Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் நினைவுகளில் நானிருக்க...9

  • Thread Author

அத்தியாயம்….9

மணிமேகலையிடம் பேசிவிட்டு தன் பொருட்களை எடுத்துக் கொண்ட ஜான் விக்டர். தன் கைய் பேசியில் முதலில் தந்தைக்கு அழைத்து… “அப்பா எந்த ஒட்டல்ல இருக்கிங்க…?” என்ற கேள்விக்கு பதிலாய்…. தான் இருக்கும் தங்கல் ஓட்டலின் பிரன்ச் இருக்கும் இடத்தை சொன்ன வில்சன் விக்டர்…

“என்ன விசயம் ஜான்… “ என்ற கேள்விக்கு பதிலாய்…

“இன்னும் அரை மணிநேரத்தில் அங்கு இருப்பேன்.” என்று சொல்லி விட்டு கைய் பேசியை அணைத்த ஜான் விக்டர்… தொடர்ந்து தன் அன்னைக்கு அழைத்து…

தந்தை இருக்கும் ஒட்டலில் பிரன்ஞ்சை சொன்னவன்… “உடனே அங்கு வந்துடுங்கம்மா…” என்று சொன்னவன் கூடவே… “ட்ரைவரோடு சேப்பா வந்துடுங்க.” என்ற மகனின் பேச்சில்..

“என்ன ஜான் ஏதாவது பிரச்சனையா…?” என்று கவலையுடன் கேட்டார்.

இது வரை மலர் விழி தனியாக சென்றது கிடையாது. மகன் பெரியவனாக வளரும் வரை கணவரோடு சென்றவர். மகன் வளர்ந்து ஆளாகியதும்..மகன் கணவர் என்று அவர்கள் துணையில்லாது சென்றது கிடையாது.

இந்தியாவில் இருந்து கலிபோனியாவுக்கு வேலை செய்ய தனியாக தான் வந்தாள். மனதில் அவ்வளவு பயம் இருந்தும் குடும்ப சூழ்நிலை அவளை இங்கு வர வழைத்தது.

ஆனால் எப்போதும் வில்சன் விக்டரின் கரம் பற்றினாளோ...அன்றிலிருந்து அவள் தனியாக எங்கும் சென்றது கிடையாது. அவள் கணவர் செல்ல விட்டதும் கிடையாது.

“நானும் மகனும் இருக்க நீ ஏன் தனியா போகனும்.” என்று வில்சன் விக்டர் சொல்லி விடுவார்.

இப்போது தன் மகன் தன்னை அழைத்ததை தன் கணவனிடம் தெரியப்படுத்தலாமா…. என்று யோசித்த மலர்விழி...சிறிது நேரம் முன் தான் கைய் பேசியில் கணவர் தன்னை அழைத்து பேசிய போது அவர் இருக்கும் பிரான்சை சொன்னார்.

சரி எதற்க்கு அழைக்கிறான்… என்று தெரியவில்லை என்றாலும், அங்கு செல்ல தயாராகினார் மலர் விழி.

மணிமேகலை சிறிது நேரம் காக்க வைத்த பின் அங்கு வந்து சேர்ந்த ஜான் விக்டர்… அவள் முகத்தையே பார்த்த வாறு…

“ரொம்ப நேரம் வெயிட் பண்ணியா…?” என்று தெரிந்தே கேட்டான்.

“ம்… இப்போ தான் வந்தேன்.” என்று பதில் அளித்தவள். இப்போதும் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் இல்லை.

அவள் வந்து நேரம் ஆகி விட்டது என்பதை அவன் அறிவான். தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு இருக்கும் போதே, மணிமேகலை கார் பார்க்கிங்கை நோக்கி நடந்து போனதை பார்த்தான்.

அதனால் தான் கைய் பேசியில் தன் தாய் தந்தையருக்கு, விளக்கமாய் ஏதும் சொல்லாது, பேசி வைத்து விட்டான். ஆனால் கார் பார்க்கிங் நோக்கி இவன் வரும் வழியில், இந்த கல்லூரியின் நிர்வாகி பார்த்து பேச ஆராம்பித்ததும்…

அவரின் வயதும்...அவரின் பதவியும் ..அவரின் பேச்சை தடை செய்து விட்டு வர முடியாமல் போய் விட்டது. ஒரு வழியாக அவரிடம் பேசி விட்டு இங்கு வருவதற்க்கு நேரம் தான் ஆகிவிட்டது.

தூரத்தில் இருக்கும் போதே மணிமேகலையின் முகத்தை பார்த்துக் கொண்டு தான் வந்தான். ஏதோ டென்ஷனில் அவள் நகத்தை கடித்து துப்பியதை பார்த்த படி வந்தவன்…

மணிமேகலை தன்னை பார்த்ததும், தன் பதட்டத்தை முகத்தில் இருந்து மறைத்தவாறு தன் முகத்தை சாதரணமாக காட்டி தன்னிடம் பேசிய மணிமேகலையை யோசனையுடன் பார்த்துக் கொண்டே…

“என் கார் அது…” என்று அங்கு நின்றுக் கொண்டு இருந்த விலை உயர்ந்த காரை காட்டி சொன்னதோடு அதனை நோக்கி ஜான் விக்டர் சென்றான்.

