Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

மேவியமே மந்ராவின் மந்திரம்...1.2

  • Thread Author
அத்தியாயம்…1.2

அத்தனை பேரை மொத்தமாக பார்த்ததும் ஜீவிதா பதட்டமாகி எப்போதும் போல் தன் அம்மா திரிபுரசுந்தரியை தான் அவர் பார்த்தார்…அவரோ தன் முன் நீட்ட பட்டு கொண்டு இருந்த தட்டை வாங்காது… தன் மகளின் பார்வையை உணர்ந்தவராக சிறிதும் பதட்டம் படாது… தன் பேத்தி மந்ராவை பார்த்து..

“நீ அம்மாவை அழச்சிட்டு உள்ளே போ….” என்று சொன்னதுமே மந்ராவுமே தன் அன்னையோடு தங்கள் அறைக்கு செல்ல பார்த்தாள்..

ஆனால் எம்.எல்.ஏ சடகோபனோ… “ என்ன பெரியம்மா.. அவங்களை ஏன் அனுப்புறிங்க… பெண்ணோட அம்மாவும் இங்கு இருக்கட்டுமே…” என்று சொன்னவர் பின் ஜீவிதாவை பார்த்து கை எடுத்து ஒரு வணக்கம் போட்டவர்..

பின்… “ நான் என்னை அறிமுகம் படுத்த தேவையில்லை தான்.. ஆனா பாருங்க.. பெண் கேட்டு வந்தவங்க முறையா பேசுறது தான் முறை….”

வந்தவர்களை வர வேற்காது. அமரவும் சொல்லாது.. தான் நீட்டிய தட்டை வாங்கவும் செய்யாது இருந்தவர்களின் செயலில் சடகோபனுக்கு கோபம் தான் வந்தது..

ஆனால் என்ன செய்வது.. மகன் இந்த வீட்டு பெண்ணை தானே விரும்பி தொலைத்து இருக்கிறான்.. அதுவும் ஒரு வருடமாக தன் மனைவி..

“இப்போ எல்லாம் நம்ம மகன் ஒழுங்கா பிசினஸ் பார்த்துக்குறாங்க. வெளியில் சுத்துவது கிடையாது… கண்ட கண்ட பெண்கள் பின்னாடி எல்லாம் போவது கிடையாது..” என்று மனைவி சொன்னதை இவருமே மகனிடம் கவனித்து கொண்டு தான் இருந்தார்.

மகன் திருந்தி விட்டானா என்று நினைக்க. மகனோ.. “

நான் காதலில் விழுந்து விட்டேன்… அந்த பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைத்தால் நான் இப்படியே நல்லவனாவே இருப்பேன்… இல்லேன்னா அவ்வளவு தான்…” என்று சொன்னவன் கை காட்டிய பெண் தான் இந்த வீட்டு பெண் மந்ரா..

மந்ரா தான் பினாமியாக இருக்கும் மருத்துவமனையிl தான் வேலை செய்கிறாள்.. மகன் விரும்பும் பெண்ணை பற்றி விசாரித்த போது கிடைத்த தகவல் இது… அவர் பெண் மந்ராவை பார்த்தது கிடையாது. மகன் இந்த பெண்ணை விரும்புகிறேன் என்று சொன்ன போது விவரங்கள் சேகரித்தார்.. சேகரித்த வரையில் இருபத்தி ஆறு வருடத்திற்க்கு முன் இந்த வீட்டை வாங்கி வந்தது.

அதன் பின் தான் திரிபுரசுந்தரி தன் மகன் மகளுக்கு திருமணம் செய்தது என்று அனைத்து விவரங்களையும் சேகரித்தார்..

எது என்னவோ ஆனால் தங்கள் இனம் என்பதில் அவருக்கு ஒரு திருப்தி.. பின் என்ன முக்கால் வாசி அரசியல் இப்போது ஜாதியை வைத்து தானே நடக்கிறது…

வெளியில் ஜாதி ஓட்டு வாங்கி கொண்டு தன் வீட்டிற்க்குள்ளேயே அடுத்த ஜாதியை உள் நுழைத்தால் அவர் அரசியல் வாழ்க்கை என்ன ஆவது..

