Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

மேவியமே மந்ராவின் மந்திரம்...2.2

  • Thread Author
அத்தியாயம்…2.2

வீடு பங்களா இல்லை இல்லை ஒரு பேலஸ் என்று சொல்ல கூடிய அளவுக்கு இருந்தது அந்த இல்லம்.. பின் சும்மாவா முதல் அமைச்சர் வசிக்கும் இடம் ஆயிற்றே சும்மாவா…? பாதுகாப்புக்கும் அந்த வீட்டிற்க்கு பஞ்சம் இல்லாது தான் இருந்தது..

அந்த வீட்டிற்க்குள் வெளியில் நிற்பவர்களை மீறி ஒரு சின்ன பொருள் கூட வீட்டிற்க்குள் நுழைய முடியாது.. அத்தனை பாதுகாப்பு.. வீட்டிற்க்கு உள்ளேயும்.. பாதுக்காப்பு தான்…

அவர்கள் சாப்பிடும் உணவும் கூட…. சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தான் அதை முதலமைச்சர் உண்பார்..

அது போல அனைத்து பரிசோதனைகளும் முடிந்து அந்த வீட்டின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக சாப்பிட வந்தனர்… இது போல் நடப்பது அதிசயத்திலும் அதிசயம் தான்…

யாராவது வெளி மாநிலம் இல்லை வெளி நாட்டில் இருப்பார்.. நாட்டை ஆளும் ராஜேந்திர பூபதி கூட வீட்டில் இருந்து விடுவார்.. ஆனால் தீக்ஷேந்திரன் வீட்டில் இருப்பது அதிசயம்…. அந்த அதிசயம் அன்று நடந்தது…

அந்த வீட்டில் பெரியவர் சேக்கிழார்…. இந்த கட்சியை ஆரம்பித்து வளர்த்து… அரசியல் செய்து ஆட்சி புரிந்து.. என்று பலது அவர் வயது காலத்தில் செய்து முடித்து விட்டு.. எழுபத்தி ஐந்து வயதில் .. வீட்டில் இப்போது முழு ஒய்வில் இருக்கிறார்..

இருக்கிறார் என்றால், இருக்கும் படியான சூழல், முன் உழைத்த உழைப்புக்கும் சேர்த்து வைத்து அவரின் உடல் நிலை அவரை வாட்டி எடுக்கிறது.. இருந்துமே அவரின் அந்த அதிகாரம்.. இந்த கட்சியை நான் தான் தோற்று வித்தேன் என்ற மனப்பான்மை அவருக்கு இன்றுமே இருக்கிறது தான்..

அதில் வீல் சேரில் வந்தவர் சாப்பிடும் மேஜையின் முன் வந்ததும்… தன் மாப்பிள்ளை ராஜேந்திர பூபதியிடம்.

“என்ன மாப்பிள்ளை அந்த சட கோபன் ஏதோ செய்துட்டான் போல.. நீங்க அதை பத்தி என் கிட்ட ஒன்றும் சொல்லலே….” என்றது தான் தாமதம்.

என்ன தான் வெளியில் பல அரசியல் இருந்தாலும். வீட்டிற்க்குள்ளூம் ஒரு சில அரசியல் இருக்க தான் செய்கிறது போல.

அதன் தொட்டு… “ நான் அவனை நம்ம கட்சியை விட்டு தூக்கி போட சொல்லி உங்க கிட்ட எத்தனையோ முறை சொல்லி இருக்கேன்.. ஆனா நீங்க தான். அவன் அப்பன் தாத்தன் என்று கதை சொல்லிட்டு இருக்கிங்க….” என்று கோபமாக கேட்டவர்..

பின்.. ஒரு வித சலிப்பிடன் சாப்பிட்டு கொண்டு இருந்த கையை உதறியவர்.. அடுத்து அவர் என்ன செய்து இருப்பாரோ… ஆனால் அவர் மனைவி காவ்யா ஸ்ரீ கணவன் அடுத்து என்ன செய்ய கூடும் என்ற அனுமானத்தில்…

காவ்யா ஸ்ரீ… “ என்னங்க…” என்று அழைத்து அவர் கை பிடித்து தடுக்க.. மனைவியின் முகத்தை பார்த்த ராஜேந்திர பூபதி பின்பு என்ன நினைத்தாரோ… தன் சாப்பாட்டை தொடர்ந்தார்…

ஆனாலுமே சேக்கிழார் விடாது தன் பேரனிடம் அதை பற்றி விசாரிக்க… தீக்ஷேந்திரன் விசயத்தை மேலோட்டமாக சொன்னவன்..

