அத்தியாயம்…2.1
தன் முன் அமர்ந்திருந்த சடகோபனை கோபத்துடன் முறைத்து பார்த்து கொண்டு இருந்தார்… இந்த மாநிலத்தின் முதலமைச்சரான ராஜேந்திர பூபதி… சடகோபனோ தலைவரின் அந்த கோப பார்வையில் தலை குனிந்து நிற்க…
“என்ன செய்து இருக்க ..ம் அதுவும் ஒரு பொண்ணுக்காக நம்ம கட்சியை இப்படி சந்தி சிரிக்க வைப்பியா நீ….?” என்று கோபமாக கேட்டவரிடம்..
“தப்பா எல்லாம் இல்ல தலைவரே பையன் ஆசைப்பட்டான்… முறையா தான் பேச போனேன்.. ஆனால் அவங்க தான்… என் மகன் கை போச்சி தலைவரே… எப்படி தலைவரே சும்மா விட முடியும்…” என்று சட கோபன் சொல்லி கொண்டு போகும் போது அப்போது தான் தன் தந்தையின் அழைப்பில் அங்கு வந்த நம் கதையின் நாயகன் ..
தீக்க்ஷேந்திரன்… “ உன் பையன் கை இழந்ததுக்கு… நாங்க ஆட்சியை இழக்கனுமா….?” என்று கேட்டு கொண்டு வந்தவன் தன் தந்தையின் பக்கத்தில் தோரணையாக வந்து அமர்ந்தான்..
அந்த தோரணையை அந்த சூழ்நிலையிலும் சட கோபன் ரசித்தார் என்றால், பாருங்கள் நம் தீக்ஷேந்திரனின் உருவத்தை…
நம் தீக்ஷேந்திரனின் கை விரலில் சிங்கம் பதித்த ஒரு மோதிரம் எப்போதும் இடம் பெற்று இருக்கும்.. அது பார்ப்பவர்களின் கண்ணுக்கு தெரியும் அளவுக்கு தான் பெரியதாக இருக்கும்..
அந்த சிங்கத்தின் தோரணையுடன் தான் தீக்ஷேந்திரன் இருப்பான்… நடை பாவனை என்று அனைத்திலுமே ஒரு கம்பீரம் காணப்படும்.
அவன் உருவத்தில் தந்தையை போன்று தான்.. ஆறாடியில் சிவந்த நிறம் கொண்டு.. அதிலும் முக சவரன் முழுமையாக வழிக்கப்படாது… இரண்டு நாட்களின் வளர்த்தியோடு அவனின் கன்னத்தில் கொஞ்சம் சுர சுரப்பாக இருப்பது கூட அவனின் அழகோடு கம்பீரத்தையும் எடுத்து காட்டுவதாக தான் பார்ப்பவர்களுக்கு தெரியும்…
அதே போல் தான் பார்த்த உடன் அவனின் உடல் வலிமை சொல்லும் அவன் உடற்பயிற்ச்சிக்கு எத்தனை முக்கியத்தும் கொடுக்கிறான் என்பதும் பார்ப்பவர்களுக்கு தெரிந்து விடும்…
சட கோபனுக்கு தன் பதவி வேண்டாம் .தன் வயதிற்க்கு கூட மரியாதை கொடுக்காது பேசுகிறானே என்று மனதில் தீக்ஷேந்திரனை பற்றி மனதில் திட்டினாலும்.. அவனை பார்த்ததும் அவனின் கம்பீரத்தை பார்த்து கொஞ்சம் மலைத்து போய் விட..
நம் தீக்ஷேந்திரனோ…. “ என்னை பார்த்தது போதும் சட கோபன்… இப்போ பிரச்சனையை நீங்க எந்த அளவுக்கு இழுத்து வைத்து இருக்கிங்க என்று சொல்லுங்க….” என்று ஒரு வக்கீலாக கேள்வி கேட்டான்..
ஆம் நம் கதையின் நாயகன் புகழ் பெற்ற ஒரு வழக்கறிஞசர்… தந்தை ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்க.. அதுவும் முன் நாள் முதலமைச்சராக அவரின் தாத்தா சேக்கழியார்… இருந்த போதும்..
