அத்தியாயம்…13
அன்று மாதுரி எப்போதும் போலவே விடியலிலேயே கண் விழித்து விட்டாள்… தன் இடுப்பை சுற்றி இருந்த கணவனின் கையை கணவன் விழித்து விடாத வாறு மெதுவாக எடுத்து விட்டவள்…
தன் அவிழ்ந்து இருந்த கூந்தலை கோடாலி முடிச்சு போட்டு கொண்டே… “ம் இன்னுமே கல்யாணம் ஆன புது மாப்பிள்ளை என்று தான் நினைப்பு மாப்பிள்ளைக்கு…”
நேற்று இரவு கணவன் நடந்து கொண்டதை நினைத்து மாதுரி மெல்ல தான் முனு முனுத்தாள்…
தன் கையை மனைவி எடுத்து விடும் போதே லேசாக விழிப்பு வந்து விட்ட போதும்.. மனைவி எழுந்த உடன் என்ன செய்வாள் என்று அனுமானித்து இருந்த தமிழ் மாறன்.. தன் விழிப்பை வெளிகாட்டி கொள்ளாது மெல்ல கண் திறந்து தன் மனைவியின் இடுப்பை பார்த்தான்..
அவன் எதிர் பார்த்த திவ்ய தரிசனம்.. அவனுக்கு நன்றாகவே கிட்டியது…. கூடவே மனைவியின் பேச்சும் காதில் விழ… முனு முனுத்து கொண்டே கட்டிலை விட்டு கீழே இறங்க பாதத்தை கீழே வைக்க முயன்றவளின் பாதம் தரையை தொடவில்லை…
காரணம் தரிசனம் கொடுத்த இடுப்பை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் தம் மீதும் போட்டு கொண்டான்.
“என்ன டி கிண்டல் வேண்டி இருக்கு…? ஆமா டி நான் மாப்பிள்ளை தான்… எனக்கு என்ன டி வயசு ஆகிடுச்சி… நீ தான் அவசரபட்டு பேமிலி ப்ளானிங்க செய்துட்ட… இப்போ நான் மனசு வைத்தா கூட சிந்தியா ஷரத்துக்கு தம்பியோ தங்கையோ என்னால் ஏற்பாடு செய்ய முடியும்.. பார்க்கிறியா…? பார்க்கிறியா..?” என்று கேட்டு கொண்டே மனைவியின் முகம் எங்கும் முத்தத்தை பதித்து கொண்டே கேட்டான்..
கணவனின் காதல் தாக்குதலில் இருந்து கடினப்பட்டு வெளி வந்த மாதுரி வெளி வந்த வேகத்தோடு கட்டிலை விட்டு இறங்கியவள் கொஞ்சம் தூரமாகவும் நின்று கொண்டாள்....
கணவனை பார்த்து கை எடுத்து ஒரு கும்பிடு போட்டவள்… “ என்னை மன்னிச்சிக்குங்க சாமீ.. நீங்க இளந்தாரி தான்.. நான் ஒத்துக்குறேன்..” என்று சொன்னவள் பின்..
“ஆனா மாப்பிள்ளை ஒன்னு நியாபகத்தில் வைத்து கொள்ளனும்… நம்ம பொண்ணு பெரிய பொண்ணா ஆக இப்போவோ அப்போவே போல இருக்கா… அது கொஞ்சம் உங்க நியாபகத்தில் வைத்து கொண்டா நல்லா இருக்கும்..” என்று சொன்னவளின் பேச்சில் மனைவியின் மீது இருந்த காதல் கொஞ்சம் தள்ளி நின்று மகளின் மீது இருக்கும் பாசம் முன் வந்து நின்று கொண்டது…
“என்ன டி சொல்ற… குழந்தை அவள்…”
தந்தைகளின் பார்வைக்கு மகள்கள் எப்போதுமே குழந்தைகள் தானே… அதனால் அப்படி சொன்னான்..
ஆனால் ஒரு தாய்.. ஒரு தாயாக மட்டும் அல்லாது தான் கடந்து வந்த பாதை… அதில் அவள் பயணப்பட்டது என்று அனைத்துமே முன் நிறுத்தி யோசிப்பதால், மகளின் உருவ மாற்றம் அன்னைக்கு நன்றாகவே தெரிந்தது..
அதனால் சிந்தியாவிடம் கடந்த ஆறு மாதமாகவே இதை பற்றி முன் கூட்டியே சொல்லியும் வைத்து இருக்கிறாள் தான்.
ஆனால் அதை பற்றி கணவனிடம் சொல்லாது.. “ ஆமா ஆமா உங்க பொண்ணு எப்போதுமே உங்களுக்கு குழந்தை தான்..” என்று சொன்னவளை பிடிக்க வந்த கணவனிடம் அகப்படாது வெளி வந்து விட்டாள்..
இப்போது வேலை ஆரம்பித்தால் தான். பர பரப்பு இல்லாது செய்து முடிக்க அவளுக்கு சரியாக இருக்கும்.. தமிழ் மாறனுக்கும் அது தெரியும் என்பதினால் அவனுமே விட்டு விட,.
இதோ பிள்ளைகளுக்கு காலை மதியம் உணவு செய்து கட்டி வைத்து… இடை இடையே ஷிங்கில் விழும் பாத்திரத்தையும் துலக்கி வைத்து… என்று மாதுரியின் காலை வேலை எப்போதும் போல இறக்கை கட்டி தான் பறந்தது..
குழந்தைகள் அவர்கள் அறையில் யாரும் எழுப்பாது எழுந்து கொண்டவர்கள்… சிறிது அந்த நேரத்திற்க்குள் என்ன படிக்க முடியுமோ அதை படித்து விட்டு, சிந்தியா தன் பள்ளி பையில் அனைத்தையும் எடுத்து வைத்து கொண்டவள்…
தம்பியும் அனைத்துமே சரியாக வைத்து உள்ளானா என்று ஒரு முறை சரி பார்த்து விட்டு.. தம்பி பள்ளி சீருடை தன்னுடையது எடுத்து மெத்தையின் மீது வைத்து விட்டு இருவருக்குமான டவளையும் எடுத்த சிந்தியா ஷரத்திடம்…
“ குளிக்க போடா…” என்று சொல்லி அவன் கையில் அவனின் டவளை கொடுத்து அனுப்பினாள்..
