Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

பனியும் பத்திக்குமே....16

  • Thread Author
அத்தியாயம்….16

வசீகரிக்கோ அக்காவுக்கு என்ன பெரிய பிரச்சனை இருந்து விட போகிறது என்றும்.. தன் தலை தீபாவளிக்கு அன்று கூட தன் அண்ணன் வீட்டில் இல்லாதது எல்லாம் பெரிய விசயமாக அவள் எடுத்து கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. அவன் வீட்டில் இருந்து குடும்பத்தோடு அனுசரித்து இருந்தால் தான் அவள் அதிசயத்து போய் இருப்பாள்…

அதனால் எப்போதும் தாய் வீடு என்பது அவளுக்கு அந்த அளவுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது கிடையாது.. ஆனால் இன்று அவளுக்கு கொடுத்தது.. அதற்க்கு காரணம் தன் அன்னை முதன் முறையாக தன்னை அக்காவோடு இணைத்து பேசாததோடு தன்னிடம் நல்ல மாதிரியாக பேசியதாக கூட இருக்கலாம்..

இந்த அனைத்து காரணங்களையும் விட அவளுக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்தது தன் அறையில் தன் கணவன் இருப்பது…

கணவன் அம்மாவோடு படுத்து கொள் என்று சொன்ன போது சரி என்றாலும், அவளையும் மீறி… திருமணம் முடிந்ததில் இருந்து கணவனோடு தான் படுத்து உறங்குகிறாள்..

ஆனால் அது எல்லாம் அவன் வீட்டில் தானே…. அவன் அறையில் இங்கு தன் அறையில் கணவனோடு.. தன் அறையில் இருந்து கதை பேச அங்கு பல விசயங்கள் அவளுக்கு இருந்தது.. அதை எல்லாம் சொல்ல நினைத்தாள்…

அது முடியாது போல் இந்த நேரம் அவன் தூங்கி இருப்பான் என்று நினைத்து தான் வசீ தன் அறைக்கு சென்றாள்.. ஆனால் பாவம் தன் படுக்கையில் கூட இல்லாது அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு தன் கை பேசியை பார்த்து கொண்டு இருந்தவனை பார்த்த பெண்ணவளின் மனது துள்ளியது என்று தான் சொல்ல வேண்டும்..

இருந்தாலும்.. “ என்ன இன்னும் தூங்கலையா….?” என்று கேட்டு கொண்டே தான் .. தன் மீது இருந்த துப்பட்டாவை எடுத்து கீழே போட்டது.

ஜெயேந்திரனின் பார்வையோ மனைவியின் கேள்விக்கு பதில் சொல்லாது அவனின் பார்வை அவன் சீரா தூக்கி போட்ட துப்பட்டா இடம் பெற்று இருந்த இடத்தில் நிலைக்க.

அதை பார்த்தவளின் பார்வை மெல்ல… “ என்னவோ இப்போ தான் புதுசா…” என்று முனு முனுக்க…

இது வரை அமர்ந்து கொண்டு இருந்தவன் மனைவியின் மீது பார்வை செலுத்தி கொண்டே அவளை நோக்கி வந்தவனின் காதில் அவளின் முனு முனுப்பு நன்றாகவே காதில் விழ…

“முழுசா பார்த்தது தான்.. ஆனாலுமே அறிந்தும் அறியாமலும் தெரிந்தும், தெரியாமலும் பார்ப்பதில் கூட ஒரு கிக் இருக்க தான் செய்யுது…” என்று சொன்னவன் மனைவியின் மற்ற உடைகளை கலையும் வேலையை மனைவிக்கு தராது தனதாக்கி கொண்டவனின் தலை தீபாவளி கொண்டாட்டமாக தான் ஆரம்பம் ஆகியது..

அந்த ஆரம்பத்தின் தொடர்ச்சியாக காலை எழுந்து புது மாப்பிள்ளைக்கு வெள்ளி கிண்ணத்தில் எண்ணைய் வைத்து அதில் மோதிரத்தை போட்டு என்று சுபத்ரா சரியாக செய்ய..

