Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

யென்னை கொண்டாட பிறந்தவன்...10..1

  • Thread Author
அத்தியாயம்….10…1

இரவு முழுவதுமே ஒரு பொட்டு தூக்கம் கூட இல்லாது படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டு இருந்த சித்தார்த் அன்று சீக்கிரமாகவே கல்லூரிக்கு கிளம்பி விட்டான்… அதனால் அன்று மகி தன் மாமா ராம் சந்திரனோடு தான் கல்லூரிக்கு வந்தது…

வந்தவள் எப்போதும் முதலில் பார்ப்பது ஸ்ருதியை தான்.. அது என்னவோ ஸ்ருதி இவள் வருகைக்காகவே காத்து கொண்டு இருந்தது போல் தான் இவளை பார்த்ததும் தன் கேங்கில் இருந்து தனித்து வந்து இவளிடம் இரண்டு வார்த்தையாவது பேசி விட்டு தான் செல்வாள்..

இன்று அவள் வராது போக மகியின் கண்கள் எப்போதும் அவள் நட்போடு அமர்ந்து இருக்கும் பகுதியை தான் பார்த்தது..

வதனி சைகையில் வரவில்லை என்று சொன்னதுமே மகி “ஒகே..” என்பது போல தலையாட்டி விட்டு தன் வகுப்பு சென்று விட்டாள்..

இடைவேளை போதும்.. மதியம் சாப்பிடும் போதும் கேண்டினில் தனித்து தான் அவள் சாப்பிட்டது.. அது என்னவோ ஸ்ருதியோடு பழகிய அளவுக்கு தன் வகுப்பு பெண்களோடு கூட அவள் பழகவில்லை..

வதனி தான் மகி அருகில் அமர்ந்து அவள் கட்டிக் கொண்ட வந்த உணவில் இருந்து சிறிது எடுத்து சாப்பிட்டவள் தான் கேண்டினில் வாங்கிய உணவில் கொஞ்சம் எடுத்து மகியின் டிபன் பாக்ஸ் மேல் மூடியில் வைத்தவள்..

“உன் அத்தை நல்லாவே சமைக்கிறாங்க.” என்று பாராட்டினாள்..

மகியும்… “ம் ரொம்ப நல்லா சமைப்பாங்க.. என் அத்தான் செய்தா கூட என் அத்தை போல தான் இருக்கும்..”

எப்போதும் இது போல பேச்சுக்களை மகி ஸ்ருதியிடம் தான் பேசுவாள்.. இன்று வதனியிடம் பேச. வதனி புரிந்து கொண்டு விட்டாள்..

ஸ்ருதி ஏன் தினம் தினம் இவளோடு பேசுகிறாள் என்பதை…

“ம் உன் அத்தான் சமைப்பாங்கலா…? பரவாயில்லையே.” என்று சொன்னதற்க்கு..

“அத்தான் மட்டும் இல்ல… மாமாவும் செய்வாங்க.. வாரத்தில் ஐந்து நாட்கள் அத்தை என்றால், இரண்டு நாட்கள் அத்தான் மாமா தான்.. இரண்டு நாட்கள்… அத்தையை ஃப்ரி பண்ணி விடுவாங்க…” என்று சொல்ல வதனி உண்மையில் மனதில் பாராட்டிக் கொண்டாள்..

ஸ்ருதிக்கு சித்தார்த் கிடைத்தால், அவள் லக்கி தான் என்று..

சாப்பிடும் இடையில் மகி.. “சீனியர் ஏன் வரல…?” என்று கேட்க..

“ம் தெரியல.. போன் போட்டா எடுக்கல…” என்று சொன்னவள் பின்..

“நீ நேத்து ரொம்ப நல்லா படினா…” என்று பாராட்ட… மகியும்..

“நன்றி சீனியர் என்றவள்.. நீங்களுமே நல்லா ஆடினிங்க…” என்றதற்க்கு..