அதனால் அவர் விசாரித்த வரை பரவாயில்லை.. ஆனால் வசதி தான் இல்லை.. சரி மகன் ஆசைப்பட்டு விட்டான் என்று வந்தால் என்ன இது.. என்று நினைத்தவர்.

பின்.. கேட்டதும் பெண் கொடுத்தால், நல்ல முறையில் பெண் நம்ம வீட்டிற்க்கு வரும்.. இல்லை என்றால் தூக்க வேண்டியது தான்..” என்று ஒரு முடிவோடு தான் அந்த சடகோபனும் பேசியது…

ஆனால் ஜீவிதா அவர் பேச்சுக்கு அவரை பார்க்காது அத்தனை பேரையும் ஒரு வித பயத்துடன் பார்த்து கொண்டு இருக்க. இப்போது மந்ராவே தன் அன்னையின் கை பிடித்து கொண்டு அழைத்து செல்ல பார்த்தாள்…

இப்போது சடகோபனின் மகன். சுரேஷ்… “மந்ரா நான் உன் கிட்ட எத்தனையோ முறை பேச ட்ரைப் பண்ணேன்.. ஆனா நீ தான் என் கிட்ட முகம் கொடுத்தும் பேசல.. அது தான் முறைப்படி வீட்டிற்க்கே குடும்பத்துடன் வந்தா.. இப்போவும் என் முன் கூட நிற்காது போக பார்க்கிறியே….” என்று மந்ராவிடம் பேச.

இத்தனை நேரம் தன் அன்னையின் பார்வைக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருந்த மகேந்திரனும்… பிரச்சனை வேண்டாம்… நாம் சந்தித்த பிரச்சனைகளே போதும் என்று இருந்த சுதாகரும்… பெரியவர்கள் இருக்க தான் மூக்கை நுழைக்க கூடாது என்று தன் கோபத்தை கட்டுப்படுத்தி நின்று கொண்டு இருந்த வினோத்தும்… சுரேஷ் மந்ராவிடம் பேசிய இந்த நேரிடையான பேச்சில் ஒரே சமயத்தில் அவன் மீது பாய்ந்தனர்..

இதை சுத்தமாக சடகோபனும் எதிர் பார்க்கவில்லை.. அவர் மகன் சுரேஷும் எதிர் பார்க்கவில்லை.. ஏன் அத்தனை தட்டை தூக்கி கொண்டு வந்த கட்சி ஆளுங்கள் கூட அந்த வீட்டின் வெளியில் தான் கை கட்டி நின்று கொண்டு இருந்தனர்.. இங்கு நமக்கு என்ன வேலை என்று நினைத்து.

சடகோபன் தன் மகனை தாக்கியதில் ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை… பெண்ணை கேட்டால் பிடிக்கவில்லை என்றாலும் கொடுத்து தான் ஆக வேண்டும்.. அதுவும் இவர்கள் பற்றி தெரிந்த விசயத்தை வைத்து பார்த்த போது மிகவும் பயந்த சுபாவம் தான்.. என்று நினைத்து கொண்டு இருந்தவர்..

தன் முன்னவே தன் மகனை அடிப்பது.. அதுவும் எம்.எல்.ஏ சும்மா விடுவானா… அவர் ஒரு சத்தம் கொடுக்க.. வெளியில் நின்று கொண்டு இருந்த அவரின் அல்லக்கை எல்லாம் வீட்டின் உள்ளே திரும்ப திபு திபு என்று ஓடி வந்தவர்கள் பார்த்த காட்சியானது..