ஜெயேந்திரன் தான் மனைவியை பார்த்து… “ இது எல்லாம் என்ன சீரா..?” என்று கேட்டது..

“ இது எல்லாம் முறைங்க.. நான் வேண்டாம் என்று சொன்னா கேட்க மாட்டாங்க..” என்று சொன்னவள் பின் அவளே..

“ இப்போ தான் என் அம்மா என் கிட்ட குறையா பேசாமல் நல்ல மாதிரி பேசுறாங்க..இப்போ நான் இது எல்லாம் வேண்டாம் என்று சொன்னா ஏதாவது சொல்லிடுவாங்க.. அதுக்கு இன்னைக்கு ஒரு நாள் நீங்க அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க எனக்காக..” என்ற மனைவியை பார்த்து புன்னகைத்த ஜெயெந்திரன்…

“கல்யாணத்துக்கு நீங்க போட்ட நகையே நான் போடுறது இல்ல… அது தான்…” என்றவனிடம்..

“போடலேன்னா பரவாயில்லை… இதை அப்படியே வைக்கலாம்…. நீங்க தான் நல்ல இன்வெஸ்ட்டர் ஆச்சே… நாளை பின்ன நம்ம குழந்தைகளுக்கு உதவும்…” என்று சொன்னவளின் பேச்சை ஆரம்பித்தில் ஏனோ என்று மனைவின் கை பிடித்து கொண்டு கேட்டு கொண்டு இருந்தவன்.. பேச்சில் முடிவாக மனைவி சொன்ன குழந்தையின் பேச்சில்.

சட்டென்று நிமிர்ந்து மனைவியின் முகத்தை பார்த்தான்.. பின் ஏதோ மனதினில் கணக்கிட்டவன்..

“ஏய்.. நீ சொல்லவே இல்ல…. டெஸ்ட் எடுத்து பார்த்துட்டியா…. ?” என்று முதலில் மகிழ்ந்தாலும். ஏன் தன்னிடம் சொல்லவே இல்லையே…. என்ற ஆதங்கமும் ஒரு கணவனாக மனதில் வந்தது..

வசீகரி கணவன் பேச்சு முதலில் புரியாது பின் புரிந்த பின் தான் அவளுமே தன் மாத கணக்கை விரல் எண்ணி கணக்கு இட்டது… அதை பார்த்த பின் தான் ஜெயேந்திரனுக்குமே பெண்ணவளுக்கும் தெரியவில்லை என்று நினைத்து எண்ணிக் கொண்டு இருந்த கை விரலை பிடித்து கொண்டு அவன் எண்ணாது அவளின் மாதந்திர தேதியை குறிப்பிட்டு..

“ ஐம்பது நாளுக்கும் மேல ஆகிடுச்சி சீரா…” என்றவனின் கணக்கிடலில் மனைவியோ… “ நான் எப்படி மறந்தேன்…” என்று அவள் தன்னை குறைப்பட்டு கொள்ள..

கணவனுமே. “ நானும் தான் மறந்தேன்… இனி அதை பத்தி பேச வேண்டாம்… இந்த தீபாவளி நமக்கு இன்னுமே விசேஷத்தை கூட்டி கொடுத்ததை கொண்டாடுவோம்..” என்று சொன்னவன் அன்று மனைவியின் தற் போதைய நிலையை கணக்கில் கொண்டு…

மனைவியின் மனநிலையோடு மட்டும் கொண்டாடி தீர்த்தானே தவிர.. உடல் ரீதியாக அவளை அணுகவில்லை.. மனைவி கேள்வியாக பார்த்ததில்

“ இது போல நேரத்தில் எப்படி நடந்துக்கனும் என்று எனக்கு முன் அனுபவம் இல்ல டி….” என்று சொன்ன கணவனை முறைத்த வசீ…

“அப்போ எனக்கு இருக்கா….” என்று கோபமாக கேட்ட மனைவியை நெஞ்சில் சாய்த்து கொண்டு …

“அது தான் நான் சொல்றேன் நாளைக்கு செக் பண்ணிட்டு ஒரு டாக்டர் கிட்டேயும் காண்பிச்சிட்டு அவங்க என்ன சொல்றாங்க.. என்று கேட்டுட்டு அப்புறம் தான்…” என்று சொன்னவனின் பேச்சில் தலை நிமிர்ந்து அவனை பார்த்தவன்..

