Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

யென்னை கொண்டாட பிறந்தவன்....4...1

  • Thread Author
அத்தியாயம்…4….1

மகியின் கலங்கிய அந்த முகத்தை சித்தார்த்தினால் பார்க்க முடியவில்லை.. சாப்பிட்டு கொண்டு இருந்தவன் எழுந்து மகியின் அருகில் சென்று அவள் முகத்தை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டவன்…

“நாங்க எல்லாம் ஈசியா சொல்லிடலாம் மகிம்மா… போனவங்களை நினச்சா வந்துட மாட்டாங்க என்று.. ஆனால் நினைக்காமல் இருக்க முடியாது.. என்னாலேயே மாமா மாமியின் இழப்பை தாங்க முடியல எனும் போது.. நீ கண்டிப்பா…” என்று சித்தார்த் தன் மாமா மாமியை பற்றி பேசும் போதே அவன் குரலும் கர கரத்து தான் போய் விட்டது..

இருந்துமே தன்னோடு அவர்களின் இழப்பில் தத்தளித்து கொண்டு இருப்பவள் மகி தான்.. என்பதை உணர்ந்தவன் அவளை தேற்றுவது தான் முக்கியம் என்று தன் துக்கத்தை விழுங்கி கொண்டவனாக..

“மகி என்னை பாரு…” என்று சொன்னவன் தன் மார்பில் இருந்து அவளின் முகத்தை எடுத்து தன்னை பார்க்கும் படி செய்தவன்..

“மாமாவுக்கும் மாமிக்கும் நீ இப்படி இருந்தா பிடிக்குமா…?”

தட்டில் போட்ட உணவை சாப்பிடாது அப்படியே வைத்து இருந்ததை சுட்டி காட்டி கேட்ட சித்தார்த்திடம்..

“பிடிக்காது.” என்ற அந்த பேச்சு கூட மகிக்கு கர கரப்பாக தான் வந்தது.

“உன்னை நான் அவங்களை மறந்து போயிட சொல்லலே… மறக்கவும் முடியாது தான்.. எனக்கே முடியாது.. அப்புறம் உன் கிட்ட எப்படி மறந்துடு என்று சொல்ல முடியும் என்னால்…

என்னை போல அவங்க இல்லாத வாழ்க்கையை நீ பழகிக்க தான் வேண்டும் மகி… உங்க அப்பாவுக்கு நீ படிச்சி அவரை மாதிரி தான் டீச்சிங் போகனும்.. என்று தான் ஆசை.. “ என்ற சித்தார்த்தின் இந்த பேச்சு மகேஷ்வரிக்கு புதியது..

அவளின் தந்தை அனைத்துமே அவள் விருப்படி தான் விட்டு விடுவார்.. நீ இது படி.. இது உன் எதிர் கால வாழ்க்கைக்கு நல்லது என்பது போல் எல்லாம் அவளிடம் சொன்னது கிடையாது.. உனக்கு என்ன படிக்க பிடித்து இருக்கோ அது படி டா தங்கம். ஆனால் நீ எந்த படிப்பு எடுத்தாலுமே, அந்த படிப்புக்கு நீ உண்மையா இருக்கனும்.. அதுக்கு நியாயம் செய்யனும்.. படித்து முடித்து விட்டு கண்டிப்பா அது சம்மந்தமா ஏதாவது நீ செய்யனும்.. அது தான் நீ ஆசைப்பட்டு படித்த அந்த படிப்புக்கு நீ செய்யும் நியாயம்.. .” இது அவளிடம் அவள் தந்தை சொல்வது…

ஆனால் இது என்ன சித்தார்த் அத்தான் இது புதியதாக..? என்று யோசனையுடன் தன் அத்தானை பார்த்தவள்..

“என் கிட்ட சொன்னது இல்லையே அத்தான்.” தான் நினைத்ததை சொன்னவளிடம்…

“ம் சொன்னது இல்லை தான் மகி.. அது எனக்கும் தெரியும்.. ஆனா அவருக்கு நீ டீச்சிங் போனா நல்லா இருக்கும்.. நீ உங்க வீட்டில் பக்கத்தில் இருக்கும் சின்ன பசங்களுக்கு அவங்க சந்தேகம் கேட்டால் சொல்லி கொடுப்பலே.. அதை கவனித்து என் கிட்ட ஒரு நாள் சொன்னார்..”