அதுவும் இந்த கட்சியை தொடங்கி அதை படி படியாக வளர்த்து அதில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு முதல் அமைச்சராக ஆட்சி செய்தவர் அவனின் அம்மா வழி தாத்தாவான சேக்கழியார்..
அப்படி இருந்தும் நம் நாயகன் அரசியல் பக்கம் இறங்காது தனி வழியாக இந்த வழக்கறிஞ்சர் அவதாரம் எடுக்க காரணம்..
தன் தாத்தா ஆரம்பித்து தன் தந்தை வழி நடத்தும் இந்த கட்சிக்காக தான்.. தீக்க்ஷேந்திரன் நேரிடையாக கட்சியில் இல்லை தான்.. ஆனால் மறைமுகமாக கட்சியை காப்பாற்றும் பொருட்டு.. அவன் செய்தது செய்து கொண்டு இருப்பது… மிக அதிகம்.
அவன் பத்தாவது படித்து கொண்டு இருந்த சமயம்.. அப்போது அவனின் தாத்தா தான் முதல் அமைச்சராக இருந்தது.. தந்தை எம். எல்.ஏ கல்வித்துறை அவர் கை வசம் இருந்தது..
கல்வி துறையில் ஒரு பெரிய பிரச்சனையில் இவர்கள் ஆளுங்ம் கட்சி மாட்டிக் கொண்டு விட… ஆட்சியை மாற்றி அமைக்கும் அளவுக்கு அந்த பிரச்சனை பெரிய பிரச்சனையாக மாநிலம் முழுவதும் பூதாகரமாக வெடித்து விட்டது…
இந்த பிரச்சனையை சமாளிக்கவும்.. தங்களின் ஆட்சியை தக்க வைத்து கொள்ளவும்… அப்போதைய லீடிங்க லாயர் ஒருவர் டெல்லியில் இருந்து வர வழைக்கப்பட்டார்… அவர் கேட்டது இது தான்…
“நான் இந்த பிரச்சனையை ஒன்றும் இல்லாது செய்து விடுகிறேன்.. ஆனால் நீங்கள் எனக்கு தர வேண்டியது…” என்று கேட்டது… அப்போதைய இவர்களின் சொத்தின் பாதியாகும்…
அப்போது அந்த சமயம் தீக்ஷேந்திரன் அங்கு தான் இருந்தான்.. தன் தாத்தா தந்தை தங்களின் அரசியல் பின்பலம் என்று அனைத்தும் அந்த வயதிலேயே அறிந்தவன் தான்.. அதன் செருக்கு எப்போதும் அவனிடம் அதிகமாகவே இருக்கும்…
அதோடு தன் தாத்தா எப்போதும் அவர் அரசியல் பேசும் இடத்தில் தனக்கு பள்ளி இல்லாத நாட்களில் அவர் தன் அருகில் வைத்து கொண்டு இருப்பதினால், அவனுக்கு அந்த வயதிலேயே தங்களின் செல்வாக்கு தெரிந்து.. அதை உணர்ந்து ஒரு ஆளுமையுடன் தான் வளர்ந்தது..
அப்படி இருக்க தன் அப்பா தாத்தா முன்பு.. அதுவும் தன் தாத்தா சீப் மினிஸ்ட்டர்… என்று இவன் கோபமாக நினைத்து கொண்டு இருக்கும் போது இவனின் தாத்தா அந்த லாயர் கேட்டத்தை கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டார்..
அதன் பின்… அந்த லாயரும் இவர்களின் கட்சியை பிரச்சனை வராது காப்பற்றி விட்டு விட… கொடுப்பதாக சொன்ன சொத்தையும் கொடுத்து விட்டார்கள்..