ஷரத்துமே எந்த அடமும் பிடிக்காது குளித்து விட்டு அக்கா எடுத்து வைத்த உடையை அணிந்து கொண்டு… சாப்பிட ஹாலுக்கு சென்று விட்டான்.
தம்பிக்கு அடுத்து சிந்தியா குளித்து முடித்தவள் தலையை மட்டும் வாராது அனைத்தும் செய்து முடித்து விட்டு சீப்போடு, நேற்று பள்ளிக்கு செல்லும் போது வாரி விட்ட ஜடையை பிரித்து விட்டு தன் அம்மாவின் முன் போய் நின்றாள்..
மாதுரியுமே அதற்க்குள் அனைத்து வேலைகளையும் செய்து முடித்து விட்டதால், மகளுக்கு இரட்டை சடை பின்னி விட்டு, முன் பக்கம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்க்க மகளை தன்னை பார்க்கும் படி செய்தாள்..
இன்று என்னவோ மகளின் அழகில் இன்னுமே கலை கூடி இருப்பது போல அந்த அன்னைக்கு தெரிந்தது.. சிந்தியா சாதாரணமாகவே அவள் அன்னை போலலே அழகான பெண் தான்…
முடியுமே மாதுரி போலவே வளர்த்தியாகவும் அடர்த்தியாகவும் இருப்பதினால் தான், அன்னைக்கு தொல்லை கொடுக்க கூடாது என்று அனைத்துமே செய்து கொள்பவளாள் இந்த தலை வாரிக் கொள்வதும், தலைக்கு குளிக்கும் போது மட்டும் அவளுக்கு அன்னை உதவி தேவையாக இருந்தன…
ஆனால் இன்று அதையும் தான்டி மகளின் முகத்தில் ஏதோ ஒரு மாற்றம்.. அது அழகான மாற்றமாக தான் அந்த அன்னைக்கும் தெரிந்தது..
அதனால் அம்மாவின் கையில் இருந்த சீப்பை வாங்கி கொண்டு அதை தன் அறையில் கொண்டு போய் வைக்க சென்ற மகளிடம்..
“செல்லம் அம்மா உன் கிட்ட சொன்னது எல்லாம் நியாபகம் இருக்காடா…?” என்று கேட்ட அன்னை எது சொல்கிறாள் என்பது புரியாததால் சிந்தியா திரும்பி தன் அன்னையை பார்த்தாள்..
மகளின் பார்வையில்… “ அது தான் டா… பேன்டிசில் ரெட்..” என்று சொல்லும் போதே சிந்தியாவுக்கு புரிந்து விட..
“ம் நியாபகம் இருக்கும்மா… நான் பயப்பட மாட்டேன் அழுக மாட்டேன்..மிஸ் கிட்ட சொல்லுவேன்…” என்று விட்டு மகள் போக..
மாதுரி சிரித்து கொண்டே திரும்ப தமிழ் மாறன் மனைவியின் வழி மறித்து கொண்டு முறைத்து பார்த்து கொண்டு இருந்தான்…
“என்னங்க…?” என்று கணவனின் பார்வையில் மாதிரி கேட்டாள்..
“என்ன என்னங்க.. என்ன டி குழந்தை கிட்ட சொல்லிட்டு இருக்க….?” என்று கடிந்து ஏதோ பேச ஆரம்பித்த கணவனை அசால்ட்டாக….
“ஆமா ஆமா தமிழ் மாறன் பெண்… பதிமூன்று வயதில் குழந்தை … ஆனா என் அப்பா பொண்ணான நான் மட்டும் அந்த பதிமூன்று வயதில் உங்களுக்கு குமரியா தெரிந்தா போல..” என்று கேட்டவள் கணவனை அசால்ட்டாக தள்ளி விட்டு சமையல் அறைக்குள் சென்றாள்..
தமிழ் மாறனோ கப் சிப் தான்… பின் அப்படி தான் இருந்து ஆக வேண்டும்.. ஏன் என்றால் மாதுரியின் பதிமூன்றாம் வயதில் இவர்கள் திருவிழாவுக்கு சென்ற போது விமலனை பார்த்து மாதுரி..
“அத்தான் உங்களை அண்ணன் கூப்பிடுறாங்க..” என்று தமிழ் மாறன் தம்பியை அழைத்த போது… பக்கத்தில் நின்று கொண்டு இருந்த தமிழ் மாறன் மாதுரியை முறைத்து கொண்டு இருந்தான்…
மாதுரி சின்ன வயதில் தமிழ் மாறனை பார்த்தாலே பயந்து போய் ஓடி விடுவாள்.. காரணம் இதோ இது போல தான் எப்போதும் அவளை பார்த்து முறைத்து கொண்டு இருப்பதினால்,
அன்றுமே தமிழ் மாறனை விட்டு ஓட தான் பார்த்தாள்.. ஆனால்… “ ஓய்…” என்று தமிழ் மாறன் அழைக்க… மெல்ல திரும்பி…
“என்ன அத்தான்..?” என்று பயந்த குரலில் கேட்டவளிடம்..
“இந்த அத்தான் எல்லாம் என்னை பார்த்து மட்டும் தான் நீ கூப்பிடனும்… விமலன் வர்மன்.. உன் அத்தை மகனுங்களை பார்த்து எல்லாம் அத்தான் என்று கூப்பிட கூடாது…” என்று கண்டிப்பது போல சொன்னவனின் பேச்சில்… மாதுரி பயந்தாலுமே…
“ அப்போ எப்படி கூப்பிடுறது அத்தான்…” என்று கேட்டாள்..