“மகிக்கு டீச்சிங் என்னம்மா வருது தெரியுமா. சுலபமா புரிவது போல அந்த சின்ன பசங்களுக்கு சொல்லி கொடுப்பதை பார்த்து நானே அசந்து போயிட்டேன்… இப்போ இருக்கும் நிறைய பேர் நல்லா படிக்கிறாங்க. ஆனா நல்லா படிக்கும் எல்லோராலுமே.. அதை தெளிவா மத்தவங்களுக்கு புரிவது போல சொல்லி கொடுக்க முடியாது…

“ஆனா அது என் தங்கத்துக்கு வருது சித்து.. யாரு அவள்.. அவள் உடம்பில் ஒடுவது ஆசிரியர் ரத்தம் தானே. வந்து தானே ஆகனும்..”

தன் தந்தை, அடுத்து தங்கை கணவன் சித்தார்த் என்று அனைவருமே சொல்லிக் கொடுக்கும் குரு இடத்தில் இருப்பதை நினைத்து சொன்னவரின் முகத்தில் அத்தனை பெருமை தெரிந்தது…

அதை பார்த்த சித்தார்த் கூட சொன்னான். “ நீங்க மகி கிட்ட சொன்னா போதுமே மாமா. உங்க ஆசையை நிறைவேத்தி விட்டு விடுவா..?” என்று கேட்டவனிடம் தான் அன்று மமேஷ்வரியின் தந்தை…

“ என் ஆசையை அவள் நிறைவேத்துனா.. அப்புறம் அவள் ஆசையை அவள் மகளோ.. மகனோ பிறந்து நிறைவேத்துவாங்களா கண்ணா… நம்ம ஆசையை நம்ம பசங்க மீது என்னைக்குமே திணிக்க கூடாது கண்ணா.”

“உனக்கு உங்க அப்பா போலவே டீச்சிங் மேல் ஆசை.. தன்னால் வந்து விட்டது.. அதனால அது சம்மந்தம்மா படிச்ச.. அதே உனக்கு பிடிக்காது உங்க அப்பா இது படி.. எனக்கு ஆசை.. இந்த வேலை பார்த்தா எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னா.. உன் அப்பா விருப்பத்துக்காக நீ படித்தாலுமே, இது போல கோல்ட் மெடல் வாங்கும் அளவுக்கு படிச்சி…இருப்பியா கண்ணா..?” என்று அன்று அவனின் மாமா கேட்ட போது..

சித்தார்த்.. “ முடியாது..” என்று தான் சொன்னது..

“அது தான் கண்ணா. என் தங்கம் இது வரை.. ஆசிரியரா போகனும் என்பது போல என் கிட்ட சொன்னது இல்ல… அவளுக்கு என்ன படிக்கனுமோ.. அது படிக்கட்டும். ஆனா அவள் எந்த துறை தேர்தெடுத்தாலும்.. அதில் அவள் முதன்மையா வரனும்.. அது தான் எனக்கு வேண்டும்.. அதோட அவள் எப்போவும் சந்தோஷமா இருக்கனும். இது போதும் கண்ணா..”

அன்று தனக்கும் தன் மாமனுக்கும் நடந்த பேச்சை மகியிடம் சித்தார்த் சொல்ல.

அதை கேட்க கேட்க மகிக்கு இன்னுமே தான் அழுகையாக வந்தது… ஆனாலுமே அடக்கி கொண்டவளாக..

“கண்டிப்பா நான் அப்பா ஆசைப்பட்டது போல டீச்சிங்க தான் போவேன்.. அத்தான்.” என்று சொன்னவள் தன் முன் இருந்த உணவோடு தன் துக்கத்தையுமே சேர்த்து முழுங்கி கொண்டாள்…
அடையாரில் தன் மாமன் பங்களாவில் மூன்றாம் மாடியில் இருந்த அந்த சின்ன பாரில் தான் மாமனும் மருமகனும் மது அருந்திக் கொண்டு இருந்தது..

ஒரு இரண்டு ரவுன்ட் மது தொண்டையில் சென்ற பின்… குருவின் மாமன் விசுவநாதன்..

