Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

யென்னை கொண்டாட பிறந்தவன்...2...1

  • Thread Author
அத்தியாயம்….2…1

விசுவநாதனும், குருமூர்த்தியும் வேறு வேறு இடத்தில் இருந்தாலுமே, இருவரும் ஒரு சேர பேசியை அணைத்து விட்டு.முதலில் தன் கையில் இருந்த கை கடிகாரத்தை தான் இருவரும் பார்த்தனர்… ஸ்ருதி எங்கு இருக்கிறாள் என்று அறிந்து கொள்ள வேண்டி. ஒன்றும் பேசவில்லை… இருவருமே அவர் அவர் இடத்தில் இருந்து ஸ்ருதி இருக்கும் இடமாக கை கடிகாரம் காட்டிய இருப்பிடத்திற்க்கு கிளம்பி விட்டனர்..

குருமூர்த்திக்கு மனது ஒரு நிலையில் இல்லை.. விசுவநாதனுக்குமே தான்.. சின்ன பெண்… அந்த சத்தம் என்ன என்று புரியவில்லை.. அது என்ன என்று யோசிக்கும் அவகாசம் கூட அவனுக்கு இல்லை..

முதலில் ஸ்ருதி இருக்கும் இடத்திற்க்கு செல்ல வேண்டும்.. கார் ஒட்டுவதில் அந்த அளவுக்கு வேகத்தை கூட்டினான் குருமூர்த்தி, எப்போதும் இவன் வெளியில் வரும் போதே இவனுடன் இரு பவுன்ஸர்கள் இவன் கூட வருவார்கள்…

இன்று வேண்டாம் என்று மறுத்து விட்டு, அவன் தான் காரை செலுத்தியது.. வந்து விட்டான்.. ஸ்ருதி இருக்கும் இடத்திற்க்கு குருமூர்த்தி தான் முதலில் வந்து சேர்ந்தது…

ஸ்ருதியின் காரை பார்த்தும் விட்டான்… அந்த இடமே ஒரு வானந்திரம் போல் தான் இருந்தது.. சென்னையில் இது போல வெருச்சோடி கூட வீதி இருக்குமா…? என்பது போலான இடம் தான் அது..

ஸ்ருதியின் கார் ஒரு மரத்தின் மீது மோதி இருந்தது.. குரு மூர்த்தி தன் காரை ஸ்ருதியின் கார் அருகில் கொண்டு சென்று நிறுத்தும் வரையும் கூட குருமூர்த்தியின் மனநிலை ஒரு நிலையில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..

ஒரு பட படப்புடன் தான் தன் காரை நிறுத்தியவன்… வேகமாக ஒடி சென்று ஸ்ருதியின் காரின் அருகில் குருமூர்த்தி சென்றது.

விலை உயர்ந்த கார் தான் ஸ்ருதியுடையது.. அதனால் விபத்து ஆன உடனே அதில் இருக்கும் பலூன் விரிந்து ஸ்ருதியை காப்பாற்றி விட்டது… ஒரு சின்ன காயம் கூட இல்லாது தான் ஸ்ருதி முன் இருக்கையில் ஸ்டேரிங் மீது கவிழ்ந்திருந்தாள்…

அதை பார்த்து குருவுக்கு கொஞ்சம் நிம்மதியானது… “ஸ்ருதி ஸ்ருதி.. “ என்று கார் மோதியதினால் கார் கண்ணாடி உடைந்து இருக்க, அதில் கை விட்டு கார் கதவை திறந்தவன் அவளை தட்டி எழுப்ப முயன்று கொண்டு இருந்தான்..

அதற்க்குள் அந்த இடத்திற்க்கு விசுவநாதனும் வந்து விட்டார்… அவர் முகத்திலுமே பதட்டம் தான்..

“மாமா ஒன்னும் இல்ல… சேப் தான் மாமா..” என்று மாமாவுக்கு தைரியம் சொல்லிக் கொண்டே அவளை தூக்கி கொண்டான்..

