Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

மேவியமே மந்ராவின் மந்திரம்....7.2

  • Thread Author
அத்தியாயம்….7.2 நல்லது…

திரிபுர சுந்தரி இன்றும் நினைப்பார்… தங்கள் வாழ்வில் அந்த நாள் வராது இருந்து இருக்கலாம் என்று.. ஒரு சில சமயம்… நடந்தது தன்னால் தானோ… தன் மகனுக்கு தான் திருமணம் செய்ய முனையாது இருந்து இருந்தால், அந்த நாள் வந்து இருக்காது தானே….

இல்லை சேக்கிழார் தன் மகனுக்கு தன் பெண்ணை கேட்டதும் கொடுத்து இருந்து இருந்தால், தன் குடும்பம் இப்படியாகி இருக்காதோ…. சேக்கிழார் நரிக்குணம் உடையவர் தான்…

ஆனால் அவன் மகன் நல்லவன் தானே கொடுத்து இருந்து இருந்தால், இத்தனையும் நடந்து இருக்காதே….என்று நினைப்பவர்.. பின் அவரே… சேக்கிழார் அப்போது கூட ஏதாவது செய்து இருப்பார்..

ஆனால் அவர் ஆமை போல… வீட்டிற்க்குL விட்டாச்சி.. என்பது போல நினைக்கும் அந்த நாளை இன்று நினைத்தாலுமே திரிபுர சுந்தரியின் மனது பதறி போய் விடும்…

அன்று இரண்டு ஊர் ஜனம் மட்டும் அல்லாது சுத்து பட்டியில் இருக்கும் அனைத்து ஊர் மக்களும் அந்த திருமணத்திற்க்கு தான் கூடி இருந்தனர்..

அந்த நாள் மட்டும் அல்லாது கடந்த பத்து நாட்களாகவே… அந்த ஊரே விழா கோலமாக தான் காணப்பட்டது… இந்த திருமணம் கொண்டு.. எந்த வீட்டிலும் அடுப்பு எரியவில்லை…

நீல கண்ட பூபதி சொல்லி விட்டார்…. ஒரு இடத்தை சொல்லி.. அங்கு சாப்பாடு அந்த அந்த நேரத்திற்க்கு தக்க போட படும் என்று… அப்படி ஏற்பாடு செய்து இருந்த அந்த திருமணத்திற்க்கு மாப்பிள்ளை மட்டும் வரவே காணும்..

ஆம் சேக்கிழார் திட்டம் இட்டது ஒன்று. ஆனால் நடந்ததோ வேறு ஒன்று.. காவ்யா ஸ்ரீயின் இரண்டாம் குழந்தை பிறப்பதில் பெரும் பிரச்சனை ஆகி விட்டது.

அதன் தொட்டு சேக்கிழாரே திருமணம் முன் தினம் தன் மகளுக்கு உடம்பு சரியில்லை என்று அமெரிக்காவுக்கு பறந்து விட்டார். அவர் இதை திட்டம் இடவில்லை தான்…

ஆனால் நடந்தது அனைத்தும் அவருக்கு சாதகமாக தான் அமைந்து விட்டதா… இல்லை அவர் அமைத்து கொண்டாரா என்று தெரியவில்லை… ஆனால் ஒன்று…. அன்று நீல கண்ட பூபதியின் குடும்பம் சிதைக்கப்பட்டது என்பது மட்டும் நிச்சயம்…

விடிந்தால் திருமணம் இன்னுமே இரண்டு மாப்பிள்ளையில் ஒருவர் வர காணும்… சாதாரணமாக இது போல சமயங்களில் வராத மாப்பிள்ளையின் பெண் வீட்டார்கள் பயத்தில் தான் இருப்பார்கள்..