இப்போது மணிமேகலை நான் அவன் பின் செல்லனுமா…?எங்கே…?என்பது போல் முழித்து நின்றவள் பக்கத்தில் தன் காரை நிறுத்திய ஜான் விக்டர்..

“ம்..ஏறு.” என்பது போல் முன் பக்க கதவை திறந்து வைத்தான்.

மணிமேகலைக்கோ அதில் ஏறுவதா…?வேண்டாமா..?என்று குழப்பமாக இருந்தது.தன் ஊர் போல் இங்கு வம்பு பேச மாட்டார்கள்.

ஆனால் இவரை எனக்கு எத்தனை நாளாக தெரியும்…? இவர் கூட செல்வது தனக்கு பாதுகாப்பா…?

தனியாக படிக்க வந்து இருக்கோம். இவன் கூட செல்வது தனக்கு நல்லதா…? தன் பாதுகாப்பை எண்ணி கொஞ்சம் தயங்கினாள்.

அவள் தயக்கத்தை எல்லாம் உதறித்தள்ள… “உன் கற்ப்புக்கு நான் கேரண்டி…” என்ற ஜான் விக்டரின் அந்த வார்த்தை மணிமேகலைக்கு போது மானதாக இருந்தது.

எப்போதும் வீம்புடன் தான் அவள் செயல் படுவாள். அவள் அப்படி செயல்படுவது மற்றவர்களுக்கு தெரியாத போதும்...அவள் மனதுக்கு தெரியும் தானே…

வீரேந்திரனிடம் கள்ளம் இல்லாது தான் பழகினாள். ஆனால் அதை சித்திகள் எப்படி எல்லாம் பேசினார்கள். வீட்டில் இருப்பவர்களும் அவர்களை அடக்கவில்லையே...

அதன் தாக்கம் தான்… ஒன்னும் இல்லாததுக்கு நீங்க என் மேல பழிய போட்டிங்கலே...இப்போ பார் நான் ஊரில் இருக்கும் ஒரு பசங்களையும் விடாது பாக்க போறேன். உங்களால் என்னை என்ன செய்ய முடியும்…? என்று நினைத்து பார்த்தாள் தான்.

அதற்க்கு மேல் அவளால் போக முடியாத காரணம்...அவள் குணமா…? வளர்ப்பா…?இல்லை இவள் பார்த்தது யாருக்கும் தெரியாது...அவனுங்க பாக்க முடியாது எல்லாம் ஒன் சைட் பார்ப்பது மட்டும் தான் என்ற வகையில் அமைந்ததாளா… இவளின் செயல் வீட்டுக்கு தெரியாது போய் விட்டது.

ஆக மொத்தம் அவளின் குணம்...இப்படி அவளை ஏற்றி விட்டால் போதும்… உடனே அதற்க்கு எதிர் வினை ஆற்றிவிடுவாள்.

அவளின் அந்த குணம்...ஜான் விக்டர் சொன்ன… “உன் கற்புக்கு நான் கேரண்டி…” என்ற வார்த்தையில் அவன் பக்கத்தில் அமர்ந்த மணிமேகலை முதன் முதலாக அவன் முகத்தை நேராக பார்த்த வேறு…

“எனக்கு கேரண்டி...நானே தான் சார். வேறு யாரும் கொடுக்க முடியாது. கொடுக்கவும் விட மாட்டேன்.” என்று சொன்னவளின் பேச்சை ஜான் விக்டர் ரசித்தாலும், அவளின் குணநலனை ஆராய்ந்தவனின் மனதில் கூடவே ஏதோ ஒன்று முரண்டியது.

அவர் நடசத்திர அந்தஸ்த்து கொண்ட ஓட்டலின் முன் காரை நிறுத்தியதும் அங்கு வேலை செய்பவர் ஓடி வர தன் காரை அவனிடம் ஒப்படைத்த ஜான் விக்டர்…

தன் கையை முன் நோக்கி காட்டி… “போகலாம்.” என்று அழைத்தவன் கூடவே… “இந்த ஓட்டல்…” என்று ஆராம்பித்தவனின் பேச்சை…

“இந்த ஓட்டல் உங்களுடையதில் ஒன்று.” என்று சொல்லவும், அதிர்ச்சியுடன் அவளை திரும்பி பார்த்த ஜான் விக்டர் தெரிந்துமா என்பது போல் மனதில் நினைத்தான்.

கூடவே நம்மை பற்றி தெரியாது. தெரிய வைத்து தன் பெற்றோர்களை அறிமுகப்படுத்திய பிறகு தன் விருப்பத்தை சொன்னால் ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் தான் தனக்கு சொந்தமான இந்த ஒட்டலுக்கே அழைத்து வந்தான். இவள் என்ன என்றால் என்னை பற்றி தெரியும் என்கிறாள்.

ஜான் விக்டர் மனதில் இப்படி நினைத்துக் கொண்டு இருக்கும் போதே… “அப்போ என்னை பற்றி விசாரிச்சி இருக்க. ரொம்ப சந்தோஷம்.” என்று ஏதோ ஒரு வித எதிர் பார்ப்புடன் அவளை பார்த்து சொன்னான்.