பின்..”தாத்தா கட்சி பத்தி நீங்க கவலை படாதிங்க. நானும் அப்பாவும் பார்த்துக்குறோம்…” என்று நம்பிக்கை அளித்தான்..

அதற்க்கு சேக்கிழார்… “ நீ பார்த்துப்ப உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு தீக்க்ஷா.. ஆனா அதை நீ கட்சியில் உள்ளே இருந்து பார்த்துக்கிட்டா நான் சந்தோஷப்படுவேன்.. ஏன்னா நீ அப்படியே என்னை போல்….” என்று தன் நரைத்த மீசையை நடுக்கமான கை கொண்டு தடவி விட்டு கொண்டவரிடம்..

“தாத்தா என்னை பார்க்கிறவங்க எல்லோருமே அப்பா போல இருக்கிறதா தான் சொல்வாங்க தாத்தா…” என்று சொன்னவர் பின் பேச்சை மாற்றும் பொருட்டு… அவரின் உடல் நிலையை பற்றி விசாரிக்க. ஆரம்பித்தான்.

அப்போது தான் சேக்கிழார்… “ ஒரு நாளு நாள் முன்னாடி.. நம்ம ஆஸ்பிட்டலில் இருந்து ஒரு பொண்ணு வந்து பிஸியோ செய்தா. நல்லா இருந்தது தீக்ஷா.. நேத்து ஒருத்தன் வந்தான்…

அவன் கை என் உடம்பில் வைத்ததுமே இன்னும் வலி தான் கூடினது போல இருக்கு….” என்று சேக்கிழார் தன் பேரனிடம் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே….

ராஜேந்திர பூபதி தன் கண் பார்வையில் நின்று கொண்டு இருந்த தன் உதவியாளர்… விவேகானந்தை அழைத்தார்…

“பெரியவர் யாரோ ஒரு பெண் பிஸியோ செய்தது நல்லா இருக்கிறதா சொன்னாரு… இனி அந்த பெண்ணே வந்து செய்வது போல ஏற்பாடு செய்து விடு…” என்று சொன்னார்.

இது தான் ராஜேந்திர பூபதி.. அவருக்கும் சேக்கிழாருக்கும் தனிப்பட்டு கருத்து மோதல்கள்… கட்சியை வைத்து என்று மோதல்கள் இருக்கும்.. இந்த மோதல் இன்று இல்லை… சேக்கிழார் பெண்ணை ராஜேந்திர பூபதி கட்டிய நாள் முதலே ஆரம்பித்து விட்டது…

இதில் பெரியவருக்கு தான் ஆரம்பித்து வளர்த்த கட்சியை தன் மகன் வராது மருமகன் தனக்கு அடுத்த இடத்தை பிடித்து கொண்டு விட்டானே… என்ற ஆதங்கமும் கூட சேர்ந்து விட. இந்த மோதல் இன்று வரை தொடர்கிறது.

இதில் தன் மகன் சிவக்குமார் தன் மனைவி வாணி மகள்கள் வைஷாலி.. வர்ஷா என்று அனைவரோடும் மொத்தமாக வெளி நாட்டிலேயே தங்கி விட.. அரசியலில் மட்டும் அல்லாது அனைத்திற்க்கும் ராஜேந்திர பூபதி தான் வாரிசாக இருக்கிறார்…

தன் பேரன் தீக்ஷேந்திரனாவது அரசியலுக்கு வரட்டும் என்று தான் எப்போதும் தான் வெளியில் செல்லும் போது எல்லாம் கூடவே அழைத்து சென்றது..

ஆனால் அரசியல் கட்சி என்று அவனுக்கு ஆர்வம் இருந்தாலுமே, தன் பேரன் தன் வாரிசாக நேரிடையாக கட்சியில் இல்லாதது அவருக்கு அது ஒரு பெரும் குறை தான்..