அப்போதே தீக்ஷேந்திரனுக்கு… அந்த சொத்து எல்லாம் பெரிய பிரச்சனை கிடையாது… ஆனால் தங்களிடம் டிமெண்டாக கேட்டு வாங்கியது தான் பிரச்சனையாகி போனது…
தாத்தாவிடம்… கூட இதை பற்றி பேசிய போது அவன் தாத்தா சொன்னது…
“எனக்கு என் கட்சிக்கு எந்த பிரச்சனையும் வர கூடாது.. அதை வர விடாது செய்யும் மூளை அவன் கிட்ட இருந்தது… அது தான் கொடுத்தேன்.. நம்ம கட்சியை கொண்டு செல்ல இது போலவும் ஆட்கள் தேவை தீக்க்ஷா…” என்று சொன்ன போது அப்போதே முடிவு செய்தான்.. தான் ஒரு வழக்கறிஞசராக. அதுவும் சும்மா நானும் ஒரு லாயர் என்பது போல் எல்லாம் இல்லாது…
தன் தாத்தா தந்தையின் முன்பு பேரம் பேசிய அந்த லாயர் போல் ஆக வேண்டும் என்று நினைத்தான்…
ஆனால் அதற்க்கு அவன் தாத்தாவிடம் இருந்து பலத்த எதிர்ப்பு அவனுக்கு வந்தது… . நம்ம கட்சியை நீ தான் பொறுப்பு ஏத்து நடத்தனும்.. அதுக்கு நீ அரசியலில் தான் இருக்கும் என்று..
ஆனால் தீக்ஷேந்திரன்.. தன் முடிவில் உறுதியாக இருந்தான்.. நினைத்ததை நடத்தியும் முடித்து விட்டான். இதோ தன் முப்பதாவது வயதில் மற்றவர்கள் எடுக்க தயங்கும் கேஸ்களை… இதை எடுத்தால் நாம் தோற்ப்பது நிச்சயம் என்பது போலான சவாலான கேஸ்களை தான் அவன் எடுப்பது.. யாரை பார்த்து வக்கீலாக அவதாரம் எடுத்தானோ… அவரையே
இரண்டு வருடங்கள் முன்.. தங்கள் கட்சிக்கு எதிராக ஒரு விசயத்தில் தங்களின் எதிர் கட்சி அந்த லாயரை கலம் இறக்க. இவனும் கலம் இறங்கினான்… வென்றானும்…
தீக்ஷேந்திரன் சும்மா வந்து போன கேசை எல்லாம் எடுக்க மாட்டான். அவன் எடுக்கும் கேஸ் என்பதினால் அதை உலகம் அந்த கேஸை… கவனிக்குமா…? இல்லை இப்படி உலகம் கவனிக்கும் தனிப்பட்ட கேஸ்களை இவன் தேர்ந்தெடுத்து எடுத்து நடத்துவானா என்பது தெரியாது..
ஆனால் இவன் எடுக்கும் ஒவ்வொரு கேசும்… நம் நாடு கவனிக்கும் என்பது நிச்சயம்… கூடவே இடை இடையே தங்களின் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டி இது போல பல கேஸ்களை எடுத்து உள்ளான்.. அது எல்லாம் ஊழல் கேஸ்கள்..
ஆனால் ஒரு பெண்.. இதற்க்காக ஆளுங்கட்சியை மீடியா. எதிர் கட்சிகள் எல்லாம் பேசும் படி செய்து விட்டானே இந்த சட கோபன் என்ற கோபத்தில் தான் தீக்ஷேந்திரன் வந்தது.. இதில் தன்னை பார்க்கவும் இன்னும் கோபம் கூடியது..
தீஷேந்திரன் கோபத்தில் சட கோபன் நடந்தது அனைத்தும் சொல்லி முடிக்க.. தீக்ஷேந்திரன் தன் தந்தையை தான் பார்த்தான்…
பின்.. “ ப்பா என்ன ப்பா இது.. என் ஒரு மணி நேரம் ஆர்க்யூமண்ட்க்காக கோடியில் கொடுக்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. இவன் என்ன என்றால், ஒரு பெண் என்று இதுக்கு நீங்க என்னை கூப்பிட்டு இருக்கிங்க..” என்று தன் தந்தையிடம் கேட்டான்..