“விசாரிக்கல...உங்க ரசிகைங்க நம்ம காலேஜில தான் எக்க சக்கம் ஆச்சே...அந்த ரசிகையில ஒருத்தி தான் உங்கல பத்தி சொன்னா…” என்று சொன்ன மணிமேகலையின் பதில் ஜான் விக்டருக்கு ஏற்புடையதாய் இல்லை.

“அப்படியா…?” என்று கேட்டவன்.

தொடர்ந்து…. “என்ன பத்தி உன் கிட்ட வந்து ஏன் சொல்லனும்…?” என்று தனக்கு தெரிந்த பதிலுக்கு, கேள்வியாய் மணிமேகலையிடம் ஜான் விக்டர் கேட்டான்.

இந்த கேள்விக்கு என்ன பதில் அளிப்பது என்று மணிமேகலை கொஞ்சம் தடுமாறித்தான் போனாள். கல்லூரியில் ஜான் விக்டர் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் இல்லை. இதோ காரில் வரும் போது தான் முதன் முறையாக அவன் முகம் பார்த்து பேசியது.

இன்னும் கேட்டால், ஒரு ஆண்மகனை நேருக்கு நேர் பார்த்து பேசியது ஜான் விக்டரிடம் தான் என்று கூட சொல்லலாம். சிறு வயதில் வீரா அத்தான்… வீரா அத்தான் என்று பழகியது எல்லாம் ஒரு கனவு போல் தான் அவள் நினைவடுக்கில் இருக்கிறது.

வயதில் பார்த்த பார்வை அனைத்தும், ஓர விழிப்பார்வையும். கீழ் பார்வையுமே...பேசியது என்பது சுத்தமாய் கிடையாது.

அந்த தயக்கமும் கூடவே சேர்ந்த பயத்தால் தான் மணிமேகலை ஜான் விக்டரை நிமிர்ந்து பார்க்கவில்லை. ஒரு சில சமயம் பார்க்க நினைத்தாலுமே...அவன் எப்போதும் தன்னையே தான் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்று அவள் உள்மனது சொல்ல...நிமிர்ந்து பார்க்காது விட்டு விட்டாள்.

சரியாக பார்க்காத ஒருவனிடன் காரில் பயணம்...இது நல்லதா…?கெட்டதா…?என்று அவள் யோசித்து ஒரு முடிவுக்கு வரும் முன்னவே...அவனின் தொடர் பேச்சு மூலம் அவளை சகஜமாக பேச வைத்து விட்டான் ஜான் விக்டர்.

மணிமேகலை ஜான் விக்டரிடம் சகஜமாக பேச எனக்கு உன் மீது எந்த வித அபிப்பிரயமும் இல்லை என்று அவனை நேருக்கு நேர் பார்த்து சொல்லவே அவன் அழைத்ததும் தயங்காமல் வந்தது.

என்ன ஒன்று அவள் காலேஜ் கார் பார்க்கிங்கிலேயே பேசி விடலாம் என்று நினைத்திருக்க...அவன் தன்னை இவ்வளவு தூரத்திற்க்கு கொண்டு வந்து விட்டான். அவ்வளவு தான்.

ஆனால் இப்படி .. “உன்னிடன் என்னை பற்றி அவங்க ஏன் சொன்னாங்க…?” என்ற ஜான் விக்டரின் கேள்விக்கு என்ன என்று சொல்வாள்.

நீ என்னையே பார்த்துட்டு இருக்க...நம்ம வகுப்பில் நான் உன் ஆள் என்று பாம் ஆயிடுச்சி...அதான் என்றா சொல்ல முடியும்.

“தெரியல…” என்று மட்டும் தான் மணிமேகலையால். சொல்ல முடிந்தது.

“ம்...அப்படியா…?” என்பது போல் கேட்ட ஜான் விக்டர்…

“ஆனா எனக்கு தெரியும்.” என்று அவன் சொல்ல...அதிர்ந்து போய் மணிமேகலை ஜான் விக்டரை பார்த்தாள்.

“எ..ன்..ன…?” தெரியும் என்பது போல் அவள் கேட்கும் போதே…

வில்சன் விக்டர்… “ஜான்…” என்ற அழைப்பில் குரல் வந்த திசைப்பக்கம் பார்த்து விட்டு…

“வா...என் பேரன்ஸை அறிமுகப்படுத்துகிறேன்.” என்ற அவன் பேச்சில் இன்னும் இன்னும் அதிர…

‘வம்படியாய் ஏதாது பிரச்சனையில் வந்து மாட்டிக்க போறோமா…?’ என்று மனதில் நினைத்தவளுக்கு பயத்தில் கை இரண்டும் நடுங்கவே ஆராம்பித்து விட்டது. இந்த சூழ்நிலை அவளுக்கு புதியது.

இதை எப்படி கைய்யாள வேண்டும் என்று யோசிப்பதற்க்குள், அவர்கள் ஜான் விக்டரின் பெற்றோர் முன் சென்று இருந்தனர்.

