Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நீயென் புதினம்....3

  • Thread Author


அத்தியாயம்…3

பாக்கியலட்சுமி காலையில் இருந்தே மிக பரப்பரப்பாக இருந்தார்…. “ராணி அந்த புட்டுக்கு அரிசி ஊர வெச்சிட்டியா…? வடைக்கு உளுந்து இப்போதே ஊர வைக்காத…” என்று ராணியிடம் அதிகாரமாக சொல்லி கொண்டு இருந்தவர்…

மாதுரியின் தலை பார்த்ததுமே… “ மாதுரி… அன்னைக்கு நாம வாங்கினது எல்லாத்தையும் பத்திரமா எடுத்து வெச்சிட்டியா…? நீயே உன் பொறுப்பில் வெச்சிக்கோ…” என்று சொன்னவர் பின் தன் அண்ணியும் சம்மந்தியுமான கிருத்திகா தீபிகாவின் அம்மாவான லட்சுமியிடம்…

“அண்ணி இந்த பசங்களை கொஞ்சம் பார்த்துக்குங்க.. எல்லாம் எடுத்து வெச்சாச்சா என்று ஒரு வாட்டி நான் சரி பார்த்துக்குறேன்…” என்று சொல்லி விட்டு சரி பார்த்து வந்த பின் மீண்டும் தன் அண்ணியின் பக்கத்தில் அமர்ந்த பாக்கிய லட்சுமி…

“அண்ணி உங்க பொண்ணுங்க இன்னைக்கு லீவு போட்டு இருந்து இருக்கலாம்… ஒரு நாத்தனார் பொண்ணுக்கு புட்டு சுத்த கூட லீவு போடாம இருந்தா எப்படி…?” என்று கேட்டதற்க்கு லட்சுமி.. நான் உங்க எல்லோருக்கும் சளைத்தவள் இல்லை என்பது போல..

“என்ன அண்ணி நீங்களே இப்படி சொல்லலாமா…? உங்க மூத்த மகன் போல உங்க மத்த பசங்க சொந்தமா பிசினஸா பண்றாங்க.. நினச்ச உடனே லீவு எடுக்க..முக்கியமா இன்னைக்கு போய் ஆகனும் என்று தீபிகா சொன்னா…” என்று கூறியவர்…

பின்.. “நீங்க எதுக்கு அண்ணி கவலை பட்டுட்டு இருக்கிங்க. உங்க மூத்த மருமகள் பொறுப்பா எல்லாத்தையும் எடுத்து வைத்து இருப்பா. அதே சமயம் தமிழ்… அவன் கிட்ட வேலை பார்க்கும் பையனை அனுப்பி சீருக்கு உண்டானதை வாங்கி அடுக்கியாச்சி… கூட ஒரு பையனை இங்கு அனுப்பி இருக்காரு… பொருள் ஏத்த இறக்க என்று இருக்க….இன்னும் என்ன கவலை.” என்று சொன்ன லட்சுமியின் பேச்சு புகழ் பேச்சா பொறாமை பேச்சா என்று புரியாத பாவனையின் தான் பேசியது..

காரணம் தன் ஒரு மகளை தமிழுக்கு கட்டி கொடுக்க தான் நினைத்தது.. ஒரே வருடத்தில் இருபது லட்சம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விட்டதை கேள்வி பட்டத்தில் இருந்து. ஆனால் யாருக்கு யார் என்று தான் முதலிலே முடிவு செய்து தானே நாம வந்து இருக்கோம்.. இதை நினைத்து தன்னை தேற்றிக் கொண்டவர்.. கூடவே பரவாயில்லை..

கூட்டு குடும்பமா இருப்பதினாலா… நம்ம இரண்டு பொண்ணுங்களுக்கும் லாபம் தான்… தன் நாத்தனார் கணவன் வழி சொத்தாக இந்த பெரிய வீட்டில் எல்லோரும் கூட்டு குடும்பமா இருப்பதில் வாடகை இல்லை…

குடும்ப செலவு முழுவதுமே தமிழ் தான் செய்வதால் தன் இரண்டு மகள்களின் சம்பளம். மாப்பிள்ளையின் சம்பளம் என்று எல்லாம் சேமிப்பாக இருக்கு.