“நான் ஒன்னும் அதுக்கு அலையல..” என்று கோபமாக சொன்னவள் மீண்டும் அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள..

அதில் கணவன் சத்தம் இடாது சிரித்தாலுமே, அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு இருந்தவளுக்கு அவன் உடல் குலுங்கலில் அவன் சிரிக்கிறான் என்று தெரிய.. இந்த முறை உண்மையில் கோபமாக அவனை முறைத்து விலக போக பார்த்தவளை அணைத்து கொண்ட ஜெய்.

“நான் அலையிறேன் போதுமா….?” என்று சொன்னவன்..

பின் பேசியது அனைத்துமே அவர்களின் வர போகும் வாரிசை பற்றிய பேச்சுக்கள் தான்…

பின் குளித்து முடித்து விட்டு வெளியில் வந்த தம்பதியர்களை பார்த்து சுபத்ராவும் பார்த்திபனும் சாப்பிட வாங்க…” என்று அழைக்க..

ஜெயேந்திரன் தான்… “ நீங்க சாப்பிடுங்க.. நான் கொஞ்ச நேரத்தில் வந்துடுறேன் என்று சொல்லி விட்டு மெடிக்கல் ஸ்டோருக்கு சென்று விட்டு வர..

சுபத்ராவோ இங்கு… வசீயிடம்… “ மாப்பிள்ளை எங்கு போய் இருக்கார் வசீ….?” என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று முழித்து கொண்டு இருக்க.. பார்த்திபன் தான்…

“நீ முதல்ல செய்ததை டையினிங் டேபிலில் எடுத்து வை..” என்று அவளை காப்பற்றியது.. ஜெயெந்திரனும் வெளியில் சென்ற வேகத்தில் வீடு வந்து விட..

கணவன் வந்ததுமே அறைக்கு சென்று விட. அவனை தொடர்ந்தார் போல மனைவியும் பின் தொடர்ந்து போக.. இங்கு கூடத்தில் இருந்த சுபத்ராவும் பார்த்திபனும் தான் என்ன இது என்பது போல் பார்த்து நின்றனர்..

ஆனால் வேகமாக அறைக்கு சென்ற வசீ மெல்ல தயங்கி கூடத்திற்க்கு வந்தவள்..

தன் அன்னையிடம்… “ டேட் தள்ளி இருந்ததும்மா. அது தான் செக் செய்ய கிட் வாங்க போனார்…” அன்னை
முன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல.

சுபத்ராவும் புரிந்து கொண்டவராக… ஒரு அன்னையாக மீண்டுமே தான் பாட்டியாகும் சந்தோஷத்தில் அவர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி…

“சந்தோஷம் வசீ எத்தனை நாள்…?” என்று கேட்டு தெரிந்து கொண்டார்.. பார்த்திபன் மகளிடம் ஒன்றும் கேட்காது போனாலும் மனதில் ஒரு நிறைவு தான் அவருக்கு..

பெண்ணை கட்டி கொடுக்கும் போது மாப்பிள்ளையின் வசதியை வைத்து மனதில் ஒரு சிறு சுணக்கம் இருக்க தான் செய்தது… ஆனால் அந்த சிறு சுணக்கம்… கூட சென்ற வாரம் தன் கையிருப்பை வைத்து ஒரு இடம் வாங்க சென்ற இடத்தில் அந்த இடத்தின் நில வரம் பற்றி விசாரிக்கும் போது தான்… அந்த இடத்தில் தன் மாப்பிள்ளை மட்டும் அல்லாது அவரின் இரண்டு அண்ணன்கள் கூட வாங்கி இருப்பது அவருக்கு தெரியவந்தது… அதுவும் ஆளுக்கு ஒரு கிரவுண்ட் என்று கேள்வி பட்டத்தில் இன்றைய அதன் மதிப்பு ஒரு கோடி என்பதும்.. ஐந்து வருடத்திற்க்கு முன்பு அதை நாற்பது லட்சத்திற்க்கு வாங்கியதும் என்றும் தெரிந்து கொண்டவர்..