ஆனால் இங்கு நீல கண்ட பூபதியின் மீது இருக்கும் நம்பிக்கையில் அவர் ஒன்று சொன்னால் அதை செய்து முடித்து விடுவார் என்ற நம்பிக்கையில் வருபவர்களை வர வேற்பது,… உபசரிப்பதுமாக இருந்தனர்…

ஆனால் இதற்க்கு நேர் மாறான மன நிலையில் நீல கண்ட பூபதியும் திரிபுர சுந்தரியும் இருந்தனர்.. இதில் அவர்களின் மூன்று பெண்களில் ஒரு பெண் மணமேடை காணும் கனவில் முகம் முழுவதும் புன்னகையில் பூரித்து கொண்டு இருக்க. மற்ற இரு பெண்களும்… அங்கும் இங்கும் என்று சாதாரணமாகவே அவர்களின் அரண்மனை அலங்காரத்தில் மின்னும்… இன்று அங்கு திருமணம் நடக்க இருக்கிறது சொல்லவும் வேண்டுமோ…

ஆம் நீல கண்ட பூபதியின் வீடு அரண்மனை தான்… அங்கு தான் வழி வழியாக அந்த வீட்டின் பெண்ணுக்கும் சரி… ஆணுக்கும் சரி திருமணம் செய்து வைப்பது….

அதன் தொட்டு விவேகனும்.. அவன் தங்கை சுபத்ராவும்… அன்னை தந்தையோடு இரண்டு நாள் முன்பே அந்த அரண்மனைக்கு வந்து விட்டனர்…

எப்போதும் ஒரு திருமணம் அந்த அரண்மனையில் நடந்தாலே.. விண்ணுலகமா என்று வியக்கும் வகை அலங்காரத்துடன் காட்சி அளிக்கும் அந்த அரண்மனை….

இந்த முறை இரண்டு திருமணம் நடை பெற உள்ளதால், அந்த அரண்மனையின் வனப்பு இன்னுமே கூடி தெரிந்தது..

இந்த ஏற்பாட்டை அனைத்தும் முன் இருந்து செய்தது நம் மகேந்திர பூபதி தான்… இடை இடையே அந்த வீட்டின் ஓட்டுனரின் மகளான கவிதாவையும் அவனின் பார்வை தொட்டு கொண்டது… கவிதாவோ மகேந்திரனின் பார்வைக்கு உண்டான அர்த்தம் புரிந்தாலும் பிடித்தாலுமே பதில் பார்வை தர மறுத்தாள்…

காரணம்.. தனக்கும் மகேந்திரனுக்கும் இருக்கும் ஏற்றத்தாழ்வு.. அதுவும் சேக்கிழார் மகனுக்கு இந்த வீட்டு பெண்ணை கேட்டு இவர்கள் மறுத்தை பார்த்தவள் ஆயிற்றே …

அய்யோ இது எனக்கு வேண்டாம் என்று தன் மனதிற்க்கு அவளே சொல்லிக் கொண்டாள்..இந்த பழம் புளிக்கும் என்று….

அதுவும் சேக்கிழார் மகன் வெளி நாட்டில் எல்லாம் படித்து வந்தவர் அவருக்கே அப்படி.. தான் இந்த ஊரில் இருக்கும் பள்ளியில் பத்தாவதை கூட முடிக்காதவள்.. தான் எல்லாம் எம்மாத்திரம் என்று நினைத்தவள்…

வேலையாட்களுக்கு என்று வாங்கி தந்த உடையே ராஜ கம்பலம் என்பது போல் அதை அணிந்து கொண்டு…. சொல்லும் வேலைகளை செய்து கொண்டு இருந்தாள்..

ஜீவிதா அப்போது பதினாறு வயதுடைய பெண்…. மற்ற பெண்கள் போல் வேலையாட்களோடு எல்லாம் எளிதில் பழகி விட மாட்டாள்… அன்னை போலவே தோற்றத்திலும் சரி தோரணையிலும் சரி இருப்பாள்…

கவிதா ஒரே இடத்தில் நின்று கொண்டு இருப்பதை பார்த்த ஜீவிதா.. “ என்ன கவிதா. என்ன பார்வை வேண்டி இருக்கு…” என்று அவள் போகும் போது ஒரு அதட்டல் போட்டு விட்டு சென்றாள்..

