Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

யென்னை கொண்டாட பிறந்தவன்....3..2

  • Thread Author
அத்தியாயம்…3…2

அந்த மருத்துவ அறிக்கையில் மகேஷ்வரியை காட்டிலும் சித்தார்த் தான் அதை நம்பாது அதிர்ச்சியாகி போனான்..

மருத்துவமனைக்கு இவன் சென்ற போது இவனை பேசியில் அழைத்த காவலர் தான் அங்கு இருந்தது…

அவர் கையில் மாமாவின் கை பேசி ஸ்கீரின் உடைந்த நிலையில் இருந்தது… மகியின் தந்தை மகளுக்கு அழைத்து பேசிய பின் சித்தார்த்துக்கு தான் அழைத்தது… அன்று அவனின் பி.எச்.டியின் தேர்வின் முடிவு வந்து இருந்தது.. இவன் நல்ல மாதிரி தேர்ச்சி பெற்று இருந்ததிற்க்கு தான் இவனை அழைத்து பாராட்டியது..

இவன் கூட வீட்டிற்க்கு வந்த பின் பேசி இருக்கலாமே.. என்று சொன்ன போது மகி கிட்ட பேசும் போது சொன்னா… கேள்விப்பட்ட உடனே உன்னை வாழ்த்தாமல் இருக்க முடியல கண்ணா… அது தான் நாளைக்கு வீட்டுக்கு வரேன்ப்பா ரொம்ப சந்தோஷமா இருக்கு..” என்று சித்தார்த்தை வாழ்த்தியவர் கூட தமிழ் இலக்கியத்தில் பி.எச். டி முடித்தவர் தான்..

“சரிங்க மாமா.. நீங்க சேப்பா வீட்டிற்க்கு போங்க.. நாளைக்கு நீங்க வர தேவையில்லை நானே உங்களை வந்து பார்க்கிறேன்..” என்று சொல்லி பேசியை வைத்து தூங்க சென்றவனை..

சிறிது நேரத்திற்க்கு எல்லாம் அழைத்து இது போல விபத்து என்று அழைத்ததே அதிர்ச்சி என்றால், அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இறந்து விட்டார்கள்..

அந்த சோகம் முடிந்து.. “ எப்படி விபத்து நடந்தது..? என்று இவன் கேட்ட போது தான்.. அந்த காவலர் இப்படி சொன்னது.. மாமன் அத்தைக்கு செய்ய வேண்டிய அனைத்துமே மகேஷ்வரியின் அத்தை குடும்பம் செய்தாலுமே, இடை இடையே சித்தார்த்தும், ராமசந்திரனும் காவல் நிலையத்திற்க்கு சென்று…

ஒரு ரிப்போர்ட் போல கொடுத்து விட்டு தான் வந்தனர்.. அதாவது எங்களுக்கு சந்தேகம் என்பது போல…

இவர்களின் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர் தான்.. ஆனால் விடை தான் கிடைக்கவில்லை.. முடிவில் அவர் வெளியில் நல்ல அந்தஸ்த்தான ஆசிரியர் பதவியில் இருப்பவர்.. இது போல பழக்கம் எல்லாம் வெளியில் தெரியும் படியா செய்வாங்க..” என்று தான் முடித்தனர்..

ஆனால் யார் என்ன சொன்னாலுமே இறந்தவர்களின் குடும்பத்தினர் நம்பவில்லை என்பது வேறு விசயம். ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதான நிலையில் சாரதா தன் அண்ணன் மகளை தன் வீட்டிற்க்கு அழைத்து கொண்டார்.

மகேஷ்வரிக்கு தன் தந்தை அன்னை இருக்கும் போதே அவளுக்கு அத்தை என்றால், அத்தனை இஷ்ட்டம் தான்.. சாரதாவுக்குமே தன் அண்ணன் மீது இருக்கும் பாசத்தை அனைத்தையுமே முதலில் இருந்தே தன் அண்ணன் மகள் மீது கொட்டினார் தான்.

இப்போது கேட்கவும் வேண்டுமோ. தனக்கு அனைத்துமாக இருந்த அண்ணன் இன்று இல்லை என்பதில் சாரதாவுக்கு துக்கமே…

ஆனால் தன்னை விட மகியின் துக்கத்தை பார்த்தவர்.. தன் துக்கம் மறைத்து தன் அண்ணன் மகளை தேற்றினார்..

