Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நீயென் புதினம்...4

  • Thread Author


அத்தியாயம்…4

ப்ரியாவின் மாமியார் வீட்டு உறவுகள் அனைவரும் தாய் மாமன் வீட்டு சீரை பார்த்து மூக்கின் மீது விரலை வைத்து கொண்டனர்… மூன்று மாதம் முன் தான் புது வீட்டு கிரக பிரவேசம் நடந்து முடிந்து இருந்தது…

அப்போதுமே பத்து சவரனுக்கு மேல் நகை அத்தனை வரிசை தட்டுக்கள்… அத்தனை பெரிய கரை வைத்த பட்டு புடவை என்று பார்த்து ப்ரியாவின் மாமியாரிடம்..

“சுகுனா நான் கூட ஸ்ரீ வச்சன் ஒரு பெண்ணை காதலிக்கிறான் அவளை தான் அவனுக்கு கல்யாணம் செய்து வைக்க போறோம் என்றதும்.. என்ன டா இது என்று தான் நினச்சேன் சுகுனா…

ஆனா பரவாயில்லை உன் மவன் புடிச்சாலும் புளிய கொம்பா தான் பிடிச்சி இருக்கான்…” என்று ப்ரியாவின் மாமியார் சுகுனாவின் ஒன்று விட்ட அக்கா முறையாகும் பெண்மணி.. தான் பார்த்து கூட்டி வந்த தன் வீட்டு மருமகளுக்கு எதையும் நிறைவாக செய்யாது ஏதோ கடமைக்கு என்று அவளின் தாய் வீடு செய்து விட்டு போகும் வயிற்று எரிச்சலில் தங்கையிடம் கூறினார்.

சுகுனாவுக்கும் தன் ஒன்று விட்ட அக்கா மனநிலை புரிந்து அன்றே கிரகபிரவேசம் முடிந்ததும் இரவு அனைவரையும் நிற்க வைத்து சுத்தி போட்டு விட்டார் தான்..

இன்றோ… அதற்க்கு மேல் வரிசை தட்டுக்கள் நகைகள் என்று அடுக்கி வைத்ததை சுகுனா மட்டும் அல்லாது உறவு முறைகள் அனைவரும் அதிசயத்து தான் போயினர்…

ப்ரியாவின் பெண்ணை மேடையில் அமர வைக்க தாய் மாமன் மனைவியாக மாதுரியை தான் அழைத்தார் சுகுனா.

“போம்மா உன் ராசியான கையினால என் பேத்திக்கு செய்..” என்று சொல்ல. மாதுரி தன் ஒரவத்தியை பார்த்தாள்.. அவர்களும் வருகிறார்களா என்று.. அவர்களும் தாய் மாமன் மனைவிகள் தானே என்று நினைத்து..

ஆனால் கிருத்திகாவும் .தீபிகாவும்.. “ நீயே செய் மாதுரி..” என்று விட மாதுரி தான் அனைத்தையும் முன் நின்று செய்தது.. செய்ய வைத்தனர் ப்ரியாவின் மாமியார் வீட்டவர்கள்.. அவர்களுக்கும் தெரியும் தானே இத்தனையும் யார் செய்தது என்று…

உறவு முறைகள் எல்லாம்.. . தமிழ் மாறனிடம்… “மஞ்சள் நீராட்டு விழாவுக்கே தாய் மாமன் இத்தனை செய்த நீங்க.. இன்னும் உங்க தங்கை மகளுக்கு கல்யாணம் என்று வந்தா நீங்க கொண்டு வரும் சீருக்காகவே மண்டபத்தை உங்க மாப்பிள்ளை பெருசா பார்க்கனும் போலவே…” என்று தமிழ் மாறனிடம் கூற.

அதற்க்கு தமிழ் மாறன் ஒன்றும் கூறவில்லை.. ஆனால் அங்கு வந்த ப்ரியா தான்.. “நாங்க ஏன் மண்டபம் பார்க்க போறோம்…” என்றதும்..