அதை பார்த்த மமேந்திரன் தான் தன் குட்டி தங்கையை வழி மறித்து…. “ என்ன டா குட்டி… கவிதா உன்னை விட பெரியவங்க.. இப்படி மரியாதை இல்லாம கூப்பிடுற…. மரியாதையா பேசி பழகு ஜீவிம்மா…” என்று சொன்ன போது..

“என்னை விட எவ்வளவு பெரியவங்க…?” என்று கேட்ட தங்கையின் திட்டம் தெரியாது பாவம் மகேந்திரனும்…

“மூன்று வயசு எட்டு மாசம் பத்து நாள்….” என்று அவன் சொன்ன கணக்கு சரி தான். ஆனால் இது போலான விசயத்தில் சரியான கணக்கை விட தப்பான கணக்கு போட்டால் தான் விடை சரியாக இருக்கும் என்பது தெரியாது போய் விட்டது..

ஆளை அடி.. வெட்டு என்று ஒருவரை கை காட்டினால் போதும். ஒரே ஒரு வெட்டு தான். துண்டாவது நிச்சயம்.

அந்த வீட்டின் பெரிய மகன் ராஜேந்திர பூபதி அவன் பெயருக்கு ஏற்றது போல் உடையில் அழுக்கு படாது தோரணையாக வளர்ந்தார் என்றால், மகேந்திரன் பெரியவனுக்கு நேர் மாறாக.. தங்கள் கீழ் அத்தனை பேர் இருந்தாலும்… நிலத்தில் இறங்கி வேலை செய்பவன்..

நல்லது என்று வந்தால் தட்டி கொடுக்கும் மகேந்திரன்.. கெட்டது என்று வந்தால் வெட்டி விடுவான்.. அடி தடிக்கு பேர் போனவன்… அதனால் தானோ என்னவோ தங்கையின் விரித்த வலையில் அவன் மாட்டிக் கொண்டான். பொதுவாக கோபம் இருப்பவனுக்கு சூது வாது தெரியாது தானே… அது உண்மை தான் போல.

அண்ணனின் சரியான கணக்கில் சட்டென்று ஜீவிதா…. “நான் பிறந்த நேரம் சொல்லுங்க ண்ணா..?” என்று கேட்டாள்…

பிறந்த நாள் கேட்டால் அந்த வீட்டின் இளவரசியின் பிறந்த நாள் மறந்து இருப்பானா… அவனுக்கு மட்டுமா…? அந்த ஊருக்கே ஜிவிதாவின் பிறந்த நாள் தெரியும்… ஏன் என்றால் அன்று தான் தை பொங்கல்.. அந்த வீட்டின் இளவரசி கையினால் தான் அன்று ஊரு சனத்துக்கே புத்தாடை கொடுப்பது..

அப்படி இருக்க தன் அண்ணன் தன்னுடைய பிறந்த நாள் கேட்டால் சரியாக சொல்லி விடுவான் என்று தான் பிறந்த நேரத்தை கேட்டது… இன்று அனைத்திற்க்கும் பயந்து நிற்கும் அதே ஜீவிதா தான். அன்று தன் அண்ணனை மடக்கி மடக்கி கேள்வி கேட்டு மகேந்திரனை திணற அடித்து கொண்டு இருந்தாள்…

பாவம் அண்ணன் காரன் தடுமாறி ஒரு வழியாக சரியாக தான் சொல்லி விட்டான். ஆனால் அவன் தடுமாறிய அந்த நேரத்தை பிடித்து கொண்ட ஜீவிதா…

“பேருக்கு தான் வாய் மட்டும் தான் நான் உங்க இளவரசி என்று நீங்க சொல்றது… ஆனா உங்க மனசுல வேறு ஒருத்தவங்களை தான் உங்க இளவரசியா நினைக்கிறது போல….?” என்று தன் இடுப்பில் கை வைத்து கொண்டு கேட்ட ஜீவிதாவின் தோரணையானது அசல் இளவரசி போல் தான் இருந்தது.