அதற்க்கு ராஜேந்திர பூபதி… “சின்ன விசயமோ பெரிய விசயமோ… நம்ம கட்சி நம்ம இந்த ஆட்சி பெரியது தானே தீக்ஷா…சீக்கிரம் முடித்து விடு..” என்று விட..
“ம் முடிக்கிறேன்… ” என்று சொன்னவன்.. பின் தன் தந்தையிடம்…
“நீங்க அந்த யூடியூப் சேனலை பார்த்திங்கலா…..” என்று கேட்டதற்க்கு…
“ம் பார்க்கல தீக்ஷா.. விவேகானந்தன் தான் பார்த்தான்…” என்று சொல்ல.
“ம் சரிப்பா… இனி இதை நான் பார்த்து கொள்கிறேன்…” என்றவன் அப்போதே கைது செய்த மகேந்திரன், வினோத், சுதாகரன் மீது என்ன என்ன குற்றத்திற்க்கு அவர்கள் மீது கேஸ் போடுவது என்பதை அவர்களை பார்க்காதே ஒரு பட்டியல் இட…
மறு நாள் விடியலில் இந்த செய்தி தான் பெரியதாக பேசப்பட்டது….
“தெரியும்.. ***** அந்த கட்சிக்கு ஒன்னு என்றால் தீக்ஷேந்திரன் தான் களம் இறங்குவார் என்பது தான் தெரியுமே….?”
பொதுமக்கள் தங்கள் கையில் இருக்கும் கை பேசியில் பரப்பட்ட செய்தியை வாசித்தும்.. தொலைக்காட்சியின் மூலமாகவும்… செய்திதாள்களின் மூலமாகவும்… தெரிய வந்தது..
இதை அனைத்துமே திருவல்லிக்கேணியில் இருக்கும் மந்ரா வீட்டவர்களும் தான் கேட்டும் பார்த்தும் கொண்டு இருந்தனர்..
அதுவும் இப்போது அந்த வீட்டில் ஆண்கள் இல்லாது நான்கு பெண்கள் மட்டுமே தான் இருந்தனர்…
கடந்த மூன்று நாட்களாக…. அந்த சட கோபன் வந்து சென்று ஜீவிதா மயங்கி விழ.. அவளை சரிப்படுத்தி முடிக்கும் முன்பே… அந்த சட கோபனின் மகனின் கை போனது போனது தான் என்று மருத்துவமனையில் இருந்து செய்தி வர..
சட கோபன் மருத்துவமனையில் இருந்தே. அந்த இடத்திற்க்கு உட்பட்ட காவல் நிலைய அதிகாரிக்கு போன் செய்து என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லி விட.
பொது மக்களுக்கு தான் தங்களை வேலைக்கு நியமித்து இருக்கிறார்கள் என்பதை மறந்த அந்த காவல் அதிகாரியும்… மந்ரா வீட்டிற்க்கு வந்து ஆண்கள் மூன்று பேர்களையும் பொது மக்கள் பார்க்க இழுத்து சென்றனர்…
இதில் காவல் உடையோடு கரை உடையுமே அங்கு இருக்க.. இதை எல்லாம் அந்த வீட்டின் எதிர் வீட்டில் இருக்கும் ஒரு பெண்.. அந்த பெண் ஒரு யூட்யூப் சேனலை வைத்து நடத்திக் கொண்டு இருப்பவள்..
கொஞ்சம் பிரபலமும் கூட.. சட்டென்று இதை எல்லாம் பதிவு செய்தவள் அதை தன் சேனலிலும் போட்டு விட.. அவ்வளவு தான்.. எதிர் கட்சி தான் என்ன என்ன என்று ஆராய்ந்து கொண்டு இருக்கிறதே… அதுவும் சட கோபன் மீது எண்ணற்ற வழக்கு அவர் மீது இருக்கிறது…
இதில் முதல் அமைச்சருக்கு சட கோபன் நெருக்கம் என்றும் தெரிய வர… சும்மா விடுவார்களா… சின்ன விசயத்தை ஊதி ஊதி பெரியதாக இந்த மூன்று நாட்களில் பிரபலம் படுத்தி விட்டார்கள்..