“அப்புறம் மாப்பிள்ளை அந்த பெண்.. அவங்க மாமா வீட்டிற்க்கு போயிடுச்சா… பணம் உதவி ஏதாவது தேவைப்பட்டா கூட கொடுத்து விடலாம் மாப்பிள்ளை… “ என்று சொன்னவர் ஒரு வஞ்சிர மீன் துண்டை தன் வாயில் போட்டவர் அடுத்த துண்டை தன் மாப்பிள்ளையின் வாயில் ஊட்டிக் கொண்டு கேட்டவருக்கு,

குரு மூர்த்தியால் உடனே பதில் அளிக்க முடியவில்லை.. கண்களை மூடிக் கொண்டான்… மாப்பிள்ளையின் அந்த தோற்றத்தில் போதையில் இருந்த போதுமே மாமனுக்கு பதறி தான் போய் விட்டது..

“என்ன மாப்பிள்ளை.. குடும்பம் ரொம்ப கஷ்டப்படுற குடும்பமா மாப்பிள்ளை. சொல்லுங்க மாப்பிள்ளை பெரிய இரண்டு சொத்தை கூட அந்த பெண் பேரில் எழுதி வைத்து விடலாம்.. “ என்று கேட்டவருக்கு இல்லை என்று பதிலாக தலையாட்டியவன்..

“இல்ல மாமா. பணம் எல்லாம் பிரச்சனை இல்லாத பேமிலி தான்.. ரிச் இல்லை என்றாலுமே, ஒரளவுக்கு இருக்கு தான். நாம பணம் கொடுத்து தான் ஆக வேண்டும் என்ற தேவை இல்லாத பேமிலி தான்..” என்று இதை சொல்லும் போது கூட குருமூர்த்தி ஒரு மாதிரியாக தான் சொன்னது…

குருவின் முகபாவனையை கவனித்த அவனின் மாமா… “ அப்புறம் என்ன பிரச்சனை மாப்பிள்ளை…?” என்ற கேட்டவரிடம்.

“ அவர் ஒரு ஆசிரியர் மாமா.. அதுவும் நல்லாசிரியர் விருது வாங்கி இருக்கார்… “ என்று சொன்னவன் பின் ஒரு மாதிரியான குரலில்.

“அவரை போய் குடித்து விட்டு ஆக்ஸிடெண்ட் பண்ணி விட்டார் என்பது போல… ஒரு மாதிரி இருக்கு மாமா… “ என்று சொன்னவனின் தோளின் மீது கை வைத்த விசுவநாதன்…

“எனக்கு புரியுது மாப்பிள்ளை… ஆனா என்ன செய்ய..? இந்த ஆக்சிடெண்டை நீயோ நானோ செய்து இருந்து இருந்தால் அது வேறு.. ஸ்ருதி.. அதுவும் அப்போது அவள் நிலை.. வேறு மாதிரி பரப்பி விட்டு விடுவாங்க குரு.. ஒருத்தவங்களுக்கு நாம போய் வலிய கெட்டது செய்ய கூடாது மாப்பிள்ளை…

ஆனா நமக்கோ நம்ம பிடித்தமான உறவுக்கோ ஒரு பிரச்சனை என்று வரும் போது முதல்ல நம்மளையும் நம்ம சேந்தவங்களையும் தான் நாம பார்த்துக்கனும் மாப்பிள்ளை…” என்று சொன்ன விசுவநாதன்

“ நீ இதையே நினச்சிட்டு இருக்காதே.. ப்ரீயா விடு…” என்று சொன்னதுமே..

குருமூர்த்தியும் செய்த பின் யோசித்து எந்த பயனும் இல்லை.. அதுவும் இதை தவிர தங்களுக்கும் வேறு வழி இல்லாத போது என்ன செய்ய. மாமா சொன்னது போல நாம் நம் வீட்டு பெண்ணை பற்றி தானே நாம் முதலில் யோசிக்க வேண்டும்..

அதுவும் இல்லாது அந்த இறந்தவரின் பெண் சேப்பா அவள் அத்தை வீட்டில் இருப்பதாக தானே நாம் விசாரிக்க சொன்ன ஆள் வந்து சொன்னது..

அதுவும் அவங்க நல்ல மாதிரியான குடும்பம். அந்த வீட்டு பையனுக்கு தான் இந்த பெண்ணை கல்யாணம் செய்ய இருப்பதாக தானே.. அவர்களை பற்றி விசாரித்து சொன்னவன் சொன்னது.. அந்த பெண் சேப்பா இருக்கா.. நம் வீட்டு பெண்ணும் தெரிந்து எதுவும் செய்யவில்லை..” என்று அவன் யோசனை தங்களுக்கு நல்லதை பற்றியே யோசித்து ஒரு முடிவுக்கு வர..