குருவுக்கு புரிந்து விட்டது.. ஸ்ருதி இப்போது எழாது இருப்பதற்க்கு காரணம் விபத்தினால் கிடையாது என்பது..

அவள் சொன்னது போல ஏதோ போதை பொருள் கலந்து கொடுத்து இருக்கிறார்கள்… அதனால் தான் இந்த மயக்கம் என்பதும்… அதை தன் மாமாவிடமும் சொல்லிக் கொண்டே தான் குரு தன் காரின் பின் இருக்கையில் ஸ்ருதியை கிடத்தியவன்..

“மாமா ஆஸ்பிட்டலுக்கு வேண்டாம் .. நம்ம பேமிலி டாக்டரை வீட்டுக்கு கூப்பிடலாம். “ என்று பேசிக் கொண்டு இருந்த குருவுக்கு தன் மாமனிடம் இருந்து பதில் இல்லாது போக… நிமிர்ந்து தன் மாமனை பார்த்தான்..

அவன் மாமனோ… ஒரு இடத்தில் அதிர்ச்சியாக பார்த்து கொண்டு இருப்பதை பார்த்தவன்.. அவனுமே தன் மாமன் பார்வை சென்ற இடத்தில் தன் பார்வையை செலுத்தினான்..

அங்கு ஒரு இரு சக்கர வாகனம் கவிழ்ந்து போய் கிடந்தது. பக்கத்தில் யாரும் இல்லை…

வண்டி மட்டுமே ரோடில் வர முடியாது தானே… யோசனையும் வண்டியை பார்த்த குருமூர்த்தியின் பார்வை தன்னால் ஸ்ருதி காரின் முன் பக்கத்தை தான் பார்த்தது..

அவன் அனுமானித்தது போலவே அங்கு சிறிது ரத்தக்கரை படிந்து இருப்பதை பார்த்தவனின் கை தன்னால் அவனின் பழக்கமான தன் புருவத்தை நீவி விட்டு கொண்டது…

பின் அவனின் கண்கள் நாளா பக்கமும் பார்வையை செலுத்த, ஒரு புதரின் அருகில் துணி அவன் பார்வைக்கு பட்டது.. அது புடவையாக இருக்க கூடும் என்பது அவன் அனுமானம்..

வீதியில் கவிழ்ந்து கிடந்தது ஆண்கள் ஒட்டும் கீர் வண்டி.. இப்போது பெண்களுமே இது போலான வண்டிகள் ஒட்டுகிறார்கள் தான் என்றாலுமே, இது போல புடவை கட்டிக் கொண்டு ஒட்டுவது என்பது .. ஏதோ யோசித்தவனாக அவனின் பார்வை இன்னுமே அங்கு நோட்டம் இட.. சிறிது தள்ளி வெள்ளையாக ஒரு துணி தெரிந்தது…

அதை பார்த்தவன் உப் என்று ஊதிக் கொண்டவனாக..

“மாமா நீங்க ஸ்ருதியை வீட்டிற்க்கு கூட்டிட்டு என்ன என்று பாருங்க.. இங்கு கொஞ்சம் வேலை இருக்கு. அதிக நேரம் ஸ்ருதி இங்கு இருப்பது நல்லது இல்லை..” என்ற மருமகனின் பேச்சை விசுவநாதனும் உடனே ஏற்று கொண்டார்..

ஏன் என்றால் குருமூர்த்தி அனுமானித்ததை விசுவநாதனுமே அனுமானித்து விட்டார்.. அவரிடம் இருந்தும் ஒரு பெரும் மூச்சு தான். அதுவும் அவர்கள் இரண்டு பேரும் ஒன்று போல் யோசித்த ஒரு விசயம்.

இந்த இடத்தை அடைய ஒரு பெட்ரோல் பங்கை கடந்து தான் இந்த வீதிக்கு வர முடியும்.. கண்டிப்பாக கேமிரா இருக்கும்.. இருவரின் மூளையும் ஒரு நொடியில் கணக்கு போட்டு விட்டது..