அவனோ…” ம் அண்ணன் என்று கூப்பிட்டுக்கோ.. உன்னை யார் வேணா என்று சொன்னா….” பெரிய மனது செய்து அவர்களை அண்ணன் என்று அழைக்க அனுமதி வழங்கினால் தமிழ் மாறன்…
அப்போது ஏன் எதற்க்கு என்று எல்லாம் மாதுரிக்கு புரியவில்லை.. நாளா பக்கமும் பலமாக தலையாட்டி அதை ஒத்து கொண்டு விட்டாள் தான்..
ஆனால் இவர்களின் திருமணத்திற்க்கு பின் புரிந்ததில் மாதுரி.. கேடி அத்தான்… “ என்று தான் மனதில் செல்லம் கொஞ்சிக் கொண்டாள்…
இப்போது அதை தான் சொல்லி விட்டு சென்றாள்..
தமிழ் மாறனும் கழுத்தை தடவி விட்டு கொண்டே மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல.
“காலையில் இருந்து நீ எனக்கு ஒரு காபி குடுத்தியா….?” என்று கேட்டவன் மனதில்..
“ம் அன்னைக்கு என் கிட்ட பயந்து போய் கிடந்தா.. இன்னைக்கு…” என்று முனு முனுக்க..
அவன் முன் காபியை வைத்தவள்.. “ம் இப்போ என்ன சொன்னிங்க….? என்ன சொன்னிங்க…? சொல்லுங்க…? சொல்லுங்க…?” என்று மனைவி கேட்ட பாவனையில்..
“இன்னைக்கு சைட்டில் நிறைய வேலை இருக்கு டி.. உன் கிட்ட வெட்டியா பேச எல்லாம் எனக்கு நேரம் இல்லை…” என்று சொல்லி விட்டு அத்தனை சூடான காபியை வாயில் ஊத்தி கொண்டு குளியல் அறை நோக்கி ஓடியவனின் செவியில் மனைவி சிரிக்கும் ஓசை கேட்டது… அதில் தமிழ் மாறதினின் முகத்திலுமே புன்னகை ஒன்று வந்து போயின…
மாதுரி எதிர் பார்த்தது போல் தான் மூன்று மணி அளவில் அவள் கடை அப்போது தான் திறந்தது..
ராணியை… “ அரிசியை ஐந்து முறையாவது கழுவுங்க…” என்று சொல்லி விட்டு மற்ற இரண்டு பேரிடம் வெங்காயம் அரைய பூண்டு உரிக்க என்று எடுத்து கொடுத்து கொண்டு இருக்கும் போது தான் அவளின் கை பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது…
“இஞ்சி தோளை நல்லா எடு முத்தம்மா…” என்று ஒரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டே மாதுரி தன் கை பேசியின் அழைப்பை ஏற்றாள்..
அழைப்புல் சொல்லப்பட்ட விசயத்தில் ஒரு நிமிடம் மாதுரியின் முகத்தில் பதட்டம் வந்தாலுமே, அடுத்த நொடியே அது மறைந்து போய் விட்டது.
“வந்துடுறேன் மேடம்…” என்று சொன்னவள் பின்.. “ டாட்டர் பயந்து இருக்காளா….?” என்று சிந்தியாவின் வகுப்பு ஆசிரியரிடம் கேட்டு கொண்டே தன் வண்டியின் சாவீயை கையில் எடுத்தவளிடம்…
மாதுரி கேட்டதற்க்கு சிந்தியாவின் ஆசிரியர் என்ன சொன்னாரோ… மாதுரியின் முகத்தில் ஒரு பெருமை தெரிந்தது…
“ஆமா மேடம்.. நான் முன்னவே இதை பத்தி அவள் கிட்ட சொல்லி வைத்து இருக்கேன்…” என்றவர்.. பின் தன்னையே பார்த்து கொண்டு இருந்த ரானியிடம்..
“சிந்தியா ஏஜ் அட்டெண் பண்ணிட்டா ராணி…” என்று சொன்னதுமே ராணியின் முகத்தில் அப்படி ஒரு புன்னகை… மாதுரி பேசுவதை வைத்தே ராணி கண்டு கொண்டு விட்டாள் தான்…
“சரி ராணி நான் போய் சிந்தியாவை கூட்டிட்டு வீட்டுக்கு போனா வர மாட்டேன்… உங்களால் என்ன முடியுமோ அதை மட்டும் பாருங்க..” என்று விட்டு செல்ல பார்த்தவளை தடுத்து நிறுத்திய ராணி.
“என்ன மாதுரியம்மா… உன் பெண் பெரியவளான சந்தோஷத்தில் அந்த குழந்தையை கொடுத்தவரை மறந்து விட்டிங்கலே…” என்று ராணி கேட்டதும் தான் மாதுரி நாக்கை கடித்து கொண்டு அய்யோ என்று தலையில் அடித்து கொண்டவள்..
உடனே கணவனின் பேசிக்கு அழைப்பு விடுத்தாள்… சாதாரணமாக மாதுரி கணவனை தொந்திரவே செய்ய மாட்டாள்… கடையில் இருந்து ஏதாவது வாங்க வேண்டும் என்றால் கூட அவள் தான் வாங்குவாளே தவிர..
போன் செய்து… “நீங்க வரும் போது அப்படியே இதை வாங்கி கொண்டு வந்துடுங்க…” இப்படியான தொந்தரவுகளை மாதுரி கணவனுக்கு கொடுக்க மாட்டாள்…
தமிழ் மாறனுக்கு அன்று அதிகப்படியான வேலை தான்.. அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடித்து விட்டு… அனைத்தும் வாங்கியவர் பெயர்களுக்கு பத்திரவ பதிவும் செய்து முடித்து ஆயிற்று..
அதில் இருவர்… வீட்டின் இன்டியர்டெக்ரேஷனும் நீங்களே செய்து கொடுத்து விடுங்கள்…
“அடுத்த மாதம் கிரகபிரவேசம் வைத்து இருக்கேன்..” என்று சொல்லி விட்டார்..