மலர் விழியை பார்த்ததும் தன் அதிர்ச்சி கொஞ்சம் விலகி போய், அவரை கொஞ்சம் ஆச்சரியத்தோடு தான் பார்த்தாள் மணிமேகலை.

வில்சன் விக்டரும்...ஜான் விக்டரும் என்ன தான் தமிழ் நன்றாக பேசினாலும், பார்க்க அமெரிக்கர் போல தான் இருந்தனர்.

ஆனால் அவன் அன்னை பார்க்க தமிழ் பெண்ணாய்..அதுவும் தன் வட்டார முக சாயலில் இருந்தவளை பார்த்துக் கொண்டே அவர் கை காட்டிய இடத்தில் அமர்ந்த வாறு புன்னகை புரிந்தாள்.

தன் முகத்தை வாஞ்சையுடன் தடவிய வாறு… “நம்ம பக்கம் முக வெட்டை பார்த்து எவ்வளவு வருஷம் ஆச்சி…?” தன் முகத்தை ஆசையுடன் தடவிய வாறே பேசியவரின் கையை தட்ட முடியாது அவளும் சிரித்துக் கொண்டே…

“நானும் சாரோட அம்மாவை இப்படி எதிர் பார்க்கலே…” மலர் விழி கட்டிய சேலையிலும், வைத்திருந்த அகலமான சாந்திலும், தலையில் சூடி இருந்த பூவிலும், பார்வையை பதித்த வாறே மணிமேகலை தன் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லி விட்டாள்.

சொல்ல வேண்டும் என்று எல்லாம் நினைக்க வில்லை. அது என்னவோ ஜானின் அம்மாவை பார்த்ததும், அவளுக்கு வேறு யாரோ என்று தோன்றவில்லை. ஏதோ ஒரு நெருக்கமான உறவை பார்த்த உணர்வு தான் அவளுக்கு எழுந்தது.

அவள் பேச்சில் ஜானே ஆச்சரியம் ஆனான். என்னடா நம்ம கிட்ட இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் பேசுனா...எங்க அம்மாவை பார்த்ததும் மொத்தமா பேசுறா…

மாமியார் மருமக பிரச்சனை இருக்காது அவன் மனது வேகமாய் திட்டது. அதற்க்கு ஏற்றார் போல் தான் மலர் விழி கேட்க கேட்க...அவள் தன் சொந்த பந்தங்கள் அனைத்தையும் சொன்னவள்.

அவள் சொந்த ஊர் கிருஷ்ணகிரியை தான்டி என்று சொன்னதும் மலர்விழிக்கு...ஏதோ ஒரு நடுக்கம்...அடுத்து அவள் ஊரை பற்றி பேச்சு எடுக்காது…

அவள் உறவு அம்மா அப்பா...கூட்டு குடும்பம். தன் அப்பாவின் குறையை கூட சொல்லும் அளவுக்கு மலர்விழி தன் பேச்சால் மணிமேகலையை கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

கூடவே அவள் சொன்ன…”நான் படிச்சிட்டு என் அப்பா அம்மாவை இங்கே கூட்டிட்டு வந்துடுவேன்.” என்று கூடுதல் தகவலும் சொல்ல…

அந்த ஒரு சொல்லே... மணிமேகலையை சாய்க்க ஜான் விக்டருக்கு போதுமானதாக அமைந்து விட்டது.



































அத்தியாயம்….9(2)

“அது அவ்வளவு ஈசியா…?”

மணிமேகலை மலர் விழியுடன் பேசிக் கொண்டு இருக்க...இடையில் ஜான் விக்டர் கேட்ட… “அது அவ்வளவு ஈசியா…?”

‘எது ஈசியில்லேன்னு சொல்றாங்க…?’ என்று மணிமேகலை குழம்பி போய் ஜான் விக்டரை பார்த்தாள்.

அவளின் குழம்பிய முகத்தை மேலும் குழப்பும் வகையாக ஜான் விக்டர்… “என்ன புரியலையா மேகலை.” என்று அவள் பெயரை பின் பாதியை மட்டும் சுருக்கி அழைத்தவன்.

தொடர்து… “அது தான் நீ அம்மா கிட்ட சொல்லிட்டு இருந்தியே….க்ரீன் கார்ட் அதை தான் சொல்றேன்.” என்று ஜான் விக்டர் சொன்னதும்…

அவன் தன்னை அழைத்த அந்த பெயரின் சுருக்கம் கூட கருத்தில் கொள்ளாது… “ஏ...ன் சார் எனக்கு வேலை. க்ரீன் கார்ட் எல்லாம் கிடைக்காத…?” என்று அதிர்ச்சி பாதியும், ஆதாங்கம் மீதியுமான கலந்த குரலில் மணிமேகலை கேட்டாள்.