“பார்த்து மாப்பிள்ளை..” என்று சொல்லி குருமூர்த்தியின் தோள் தட்டி சென்ற விசுவநாதன் எப்போதும் தன்னுடன் இருக்கும் தண்டாயிதபாணியிடம்.

“மாப்பிள்ளை சொல்றதை செய்..” என்று விட்டு.. மகளை கிடத்தி இருக்கும் குருமூர்த்தியின் காரை எடுத்து கொண்டு தன் காரை விட்டு விட்டு சென்றார்..

மாமன் சென்றதுமே குருமூர்த்தி தண்டாயிதபாணியிடம்..

“ஸ்ருதி காரை ஸ்டாட் செய்.. எந்த கன்டிஷனில் இருக்கு என்று பார்க்கனும்..” என்று தான் சொன்னதும் அவனுமே குரு சொன்னதை செய்தவன்..

“ம் ஸ்டாட் ஆகுது சார்…” என்றதும்..

“உடனே. நீ இதை எடுத்துட்டு கிளம்பு…” என்று சொன்னதை செய்வதற்க்கு மட்டும் தண்டாயிதபாணி கொஞ்சம் தயங்கினான்…

குருமூர்த்தி… “ என்ன..?” என்று கோபமாக கேட்டான்… இந்த சூழ்நிலையில் ஸ்ருதியின் கார் இங்கு அதிக நேரம் இருப்பது நல்லத்திற்க்கு இல்லை.. இவன் என்ன என்றால் சொன்னதை உடனே செய்யாது தயங்கி நிற்கிறானே என்ற கோபம் அவனுக்கு…

தண்டாயிதபாணி அதே தயக்கமான குரலில்… “ஐய்யா உங்க கூட இருக்க சொன்னாரு சார்…”

தண்டாயிதபானிக்கு தெரியும்.. விசுநாதனுக்கு அவரின் மாப்பிள்ளை எவ்வளவு முக்கியம் என்று.. இந்த சமயத்தில் குருமூர்த்தியை தனியாக விட்டு செல்ல அவனால் முடியவில்லை…

குருமூர்த்தியோ… “மாமா நான் சொன்னதை தான் உன்னை செய்ய சொன்னார்…. நான் சொல்றேன்.. ஸ்ருதி காரை எடுத்துட்டு போ..” என்று அழுத்தி சொல்ல..

தண்டாயிதபாணியும் குருமூர்த்தியின் பேச்சை தவிர்க்க முடியாது ஸ்ருதியின் காரை எடுத்து கொண்டு அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்..

அந்த கார் சென்றதுமே அவனின் கால் விடு விடு என்று முதலில் புடவை என்று அவன் அனுமானித்த இடத்திற்க்கு தான் முதலில் சென்று பார்த்தது.

அவன் நினைத்தது போல ஒரு பெண்மணி தான் அங்கு இருந்தது… அந்த பெண்மணியின் அருகில் சென்ற குருமூர்த்தி அந்த பெண்மணியின் மூக்கின் மீது தன் விரல் வைத்து பார்த்தான்…

அந்த பெண்மணி உயிரோடு இருப்பதற்க்கு உண்டான எந்த அறிகுறியும் இல்லாது போக. பின் சிறிது தள்ளி கவிழ்ந்து விழுந்து இருந்த அந்த ஆணின் பக்கம் சென்று பார்க்க அவருமே உயிரை விட்டு இருக்க.

இருவரையும் மாறி மாறி பார்த்தான்.. பெண்ணுக்கு ஐம்பது வயதிற்க்குள்ளூம் ஆணுக்கு ஐம்பத்தி ஐந்து வயதும் இருக்க கூடும்… அவர்களை தொடவில்லை…

தானும் அங்கு அதிக நேரம் இருப்பது நல்லதிற்க்கு இல்லை என்று உடனே அங்கு இருந்த தான் மாமனின் காரை எடுத்து கிளம்பி விட்டான்..