“நேத்து நான் ஆடினேன்.. அது தான் என் நடனம்.. ஆனா ஸ்ருதி ரொம்ப நல்லா ஆடுவா… நேத்து அவள் கொஞ்சம் சொதப்பி விட்டுட்டா.. அவள் மட்டும் கவனம் அவள் நடனத்தில் மட்டும் இருந்தால், கண்டிப்பாக அவளுக்கு தான் பிரைஸ் கிடைத்து இருக்கும்..” என்ற வதனியின் இந்த பேச்சை மகி பெரியதாக எடுத்து கொள்ளவில்லை…

“ஓ.. “ என்று சொன்னவள்..

முதன் முதலாக. “சீனியர் வீடு எங்கு இருக்குக்கா… போன் எடுக்கல உடம்பு ஏதாவது சரியில்லாது இருக்க போகுது.. நாம ஈவினிங்க வேணா அவங்க வீட்டிற்க்கு போய் பார்த்துட்டு வரலாமா…? நான் அத்தான் மாமா கிட்ட சொன்னா அவங்க காரில் யாராவது தருவாங்க.. போய் பார்த்து விட்டு வரலாம்…”

இது வரை ஸ்ருதியின் வீடு.. அவளின் அம்மா அப்பா என்று அவள் விசயம் ஒன்று கூட மகிக்கு தெரியாது.. ஸ்ருதி தான் மகி விசயத்தை அனைத்தும் கேட்டு தெரிந்து கொள்வாள்..

மகி வதனியிடம் இப்படி பேசிக் கொண்டு இருக்கும் போது தான் சித்தார்த்… காபி கப்போடு அவர்கள் எதிரில் வந்து அமர்ந்தது..

இது வரை இது போல் எல்லாம் சித்தார்த் அமர்ந்தது கிடையாது.. அன்று பூனையை காப்பற்றும் போது பயத்தில் தன் அத்தானை கட்டி பிடித்ததோடு சரி.. அதில் மகி சித்தார்த் ராம் சந்திரனுக்கு உறவு என்று கல்லூரியில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது..

ஒரு சிலருக்கு சித்தார்த் மகியை தான் திருமணம் செய்ய உள்ளார் என்று கூட பேசிக் கொண்டனர்.. அதனால் மகியிடம் யாரும் தவறான எண்ணத்தில் நெருங்கியதில்லை..

அன்று ஒரு நாள் தவிர்த்து சித்தார்த் இது போல அவளிடம் பேசியது அமர்ந்தது எல்லாம் கிடையாது.. வீட்டுக்கு போவது கூட கல்லூரி முடிந்ததும் மகி கார் நிறுத்தும் இடத்திற்க்கு வந்து நின்று விடுவாள்..

அத்தான் மாமா முதலில் யார் வருகிறார்களோ அவர்களோடு அவள் வீடு சென்று விடுவாள்.. இன்று அமர்ந்ததும்..

மகி தான்.. “என்ன அத்தான் சாப்பிடலையா…? காலையில் கூட சாப்பிடாது வந்துட்டிங்க… அத்தை தான் திட்டிட்டு இருந்தாங்க.. மாமா லன்ச் உங்களுக்கும் சேர்த்து கொண்டு வந்தாங்கலே…” என்று பேசும் போது வதனி இருவரின் பேச்சையும் கேட்டு கொண்டு இருந்தவள்..

இப்போது தான் அங்கு இருப்பதா.. இல்லை செல்வதா…? என்ற யோசனை செய்தவள் சரி செல்லலாம் என்று எழுந்து நின்ற போது தான் மகியின் கேள்விக்கு முதலில் பதில் அளிக்காத சித்தார்த்…

வதனியிடம்… “ நீ ஏன் மா போற.. நான் இந்த காபியை குடித்து விட்டு போய் விடுவேன்.. நீங்க கண்டினியூ பண்ணுங்க… என்று சொன்னவன் மகியிடம்..

“இல்ல தலை வலி.. அது தான் காபி குடிக்க வந்தேன்…” என்றதும் மகி .

“என்ன அத்தான் தலை வலியா.. ஏன் சொல்லலே காலையிலேயும் சாப்பிடாது இப்போவும் சாப்பிடாது இருந்தா தலை வலிக்க தான் செய்யும் அத்தான்..” என்று சொன்னவளின் குரலில் அத்தனை பதட்டம்..

