Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

யென்னை கொண்டாட பிறந்தவன்...3...1

  • Thread Author
அத்தியாயம்…3…1

மாமனும் மாப்பிள்ளையும் சேர்ந்து நடத்திய நாடகத்தின் எதிரொலிப்பாக ஊரப்பாக்கத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இரவு ஒன்பது மணிக்கு அந்த வீட்டில் தனித்து இருந்த நம் ககையின் நாயகி மகேஷ்வரியின் பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது…

அழைப்பை ஏற்ற மகேஷ்வரியிடம் அவளின் அத்தை சாரதா… “அப்பா இன்னும் வரலையா மகிம்மா…?” என்று கேட்ட தன் அத்தையிடம்..

மகேஷ்வரி..“இன்னும் வரல அத்த…” என்ற மருமகளின் பதிலில் அவளின் அத்தை சாரதா…

“இன்னுமா வரல…?” என்று சாரதாவின் குரல் யோசனைக்கு தாவியது..

ஆனால் மகேஷ்வரி அடுத்து சொன்ன.. “ கேளம்பாக்கம் வந்ததும் அப்பா போன் செய்தார் அத்த… வந்துட்டேன் ஸ்டாண்டில் இருக்கும் வண்டியை எடுத்துட்டு வந்துடுறேன்.. “ என்ற பதிலில்..

சாரதா.. “ஓ…” என்று சொன்னவரின் குரலில் இன்னுமே யோசனையின் சாயல் தான்.. பின் ஏதோ யோசனை செய்த சாரதா..

“நான் சித்தார்த்தை அங்கு அனுப்புறேன்.. நீ நம்ம வீட்டிற்க்கு வந்துடு மகி.. இந்த நேரத்தில் தனியா எல்லாம் இருக்க தேவையில்லை.. நான் அண்ணன் கிட்ட போன் செய்து சொல்லிடுறேன்.. அண்ணியோட நம்ம வீட்டிற்க்கு வந்துடுங்கன்னு…” என்று கூடுவாஞ்சேரியில் வசிக்கும் மகேஷ்வரியின் அத்தை சாரதா மருமகள் சிறிது நேரம் கூட தனியாக இருக்க கூடாது என்ற எண்ணத்தில் சொன்னார்..

பாவம் இனி தன் அண்ணன் மகள் இனி காலம் முழுவதுமே பெற்றோர்களின் துணை இல்லாது இனி தன்னிடம் தான் இருக்க போகிறாள் என்று தெரியாது சொல்ல..

மகேஷ்வரியோ… “அத்த ஏன் இப்படி பயப்படுறிங்க… அத்தானை எல்லாம் அனுப்ப வேண்டாம்.. அப்பா அம்மா இப்போ வந்துடுவாங்க.. “ என்று தான் தைரியமாக இருந்து கொள்வேன் என்று சொன்ன அதே மகேஷ்வரி தான்..

இரண்டு மணி நேரம் கழித்து தன் அத்தையை அழைத்தாள்…

“அத்த எனக்கு பயமா இருக்கு அத்த. இன்னும் அப்பா அம்மா வரல.. போன் போட்டாலும் ரிங் போயிட்டே இருக்கு.. அப்பா எடுக்கல..” என்று சொன்னவளின் குரலில் பயத்தின் சாயல் அப்பட்டமாக காணப்பட்டது..

தூக்க கலக்கத்தில் அண்ணன் மகளின் அழைப்பை ஏற்ற சாரதாவின் தூக்கமும் மகியின் இந்த பேச்சில் முற்றிலும் போய் விட. அவர் குரலிலும் அதிர்ச்சி தான்..

“என்ன சொல்ற மகி.. அண்ணா இன்னும் வரலையா.. நீ அப்போவே கேளம்பாக்கம் வந்துட்டாங்க என்று சொன்ன..” என்று கேட்டவரின் குரலிலுமே பயம் தான்..