அந்த இடத்தில் ஆயிரம் சதுர அடி வாங்க முன் பணம் மட்டும் கொடுத்து வந்து இருந்தார்… ஆனால் அதை பற்றி இன்னும் மனைவியிடம் சொல்லவில்லை..

காரணம் மனைவிக்கு இடம் வாங்கி போடுவதில் எல்லாம் அத்தனை ஈடுபாடு கிடையாது.. நகையாக் வாங்கி கொண்டால், எங்காவது போட்டு செல்லலாம்… அது தானே நாம் வாழும் வாழ்க்கைக்கு பெருமை என்பாள்..

இப்போது எல்லாம் மனைவி அதிக பணம் செலவிடுகிறாளோ என்ற பயமும் அவருக்கு.. கூடவே தான் ஓய்வு பெறும் சமயம் இது.. வரும் பணத்தை ஒரு இடத்தில் போட தான் அவருக்கும் விருப்பமும்.. அதன் தொட்டு தான் முதலில் இருக்கும் பணத்தில் இடம் வாங்கி விடலாம்..

பின் அதே போல் வரும் பணத்தையும் நிலத்தில் போடலாம்… சாப்பிட்ட பின் சின்ன மாப்பிள்ளையிடம் அதை பற்றி பேச வேண்டும் என்றும் நினைத்து கொண்டு இருந்தார்..

ஆனால் இப்போது குழந்தை வந்த சமயத்தை இடம் நிலம் பணம் என்று பேசி மாப்பிள்ளையின் நேரத்தை தனதாக்கி கொள்ள அவர் விரும்பவில்லை…

மகளின் தலை தடவி சந்தோஷம் என்றவர்.. அப்போது தான் தன் வீட்டவர்களிடம் இந்த சந்தோஷமான விசயத்தை சொல்லி விட்டு அழைப்பில் இருந்தவர்கள் தன் மனைவியோடு பேச வேண்டும் என்று சொன்னதினால் தன் கை பேசியை வசீயிடம் கொடுக்க வந்த மாப்பிள்ளையிடம் தன் வாழ்த்தையும் தெரிவித்தார்….

பின் தன் கணவனின் கை பேசியில் வசீ தன் மாமியாரிடமும் தன் ஒரவத்தி மாமா என்று மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டு இருந்த தன் மகளை தான் அவளின் பெற்றவர்கள் பார்த்து கொண்டு இருந்தனர்.

அப்போது அவர்கள் வசீ தங்களிடம் கூட இப்படி அவள் பேசியது இல்லை என்று தான் இருவரும் ஒன்று போல் நினைத்தும் கொண்டது… அதே போல் தன் பெரிய மகள் இது போல் தன் புகுந்த வீட்டவர்களோடு இணக்கமாக என்ன.. பெயரிளவில் பேச்சை கூட வைத்து கொண்டது இல்லை என்பதையும் தான்…

பின் அன்றைய அவர்களின் தலை தீபாவளி இரட்டிப்பு சந்தோஷமாகி விட… முதலில் இனிப்போடு தொடங்கிய காலை உணவு மனதும் வயிறும் நிறைந்து நல்லப்படியாக தான் நிறைவு பெற்றது..

ஆனால் சாப்பிட்ட பின்… சுபத்ரா மகளிடம்… “ முதல்ல டாக்டர் கிட்டேயும் செக்கப் செய்துடலாம்.. உன் அக்கா கீர்த்தனாவுக்கு டெலிவரி பார்த்த டாக்டர் கிட்டேயே அப்பாயிட்மெண்ட் வாங்கிடுறேன்…” என்று மகளிடம் பேசிக் கொண்டே தன் கை பேசியை எடுத்த சுபத்ரா.