இருந்தும் அவன் தொழிலில் முன் நிலையில் இருப்பது…. அதை நினைத்து அவருக்கு பெருமை தான்…

மாப்பிள்ளை மருமகனுக்கு இடையே ஏகப்பட்ட கருத்து வேறு பாடுகள் இருந்த போதிலும், ஒருவர் மீது மற்றவர்களுக்கு அக்கறை இருக்க தான் செய்கிறது..

இதோ இன்று தன் மாமனார்.. ஒரு பெண் செய்யும் பிஸியோ செய்வது தனக்கு நன்றாக இருக்கிறது என்று சொன்னதும் அந்த பெண்ணே வரட்டும் என்று சொன்னவர்..

அதே போல் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் தன் மாமனாருக்கு முதுகு தண்டு வலிக்கும் என்பதினால். சேக்கிழாரை கவனித்து கொள்ளும் பெண்ணிடம்… .

“ம் பெரியவரை அறைக்கு கூட்டிட்டு போய் படுக்க வை….” என்று சொல்லி அனுப்பி வைத்த பின்.

மீண்டும் தன் உதவியாளரிடம் ஏதோ பேச ஆரம்பிக்கும் போது தான் விவேகானந்தரின் கை பேசி ஒலி எழுப்பியது…

அழைப்பது யார் என்று கூட பார்க்காது அதை கட் செய்து விட்டு ராஜேந்திர பூபதியிடம். “ம் சொல்லுங்க சார்..” என்று அவர் கேட்க மீண்டும் விவேகானந்தனின் கை பேசி ஒலி எழுப்பியது .. அவருமே மீண்டும் கட் செய்து விட்டு ராஜேந்திர பூபதியை பார்க்கும் போதே திரும்ப அவரின் பேசி சத்தம் போட..

“முதல்ல அதை எடுத்து பேசு….” என்று ஒரு வித எரிச்சலுடன் சொல்லவும்…அவரை விட்டு கொஞ்சம் தள்ளி வந்த விவேகானந்தன்..

ராஜேந்திர பூபதியிடம் காட்ட முடியாத கோபத்தை கை பேசியில் தன்னை அழைத்தவர் மீது காட்டினார்.

எடுத்த உடனே… “ ஆப் பண்றேன்னா முக்கியமான வேலை இருக்கு என்ற காமன்சென்ஸ் கூட இல்லையா….?” என்று பொரிய.

அழைப்பின் அந்த பக்கம் இருந்த திரிபுர சுந்தரி….

“நான் ராஜேந்திரன் கிட்ட பேசனும்.. அவனை பார்க்கனும்…” என்று கேட்கவும்.. முதலில் விவேகாந்தனுக்கு யார் கிட்ட பேசனும் என்று சொல்றாங்க என்று அவருக்கு புரியவில்லை..

ஏன் என்றால் ராஜேந்திர பூபதியின் பெயரை.. இது வரை யாரும் அழைத்து பேசியது இல்லை… அதனால் சட்டென்று புரியவில்லை புரிந்த நொடி…

“யாரு..? யார் கிட்ட என்ன பேசுறிங்க….? ம் தூக்கி உள்ளே வைத்து விடுவேன்…’ என்று விவேகானந்தன் தன்னையும் மீறி கத்தி விட்டான்..

இதில் சாப்பிடும் இடத்தில் தந்தையும் மகனும் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டு இருந்தவர்கள்… அவரின் மனைவியும் இடையே..

“எப்போவும் உங்களுக்கு கட்சி பேச்சு மட்டும் தானா… இந்த மாநிலத்துக்கு மட்டும் இல்ல இந்த வீட்டுக்கும் நீங்க தான் தலைவர்… அது உங்க நியாபகத்தில் இருக்கா…?” என்று சொல்லி கொண்டு இருந்த சமயம் தான்.. இங்கு தள்ளி நின்று பேசிக் கொண்டு இருந்தாலும் விவேகானந்தனின் இந்த சத்தம் இவர்களுக்கு கேட்டது..

அதில் தீக்ஷேந்திரன்.. “ என்ன பிரச்சனை….?” என்று கேட்டான்..