உறவு முறையில் ப்ரியாவுக்கு பெரிய மாமனார் முறை இருக்கும் ஒரு பெரியவர்.. “ என்னம்மா அது கூட உங்க அண்ணனே பார்த்து வைத்து விடுவார் என்று சொல்றியா நீ.. அப்போ நீ உன் பொண்ணை மட்டும் கூட்டிட்டு உன் அண்ணன் பார்த்து வைத்து இருக்கும் மண்டபத்துக்கு போயிடுவீயா..? நகை கூட கிரக பிரவேசத்துக்கும் இன்னைக்கு வந்ததை போட்டு கொடுத்தா போதும் போலயே…” என்று மேலும் கூறியவரிடம்…

ப்ரியா இன்னுமே… “என் அண்ணன் இதுக்கே இத்தனை சவரன் எடுத்து வந்து இருக்காங்க.. என் பொண்ணு கல்யாணத்துக்கு மாப்பிள்ளை வீடு கேட்ட மொத்த நகையுமே என் அண்ணனே போட்டுடாது.. நான் சொல்ல வந்தது இந்த நகை சீர் பத்தி எல்லாம் கிடையாது…

மண்டபம் என் அண்ணன் பார்க்காது.. என் பொண்ணு கல்யாணம் பண்ணும் போது என் அண்ணனே சொந்தமா கல்யாண , மண்டபமே கட்டி வைத்து இருக்கும் லேண்ணா…” என்று சொல்லும் தங்கையின் பேச்சுக்கு கூட தமிழ் மாறன் பதில் அளிக்கவில்லை.. ஒரு சின்ன சிரிப்பு அவ்வளவே…

ப்ரியாவுக்கு தான் தன் பெரிய அண்ணனை பற்றி தெரியுமே.. இந்த சிரிப்பே போதும் தன் அண்ணன் தனக்கு செய்து முடிக்க என்று..

“ண்ணா வாங்க ண்ணா சாப்பிடலாம்.. அண்ணியையும் கூட்டிட்டு வாங்க வந்ததுல இருந்து அவங்க தான் என் பொண்ணுக்கு எல்லாம் செய்தது.. ரொம்ப டையாடா தெரியுறாங்க..” என்று சொன்னாள் ப்ரியா..

மாதுரி நான் தான் எல்லாம் செய்வேன் என்று எல்லாம் நிற்கவில்லை. ப்ரியாவின் மாமியார் வீட்டவர்கள் தான் எல்லாத்துக்கும் முன் .. இவளை கொண்டு போய் மேடையில் நிற்க வைத்து.

“நீ செய். நீ செய்..” என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.. மாதுரிக்கோ என்னை விட்டு விடுங்கள்.. நான் எங்காவது ஒரு ஓரமா உட்கார்ந்து கொள்கிறேன் என்று தான் இருந்தது..

அதோடு இவர்களின் அதிகப்படியான இந்த கவனிப்பு மாதுரிக்கு ஒரு வித எரிச்சலை தான் தோற்று வித்தது…

தெரியும்.. இந்த அதிக படியான கவனிப்பு எல்லாம் எதற்க்காக என்று.. இதோ தன் அம்மா வீட்டவர்களையும் தான் ப்ரியா அழைத்து இருக்கிறார்கள்.. என்னை கவனிப்பது சரி.. அவர்களையும் அத்தனை கவனிப்பு.. என் அம்மா வீட்டு மனுஷாளை கவனித்தால் நான் உச்சி குளிர்ந்து விடுவேன் என்று நினைத்து விட்டார்கள் போல.

இவர்களின் செயல்களை பார்த்து மாதுரிக்கு எப்போதுடா இங்கு இருந்து போவோம் என்று தான் நினைத்து கொண்டு இருந்தாள்…

அப்போது தான் மேடைக்கு வந்த ப்ரியா.. “அண்ணி நீங்க போய் அண்ணன் கூட சாப்பிடுங்க ண்ணி…” என்றதும்..