தமிழ் மாறன் இதுவுமே செய்வான் தான்.. அது கேட்பவர்களுக்கு மட்டுமே.. ஒரு சிலர் லோன் வாங்கி வீட்டை வாங்குவதால் இந்த அதிகப்படியான செலவை இழுத்து கொள்ள மாட்டார்கள்.. இவனுமே இதை செய்யுங்கள் என்று இழுக்க மாட்டான்.
கேட்டவர்களுக்கு மட்டுமே செய்வான்.. அது போல செய்து கொடுத்தவர்களின் வீட்டின் வேலையை பார்த்த இவர்…
“நான் செய்வதா எண்ணம் இல்ல தான்.. ஆனா பாருங்க நீங்க அது செய்த பின். இன்னுமே அழகா இருக்கு சார்.. எங்க குடும்பத்திலேயே நான் தான் சார் முதல் முதல்ல சொந்தமா வீடு வாங்கி கிரகபிரவேசம் செய்ய போறேன்.. சொந்தம் எல்லாம் எங்க குடும்பத்தை அவ்வளவு கீழா தான் பார்ப்பாங்க… அவங்களுக்கு இது என் வீடு என்று பெறுமையா காமிக்கணும் சார்…” என்ற இந்த பேச்சில் நேரம் போதாது என்ற போதுமே இரவு பகல் வேலை செய்து முடித்து கொடுத்து விடலாம் என்று அந்த வேலையை எடுத்து கொண்டு விட்டான்..
வீட்டு கிரகபிரவேசத்துக்கு இன்னும் ஐந்து நாட்களே தான் உள்ளது…
சமையல் அறையின் மேடைக்கு ஏற்றது போல கப்போர்ட் அளவு செய்யாது அதிகப்படியாக செய்து விட்டதை கவனித்து வேலையாட்களிடம் தமிழ் மாறன் சத்தம் போட்டு கொண்டு இருந்த போது தான் மாதுரியின் அழைப்பு வந்தது..
முதலில் யார் அழைப்பது என்று கூட எடுத்து பார்க்காது டென்ஷனில் கத்தி கொண்டு இருக்க… மீண்டுமே அழைப்பு வரவும் தான். தன் கை பேசியை தமிழ் மாறன் எடுத்து பார்த்தது….
அழைத்தது மனைவி என்றதுமே வேலையாட்களை விட்டு கொஞ்சம் தள்ளி வந்தவன் அழைப்பை ஏற்றதும்..
“மாதும்மா ஏதாவது பிரச்சனையா.?” என்று தான் தமிழ் மாறன் கேட்டது.. ஏன் என்றால் மாதுரி சாதாரணமாக எல்லாம் அவனை அழைக்க மாட்டாள்…
“பிரச்சனை எல்லாம் இல்லேங்க.. சந்தோஷமான விசயம் தானுங்க. நம்ம பொண்ணு பெரியவள் ஆகிட்டாலாம். இப்போ தான் ஸ்கூலில் இருந்து போன் வந்தது…” என்று மாதுரி சொன்னதற்க்கு தமிழ் மாறனிடம் இருந்து எந்த சத்தமும் இல்லாது போக..
மாதுரி தான். “ அத்தான் அத்தான்.” என்று அழைக்க…
“ம் மாதும்மா… ம்..” என்று சொன்னவன் பின் ஒரு நிமிடம் கழித்தே…
“குழந்தை டி.. ரொம்ப வலிக்கும்லே…” என்று சொன்ன கணவனிடம் மாதுரி…
“இது எல்லா பெண்களும் பேஸ் பண்ணி தான் ஆகனும் அத்தான்… அது எல்லாம் நம்ம பொண்ணு சமாளிச்சிடுவா…” என்று சொன்னவள்..
“நான் இப்போ போறேன்.. நீங்களும் வரிங்கலா…?” என்று கேட்டவளிடம் தமிழ் மாறன்..
“இது என்ன கேள்வி.. இதோ நானும் கிளம்புறேன்…” என்று சொன்னவன்…
என்ன என்ன செய்ய வேண்டும் என்று வேலை செய்பவர்களிடம் சொல்லி விட்டு மனைவிக்கு முன் மகளிடம் பள்ளிக்கு முன் நின்று விட்டவன் பள்ளியின் உள் செல்லாது மனைவிக்காக காத்துக் கொண்டு இருந்தான்…
**********************************************************************
அத்தியாயம்….14
தமிழ் மாறன் பள்ளியின் வாசலில் அதிக நேரம் எல்லாம் காத்திருக்க வைக்காது மாதுரியும் வந்து விட்டாள்… மாதுரி மகளின் பள்ளி தெருவில் தன் வண்டியை செலுத்தும் போதே மாதுரியின் கண்கள் கணவனை பார்த்து விட்டது.. அதனால் சரியாக கணவனின் புல்லட்டின் பக்கத்தில் தன் ஸ்கூட்டியை நிறுத்தியவள்..
“ ரொம்ப நேரமா வெயிட் பண்றிங்கலா…? வர வழியில வண்டி பஞ்சர் ஆகிடுச்சு.. அது சரி செய்து விட்டு வர நேரம் பிடிச்சிடுச்சி….” என்று சொல்லிக் கொண்டே இறங்கியவள் சீட்டின் அடியில் வைத்திருந்த நேப்கினையும் கையில் எடுத்து கொண்டு..