விசுவநாதனுமே.. “ ஸ்ருதி கூட குரு அத்தான் ஏன் ஒரு மாதிரி இருக்கார்.. அன்னைக்கு நான் ரொம்ப கலாட்டா செய்து விட்டேனா.. உங்களுக்கு எல்லாம் அவமானம் ஏற்படுவது போல ஏதாவது செய்து விட்டேனா..? என்று என்னை கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இருக்கா மாப்பிள்ளை..”

“அவள் கிட்ட ஏதோ சொல்லி சமாளிக்கிறதுக்குள்ள போதும் போதும் என்று ஆகிடுச்சி… நீ இனியும் இப்படியே இருந்தால் அவள் யோசனை செய்து நடந்த உண்மையை கண்டு பிடிக்க கூட வாய்ப்பு இருக்கு…” என்று விட்டார்..

குருமூர்த்தி அதன் பின் தான் அந்த நிகழ்வையே மறந்தவனாக இருந்தான்.

ஆம் ஸ்ருதிக்கு அவள் ஒரு விபத்தை ஏற்படுத்தி விட்டது நியாபகத்தில் இல்லவே இல்லை… தன்னால் இரண்டு உயிர் போய் இருக்கிறது என்று தெரிந்தால், கண்டிப்பாக அவள் வாழ்க்கை முழுவதும் இதை நினைத்து நினைத்தே அவள் வாழ்க்கையை கெடுத்து நிம்மதி இல்லாது இருப்பாள் என்று விசுவநாதனும்… குருமூர்த்தியும் அவளிடம் சொல்லாது.. நீ மரத்தில் மோதி விட்டாய் என்று மட்டும் தான் ஸ்ருதியிடம் சொல்லப்பட்டது..

குருமூர்த்தி ஸ்ருதியிடம் மட்டுமா இதை மறைத்தான்.. தன் தந்தை கிருஷ்ண மூர்த்தியிடம் கூட இந்த விசயத்தை சொல்லாது மறைத்து விட்டான்..

நியாயம், நீதி, நேர்மை, என்று பார்க்கும் ஒரு கலெக்ட்டரிடம் இதை சொன்னால் கண்டிப்பாக அவர் நியாயமாக தான் யோசிப்பார்..

ஸ்ருதி மீது தந்தைக்கு பாசம் இருந்தாலுமே, உண்மை சொல்லி ஸ்ருதியை காப்பற்றலாம் என்று நீதி வழியில் தான் யோசிப்பார் என்று தான் குருமூர்த்தி தன் தந்தையிடம் கூட இதை பற்றி மூச்சு விடவில்லை…

ஆனால் கிருஷ்ண மூர்த்திக்கு உண்மை இன்னது என்று சரியாக தெரியாத போதும், ஏதோ நடந்து இருக்கிறது என்பதை யூகித்து தான் கொண்டு விட்டார்.

கிருஷ்ண மூர்த்தி , விசுவநாதன் வீடு பக்கம் பக்கம் என்பதால், அன்று ஸ்ருதி விபத்து செய்த அன்று.. நேரம் தான்டி முதலில் விசுவநாதன் கார் முதலில் வந்தது.

அதுவும் அந்த தண்டாயிதபாணி இல்லாது விசு எங்கும் தனியாக போகாத மனிதன் அவன் இல்லாது வந்ததோடு தன் மகளை தூக்கி கொண்டு பங்களாவுக்கு சென்றதை கிருஷ்ண மூர்த்தி தன் பங்களாவில் இருந்து பார்த்து கொண்டு தான் இருந்தார்.

கிருஷ்ண மூர்த்திக்கு ஸ்ருதி என்றால் பிடித்தம் தான்… ஆனால் விசுவநாதன் வீட்டிற்க்கு கிருஷ்ண மூர்த்தி செல்ல மாட்டார்.. அதனால் மகனுக்கு தெரியாது அவன் மாமன் வீட்டில் தான் ஒன்றும் நடக்காதே..

அதனால் மகனிடம் கேட்டு கொள்ளலாம் என்று எப்போதும் சரியான நேரத்திற்க்கு உறங்க செல்லும் கிருஷ்ணமூர்த்தி தன் மகனுக்காக காத்து கொண்டு இருந்த சமயம் தான்..

