Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

மேவியமே மந்ராவின் மந்திரம்...6.1 டீசர்

  • Thread Author
அத்தியாயம்…6…1

வினோத்துக்கு தீக்ஷேந்திரனின் அந்த அணைப்பு ஒரு வித கூச்சத்தை கொடுத்தது… அதில் அவன் ஒரு மாதிரியாக நெளிய….ஆரம்பித்ததில் தன் அணைப்பை விடுவித்த தீக்ஷேந்திரன்..

“என்ன ப்ரோ… நான் மேன் ப்ரோ…. எனக்கே இப்படின்னா…?” என்று கிண்டலாக வேறு கேட்டு வைக்க… வினோத்திற்க்கு அது இன்னுமே கூச்சத்தை கொடுக்க… அதை பார்த்த தீக்ஷேந்திரன் சத்தமாக சிரித்தான்.

பின்… “ உன்னை நான் ரொம்ப மாத்த வேண்டி இருக்கும் போலவே….” என்று சொல்லி வினோத்தின் வயிற்றில் செல்லமாக ஒரு குத்தும் வைத்தான்..

பாவம் வினோத்திற்க்கு தான் இந்த திடிர் என்று வந்த மாற்றத்தை ஏற்க முடியாது திண்டாடி போனான்… நன்கு படித்தவன்.. ஐடியில் கை நிறைய சம்பளத்தில் வேலை செய்கிறான்… அவனை பொறுத்த வரை முன் அவர்கள் அதாவது இவனும் மந்ராவும் வேலைக்கு செல்வதற்க்கு முன்பு இருந்த பொருளாதாரத்தை விட இப்போது அவர்களின் குடும்பம் பரவாயில்லை…

இதை விட அடுத்த கட்ட நகர்வுக்கு வேலையின் மூலம் வெளிநாட்டிற்க்கு செல்வதற்க்கு முயன்று கொண்டு இருக்கிறான்..

தன் முயற்சியில் வெற்றி பெற்று விட்டால், அவன் வேலை பார்க்கும் அருகில் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது.. அதை வாங்கி விடலாம்… என்று இது போல் மெல்ல மெல்ல அவன் வாழ்க்கையில் மேல் நோக்கி செல்ல அவன் திட்டம் இட்டுக் கொண்டு இருப்பவனின் முன்..

இந்த மாநிலத்தின் முதல் அமைச்சர்… உன் சித்தப்பா… என்று வந்து நின்றால், அதுவும் மீடியாவின் மூலம் தீக்ஷேந்திரனின் செயல்களை எல்லாம் ஒரு வித பிரமிப்போடு பார்த்தவன்…

இன்று அவனே தன்னை கட்டி அணைத்து.. சகோதரத்துவம் உறவை வளர்த்தால், அவனால் எதையும் நம்பவும் முடியவில்லை… இந்த உறவுக்குள் முழுமையாக அவனால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை..

ஒரு சமயம் இப்போது போல் தங்களின் உறவுகள் என்ன என்பது அரை குறையாக தெரியாது.. என்ன என்று முழுமையாக தெரிந்தால் தன் மனது ஏற்று கொண்டு விடுமோ… என்று நினைத்து பிரமிப்போடு நினறவனிடம் தீக்ஷேந்திரன் மீண்டும்..

“ப்ரோ எல்லாம் ஈசியா விடுங்க..அதுவா போக போக சரியாகிடும்… எனக்குமே இன்னும் முழுசா தெரியாது.. என்ன என்று தெரியலேன்னாலும்.. நீ என் ரத்த சொந்தம்.. அதுல மாற்றம் இல்லை தானே….?” என்று வினோத்திடம் கேட்டான்..

ஆம் மாற்றம் இல்லை தானே… அதனால் வினோத்தும்… “ ஆமாம்…” என்று ஒத்து கொண்டவனிடம்..

“பின் என்ன…?” என்று கேட்டவன் தன் பக்கத்தில் நின்று கொண்டு தன் பேச்சை வாய் பிளந்து கேட்டு கொண்டு இருந்த ராகவ்விடம்.

