Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

பனியும் பத்திக்குமே.... 20

  • Thread Author
அத்தியாயம்….20

ஜெய் சத்தியமாக மாமியார் வீட்டில் பணம் ஒரு பிரச்சனையாக இருக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை… ஏன் யோசிக்க கூட இல்லை என்று தான் சொல்ல வேண்டும்…

இல்லை என்றால் மெத்தனமாக தன் மாமனார் பில்லை வாங்கிய பின் கூட தயங்கி கொண்டு நின்று இருப்பதை கவனித்து இருந்து இருப்பான்..

அந்த பில் வந்த நொடி கிஷோர் மாயமானதை தான் கவனித்தான்… கிஷோரின் வருமானம் ஜெய்க்கு தெரியும்.. அது தான் இவன் அந்த வீட்டில் பெண் பார்த்து வந்த நாள் முதலாக… என் பெரிய மாப்பிள்ளை இத்தனை லட்சம் சம்பளம் என்று பேசிக் கொண்டு இருந்தார்களே….

அத்தனை வந்தும் இப்படி பில்லை பார்த்து ஒடி விட்டான் என்றால், ஒரு ஆண் மகனாக ஜெய் புரிந்து கொண்டது கிஷோர் தன் மானத்தை மட்டும் இழக்கவில்லை பணத்தையும் தான் என்பது…

சுபத்ராவின் அந்த கேவல்.. வளையலை கழட்ட முயன்றதை பார்த்த பின் தான் கிஷோர் கை எங்கு வரை நீண்டு இருக்கிறது என்பது புரிந்த நொடி தன் மாமனாரின் கையில் இருந்த பில்லை அவன் வாங்கி கொண்டது..

பில்லின் தொகையை பார்த்தான்.. எட்டு லட்சம் வந்து இருந்தது… எட்டு லட்சம் அவனுக்கு பெரிய தொகை கிடையாது தான். ஆனால் சமீப காலத்தில் அத்தனை பெரிய சொத்து வாங்கியதால் அவனிடம் தற்போது மூன்று லட்சம் தான் இருந்தது..

உடனே தன் பெரிய அண்ணனை அழைத்து ..” என் அக்கவுண்ட்டுக்கு எட்டு லட்சம் போட்டு விடு” என்று விட்டான்…

ஜெய்யின் பெரிய அண்ணன் தீபக்கும் ஏன் எதற்க்கு என்று கேட்காது உடனே போட்டு விட…. ஜெய் மருத்துவ பில்லை செட்டில் செய்து அவன் தான் கீர்த்தனா தன் மாமியார் மாமனாரை மாமனார் காரிலேயே அவர்கள் வீட்டில் விட்டான்.

கீர்த்தனா மெல்ல தயங்கிய வாறு…. “ என் பசங்க…” என்று கேட்டவளிடம்..

“முதல்ல உங்க உடம்பை பார்த்துக்கோங்க… குழந்தைங்க அவங்க சித்தி கிட்ட தானே இருக்காங்க…. ஸ்கூல் லீவ் வரை அங்கேயே இருக்கட்டும்…” என்று விட்டான்..

ஆம் கீர்த்தனாவின் இரு குழந்தைகளையும் வசீ தான் தன்னுடன் அழைத்து கொண்டு சென்று விட்டாள்…

கீர்த்தனா தற்கொலை முயற்ச்சி செய்து கொண்டதில் குழந்தைகள் பயந்து அன்று மருத்துவமனையில் அழுது கொண்டு இருப்பதை பார்த்து ஜெய்யின் அன்னை கெளசல்யா தான்…

சுபத்ராவிடம்… “ பசங்களை நாங்க கூட்டிட்டு போறோம்…” என்றவர் அழைத்தும் சென்று விட்டார்.. கைய்யோடு தன் சின்ன மருமகள் வசீயையும் தான்…

“ உன் இடத்தில் இருந்து உன் புருஷன் எல்லாத்தையும் பார்த்து கொள்வான்… இந்த சமயத்தில் இப்படி நீ அலைய கூடாது…” என்ற அதட்டலோடு.

