

“அவளுக்கு எதுக்கு புடவை…?” என்று கேட்டவன்...அங்கு இருந்த பட்டு பாவடையை காட்டி…

“பாவடை எடுத்து கொடுத்தாலாவது கட்டிப்பா…” என்று சொன்னவனுக்கு பதிலாய் சங்கரி…

“சரி உன் ஆசை ஏன் கெடுப்பானேன்.” என்று சொன்னவர் அந்த புடவை கடைக்காரனிடம் மணிமேகலைக்கு பொருத்தமாய் இருக்கும் பட்டு பாவடை எடுத்தவர், கூடவே இரு பட்டு புடவையும் எடுத்துக் கொண்டே அந்த பட்டு புடவைக்காரனை அனுப்பி வைத்தார்.

அதை பார்த்த வீரா சிரிப்புடன்… “மணி குட்டிக்கு வாங்கும் சாக்கில் உங்களுக்கும் சேர்த்து எடுத்துட்டிங்க போல.” என்று தன் அன்னையை கிண்டல் செய்ய…

“டேய் சும்மா இருடா...இந்த புடவை கூட மணிக்கு தான் வாங்குனது. பாவடை உன் ஆசைக்கு வாங்கினேன். அதை எல்லாம் சபையில் வைக்க முடியாது.” என்று சொன்னதும் வீராவுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.

இருந்தும் தெளிவு படுத்திக் கொள்ள… “சபைக்குன்னா…” என்று கேட்டவனுக்கு பதிலாய்…

“போன மாசம் பெரிய மனிஷியா ஆயிட்டாள்டா….அதை நம்ம சத்திரத்திலேயே வெச்சி ஒரு சடங்கு செஞ்சிடலாமுன்னு...அடுத்த மாசம் பள்ளிக்கூடம் திறக்கிறதுக்குள்ள செஞ்சிட்டா நல்லது.

இல்லேன்னா அப்போ இப்போன்னு தள்ளிட்டு போயிடுமுன்னு அம்மா நினைக்கிறாங்க...அதான் சூட்டோடு சூடா…” என்ற அன்னையின் பேச்சை தொடர விடாது…

“அவளுக்கு யாரு குச்சி கட்டுனது…?”

மகனின் கேள்வியையும்...அந்த கேள்வியில் உள்ள வித்தியாசத்தையும், அப்போது தான் கண்டுக் கொண்ட சங்கரி..

“நம்ம தூரத்து உறவு பக்கத்து ஊருல தான் இருக்கான். ஏதோ விசயமா இங்கே வந்தான். அதான் அவனையே வெச்சிட்டு விசேஷத்த முடிச்சிட்டாங்க…”

இது ஒரு சாதரண நிகழ்வு தான்.ஆனால் அதை தன் மகனிடம் சொல்ல அவன் முகத்தில் தெரிந்த மாற்றத்தை பார்த்து அவ்வளவு தயங்கினார்.

“ஏன் எனக்கு சொல்லலே… நான் தானே அவளுக்கு குச்சி கட்டனும்.” அவன் பேச்சில் அவன் உரிமையை விட்டு கொடுத்ததோடு மட்டும் அல்லாது வேறு ஒன்றும் இருப்பது போல் சங்கரிக்கு தெரிந்தது.

“வீரா...உன் மனசுல என்ன இருக்கு…” என்று கேட்டதும் தான் …

வீரா… “இது வரை ஒன்னும் இல்லேம்மா...ஆனா இனி ...அவளுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் நான் தான் செய்வேன். நான் மட்டும் தான் செய்வேன்.”

அவன் பேச்சில் அவ்வளவு உரிமை...அவள் எனக்கு எனக்கு மட்டும் தான் என்ற உறவு அதில் ஒளிந்து இருந்தது.
 
Top