Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

யென்னை கொண்டாட பிறந்தவன்...5...1

  • Thread Author
அத்தியாயம்…5…1

சித்தார்த் கல்லூரிக்கு வரும் போது அவனின் உடையின் தேர்வு எப்போதும் அவன் துறைக்கு ஏற்றது போல தான் இருக்கும்… பி,எச்.டி படிக்கும் போதே அவன் இந்த கல்லூரிக்கு பாடம் நடத்த வந்து விட்டான்..

மாணவர்களுக்கும் தனக்கும் சிறிது தான் வயது வித்தியாசம் என்ற நிலையில், அவர்களிடம் இருந்து தன்னை வேறுப்படுத்தி காட்ட அப்போது இருந்தே உடை விசயத்தில் அவன் எச்சரிக்கையாக தான் இருப்பான்..

இதோ முழு கை சட்டை அணிந்து பார்மூலாக கல்லூரிக்குள் நுழைந்த சித்தார்த் அது என்னவோ கல்லூரியை விட்டு கிளம்பும் சமயம் தன் காரை நோக்கி நடக்கும் போதே தன்னால் அவன் கைகள் கைய்யின் பட்டனை கழட்டு விட்டு முழுக்கை சட்டையை முக்கால் கை சட்டையாக மேலேற்றி கொண்டே தான் தன் காரின் பகுதிக்கு செல்வது அவன் பழக்கம்..

அது பார்க்க அழகாக இருக்குமா இல்லை ஸ்ருதிக்கு சித்தார்த்தின் மீது இருக்கும் அந்த காதலால் அவன் எது செய்தாலுமே அழகாக அவளின் கண்ணுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.. ஆனால் சித்தார்த்தின் இந்த மேனரிசத்தை ஸ்ருதி எப்போதும் இது போல தூர நின்று பார்ப்ப்பது வழக்கம்.

அதே வழக்கமாக ஸ்ருதி அங்கே நிற்க. சித்தார்த்துமே எப்போதும் போல சட்டையின் கையே மேல் நோக்க்கி விட்ட வாறு சித்தார்த் தன் கார் அருகில் செல்ல.

எப்போதுமே கார் அருகில் சென்றதும் காரின் ஏறி கிளம்பி விடும் சித்தார்த்.. அனேஉ ஏறாது நின்று சுற்றி முற்றியும் பார்க்க.

ஸ்ருதியோ தன்னை கண்டு கொண்டானோ என்ற பயத்தில் அங்கு இருந்த தூணின் பின் நின்று கொண்டவள் வதனியையும் தன் பின்னே மறைத்து கொண்டாள்.

“ஏன்டி சார் பார்த்துட போறார் என்று நீ தான்டி மறையனும்.. என்னை ஏன்டி ஒளித்து வைக்கிற…” என்று கேட்டவளிடம்.

அவளை திரும்பி பார்த்து ஸ்ருதி “ உஷ்.” என்று அமைதியாக இருக்கும் படி சொன்னவள் மீண்டும் சித்தார்த் இருக்கும் இடத்தில் தன் பார்வையை பதித்த போது தான்..

சித்தார்த் சிரித்து கொண்டே கார் கதவின் பின் பக்கம் கதவை திறந்து விட.. மகியுமே சித்தார்த்திடம் ஏதோ பேசிக் கொண்டே காரின் முன் பக்கம் இருக்கையில் அமர்ந்தாள்.. அவளின் தன் கையில் இருந்த பையை அவள் மடி மீது போட்டு விட்டு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரை எடுத்து சென்று விட்டான்..

இந்த காட்சியை ஸ்ருதி மட்டும் அல்லாது வதனியுமே தான் அதிர்ச்சியாகி அதிசயத்து பார்த்து கொண்டு இருந்தாள்..