இந்த விசயத்தில் தானோ.. இல்லை தன் மாமனோ இருந்து இருந்தால், இந்த பிரச்சனையை வேறு விதமாக தான் அவன் கைய்யாண்டு இருந்து இருப்பான்..

ஆனால் இதில் சம்மந்தப்பட்டவள் ஸ்ருதி.. அதுவும் அவள் இருந்த நிலை… அவளுக்கே தெரியாது ஏதோ போதை வஸ்த்தை கொடுத்து இருந்தாலுமே, போதையில் ஏற்றி கொன்று விட்டாள்..

இதை தான் மீடியா காட்டும்.. இதை மாமாவுக்கும் தனக்கும் எதிராக இருப்பவர்கள் தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள கூடும் என்று நினைத்தவன் காரை எடுத்து கொண்டு சென்று நின்ற இடம். விபத்து நடந்த பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்திற்க்கு தான்…

அந்த ஏரியா காவல் நிலைய அதிகாரியை அவனுக்கு தெரியும் தான்.. இவனின் பிசினஸ்… இது போலான அரசாங்க அதிகாரிகளையும் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.. அதே போல ரவுடிகளையும் அறிந்து வைத்து இருந்து இருக்க வேண்டும்.

எந்த எந்த சூழ்நிலையில் யார் உதவி தேவைப்படுகிறதோ, அவர்களின் உதவியை கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு பெற வேண்டியதை பெற்று கொள்வான்.

இரண்டு முறை அந்த காவல் நிலைய அதிகாரியிடமும் அவன் கொடுத்தும் வாங்கியும் இருக்கிறான்.

அந்த காவல் நிலையத்திற்க்கு குருமூர்த்தி சென்ற நேரம் அந்த அதிகாரியே இருக்க.. குருமூர்த்தியை பார்த்ததுமே அந்த அதிகாரிக்கு வாய் முழுவதுமே பல் தான்..

“என்ன சார் நீங்களே வந்து இருக்கிங்க. என்ன சார் விசயம் பெருசோ…?”

இந்த அதிகாரியிடம் காரியம் நடக்க குருமூர்த்தி இந்த அதிகாரியை அணுகிய இரண்டு முறையுமே.. பேசியில் தான் அழைத்து சொன்னது.. கொடுக்க வேண்டியதை தன் ஆட்களின் மூலம் தான் கொடுத்து விட்டது..

இந்த நேரத்தில் குரூமுர்த்தியே.நேராக வந்து இருக்கிறான் என்றால், அப்போ விசயம் பெருசாக தானே இருக்க வேண்டும்.. இது போலான ஆட்களுக்கு புத்தி கூர்மை அதிகமாக தான் இருக்கும் போல…

அதிலும் விசயம் பெரிது என்றால் அந்த காவல் அதிகாரிக்கு மகிழ்ச்சி தான்.. அவருக்கு வருவதுமே பெரியதாக வருமே.

ஆனால் அவரின் பேச்சுக்கு தான் குருமூர்த்தி ஒன்றும் சொல்லாது..

“ஒரு சின்ன ஆக்சிடெண்ட் ஆகிடுச்சி…” என்றவன்..

பின் அந்த காவல் அதிகாரியிடம் அவர் செய்ய வேண்டியதையும், பெற வேண்டியதையும் சொன்னான்..

அதாவது அந்த விழியாக இருக்கும் அனைத்து கேமிராவும் வேலை செய்யாது போல தான் காட்ட வேண்டும். பின்..” என்று முதலில் சொன்னதை ஒரு அழுத்தமுடனும் எந்த வித தயக்கமும் இல்லாது சொன்னவன் பின்..

“இறந்தவர்களில் அந்த ஜென்ஸ் ட்ரீங்கஸ் பண்ணி இருந்தது போல செய்து விடுங்க…” என்று சொல்லவும்..