கூட தமிழ் மாறனின் பெண் சிந்தியா படிக்கும் பள்ளியிலேயே தன் பேத்திகளும் படிப்பதால் பீஸ் தமிழ் தன் மகள் மகனுக்கு கட்டும் போது கூட சேர்த்து கட்டி விடுவான்.. அதனால் சம்பாதிப்பது அனைத்துமே சேமிப்பாக இருக்க.. அது மட்டும் லட்சுமிக்கு நிம்மதி.

அதனால் மகளை பார்க்க வந்தால், மனதில் அத்தனை இருந்துமே மாதுரியிடம் நல்ல மாதிரி தான் பேசி செல்வார்.

இதோ இப்போது கூட.. “ எத்தனை வேலை தான் நீயே பார்ப்ப மாதுரி. கொஞ்சம் போய் படுத்து எழு… அப்போ தான் ஈவினிங்க பங்கஷனுக்கு முகம் பளிச்சுன்னு இருக்கும்..” என்று சொல்பவர் பின் அவரே,….

“ஆனா நீ எப்படி இருந்தாலுமே அழகாக தான் இருப்ப… என் தமிழ் அதனால தானே விழுந்தான்.. ஆனாலும் எங்க தமிழுக்கு நீ தான் பொருத்தம்… வேறு ஒரு பெண்ணை தமிழ் கட்டி இருந்தால் அவன் பக்கத்தில் கொஞ்சம் கம்மியா தான் தெரிந்து இருப்பாள்…”

இதை லட்சுமி எப்படி சொன்னாரோ.. ஆனால் அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையே.. மாதுரிக்கு முப்பது வயது ஆகிறது..

ஆனால் இப்போதும் பார்ப்பதற்க்கு திருமணம் அன்று மணமேடையில் இருபது வயது பெண்ணாக எப்படி பார்த்தார்களோ… அதே போல தான் இப்போதும் மாதுரி இருக்கிறாள்..

ஒன்பது வயது பெண்ணிற்க்கு அம்மா என்று யாரும் சொல்ல மாட்டார்கள்… வெள்ளையும் இல்லாது கருப்பும் இல்லாது மாதுரி பொன்னிறத்தில் இருப்பாள் என்பதை விட மின்னுவாள் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

உயரத்தில் ஆகட்டும்… உடல் வடிவாகட்டும்.. ஏற குறைய என்று சொல்ல முடியாது மிக கச்சிதமான உடல் அமைப்பு… கூந்தல் நீண்டு அடர்த்தியாக… கோயில் சிலை போல தான் இருப்பாள்.. இன்றும் அப்படியே தான் இருக்கிறாள்.

மாதுரியின் அழகுக்கு குறையில்லாத தோற்றத்தில் தான் தமிழ் மாறனும் இருப்பான்… மாதுரியாவது திருமணம் ஆன போது எப்படி இருக்கிறாளோ.. இப்போதும் அப்படியே இருக்கிறாள்..

ஆனால் தமிழ் மாறன்.. திருமணத்தின் போது அவனுக்கு வயது இருபத்தியெழு… இப்போது முப்பத்தியெழு.. இருபத்தியெழு வயதில் அப்போது தான் சொந்தமாக தொழில் ஆரம்பித்து கொஞ்சமாக பணம் வர ஆரம்பித்த காலகட்டம் தான்… அதே போல உயரமாக தான் இருப்பான்.. உடல் அமைப்பும் சரியாக தான் இருக்கும்.. ஆனால் இப்போது பணம் கொடுக்கும் அந்த செழிப்பும் சேர்ந்து… ஒரு ஆளுமையான தோற்றத்தில் திருமணத்தில் பார்த்ததை விட இப்போது இன்னும் அழகாக இருக்க.. இந்த ஜோடிகளை இப்படி சொல்வதில் தப்பு இல்லை தான்.

லட்சுமி சரியாக தான் சொன்னார்.

ஆனால் மனதில் தமிழை விட தன் இரண்டு மாப்பிள்ளைகள் ஒரு வயது சிறியவர்கள் தான். ஆனால் பார்க்க அப்படியா தெரிகிறார்கள்…

அந்த கணினியின் முன் உட்கார்ந்தே வேலை பார்த்ததில் வயிறு முன்னுக்கு தள்ளி தொப்பையாக மாறியும்.. உடல் அசைவு இல்லாது ஒரே இடத்தில் அமர்ந்து இருந்ததால் ஊலை சதை போட்டும்…தமிழ் தன் முப்பத்தியெழு வயதில் முப்பது வயது போல இளமையாக தெரிகிறான் என்றால், விமலனும், வர்மனும் தங்களின் முப்பத்தியாறு வயதுல் நாற்பத்தி ஐந்து வயதாக காட்சி அளிக்கிறார்கள்.