அதற்க்கு வில்சன் விக்டர் ஏதோ சொல்ல வர்ற… அவரை பார்த்து ஜான் விக்டர்… “டாட் என் ஸ்டூடண் கிட்ட நான் தெளிவா பேசுறேன்.” என்று அவரை பேச விடாது தடுத்த ஜான் விக்டர்…

மீண்டும் தன் பார்வையை மணிமேகலையின் பக்கம் திருப்பிய ஜான் விக்டர்… “வேலை ஈசி...அதுக்கு நான் கூட ஏற்பாடு செய்துடுவேன்.” என்ற அவன் பேச்சில், மகிழ்ந்து போய் மணிமேகலையின் முகம் பிரகாசமாய் மின்ன, ஜான் விக்டர் முகத்தை பார்த்தாள்.

“ஆனா க்ரீன் கார்ட் கிடைப்பது என்பது நீ நினைப்பது போல் அவ்வளவு ஈசி எல்லாம் கிடையாது. எனக்கு தெரிந்த தமிழர் ஒருத்தர் இங்கு வந்து படிச்சார்.

வேலை அவருக்கு உடனே கிடச்சது. ஆனா பத்து வருஷத்துக்கு மேல ஆனா பின் கூட க்ரீன் கார்ட் கிடைக்கல.

அவரும் உன்ன போல தான். அவங்க பெற்றோருக்கு ஒரே பையன். அவரும் தன் அப்பா, அம்மாவை, இங்கே அழச்சிக்கனும் என்று ஆசை தான்.

ஆனால் க்ரீன் கார்ட் கிடைக்காது. ஆறு மாசம் இந்தியா ...ஆறு மாசம் இங்கேன்னு, பாவம் அவர் பெற்றோர் இங்கேயும், அங்கேயும் அலஞ்சிட்டு இருந்தாங்க.” என்று ஜான் விக்டர் சொல்ல சொல்ல…

மணிமேகலைக்கு… ‘அய்யோ…’ என்றானது.

அவளுக்கு தனிப்பட்டு இங்கு தங்க ஆசை எல்லாம் இல்லை. இன்னும் சொல்ல போனால் இந்த நாடு என்று கூட அவள் ஆசை படவில்லை.

அவள் ஆசைப்பட்டது...தன் தந்தையை அவர் குறை தெரியாது பார்க்க… பேச… நினைக்க...இது போல் ஒரு இடத்திற்க்கு செல்ல வேண்டும்.அது இந்தியாவில் இருந்தால் சரி வராது.

உறவு என்று அவர்கள் வருவார்கள். தாங்கள் செல்ல வேண்டும். அதே வெளிநாடு என்றால் வருவது செல்வது அவ்வளவு ஈசி கிடையாது.

அதை நினைத்து தான் சின்ன வயதில் இருந்து...வெளிநாடு படிக்க வேண்டும். வேலை பார்க்க வேண்டும் என்ற, கனவை வளர்த்துக் கொண்டது. ‘இப்போ என்ன சார் இப்படி சொல்றார்…?’ என்று யோசனையுடன் ஜான் விக்டரை பார்த்து…

“அப்புறம் அவங்க என்ன செஞ்சாங்க…?” என்று ஆர்வமுடன் கேட்டாள்.

இதை மணிமேகலை கேட்டது, அவன் சொல்லி முடித்து சிறிது நேரம் கழித்து தான். ஜான் விக்டரும் தன் பேச்சை பாதியில் நிறுத்து விட்டு…

தாங்கள் விரும்பிய உணவு வந்ததும், ஜான் விக்டரே...மணிமேகலையின் தட்டில்...தன் அன்னை தந்தை தட்டில் பரிமாறியவன், மணிமேகலையின் யோசனை படிந்த முகத்தை பார்த்த வாறே நிதானமாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.

இதை பார்த்த மலர் விழி குழம்பி போய் …’இவன் ஏன் இந்த பெண்ணை இப்படி பயப்பட வைக்கிறான் என்று நினைத்தாள் என்றால், வில்சன் விக்டருக்கு தன் மகன் செல்லும் பாதை தெரிந்தும், அதை தடுக்க முடியாது ஆச்சரியத்துடன் தன் தட்டில் உள்ளதை கூட சாப்பிடாது தன் மகனை பார்த்திருந்தார்.

இப்படி பேசி தன் வழிக்கு கொண்டு வந்தாவது, அவளை திருமணம் செய்யும் அளவுக்கா… இப்பெண்ணை தன் மகனுக்கு பிடித்து இருக்கு… என்று நினைத்தவர் மனதில் எப்படியாவது இப்பெண் தன் மகனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.

ஆனால் அதே சமயம்… ‘தன் மகனுக்கு பிடித்த அளவுக்கு இப்பெண்ணுக்கும் தன் மகனை பிடித்தால் தானே வாழும் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.’ என்று யோசனையுடன் மணிமேகலையை பார்த்த வாறு அனுபவப்பட்ட வில்சன் விக்டரின் மனம் நினைக்கவும் தவறவில்லை.

தன் தந்தை மணிமேகலயையே பார்ப்பதை பார்த்த ஜான் விக்டர்… “டாட் சாப்பிடுங்க.” என்பது போல் சிரித்துக் கொண்டே தன் தந்தையையும் அவன் முன் இருக்கும் தட்டையையும் பார்த்து சொன்ன போது தான்…

முதலில் ஜான் விக்டர் பேசிய பேச்சான க்ரீன் கார்ட்டை பற்றி… “அப்புறம் அவங்க என்ன செஞ்சாங்க…” என்பதை பற்றி பேசினாள்.