கண் காட்ட. அவனுமே இதயம் வடிவிலான இரு பூங்கொத்தை எடுத்து கொடுத்தான்.. தீக்ஷேந்திரன் முன்பே சொன்னதிற்க்கு ஏற்ப.

முதல் பூங்கொத்தை வினோத்திடம் கொடுத்தவன். அடுத்த பூங்கொத்தை தன்னையும் வினோத்தையும் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்த மந்ராவிடம்..

நீட்டிக் கொண்டே… “ உன் வினோத் அத்தானிடம் சொன்னது போலவே… உன் கிட்டேயும் இத்தனை டையலாக் பேசினா தான் இதை வாங்கிப்பியா நீ….” என்று கேட்டவன் பின்…

“நானுமே உன் அத்தான் தான் வாங்கிக்கலாம்…” என்று சொன்னதுமே மந்ரா சட்டென்று அந்த பூங்கொத்து என்ன வடிவில் இருக்கிறது என்று கூட பார்க்காது அவனிடம் இருந்து வாங்கி கொண்டவள்..

“தேங்கஸ்…” என்றும் கூறினாள்.. சின்ன வயதில் இருந்து ஒருவரிடம் ஒரு பொருள் வாங்கினால் நன்றி என்று சொல்லும் வழக்கத்தில்..

அதற்க்கு தீக்ஷேந்திரனோ… “நீ வாங்கினதுக்கு நான் தான் உன் கிட்ட தேங்க்ஸ் சொல்லனும் மந்திரம்…” என்றவனிடம்.

மந்ரா… “ என் பெயர் மந்ரா….” என்று அவனிடம் திருத்தி சொல்ல.

“ஆ மந்ரா மந்ரா….” என்று அவள் பெயர் தெரியாது அழைத்து.. பின் இப்போது பெண்ணவள் சொன்னதும் தான் திருத்திக் கொண்டது போல் கூறியவன்.. பின் அவன் கண் அசைவில் அந்த பூங்கொத்து அனைவருக்கும் கொடுத்து ராஜ மரியாதையோடு தான் திரிபுர சுந்தரி குடும்பத்தினர்… தீக்ஷேந்திரனின் பங்காளாவுக்குள் பிரவேசித்தது…

இதை அனைத்துமே அந்த பங்களாவின் நுழைவாயிலில் நின்று கொண்டு இருந்த காவ்யா ஸ்ரீயும்.. தன் அறையில் இருக்கும் பால்கனியில் வீல் சேரில் அமர்ந்து கொண்டே பார்த்த சேக்கிழாருக்கும் சரி… இனி முன் போல் எல்லாம் நடக்குமா…? என்பது சந்தேகமாக இருந்தது..

அதுவும் சேக்கிழாருக்கு தன் பேரன் என்ன பேசினான் என்பது கேட்கவில்லை என்றாலும், பார்த்த காட்சி… திரிபுர சுந்தரியின் காலில் விழுந்தது… பின் வினோத்தை கட்டி அணைத்து கொண்டது.. கடைசியாக மந்ராவிடன் பூங்கொத்தை கொடுத்தது என்று பார்த்தவருக்கு மனது ஆறவில்லை.

தன் பேரன் இத்தனை சிரித்த முகத்துடனும் பேசுவான் என்பதையே சேக்கிழார் முதல் முறையாக இப்போது தான் பார்க்கிறார்….

அனைவரும் அந்த பங்களாவிற்க்குள் நுழைவதை பார்த்த சேக்கிழார் என்ன நினைத்தாரோ… தன் வீல் சேரை பிடித்து கொண்டு இருந்த செவிலியரிடம்…

“ம் சீக்கிரம் கீழே இருக்கும் ஹாலுக்கு போ….” என்று அவசரப்படுத்தினார்… அவருக்கு அவர்கள் வரும் முன் தான் அங்கு இருந்து அவர்களை வர வேற்க வேண்டும்.. இது தன் வீடு .. நீங்க இந்த வீட்டிற்க்கு வரும் விருந்தினர் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற அந்த வேகமானது முன் திரிபுர சுந்தரியை எப்படி எதிர் கொள்வது என்று தயங்கியது கூட தகர்த்து எரிந்து விட்டு அவர் ஹாலுக்கு வந்தார்…