இதை கவனித்த வதனிக்கோ.. “இவளுக்கும் சித்தார்த் சாரை பிடிக்குமோ…? என்று சந்தேகமாக பார்த்தாள்.

அதே சந்தேக பார்வையுடன் தான். குருமூர்த்தி அந்த வீடியோ புட்டேஜை வாங்கி கொண்டு தன் கார் நிறுத்திய இடத்திற்க்கு கேண்டின் தான்டி தான் போக வேண்டும்.. அப்போது இந்த காட்சி அவன் கண்களில் பட மகியின் பேச்சும் காதில் விழ கேட்டுக் கொண்டு சென்றவனும் நினைத்தது..

எப்போதுமே மகியின் பேச்சுக்கு பொறுமையுடன் பதில் சொல்லும் சித்தார்த்தோ அன்று.,.

“ப்ச்.. அது எல்லாம் ஒன்னும் இல்ல மகி…” என்று அவளின் அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த சித்தார்த்.

தான் இங்கு வந்த காரணமான.. “ எப்போதுமே நீ இன்னொரு பெண் கூட தானே சாப்பிடுவ….?” என்று சும்மா கேட்பது போல சித்தார்த் மகியிடம் ஸ்ருதியை பற்றி விசாரித்தான்……

அவன் எப்போதும் இல்லாது இங்கு வந்து அமர்ந்து காபி குடிப்பதற்க்கு காரணமே.. ஸ்ருதி ஏன் இன்று கல்லூரிக்கு வரவில்லை என்று தெரிந்து கொள்ள வேண்டி தான்..

அது என்னவோ இரவில் இருந்தே மனது ஒரு மாதிரியாக தான் இருந்தது.. பிடித்த பெண்ணிடமே தான் வேறு பெண்ணை திருமணன் செய்ய இருக்கேன் என்ற வார்த்தை எவ்வளவு வலியை அந்த பெண்ணுக்கு தருமோ …

அதே வலியை தான் சித்தார்த்துமே இரவு முழுவதுமே அனுபவித்தான்… ஆனால் விடியற்காலை அந்த வலியையும் தான்டி அவன் மனது ஏதோ செய்தது… உள் மனது ஸ்ருதிக்கு என்னவோ.. என்ற எண்ணமும் அவனுக்கு…

அதில் தான் ஸ்ருதியை பார்த்தே ஆக வேண்டும் என்று விரைந்து கல்லூரிக்கு வந்தது..

ஆனால் அவனால் ஸ்ருதியை பார்க்க முடியாது போக… யாருக்கும் தெரியாது ஸ்ருதியை பற்றி விசாரித்ததில் இன்று அவள் கல்லூரிக்கு வரவில்லை என்ற தகவல் மட்டும் தான் அவனுக்கு கிடைத்தது..

அதனால் தான் எப்போதும் வராத கேண்டினுக்கு வந்தது.. மகிக்கு தெரியவில்லை என்றாலுமே வதனிக்கு ஸ்ருதி வராததிற்க்கு உண்டான காரணம் தெரிந்து இருக்க கூடும் என்று.

ஆனால் வதனிக்குமே தெரியாது என்று தெரிந்த செய்தியில் சித்தார்த் முகத்தில் வாட்டத்துடனும்.. குழப்பத்துடனும் தான் எழுந்து சென்றது.

மகிக்கு சித்தார்த் கேள்விக்கு உண்டான காரணமும்.. இந்த முக வாட்டத்திற்க்கு உண்டான காரணம் தலை வலி அதிகம் என்பது போல் என்று தான் நினைத்து கொண்டாள்..

ஆனால் வதனிக்கு புரிந்து விட்டது .. அது தான் ஸ்ருதி சொல்லி இருக்கிறாளே. சித்தார்த் சார் என்னை பார்க்கவில்லை என்பது உனக்கு ரொம்ப தெரியுமா என்று.