“யாரு..?என்ன செஞ்சாங்க…?ஜான் விக்டருக்கு அவள் எதை கேட்கிறாள் என்று தெரிந்தே...அறியாது போல் கேட்டான்.

“அது தான் சார் உங்களுக்கு தெரிஞ்ச தமிழர் வேல கிடச்சது. ஆனால் க்ரீன் கார்ட் கிடைக்கலேன்னு சொன்னிங்களே…அப்புறம் அவருக்கு எப்போ கிடச்சது…?” என்று மணிமேகலை ஆர்வமுடன் கேட்டாள்.

அதற்க்கு ஜான் விக்டர்… “ஓ...அதை கேட்குறியா…?” என்று கேட்டவன். அவள் கேட்டதற்க்கு உடனே பதில் சொல்லாது...தன் உதட்டில் படிந்து இருக்கும் உணவை, அங்கு இருக்கும் டிஷ்யூ பேப்பரை கொண்டு துடைத்து விட்டு, பின் தண்ணீரை தன் தாகம் தணியும் வரை குடித்து விட்டே…

“இங்கு இருக்கும் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். தட்ஸ் ஹால்…” என்று பிரச்சனை தீர்ந்தது என்பது போல் சொன்னவனின் பேச்சில், மலைத்து போய் நின்றாள்.

ஜான் விக்டர் சொன்னதில் மணிமேகலைக்கு பாதி புரிந்தும் மீது புரியாமலும் குழம்பி போய்….

“சார் நீங்க சொன்னது எனக்கு புரியல…” என்று ஜான் விக்டரின் முகத்தை குழப்பத்துடன் பார்த்து கேட்டாள்.

“மேகலை இதுல புரியாம போறதுக்கு என்ன இருக்கு…? அதுவும் படிப்புல டாப் ஸ்டூடண்ட் நீ...இந்த சின்ன விசயம் உனக்கு புரியலேன்னு சொல்றது. எனக்கு ஆச்சரியமா இருக்கு.

இங்கு இருக்கும் பெண்ணை. அதாவது அமெரிக்க குடியுரிமை பெற்ற பெண்ணை திருமணம் செய்தா...அவனுக்கும், அமெரிக்கன் குடியுரிமை கிடச்சிடும். இது உனக்கு தெரியாதா…?” என்று ஜான் விக்டர் கொடுத்த விளக்கத்தில்…

“புரியும்…” என்பது போல் மணிமேகலை எல்லா பக்கமும் தலையாட்டினாலும், அவள் முகம் இன்னும் தெளிவு பெறாது தான் இருந்தது.

அதை பார்த்த ஜான் விக்டர்…“இன்னும் உனக்கு என்ன சந்தேகம்…” என்று கேட்டதற்க்கு…

“சார் இதுக்கெல்லாமா கல்யாண செய்துப்பாங்க…”

மணிமேகலையை பொறுத்தவரை இரண்டு வகையான திருமணம். ஒன்று வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம். இன்னொன்று...காதல் திருமணம். அக்காதல் திருமணம் வீட்டில் மறுத்தும் ஓடிப் போய் திருமணம் செய்தவர்களை எத்தனையோ பேரை அவள் ஊரில் பார்த்து இருக்கிறாள்.

இவள் விருப்பம் காதல் திருமணம் தான். அவள் வெளிநாட்டில் தான் தன் வாழ்க்கை என்று அவள் முடிவு செய்த பின்…

வெறும் பார்ப்பது மட்டும் உள்நாட்டில் வைத்துக் கொண்டவள்...இந்த காதலை படித்து முடித்து ஒரு வேலை கிடைத்த பின்...அங்கு க்ரீன் கார்ட் கிடைத்த்தும்...தன் பெற்றோரை தான் இருக்கும் இடத்திற்க்கு, அழைத்து வந்த பின்…

தனக்கு பிடித்த ஒருவனை திகட்ட திகட்ட காதலித்து, திருமணம் செய்த பின்...தன் பெற்றோர் வாழாத காதல் வாழ்க்கையை தான் வாழ வேண்டும் என்பதே….அவள் ஆசை.

ஒரு வயதுக்கு பின்...தன் பெற்றோரின் வாழ்க்கையை பார்த்து...இருவரும் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தில் தான் சேர்ந்து இருக்கிறார்களோ...என்ற சந்தேகம் அவளுக்குள் இருக்கிறது.

பெற்றோர்களை பற்றி அதற்க்கும் மேல், ஆராயவும் முடியவில்லை. அதை பற்றி கேட்கவும் முடியாது...ஏதோ ஒன்று என்ற வரையில் அவள் மனதில் பதிந்து போனது.