தனக்கு தானே பேசிக் கொள்வது போல்.. “ இன்னைக்கு தீபாவளி ரிசப்ஷனில் யாராவது இருக்கிறாங்கலேன்னே தெரியலையே…” என்று சொல்லி கொண்டே அந்த் மருத்துவமனையின் எண்ணை தன் கை பேசியில் எடுக்கும் போதே ஜெயேந்திரன்..

“நான் எங்க அண்ணி செக்கப்புக்கு போன ஆஸ்பிட்டலிலேயே அப்பாயிட்மெண்ட் வாங்கிட்டேன் அத்தை….” என்று சொன்னான்…

தொட்டில் பழக்கம் விடாது போல சுபத்ரா உடனே… “ உங்க அண்ணிக்கு பார்த்ததா….?” என்று ஒரு மாதிரியாக இழுத்து நிறுத்திய சுபத்ரா பின்..

“ கீர்த்தனாவுக்கு பார்த்த ஆஸ்பிட்டல் எல்லாம் வசதியும் இருக்கு ஆஸிட்டல் மாப்பிள்ளை….” என்று சொன்ன பேச்சில் ஜெயேந்திரனுக்கு சுர் என்று கோபம் எழுந்தது தான்..

ஆனால் இன்றைய இந்த மகிழ்ச்சி கெட கூடாது என்று… வந்த கோபத்தை அடக்கி கொண்டு…. “ எங்க அண்ணிக்கு பார்த்த ஆஸ்பிட்டலில் கூட எல்லா வசதியும் இருக்கு அத்தை….” என்று சொன்னவனின் பேச்சில் பார்த்திபம் இடை புகுந்து தன் மனைவியிடம்..

“அது தான் மாப்பிள்ளை சொல்றாருகே சுபா விடு எல்லாம் அவர் பார்த்துப்பார்…” என்று கணவன் சொன்ன பின் கூட சுபத்ரா விடாது அவரிடம்..

“அது இல்லேங்க எப்படி இருந்தாலும் நாம தானே டெலிவரி பார்க்கனும்..” என்று சொல்ல.

இப்போது ஜெயேந்திரன்.. “ அத்தை நான் என் மனைவிக்கு எங்க வீட்டு கிட்ட இருக்கும் ஆஸ்பிட்டலில் தான் மந்த்லி செக்கப் பண்ண போறேன்…. “ அவ்வளவு தான் என்று தன் பேச்சை முடித்து கொள்ள அதற்க்கு மேல் சுபத்ராவினால் எதுவும் பேச முடியவில்லை.

அதோடு அன்று முதல் பிரச்சனையாக தன் மகன் கொண்டு வந்த பிரச்சனையாக அவர்களின் வீட்டு வாசலில் அவரின் மகன் ஸ்ரீ காந்த் ஒரு பெண்ணோடு வந்து நின்றவனை அதிர்வுடன் பார்த்தார்கள்..

பூ இல்லை மாலை இல்லை.. ஏன் அந்த பெண் கழுத்தில் தாலி கூட கிடையாது.. ஆனால் அந்த பெண்ணை தன் மகன் திருமணம் செய்து கொண்டான் என்பதை தன் மகன் மதம் மாறியதில் இருந்து புரிந்து கொள்ளும் படியானது..

ஆம் மதம் மாறி தான் திருமணம் செய்து கொண்டான் ஸ்ரீ காந்த்… அவனின் இந்த திருமணன் இன்று நடந்தது கிடையாது.. ஒரு வருடம் முன்பே ரிஸ்வானா என்ற அந்த பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்டு விட்டான்…

சினிமாவில் காண்பிப்பது போல் பதிவு திருமணம் செய்து கொண்ட பின் அவர் அவர் வீட்டில் இருந்து கொண்டனர்.. அதன் தொட்டு தான் ஸ்ரீ காந்த் வசீகரியின் திருமணத்தை ஜெய்யோடு சீக்கிரம் நடத்தி முடிக்கும் படி தன் அப்பா அம்மாவிடம் சொன்னதும்..