சித்தார்த் விசாரணையும்.. இப்போது சோர்ந்து போவதை பார்த்து.. வதனி மனது.. ஸ்ருதி உன் ஆளு உன்னை தேடுறாருடி.. இன்னைக்கு என்று நீ வரலையே.. ஆனா நீ வராததினால் தான் சித்தார்த் சார் உன்னை தேடுவதே தெரிந்தது…

ஸ்ருதி உன் லவ் சக்ஸ்ஸஸ் தான்டி.. என்று மகிழ்ந்தாள்.. பாவம் அவளுக்கு தெரியவில்லை.. நேற்றே அவள் காதல் ஏற்றுக் கொண்டும்.. உடனே அந்த காதல் தோல்வியில் முடிவடைந்து விட்டதும்…

இப்படி அன்று மாலை வரை சித்தார்த்தினால் ஸ்ருதியை பார்க்க முடியாது வீடு திரும்பும் வேளையில் தான் அவன் கார் முன் இன்னொரு கார் வந்து இடை மறித்து நின்றது..

சித்தார்த் எப்போதுமே அமைதியானவன். அவன் உடை மட்டும் இல்லை.. அவன் நடத்தை, பேச்சு கூட அவன் கற்ப்பிக்கும் ஆசிரியர் தொழிலுக்கு ஏற்ப தான் இகும்..

இதுவுமே அவனின் மாமா சொன்னது தான்.. உன்னிடம் பாடம் கற்பவர்கள் உன்னிடம் இருந்து பாடத்தை மட்டும் அல்லாது மற்றதையும் தான் கற்றுக் கொள்வார்கள்.. அதனால் நீ மற்றவர்களை விட அனைத்திலுமே நீ கவனமாக இருக்க வேண்டும் என்ற பேச்சை இன்று வரை சித்தார்த் கடை பிடித்து வருகிறான்..

ஆனால் இன்று அவன் எதையும் யோசிக்கும் நிலையில் இல்லை. நேற்று தன் காதலை விட தன் குடும்பம் என்று முன் நிறுத்திய அவன் மனமானது தன் பேச்சுக்கு பெண்ணவளின் கேள்வியும் அவள் தன்னிடம் பேசி விட்டு சென்ற பேச்சுமே கண் முன் வந்து போக…

அதுவும் காலையில் இருந்து அவளை பார்க்க வேண்டி வந்தவனுக்கு பார்க்காது போனதை விட இன்று ஸ்ருதி கல்லூரிக்கு வராது போனதில் அவனின் அடி மனது அடித்து சொன்னது.. ஸ்ருதிக்கு என்னவோ என்று..

ஸ்ருதியின் வீடு தெரியும்.. என்ன ஆனாலும், யார் என்ன நினைத்தாலுமே பரவாயில்லை.. இன்று அவளை பார்த்தே ஆக வேண்டும் என்று தான் ஸ்ருதி வீடு தெருவில் அவன் கார் செல்லும் போது தான் அவனின் காரை வழி மறித்தது போல் வந்து நின்றதில்,

சித்தார்த் . தன் நிலை தன் பழக்க வழக்கத்திற்க்கு மாறாக …

“ஏன்டா கார் ஒட்ட தெரிந்தால் காரை எடுக்கனும்.. ஓட்ட தெரியாதவன் எல்லாம் ரோடுக்கு காரை எடுத்துட்டு வந்து எங்க உயிரை வாங்குறிங்க…” என்று சொன்னதோடு இன்னுமே தன் முன் நின்று இருந்த காரை எடுக்காததில் காரை விட்டு சித்தார்த் கீழே இறங்க..

சித்தார்த் காரை வழி மறித்து நின்ற காரில் இருந்து குருமூர்த்தியுமே காரில் இருந்து இறங்கினான்.. ஆம் சித்தார்த் காரை வழி மறித்து நின்றது குருமூர்த்தி தான்..

குருமூர்த்திக்கு சித்தார்த்தை தெரிந்த அளவுக்கு சித்தார்த்துக்கு குருமூர்த்தியை அடையாளம் தெரியவில்லை போல..

ஸ்ருதியை குரு கல்லூரிக்கு விட வந்தாலுமே, பார்த்தது அவன் மனதில் படவில்லை போல..

