Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

யென்னை கொண்டாட பிறந்தவன்....10..2

  • Thread Author
அத்தியாயம்….10…2

ஸ்ருதி அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனைக்கு சென்ற குருமூர்த்தி சித்தார்த்தை முதலில் ஸ்ருதியை பார்க்க அழைத்து செல்லாது, ஸ்ருதிக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்த மருத்துவரிடம் தான் குருமூர்த்தி அழைத்து சென்றது..

இங்கு எதற்க்கு என்பது போல் பார்த்த சித்தார்த்திடம்… “இவர் கிட்ட பேசிட்டு அப்புறம் நீங்க ஸ்ருதியை பார்க்க போகலாம் சித்தார்த்.. ஏன்னா இன்னைக்கு நாங்க எத்தனை ஆபத்தான நிலையில் ஸ்ருதியை இங்கு அழச்சிட்டு வந்தோம் என்று, நாங்க சொல்றதை விட, அவளுக்கு ட்ரீட்மெண்ட் பார்த்த டாக்டர் சொன்னா உங்களுக்கு தெளிவா விளங்கும்…” என்று சொல்ல..

இது எதற்க்கு என்று யோசித்தாலுமே சித்தார்த் அமைதி காத்தான்.. தான் ஒன்று சொல்லி குருமூர்த்தி ஒன்று சொல்லி என்று நேரம் தான் ஆகும்..

அவனுக்கு ஸ்ருதியை சீக்கிரம் பார்க்க வேண்டும்.. அவனுக்கு வேண்டியது அவ்வளவு தான்..

அதனால் ஸ்ருதிக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் முன் நிற்க.. குருமூர்த்தி அந்த மருத்துவரிடம் சித்தார்த்தை அறிமுகம் செய்து வைத்தன் பின் அந்த மருத்துவர் சொன்ன செய்தியில் சித்தார்த் உண்மையில் ஆடி தான் போய் விட்டான்..

“ரொம்ப ரொம்ப க்ரீக்கிட்டிலான ஸ்டேஜில் தான் அவங்களை இங்கு கொண்டு வந்து சேர்த்தது மிஸ்ட்டர்… இன்னும் கொஞ்ச நேரம் கடந்து இருந்து இருந்தா கூட அவங்களை காப்பத்தி இருந்து இருக்க முடியாது..

அப்படி காப்பத்தி இருந்தாலுமே கோமா ஸ்டேஜிக்காவது சென்று இருப்பாங்க…” என்று சொன்னவர்..

அடுத்து அவர் சொன்ன. “ இன்னுமே அவங்க மன நிலையில் மாற்றம் இல்லாது போல் தான் எனக்கு தெரியுது… தன்னை மறந்த நிலையில் கூட அவங்க சித்து சித்து என்று உங்க பெயரை தான் சொல்லிட்டு இருந்தாங்க.. அவங்க உடல் நிலை நார்மலுக்கு வந்த பின் தான் .. அவங்களுக்கு சைக்காலஜி ட்ரீட்மெண்ட் கொடுக்கனும்.. “என்ற செய்தில் அந்த மருத்துவரின் அறையில் இருந்து வெளியில் வந்த சித்தார்த் அங்கு இருந்த இருக்கையில் தலை மீது கை வைத்து அமர்ந்து கொண்டான்… தான் என்ன செய்து வைத்து இருக்கேன்.. இனி என்ன செய்ய போகிறேன்… என்று நினைத்து,,

ஆனால் குருமூர்த்திக்கு சித்தார்த் போன்று குழப்பம் எல்லாம்.. இல்லை. நீ இனி இது தான் செய்ய வேண்டும்… உனக்கு வேறு ஆப்ஷனே கிடையாது என்பது போல் தான் குருமூர்த்தி சித்தார்த்திடமான பேச்சு இருந்தது..

வெளியில் வந்து சித்தார்த் அப்படி அமர்ந்து இருந்ததை பார்த்த குருமூர்த்தி அவனுமே அவன் பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்..