“ம் சரிங்க.” என்று சொன்னவள் மேடையில் இருந்தே தன் மகள் சிந்தியா எங்கு என்று பார்த்தாள் கணவன் பக்கத்தில் ஷரத் மட்டும் இருப்பதை பார்த்து விட்டு….

ப்ரியா மாதுரியின் தேடலை சரியாக கணித்தவள்… “சிந்தியாவையா அண்ணி தேடுறிங்க… அவளை என் மகன் தான் சாப்பிட அழைத்து கொண்டு போய் இருக்கான் அண்ணி…” என்று சொன்னவள் அதோடு விட்டு இருந்து இருந்தால் பரவாயில்லை.

கூடுதல் தகவலாக.. “வந்ததில் இருந்து வைபவ் சிந்தியாவின் கையை பிடித்தது விடல அண்ணி… அங்கு பாருங்களேன்.. இரண்டும் ஒரே கலரில் ட்ரஸ் போட்டுட்டு இருக்குறதை… பேசி வைத்து போட்டுட்டு இருக்குமோ..” என்றும் சொல்ல.

மாதுரிக்கு கோபத்தில் ப்ரியாவை அடித்தால் என்ன என்று தான் தோன்றியது.. இது என்ன பேச்சு சின்ன பசங்களை வைத்து… சிந்தியாவுக்கு ஒன்பது.. அவள் மகனுக்கு பதினொரு வயது.. சின்ன குழந்தைகள்… விளையாடிட்டு இருக்கும் பிள்ளைகளை வைத்து சீ..

இதுல பேசிட்டு ட்ரஸ் ஒரே கலரில் போட்டு இருப்பாங்கலா… இன்று சிந்தியாவுக்கு போடுவதாக இருந்த ட்ரஸ் வேறு.. அது போடும் போதே… அதுல இருந்த கல் குத்துவது போல் இருக்கு என்று சொன்னவள் கிளம்பும் சமயம்..

“ம்மா இது வேண்டவே வேண்டாம்.. கழட்டுங்க… என்னால அங்கு இதை போட்டுட்டு விளையாட முடியாது..” என்று சொல்ல..

இங்கு வரும் அவசரத்தில் மாதுரியே கையில் கிடைத்த ட்ரஸை போட்டுட்டு கூட்டிட்டு வந்தது..என்று கடுப்புடன் நினைத்து கொண்ட மாதுரி..

இங்கு விசேஷம் நடக்குது… இங்கு வைத்து இதை பற்றி பேச வேண்டாம். ஆனால் இனி இது போல பேசினா… கண்டிப்பா சொல்லி விட வேண்டும்.. குழந்தைகளை வைத்து இப்படி பேச வேண்டாம் என்று..

பாவம் மாதுரிக்கு தெரியவில்லை.. இனி அவர்கள் இது போல பேச மாட்டார்கள் என்பதும்.. இனி இன்று போல எரிச்சலுடன் இவர்களின் இந்த அதிகப்படியான கவனிப்பை சகித்து கொண்டு இருக்கும் தேவையும் தனக்கு இல்லை என்பதும்..

மாதுரி மேடை விட்டு இறங்கி கணவன் அருகில் வந்தவள்..

“சாப்பிடலாமா..?” என்று அழைக்க தமிழ் மாறனும் மனைவி அழைக்கவும் சட்டென்று எழுந்து கொண்டவன் ஷரத்தின் கை பிடித்து மனைவியுடன் சாப்பிடும் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டான்..

அதை பார்த்த ஒரு சில பெண்மணிகள்… “ தமிழுக்கு மனைவி சொன்னா போதும் தட்டாது செய்து விடுவான்… பாரு பாரு இப்போவும் புது ஜோடி போல அத்தனை பாந்தமா பேசிட்டு போறதை..” என்று இவர்களின் ஜோடியை பார்த்து புகழ்ந்து பேசினார்கள்..