சாரதாவின் பேசி அழைக்கும் சத்தத்திலேயே தூக்கம் கலைந்து விட்ட ராமசந்திரன்… மனைவியின் பேச்சில் ஒரளவுக்கு விசயம் தெரிந்து கொண்டவராக, மனைவியை கடிந்து கொண்டார்..

“மகியே பயந்துட்டு உனக்கு போன் போட்டா நீ இன்னும் பயத்தை கூட்டுற..” என்று அதட்டியவர் மனைவியிடம் இருந்து பேசியை வாங்கி கொண்டவராக..

“ஓன்னும் பயந்துக்காதே மகிம்மா.. வண்டி ஏதாவதி ரிப்பேர் ஆகி இருக்கும் . இரு நான் சித்தார்த்தை அனுப்புறேன்…” என்று சொன்னவரிடம் மகேஷ்வரி இந்த முறை மறுக்கவில்லை…

இருவரும் எழுந்து தங்கள் அறையை விட்டு கூடத்திற்க்கு வந்த சமயம் சித்தார்த்துமே அறக்க பறக்க தன் அறையில் இருந்து சட்டையின் பட்டனை ஒரு கையில் போட்டுக் கொண்டே இன்னொரு கையில் பேசியை காதில் வைத்து கொண்டவனாக..

“தோ வந்துடுறேன் சார்.. ஒன்னும் பிரச்சனை இல்ல தானே சார்.” என்றவனின் பேச்சில் அத்தனை பதட்டம் தெரிந்தது..

அதை பார்த்த சாரதாவுக்கு நெஞ்சு கூட்டில் சுருக்கு என்ற ஒரு வலி…. மனதில் ஏதோ தவறாக பட்டது…

அதற்க்கு ஏற்றது போல் தான் பேசியை அணைத்து வைத்தவன்.. அந்த சமயம் தூங்காது முழித்து கொண்டு இருக்கும் தன் பெற்றோர்களை பார்த்த சித்தார்த்..

“என்னப்பா உங்களுக்கும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன் வந்ததா…? நான் அங்கு தான் போறேன் ப்பா.. மகி தனியா இருப்பா நீங்க இரண்டு பேரும் மாமா வீட்டிற்க்கு போங்க..” என்று கட கட என்று சொன்னவனின் பேச்சில், இப்போது ராமசந்திரனுமே பயந்து தான் போய் விட்டார்..

அதில்.. “என்ன சித்து சொல்ற. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போனா. யாருக்கு என்ன..?” என்ற தந்தையின் கேள்வியில் தான் சித்தார்த்துக்கு இவர்களுக்கு இன்னும் விசயம் தெரியவில்லை என்பதே தெரிந்தது..

“மாமா வண்டி ஆக்ஸிடண்ட் ஆகிடுச்சின்னு அந்த ஏரியா போலீஸ் ஆபிசர் போன் செய்து இருக்காங்க.” என்ற மகனின் பேச்சில் சாரதா அய்யோ என்று தன் நெஞ்சில் கை வைத்து கொண்டவர்…

‘சித்து கண்ணா. மாமாவுக்கு மாமிக்கு ஒன்னும் இல்லையே கண்ணா…?” என்று கேட்கும் போதே சாரதாவின் கண்களில் கண்ணீர்..

“ம்மா ஆஸ்ப்பிட்டலுக்கு வாங்க என்று தான் சொன்னாங்க. அது எல்லாம் ஒன்னும் ஆகி இருக்காது.. சின்ன அடியா தான் இருக்கும்.. நீங்க பயந்து மகியையும் பயப்படுத்தாதிங்க… என்ற மகனின் பேச்சில் தான் சாரதாவுக்கு தன் அண்ணன் மகள் பயந்து தன்னை அழைத்ததே நியாபகத்தில் வந்தது…

கணவனிடம்.. “ சீக்கிரம் அண்ணன் வீட்டிற்க்கு போகனும்.. வாங்க… பாவம் குழந்தை பயந்துட்டு இருப்பா.. சித்து கண்ணா அங்கு போயிட்டு என்ன விவரம் என்று அப்பாவுக்கு போன போட்டு சொல்லிடுப்பா…” என்று மகனிடம் சொன்னவர்..