“ம் வாங்க….” என்று சொல்லி விட்டு இரண்டு அடி எடுத்து வைத்தவள் தன் பின் கணவன் வராது போக என்ன என்று திரும்பி பார்க்க…
கணவனோ நின்ற இடத்தை விட்டு அசையாது அப்படியே நின்று கொண்டு இருந்தான்.. முகத்தில் ஏதோ ஒரு யோசனை.. கொஞ்சம் பரிதவிப்பும் தெரிந்தது…
மாதுரி… “என்னங்க. அத்தான்… இன்னுமே வலிக்கும் இது எல்லாம் யோசிக்கிறிங்கலா…? அது எல்லாம் ஒன்னும் இருக்காது.. வாங்க முதல்ல நம்ம குழந்தையை போய் பார்க்கலாம்.. பள்ளி விடும் நேரம் தான்.. நம்ம ஷரத்தையுமே கூட்டிட்டு போயிடலாம்… அவன் கிட்ட இதை பத்தி என்ன சொல்ல என்று தான் தெரியல…” என்று அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டு இருந்தாளே தவிர.. தமிழ் மாறன் வாய் திறக்காது போக.
இப்போது மாதுரி தன் பேச்சை நிறுத்தி விட்டு… கணவனின் கை பிடித்து.. “ என்னங்க…?” என்று கேட்டவளிடம்..
“பயமா இருக்கு மாதும்மா…” என்று சொன்னவனின் குரலிலுமே உண்மையாக பயம் தெரிந்தது..
இப்போது மாதுரிக்கு என்ன என்று தெரியவில்லை என்றாலுமே, கணவனின் இந்த பயந்த குரல் அவளையும் பயம் முறுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்..
காரணம் கணவன் அத்தனை பெரிய இழப்பை சந்தித்த போது கூட … இனி குடும்பத்தை எப்படி கொண்டு செல்வேன்… தங்களை இப்படி நிறுத்தி விட்டோமே என்று நினைத்து தத்தளித்தானே தவிர பயம் எல்லாம் கொள்ளவில்லை…
ஆனால் கணவனின் இந்த பயம் மாதுரியை யோசிக்க வைத்தது.. அது என்ன என்று…? மனைவியை அதிகம் யோசிக்க விடாது…
“ இப்போ எல்லாம் பெண் குழந்தைகளை வைத்து கொண்டு இருப்பதே ரொம்ப பயமா இருக்கு மாதும்மா…” என்று கணவன் சொன்ன நொடி கணவன் எதை நினைத்தை பயந்து இருக்கிறான் என்பது மாதுரிக்கு புரிந்து விட்டது…
“ உண்மை தானுங்க. ஆனா நான் நம்ம சிந்தியாவுக்கு ஒரளவுக்கு சொல்லி கொடுத்து தான் இருக்கேன்.. அதுவும் தவிர நம்ம பொண்ணு உங்களை மாதிரி தைரியமானவள்…அவளை தப்பா மிரட்டி கூட தொட முடியாது.. தொட நினச்சாலே அவள் புரிந்து நம்ம கிட்ட சொல்றது போல தான் நான் அவளை தைரியம் படுத்தி வைத்து இருக்கேன்.” என்று மாதுரி கணவனுக்கு தைரியம் அளித்த பின் மகளிடம் அழைத்து சென்றாள்..
ஆண்கள் என்ன தான் படித்து வெளியில் தொழில் செய்து அதில் வெற்றியும் பெற்று இருந்தாலுமே, ஒரு சில விசயங்களில் பெண்களுக்கு இருக்கும் நுட்ப உணர்வு ஆண்களுக்கு இருப்பது இல்லை தான்..
தமிழ் மாறன் வெளியில் பயந்தது எல்லாம் வீண் என்பது போல் தான் சிந்தியா இவர்களை பார்த்ததுமே சிரித்த முகத்துடன் தான் வர வேற்றாள்…
சிந்தியாவின் பக்கத்தில் ஒரு ஆசியர் அவளுக்கு துணையாக அமர்ந்திருந்தார்.. இவர்களை பார்த்ததுமே அந்த ஆசிரியர் சிரித்தவர்..
பின்.. “ நானுமே நிறைய ஸ்டூடண்டை இந்த மாதிரி சமயத்தில் ஹான்டில் பண்ணி இருக்கேன்.. ஆனா உங்க பெண்… சூப்பருங்க.. பயப்படாதே.. என்று நான் சொல்லும் அவசியம் கூட இல்ல…
அவளே என் கிட்ட இருந்து பேட் வாங்கிட்டா.. வலியா கேட்டேன்… இருக்கு பட்… தாங்குவது போல தான் இருக்கு… அம்மா சொல்லி இருக்காங்க.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல மிஸ்.. சூப்பருங்க உங்க டாட்டர்..” என்று சொல்லும் போதே பெற்றோர் முகத்தில் ஒரு பெரிய புன்னகை..
மாதுரி சொன்னது போல பள்ளியும் விட்டு விட ஷரத்தோடு தான் குடும்பமாக வீடு வந்தனர்…
எப்போதும் வராத தந்தை வந்து இருப்பதை பார்த்து… “ என்னப்பா மார்னிங் நிறைய வேலை இருக்கு நையிட் லேட் ஆகும் என்று அம்மா கிட்ட சொன்னிங்க..” என்று கேட்டவனிடம் இதை பற்றி என்ன சொல்வது என்று புரியாது மனைவியின் முகத்தை தான் பார்த்தான் தமிழ் மாறன்..
இதிலுமே மாதுரி தான் குழந்தை அளவுக்கு புரிவது போல விளக்கம் கொடுத்தாள்…பின் அடுத்து என்ன என்று இதற்க்குமே தமிழ் மாறன் மனைவியை பார்க்க..
இப்போது மாதுரி சிரித்து விட்டாள்.. “ மாதும்மா கிண்டல் செய்யாதே…” என்று சொன்னவனுமே சிரித்து விட பெற்றோர்களின் சிரிப்பை பார்த்த குழந்தைகளுமே சிரித்தனர்…
அந்த மகிழ்ச்சியான சூழ்நிலையிலேயே… கணவனிடம் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி சொல்ல ஆரம்பித்து விட்டாள்…
“ இப்போவே ஐந்து மணி ஆகுது.. இதுக்கு மேல இன்னைக்கு பொண்ணுக்கு தண்ணீ ஊத்த முடியாது.. நாளைக்கு இரண்டாம் நாள் அதோட செவ்வாய் கிழமை.. தண்ணீ ஊத்த கூடாது.. புதன் கிழமை நல்ல நாளா தான் இருக்கு…” என்று கேலண்டரை பார்த்து சொல்லி கொண்டு வந்தவளிடம்…
தமிழ் மாறன் ஒரு சிறு தயக்கத்துடன்.. “ப்ரியா பொண்ணுக்கு அத்தனை கிராண்டா செய்தாங்கலே அது போல…” என்று சொன்ன கணவனிடம்.