அதற்க்கு அந்த காவல் அதிகாரி.. “கொஞ்சம் அதிகம் செலவு ஆகுமே சார்… டாக்டர்…” என்று அடுத்து அந்த அதிகாரி என்ன பேசி இருப்பாரோ..

கை சைகை கொண்டு அந்த அதிகாரியின் பேச்சை தடுத்த குருமூர்த்தி..

“எவ்வளவு ஆகும் என்று சொல்.. ஆளுங்க மூலம் கொடுத்து விடுகிறேன்…”

குருமூர்த்தி இது போலான விசயத்தில் பணம் பரிவர்த்தனை அனைத்துமே பணமாக தான் இருக்கும்.. வங்கி மூலம் செய்யவே மாட்டான்..

குருமூர்த்தி முன் தன் மூன்று விரலை அந்த அதிகாரி காட்ட… “ த்ரீ லாக்ஸ்ஸா..?” என்று குருமூர்த்தி கேட்க..

அந்த அதிகாரியோ உடனே பதட்டத்துடன்.. “ ஐய்யோ சார் விசயம் பெருசு சார்… முப்பது லட்சம் சார்..” என்றவனிடம் குருமூர்த்தி..

“ஓகே டன்.. ஆனால் நீங்க செய்ய வேண்டியதும் மிக சரியா செய்ய வேண்டும்.. சொல்லிட்டேன்…” என்று சொன்ன குருமூர்த்தி நேராக சென்ற இடம் தன் மாமனின் வீடு தான்..

அங்கு ஸ்ருதி இன்னுமே மயக்கத்தில் தான் அவள் அறையில் படுத்து இருந்தாள்.. குடும்ப மருத்துவரும் பார்த்து விட்டு ..

“ஒன்னும் பயம் தேவையில்லை சார்… ஏதோ அபின் போல எடுத்து இருக்காங்க போல… காலையில் முழிச்சிடுவாங்க…” என்று சொன்ன அந்த மருத்துவரிடம்…

“இந்த விசயம்.. “ என்று விசுநாதன் முடிக்க கூட இல்லை..

“அந்த மருத்துவன் என்னை தான்டி வெளியில் போகாது சார்…” என்று விட்டார்…

குருமூர்த்தி யோசனையுடன் ஸ்ருதியை பார்த்து கொண்டு இருந்தவனிடம் அந்த மருத்துவர் சொன்னதை சொல்ல.. அனைத்தையும் கேட்டவன்..

நேரத்தை பார்த்தான்.. நேரம் நடியிரவு பன்னிரெண்டை தொட்டு இருந்தது… ஸ்ருதி செல்வதாக சொன்ன அந்த ஸ்டார் ஓட்டலின் ஒனர் குருமூர்த்தி தெரியும்..

நேரத்தை பார்த்தவன் சில நொடி அழைக்கலாமா என்று யோசித்தான் தான்.. ஆனால் ஸ்ருதி அங்கு இல்லாது சென்று விட்டதில் தனக்கு முன்.. அவனுக்கு எதிராக இருக்கும் ஆதாரத்தை அழித்து விட்டால், இதோ இப்போது இவன் செய்து விட்டு வந்தது போல அவனோ அவர்களோ செய்து விட்டால், என்ன செய்வது…?அதனால் நேரத்தை பார்க்காது அந்த ஓட்டல் ஒனரை அழைத்து விட்டான்..




 
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
இவனோட மாமா பொண்ணைக் காப்பாத்த எவ்வளவு வேலை பார்க்குறான்.......
செத்தவங்க மேலயே பழியை வேற போடுறான்.....
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Guru 😡😡😡
Unnai pidikkala… un maman magan drugs eduthuttu vandhu accident panni kolai pannuwa… aanal ne sethavanga meleye drunken drive case pottu irukka 😡😡😡

May be antha sethavanga magal than heroine ah irukkanum… ava vandhu Guru va vechi seiyanum
 
Top