மற்ற சமயமாக இருந்து இருந்தால் சுபத்ரா என்ன சொல்லி இருந்து இருப்பாரோ….ஆனால் அப்போது அனைத்திற்க்கும் சரி தான் என்று விட்டார்… சுபத்ராவுக்குமே குழந்தைகளை பார்க்க பார்க்க அப்படி இருந்தது… படு பாவீ இந்த குழந்தைகளை கூட இவனின் அப்பா நினைத்து பார்க்கவில்லையே என்றும் கூட.

அதன் தொட்டு குழந்தைகள் ஜெய் வீட்டில் தான் இருக்கிறார்கள்.. ஜெய்யின் அண்ணன் பிள்ளைகள்… அரையாண்டு விடுமுறை என்பதினால் அவனின் அக்காவின் பிள்ளைகளும் ஜெய் வீட்டில் இருக்க.. கீர்த்தனாவின் பிள்ளைகளான கெளரவ்….சித்தார் பிரச்சனைகளை மறந்து அவர்களோடு ஒன்றி விட்டனர்..

மருத்துவமனையில் இருந்து சுபத்ராவும் கீர்த்தனாவும் குழந்தைகளிடம் பேசும் போது… அவர்கள் அங்கு நன்றாக இருப்பதும்… தற் சமயம் இங்கு அழைத்து வந்தால் தான் அவர்களுக்கு கஷ்டம் என்பதும் புரிந்து கொண்டனர்..

வீட்டிற்க்கு வந்த பின்னும் எப்படி அங்கு என்று தயங்கி தான் கீர்த்தனா தயக்கத்தில் கேட்டது..ஜெய் இப்படி சொல்லவும் கீர்த்தனாவுக்கு அது கொஞ்சம் நிம்மதியை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்… அதனால் அமைதியாகி விட்டாள்..

அவளுக்குமே நிறைய யோசிக்க வேண்டி இருந்தது….முதலில் அந்த வீடு கட்டுகிறேன் என்று கணவன் கேட்ட போது எல்லாம் தன்னிடம் இருந்த பணம் நகை மட்டும் அல்லாது அம்மாவின் பணம்.. நகைகளுமே வாங்கி கொடுத்த பின்னுமே இன்னும் வீடு முழுமை பெறாது.. அப்படியே இருந்ததை பார்த்தெ..

கீர்த்தனா கணவனிடம் சண்டை பிடித்து கொண்டு இருந்தாள்.. கிஷோரோ…. “ உனக்கு என்ன தெரியும். வீட்டில் இருக்க…?” என்று சொன்னானே ஓழிய பணம் என்ன ஆனாது என்று சொல்லவில்லை.

அப்போது கூட கீர்த்தனா.. “யாருக்காவது கடன் கொடுத்து அவங்க திருப்பி தரவில்லையா. சொல்லுங்க..” என்று கேள்வி கேட்டாளே ஓழிய. கணவன் கணக்கு காட்டாத வீட்டிற்க்கு என்று கொடுத்த பணம் இப்படி இந்த வழியாக சென்று இருக்கும் என்று அவள் யோசித்து கூட பார்க்கவில்லை..

அப்படி யோசிக்காததிற்க்கு காரணம்.. தன் கணவன் மீது அவ்வளவு நம்பிக்கையா…? இல்லை தன் அழகு மீது அவளுக்கு இருக்கும் அந்த நம்பிக்கையா….? என்பது அவளுக்கு தான் தெரியும்….

அதன் தொட்டு தான் அன்று கடந்த ஏழு நாட்களாக கணவனிடம் சண்டை பிடிக்கும் போது .. பணம் என்ன ஆச்சு… என் அம்மா கிட்ட இருப்பதை வேறு வாங்கி கொடுத்து இருக்கிறேன்… என்று கேட்ட போது..

கிஷோர்…. “ உன் அம்மா தானே…. திருப்பி கொடுக்கனுமா…?” என்று கேட்ட போது…

“ என் அம்மாவுடையது தான்.. ஆனால் அந்த பணம் எங்கு போச்சு அது தான் எனக்கு வேண்டும்…” என்று கேட்டாள்..