“அது மஞ்சள் நீராட்டு விழா அத்தான்… முதல்ல தண்ணீ ஊத்துறது பார்க்கலாம். பின் அது எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் அத்தான்..” என்று சொன்ன மாதுரி..
என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை சொன்னவள் முதலில் வீட்டிற்க்கு பெரியவங்க அத்தை கிட்ட முதலில் இந்த விசயத்தை சொல்லலாம் வாங்க..” என்று கணவனை பக்கத்து வீட்டிற்க்கு செல்ல அழைத்தாள்.
தமிழ் மாறனோ..” எதுக்கு போய் சொல்லிட்டு இரு அம்மாவுக்கு போன் பண்ணி சொல்லிடறேன்..” என்று சொல்லி கொண்டே போனை எடுக்க கணவனின் கையில் இருந்த போனை வெடுக்கென்று பிடுங்கிய மாதுரி…
“போன்ல சொல்றது எல்லாம் மரியாதையா இருக்காதுங்க… நேரில் போய் தான் சொல்லனும்.. அதோட உங்க தம்பிங்க கிட்டயும்.. கீர்த்திகா தீபிகா கிட்டேயும் சொல்லிட்டு புதன் கிழமை தண்ணீர் ஊற்றுவதை பற்றியும் முறையா சொல்லிட்டு அழைக்கனும்…” என்று மாதுரி சொல்வது தமிழ் மாறனுக்கு பிடிக்கவில்லை தான்…
காரணம் தனியாக வந்ததில் இருந்து இது வரை தமிழ் மாறன் தம்பிகள் இருக்கும் வீட்டிற்க்கு சென்றது கிடையாது.. தம்பிகள் கார் வாங்கியது குடும்பமாக சுற்றுலா சென்றது… என்று அனைத்துமே தமிழ் மாறன் பார்த்து கொண்டு தான் இருக்கிறான்..
இதை எல்லாம் பார்க்க பார்க்க.. தானுமே கார் வாங்கினேன் தான். ஆனால் வாங்கும் போதே தம்பிகள் குடும்பத்தையுமே மனதில் வைத்து கொண்டு தானே நான் காரே வாங்கியது… ஆனால் இவர்கள் கார் வாங்கியதை கூட தன்னை பார்த்து இவர்கள் சொல்லவில்லையே….
அதே போல தான். தனியாக வந்த இந்த இடைப்பட்ட நாட்களில் எவ்வளவு சுற்றுலாவுக்கு இரு தம்பிகளும் சென்று வந்தது அவனுக்கு தெரிந்தது தான்..
நான் என் ஹனி மூனை கூட குடும்பமாக தானே சென்றேன்.. இவர்களை விட்டு நன் மனைவி குழந்தைகளோடு தனியாக எங்காவது சென்று இருக்கிறேனா. அப்போ குடும்பம் என்றால் மனைவி குழந்தைகள் இவர்கள் தானோ… அதை தானே அவனுக்கு பின் பிறந்த அவனின் தம்பிகள் அவனுக்கு உணர்த்தி விட்டார்கள்….
இப்போது அங்கு செல்வது… என்னவோ போல் தான் இருந்தது... இருந்துமே மனைவியோடு சென்றான்..
இவன் சென்ற நேரம் அனைவரும் தான் வீட்டில் இருந்தனர்.. அதுவும் பாக்கிய லட்சுமி பெரிய மகன் வந்ததில் அப்படி ஒரு சந்தோஷம் அவர் முகத்தில்..
“வா தமிழு… வா தமிழு… “ என்று சிரிப்புடன் வர வேற்றார்.. தம்பிகள் தம்பி மனைவிகள் கூட..
“வா தமிழ் வாங்க அத்தான்.. வா மாதுரி…” என்று அனைத்து பக்கத்தில் இருந்தும் முறை சொல்லி முறையாக தான் வர வேற்றார்கள்..
இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் உதவி என்று தங்களிடம் வந்தது கிடையாது.. இனியும் வர மாட்டார்கள்… என்ற நம்பிக்கையில் தான் இந்த வர வேற்ப்பு எல்லாம்…
இது கணவன் மனைவி இருவருக்குமே புரிந்தாலுமே, அதை வெளிக்காட்டாது அவர்களுமே சுமுகமாகவே… பேசினர்..
சாப்பிட சொன்னத்ற்க்கு கூட. “ இப்போ தான் சாப்பிட்டு வந்தோம் குழந்தைங்க தனியா இருக்காங்க..” என்று சொன்னவர்கள் சிந்தியா பெரியவள் ஆன விசயமும் சொல்ல.
பாக்கிய லட்சுமிக்கு அப்படி ஒரு சந்தோஷம் .. இன் இருக்காதா வீட்டின் மூத்த பேத்தி.. பெரியவள் ஆகி இருக்கிறாள் என்றால்,
உடனே… “ நீங்க பேசிட்டே வாங்க. நான் அங்கு பேத்திக்கிட்ட இருக்கேன்..” என்று சொல்லி விட்டு இவர்களின் பதிலை கூட எதிர் பார்க்காது தமிழ் மாறன் வீட்டிற்க்கு சென்று விட்டார்…
இப்போது தமிழ் மாறன் தம்பி தம்பி மனைவிகளிடம்… “ புதன் கிழமை பங்ஷன் வந்துடுங்க…” என்று சொன்னான்.. சொல்லும் போதே சொந்த தம்பியையே இது போல சம்பிரதாயமாக வர வேற்க்கும் நிலை வரும் என்று அவன் நினைத்து கூட பார்க்கவில்லை…
மாதுரியுமே.. கையில் இருந்த குங்குமத்தை எடுக்க சொல்லி வந்துடுங்க…” என்று சிரித்த முகமாக அழைக்க.