அந்த பெரிய விசயம் சின்னதானது போல் தீக்ஷேந்திரன் களத்தில் இறங்க. அன்றைய முக்கிய செய்தியாக இது தான் இருந்தது.
மந்ரா அழுது அழுது அவள் முகமே வீங்கி விட்டது.. அனைத்தும் தன்னால் தானே.. என்று குற்றவுணர்ச்சி கூடவே இரண்டு நாட்களாக இவள் பாட்டியும் அத்தையும் அப்பா மாமா வினோத் அத்தானை பார்க்க என்று காவல் நிலையத்திற்க்கு சென்று வந்தனர்.
ஆனால் அவர்களை பாட்டி அத்தையினால் பார்க்க முடியவில்லை.. இதில் பாட்டி தன் அத்தையிடம்…
“எனக்கு தெரிந்து இவங்களை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இருக்க மாட்டாங்க… வேறு எங்கோ தான் வைத்து இருப்பாங்க…” என்று சொன்ன திரிபுர சுந்தரியின் பாட்டியின் குரல் இப்போதும் கம்பீரமாக தான் ஒலித்தது…
அதோடு… “கண்டிப்பா உண்மை கேஸ் போட மாட்டாங்க..” என்றும் வேறு பாட்டி சொல்ல. அத்தையுமே.
“ம் எனக்கும் அப்படி தான் தோனுது அத்த…” என்று பேசியதை மந்ரா கேட்க நேர்ந்தது..
அதில்.. “பாட்டி நீங்க என்ன சொல்றிங்க.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு பாட்டி… எல்லாம் என்னால தானே பாட்டி…” என்று அழுபவளை அவளின் பாட்டி சமாதானம் எல்லாம் படுத்தவில்லை..
“இப்போ நீ அழுறதை நிறுத்துறியா….?” என்று தான் திரிபுர சுந்தரி ஒரு அதட்டல் போட்டவர் பின்…
“பிரச்சனை வராது பார்த்துக்கனும்.. வந்துட்டா அதை எப்படி சரி படுத்தனும் என்று தான் நாம் யோசிக்கனும்.. உங்க அம்மா போல எல்லாம் நீ பயந்து இருக்க கூடாது புரியுதா..? முதல்ல கண்ணை துடை ….” என்று சொன்னவர்… மந்ரா கண்ணை துடைத்த பின்னே..
“பார்க்கலாம்.. ஏதாவது ஒரு வழி கிடைக்கும்.. நீ உன் அம்மாவை கொஞ்சம் பார்த்துக்க..” என்ற பாட்டியின் தைரியத்தில் நேற்று முழுவதும் அவள் கொஞ்சம் தைரியமாக தான் தன் அம்மாவுக்கு உணவு கொடுத்து மாத்திரை கொடுத்து தூங்க வைத்து என்று இருந்தாள்..
ஆனால் இன்று காலை செய்தியாக தீகக்ஷேந்திரன் என்ற செய்தி.. அதுவும் என்ன கேஸ் என்று கூட சொல்லாது… கண்ணால் பார்த்து கையில் கேமிரா இருக்கு என்று பிடித்து அவங்க அவங்க பணம் சம்பாதிக்க வேண்டி போடுறதை எல்லாம் பார்த்து விட்டு… பேச கூடாது..
அதுவும் எதிர்கட்சி ஒன்றும் தெரியாது பேசுவதில் பிரயோசனம் கிடையாது… இவர்களுக்கு எதிராக தீக்ஷேந்திரனே இறங்கி இருக்கிறார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்…
சும்மா வந்ததிற்க்கும் போனதிற்க்கும், எல்லாம் தீக்ஷேந்திரன் ஒரு வழக்கில் இறங்க மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்.
அந்த விசயம் மந்ராவுக்குமே தெரிய… இதில் காலையில் சட கோபன் ஆட்கள் வேறு வந்து..