காரணம் சித்தார்த்தின் அந்த புன்னகை.. கல்லூரியில் இது போல அவன் சிரித்து யாருமே பார்த்தது இல்லை… அதற்க்கு என்று சிடு மூஞ்சி என்று சொல்லி விட முடியாது.. ஆனால் இது போல. வதனியே இந்த காட்சியில் அதிர்ச்சியாகி போய் விட்டாள் என்றால்,

அப்போ நம் ஸ்ருதியின் நிலை…? சித்தார்த்தின் கார் சென்ற பின் கூட ஸ்ருதியின் பார்வை அங்கேயே தான் நிலைத்து நின்று இருந்தது..

வதனி தான்.. “ ஸ்ருதி ஸ்ருதி..” என்று அவளை பிடித்து உலுக்கினாள்..

சிறிது நேரத்துக்கு எல்லாம் தன்னை மீட்டுக் கொண்டாள்.. ஸ்ருதி..

பின்.. “ சித்தார்த் சாருக்கு ரிலேஷனா இருப்பாங்க போல..” என்று ஸ்ருதி தனக்கு தானே சொல்லிக் கொண்டாளா.? இல்லை வதனியிடம் சொன்னாளா.? என்று தெரியாத பாவனையில் சொல்ல..

வதனியுமே.. “ ஆமாம் எனக்கும் அப்படி தான் தோனுது..” என்றும் சொன்னாள்..

பின் ஸ்ருதியே… “ ரிலேஷன் என்றால் சிஸ்ட்டர். இது போல தான் இருக்கும்..” என்று முன் சொன்ன அதே பாவனையில் தான் ஸ்ருதி சொன்னது..

ஆனால் வதனி இந்த முறை ஸ்ருதியின் பேச்சுக்கு ஒத்து ஊதவில்லை… “ இன்னைக்கு பூ கொடுத்து சித்தார்த் சார் கிட்ட பிரபோஸ் செய்து ராமசந்திரன் சார் கிட்ட ஆசிர்வாதம் வாங்கு என்று சொன்ன போது சிஸ்டரா இருந்தா கண்டிப்பா.. அதுக்கு ஒத்து இருந்து இருக்க மாட்டா…” வதனி சரியாக தான் யோசித்து சொன்னாள்..

வதனியின் பேச்சு சரி தான் என்று ஸ்ருதி உணர்ந்தாலுமே… ஆனால் அதை ஏற்றுக் கொள்ள தான் ஸ்ருதிக்கு மனது இல்லாது..

“பார்க்கலாம்.. எனக்கு என்னவோ இருக்காது என்று தான் தோனுது… நாளைக்கு பார்க்கலாம்..” என்று சொல்லி வீடு வந்த ஸ்ருதிக்கு மனது ஒரு நிலையில் இல்லாது தத்தளித்தது…

அவளின் அந்த தத்தளிப்பு அவளின் முகத்திலும் தெரிந்த போல… அவளின் அம்மா தாமரை.

“என்ன டி ஒரு மாதிரி இருக்க ஏதாவது பிரச்சனையா..?” என்று கேட்டவர் பின் அவரே.

“மூன்று மாசம் முன் கூட உன் முகம் இப்படி தான் இருந்தது.” என்று இந்த வார்த்தை சொல்லும் போதே அந்த வார்த்தையை கேட்டு கொண்டே அந்த இடத்திற்க்கு வந்த விசுவநாதன்..

“சாப்பிடும் பெண்ணை சாப்பிட விடாது என்ன இது தொன தொன என்று…” என்று கடிந்து கொள்ள..

தாமரையோ… “ இல்லங்க…” என்று அடுத்து என்ன பேசி இருப்பாரோ..ஆனால் விசுவந்தாதன்…

“ நீ ஒன்னும் சொல்ல தேவையில்லை.. நான் என் பொண்ணை பார்த்து கொள்கிறேன்..” என்று மனைவியை அந்த இடத்தை விட்டு போக சொல்ல.