தன் அக்கா அண்ணன் திருமணத்திற்க்கு என்று பிரத்தியோகமாக பெண்ணின் விருப்பத்தை கேட்டு பட்டு எடுத்து நெய்து…. என்று பெண்ணுக்கு இணையாக தயாரித்த அந்த பட்டு பாவடை தாவணியில்.. ராணி போலான அணிகலங்களில் அவள் நின்ற தோரணையானது மகேந்திரனுக்கு ஒரு நிமிடம் தன் அன்னையே தன் முன் வந்து நிற்பது போலவே காட்சி அளித்தது..

அதில் இன்னுமே பவ்யம் கூடி போன மகேந்திரன்.. “ இல்ல டா… கவி ஸ்கூல் டீசி தர மாட்டாங்க என்று சொன்ன போது நான் தான் நம்ம ட்ரைவர் கூட போனது.. அதுல பார்த்தது… அது தான் டா என் செல்லம்.” என்று அத்தனை வேலைகள் இருந்தாலுமே தன் தங்கையை சமாதானம் படுத்தினால் தான்.. அடுத்த வேலையே ஓடும் என்பது போல பாசம் வைத்திருக்கும் அண்ணன் காரன் இத்தனை சொல்லியும் அவனின் இளவரசி..

“ அப்படி இருந்தால் சரி தான்… பார்த்துண்ணா…” என்று விட்டு தான் சென்றது… ப்பா என்று ஒரு பெரு மூச்சு எடுத்து விட..

அதற்க்கு நான் விடுவேனா என்று மீண்டும் அண்ணன் முன் வந்து நின்ற ஜீவிதா…

“நீங்க சொல்றதும் சரியா தான் இருக்கு… பெரியவங்களை பேர் வைச்சி கூப்பிட கூடாது தான்.. அப்புறம் நம்ம அம்மாவை தான் என்ன பெண்ணை வளர்த்து வைத்து இருக்க என்று குறை சொல்லுவாங்க…” என்று ஜீவிதா சொல்லி கொண்டு இருக்கும் போதே…

மகேந்திரன்.. “ தெரியும் டா.. நீ ரொம்ப நல்ல பெண்… சொன்னா கேட்டுப்ப…” என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும் போதே.

ஜீவிதா… “ நான் இனி கவி அக்கா என்று கூப்பிடுறேன்… எனக்கு அக்கான்னா உங்களுக்கு…?” என்று சொல்லி ஓடி விட்டாள்…

“யப்பா சாமீ.” என்று தலை மீது கை வைத்து கொண்டவன்.. பின் ஒன்றன் பின் ஒன்றாக வேலைகள் அவனின் நியாபகத்திற்க்கு வந்து விட… அவனுமே அடுத்து அடுத்து வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்..

ஆனால் இத்தனை ஏற்பாடு யாருக்காக செய்ததோ.. அவன் மட்டும் வர காணும்.. நேரம் போக போக மகேந்திரனுக்கு கூட பயம் தான்…

இந்த காலம் போல்.. செல்லில் எல்லாம் அழைத்து கேட்க முடியாது… ராஜேந்திரன் வந்தால் தான் ஆச்சு… என்பது போலான நிலையில் தான் இந்தியாவில் இவர்கள் இருக்க…

அங்கு அமெரிக்காவிலோ… இரண்டு நாட்கள் முன்… ராஜேந்திர பூபதி சேக்கிழாரை அழைத்து..