வீட்டிலேயே இருந்தால், தாய் தந்தை நினைப்பாக தான் இருப்பாள் என்று சாரதாவும், அவர் கணவன் ராம்சந்திரனும் முடிவு செய்து … மகேஷ்வரி அப்போது தான் பி.காம் முடித்து அடுத்து எம் ,காம் அவள் படித்த கல்லூரியிலேயே படிக்க எண்ணி இருந்தவளை..

அனைவரும் ஒன்றாக உணவு உண்ணும் சமயத்தில் சாரதா தான்… “ நீ அத்தான் மாமாவும் வேலை பார்க்கும் காலேஜிலேயே மேலே படி டா தங்கம்..” என்று தன் அண்ணன் மகளின் பாதுகாப்பை கல்லூரியிலுமே இருக்க வேண்டும் என்று நினைத்து சொன்னது..

ஆனால் சித்தார்த்.. “ம்மா மகிக்கு எங்கு படிக்க விருப்பம் இருக்கோ அங்கு படிக்கட்டும்.. நீங்க உங்க விருப்பத்தை அவள் மீது திணிக்காதிங்க…” என்று சொன்னது.

மகனின் இந்த பேச்சில் ராமசந்திரன் தான் தன் மகனை யோசனையுடன் பார்த்தது..

தந்தையின் அந்த பார்வையில்.. சித்தார்த்.. “ என்னப்பா… என்று அவனுமே தந்தையின் அந்த பார்வையில் யோசனையாக கேட்க..

“இல்ல தன் கிட்ட படிக்கும் பெண்ணை திருமணம் செய்துக்க மாட்டேன். இப்படி ஏதாவது குறிக்கோள் வைத்து இருக்கியா என்ன…?” என்று கேட்டவரும் மகன் சொல்லிக் கொடுக்கும் அதே கல்லூரியில் தான் லெச்சரராக இருக்கிறார்…

அந்த கல்லூரி மிகவும் பழமை வாய்ந்தது… ராமசந்திரன் அந்த கல்லூரியில் தான் படித்தது.. பின் படிப்பித்து கொண்டு இருப்பதும்…

அவரின் திறமைக்கு எத்தனையோ கல்லூரி அவரை அழைத்தது.. இதை விட அதிகம் சம்பளம் கொடுக்கிறேன் என்று..

அது என்னவோ.. ராமசந்திரனுக்கு இந்த கல்லூரியை விட்டு போக மனது இல்லை.. மகனையும் பள்ளி படிப்பு முடிந்து..

“எந்த காலேஜ் சேர போற எந்த க்ரூப் என்று கேட்டதற்க்கு… சித்தார்த்.. தந்தை வேலை பார்த்த கல்லூரியிலேயே சேர நினைக்க..

ராமசந்திரன் திட்ட வட்டமாக சொல்லி விட்டார்… “ என் மகன் என்று நீ அங்கு எந்த சலுகையையும் எதிர் பார்க்காதே என்று…”

காரணம் ராமசந்திரனுக்கு அந்த கல்லூரியில் அத்தனை மதிப்பும் மரியாதையும் இருக்கிறது.. அதை எந்த காரணம் கொண்டும் அவர் இழக்க விரும்பவில்லை…

சித்தார்த்தும் தந்தையின் தீர்க்கத்தை விட இன்னும் அதிகமாகவே… “ நான் எதிர் பார்க்க மாட்டேன்.. “ என்றவன் அந்த கல்லூரியில் படிப்பு முடிக்கும் வரை.. சித்தார்த் சொன்னதை செய்தான்..

இன்னும் கேட்டால் சித்தார்த்தினால் ராமசந்திரனுக்கு இன்னும் மதிப்பு கூடியது என்று தான் சொல்ல வேண்டும்.. அனைத்திலும் முதன்மை மாணவனாக திகழ்ந்தான்..

இவரிடம் இவர் சக லெக்ச்சர்ஸ். “ சார் சித்தார்த் உங்க மகனாம்… இப்போ தான் கேள்விப்பட்டோம்.. ரொம்ப பிர்லியண்ட் சார்…” என்று ராமசந்திரன் கை பிடித்து சொன்ன போது பூரித்து தான் போய் விட்டார்.. பின் அதே கல்லூரியில் மேல் படிப்பு..

பின் அங்கேயே படிப்பிக்கிறேன் என்று இதோ ஐந்து ஆண்டுகளாக தன் மேல் படிப்பாக பிஎச்டி படித்து கொண்டே லெக்ச்சராக பணியாற்றிக் கொண்டு இருக்கிறான்..