அதனால் இன்னுமே சித்தார்த் குருமூர்த்தியை கோபமாக பேச ஆரம்பிக்கும் முன் குருமூர்த்தி…

“கார் ஓட்ட தெரியாதவன் காரை எடுத்துட்டு ரோடுக்கு வந்தால், எப்படி மத்தவங்களுக்கு ஆபத்தோ.. அதே போல தான் சார்.. காதலிக்கும் பெண்ணை கை பிடிக்க முடியாதவன் காதலிப்பதும் அந்த பெண்ணுக்கு ஆபத்து தானே… சார்…” என்ற அந்த பேச்சிலேயே சித்தார்த் புரிந்து கொண்டு விட்டான்…

“ஸ்ருதி… ஸ்ருதிக்கு என்ன ஆபத்து…?” என்று கேட்ட சித்தார்த்தின் குரலில் அத்தனை பதட்டம்..

சித்தார்த்தின் பதட்டத்தை கவனித்த குருமூர்த்தி மனது சொன்னது.. தான் நினைத்த விசயம் எளிதில் முடிந்து விடும் என்று…

அதனால் குருமூர்த்தி இன்னுமே தன் வார்த்தையில் கவனத்தையும், நிதானத்தையும் காட்டியவனாக…

“பரவாயில்லையே ப்ரேக்கப் செய்த பெண் சட்டென்று நியாபகத்தில் வந்து இருக்கா…”

குருமூர்த்தி சித்தார்த் கேட்ட ஸ்ருதியை பற்றிய விசயத்தை சட்டென்று எல்லாம் சொல்லவில்லை..

அதில் இன்னுமே சித்தார்த்தின் பதட்டம் கூடியது.. குருமூர்த்தியின் கை பிடித்து ‘கொண்டவன்…

“ப்ளீஸ் சார் ஸ்ருதிக்கு என்ன ஆச்சு..? நீங்க ஸ்ருதியோட அத்தான் தானே கலேஜிக்கு ஸ்ருதியை ட்ராப் பண்ண வருவீங்க தானே.. ப்ளீஸ் சார் ஸ்ருதிக்கு என்ன ஆச்சு…?” என்று கேட்டவனின் கையில் இருந்து தன் கையை உருவிக் கொண்ட குருமூர்த்தி…

“பரவாயில்லை ஸ்ருதி தான் நியாபகம் இருக்கு என்று பார்த்தா.. ஸ்ருதி அத்தான்.. ஸ்ருதி இருக்கும் வீட்டு தெரு.. எல்லாத்தையும் நீங்க தெரிந்து வைத்து இருக்கிங்க பரவாயில்லையே..

தெரிந்து தான் வைத்து இருப்பிங்க போல. ஆனா அடுத்து என்று வரும் போது உங்களுக்கு உங்க குடும்பம் தான் கண் முன் வந்து நிற்க்கும் போல.

நான் ஒன்னு சொல்லட்டா சித்தார்த் … ஒரு பெண்ணை நம்ம மனசுல நினச்சிட்டாளே அந்த பெண்ணும் நம்ம குடும்பத்துக்குள்ள வந்துடுறாங்க.. நீங்க உங்க குடும்பம் என்று யோசிக்கும் போது நீங்க முதலில் பார்க்க வேண்டியது ஸ்ருதியை தான்..

உங்க மாமா பெண் அடுத்த வீட்டிற்க்கு போக வேண்டியவள்.. அவளை பத்தி அவளை கல்யாணம் செய்பவன் யோசித்து கொள்வான்…” என்று தான் கேட்டதை சொல்லாது வேறு என்ன என்னவோ சொல்லி கொண்டு போகும் குருமூர்த்தியின் மீது சித்தார்த்துக்கு கோபம் தான் வந்தது..

ஆனால் குரு சொன்ன எப்போது ஒரு பெண்ணை நம் மனதில் நினைத்து விடுகிறோமோ அவளும் தன் குடும்பத்தை சேர்ந்தவள் தான் என்பது எவ்வளவு சரியான வார்த்தை..

அந்த வார்த்தையின் சித்தார்த் தடுமாற… சித்தார்த்தின் அந்த தடுமாற்றத்தில் குரு மூர்த்தி என்ன நினைத்தானோ.. சொல்லி விட்டான்..