‘ஆமா நான் இல்லாம தான் இவருக்கு பொண்ணு வந்துடுச்சி போல’ என்று முனு முனுத்து கொண்டு போனவரின் காதில் விசுவநாதன்…

“நீ இல்லாம என் பொண்ணு எனக்கு வரல தான்.. ஆனா நான் உன்னை கட்டாது யாரை கட்டி இருந்தாலுமே என் பொண்ணு எனக்கு வந்து இருப்பா…” என்ற பேச்சில் பாவம் தாமரை தான் அலறி அடித்து கொண்டு ஓடி விட்டாள்..

விசுவநாத்னும், தாமரைக்கும், திருமணம் முடிந்து இருபத்தி ஐந்து வருடம் ஆகிறது.. அது என்னவோ தெரியவில்லை.. இன்னுமே விசுவந்தாதனை பார்த்தால் தாமரைக்கு பயம் தான். அவரின் ஒற்றை குரலுக்கு ஒடி ஒளிந்து கொள்வார்.

இன்றுமே தாமரை ஒடி விட.. எப்போதும் இது போல நேரம் இதை வைத்து ஸ்ருதி கலாட்டா செய்வது உண்டு…

“அம்மா சரியில்லைப்பா நானா இருந்தா என் புருஷனை கை பிடியில் வைத்து இருப்பேன்.. ஆனா மம்மியை பாருங்க…” என்று..

ஆனால் இன்று அமைதியாக தட்டில் இருக்கும் தோசையை பிய்ப்பதும், பின் அதிலேயே போடுவதுமாக இருந்த மகளையே பார்த்து இருந்த விசுவந்தாதன்…

“ஸ்ருதி.. காலேஜில் ஏதாவது பிரச்சனையா…?” என்ற தந்தையின் இந்த குரலில் தான் ஸ்ருதி அங்கு தந்தை வந்ததையே கவனித்தது..

அதுவும் அவர் தன்னை யோசனையும் பார்த்து கொண்டு இருப்பதை பார்த்தவள் சட்டென்று தன் முக பாவனையை மாற்றி கொண்டவளாக..

“அது எல்லாம் இன்னும் இல்லையே டாட்..” என்று சொன்னவள் …

“ஏன் கேட்கிறிங்க…?” என்று கேட்ட மகளின் .. “ஒன்னும் இல்ல உன் முகம் டல் அடிக்குது..” என்று தந்தை சொல்லவும்..

“ காலேஜில் இன்னைக்கு நிறைய டெஸ்ட் வெச்சாங்கப்பா.. வேறு ஒன்றும் இல்ல..” என்று சொன்னவள். அவசர அவசரமாக தட்டில் இருந்த தோசையை வாயில் பிட்டு போட்டவள்..

தன் தந்தையிடமு அவசரமாக. “ ஒரு குட் நையிட்டை வைத்து விட்டு தன் அறைக்கு ஓடி வந்து விட்டாள்..

அம்மாவை சமாளித்து விடலாம். ஆனால் அப்பா. முடியவே முடியாது.. அப்பா காதலுக்கு எதிரி இல்லை என்பது அவளுக்கு தெரியும்,,

காரணம் அவளின் காஞ்சனா அத்தை அவர்களின் அத்தை மகனான கிருஷ்ண மூர்த்தி அத்தானை தான் கட்டிக் கொள்வேன் என்று சொன்ன போது.. முன் நின்று தன் தங்கையை கிருஷ்ண மூர்த்திக்கு திருமணம் செய்து வைத்தவர் தன் தந்தை..

அப்படி இருக்க தன் காதலை தந்தை மறுக்க மாட்டார் தான். ஆனால் அதற்க்கு என் காதல் ஒரு தலை காதலாக இருக்கும் பட்சத்தின் தந்தையிடம் நான் என்ன என்று சொல்வது..

அதோடு புதியதாக இந்த மகி வேறு… சித்தார்த் சார் ராமசந்திரன் சாருக்கு ஒரே மகன் என்பது தெரியும்.. சரி சித்தி சித்தப்பா என்ற வகையில் தங்கை உறவாக இருக்கலாம் என்று நினைக்க கூட விடாது வதனி சொல்வதும் சரி என்று தானே தோனுது..