“யார் என்று தெரியல சார்… ஐய்யா பேரை சொல்றாங்க….” என்று இங்கு விவேகானந்தா தீக்ஷேந்திரனிடம் சொல்லி கொண்டு இருக்கும் போதே…

இவர்கள் பேசியது திரிபுர சுந்தரிக்கும் கேட்க…

மீண்டும் …. “ அவனுக்கு பேரு வெச்சதே நான் தான் டா… அவன் சொல்லட்டும் நான் அவன் பேரை சொல்ல கூடாது என்று… முதல்ல உங்க ஐய்யா ராஜேந்திரன் கிட்ட சொல்லு… சிங்க வாசல் திரிபுர சுந்தரி பேசுறேன்….என்று…” பேச்சு அத்தனை அதிகாரமாக விவேகானந்தனுக்கு கேட்டது..

மீண்டும் மரியாதை இல்லாது இந்த மாநிலத்தின் முதல் அமைச்சரை பேசுவதா என்ற கோபத்தில்… சாப்பிடும் மேஜையை நோக்கி நடந்து கொண்டே….

“ இப்போ உங்க வீட்டுக்கு போலீஸ் வந்துட்டு இருக்கு… சிங்க வாசல் ஊர் திரிபுர சுந்தரி என்று சொன்னா …” என்று சொல்லி கொண்டே விவேனாந்தன் ராஜேந்திர பூபதியை சமீபத்திருக்க.

யாருடனே பேசிக் கொண்டு இருக்கிறான் என்று மீண்டும் தன் மகனிடம் பேச ஆரம்பிக்கும் சமயம் தான் விவேகனந்தன் அந்த ஊர் பெயர் சிங்க வாசல் பெயர் திரிபுரந்தரி என்றதில் அமர்ந்து கொண்டு இருந்தவர் எழுந்து நின்று விட்டார்.. அவர் மட்டும் அல்லாது அவர் மனைவி காவ்யா ஸ்ரீயுமே… அதுவும் ஒரு வித பயத்துடன் தன் கணவனையும் பார்த்தார்..

தீக்ஷேந்திரன் நொடியில் தன் பெற்றோர் இருவர்களின் பார்வையை கவனித்தவன்.. அவனுமே விவேகானந்தனை தான் பார்த்தான்..

சிங்க வாசல்… தெரியும்.. தன் அப்பா அம்மாவின் சொந்த ஊர்… அந்த ஊரை வைத்து தான் முதலில் தன் தாத்தா ஆட்சியை பிடித்தது என்பதும் தெரியும்..

ஆனால் இந்த பெயர் என்று யோசனை ஓடும் போதே அவனின் தந்தை தன் எச்சில் கையை விவேகானந்தன் பக்கம் நீட்டி.

“தா… என்பது போல் சைகை செய்தார்… அவனோ… அவர் கையையும் அவர் முகத்தையும் மாறி மாறி பார்த்து கொண்டு இருக்க..

கொடு என்று அவனிடம் இருந்து கை பேசியை பரித்த ராஜேந்திர பூபதி.. அதை கைகள் நடுக்கத்துடன் தன் காதில் கூட வைக்க முடியாது தடு மாறிக் கொண்டு இருக்கும் சமயம்..

தீக்ஷேந்திரன் அந்த கைய் பேசியை தான் வாங்கியதோடு மட்டும் அல்லாது அதை ஸ்பீக்கரிலும் போட்டு விட்ட சமயத்தில்..

அழைப்பில் அந்த பக்கத்தில் இருந்த திருபுர சுந்தரி… “ என்ன டா…. செத்தவ எப்படி பேசுறா என்று யோசிக்கிறியாடா….?” என்று கேட்டார்..

இங்கோ பாட்டியிடம் எண்ணை போட்டு அழைப்பு ஏற்றதும்.. போனை ஸ்பீக்கரில் போட்டு கொடுத்து விட்டு பட பட என்று நின்று கொண்டு இருந்த மந்ரா.. பாட்டியின் முதல் பேச்சில் இருந்து பயத்துடன் பாட்டியை பார்த்து கொண்டு இருந்தவள்…

கடைசியாக. இந்த நாட்டின் முதல் அமைச்சரையே டா போட்டு பேசும் தன் பாட்டியை ஒரு வித பயத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் மந்ரா.