இப்போது அடி மகன் மட்டும் அல்லாது தந்தையுக்குமே விழுந்தது.. ஆம் மகேந்திரன் தான் சட கோபனின் பேச்சான…

“உங்க தகுதி எல்லாம் ஆசைப்பட்டா ஒரு நாள் அனுபவித்து விட்டுறது தான்.. ஆனா என் மகன் காதல் என்று சொன்னதும் வந்தா அடிப்பிங்கலா…” என்று சொன்ன நொடி தான் அவர் மகேந்திரனிடம் இருந்து அடி வாங்கியது.

வந்த அல்லக்கைகளே… தங்கள் தலைவரை அடித்து கொண்டு இருப்பதை பார்த்து கொந்தளித்து விட..

“டேய் யார் மேல டா கை வைக்கிற.. எங்க தலைவர் மேலேயாவா..” என்று கேட்டுக் கொண்டே மகேந்திரன் மீது ஒருவன் பாய. வினோத் அதை தடுக்கும் முன் மகேந்திரனே… தன் மீது பாய வந்தவனின் கை தன் மீது படும் முன்பே…

தன் கால் கொண்டு எட்டி ஒரே உதை தான் விட்டார்…. அவ்வளவு தான் அவன் அங்கு இருந்த சேரின் மீது விழுந்து அது சரிந்து.. இவன் ஒரு மூலையில் சரிந்து விழுவந்தவனை விடாது இன்னுமே தன் கால் கொண்டு அடிக்க….

இன்னும் இன்னும் அவரை தாக்க வந்தவர்களை மகேந்திரன் அவர்களிடம் சண்டை போடுவதை வினோத் மட்டும் அல்லாது மந்ரா.. ஏன் ஜீவிதா கூட அதிர்ச்சி விலகாது பார்த்து கொண்டு இருந்த சமயம் தான்.. சுரேஷ் ஒரு விசயத்தை செய்தது…

அது மந்ராவின் கையை பிடித்ததோடு மட்டும் அல்லாது…

“நான் உன்னை என்ன கீப்பா வைத்து கொள்கிறேன் என்றா கேட்டேன்.. முறைப்படி கல்யாணம் செய்துக்க தானே கேட்டு இங்கு வந்தது.?” என்று சொல்ல.

மந்ராவோ அவன் பேச்சுக்கு செவி சாய்க்காது.. “ முதல்ல என் கையை விடு விடு…” தன் தாய் மாமன் அங்கு அடித்து கொண்டு இருந்தவர் சுரேஷ் தன் கை பிடித்ததுமே கோபமாக தங்களை நோக்கி வந்தவரை பார்த்து கொண்டே சொன்னாள்..

இன்று அவள் மாமன் அவள் கண்ணுக்கு புதியதாக தெரிந்தார்… எப்போதும் சத்தம் போட்டு கூட பேச தெரியாதவர்.. இன்று அவர் அடிக்கும் அடியின் சத்தமே அவ்வளவு சத்தமாக அவளுக்கு கேட்டது..

அதை பார்த்து இப்போது பெண்ணவளுக்கு வந்தவர்களை விட தன் தாய் மாமன் இவர்களை ஏதாவது செய்து விட்டு பிரச்சனையில் மாட்டிக் கொள்ள போகிறாரோ என்ற பயமே இப்போது அதிகம் அவளுக்கு . அதனால் தான் தன் கை பிடித்தவனை விடு என்று சொல்ல அவனோ மிஞ்சி இன்னும் பேசினான்.

அதுவும் வினோத்… வந்து மந்ராவை தன் பக்கம் இழுத்து கொண்டதை பார்த்து மீண்டுமே சுரேஷ் இன்னும் வேகத்துடன் தன்னை நோக்கி இழுக்க பார்த்து கொண்டே.

வினோத்தை பார்த்து…. “என்ன அவளை தொடுற…?” என்று விரல் நீட்டி எச்சரித்தவனின் விரலை வினோத் பிடித்து முறுக்கி கொண்டு இருந்த சமயம் தான் சுரேஷ் ஒரு வார்த்தையை விட்டான்…

“என்ன எனக்கு அவளை கல்யாணம் செய்து கொடுக்க மாட்டிங்கலா…. பார்க்கிறேன்.. அவளை யாருக்கும் கொடுக்க முடியாத அளவுக்கு பார்க்கிறேன்….” என்ற அந்த வார்த்தை அங்கு இருந்தவர்களை ஒவ்வொரு விதத்தில் தாக்கியது..