அது என்னவோ கிருத்திகாவுக்கும் தீபிகாவுக்கும் மாதுரியின் இந்த சிரித்த முகம்.. அழகான அவளின் தோற்றம்.. வயதே தெரியாத அவளின் அந்த உடல் வாகு.. இதை பார்த்து அவர்களுக்கு பொறாமை..
இதோ பதிமூன்று வயது பெண்ணுக்கு அம்மா போலவா இருக்கா. தளர்ந்து போன தங்களின் உடலை குனிந்து பார்த்து கொண்டனர்..
முன் தான் மாதுரி பணம் இருக்கும் அந்த செழுமையில் அப்படி இருக்கா என்று நினைத்தா.. இப்போ மாவூம் வடகறியும் வித்திட்டு இருக்கும் போதே முன்பை விட இன்னுமே இளமையா கண்ணுக்கு தெரியுறா….?” என்று நினைத்து மாதுரியை பொறாமையாக பார்த்தனர் இருவரும்.
அந்த பொறாமையில் மாதுரியின் அந்த சிரித்த முகத்தை போக்க கங்கணம் கட்டி கொண்டவர்களாக அக்காவும், தங்கையும்…
“ம் அதுக்கு என்ன வரோம் மாதுரி…” என்று சொன்ன கிருத்திகா..
“நான் சொன்னா என்னை தப்பா நினைக்க கூடாது… உன் நகை எல்லாத்தையும் வித்துட்ட என்று எனக்கு தெரியும்.. இந்த பங்ஷனுக்கு போட ஏதாவது நகை இருக்கா…” என்று கிருத்திகா கேட்டாள் என்றால்..
தீபிகாவோ…. “மாதுரி பெண் ஏஜ் கூட அட்டன் பண்ணிட்டா…. இனியாவது ஒன்று இரண்டு கொஞ்சம் கொஞ்சமா சீட்டு பிடித்து வாங்க பாரு… அப்போ தான் அவள் படித்து முடித்து அவள் வேலைக்கு போய் சம்பாதிப்பதை கல்யாண செலவுக்கு வைத்து கொண்டாலும்.. இந்த கொஞ்சம் நகையை வைத்து உங்களுக்கு ஏத்தது போல ஒரு இடத்தை பார்த்து கல்யாணம் செய்து கொடுக்க முடியும்..” என்று மாதுரியின் மனது புண்பட வேண்டும் என்றே வேண்டும் என்று இருவரும் சொல்ல.
ஆனால் மாதுரியோ… “ கண்டிப்பா நீங்க சொன்னது போலவே செய்யிறேன்.இது போல நல்லது சொல்ல சொந்தம் என்று இருப்பதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு… “ என்று சொன்னவள் கிளம்பும் சமயம் மீண்டும் ஒரு முறை..
“கண்டிப்பா வந்து விட வேண்டும்..” என்று அழைத்து விட்டு தான் கணவன் மனைவி இருவரும் சென்றதே.
இவர்கள் சென்றதும் அக்கா தங்கை இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்… இப்போ அவளை நாம வெறுப்பு ஏத்தினோமா.. நம்மளை அவள் வெறுப்பு ஏத்திட்டு போகிறாளா என்றும் கேட்டு கொண்டனர்..
தம்பிகளின் வீட்டை விட்டு வெளி வரும் போது கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொண்டவர்கள்.. சத்தம் இல்லாது சிரித்தும் கொண்டனர்…
இவர்களின் இப்போதைய நிலை இப்போது யாருக்கும் தெரியாது தானே…. அதுவும் விமலனும் வர்மனும்.. அந்த பதினெட்டு கோடி கொடுத்து இடத்தை வாங்கியது நிறைய இடத்தில் கடன் வாங்கி அதை வாங்கியதாக தான் நினைத்து கொண்டார்கள்..
அந்த நினைப்பில் மாதுரியின் நகை கொண்டு கட்டி விற்ற அந்த அடக்கு மாடி குடியிருப்பில் வந்த பணத்தை எல்லாம் தான் கடனை அடைத்து விட்ட தாகவும்… இப்போது தான் மற்றவர்கள் இடத்தில் அடுக்குமாடி மட்டும் கட்டி கொடுப்பதாகவும் தான் அவர்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்…
தம்பிகள் இது போல தான் தன்னை நினைத்து கொண்டு இருக்கிறார்கள் என்பது கூட ஒரு நாள் பாக்கிய லட்சுமி… வந்து..
“என்ன தமிழ் அந்த இடத்தை அவ்வளவு கடன் வாங்கி தான் வாங்கனுமா என்ன…? இப்போ பார். நீ இன்னொரு வாங்கின இடத்தில் வீடு கட்டி கொடுத்துட்டு இருக்கே. இன்னுமே உனக்கு கடன் இருக்கா… நீ சம்பாதிப்பது எல்லாம் நீ அதுக்கு தான் கட்டிட்டு இருக்கியா.. அதுக்காக தான் மாதுரி கடை வைத்து இருக்காளா…?” என்று வருத்தமாக கேட்கும் அன்னையிடம் தமிழ் மாறன்…
“உங்க கிட்ட யார் சொன்னது…?” என்று தான் கேட்டான்..
“உன் தம்பிங்க தான் தமிழ்…” என்ற அன்னையிடம்..
“இன்னும் கொஞ்ச நாளிள் சரியாகி விடும் ம்மா..” என்று சொன்னானே ஒழிய.. அது போல எல்லாம் இல்லை என்றும் சொல்லவில்லை.. இப்போது தங்களின் நிலையை பற்றியும் சொல்லவில்லை..