அவன் தங்கைக்கு அவர் அறியாது செய்ததில் இது தான் நல்லதே என்பது வேறு விசயம்… ரிஸ்வானாவுக்கும் தன் வீட்டில் சொல்ல அத்தனை பயம்..

“என் வாப்பா தான் எங்க மதத்திற்க்கு குருவா இருக்கார்.. நான் இப்படி திருமணம் செய்து கொண்டே என்று சொன்னால் என்னை வெட்டி போட்டு விடுவார்..” என்று ஸ்ரீ காந்திடம் பயந்து சொல்ல.

ஆனால் அவள் பயந்தது போல் எல்லாம் அவர்கள் செய்யவில்லை.. ரிஸ்வானா தன் காதல் மட்டும் சொல்லி இருந்தால் அவர்கள் என்ன செய்து இருப்பார்களோ… காதலோடு நாங்கள் பதிவு திருமணமும் செய்து கொண்டு விட்டோம் என்று சொன்னதில்..

பெண்ணின் அப்பா சித்தப்பா…. பின் அவர்கள் இணத்தவர்கள் ஸ்ரீ காந்திடம் சொன்னது இது தான்..

“ஓன்று நீங்க எங்க மதத்துக்கு மாறி விட வேண்டும்.. இல்லை என்றால் என் மகளை தலாக் செய்து விட வேண்டும் …” என்பது தான்…

“ எங்க மதத்தை நீங்க தழுவ வேண்டும் என்று உங்களை நாங்க நிர்பந்திக்கவில்லை… ஆனால் என் மாப்பிள்ளை எங்க மதத்தவனா மட்டும் தான் இருக்கனும்…” இது தான் அவரின் பேச்சாக இருந்தது..

அவரின் இந்த பேச்சுக்கு ஸ்ரீ காந்த் ஒரே ஒரு நிமிடம் மட்டும் தான் யோசித்தான்.. பின்.. “ நான் உங்க மதத்துக்கு மாறி விடுகிறேன்…” என்று சொல்லி விட்டான்..

அப்போது கூட பெண்ணின் தந்தை… “ இது ரொம்ப பெரிய முடிவு.. உங்க வீட்டவங்க கிட்ட பேசி முடிவு செய்ங்க…” என்று தான் சொன்னார்..

ஆனால் ஸ்ரீ காந்தோ… “ என் வாழ்க்கை என் முடிவு என்று விட்டவனின் முடிவாக இதோ மாதம் மாறி பெண்ணோடு மட்டும் அல்லாது பெண்ணின் குடும்பத்தோடும் தங்கள் வீட்டு முன் வந்து நின்ற மகனையே தான் அதிர்ந்து பார்த்தார் சுபத்ரா..

இதை சுபத்ரா மட்டும் அல்லாது அப்போது தான் சுபத்ராவின் அண்ணனும் அங்கு வந்தார்.. வீட்டு பெண் என்ற முறையில் தீபாவளிக்கு முதலில் புடவை தான் எடுத்து தந்தார்..

சுபத்ரா சொன்ன… “ என் வீட்டு வேலைக்காரிக்கு கூட இதை விட அதிக விலையில் நான் எடுத்து கொடுப்பேன்…” என்ற பேச்சில் அதன் அடுத்து பணமாக கொடுத்து விடுவார்,..

அதற்க்கு கூட அண்ணன் வாங்கி வரும் இனிப்பை வைத்து ஏதாவது சொல்லுவார்.. எப்போதும் அண்ணனை அசிங்கப்படுத்தி அனுப்பும் சுபத்ரா இன்று அவரின் முன்பு அசிங்கப்பட்டு நின்றார் என்று தான் சொல்ல வேண்டும்…

கொட்ட கொட்ட குனிந்த அந்த அண்ணனுமே…. “ என்ன சுபா .. என் பையன் படிப்பில் இப்படி என் பெரிய பெண் படிப்பல் அப்படி என்று பெருமை பட்டுப்பட்டுப்ப… என்ன இது…?” என்று கேட்டவர் ..