“மாமா காவ்யா ஸ்ரீக்கு ரொம்ப முடியலே மாமா.. ரொம்ப சீரியஸ் என்று சொல்றாங்க..பேசாம நான் அம்மா கிட்ட எல்லாம் சொல்லிடலாமா.. எனக்கு என்னவோ அவங்க கிட்ட இருந்து மறைப்பது தப்பு என்று எனக்கு தோனுது மாமா…. அதனால தானோ என்னவோ… எட்டு மாதத்திலேயே… பனிக்குடம் உடைந்து.. உடைந்தது கூட தெரியாது வீட்டில் விழுந்து கிடந்தவளை தான் நான் ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்து சேர்த்து இருக்கேன் மாமா.. இந்த நேரம் நான் அங்கு வந்து இருக்க வேண்டியது… இப்போ எனக்காக எல்லோரும் வெயிட் பண்ணிட்டு. எனக்கு என்னவோ தப்பா தெரியுது மாமா…” என்று அன்று ராஜேந்திர பூபதி பட படத்து தான் போனான்..

காரணம்… காவ்யா ஸ்ரீ மீது இருக்கும் காதலில் தன் வீட்டவர்களுக்கு தெரியாது மறைத்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து குழந்தையும் பெற்று கொண்டாலுமே, ராஜேந்திர பூபதியின் மனதில் ஒரு குற்றவுணர்ச்சி… இருக்க தான் செய்தது.. இரவில் கூட அவருக்கு சரியான உறக்கம் இல்லாது தான் போனார்..

இனி காலம் முழுவதும் உனக்கு இது தான் என்பது அன்று சொல்லாமல் சொன்னது தான்.. ஆனால் ராஜேந்திரன் தான் அதை கவனிக்க மறந்தார்.

ராஜேந்திரன் பேச்சுக்கு…. சேக்கிழார்… “ முதல்ல இப்போ காவ்யா தான் முக்கியம் மாப்பிள்ளை… இங்கு அய்யன் கிட்ட பேரனை கையில் கொடுத்து உங்க அம்மா கிட்ட இப்போ பிறக்க போகும் பேத்தியை கையில் கொடுத்தா அவங்க கோபம் எல்லாம் பறந்து போயிடும்.” என்று சொல்லி மாப்பிள்ளையை சமாளித்து.. பின் இங்கு…

“பெண்ணுக்கு உடம்பு சரியில்ல ஐய்யா. அங்கு மவன் மட்டும் தான் இருக்காம். அவனுக்கு ஒன்னும் தெரியல.. பயந்து போய் இருக்கான்..” என்று நீல கண்ட பூபதி என்ன ஏது என்று கேட்கும் முன்பே…. சேக்கிழார் அன்று அமெரிக்காவுக்கு மறந்து விட்டார்…

திரிபுர சுந்தரி கூட கணவன் தன்னிடம் சொன்ன போது என்ன பிரச்சனை ஏது பிரச்சனை என்று கேட்டவர்.. பின் நம்ம மகன் கூட அங்கு தானே இருக்கான்… போனா என்ன ஆச்சு ஏது ஆச்சு என்று சொல்ல சொல்லி இருக்காலம் தானுங்கலே..” என்று கேட்ட போது.. இது திருமணத்திற்க்கு இரண்டு நாட்கள் முன் நடந்த பேச்சு வார்த்தை..

அதில் நீல கண்ட பூபதி… “ இந்த நேரத்திற்க்கு உன் மவன் கிளம்பி இருப்பான் தாயி… ஏன் எப்போ பாரு அவனை சந்தேகமாவே பார்க்கிற….” என்று வேறு சொன்னார்..