சரி மாப்பிள்ளையை விடு.. தான் பெத்த இரண்டும்… ஆளுக்கு ஒரு பிரசவம் தான் பார்த்து இருக்குதுங்க. மாதுரியை விட மூத்தது நான்கு வயதும் சின்னது இரண்டு வயதும் தான் அதிகம்…

ஆனால் பார்க்க அப்படியா தெரியுதுங்க…. பதினைந்து இருபது வயது பெரியது போல இருக்குதுங்க..…

இங்கு வரும் போதும் போனில் பேசும் போது எல்லாம் தான் லட்சுமி மகளிடம் கத்தி கொண்டு இருப்பாள்..

“வாக்கிங் தான் போயேன்டி… பழம் சாப்பிடு கீரை சாப்பிடுங்க… அந்த பர்கரும் பீசாவையும் சாப்பிடுவதை தான் விட்டு ஒழியுங்களேன் என்று.. ஆனால் கேட்டால் தானே..

இதோ இப்போது கூட தன் பேச்சுக்கு ஒரு மெல்லிய சிரிப்பு…பின்.. “ பரவாயில்லை பெரியம்மா…” என்று சொல்லி விட்டு அத்தனை நீண்ட கூந்தல் பின் ஆட நடந்து செல்பவளையே பார்த்து கொண்டு இருந்த லட்சுமிக்கு.

இப்படி இருந்தா ஏன் தமிழ் இன்னும் இவள் பின்னாடி சுத்த மாட்டான்.. என்று நினைத்து ஒரு பெரும் மூச்சு விட்டு கொண்ட லட்சுமி…

தன் அண்ணி பாக்கிய லட்சுமியிடம்.. “ பரவாயில்லை அண்ணி… மாதுரி இந்த வீட்டுக்கு மூத்த மருமகளா வந்ததால் நல்ல மாதிரி குடும்பம் போகுது.” என்று சொன்னவர்.

பின்.. “உட்கார்ந்தே இருப்பது முதுகு வலிக்குது அண்ணி கொஞ்சம் பெண் ரூமுக்கு போய் படுத்து எழுந்து வரேன்…” என்று சொல்லி விட்டு பெரிய மகள் அறைக்கு வந்த லட்சுமி தன் இரு மகள்களுக்கும் பேசியில் அழைத்து…

“அந்த முகத்துக்கு ஏதேதோ செய்து கொள்வாங்களேன்.. அது எல்லாம் செய்துட்டே வீட்டுக்கு வாங்க… அதோடு குண்டா தெரிவது போல எல்லாம் புடவை கட்டிக்காதிங்க. ..” என்று சொன்னவர் பின்..

“ஆ முக்கியமா பெரிய பெரிய நகையா போட்டுக்காதிங்க டி.. அப்புறம் எனக்கு தங்கையா என்று தான் எல்லோரும் நினச்சிப்பாங்க…” என்று சொன்னார் தான்..

ஆனால் மூன்று மணியளவில் அனைவரும் ரெடியாகி வெளியில் வந்த சமயம்… கிருத்திகாவும் தீபிகாவும் என்ன தான் அம்மா சொன்னது போல தங்களை தயார் செய்து கொண்டு வந்தாலுமே… அது எல்லாம் விரலுக்கு இடையில் விழுந்த நீர் போல தான் ஆகி விட்டது..மாதுரியின் பக்கத்தில். ஆம் சின்ன சரிகை கரையிட்ட காஞ்சிப்புரம் பட்டுப்புடவையில், சிம்பிளான நகை என்றாலும் வைரத்திலான கம்பல் நெக்லஸ் மோதிரம் வளையல் அணிந்து கொண்டு.. பார்க்க இவளுக்கு தான் என்னவோ சடங்கு செய்வது போல இருந்தாள்.

ஆம் லட்சுமி மனதில் அப்படி தான் மாதுரியை பார்த்து மனதில் நினைத்து கொண்டது..

ஆனால் மாதுரியிடம்…. “ நல்லா இருக்கு மாதுரி.. எல்லாம் வைரமா…. தமிழ் வாங்கி கொடுத்ததா.. உனக்கே செய்தது போல கனகச்சிதமா இருக்கு..” என்று புகழ்ந்தவர்.