கீர்த்தனாவுக்குமே அம்மாவுடையது தன்னுடையது தான் என்ற எண்ணம் போல்… எப்போதும் போல் அன்றும் இந்த கேள்விக்கு மட்டும் கிஷோரிடம் பதில் இல்லாது போக…

கீர்த்தனாவின் பேசிக்கு தொடர்ந்து அவளின் தம்பி ஸ்ரீ காந்திடம் இருந்து அழைப்பு இவன் வேறு என்று எரிச்சல் பட்டு கொண்டு தான் கை பேசியை கீர்த்தனா எடுத்தாள்..

ஆனால் ஸ்ரீ காந்த் பேசிய…. “ உன் செல்லுக்கு ஒரு லிங் அனுப்பி இருக்கேன்.. பாரு….” என்றதில்.

சாதாரணமாகவே இவனே கூட பிறந்தவளை அழைக்க மாட்டான்.. இன்று என்ன லிங் என்று வேறு அனுப்பி இருக்கான். என்று நினைத்து அந்த சண்டையிலுமே அது என்ன என்று பார்த்தாள்..

பார்த்த நொடி.. நிச்சயம் கீர்த்தனா இதை எதிர் பார்க்கவில்லை… உண்மையில் அதிர்ச்சி என்ற வார்த்தையை தான்டிய நிலையில் தான் கீர்த்தனா இருந்தாள்…

கை பேசியை பிடித்து இருந்த பெண்ணவளின் கையில் அத்தனை நடுக்கம்… நம்புவதா.. இல்லை இப்போது தான் ஏ.ஐ என்று ஒன்று வந்து இருக்கிறதே.. அதுவா என்று..

ஆனால் கீழே காமெண்ட் படிக்க படிக்க… உண்மை என்பது தெரிந்தது.. அந்த பெண்மணியும் பார்த்தது போல்.. புகழ் பெற்ர யூடியூபர் தான்..

கீர்த்தனாவுமே அந்த பெண்மணி பதிவு செய்யும் உடற்பயிற்ச்சி வீடியூவை பார்த்து இருக்கிறாள்..

“இவங்க இந்த வயதில் எத்தனை கச்சிதமாக உடம்பை வைத்து இருக்காங்க….” என்று தன் கணவனிடம் கூட ஒரு முறை சொல்லி இருக்கிறாள்..

அப்போது கூட கிஷோர்…. “ என்ன வயது அத்தனை வயசு எல்லாம் கிடையாது…. என் கூட தான் வேலை பார்க்கிறாங்க…” என்று அவள் கணவன் சொன்ன போது கூட கீர்த்தனா அதை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை…

“உங்க கூட வேலை பார்க்கிறாங்கலா… முன் எல்லாம் என்னை உங்க ஆபிசுக்கு அடிக்கடி கூட்டிட்டு போவீங்க. இப்போ இல்ல… அது தான் எனக்கு தெரியல…” என்று விட்டாள்…

ஆனால் இப்போது அனைத்தையும் நினைத்து பார்த்தவளுக்கு ஒன்றும் ஒன்றும் இரண்டாக அந்த கணக்கு சரியாக வந்ததில், அவளின் வாழ்க்கை கணக்கு தவறாக போய் விட… அப்படியே இடிந்து போய் அமர்ந்து விட்டாள்…

கிஷோரோ எப்போதும் தனக்கு உதவி செய்யாத மச்சான் அவனுக்கு தெரிந்தோ தெரியாமலோயோ உதவி செய்து இருக்கிறான்.. இப்போதைக்கு தப்பித்தோம் என்று காலையில் இருந்து அணைத்து வைத்த கை பேசியை ஆன் செய்த உடனே… அவனுக்கு வாட் சாப்புக்கு மெசஜ் அத்தனை வந்து இருந்தது.. என்ன இது ஏன் இத்தன்i என்ற யோசனையுடன் திறந்து பார்த்தவனுக்கு தலையில் இடி என கீர்த்தனாவுக்கு அவளின் தம்பி அனுப்பிய லிங்கையே… நிறைய பேர் அவனுக்கு அனுப்பி இருந்தனர்..