அந்த தண்டாயுதபாணி ஸ்ருதியின் காரை எடுத்து கொண்டு வந்தது.. அதன் பின் தன் மகன் ஒரு வித பதட்டமாக மாமன் வீட்டிற்க்கு சென்றது சிறிது நேரத்திற்க்கு எல்லாம் மகன் சென்றது பின் மாமன் சென்றது என்று அந்த இரவு முழுவதுமே ஒரு வித பதட்டமாக மாமனும் மருமகனும் இருப்பதை வைத்தே ஏதோ ஒரு பெரிய விசயம் நடந்து இருக்கிறது என்பதை புரிந்து கொண்டவர்..

அதை தன் மகனிடம்… “ “ நீயும் மாமனும் சேர்ந்து ஏதோ செய்யிறிங்க என்று தெரியுது.. ஆனா ஒன்னு குரு.. நீ என்ன செய்தாலும் ஒரு குடும்பம் பாதிக்காத அளவுக்கு செய்… அதுவும் ஒரு பெண் மனது நோக கூடாது .. ஏன்னா பெண் பாவம் ரொம்ப பொல்லாதது.” என்று சொன்ன தந்தையின் பேச்சு சுருக்கு என்று வலியை கொடுத்தது தான்..

எப்போதும் தன் மாமனை பற்றி இது போல தன் தந்தை சொன்னால், குருமூர்த்தி இது தான் சொல்லுவான்..

“நீங்க என்னப்பா என் மாமாவை முழு வில்லனாகவே நினைக்கிறிங்க.. அதுக்கு எங்க மாமா செய்யும் தொழில் என்று எனக்கு புரியுது தான்.. ஆனா மாமா யாரையும் வலுக்கட்டாயமாக ட்ரிங்க்ஸ்ஸை அவங்க வாயில் ஊத்தி கொடுக்கலையே..” என்று கேட்ட தன் மகனை எப்போதும் கிருஷ்ண மூர்த்தி ஒரு பார்வை பார்ப்பார்.. ஆனால் தந்தை இது போல பார்வை பார்க்கும் போது அதில் என்னவோ இருப்பது போல் தான் குருமூர்த்திக்கு தோன்றும்.. கேட்டால் சொல்லி விடவா போகிறார்…

இதோ நான் பப் வைத்து கொண்டு இருக்கிறேன் என்று இப்போது எல்லாம் என்னையும் வில்லனை போல் தான் பார்க்கிறார். அது போல தான் தன் மாமனை பார்க்கிறார் என்று நினைத்து கொண்டான்.

ஆனால் குருமூர்த்தி தன் தந்தையிடம் கேட்டது போல கிருஷ்ண மூர்த்திக்கு விசுவநாதன் ஒரு முழு வில்லனாக ஒரு வில்லங்கமான காரியத்தை செய்து இருக்கிறார் என்று தெரிய வந்தால் குருமூர்த்தி இதே போலவே தன் மாமனை மதிப்பானா..

இல்லை தன் மாமன் அது போல செய்ய காரணமே தன் அம்மாவின் மீது தன் மாமன் வைத்து இருந்த அந்த அதிகப்படியான பாசத்தினால் தான் என்று எப்போதும் போல தன் மாமனுக்கு பக்க பலமாக இருப்பானா….?

இல்லை முப்பது வருடங்கள் முன் தன் மாமன் செய்த அதே செயலை தான் தன் மாமன் மகளுக்காக அவன் செய்ய போவதால் போரில் அறத்தை எல்லாம் பார்க்க கூடாது… வெற்றி ஒன்று தான் இலக்கு என்று தன் மாமனின் போதனையை கேட்டு வளர்ந்தது போல… இருக்க போகிறானா பார்க்கலாம்..




 
Well-known member
Joined
Jul 14, 2024
Messages
184
சாரதா krishna moorthi kku taan avar ethuvo pannittar pola
Rendu perum friend's or lovers ahh
சாரதா க்கு ethuvo problem la marriage nnu sonneengha ma
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
So Sharadha and Krishna Moorthy lovers…
Vishwanathan thangachi Krishna vai one side ah love panna… thangachi kadhalai serkka poai Sharadha va pirichi vittu irukkar…
Same like Guruvum Shruthi Siddarth ah love pannura nu Mageshwary ah avan kalyanam panna poran 😡😡😡

What a shame… Kandippa Vishwanath and Guru kku thandanai kidaiche aaganum
 
Top