திரிபுர சுந்தரியும்.. முதலில் மகன் வரட்டு… இரண்டு திருமணமும் முதலில் நல்ல விதமாக முடியட்டும்.. பின் அந்த சேக்கிழாரை பார்த்துக்கலாம்… என்னவோ அவனிடம் சரியில்லை என்று நினைத்தவருக்கு தெரியவில்லை.. இனி பார்க்க ஒன்றும் இல்லை என்பது…




 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
214
ராஜேந்திரன் கல்யாண நாளும் நெருங்கிடுச்சு ஊருக்கும் போக முடியாத சூழல் வந்த பிறகும் உங்க அம்மா கிட்ட சொல்லாமல் 😔😔😔 அப்பவும் மாமனார் கிட்ட தான் யோசனை கேட்குறீங்க 🙁🙁🙁🙁

சேக்கிழார் காவ்யா கூட ராஜேந்திரனையும் பாட்டி சும்மா விட கூடாது 🤭 🤭 🤭 🤭

தன்னோட பெத்தவங்க செஞ்ச துரோகத்தை பத்தி தெரிய வரும் போது தீஷன் என்ன செய்வான் 🤨🤨🤨
 
Last edited:
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
229
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
நேரம் சரியில்லாம போனா எறும்பு கூட யானைய குசலம் விசாரிக்கும்.
அமெரிக்கா போயி அறிவை அடமானம் வச்சிட்டு அப்பனாத்தா கழுத்தை அறுத்துட்டு இப்ப வந்து உருகவேற செய்யறானே இந்த பூப்ப்பதி😡😡😡😡😡
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
244
மச்சீ நீங்க எஸ்எம்எஸ் சைட் பக்கமா போனீங்களா?🙄🙄🙄
இல்ல மச்சி ரொம்ப நாள் ஆகிடுச்சு இடையில கொஞ்சம் சைட் ஒர்க் ஆகலை.... அப்புறம் நானும் அந்த பக்கம் போகல.... ஏன் கேட்குறீங்க.....
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
229
இல்ல மச்சி ரொம்ப நாள் ஆகிடுச்சு இடையில கொஞ்சம் சைட் ஒர்க் ஆகலை.... அப்புறம் நானும் அந்த பக்கம் போகல.... ஏன் கேட்குறீங்க.....
சைட் டிபரன்டா இருக்கு. புதுசா யாரையும் ஸ்டோரியையும் காணோம் மச்சீ. ரிப்ளை ஏதும் போட முடியலை ப்பா. அதான் உங்களை கேட்டா தெரியுமே ன்னு கேட்டேன் மச்சீ.
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
244
சைட் டிபரன்டா இருக்கு. புதுசா யாரையும் ஸ்டோரியையும் காணோம் மச்சீ. ரிப்ளை ஏதும் போட முடியலை ப்பா. அதான் உங்களை கேட்டா தெரியுமே ன்னு கேட்டேன் மச்சீ.
நானும் பார்த்தேன்.... சைட் மட்டும் தான் மாத்தி இருக்காங்க ஆனா கதை எதுவும் வர்றதில்லை போல.... சில writers அவங்க own சைட்ல நியூ ஸ்டோரீஸ் எழுதுறாங்க மச்சி....
கலா சிஸ் ., சுசி சிஸ் இப்போ எதுவும் எழுதல...
நீங்க யாரை தேடுறீங்க மச்சி....
 
Last edited:
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
229
நானும் பார்த்தேன்.... சைட் மட்டும் தான் மாத்தி இருக்காங்க ஆனா கதை எதுவும் வர்றதில்லை போல.... சில writers அவங்க own சைட்ல நியூ ஸ்டோரீஸ் எழுதுறாங்க மச்சி....
கலா சிஸ் ., சுசி சிஸ் இப்போ எதுவும் எழுதல...
நீங்க யாரை தேடுறீங்க மச்சி....
அவிகளத்தான் தேடுனேன் மச்சீ
 
New member
Joined
Jun 14, 2024
Messages
9
குள்ளநரி சேக்கிழாருக்கு பேரன் கையால் தான் முடிவு வரும் போல.
 
Top