ஆனால் தன் வாழ்க்கை அப்படி இருக்க கூடாது. எனக்காக அவன் என்ன வேண்டுமானலும் செய்ய தயாராய் இருக்க வேண்டும். செய்யவும் வேண்டும். அதே போல் தான் தனக்கும், அவனுக்காக என்ன வேண்டுமானலும் இழக்க தயாராய் இருக்க வேண்டும். அப்படி பட்ட ஒரு காதல் வாழ்க்கை வாழ அவள் கனவு கண்டுக் கொண்டு இருக்க…

ஜான் விக்டர் சொன்ன…அமெரிக்க குடியுரிமைக்காக திருமணமா…? அது அவளுக்கு ஆச்சரியத்தோடு...அதிர்ச்சியாகவும் தான் இருந்தது.

ஆனால் நம் ஜான் விக்டரோ… “இதில் என்ன இருக்கு…?” என்று சாதரணமாக கேட்க..

அவ்வளவு பேசி பழகி இராத ஜான் விக்டரிடம் மணிமேகலை என்ன சொல்வாள். அதுவும் அவள் கனவு கொண்டு இருக்கும் காதல் வாழ்க்கை பற்றி நெருங்கியவர்களிடமே அவள் சொன்னது கிடையாது.

அப்படி இருக்கும் போது… அவ்வளவாக தெரியாதவனிடம் இது பற்றி பேச முடியாது அமைதியாக இருந்தாள்.

ஆனால் இன்று வரை தன் மனைவியை காதலித்துக் கொண்டு இருக்கும் வில்சன் விக்டரால் அமைதி காக்க முடியாது…

“என்ன பேச்சு ஜான் இது...? “ என்று கேட்டவர்..

நீ சொன்ன பையன் இப்போவும் அந்த பெண் கூட தான் இருக்காரா…?” என்று கேட்டதற்க்கு…

“இதில் என்ன சந்தேகம் டாட்...இப்போ அவங்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் இருக்கு.” என்று ஜான் விக்டர் சொல்ல…

அதற்க்கு வில்சன் விக்டர்…“அந்த பெண்ணை நீ சொன்னது போல் அந்த பையன் திருமணம் செய்திருந்தாலும்...பின் காதல் வந்து இருக்கலாம். அதனால் அந்த உறவு அவங்க தொடர்ந்து இருக்கலாம்.” என்று அனுபவ பட்டவராய் தன் கருத்து சொன்னார்.

“நீங்க சரியா தான் சொல்றிங்க டாட். நான் அதை இல்லேன்னு சொல்லலையே. அந்த பெண்ணுக்கு அந்த பையன் மீது காதல். அவன் நிலமை தெரிஞ்சி அவனிடம் ப்ரபோஸ் பண்ணி இருக்கா …

இவனுக்கு வயதான தன் அம்மா...அப்பாவை அங்கும் இங்கும் அலைக்கழைக்கிறோமே என்று இருந்தது.

அந்த பெண் பாக்க நல்லா இருந்தா….அவள ரிஜக்ட் செய்யும் அளவுக்கு அந்த பெண்ணிடம் எந்த குறையும் இல்லை. பையன் யோசிச்சான்...ஒகே சொன்னான். கல்யாணமும் செய்துக்கிட்டான்..

இதோ இன்னை வரை அவனுடைய லைப் ஸ்மூத்தா தான் போயிட்டு இருக்கு…” என்று ஜான் விக்டர் சொல்ல சொல்ல...வில்சன் விக்டர் அவனை ஆழந்து ஒரு பார்வை பார்த்தார்.

தந்தையின் பார்வையில் கண் சிமிட்டிய மகன் அழகாக புன்னகை செய்ய… ‘இவனை என்ன செய்யலாம்’ என்பது போல் தான் வில்சன் விக்டர் பார்த்திருந்தார்.

இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த மணிமேகலை… தயக்கமாய் இருந்தாலும்… “சார் அவருக்கு அவங்க மேல லவ் இல்லேன்னாலும், அந்த பெண்ணுக்கு அவர் மேல லவ் இருந்ததுலே சார். அதான் அவங்க சந்தோஷமா இருக்காங்க.” என்று சொன்னாள்.

அவள் பேச்சில் ஜான் விக்டர் கண்டு கொண்டது இது தான்…மனம் விரும்பாது அவர்களின் வாழ்க்கை நிறையாது என்பதே…

மணிமேகலை சொன்னதை வைத்தே… “அது தான் மேகல சொல்றேன். ஒருத்தர் லவ் இருந்தா போதும். திருமணம் வாழ்க்கை நல்ல படியாக கொண்டு செல்லவும் முடியும். அந்த மற்றும் ஒருவரை காதலில் விழ வைக்கவும் முடியும்.” என்று சொன்ன ஜான் விக்டர்…

“என்ன மேகல முடியும் தானே…?” என்று மணிமேகலையையே திருப்பி கேட்க…

அவள் என்ன சொல்வாள். அவள் சொன்ன கருத்தை தானே அவன் சொன்னான்.

அதனால்… “முடியும்… முடியும்..” என்பது போல் மணிமேகலை தலையாட்டி வைத்தாள்.