“என்ன சித்தார்த் ரொம்ப குழப்பமா இருக்கா..? உங்களுக்கே இப்படி இருந்தா. அதாவது அந்த டாக்டர் வாய் மொழியா சொன்னதை கேட்டே உங்களுக்கு இப்படி இருந்தா… நாங்க எங்க வீட்டு பெண்ணை அது போலான சூழ்நிலையில் பார்த்த எங்களுக்கு எப்படி இருந்து இருக்கும்..?” என்று குரு மூர்த்தியின் கேள்வியில் சித்தார்த் குரு மூர்த்தியை பார்க்க.

குருமூர்த்தியும் சித்தார்த்தை பார்த்து கொண்டே.. “ இப்போ நாங்க ஸ்ருதி சேப் என்று சந்தோஷப்படுவதா இல்ல. இனி இது போல செய்தா இது போல காப்பத்தா முடியுமா என்று பயப்படுவதா.. நீங்களே சொல் சித்தார்த்…?” என்று குருமூர்த்தியின் மீண்டுமான இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது குழம்பி போனவனாக பார்த்தவனிடம் ..

குரு மூர்த்தி மீண்டுமாக..” அவளாள் கண்டிப்பா உங்களை மறக்க முடியாது என்று தான் எனக்கு தோனுது சித்தார்த்… நாங்களும் எந்த நேரமும் அவளை காவல் காத்திட்டு இருக்க முடியாது தானே… குளிக்க பாத்ரூம் அவள் தனியா தான் போகனும்.. ஹூட்டர் ப்ளக் பாய்ண்டில் கை வைப்பாளா கேஸ் இருக்கு… அதை வைத்து ஏதாவது செய்து கொள்வாளா…? இல்லை முதலில் ட்ரைப் பண்ணதே ட்ரைப் பண்ணுவாளா..?” என்று அடுத்து குருமூர்த்தி என்ன சொல்லி இருப்பானோ..

சித்தார்த் கெஞ்சும் குரலில்… “ போதும்.. வேண்டாம்… ப்ளீஸ்… இதுக்கு மேல சொல்லாதிங்க…” என்றதும் குருமூர்த்தி அதை பற்றியான பேச்சை பேசவில்லை தான்..

ஆனால் …” ஆக்சுவலா எங்க வீட்டு பெண்ணை இப்படி பார்த்ததுக்கு நான் உங்க கிட்ட இப்படி அமைதியா பேசி இருந்து இருக்க கூடாது…” என்றவனின் கோபப்பேச்சில் சித்தார்த் அமைதியாக தான் குருமூர்த்தியை பார்த்தான்.. குருமூர்த்தி பேச்சு சரியே என்பதினால், மகிக்கு இது போலான நிலை வந்தால், தான் குருமூர்த்தி போன்று இது போல் கூட்டி வைத்து அமையாக நடந்து இருப்போமா என்பது சந்தேகம் தான்…

அதையே தான் குருமூர்த்தியும் கேட்டான்.. “ ஸ்ருதி இடத்தில் உங்க வீட்டு பெண்ணை வைத்து பாருங்க எங்க நிலை புரியும் ..” என்று.

சித்தார்த்துமே இப்போது தெளிந்து விட்டான் போல. அவனுமே நேரிடையாகவே…

“இப்போ நான் என்ன செய்யனும்..?” என்று கேட்டான்..

குருமூர்த்தியுமே சுற்றி வளைக்காது… “ நீங்க ஸ்டுதியை உண்மையா விரும்புறிங்கலா..?” என்று கேட்டதற்க்கு.

“ஆமாம்..” என்ரு சித்தார்த் சொல்ல.

அதற்க்கு குருமூர்த்தி… “ அப்போ மேரஜ் செய்து கொள்ளுங்கள் இப்போவே… எல்லா உறவின் கோபமும்… ஒர் நிலையில் தளர்ந்து தான் போகும்.. ஆனால் ஒரு உயிர் போனால்.. உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்..” என்ற பேச்சில் சித்தார்த்துமே…

“சரி..” என்று விட்டான்..

அன்று மறுநாளே விடியற்காலை ஆறு ஏழரை முகூர்த்த நேரம்….. அதற்க்குள் திருமணத்திற்க்கு தேவையான அனைத்தையுமே குருமூர்த்தியிடம் இருந்தது.