நாளைக்கு முதல் வேலையாக அந்த மகி பெண்ணை பிடித்து தன் சந்தேகத்தை தீர்த்துக்கனும் என்ற முடிவோடு படுக்கையில் படுத்தாலுமே, அவளாள் மகி யார் என்று தெரிந்தால் தான் என்னால் தூங்க முடியும் போலவே படுத்தவள் மீண்டும் எழுந்து அமர்ந்து கொண்டாள்..

பாவம் அவளுக்கு தெரியவில்லை.. மகியிடம் இருந்து கிடைக்கும் விடை அவளுக்கு மொத்த தூக்கத்தையும் கெடுத்து விடும் என்று தெரியாது இருக்க..

மகள் சென்ற பின் விசுவநாதன் சாப்பிட்டு கொண்டே … “தாமூ தாமூ…” என்று தன் மனைவி தாமரையை அழைத்தார்..

தாமரைக்கும் தெரியும்.. தன் மகள் சென்றதும் தன் கணவன் தன்னை அழைப்பார் என்று.. அதற்க்கு தானே கதவை சாற்றாது தாமரையும் காத்து கொண்டு இருந்தது..

அழைத்த அழைப்புக்கு உடனே தன் முன் வந்து நின்ற மனைவியை பார்த்து விசுவந்தாதனுக்கு சிரிப்பு தான் வந்தது..

அவருக்குமே தெரியும் தான் அழைக்க மனைவி எப்போதும் காத்து கொண்டு இருப்பாள் என்பது.. இதுவுமே இருபத்து ஐந்து வருடமாக நடக்கும் நிகழ்வு தான்..

தன் முன் வந்து நின்றவளை.. “ என்ன தினம் தினம் உட்காரு சாப்பிடு என்று சொன்னா தான் சாப்பிடுவியா..?” என்று மனைவியை ஒரு அதட்டல் போட..

சட்டென்று கணவனின் பக்கம் இருக்கையில் வேகமாக அமர்ந்து கொண்டதில் கணவனின் தோளில் சாய்ந்து பின் பதட்டத்துடன் நேராக அமர்ந்த மனைவியை ஒரு மாதிரியாக பார்த்த விசுவநாதன்..

“ பேச்சு மட்டும் நான் இல்லாது உங்களுக்கு பொண்ணு வந்துடுச்சா என்று கேட்க தெரியுது.. நான் தொடாது தான் உனக்கு நம்ம பொண்ணு வந்தாளா.? கொஞ்சம் மேல பட்டதுக்கு அப்படி தள்ளி போற …” என்று கேட்ட கணவனின் இந்த அதட்டல் இப்போது தாமரைக்கு வெட்கத்தை தான் கொடுத்தது..

மனைவியின் அந்த வெட்கம் படிந்த முகத்தை பார்த்த விசுவநாதனுக்கு எப்போதும் போல மனதில் ஒரு மகிழ்ச்சியும், அந்த மகிழ்ச்சிக்கு இடையில் ஒரு பெரும் மூச்சும் வந்தது.. தான் வாழும் வாழ்க்கையை தன் தங்கை வாழ கொடுத்து வைக்கவில்லையே என்பதை நினைத்து…

ஆனால் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாது தன் தட்டில் இருந்த சப்பாத்தியை மனைவிக்கு ஊட்டி விட தொடங்கினார்..

மனைவிக்கு கடைசி வாய் ஊட்டும் போது அந்த இடத்திற்க்கு குரு வந்தான்.. வந்தவன் இந்த காட்சியை பார்த்து அதிர்ந்தோ.. இல்லை அந்த இடத்தை விட்டு அகலவோ இல்லை.. இது அவன் அடிக்கடி பார்க்கும் காட்சி என்பதால் சாதாரணமாக சாப்பாடு மேடையில் அவர்களுக்கு எதிரில் அமர்ந்து கொண்டவன்.. அங்கு இருந்த ஆப்பிளை ஒரு கடித்து சாப்பிட ஆரம்பித்து விட்டான்..