ஜான் விக்டருக்கே இன்று இது போதும் என்பது போல் நேரத்தை பார்த்தவன்… மணிமேகலையிடம்.. “உனக்கு டைம் ஆயிடுசி பார். வா நான் உன்னை ட்ராப் செய்யறேன்.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…

மலர் விழி… “நான் உன் கூட வர்றேன் ஜான். நான் மணி கிட்ட சரியா பேசவே இல்ல. நீயும் உன் டாடியும் தான் பேசிட்டே இருந்திங்க...கார்ல போகும் போது மணி கிட்ட பேசனும். அதனால் நான் உன் கூட வர்றேன்.” என்று சொன்னவர் மகனின் முகத்தை பாராது….

கார் ட்ரைவருக்கு போனின் மூலம்… “நீ காரை எடுத்துட்டு போ…” என்று சொல்லி விட்டு மகனிடம்..

“போகலாமா…?” என்று சொல்ல.. அந்த மகனோ பாவமாய் தன் தந்தையை பார்த்தான்.

நான் இதுல உனக்கு எதுவும் செய்ய முடியாது மகனே என்பது போல் அவனை பார்த்து விட்டு தன் மனைவியிடம்… “ வீட்டுக்கு போன உடன் கால் பண்ணு மலர்.” என்று ஒரு காதல் கணவனாய் தன் மனைவியின் பாதுகாப்புக்காக சொன்னார்.

மணிமேகலை வில்சன் விக்டரிடம்… “நீங்க ஆன்டிய ரொம்ப லவ் பண்றிங்க...அது உங்க ஒவ்வொரு பார்வையிலும், ஒவ்வொரு செயலிலுமே தெரியுது அங்கிள்.” என்று சொன்னவளுக்கு… ஒரு சிரிப்பே பதிலாய் தந்தவர்…

பின்… “எங்கல பார்த்து வளர்ந்த என் மகனும், அவன் மனைவியை அவ்வளவு நேசிப்பான்மா…”

மகனின் பேச்சில் இருந்தே… தன் மகன் இப்பெண்ணை எந்த அளவுக்கு விரும்புக்கிறான் என்று தெரிந்து கொண்டவராய்… ஏதோ நம்மால் முடிந்தது என்பது போல் மணிமேகலையிடம் இவ்வாறு கூறினார்.

தன் மகனுக்காக தான் இந்த பேச்சு என்றாலும், நான் சொல்வது பொய் இல்லையே..தன் மகன் இப்பெண்ணை திருமணம் முடித்தால் காதலாய் தானே பார்த்துக் கொள்வான். அதையும் நினைத்து தான் சொன்னார்.

ஆனால் அதற்க்கு பதிலாய் மணிமேகலை… “பெற்றோர் காதல் வாழ்க்கை பார்த்து மட்டும் இல்ல அங்கிள்...அது போல் காதல் வாழ்க்கை வாழாத பெற்றோரின் பிள்ளைகள் கூட...தங்கள் துணைவரிடம் காதலை கொடுப்பர். காதலை பெற நினைப்பர்.” என்று மணிமேகலை சொன்னதும்..

அந்த இடமே சிறிது நேரம் அமைதியாகி விட..அப்போது தான் மணிமேகலைக்கு உரைத்தது.நாம் என்ன பேசிக் கொண்டு இருக்கிறோம் என்று நினைத்து, அவள் முகத்தில் தெரிந்த அசுகரியத்தில்…

மலர் விழி… தன் கணவனிடம்… “சரிங்க நாங்க கிளம்புறோம்.” என்று சொல்லி மேலும் அவளை அதை பற்றி யோசிக்க விடாது அழைத்து சென்றார்.

மணிமேகலை எதற்க்காக இங்கு வந்தாளோ..அதை பற்றி பேச என்ன நினைக்க கூட செய்யாத அளவுக்கு அங்கு பேச்சு மட்டும் இல்லை...அவளின் ஏதோ ஒரு உணர்வு...தடுக்க…

அதுவும் மட்டும் இல்லாது ஜான் விக்டர் தன்னிடம் ஏதும் சொல்லாத போது...தான் என்ன மறுப்பு சொல்ல முடியும்...அதுவும் அவன் பெற்றோர்கள் முன்நிலையில்… அதனால் அன்று மணிமேகலை ஜான் விக்டருடன் சென்றது...பயன் இல்லாது போனது.

ஆனால் நம் ஜான் விக்டருக்கு, இந்த சந்திப்பு மிக பயனுடையதாய் தான் அமைந்து விட்டது. அதுவும் அவன் திட்டமிட்ட படிக்கு மேலேயே…

ஆம் மணிமேகலை தான் அழைத்ததும் சட்டென்று… “சரி.” என்றதிலேயே…

அவள் தன்னிடம் தனக்கு சாதகமான பதிலை சொல்லாது மட்டும் அல்லாது இதற்க்கு ஏதோ முடிவு கட்டவும் பார்க்கிறாள் என்று நினைத்து தான் தன் பெற்றோரை அழைத்து…

ஏதோ ஒரு குடும்பமாய் சந்திப்பது போல் அமைத்தான். ஆனால் அவன் எதிர் பாராதது.தன் பெற்றோர்களிடம் மணிமேகலை பேசிய இணக்கமான பேச்சு…

இனி வீரா என்ன செய்வான்…?
 
Top