ஒரு தந்தையாக தன் மகன் சித்தார்த்தை நினைத்து அவருக்கு எப்போதுமே பெருமை தான்.. அவர் கல்லூரியில் முதன் முதலில் வேலைக்கு சேர்ந்த போது. அவரிடம் படிக்கும் இளம் பெண்களை பார்த்து அன்று மனதில் ஒரு உறுதி பூண்டார்..

அதாவது தன்னை நம்பி படிக்க அனுப்பும் பெற்றோர்களின் நம்பிக்கையை நாம் ஒரு தான் காப்பாற்ற வேண்டும்…அதாவது தன் மாணவியை காதல் திருமணம் என்ற நிலையில் யோசிக்க கூடாது.. அவர்களுக்கு தான் ஒரு குருவாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்று நினைத்த ராமசந்திரன் தன் குருவின் மகளை தான் மணந்தார்.. அதாவது சாரதாவின் தந்தை அவர் பள்ளி படிக்கும் போது அவருக்கு கல்வி கற்ப்பித்தவர்.. அதோடு அவரின் படிப்புக்கும் உறுதுணையாக இருந்த மகளை தான் ஒரு இக்காட்டான நிலை அவருக்கு வந்த போது சாரதாவை அவர் மணந்து கொண்டது..

தன் மகனுக்கும் தன்னை போல தன் மாணவியை மணக்க கூடாது என்று இருக்கிறானா என்ற சந்தேகம் அவருக்கு… காரணம் மகியை தாங்கள் வேலை பார்க்கும் கல்லூரியில் சாரதா சேர்க்க நினைக்க. இவன் வேண்டாம் என்பது போல பேசுகிறானே,.. என்று நினைத்து மகனை யோசனையுடன் பார்த்தவர் மகன் தன்னை பார்க்கவும்.. தன் சந்தேகத்தை கேட்டு விட்டார்..

“நீ உன் ஸ்டுடண்டை மேரஜ் செய்துக்க கூடாது என்பது போல இருக்கியா. அதனால் தான் மகி அங்கு படிப்பதில் உனக்கு யோசனையா.?” என்று கேட்டு விட்டார்…

ஆம் சின்ன வயது முதலே சித்தார்த்துக்கும் மகேஷ்வரிக்கும் தான் திருமணம் செய்து வைப்பதாக பேசி இருந்தனர்… அதுவும் இப்போது மகேஷ்வரியின் பெற்றோர்கள் இறந்த பின்.. சாரதா தன் அண்ணன் மகளை தன் வீட்டிற்க்கு அழைத்து வந்ததிற்க்கு உறவுகளில் சிலர்..

“வீட்டில் வயசு பையன் இருக்கும் போது எப்படி ஒரு வயது பெண்ணை நீ உன் வீட்டுக்கு அழச்சிட்டு போவ..?” என்று கேட்ட போது…

சாரதா ஒரே போடாக. “ உங்க எல்லோருக்கும் தெரியும்.. நான் என் அண்ணன் மகளை தான் என் மகனுக்கு எடுக்க போறேன் என்று… இப்போ என்ன என் அண்ணனும் அண்ணியும் மகளை என் வீட்டிற்க்கு அனுப்பி வைப்பதற்க்கு பதிலாக. என் அண்ணனையும் அண்ணியும் அனுப்பி வைத்து விட்டு என் மருமகளை என் வீட்டிற்க்கு அழச்சிட்டு போறேன்.. இதில் என்ன இருக்கு.?” என்று சாரதா கேட்டும்..

உறவு முறைகளில் ஒரு பெரியவர்… அவர் வாழ்க்கையில் எத்தனை எத்தனை பார்த்து இருந்து இருப்பார்.

அனுபவம் மிக்க அந்த பெரியவர்… “ ஒரு சில திருமணம் மணமேடை வரை வந்தே நின்னு போயிடுது.. நீ என்ன என்றால் சின்ன வயதில் பேசிய பேச்சை வைத்து கொண்டு ஒரு வயது பெண்ணை உன் வீட்டிற்க்கு கூட்டிட்டு போற என்று சொல்ற.. நான் சொல்றதை கேளு.. இப்போதைக்கு மகியை ஒரு பெண்கள் விடுதியில் சேர்த்து விட்டு விடு… அடுத்த நல்ல முகூர்த்தமா பார்த்து உன் மகனுக்கு கட்டிட்டு உன் வீட்டிற்க்கு கூட்டிட்டு போ.. உன்னை யாரு வேண்டாம் என்று சொல்றது…

நாளை பின்னே மகியை உன் மகனுக்கு கட்ட முடியாத சூழ்நிலை வந்தால்,.. அந்த பெண் வாழ்க்கையும் பார்க்க வேண்டும் தானே… நாளைக்கு வேறு ஒரு வீட்டிற்க்கு போகும் படி சூழல் வந்தால் அவளுக்கு ஒரு கெட்ட பெயர் வர கூடாது பாரு…” என்று அந்த பெரியவர் என்னவோ தீர்க்கதரசியாக தான் சொன்னார்..