அனைத்துமே தயார் செய்து விட்டு தான் குருமூர்த்தி சித்தார்த்திடம் பேச சென்றானோ என்னவோ… ஆனால் குருமூர்த்தி நினைத்தது போல் ஸ்ருதிக்கும் சித்தார்த்துக்கும் திருமணத்தை நடத்தி முடித்து விட்டான்…

சித்தார்த்திடம் பேசிய பின்.. குருமூர்த்தி சித்தார்த்தை அவன் வீட்டிற்க்கு அனுப்பவில்லை…

சித்தார்த் ஸ்ருதியை பார்க்கும் முன்பே அவளை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து விட்டான்..

பார்த்த பின்.. ஒரு கையில் ட்ரீப்ஸ். ஒரு கையில் ரத்தம் என்று ஏற்றிய நிலையில் அவளை பார்த்தவன் என்ன ஆனாலுமே பரவாயில்லை… ஸ்ருதியை திருமணம் செய்து கொண்ட பின் பிரச்சனையை எதிர் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டான்..

ஸ்ருதி அந்த உடல் நிலையிலுமே சித்தார்த்தை பார்த்த உடனே கண்கள் ஒளிந்து ஒலி வீசியது.

“சித்து…” என்று அழைத்த போதே… ஸ்ருதிக்கு தன்னால் கண்கள் கலங்கி போயிற்று… அதுவும் உதடு வரண்டு போய் சிரிக்க முடியாது தன்னை பார்த்து சிரித்தவளின் கையை கெட்டியாக பிடித்து கொண்டவன்..

ஒரே வார்த்தை தான் சொன்னான்… “ எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்..” என்ற சித்தார்த்தின் பேச்சில், தன்னால் அவள் முகத்தில் சோர்வையும் மீறி ஒரு நிம்மதி ஸ்ருதி முகத்தில் தெரிந்தது.

இது நடக்கும் போது ஸ்ருதி பக்கத்தில் விசுவநாதனும் தாமரையும் உடன் இருந்தனர். நடப்பதை பார்த்து கொண்டு இருந்தனரே தவிர. யார் என்ன என்று எதுவும் கேட்கவில்லை..

விசுவநாதனுக்கு குருமூர்த்தி எது செய்தாலுமே ஸ்ருதி நல்லத்திற்க்காக மட்டும் தான் இருக்கும் என்ற நம்பிக்கை.. அதோடு ஸ்ருதியின் இது போலான செயலில் காதல் விவகாரமாக தான் இருக்கும் என்ற சந்தேகம் இருந்தது.. அதை சித்தார்த்த் பார்த்த பின் அந்த சந்தேகம் உண்மை தான் என்று உறுதியாயின.. அவ்வளவு தான்…

அதில் சித்தார்த்தை கணவன் மனைவி இருவரும் கவனித்தனர்.. தன் மகளுக்கு பொருத்தமானவன் தானா என்ற ஆராய்ச்சியில், சித்தார்த்தின் தோற்றம் பேச்சில் இருவருக்குமே ஒரு திருப்தி உண்டாகியது…

ஸ்ருதி ரொம்ப ஸ்டேயின் செய்ய கூடாது என்று மருத்துவர் சொன்னதில் சித்தார்த்… ஸ்ருதியிடம்..

“இனி எதையும் நினைத்து ஸ்டெயின் பண்ணிக்க கூடாது அமைதியா ரெஸ்ட் எடு..” என்று மீண்டுமே ஸ்ருதியின் மனது அமைதியடைய சொல்லி விட்டு வெளி வந்தவனிடம்..

குருமூர்த்தி… “ நீங்க உங்க வீட்டிற்க்கு போகனுமா…?” என்று கேட்டான்..

கேட்கும் போதே சித்தார்த்திடம் இருந்து இது போலான பதிலை எதிர் பார்த்து தான் குருமூர்த்தி இந்த கேள்வியை கேட்டது..

அவன் எதிர் பார்த்தது போலவே… சித்தார்த்துமே. “ இல்ல வீட்டுக்கு போகல… இங்கு பக்கத்தில் ஒட்டல்…” எனும் போதே..