அதில் ஒரு சிலர்.. “தமிழ் மனைவிக்கு அத்தனை மதிப்பும் மரியாதையும் கொடுப்பதினால் தான்.. அவன் மனைவிக்கு இவங்க எல்லாம் இத்தனை முக்கியத்துவம் கொடுக்குறாங்க.. இல்லேன்னா செய்யும் அண்ணன் செய்யும் மகன் மட்டும் கவனித்தால் போதும் என்று விட்டு விட மாட்டாங்க…”

மனிதர்களின் மனநிலையை கணித்து சரியாக தான் அவர்கள் பேசினார்கள்.. இதோ இப்போது கூட தமிழ் மாறனும் மாதுரியும் ஜோடியாக சாப்பிடும் அறையை நோக்கி செல்வதை பார்த்த பாக்கியலட்சுமி தன் மகளிடம்..

“நானும் இங்க இரண்டு சின்ன அண்ணனுங்களும் சாப்பிட போகும் போது உன் பெரிய அண்ணனை அத்தனை முறை சாப்பிட கூப்பிட்டேன் டி.. நீங்க போய் சாப்பிடுங்க நான் அப்புறம் சாப்பிடுறேன் .. அப்புறம் சாப்பிடுறேன் என்று என் கிட்ட சொன்னவன். இப்போது பொண்டாட்டி கூப்பிடவும் பார்த்தியா பின்னாடியே போறதை..” என்று சொன்ன அம்மாவின் பேச்சில்..

“ம்மா அது தான் தெரிந்த விசயம் ஆச்சே.. நீங்க என்ன புதுசா இப்போது தான் பார்ப்பது போல சொல்றது.. என்ன ஒன்னு அண்ணன் அண்ணியின் மயக்கத்தில் நம்ம எல்லோரையும் விட்டுடாது இருக்குதே… அதுவே மேலு…” என்று சொன்ன மகளிடம்..

“ ம் நீ சொல்றதும் சரி தான்..” என்றவர் பின் மெல்ல மகளை தன் அருகில் இன்னும் அழைத்தவர் பின் காதில்..

“போன வாரம் நீ பத்திரிக்கை வைக்க நம்ம வீட்டுக்கு வந்தியே… அன்னைக்கு காலையில் இருந்து உன் அண்ணி கொஞ்சம் முகத்தை தூக்கி வைச்சுட்டு இருந்தது போல தான்டி சுத்திட்டு இருந்தா…

உன் அண்ணன் காரனுமே மாது மாது என்று ஏலம் போடுறவன் வாயில் இருந்து ஒரு வாட்டி கூட அவன் வாயில் இருந்து மாது என்ற வார்த்தை வரல…” என்ற அன்னையின் பேச்சில்..

ப்ரியா… “அப்படியா…? அதிசயமா இருக்கு… அவங்களுக்குள் சண்டையா..?” என்று கேட்டவள் பின் அவளே.. “ இருக்காதே…” என்றும் சொன்னாள்..

பாக்கியலட்சுமியோ.. “சண்டையா என்று எனக்கு தெரியல. ஆனா அன்னைக்கு முன் நாள் தான் நீ என் கிட்ட உன் மவளுக்கு வரிசையில் வைக்க கேட்ட நகையை பத்தி உன் அண்ணன் கிட்ட சொல்லிட்டு இருந்தேன்.. அப்போ உன் அண்ணிக்காரி பக்கத்தில் தான் இருந்தா… அப்போவே உன் அண்ணிக்காரியின் மூஞ்சி ஒரு மாதிரி தான் டி ஆச்சு. எனக்கு என்னவோ அன்னைக்கு ராத்திரி இது பத்தி தான் உன் அண்ணன் கிட்ட இவள் பேசி இருப்பா என்று தோனுது.. அதை வைத்து உன் அண்ணன் எதுவோ சொல்லி இருக்கனும்..” என்று பாக்கியலட்சுமி தன் மகன் மருமகளை பற்றி சரியாக யூகித்து தான் சொன்னார். அவரின் வயதின் அனுபவம் அவரை சரியாக யூகிக்க வைத்தது…

ப்ரியா தான் அன்னையின் பேச்சில் அதிர்ந்து போய்.. “அம்மா என்னம்மா குண்டை தூக்கி போடுற…” என்று கேட்டவள்..