கூடாததிற்க்கு இவன் எப்போது ஆன் செய்வான் என்று காத்திருந்தது போல் அவனின் தம்பி அழைத்து விட்டான்..

தன்னை விட பெரியவன் என்று கூட நினைக்காது அத்தனை பேச்சு.. அவனின் தந்தையும் அப்படி ஒரு திட்டு. யாருக்கும் பதில் சொல்ல முடியாது போனை அணைத்து விட்டு மனைவியை தேட..

கீர்த்தனாவோ இந்த இடைப்பட்ட நேரத்தில் தன் இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு சென்று இருந்தாள்.

கிஷோர் அவளின் அம்மா வீட்டிற்க்கு தான் சென்று இருப்பாள் என்று நினைத்து அவன் அங்கு செல்ல.. அவனின் நினைப்பை பொய் ஆக்காது கீர்த்தனா அங்கு தான் இருந்தாள்…

தன் மாமியார் மாமனார் முன் கெத்தாக இருந்தவன்.. இந்த விசயத்தில் தலை குனிந்து போனான்..

“தெரியாது செய்து விட்டேன்… ஏதோ சபலம்.. இனி செய்ய மாட்டேன்.. கீர்த்தனாவை நான் அத்தனை விரும்புகிறேன்.. எந்த பேய் என்னை பிடித்தது என்று தெரியல… இனி செய்ய மாட்டேன்..”

இது போலான விசயத்தில் ஒருவன் மாட்டிக் கொண்டால் என்ன என்ன சொல்வானோ… வார்த்தை தவறாது அப்படியே சொன்னான்…

சுபத்ராவுக்கும் பார்த்திபனுக்கும் கிஷோர் முகத்தை பார்க்க கூட பிடிக்கவில்லை தான்… என்ன என்னவோ பேச கேட்க. அவர்களுக்கு அத்தனை இருந்தது..

ஆனால் இவர்களும் அனைத்து பெற்றோர்களை போலவே… பெண் வாழ்க்கை பேரங்கள் அடுத்து என்ன என்று தான் யோசித்தனர்..

ஆனால் பார்த்திபன்…. “ உங்க கிட்ட இருந்து இப்படி ஒன்றை நான் எதிர் பார்க்கல….” என்று சொல்லி விட்டு இருந்தார்…





கீர்த்தனாவோ குழந்தைகளோடு தன் அறைக்கு சென்றவள் தான் வெளி வரவில்லை… சுபத்ரா பார்த்திபன் அத்தனை தைரியம் அளித்தது..

கீர்த்தனாவோ எதற்க்கும் பேசவில்லை அமைதியாகவே இருந்தாள்… தன் கணவன் தன்னை தான்டி இன்னொரு பெண்ணிடம் செல்வாள் என்று அவள் நினைத்து கூட பார்க்கவில்லை..

உண்மையில் கிஷோர் மனைவியிடம் பேசும் போது பெரும் பாலும்.. அவளின் அழகை தான் அதிகமாக பேசுவான்..

அதுவும் இவளின் தங்கை வசீயை இவளோடு கம்பர் செய்து…. உன் தங்கை என்று நம்ப மாட்டாங்க…. அறிவும் சரி அழகுலேயேயும் சரி உன் அம்மாவுக்கு உனக்கே அதிகம் கொடுத்துட்டு அடுத்ததுக்கு ஒன்னும் கொடுக்கல போல…” என்று சொல்லி கிண்டல் கூட செய்வாள்..

அப்போது எல்லாம் அவளுக்கு அவ்வளவு பெருமையாக இருக்கும்.. ஒருவனை ஏமாற்ற அவனின் ஆசையை தூண்டுவது போல் மனைவிக்கு துரோகம் செய்ய அவளை இது போல் பெருமையாக பேசினால், அந்த மனைவியை கணவன் மீது சந்தேகமே பட மாட்டாள் போல் தன்னை போல் அவள் இதை தான் நினைத்து கொண்டாள்..