ஆனால் அவர் பேச்சு சாரதாவுக்கு அத்தனை கோபத்தை கொடுத்தது/..

“என்ன பெரிப்பா பேசுறிங்க நீங்க.. வயசுல பெரியவர் உங்க வாயில் இருந்து இப்படி வரலாமா..? என் அண்ணன் மகளை என் மகன் கட்டாது விட்டு விடுவானா என்ன..? என்ன பேச்சு இது..? என்று தன் அண்ணன் அண்ணி காரியம் முடிந்த பின் உறவுகள் அனைவரும் இருந்த போது … இந்த பெரியவர் தான் மகி எப்படி இங்கு தனியா இருக்கும் என்று அவர் பேச்சை ஆரம்பிக்க..

சாரதா.” என் அண்ணன் மகளை நான் அப்படி தனியே விட்டு விடுவேனா என்ன..? என்ற பேச்சில் தான் பெரியவர் இப்படி சொன்னது.. பாவம் அந்த பெரியவர் சொன்னப்படி தன் மகனுக்கு அடுத்த முகூர்த்ததிலேயே திருமணம் செய்து வைத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்று சாரதா நாளை நினைத்து நினைத்து ஏங்கி இருப்பார் என்று தெரிந்து இருந்தால் அந்த பெரியவர் பேச்சை கேட்டு இருந்து இருப்பார்..

அதுவும் யாரை இனி தன் வாழ் நாளில் பார்க்கவே கூடாது என்று நினைத்து இருந்தாளோ அவரின் மகளை தான் தன் மருமகளாக மகன் கொண்டு வருவான் என்று தெரிந்து இருந்தால், இருபது வயது பெண். படிக்க வேண்டும் என்று நினைக்காது தன் மருமகளாக ஆக்கிய பின் படிக்க அனுப்பி இருந்து இருப்பாரோ என்னவோ.. ஆனால் விதி என்று இருக்கிறது தானே. அது தன் வேலையை காட்டும் முதல் படியாக இதோ தந்தை கேட்ட.

“உன் ஸ்டூண்டை மேரஜ் செய்துக்க கூடாது என்ற கொள்கை ஏதாவது வைத்து இருக்கியா..? என்று கேட்ட நொடி… சித்தார்த்தின் முகம் சட்டென்று மாறி தான் போயின.. பாவம் அதை ராமசந்திரனுமே கவனிக்காது போக.

சித்தார்த்.. “ இல்லேப்பா அது போல எல்லாம் ஒன்னும் இல்ல. மகி விருப்பம் ஒன்று இருக்குலேப்பா உங்களுக்கே தெரியும் மாமா ஒவ்வொன்னும் மகி விருப்பதை கேட்டு தான் எல்லாம் செய்வாரு என்று..”

சித்தார்த் சொல்வதும் உண்மை தான். மகேஷ்வரியின் குடும்பம் உயர்ந்த மத்திய வர்க்கம் தான்.. இருந்துமே அந்த வீட்டில் அவள் தான் இளவரசி… வீட்டில் தினம் தினம் சமைக்கும் உணவை கூட அவளின் அம்மா நாளைக்கு என்ன சமைக்கட்டும் என்று கேட்டு அவளின் விருப்பம் அறிந்து தான் செய்வார்..

அதை வைத்து சித்தார்த் சொல்ல… இத்தனை நேரம் நடந்த பேச்சில் காதில் விழாது உணவை தட்டையே பார்த்து கொண்டு இருந்தவள் சித்தார்த் அத்தானின் இந்த பேச்சில் விடுக்கென்று தலை நிமிர்ந்து பார்த்தவளின் பார்வையில் சித்தார்த்தின் உருவம் கலங்கலாக தான் தெரிந்தது…
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Gurumoorthy ora mama and Sharadha ex lovers ah??? Oru ikkattula than Ramanadhan ah kalyanam panni irukkar… So Guru mama Sharadha vai kalatti vittirukkanum
 
Top