குருமூர்த்தி இடை மறித்து… “ ஓட்டலா எங்க வீட்டு மாப்பிள்ளை ஓட்டலில் தங்குவதா…? ஆக்சுவலா மாமா வீடும் என் வீடும் பக்கம் பக்கம் தான்… மாமா வீட்டிலேயே தங்கிக்கோங்க… ஸ்ருதி கூட அத்தை தான் இருப்பாங்க..” என்று சொல்லி விட்டு குருமூர்த்தி சித்தார்த் தன் மாமா விசுவந்தாதனை அழைத்து சென்றவன்..

சித்தார்த்தை அன்றே விசுவநாதன் வீட்டு மாப்பிள்ளையாக ஆக்கும் முதல் படியாக தன் மாமா வீட்டில் ஸ்ருதி அறையிலேயே சித்தார்த்தை தங்க வைத்தான்.

ஸ்ருதி அறையில் அந்த பெட்சீட்டை எல்லாம் வேலையாள் மாற்றி இருந்தாலுமே, சித்தார்த் அந்த பெட்சீட்டை தூக்கி பார்த்த போது அந்த சிகப்பு ரத்தம் திட்டு திட்டாக இருந்ததை பார்த்து தன் குடும்பத்தை நினைத்து சிறிது தயங்கியவனுமே முடிவு செய்து விட்டான்.. திருமணம் முடித்து விட்டு வருவதை பார்த்து கொள்ளலாம் என்று..

அதில் வீட்டிற்க்கு அழைத்தவன்.. “ என் கூட படித்த பிரண்ட் பார்த்தேன் பார்த்து ரொம்ப வருஷம் ஆனதில் பேசிட்டு இருக்கோம்.. இன்று அவன் கூடவே ஸ்டே பண்ணிக்கிறேன்…” என்று விட்டான்..

அவனின் இந்த பேச்சை சித்தார்த் வீட்டினர் நம்பி தான் விட்டனர்.. ஆனாம் சாரதா மட்டும்.. மகன் சொன்னதை சொன்ன போது..

“இது என்னங்க புது பழக்கம்..” என்று கேட்டதற்க்கு..

ராம் சந்திரன்… “ நம்ம பிள்ளையை நம்பனும் சாரதா. அவன் தான் சொன்னானே.. பழைய பிரண்ட்… பார்த்தான் அவன் கூட தங்குறேன் என்று.. இன்னும் என்ன உனக்கு விளக்கம் வேண்டும்..” என்று..

சாரதா அப்போது கூட ஒரு மாதிரியான மன நிலையில் தான்..

“அந்த ஜோசியர்…” என்று ஆரம்பிக்கும் போதே..

விசுவநாதன் கத்தி விட்டார்.. ‘ எவனோ ஒரு ஜோசியர் காரனை நம்பற நீ நம்ம மகனை நம்ப மாட்டியா…?” என்ற கணவனின் கோபத்தை சாரதா அமைதியாகி விட்டார்.

இங்கு அனைத்தும் முடித்து ஒரு பெரிய பைய்யோடு தன் அறைக்கு சென்ற குருமூர்த்தியின் கையில் இருக்கும் பொருட்களை பார்த்த கிருஷ்ண மூர்த்தி.

“நீ என்னவோ செய்யிற. .. ஆனா குரு எது செய்யிறதா இருந்தாலும் அந்த செயல் யாரையும் பாதிக்காது இருக்கனும்.. நான் அவ்வளவு தான் சொல்லுவேன்…” என்று சொன்ன தந்தையின் பேச்சை எப்போதும் ப்ப்ல காதில் வாங்கியவன், எப்போதும் போல அதை கருத்தில் கொள்ளலாத்..

“சரிப்பா நீங்க சாப்பிட்டிங்கலா…?” என்ற கேள்விக்கு தந்தையிடம் பதில் வராது போக.. குருமூர்த்திக்கு தெரிந்து விட்டது..

சமையல் அறையை நோக்கி… “மலரம்மா..” என்று ஒரு குரல் கொடுத்தவன்.. தன் கையில் இருந்த பேகை வைக்க மாடி ஏறியவன் அதை தன் அறையில் வைத்த பின்..

தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவன் மீன்டுமே கீழே வர.. அங்கு கிருஷ்ண மூர்த்தி தனக்கும் தன் மகனுக்குமான தட்டை எடுத்து வைத்து கொண்டு இருப்பதை பார்த்தவாறி தந்தையின் பக்கத்தில் அமர்ந்து.. மலரம்மா வைத்த சப்பத்தியை சாப்பிட்ட வாறே..