பின்.. “கடவுளே அண்ணன் அண்ணிக்கு ஒன்றும் இருக்க கூடாதுப்பா . உன்னை தான் நான் மலை போல நம்பிட்டு இருக்கேன்……” என்று கடவுளையும் துணைக்கு அழைத்து கொண்டவராக.

கணவனின் துணைக் கொண்டு தன் அண்ணன் வீட்டிற்க்கு சென்ற சாரதாவை அந்த கடவுள் கை விட்டு விட்டார் என்பது அடுத்த அரை மணி நேரத்திற்க்குள் தெரிந்து விட்டது.

சாரதா தன் கணவனோடு தன் அண்ணன் வீட்டிற்க்கு சென்ற போது மகி இன்னுமே பயந்து போய் தான் இருந்தாள்..

சாரதாவை பார்த்ததும்.. “அத்த எனக்கு ரொம்ப பயமா இருக்கு அத்த… நான் போன் போட்டா இந்த அப்பா எடுக்கவே மாட்டேங்குறாங்க அத்த.. மெசஜ் போட்டாலும் பார்க்க மாட்டேங்குறாங்க அத்த… அப்பா அப்படி எல்லாம் பண்ண மாட்டார் அத்த.. நான் பயந்துக்குவேன் என்று அவருக்கு தெரியும்..

அதுவும் இத்தனை மணி நேரம் நான் வீட்டில் தனியா இருக்க. கண்டிப்பா அப்படி செய்ய மாட்டாரு அத்த.. வண்டி ரிப்பாரே இருந்தாலுமே என் கிட்ட போன் செய்து வீடு லாக் பண்ணிக்க நான் வந்தா என்னை பார்த்த பின் தான் கதவை திறக்கனும் என்று என் கிட்ட அத்தனை பத்திரம் சொல்லுபவர்.. கண்டிப்பா என் போனை கூட எடுக்காது.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு அத்த.” என்று சொல்லி கதறி அழுபவளிடம் என்ன என்று சாரதா சொல்லுவாள்..

கடவுளே… என்று சாரதா மீண்டும் மீண்டும் தான் அந்த கடவுளை துணைக்கு அழைத்தது..

ஆனால் என்ன பிரயோசனம்.. இங்கு மருமகளுக்கு சாரதா. “ அது எல்லாம் ஒன்னும் இருக்காது.. நீ பயந்துக்காதே டா தங்கம்..” என்று சொன்னவரின் குரலிலும் அத்தனை பயம் தான் இருந்தது..

இவர்கள் இருவரின் பயத்தை மெய்பிக்கும் வகையாக தான் ராமசந்திரன் பேசிக்கு சித்தார்த்திடம் இருந்து அழைப்பு வந்தது..

சித்தார்த்.. தந்தையிடம் ஒன்றும் சொல்லாது… “ப்பா நீங்க இங்கே ஆஸ்பிட்டலுக்கு வாங்கப்பா. அம்மா மகி கிட்ட ஒன்னும் சொல்லாம வாங்க..” என்ற மகனின் பேச்சை வைத்தே ராமசந்திரனுக்கு புரிந்து விட்டது… ஏதோ பெரியதாக நடந்து உள்ளது என்று.. அதற்க்கு ஏற்றது போல் தான் மகன் தன்னிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது யாரோ ஒருவரின் பேசியது வேறு ராமசந்திரன் காதில் விழுந்ததில், மகன் சொன்னது போல. மனைவியிடம் , மட்டும்… “ சாரதா வீட்டை பூட்டிட்டு இரு. இதோ நான் வந்து விடுகிறேன்..” என்று சொன்னவரையே சாரதா பயந்து போய் பார்த்திருந்தார்..