“இன்னும் இரண்டு நாளில் கல்யாணம்.” என்று வேறு சொல்லி விட்டு செல்ல… மீண்டும் பாட்டி என்று திரிபுர சுந்தரி கையை பெண்ணவள் கெட்டியாக பிடித்து கொண்டாள்..
“பாட்டி எனக்கு ரொம்ப பயமா இருக்கு பாட்டி….” என்று…
இப்போது திரிபுர சுந்தரியின் முகமும் யோசனையில் தான் இருந்தது… கவிதாவுமே மாமியாரிடம்.
“அத்த நான் சொல்றேன் என்று கோபப்படாதிங்க. இனியும் அமைதியா இருக்க வேண்டாம் என்று தான் எனக்கு தோனுது… இந்த வீட்டு ஆண்களுக்கு உயிருக்கு ஆபத்து இருக்காது தான்.. ஏன்னா இப்போ இந்த கேஸை எல்லோரும் பார்க்கிறாங்க என்பதினால், ஆனால்…”
மருமகள் சொல்லாது விட்ட வார்த்தையின் அர்த்தம் அந்த மூத்த பெண்மணிக்கு தெரிந்தது.. அதில் தன் கண்களை மூடிக் கொண்டவர்…
“ஈசனே… இன்னும் எனக்கு என்ன என்ன வைத்து இருக்க….” என்று நினைத்து கொண்டவர் ஒரு பெரும் மூச்சுடன்..
தன் பேத்தி மந்ராவிடம் … “ அன்னைக்கு முதல் அமைச்சர் வீட்டிற்க்கு போன என்று சொன்னியே… எப்படி…? அவங்களை இப்போ காண்டாக்ட் பண்ண முடியுமா…. அவங்க தனிப்பட்ட போன் ஏதாவது உன் கிட்ட இருக்கா…?”
திரிபுர சுந்தரி அந்த பதட்டமான நிலையிலும் நிதானமாக தான் பிரச்சனையை கைய்யாண்டார் தான்.. ஆனால் முன் அந்த வீட்டிற்க்கு பேத்தி சென்றதிற்க்கு அடி வாங்கியவள்.. இன்று அதை பற்றியே தன் பேத்தியிடம் பேச வேண்டி உள்ளதே… என்று மனதிற்க்குள் வருந்தி தான் கேட்டார்.
உடனே மந்ராவின் முகம் பிரகாசமாக ஆனது… அது எல்லாம் ஒரு நிமிடம் தான்.. “ பாட்டி இருக்கு பாட்டி… முதல் அமைச்சர் மாமனாருக்கு பிஸியே செய்ய போன போது… முதல் அமைச்சர் பி.ஏ நம்பர் கொடுத்துட்டு… என்ன ஏது என்ற விவரம் சொல்ல சொன்னாங்க பாட்டி.. நானுமே அப்டேட் பண்ணிட்டேன்… ஆனா நம்ம விசயம் பேச முடியுமா.. பேசினாலும்… முதல் அமைச்சர் எல்லாம். அதுவும் சட கோபன் அவர் கட்சி.. எப்படி பாட்டி….?” என்று கேட்டவளிடம்.
“முதலில் நீ போனை போட்டு என் கிட்ட கொடு போதும்…” அவ்வளவு தான் திரிபுர சுந்தரி சொன்னது…
மந்ராவும் நம்பிக்கை இல்லாமல் தான் ஐந்து நாட்களுக்கு முன்… சேக்கிழாரின் உடல் நிலை தெரியப்படுத்த வேண்டி… கொடுக்க பட்ட எண்ணுக்கு மந்ரா அழைப்பு விடுத்தாள்…
ஒன்று இரண்டு மூன்று. என்று தொடர்ந்து அழைப்பு விடுத்தாள்.. அவளுக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை தான்… ஆனால் இவர்களுக்கு வேறு வழியும் இல்லையே.. ஒரு பழ மொழி சொல்வார்களே… சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரனின் காலில் விழுந்து விடலாம். என்று..