என்னை எத்தனை எளிதாக ஏமாற்றி விட்டான்… எனக்கு என்ன குறை. பாதி கிழவியை போய் என்று நினைத்து நினைத்து..

பின் இனி வெளியில் நான் எப்படி தலை காட்டுவேன்…. எனக்கு இது எவ்வளவு அவமானம்..

கூடவே தங்கையின் திருமணம் போது ஜெய் அழகை பார்த்து. வசீயிடம்…

“பார்த்து டி பணத்திற்க்காக உன்னை கல்யாணம் செய்து இருக்கான். குழந்தைகளுக்கு தான் ஆசைக்கு ஒன்னும் ஆஸ்த்திக்கு ஒன்னு என்று சொல்வாங்க. ஜெய் மனைவியை அப்படி வைத்து கொள்ள போகிறார்..” என்று தான் சொன்னதை நினைத்து பார்த்தவளுக்கு.. அது தனக்கே விடிந்து இருக்கிறது என்று அனைத்தும் யோசித்து யோசித்து இனி யார் முகத்தை நான் பார்க்க முடியும் என்று தான் எலி மருந்து குடித்து விட்டாள்..

நல்ல வேலையாக குழந்தைகள் அவளின் பக்கத்தில் இருந்த தொட்டு பெரிய மகனுக்கு கொஞ்சம் விவரம் தெரியும் என்பதினால்..

அறையில் இருந்து ஓடி வந்து தன் பாட்டி தாத்தாவிடம் உடனே சொன்னதினால் தான் கீர்த்தனாவை காப்பற்ற முடிந்தது.. இல்லை என்றால் வீரியம் மிகுந்த அந்த எலி மருந்தை குடித்ததிற்க்கு கண்டிப்பாக கீர்த்தனா இருந்து இருக்க மாட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்..

பெரியவர்கள் ஒன்று சொல்லுவார்கள் அவசரத்தில் ஒன்று செய்து முடித்து விட்டு பின் ஆசுவாசமாக அதை பற்றி யோசிப்பார்கள் என்று.

இப்போது கீர்த்தனா அதை தான் செய்து கொண்டு இருக்கிறாள். நான் இல்லை என்றால் என் குழந்தைகள் நிலை என்ன ஆகி இருக்கும்..

இன்னும் கிஷோர் எது வரை சென்று இருக்கிறான். என்ன இருக்கிறது என்ன இல்லை என்ற முழு விவரமும் தெரியாது நான் பாட்டுக்கு இப்படி செய்ததில் இறந்து போய் விட்டாள்…

குழந்தைகளின் படிப்பு அவர்களின் எதிர் காலம்… என்ன ஆகி இருக்கும்.. வாழ்க்கையில் முதல் முறை சரியாக யோசித்த கீர்த்தனா அமைதியாகி போக…

அது தான் சுபத்ரா பார்த்திபனுக்கு பயம் ஆகி போனது.. வசீயிடம் இதை பற்றி சொல்ல. என்ன தான் அக்கா தன்னிடம் பாசமாக இருந்தது இல்லை என்றாலுமே ரத்த பந்த பாசம் என்பது.. அவளை தன் வீட்டில் நிம்மதியாக இருக்கவிட வில்லை என்று தான் சொல்ல வேண்டும்..

அவளின் மாமியார் கெளசல்யா ஓரவத்திகள்.. “ இந்த நிலையில் உன் அமைதி முக்கியம்.. இப்போ நீ அங்கு போய் என்ன செய்ய போற… உன் அக்காவுக்கு உன்னை விட உன் அம்மா தானே நெருக்கம்… அவங்க பார்த்து கொல்லுவாங்க… இப்போ அவங்களுக்கு உதவியா இங்கு இருந்து உன் அக்கா குழந்தையை பார்த்துக்கோ. உன் அக்காவுக்கு இப்போ தேவை தனிமை தான்.. உன்னை பார்த்தா இன்னும் தான் கில்ட்டியா ஃபீல் ஆவா.” என்று அனைவரும் சொன்னதினால் தான் வசீ அவளின் அம்மா மருத்துவமனையில் இருந்து கீர்த்தனா வீடு வந்த பின் கூட செல்லாது இருந்தாள்..