சாரதாவுக்கு மகனிடம் இருந்து தான் கணவனுக்கு அழைப்பு வந்தது தெரியும்.. ஆனால் மகன் என்ன சொன்னான் என்று தெரியாது. இப்போது இவர் வெளியில் போகிறேன் என்று சொல்கிறார்.. இது போலான சமயத்தில், அதுவும் இந்த நேரத்தில் தங்களை தனித்து விட்டு போவது என்றால், சாரதா பயந்த பார்வையில் கணவனை பார்த்தார்…

மனைவியின் அந்த பார்வை ராமசந்திரனையும் தாக்கியது போல. அவர் கண்களும் கலங்கி போக.. கணவனின் இந்த கலங்கிய கண்கள் சாரதாவுக்கு இன்னுமே பயத்தை கூட்டியது..

அதில் “ ஏனுங்க..” என்று அழைத்தவர் அடுத்து என்ன பேசி இருப்பாரோ.. ஆனால் அதற்க்குள் ராமசந்திரன் மகியின் பக்கம் கண் காட்டியதில், சாரதா அடுத்து எதுவும் கேட்கவில்லை என்றாலுமே,

கணவனையே தான் பார்த்து கொண்டு இருக்க. மகியோ அழுதுக் கொண்டே மீண்டும் மீண்டும் தன் தந்தையின் அலைப்பேசிக்கு அழைப்பு விடுத்து கொண்டு இருந்தாள்.. அந்த காட்சியை பார்க்க பார்க்க ராமசந்திரனுக்கு என்னவோ போலாகி விட்டது..

மனைவியையும், மருமகளையும் பார்த்தவர் ஒன்றும் சொல்லாது போனால் மனைவி இப்படியே தான் நின்று கொண்டு இருப்பாள்.. அந்த பெண்ணுக்கு ஆறுதலாகவும், தைரியத்தையும் தர மாட்டாள் என்று நினைத்தாரோ என்னவோ..

சாரதாவிடம்.. “ தண்ணீ கொடும்மா…” என்று சொல்ல.. கணவன் ஏன் தண்ணீர் கேட்கிறார் என்று மனைவிக்கு புரிந்து விட்டது போல…

சமையல் அறைக்கு சாரதா தண்ணீர் எடுக்க போக.. பின்னவே சென்ற ராமசந்திரன் மனைவியின் கையை பிடித்து கொண்டவர்.

“சித்து ஆஸ்பிட்டகுக்கு என்னையும் கூப்பிடுறான் சாரதா. அவன் கூப்பிடுவதை பார்த்தால், ஏதோ..” என்ற கணவனின் பேச்சை சாரதா முடிக்க விடவில்லை..

“இல்ல இல்ல. இல்லவே இல்ல.. நீங்க நீங்க அப்படி சொல்ல கூடாது… சொல்லாதிங்க சொல்லாதிங்க..” என்று பிதற்றிக் கொண்டு இருந்த மனைவியிடம்..

ராமசந்திரன்.. “ உஷ்.. உஷ்… சத்தம் போடாதே என்று சொன்னவர்..

“நானுமே ஒன்னும் இருக்க கூடாது என்று தான் ஆசைபடுறேன் சாரதா.. ஆனா “ என்று இழுத்து நிறுத்தியவர் பேச்சில் சாரதா இன்னும் என்ன என்பது போல பார்த்தவரிடம்..

“நம்ம சித்து என் கிட்ட பேசிட்டு இருக்கும் போது அவன் கிட்ட போஸ்ட் மார்ட்டத்துக்கு வேறு ஏற்பாடு செய்யனும்..” என்று யாரோ அவன் கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க.. என்று ராமசந்திரன் சொல்லிக் கொண்டு இருக்க. சாரதாவின் கண்கள் பயத்தில் விரிந்து கொண்டு.

“என்னங்க..?” என்று சாரதா பேசவும்.. தடால் என்ற சத்தம்.. அந்த சத்தத்தில் கணவன் மனைவி இருவரும் சமையல் அறை வாசலை பார்க்க… மகேஷ்வரி விழுந்து கிடந்தாள்..