ஆனால் பாவம்.. அவர் அவசரத்திற்க்கு மின் தூக்கி கூட சதி செய்து சிறிது நேரம் கழித்து தான் செயல் பட அதற்க்குள் வீட்டிற்க்குள் திரிபுர சுந்தரி வீட்டவர்கள் பிரவேசித்தது மட்டும் அல்லாது அங்கு இருந்த இருக்கையில் திரிபுர சுந்தரி ராஜ தோரணையாக அமர்ந்தும் கொண்டு இருந்தார்…

வீல் சேரில் சேக்கிழார் வந்தவரை பார்த்து…. “ என்ன சேக்கிழார் எப்படி இருக்க…?” என்று முன் அழைத்தது போலவே… இந்த மாநிலத்தின் முன் நாள் முதலமைச்சரை அழைத்தவரை பார்த்து சேக்கிழாரும்…

“எனக்கு என்னங்க….? ரொம்ப ரொம்ப நல்லாவே இருக்கேனுங்க… பத்து ஆண்டுகள் இந்த மாநிலத்தை ஆண்டு…. இப்போ அதை என் மாப்பிள்ளை கிட்ட அந்த பதவியே கொடுத்து என்று… நான் ரொம்ப நல்லாவே இருக்கேனுங்க…..” என்று பதில் அளித்தார்..

அவர்கள் இருவரின் பேச்சிலுமே… ஏதோ மறை முக போர் நடக்கிறது என்பது இந்த பேச்சு அங்கு இருந்த அனைவருக்கும் உணர்த்தியது…

சேக்கிழாரின் இந்த பேச்சு திரிபுர சுந்தரிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை தான்… அந்த பேச்சு அவர் மனதை சுருக்கு என்று தைத்தது தான்….

இருந்தும் அதை காட்டாது… “ ரொம்ப ரொம்ப சந்தோஷம் சேக்கிழார்… என் கணவர்… உனக்கு புரியனும் என்றால் உன் முதலாளி சேக்கிழார்… நீ விருப்பபட்டே என்று… இந்த கட்சியை தொடங்கி உன் கிட்ட கொடுத்தார்… உன் கிட்ட கொடுக்காம அவரே நின்று இருந்தா… இன்னைக்கு அவர் பிரதம மந்திரியாவே ஆகி இருப்பார்..அது உனக்குமே தெரியும்…

ஆனா எது எப்படி இருந்தாலுமே, என் கணவர் ஆரம்பிச்சி கொடுத்த இந்த கட்சியை அவர் வாரிசு என் மகனுக்கே நீ கொடுத்த பாரு… ரொம்ப சந்தோஷம் சேக்கிழார்..” என்று சொன்ன திரிபுர சுந்தரி சேக்கிழாரை மிதப்பான ஒரு பார்வையும் பார்த்தார்..

இப்போதும் இந்த கட்சியை ஆளுவது என் மகன் தான்… அதாவது என் வாரிசு தான்…. உன் வாரிசு கிடையாது என்பது போல் பேசியவரின் பேச்சுக்கு பதில் கொடுக்க முடியாது அவர் இருக்க.

அடுத்து திரிபுர சுந்தரியின் தாக்குதல் காவ்யா ஸ்ரீயின் பக்கம் சென்றது….
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
217
சேக்கிழார் சும்மா இல்லாம இது தேவையா.. பாட்டி ஆரம்பிச்சுட்டாங்க 😎

தீக்ஷா உனக்கு அத்தை பொண்ணு பேரு சரியா தெரியாது இல்ல 😝
 
New member
Joined
Jun 14, 2024
Messages
8
அப்பாவும் மகளும் திரிபுரசுந்தரியை சீண்டாமல் இருந்தால் தப்பிப்பார்கள். நன்கு விறுவிறுப்பாக செல்கிறது கதை.
 
Top