அந்த தாக்கத்தின் பலனாக திரிபுர சுந்தரியே .. “ நீ என்ன டா சொன்ன..?” என்று அத்தனை வயதிலும் ஆவேசமாக சுரேஷை நோக்கி அவர் வரும் முன் மகேந்திரன்.. இன்று காலை இலநீர் வெட்டி விட்டு அங்கு வைத்திருந்த அருவாளை எடுத்து மந்ராவின் கையை பிடித்து கொண்டு இருந்த சுரேஷின் கையை சட்டென்று வெட்டி விட்டார்.

கண் இமைக்கும் நேரம் என்பார்களே அது போல நடந்து முடிந்து விட்டு இருந்தது… இத்தனை நேரம் அனைவரும் ஆள் ஆளுக்கு ஆவேசமாக கத்தி கொண்டு இருந்தவர்கள் மகேந்திரன் சுரேஷ் கையை வெட்டியதில் அதிர்ந்து அப்படியே அதிர்ச்சியில் நின்று விட்டனர்,,,

சடகோபனுடன் வந்தவர்கள் கட்சி ஆள்களாக இருந்தாலுமே, அவர்களும் ரவுடிகள் தான். அவர்கள் மீதே அத்தனை கேஸ்கள் இருந்தது… அதனால் அவர்களுக்கு இந்த வெட்டு குத்து எல்லாம் சர்வ சாதாரணமான ஒன்று தான்..

ஆனால் மகேந்திரன் அந்த அருவாளை எடுத்த விதம்… அதை சுழட்டிய விதம்… ஒரே வெட்டு…. கை சுரேஷ் கையில் தொங்கி கொண்டு எல்லாம் இல்லை… கீழே முற்றிலுமாக வெட்டப்பட்டு வீழ்ந்து இருந்ததை பார்த்தவர்கள் ஸ்தம்பித்து நின்று விட்டார்கள்..

அதோடு அந்த அருவாளை இன்னுமே சுழட்டிய வாறு… அவர்களை நோக்கி வருவதை பார்த்து அவர்கள் பின் செல்ல.. சுரேஷோ வலியில் அப்போது தான் அவன் தன் அதிர்வில் இருந்து விடுப்பட்டு அவன் வலியே அவனுக்கு தெரிந்தது..

அதுவும் தன் கையில் இருந்தம் ரத்தம் கொட்ட கீழே விழுந்து கிடந்த தன் கையையும் பார்த்து… சத்தம் போட்டு அழுதான். என் கை “என் கை…. அய்யோ அய்யோ வலிக்கிறதே…” என்ற வார்த்தை தான் வந்தது..

சட கோபனும்… தன் மகனையும் கீழே விழுந்து கிடந்த கையையுமே திக் பிரம்மை பிடித்தவராக பார்த்து கொண்டு இருந்தார்..

அவருமே இந்த பதவிக்கு வரும் முன் இது போல் ரத்தம் பார்த்தவர் தான். ஏன் இன்னுமே கூட பகை காரணமாக …

“அவனை நான் தான் டா வெட்டுவேன்” என்று வெட்டியும் இருக்கிறார் தான்..

அவருக்குமே ரத்தம் சாதாரணமான ஒரு விசயம் தான்… ஆனால் தன் ரத்தம் என்று வரும் போது… அதிர்வும் அதிர்ச்சியும் இருக்க தானே செய்யும்… அதில் ஒரு நொடி நின்றவர் பின்…

“ஏய் …” என்று கத்தி கொண்டு மகேந்திரன் பக்கம் பாய பார்த்தவரை அவரின் மனைவி..

“ஏனுங்க இது எல்லாம் அப்புறம் பார்க்கலாமுங்க… முதல்ல நம்ம பையனை கூட்டிட்டு நம்ம ஆஸ்பிட்டலுக்கு போகலாம்…” என்று தலையில் அடித்து கொண்டு அழ..