அதுவும் விழுந்த வேகத்தில் அவள் நெற்றி கதவின் மீது பலமாக தாக்கி விழுந்ததால், அடிப்பட்டு ரத்தமும் வர..

இருக்கும் பதட்டத்தில் இதுவும் கூட. பின் மகியையும் தூக்கி கொண்டு தான் கணவன் மனைவி எந்த மருத்துவமனையில் தந்தையும் தாயுன் பிணமாக கிடக்கிறார்களோ அதே மருத்துவமனையில் மகேஷ்வரி தன் நினைவு இழுந்து கிடந்தாள்..

பின் எழுந்தாள் தான்.. ஆனால் அவள் எழுந்த உடனே.. கடைசியாக தான் விழும் போது அத்தையும் மாமாவும் பேசியது நியாபகத்தில் வர… மீண்டும் மயக்கம் எழ என்று இப்படியாக தான் இருந்தாள்..

அதற்க்குள் அவளின் அன்னை தந்தையின் போஸ்ட் மார்ட் என்று அனைத்து பார்மால்ட்டியும் முடிந்து மகேஷ்வரியின் வீடும் வரும் வரை கூட அவள் ஒரு நிலையில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..

ஏன் பெற்றோர்களின் இறுதி காரியம் கூட முடிந்து விட்டது.. இறுதி காரியத்தில் அத்தனை மாணக்க செல்வங்கள் வந்து வண்ணம் இருந்தனர்…

ஆம் மகேஷ்வரியின் தந்தை ஒரு ஆசிரியர்.. நல்லாசிரியர் விருது வாங்கிய ஒரு நல்ல ஆசியர் அவர்… பள்ளியிலும், மாணவ மாணவியர்களுக்கு மத்தியிலும் அவருக்கு அத்தனை நல்ல பெயர்… ஏன் அவர்கள் வசிக்கும் இடத்தில் கூட அத்தனை மதிப்பு இவர்களுக்கு..

ஆனால் அவர்களை பிரதேபரிசோதனை முடித்து கொடுத்த அந்த ரிப்போட்டில் மகேஷ்வரியின் தந்தை குடித்து இருந்தார்.. அதனால் தான் அங்கு இருந்த மரத்தை கவனியாது அதில் மோதியது… வண்டி வேகமாக ஒட்டிக் கொண்டு மரத்தில் மோதியதால் வண்டியில் இருந்த இருவரும் வீசி எரியப்பட்டு இந்த மரணம் நடந்து உள்ளது என்று மருத்துவர் மது அருந்தி உள்ளதாக சான்றிதழ் கொடுக்க.

குருமூர்த்தி பார்த்து விட்டு வந்த அந்த காவல் அதிகாரி. அதை கொண்டு ஒரு சிறிய கதையை பிணைந்து ரிப்போர்ட்டாக இவர்கள் கையில் கொடுக்கப்பட்டது…

வாழ்ந்த போது நல்ல மாதிரியாக வாழ்ந்த அந்த மனிதர் இறக்கும் போது ஒரு குடிக்காரனாக தான் இறந்தார்..

மகேஷ்வரிக்கு தன் பெற்றோர் இப்போது உயிரோடு இல்லை என்ற அந்த அதிர்ச்சியை விட தன் தந்தை மது அருந்தி விட்டு விபத்து செய்து விட்டு இறந்தார் என்ற அந்த மருத்துவ அறிக்கை தான் அவளுக்கு அதிக அதிர்ச்சியை கொடுத்தது.
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Chaik enna manushan avan…
Oru nalla teacher avar… avar maranathai ippadi kochai paduthittiye da 😡😡😡
Neeyellam hero ve illa… Siddarth than hero…

May be Siddarth than Shruthi pair pola… avan avanoda mama maranathukku nyayam vangi koduppan
 
Top