காரணம் இன்னுமே உறவுகளின் நிலைப்பாட்டை பற்றி அவனுக்கு தெரிய வேண்டி இருந்தது…
வீட்டிற்க்கு வந்த போது பாக்கிய லட்சுமி பேத்தியிடம்… இது போலான சமயத்தில் என்ன என்ன சாப்பிட வேண்டும் என்பதை பற்றி சொல்லி கொண்டு இருந்தார்..
இவர்களை பார்த்ததுனே இருவரிடமும்… “ காஞ்சிபுரம் மாதுரி அண்ணனுங்களுக்கும் தங்கைக்கும் சொல்லனும்.. அப்புறம் ஊரோட இருக்கும் வீட்டு பெண் ப்ரியாவை நீ நேரில் போய் தான் அழைக்கனும்..” என்று சொன்னதற்க்கு…
தமிழ் மாறன்… “ நேரில் என்றால் நான் மட்டும் தான்ம்மா போவேன்.. மாது வீட்டில் சிந்தியா கூட இருக்கனும்.. அதோட அவள் தான் நாளை மறுநாளுக்கு உண்டான வேலைகளை எல்லாம் இங்கு இருந்து பார்த்துக்கனும்..” என்று சொல்ல.
பாக்கிய லட்சுமியும் .” சரிப்பா…” என்று விட்டார்.
மாதுரி தன் தாய் வீட்டிற்க்கு நேரில் எல்லாம் சொல்ல வேண்டாம்.. இதற்க்கு எல்லாம் அவர்கள் கோபித்தும் கொள்ள மாட்டார்கள் என்று சொல்லி அப்போதே தன் இரு அண்ணன்கள் அண்ணிகளிடமும்.. தங்கை தங்கை கணவனிடமும் கை பேசியில் அழைத்து கணவன் மனைவி இருவரும் அழைத்தனர்..
அவர்களுமே மாதுரி சொன்னது போலவே… “பங்கஷன் வைத்து கொண்டு இவ்வளவு தூரம் அலைய எல்லாம் முடியாது மச்சான்..” என்று சொன்ன மாதுரியின் இரு அண்ணன்களும் பின் கொஞ்சம் தயங்கிய வாறு…
“மச்சான் நீங்க எங்களை தப்பா நினச்சிக்க கூடாது… இங்கு மெக்கானிக் ஷாப்பில் ஏகப்பட்ட வண்டி நிற்குது.. இந்த வெள்ளத்தில் வண்டியில் தண்ணீர் போய் விட்டது போல…. காஞ்சிபுரத்தில் வீட்டில் இருக்கும் வண்டி மொத்தமும் இப்போ நம்ம கடை முன்ன தான் வரிசை கட்டி நிற்குது…” என்று மனோகரன் சொல்லும் போதே.
தமிழ் மாறன்… “ அதுக்கு என்னப்பா. வீட்டு பெண்களை அனுப்பி விடுங்க.. அதுவும் கூட இது பெண்கள் விசேஷம் தானே.. இதுக்கு எல்லாம் நீங்க சங்கடப்பட கூடாது..” என்று தமிழ் மாறன் சொல்ல..
“இல்லேப்பா தாய் மாமன் நாங்க தான். ஓலை பின்னனும்.. நாங்க இரண்டு பேரில் ஒருத்தராவது வரோம்..” என்றதற்க்கு..
தமிழ் மாறன்… “ அதுக்கு என்ன மச்சான் நான் ப்ரியா பையன் வைபவை வைத்து அந்த சடங்கை முடித்து கொள்கிறேன் ..” என்று விட..
அதுவே மகளின் விழா அன்று ஒரு பெரிய பிரச்சனையாக வந்து நின்று விட்டது.. தமிழ் மாறன் அன்னையிடம் சொன்னது போல.. முறையாக தங்கையின் வீட்டிற்க்கு சென்று அழைத்தான்..
முன் தங்கை வீட்டிற்க்கு தமிழ் மாறனுக்கு கொடுக்கும் வர வேற்ப்பே தனி தான்.. அந்த வர வேற்ப்பு இல்லை என்றாலும்,, அவமானம் எல்லாம் படுத்தவில்லை..
காபி கொடுத்து உபசரித்த ப்ரியாவின் மாமியார்… “ ஆனாலும் உன் நிலை இப்படி ஆகி இருக்க கூடாது.. ம் என்ன செய்யிறது… எனக்கு இந்த முட்டி வலிப்பா அதனால என்னால வர முடியாது மகனையும் மருமகளையும் அனுப்பி வைக்கிறேன்..” என்று சொன்னார்..
தமிழ் மாறன் மாதுரியின் அண்ணனுங்க வர முடியாத நிலை.. அந்த ஓலை கட்டுவது வைபவ் வைத்து செய்யலாமா…?” என்று கேட்டதற்க்கு..
ப்ரியாவின் மாமியார் சுகுனாவுக்கு முன் தமிழ் மாறன் எவ்வளவு செய்தான் என்பது அவரின் நியாபகத்திற்க்கு வந்து விட்டது போல…
அதனால்.. “ அதுக்கு என்னப்பா. இவனுமே முறை தானே ஆகுது… அது எல்லாம் செய்து விடலாம்.” என்று அனுமதியும் தந்து விட்டார்..
இதை நம்பி தமிழ் மாறன் வீட்டில் அனைத்து ஏற்பாடும் செய்து முடித்து விட்டனர்… அனைவரையும் அழைத்து எல்லாம் செய்யவில்லை.. தமிழ் மாறன் தம்பி தங்கை… மாதுரியின் தாய் வீட்டு உறவு அவ்வளவே..
அதனால் சமையல் மாதுரியே தான் தான் வேலைக்கு வைத்து இருக்கு மூன்று பெண்களை வைத்து செய்து முடித்து விட்டாள்..
அனைவருமே வந்து விட்டனர்… ப்ரியா ஸ்ரீவச்சனும் கூட வந்து விட்டார்கள். ஆனால் அவன் மகன் வைபவை அழைத்து வராது….