மகள்களிடம்.. “ ம் அவளுக்கு வந்த வாழ்வை பாரு. என்னவோ பிறந்ததில் இருந்தே வைரத்தை போட்டு வளர்ந்தது போல பூட்டிட்டு வந்து நிற்கிறா…. இந்த வீட்டு பெண்கள் கிட்ட வைரம் இல்லையே…. நாம மட்டும் போட்டுட்டு வந்தா… அவங்க மனசு கஷ்டப்படுமே என்பது எல்லாம் கிடையாது..ம் இது தான் அல்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடை பிடித்தது போல என்று சொல்லுவாங்க…. ஊரில் சானி தட்டிட்டு இருந்தவள் போலயா இருக்கா…” என்று எத்தனை தான் மனதில் நினைப்பது.. அதனால் மகள்களிடம் ஆத்தமாட்டாது சொல்ல..

தீபிகாவும் கிருத்திகாவும் உடனே அக்கம் பக்கம் பார்த்தவர்கள் தன் தாயை பார்த்து முறைத்து விட்டு….

“ம்மா அறிவு இருக்கா இல்லையா உனக்கு…? நீங்க பேசுறது தமிழ் அத்தான் காதுலேயோ.. இல்ல மாதுரி காதிலோயோ விழுந்தா அவ்வளவு தான்..” என்று எச்சரிக்கை செய்யும் மகளிடம்..

“என்ன டி இது அநியாயமா இருக்கு..? உன்னை மாதிரி தானே அவளும் இந்த வீட்டுக்கு வாழ வந்து இருக்கா.. அவளுக்கு இப்படி பயந்து போய் வாழுறிங்க..?” என்று லட்சுமி ஆதங்கத்துடன் கூறினார்.

“ம்மா என்னம்மா செய்யிறது…? இந்த வீட்டு செலவு மொத்தமும் தமிழ் அத்தான் தான் செய்யிறது… மூன்று மாதம் முன்னவே இந்த வீட்டு ஒரே பெண்… ப்ரியா வீடு கட்டி கிரகபிரவேசம் செய்தாளே … அதுக்கு பத்து லட்சம் அம்மா வீட்டு சார்பா எங்க மாமியார் செய்தாங்க… எல்லாம் தமிழ் அத்தான் பணம் தான்.. இதோ இன்னை செலவு எவ்வளவு தெரியுமா இருபது லட்சம்… நாங்க பத்து பைசா கொடுக்கல.. இதுவுமே தமிழ் அத்தான் பணம் தான்..

நீங்க பேசுனதை பெரிய அத்தானோ… மாதுரியோ கேட்டுட்டா பிரச்சனை ஆகும்.. குடும்பம் பிரியும்… குடும்பம் பிரிந்தா அவங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை… இன்னும் கேட்டால் லாபம் தான்… அவங்களுக்கு மட்டும் என்றால் முப்பது ஆயிரம் போதும்.. இங்கு மொத்தமா குடும்ப செலவா ஒரு லட்சம்..ஆகுது.. இன்னுமே அவங்க பெரிய அளவில் வந்துடுவாங்க.

ஆனா நாங்க…. கூட்டு குடும்பமா இருப்பதினாலே… எங்களுக்கு ஒத்த பைசா செலவு இல்ல. நாங்க ஆபிசுக்கு போய் வர செலவு மட்டும் தான்… அதனால தான் அடக்கி வாசிக்க வேண்டி இருக்கு.. நீங்களுமே கொஞ்சம் பார்த்து பேசுங்க ஆமாம்…”

லட்சுமிக்கும் நிலை தெரிந்தது தான். இருந்துமே மனது ஆதங்கம் பட தான் செய்தது.. தன் மகள்கள் இவளை எல்லாம் அனுசரித்து செல்ல வேண்டி உள்ளதே என்று…. என்ன செய்வது என்று ஒரு பெரும் மூச்சு விட்டு கொண்டு தான் குடும்பமாக ப்ரியாவின் மகள் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு சென்றனர்…

இனி இது போல மறைத்து எல்லாம் பேச தேவையில்லாது, இது வரை மனதில் பேசியதை எல்லாம் நேருக்கு நேர் மாதுரியிடம் பேச வேண்டிய காலம் வர போவதும் என்று தெரியாது மகளோடு சென்றார்…


 
Top