பின் அவளே.. “ ம்மா அப்படி எல்லாம் இருக்காது ம்மா. அண்ணி மட்டும் அப்படி சொல்லி இருந்தா அண்ணன் செய்து இருந்து இருக்காதே…” என்று சொன்னவளிடம்..

“எனக்கு சரியா தெரியலே டி.. ஆனா அதுவா தான் இருக்கும் என்று ஒரு யூகம் தான்.. நீயே பார்த்த தானே… உன் பொண்ணு சடங்குக்கு நகை எடுக்கும் போதும்.. புடவை எடுக்கும் போது கிட்ட வந்தா.. ஏதோ வந்தோம் என்று தானே கடைக்கே வந்தது…

ஆனா உன் பெரிய அண்ணனும்… இந்த சீர் செய்யும் பணத்தையாவது என் கிட்ட கொடுத்து வாங்க சொல்ல கூடாது.. எல்லாமே பொண்டாட்டி கையில் தான் கொடுக்குறது.

வீட்டு செலவுக்கு மொத்த பணமும் அவள் பேங் அக்கவுண்டில் தான் போடுறது.. நான் செலவுக்கு சொன்னா அப்படியே ஆன் லைனில் அனுப்பி விட்டு விடுவா…. எனக்கு என்னவோ ஒவ்வொரு முறையும் வீட்டு செலவுக்கு அவள் கிட்ட போய் நிற்கிறது ஒரு மாதிரி தான்டி இருக்கு…” என்ற அன்னையின் பேச்சும் அவர் ஆதங்கமும் புரிந்தது தான்.

ஆனால் என்ன செய்ய முடியும். அனைத்தையும் பார்த்து கொள்வது பெரிய அண்ணன் தான்.. அண்ணனுக்கு அண்ணியின் மீது இருக்கும் காதல் புரிந்து.. இதை பற்றி பேசினால், கண்டிப்பாக உள்ளதும் கெட்டு விடுமோ என்ற பயமும்… இல்லை என்றால் மாதுரி தன் அண்ணி ஆவதற்க்கு முன்.. இவளை எல்லாம் நான் சட்டை செய்து இருக்கிறேனா.. ஆனால் அண்ணன் அவளை தான் கவனித்து இருக்கிறான்…

அதனால் தானே தன்னை விட இரண்டு வயது சின்னவளாக இருந்தாலுமே அண்ணி அண்ணி என்று அழைப்பது…

அதை தான் தன் அன்னையிடமும் ப்ரியா சொன்னாள்..

“ம்மா இப்போ நம்ம வீட்டுக்கு எல்லாமே செய்வது உங்க பெரிய மகன் தான்… இதோ இப்போ என் மாமியார் வீட்டில் என் அம்மா வீட்டில் செய்வதை பார்த்து எனக்கு அத்தனை மதிப்பு…

இதை வைத்து வீட்டு வேலைகள் கூட நான் அவ்வளவா செய்யிறது இல்ல.என் ஒரவத்தி தான் வீட்டு வேலை எல்லாம் செய்யிறது… இதை எல்லாம் நினச்சி கொஞ்சம் நாம அனுசரித்து தான் போய் ஆக வேண்டும்..” என்று இங்கு மேடையில் ப்ரியாவும் பாக்கியலட்சுமியும் மெல்லிய குரலில் ரகசியம் பேசி கொண்டு இருந்தனர்..

இதை மேடையின் கீழ் இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்த தீபிகா கிருத்திகா அவர்களின் அம்மா லட்சுமி மூன்று பேரும் கவனித்து கொண்டு தான் இருந்தனர்.