“ஸ்ருதி ஆஸ்பிட்டலில் இருக்கிறாள்..” என்று..

“ஏன் என்ன ஆச்சு.. பிபரா.?” என்று கேட்டவனை குரு மூர்த்தி ஒரு மாதிரியாக பார்த்தான்..

குரு மூர்த்தியின் அந்த பார்வையில் சித்தார்த்தின் பேச்சு தடுமாறி.. “என்ன ஆச்சு சார்…” குரு மூர்த்தியின் பார்வை வேறு ஏதோ பெரியதாக இருக்குமோ என்று சித்தார்த்தை நினைக்க வைத்தது..

அவன் நினைத்தது தான் சரி என்பது போல் தான் குருமூர்த்தி..

“அவள் சூசைட் அட்டம்ட் செய்தாள்.” என்ற உடனே சித்தார்த் அதிர்ச்சியாகி விட்டான். அது வீதி என்பதையும் மறந்து நடு வீதியின் அமர்ந்து கொண்டவன் தன் தலை மீது கை வைத்துக் கொண்டவனுக்கு அதிர்ச்சி இன்னும் இன்னும் தான் கூடியது..

பின் என்ன நினைத்தானோ… “இப்போ இப்போ ஸ்ருதி எப்படி எப்படி இருக்கா…?” அவனால் வார்த்தையை தெளிவாக பேச கூட முடியவில்லை..

பாடத்தை நடத்தும் போது சித்தார்த்தின் பேச்சு அத்தனை தெளிவாக இருக்கும்.. அவனின் ப்ளஸ்ஸே அது தான் என்று கூட சொல்லலாம்,., ஆனால் இப்போது நான்கு வார்த்தை பேசுவதற்க்கு அவனுக்கு அவ்வளவு கடினமாக போய் விட்டது..

குருமூர்த்தியோ.. இதற்க்கு மேல் சித்தார்த்தை சோதிக்க வேண்டாம் என்று நினைத்து விட்டான் போல.

“இப்போ சேப் தான்..” என்றவனின் பேச்சையே பிடித்து கொண்ட சித்தார்த்..

“இப்போ சேப் என்றால் அப்போ அப்போ முதல்ல…” சித்தார்த்தின் பேச்சு இப்போதுமே அவன் வசம் இல்லாது தான் போயின..

இதற்க்கு மட்டும் குருமூர்த்தி… “ இதை நான் சொல்றதை விட ஸ்ருதிக்கு ட்ரீட்மெண்ட் பார்த்த டாக்டர் உங்க கிட்ட சொன்னா சரியா இருக்கும் என்று எனக்கு தோனுது… உங்க காரை அது தான் என் வீடு என்று அந்த தெருவில் இருந்த ஒரு பெரிய பங்களாவை காட்டியவன்..

தன் பங்களாவின் முன் நின்று கொண்டு இருந்த வாட்ச் மேனை அழைத்தவன். தன் காரின் கீயை அவனிடம் கொடுத்து விட்டு என் காரை பார்க் செய்து விடு என்று விட்டு சித்தார்த்தின் காரில் ஓட்டுனர் இருக்கையின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவன்..

“ஸ்ருதியை பார்க்க போகலாமா.?” என்றதுமே சித்தார்த் உடனே காரில் ஏறி அமர.. குருமூர்த்தியுமே.. ஸ்ருதி அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனையின் பெயரை சொல்ல சித்தார்த் அந்த மருத்துவமனையை நோக்கி தன் காரை வேகமாக செலுத்தினான்..

சித்தார்த் வழியில் ஸ்ருதியை பற்றி கேட்டதற்க்கு குருமூர்த்தி அதற்க்கு அடுத்து எதுவும் சொல்லவில்லை… மருத்துவர் சொல்லி சித்தார்த் கேட்டால் தான் நினைத்தது எளிதில் நடக்கும் என்று நினைத்தானோ என்னவோ.. பார்க்கலாம்…














 
Active member
Joined
Jul 13, 2024
Messages
165
Guru Nalla Kaai nagarthukirai
 
Top