தன் தந்தையிடம்… “ உங்க கிட்ட எத்தனை முறை சொல்லி இருக்கேம் ப்பா. எனக்காக வெயிட் எல்லாம் வெயிட் பண்ணாதிங்கன்னு. உங்க நல்லதுக்கு தானேப்பா நான் சொல்றேன்.. .”

தந்தையை கடிந்து கொண்டே சாப்பிட கிருஷ்ண மூர்த்தியும்.. “ உன் கிட்ட கூட நான் எத்தனையோ விசயம் சொல்லி இருக்கேன்.. நானுமே உன் நல்லதுக்கு தான் சொல்றேன் நீ கேட்கிறியா…? இதோ இப்போ கூட சாப்பிட்டு அந்த பப்க்கு போயிடவ.. இது என்ன பிழப்பு குரு..” என்று திட்டியவரிடம்..

“இப்போ போகலப்பா.. தூங்க தான் போறேன்.. இப்போ உங்களுக்கு சந்தோஷமா. என்ற மகனை கிருஷ்ண மூர்த்தி சந்தேகமாக பார்த்தவர்..

“எனக்கு இப்போ தான் ரொம்ப பயமா இருக்கு குரு… கையில் பை பார்த்த வரை மேல பட்டு வேஷ்ட்டு தெரியுது..” என்று தன் மனதில் பட்டத்தை கூறினார்.

“ப்பா நான் உங்க மகன் ப்பா.. என்னவோ வில்லனை பார்ப்பது போல என்னை பார்க்கிறிங்க..?” என்று கேட்டதற்க்கு…

“ஏன்னா நீ வில்லன் கூட பழகுற. அதை நினைத்து தான் நான் பயப்படுறேன்…” என்ரு சொன்னவரிடம்.

சாப்பிட்டு கை கழுவிக் கொண்டு வந்த குருமூர்த்தி தன் தந்தையின் தோளை பிடித்து கொண்டவனாக..

“ப்பா மாமா அம்மாவோட அண்ணன் மட்டும் கிடையாது.. உங்க தங்கையின் கணவனும் ப்பா. நீங்க இது போல பேசுறது சரியில்லை…” என்றவனை.. கிருஷ்ண மூர்த்தி ஒன்றும் சொல்லவில்லை.. ஒரு பார்வை பார்த்தார்.. அவ்வளவே..

குருமூர்த்தி விசுவநாதனை பற்றி ஆதரவாக இது போல பேசும் போதே.. அவனின் தந்தை இது போல் தான் தன்னை பார்ப்பது..

கேட்டாலும் சொல்ல மாட்டார் என்று நினைத்து தன் அறைக்கு சென்றவன்.. மனதில் யோவ் மாமா நீ என்ன தான் என் அப்பாவுக்கு வில்லன் வேலை பார்த்த என்று எனக்கு தெரியலையே.. ஆனா நீ என் அப்பா மீது அத்தனை மரியாதை வைத்து இருக்க.. ஆனா என் அப்பா.. உங்க இரண்டு பேருக்கும் அப்படி என்ன தான் பிரச்சனையோ… தெரியலையே.. என்று மனதில் புலம்பிக் கொண்டே தான் படுக்க சென்றது..

அவனின் மாமா தன் தந்தைக்கு செய்த வில்ல தனம் குருமூர்த்திக்கு தெரியவந்தால், குரு மூர்த்தி தன் தந்தை பக்கம் நின்று.. தன் மாமனை விட்டு தள்ளி இருப்பானா..? இல்லை எப்போதும் போல தன் மாமன் பக்கம் யோசித்து எப்போதும் போல துணை நிற்ப்பானா பார்க்கலாம்
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Enekku pidikkala…
Siddarth nee un amma ku neengatha valiyai than kodukka pora… vera ponnai love panni irunthal kooda paravalla… aanal antha thurogi ponnai love pannitta… adhuvum un mama athai death ah kochai paduthinavan veetu ponnai… mukkiyama un mama athaiyai accident panni konna ponnai…
 
Top