மகன் மருமகன் பேரன் மூன்று பேரையும் போலீஸ் பிடித்து கொண்டு சென்றதில் மூளை பேதலித்து போய் விட்டதோ என்ற பயத்தில்..

அதே பயந்த பார்வையிலேயே அங்கு நின்று கொண்டு இருந்த தன் அத்தையை அவள் திரும்பி பார்த்தாள்.. ஆனால் அவளின் அத்தையோ இவள் போல் எல்லாம் பயப்படாது பாட்டியின் பேச்சை மட்டுமே கவனித்து கொண்டு இருந்தார்…

பின் இவளுமே மீண்டும் பாட்டியின் பேச்சை கவனிக்க ஆரம்பிக்கும் சமயம்.. இவளின் பாட்டி அடுத்து பேசிய.

“எரிஞ்ச வீட்டில் எத்தனை பிணம் இருந்தது என்று கூட பார்க்காது நீயும் சேக்கிழானும்… வாக்கு கணக்கை பார்த்தா… செத்தவ முன்னே வந்து தான் நிற்பா டா….” என்ற திரிபுர சுந்தரியின் இந்த பேச்சை இந்த பக்கம் மந்ரா மட்டும் கேட்கவில்லை…

அழைப்பின் அந்த பக்கம். ராஜேந்திர பூபதி காய்வா ஸ்ரீ.. நம் தீக்ஷேந்திரனுமே கேட்டான்..


 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
205
திரிபுர சுந்தரி குடும்பத்தையே மாமனும் மருமகனும் கொல்ல பார்த்து இருக்காங்களோ 🧐 🧐 🧐 🧐 🧐

ராஜேந்திரன் பாட்டியோட சொந்தமா 🤔🤔🤔🤔🤔🤔🤔

லாயர் சார் என்ன பண்ண போறாரு 😏 😏 😏

தீஷி நீ ஓவரா போனா நாங்க சாண்டில்யனை கூட்டிட்டு வருவோம் 😉😉😉😗
 
Last edited:
Active member
Joined
Apr 2, 2025
Messages
43
Very interesting...

மறுபடியும் வக்கீலா😲😲 இதுக்கு முன்ன வந்த வக்கீல் வில்லங்கம் பிடிச்சவன் ஆச்சே 😱😱 நீயும் அப்டியா🙄🙄 ஆனா அவன் நியாயம் பக்கம் தான் இருப்பான்... நீ நிக்குறதே அதுக்கு எதிர் பக்கமா இருக்கே...

பாட்டிக்கு பையனா cm... ஆனா கொன்னதா பேச்சு வருதே.. பழைய பகை இருக்கு போலயே... மந்த்ரா அம்மாக்கு கூட ஏதோ லிங்க் இருக்கு போல...
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
217
பாட்டி இவங்களுக்கு நெருங்குன சொந்தம் போல.... அவங்ககிட்ட இருந்து தப்பிச்சு வந்து இங்க இருந்திருக்காங்க....

அரசியலுக்காக ஏற்கனவே கொல்லப் பார்த்தவங்க இப்போ மட்டும் சும்மா விடுவாங்களா கூடவே ஒரு கிரிமினல் லாயர் வேற..... 🤭
 
Well-known member
Joined
Aug 16, 2024
Messages
447
ஓ திரிபுரசுந்தரி குடும்பத்தை தீ வைத்து கொளுத்தினார்களா?.
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
214
திரிபுர சுந்தரி குடும்பத்தையே மாமனும் மருமகனும் கொல்ல பார்த்து இருக்காங்களோ 🧐 🧐 🧐 🧐 🧐

ராஜேந்திரன் பாட்டியோட சொந்தமா 🤔🤔🤔🤔🤔🤔🤔

லாயர் சார் என்ன பண்ண போறாரு 😏 😏 😏

தீஷி நீ ஓவரா போனா நாங்க சாண்டில்யனை கூட்டிட்டு வருவோம் 😉😉😉😗
🙌🙌🙌🙌 சபாஷ் மச்சீ.சாண்டி சரியான ஆளா இருப்பான்.
 
Well-known member
Joined
May 12, 2024
Messages
327
Thiripura Sunthari Sekkizhar oda thangachi ah iruppangalo???
Avar magan Sivakumar ponnu than Namma Manthra pola…
 
Top