பின்… “ என் பெண்ணுக்கு நான் அவள் காதலித்தவனையே கல்யாணம் செய்து கொடுத்த போது என் பொண்டாட்டிட்டு கிட்ட என்ன சொன்ன… என் பசங்க எல்லாம் என் பேச்சை கேட்டு தான் நடப்பாங்க என்று சொன்ன.. என் பெண்ணாவது வேறு ஜாதி பையனை தான் காதலித்தாள்… அதுவும் என் கிட்ட சொன்னா.. ஆனா உன் பையன்…” என்று தன் பேச்சை இழுத்து நிறுத்தியவர்…

பின்…” நீ பெருமை பட்டுக் கொண்டு இருந்த உன் பையன் உன்னை இப்படி கொண்டு வந்து நிறுத்திட்டான்.. இனி பெருமை பட்ட பெண் உன்னை எங்கு கொண்டு வந்து நிறுத்த போறாளோ….” என்று சொல்லி விட்டு சென்றார்..

ஸ்ரீதருமே…. “ எனக்கு பிடித்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டேன்.. இதுல எங்கு இருந்து வந்தது உங்க மானம்… அப்படி என்ன நான் ஊருல செய்யாததை செய்து விட்டேன்…” என்று கேட்டவன்.. அவன் ஏற்கனவே பார்த்து வைத்து இருந்த வீட்டிற்க்கு சென்று விட்டான்..



ஜெயேந்திரன் தான் பார்த்திபனிடம்... “ இப்போ இதை பற்றி ரொம்ப யோசிக்காதிங்க… இனி ஒன்னும் பண்ண முடியாது.. நான் பார்த்த வரை உங்க மகன்.. அவன் விருப்ப படி தான் செய்து கொள்வார் .. இந்த காதல் உங்களுக்கு முன்னவே தெரிந்து இருந்து இருந்தால் கூட உங்க பேச்சை கேட்டு இருந்து இருக்க மாட்டார் என்பது நிச்சயம்.. நம்மால் முடியாத ஒரு விசயத்தை யோசித்து நம்மை வருத்திக் கொள்ள வேண்டாம்..” என்று அவன் மாமனாருக்கு ஆறுதல் படுத்த..

வசீகரி தான் அழுது கொண்டு இருந்த தன் அன்னையை தேற்றி விட்டு பின் ஒரு வழியாக அன்று நேரம் கடந்து தான் அவர்கள் வீடு சென்றது.
















 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
267
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஜெ வசிக்கு வாழ்த்துக்கள் ❤️ ❤️ ❤️ 🥰
பெருமை பெருமை ன்னு பீத்துனியே சுபத்ரா உன்ற பெருமையெல்லாம் காத்துல பறந்திடுச்சு போல.
யாரையும் எதுக்குமே மட்டம் தட்டிப் பேசக்கூடாது ன்னு இனி புரிஞ்சுக்கோ சுபத்ரா.
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
259
ஜெய் வசீ 🥳🥳🥳 பேபி வரப்போகுது 🤩🤩🤩

சுபத்ரா எப்படி எல்லாம் பெருமை பேசுனீங்க மத்தவங்களை மட்டமா நினைக்குறது அதுக்கு தான் இப்போ இப்படி நிக்குறீங்க.....
Atleast வசீ கல்யாணம் வரைக்குமாவது வெயிட் பண்ணானே....
 
Active member
Joined
May 12, 2025
Messages
31
சுபத்ரா அடுத்தவங்களை மட்டம் தட்டினா இப்படி தான். நல்ல வேளை ஸ்ரீகாந்த் இவ கல்யாணம் வரை பொறுத்தானே!
 
Top