அம்மா கீர்த்தனாவை பற்றி இப்படி பயந்து போய் சொன்னதில் ஜெய்யின் அம்மாவே மகனிடம்..

“ அவளை கூட்டிட்டு போ ஜெய்.. இன்னும் இங்கு பிடித்து வைத்து இருந்தால் அங்கு என்ன நடக்குதோ என்ன ஆச்சோ என்று நினச்சி நினச்சி உடம்பை தான் கெடுத்துப்பா. இதுக்கு நீ இவளை அங்கேயே கூட்டிட்டு போயிடு.. ஆனா கூட நீயும் இரு.” என்று வசீயின் எதிரில் சொன்னவர்.

பின் தனித்து மகனிடம்… “ இன்னும் என்ன நிலை என்று தெரியல.. பெரியவன் கிட்ட பணத்தை போட சொன்ன போதே எனக்கு புரிஞ்சிடுச்சி பணமும் போயிடுச்சி என்று.. ஆனா அது எந்த அளவுக்கு என்று எனக்கு புரியல…. அதனால கூட இரு… இன்னுமே கீர்த்தனா மாமியார் வீடு வரல போல…. அவங்களையும் வர வழைத்து இனி என்ன என்று பேசிடுறது நல்லது…” என்று ஒரு பெரிய மனுஷியாக பேசிய கெளசல்யா..

கடைசியாக.. “ பணம் உதவி உன் கை மீறாத அளவுக்கு பார்த்து கொள் ஜெய்…” தன் மகனின் எதிர் கால வாழ்க்கைக்கு தாயாக பேசி அனுப்பி வைத்தார்.

கெளசல்யா சொன்னது போலவே தான் ஜெய் கிஷோரின் அம்மா அப்பா தம்பி கிஷோரையும் உடன் வைத்து ஜெய் பேசினான். ஆனால் பேச பேச. கிஷோர் அந்த பெண்மணியிடம் இழந்தது லட்சங்கள் இல்லை கோடியில் என்பது தெரிய வந்தது…




 
Well-known member
Joined
May 7, 2025
Messages
76
Nice update 😱😱😱😱
கிஷோர்.... கோடியில் இழக்கும் அளவுக்கு அப்படி என்ன டா மயக்கம் 😠😠😠😡😡🤬🤬😤😤😤👋👋👋👊👊👊
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
272
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடக்கடவுளே கோடி யா?😱
அப்ப தெருக்கோடில கூட இடம் கிடைக்காது .
வெத்துப் பெருமை பேசி எல்லாம் வீதிக்கு வந்திருச்சு🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Active member
Joined
May 12, 2025
Messages
34
கோடியோ ,இலட்சமோ கீர்த்தனா தன் அம்மா/அப்பா பணம் நன் கூடப்பிறந்தவங்களுக்கும் பங்கு இருக்கேனு யோசிக்கலை. அதான் அவ புருஷன் அதுலயிருந்து ஒரு பைசா கூட இவளுக்கு செலவு பண்ணலை.
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
263
கீர்த்தனா பேராசை.... பெரிய வீடு கட்டணும் ஆடம்பரமா வாழணும்ன்னு அம்மா வீட்லருந்தும் எடுத்துட்டு போய் புருஷன்கிட்ட குடுத்து மொத்தமா இழந்துட்டு நிக்கிறா.....
கிஷோர் 🤬🤬🤬🤬 இப்படியுமா இருப்பான்....

கௌசல்யா எப்போவும் சரி தான்.... பண விஷயத்துல இவன் தலையை குடுக்காம இருக்கணும்..... ஏற்கனவே எட்டு லட்சம் சும்மாவா கஷ்டப்பட்டு சிக்கனமா சேர்த்த பணம்....
 
  • Like
Reactions: grg
New member
Joined
Jan 24, 2026
Messages
1
ஆத்தர்ஜி எப்போ அடுத்த எபியுடன் வருவீங்க...?
காத்துகிட்டு இருக்கோம்........
 
  • Like
Reactions: grg
Top