விசுவநாதனுக்குமே மருமகன் முன் என்ன இது எல்லாம் மனைவிக்கு ஊட்டாது எல்லாம் இல்லை.. நிறுத்தி நிதானமாக ஊட்டி முடித்த விசுவநாதன்.. மனைவியின் உதட்டின் மீது ஒட்டி கொண்டு இருந்த சப்பாத்தியின் ஒரு துண்டை தன் ஒற்றை விரலை கொண்டு எடுத்து கொண்டே..

“சாப்பிடு மாப்பிள்ளை…” என்று மாப்பிள்ளையையும் உபசரிக்க ஆரம்பித்து விட்டார்.. குருவுமே.

“இப்போ தான் முடிஞ்சது மாமா.. பப்க்கு போகனும்.. போகும் முன் உங்களை பார்த்துட்டு போகலாம் ..” இந்த வார்த்தை சொல்லும் போது குருமூர்த்தி தன் மாமனை பார்த்து கொண்டு சொல்ல..

அவருமே.. “கொஞ்சம் இரு மாப்பிள்ளை…” என்று இவர்களின் பேச்சு சாதாரணமாக தான் இருந்தது.

ஆனால் மாமன் மாப்பிள்ளைக்கு இடையில் இடைப்பட்டு அமர்ந்திருந்த தாமரைக்கு தான் என்னவோ போல் இருந்தது.. இதுவுமே இருபத்தி ஐந்து வருடங்கள் நிகழும் நிகழ்வுகள் தான். ஆனாலுமே குருமூர்த்தியின் முன் ஒரு வித கூச்சம் தாமரைக்கு..

குருமூர்த்தி வெறும் நாத்தனார் மகன் மட்டும் அல்லாது தன் அண்ணன் மகனுமானதால் இன்னுமே ஒரு மாதிரியாக ஒரு வித சங்கடத்துடன் தாமரை எழ முயல.

மாப்பிள்ளையின் பேச்சுக்கும் இடையில் மனைவியின் கை பற்றி தடுத்து அங்கு இருந்த தண்ணீரை மனைவியின் கையில் கொடுத்து..

“குடித்து விட்டு போ..” என்றவர் தாமரை தண்ணீர் குடித்து விட்டு செல்லும் வரை மாப்பிள்ளையிடம் சாதாரண பேச்சு பேசிக் கொண்டு இருந்தவர் மனைவியின் தலை மறைந்ததுமே..

இத்தனை நேரம் இருந்த அந்த இலகு தன்மை போய் விட.. குருமூர்த்தி தான்..

“ என்ன மாமா வீட்டுக்கு வா என்று மெசஜ் போட்டிங்க.. ஸ்ருதிக்கு அன்று நடந்தது ஏதாவது நினைவுக்கு வந்து விட்டதா என்ன…?”

தன் மாமன் இது போல பதட்டப்படுகிறான் என்றால் ஒன்று தன் விசயமாக இருக்கும் இல்லை அவனின் மகள் ஸ்ருதி விசயமாக இருக்கும்.. அதனால் தான் அப்படி கேட்டது..

ஆனால் விசுவநாதன்.. “இது அது இல்ல குரு.. காலேஜில் ஏதாவது பிரச்சனையா என்று தெரியல. ஒரு மாதிரி டல்லா இருந்தா.. சாப்பிடும் போது அவள் பிரண்ட் வதனி கிட்ட இருந்து இவள் போனுக்கு மெசஜ்…

இப்போ ஒகே தானே என்று.. நான் அவள் கை கழுவும் போது அவள் போனை எடுத்து பார்த்த போது தெரிந்தது..” என்று சொல்லி விட்டு தன் மாப்பிள்ளையின் முகத்தை பார்த்தார் விசுவநாதன்..