சட கோபனுக்கும்… கோல்டன் பிரியட் என்பார்களே … அது போல நாம் இங்கு இருக்கும் ஒவ்வொரு நொடியும் தன் மகனின் உயிருக்கு ஆபத்து.. அதை விட விரைந்து கை கொண்டு சென்றால் கையையும் காப்பற்ற கூடும் என்று யோசித்தவர்..

அனைவரையும் பார்த்து.. “ உங்க யாரையும் நான் சும்மா விட மாட்டேன்…” என்று சொன்னவர் பின் மந்ராவை காட்டி…

“இவள் என் மகனுக்கு தான்… அவன் தான் இனி முடிவு செய்யனும்… அவனுக்கு இவள் ஆசை நாயகியா.. இல்லை மனைவியா… என்று? “ சொல்லி விட்டு செல்ல. அந்த இடமே புயல் வந்த நிலையில் இருந்தது..

வினோத்.. அப்படியே தன் தந்தை ஸ்ய்ரேஷ் கையை வெட்டுவதை அருகில் இருந்து பார்த்தவன் பார்த்தப்படியே நின்று விட்டான் …

திரிபுர சுந்தரி… “ திரும்பவுமா….” என்பது போல் அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து விட்டார்.. கவிதாவோ.. தன் கணவனையே பார்த்து கொண்டு இருந்தார்… அடுத்து என்ன நடக்கும்… பயம் தான்.. ஆனால் சமாளித்து தான் ஆக வேண்டும்..

“ஏன் கோபப்பட்டிங்க.. ஏன் வெட்டுனிங்க..?” என்று எல்லாம் அவள் தன் கணவனை கேட்டு விட முடியாது…

சுதாகரனும் தன் மச்சான் பக்கம் நின்று கொண்டவர்… அவர் கையில் இருந்த அருவாளை வாங்கி அங்கேயே தான் வைத்தார்…

மந்ராவும் அதிர்ந்து இருந்தவள் தன் அம்மா கீழே கிடந்ததை பார்த்து விட்டு தான்..

“ப்பா மாமா பாட்டி.. ம்மா….” என்று சொன்னதுமே தான் அனைவரின் கவனமும் கீழே விழுந்து கிடந்த ஜீவிதாவின் பக்கம் சென்றது….




 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
205
ஜீவிதா அரசியல்வாதியால் பாதிக்கப்பட்டவங்க தானோ 🤔🤔🤔

மகேந்திரன் 😨😨😨 ஏற்கனவே வெட்டு குத்து எல்லாம் பழக்கம் தான் போல 🧐🧐🧐🧐🧐🧐

ஒரே நாளில் குடும்பத்தோட நிலை மாறிடுச்சு 🤧🤧🤧🤧🤧
 
Last edited:
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
217
நல்லா ஆரம்பிச்ச காலையில நேரம் கொஞ்சம் கொஞ்சமா சூடாகி ஒரே கலவரமா இல்ல ஆகிடுச்சு 😧😧😧😰😰😰😰😰
மகேந்திரன் 😳😳😳

இதே சூழ்நிலையை ஏற்கனவே கடந்து வந்தவங்க தான் போல.... 🤔 அரசியல்வாதின்னா ஆகாதோ....
ஜீவிதா 🤔🤔
 
Well-known member
Joined
Aug 16, 2024
Messages
447
சண்டை வினோத் குடும்பத்திற்கு பழக்கப் பட்ட ஒன்றோ. இவர்கள் வேறு ஊரைச் சேர்ந்தவர்களோ.
 
Well-known member
Joined
May 12, 2024
Messages
327
Magendran munnal rowdy pola…
Kandippa CM veettu maganala Jeewitha life la edho nadanthu irukku… and MLA va ethirkkura ore shakthi CM veetukku than irukku… Manthra avanga varisu than… appo Vinoth Manthra pair illaiya
 
Top