இதை பார்த்து கொண்டு இருந்த லட்சுமி தான் தன் மகள்களிடம்… “ என்ன டி உன் மாமியாரும் உன் நாத்தனாரும் ரகசிய பேசுறாங்க…?” என்று கேட்டதற்க்கு.

தீபிகா.. “ எல்லாம் எங்க வீட்டின் பெரிய மகன் தமிழ் அத்தான் பத்தி தான் ம்மா இருக்கும்… இன்னும் அத்தான் கிட்ட இருந்து எத்தனை எத்தனை சுரண்டலாம் என்று திட்டம் போட்டுட்டு இருப்பாங்க” என்று சொன்னாள்…

மீண்டும் லட்சுமி… “அது என்ன டி எல்லாத்துக்குமே மாதுரி மாதுரி என்று உன் நாத்தனார் மாமியார் வீட்டு ஆளுங்க அவளை முன் நிறுத்துறாங்க.. நீங்களுமே தானே டி இந்த வீட்டு மருமகளுங்க. இது எல்லாம் பார்க்கும் போது எனக்கு வயித்து எரிச்சல இருக்கு டி…” என்று அங்கலாய்த்து ஓனார் லட்சுமி தன் மகள்களிடம்..

கிருத்திகா தான்.. “ ம்மா இந்த கவனிப்பு எல்லாம் இவங்க செய்யும் இந்த சீருக்கு தான் ம்மா.. என்னை பொறுத்த வரை இந்த கவனிப்பும் வேண்டாம் எங்க தலையில் கை வைக்கவும் வேண்டாம்… இந்த மரியாதை முதல் கவனிப்பு எல்லாம் மாதுரிக்கே போய் சேரட்டும் நாம நம்ம என்ன செய்யிறது என்று பார்போம்.. “ என்றவள் பின்.

“ம்மா வண்டலூர் கிட்ட இரண்டு கிரவுண்ட் இடம் வந்து இருக்கும்மா. அந்த இடத்தை நானும் தீபிகாவும் சேர்ந்து வாங்க போறோம்..” என்று சொன்னதும் லட்சுமி இது வரை பேசியதை மறந்தவளாக.

“அப்படியா ரொம்ப சந்தோஷம் டி.” என்று சொன்னவர் பின்..

“இப்போ அங்கு அந்த கேளம்பாக்கம் பஸ்ஸ்டாண்ட் வந்ததும் அங்கு இருக்க இடம் மதிப்பு எல்லாம் கன்னா பின்னா என்று ஏறிடுச்சி என்று சொன்னாங்க.. நீ என்னன்னா இரண்டு கிரவுண்ட் சொல்ற… பேங்க லோன் அதிகம் எல்லாம் வாங்கி அகல கால் வைக்காதடி…”

மகள்கள் அத்தனை பெரிய சொத்து வாங்குவதில் மகிழ்ச்சி என்றாலும், கடன் நிறைய வாங்கி விட கூடாதே என்ற பயமும் லட்சுமிக்கு இருந்தது..

உடனே தீபிகா.. “ ம்மா கடன் எல்லாம் இல்ல.. நாங்க எங்க சேவிங்கஸ் வைத்து தான் வாங்க போறோம்..” என்று மகள் சொன்னதுமே லட்சுமியின் முகம் முன்பை விட இன்னுமே மகிழ்ச்சியில் விரிந்து போயின.

“என்ன டி சொல்ற எத்தனை லட்சம் டி..?” என்று கேட்டதும் தீபிகா அக்கம் பக்கம் பார்த்து விட்டு மெல்லிய குரலில்..

“லட்சம் இல்லேம்மா கோடி.” என்று சொன்னவள் பின்..