விசுவநாதனின் அத்தனை பேச்சுக்கும் குருமூர்த்தி… “ நான் பார்த்துக்குறேன் மாமா..” இது தான் சொன்னது.. நொடியில் விசுவநாதன் முகத்தில் ஒரு நிம்மதி.. தன்னை விட விசுவநாதன் தன் மருமகனை நம்பினான்..

குருமூர்த்தி சொன்னது போல ஸ்ருதி கல்லூரிக்கு கிளம்பும் சமயம் சரியாக தன் மாமன் வீட்டிற்க்கு வந்தவன் ஸ்ருதியிடம்..

“ இன்னைக்கு உன் காலேஜ் வழியா தான் போறேன்… வா உன்னை ட்ராப் செய்யிறேன்..” என்று குருமூர்த்தி சொன்னதுமே ஸ்ருதியின் கண்கள் சட்டென்று தன் தந்தையை தான் தொட்டு மீண்டாலும்..

குருமூர்த்தியிடம்“வரும் போது அத்தான்..” என்று கேட்டதற்க்கு குருமூர்த்தி..

“ட்ராப் செய்ய தெரிந்த உன் அத்தானுக்கு பிக்கப் செய்ய தெரியாதா என்ன..? வா.” என்று அழைத்து விட்டு குருமூர்த்தி தன் பின் ஸ்ருதி வருகிறாளா …? இல்லை யா…? என்று கூட பாராது காரை நோக்கி சென்றான்.

ஸ்ருதி தன் பின் வருவாள் என்று அவ்வளவு நம்பிக்கை அவனுக்கு.. ஸ்ருதி மட்டும் கிடையாது.. தாமரை ஏன் விசுவநாதனே சமயத்துக்கு குருமூர்த்தி இது தான் என்று சொல்லி விட்டால், விசுவநாதன் மறுக்க மாட்டான்..

ஸ்ருதி காய்ல் அமர்ந்ததுமே காரை ஒட்ட தொடங்கியவன்.. ஸ்ருதியிடம் மெல்ல பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்..

“காலேஜ் எல்லாம் எப்படி போகுது ஸ்ருதி…?” என்ற கேள்விக்கு ஸ்ருதி பதில் அளிக்கவில்லை..

திரும்பி தன் அத்தானை பார்த்தவள்.. “ அத்தான் நேத்து நான் அப்சட்டா தான் இருந்தேன்… அத நான் ஒத்துக்குறேன்.. ஆனா அதுக்கு காரணம் நான் தானே தவிர என்னை யாரும் தொந்திரவு செய்யல அத்தான்.. நீங்களும் டாடியும். அந்த பர்த்டே பார்ட்டிக்கு போயிட்டு வந்ததில் இருந்து ரொம்ப தான் பண்றிங்க.. நான் தான் ஏதோ தப்பு என்று அந்த இடத்தை விட்டு வந்துட்டேன் தானே அத்தான். நானும் சேப்.. என்ன ஒன்னு கார் தான்.. போச்சி.. “ என்று பேசியவளின் பேச்சில் குருமூர்த்தி தன் முகபாவனையில் கூட எதுவும் காட்டாது அமைதியயாக காரை செலுத்தினான்..

ஸ்ருதி புத்திசாலி பெண்… தன் முகத்தை வைத்தே கூட கண்டு பிடிக்க கூடும்.. இனி அந்த நாளை பற்றிய விசயத்தை நாம் பேசவே கூடாது மறந்து விட வேண்டும் என்று நினைத்தவனுக்கு தெரியவில்லை.

அந்த நாள் தான் நான்கு பேரின் வாழ்க்கையை புரட்டி போட போகிறது என்பது…
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Mamanum Marumaganum koottu kalavaninga… Ippo antha Guru force panni Soddarth ah Shruthi ku katti vaikka poran 😡😡😡
 
Top