“இப்போ எங்க கவலை எல்லாம் பணத்தை பத்தி இல்லேம்மா… இதை எப்படி வீட்டில் சொல்றது என்று தான் எங்க கவலையே… அடுத்த வாரம் நல்ல நாள் ஜோதிடரை பார்த்து நாள் கூட பார்த்துட்டோம்… ஆனா இன்னும் வீட்டில் பேசல.. ” என்ற மகளை பார்த்து.

“இது என்ன டி அதிசயமா இருக்கு.. நீங்க வேலைக்கு போய் சம்பாதித்திக்கிறிங்க.. அதுல சேர்த்து வைத்து சொத்து வாங்குறிங்க. இதுல சொல்ல என்ன பயம்.” என்ற லட்சுமியின் கையை இரண்டு பக்கம் அமர்ந்து இருந்த தீபிகாவும் கிருத்திகாவும் பிடித்து கொண்டு.

“ம்மா இத்தனை சீக்கிரம் இத்தனை சொத்து நாங்க வாங்க காரணம்.. எங்க சம்பளமும் சரி… எங்க கணவன் மார்களின் சம்பளமும் சரி… மொத்தமா சேமித்ததினால் தான் எங்களால் வாங்க முடிந்தது.. மொத்தமா சேர்க்க. எல்லாம் செலவும் தமிழ் அத்தான் தான் செய்யிறார்.. இன்னும் அவர் ஒரு சொத்து கூட தனக்கு என்று வாங்கல… இது வரை அத்தை எங்களுக்கு தான் சப்போர்ட் செய்யிறாங்க… காரணம் நாங்க மாத சம்பளக்காரனுங்க தமிழ் அத்தான் பிசினஸ் செய்து நல்லா சம்பாதிக்கிறாங்க என்பது தான்.. இப்போ நாங்க இத்தனை பெரிய சொத்து வாங்குவதை பார்த்துட்டு அத்தை யோசிக்க ஆரம்பித்து விட்டா… அது தான் யோசனையா இருக்கு..” என்று பெரிய மகள் சொல்ல சின்ன மகளோ.

“நாங்க இரண்டு பேரும் முதல் சொத்தே இது போல இடம் வாங்கி வீடு கட்ட தான் ஆசை.. அதுக்கு உண்டான பணம் இருந்தும் நாங்க ப்ளாட் வாங்க காரணமே.. இதுக்கு தான்ம்மா.. ப்ரியா வீட்டை பார்த்துட்டு என்ன தான் ப்ளாட் என்று மாடலா இருந்தாலுமே சொந்த இடத்தின் மதிப்பே தனி தானேம்மா….” என்ற மகள்களின் பேச்சுக்களை உள்வாங்கிய லட்சுமி..

“நீங்க ஏன் உங்க கிட்ட இருக்கும் பணத்தை வைத்து வாங்குவதா சொல்ற… நீங்களும் உங்க புருஷன் மார்களும் நாளு பேருமே லோன் போட்டு வாங்கிறதா சொல்லுங்க. பத்தாதுக்கு உங்க நகைகளையுமே அடகு வெச்சி தான் வாங்குறதா சொல்லு.. கொஞ்ச நாளுக்கு உங்க இரண்டு பேரு நகைகளை என் கிட்ட கொடுங்க.. நான் என் லாக்கரில் வைத்து கொள்கிறேன்…” என்று சொன்ன அம்மாவின் இரு கன்னத்தையும் இரு மகள்களும் முத்தம் வைத்தனர்.

இதை எல்லாம் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்த மாதுரியின் தாய் வீட்டவர்களான அவளின் அண்ணங்கள் அண்ணிகள் அவளின் தங்கை தங்கை கணவனுமே கேட்டு கொண்டு தான் இருந்தனர்..

பாவம் இதை பேசும் போது அக்கம் பக்கம் பார்த்த தீபிகாவும் கிருத்திகாவும் பின்னே பாக்க மறந்து விட்டனர்..
 
Well-known member
Joined
May 12, 2024
Messages
246
Unmai than… intha madhippu mariyathai ellam panathukku than… inime sari Maran purinjikkanum
 
Top