Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

யென்னை கொண்டாட பிறந்தவன்...5..2

  • Thread Author
அத்தியாயம்….5.2

குருமூர்த்தி அதற்க்கு அடுத்து எதுவும் பேசாது காரை செலுத்த, ஸ்ருதியுமே நல்லது என்பது போல வெளியில் வேடிக்கை பார்ப்பது போல அவள் பாவனை செய்தாலுமே, இன்று காலையிலேயே அந்த மகி பெண்ணை பிடித்து விசாரித்து விட வேண்டும்..



மகியும் சித்தார்த்தும் நேற்று பேசியதுயதும் அதுவும் அந்த பெண்ணுக்காக கார் கதவை சித்தார்த் திறந்து விட்டது என்று மாறி மாறி கண் முன் வந்து நிற்க.. அவள் மன நிலை ஒரு நிலையில் இல்லை.. அது அவளின் முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தது.



குருமூர்த்தி பேசாது காரை செலுத்தினாலும், ஸ்ருதியை அவ்வப்போது பார்த்து கொண்டு தான் வந்தான்… மாமா சொன்னது போல ஏதோ விசயம் இருக்கிறது என்பது குருவுக்கு ஸ்ருதியின் முகபாவனையே காட்டி கொடுத்து விட்டது…



ஸ்ருதியை கவனிக்கனும் என்று மனதில் நினைத்து கொண்டான்.. இதற்க்குள் கல்லூரியும் வந்து விட்டது.. காரை கல்லூரியின் வாசலில் விடாது கல்லூரியின் உள்ளேயே செலுத்தியவனிடம்…



“அத்தான் இங்கேயே . நிறுத்துங்க நிறுத்துங்க..” என்று ஸ்ருதி சொல்ல சொல்ல கல்லூரி உள் வளாகத்தின் சென்ற பின் தான் தன் காரை குருமூர்த்தி நிறுத்தியது..



யாருமே இல்லாது கல்லூரி வெறிச்சோடி போய் இருப்பதை பார்த்து குருமூர்த்தி என்ன என்பது போல தன் மாமன் மகள் ஸ்ருத்தியை பார்த்தான்…



பின் பார்க்க மாட்டானா..? காலையில் “ஏன் இவ்வளவு சீக்கிரம் கிளம்புற என்று கேட்ட போது இன்று ஏதோ காலையில் ஸ்பெஷல் க்ளாஸ் என்பது போல் சொன்னவளை குருமூர்த்தி பார்க்க தானே செய்வான்..



பார்த்தவன் எதுவும் கேட்கவில்லை.. அதற்க்குள் இவர்களை கண்டதும் வதனி இவர்களை நோக்கி ஒடி வந்ததை பார்த்தவன்.. கூட ஒருத்தி இருக்கிறாள் பரவாயில்லை என்று நினைத்தவன்.



போகும் போது… “ ஈவினிங் நானே வந்து பிக்கப் செய்துக்கிறேன்…” என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.



குருமூர்த்தியின் கார் மறைந்ததுமே ஸ்ருதி பர பரப்பாக.. “இன்னும் அந்த பெண் வரல தானே…” என்று வதனியிடம் கேட்க…



ஆனால் வதனியோ ஸ்ருதி கேட்டதற்க்கு பதில் அளிக்காது குருமூர்த்தி கார் சென்ற திசை பக்கமே அவளின் கண்கள் நிலைத்து இருந்தது..



அதை பார்த்த ஸ்ருதி அவளின் தலையில் கொட்டியவள்… “ என்ன அங்கு பார்வை…?” என்று கேட்டதற்க்கு..



“இல்ல உங்க அத்தானே செம ஹன்சமா இருக்கார்.. நீ ஊ என்று சொன்னா போதும் உங்க அப்பா உங்க இரண்டு பேருக்கும் மேரஜ் செய்து வைத்து விடுவார்.. உன் அத்தானுமே உன் மீது ரொம்ப கேரிங்கா தான் இருக்கார்.. நீ ஏன் இப்படி உன்னை கண்டுக்காத சித்தார்த் சாரை பார்க்கிற என்று தெரியல..” என்று கேட்டவளை பார்த்து சிரித்த ஸ்ருதி…



“காதல், ஜாதி, மதம், பணம் பார்த்து வராதது போல… உறவா…? உறவு இல்லையா..?. இவங்களை காதலிச்சா எந்த பிரச்சனையும் இல்லாது மேரஜில் முடியும்.. இவங்களை காதலிச்சா போராடி தான் காதலில் ஜெயிக்க முடியும்.. நீ சொன்ன சேப்பா பார்த்து வராது வதனி..” என்றவளிடம்.



வதனி… “ அது எல்லாம் சரி தான். ஆனால் போராட இரண்டு பேருமே லவ் பண்ணனும்.. இங்கு நீ மட்டும் தான் பார்த்துட்டு இருக்க.. ஆனா சித்தார்த் சார்…” என்று தன் பேச்சை இழுத்து நிறுத்திய வதனியிடம்.



ஸ்ருதி சிரித்து கொண்டே… “ அவர் என்னை பார்க்காததை நீ பார்த்தியா…?” என்று கேட்டு விட்ட சென்ற தோழியின் பேச்சு புரியவே வதனிக்கு ஒரு நிமிடம் ஆனது..

புரிந்ததும் அவள் பின் ஓடியவள் அவள் கை பிடித்து.. “ஏய் நீ என்ன டி சொல்ற.. அப்போ சித்தார்த் சாரும் உன்னை பார்க்கிறாரா..?” என்று ஆச்சரியமாக கேட்டவளுக்கு பதில் சொல்லாது அவங்கள் கேங் எப்போதும் அமரரும் அந்த ஆஸ்த்தான இடமான மரத்திற்க்கு கீழ் உள்ள மேடையில் அமர்ந்து கொள்ள..



வதனியும் அவள் பக்கத்தில் வந்து அமர்ந்து.. “ அப்போ அப்போ சார் உன்னை பார்க்கிறாரா..?” என்று வதனி திரும்ப கேட்க ஸ்ருதி வாய் திறக்கவில்லை..



கேட்டு கேட்டு பார்த்த வதனி தான். “ போ நீ எப்போவும் இப்படி தான். உனக்கா வேணும் என்றால், எல்லா விசயமும் சொல்லுவ.. ஆனா சொல்ல கூடாது என்று முடிவு செய்துட்டா வாயை திறக்க மாட்டியே…” என்று கடு கடுத்து பேசிக் கொண்டு இருந்த போது தான் அவர்கள் கேங்கில் இருந்தவர்களில் இருக்கும் ஒவ்வொருவராக வர தொடங்கினர்..

அதில் நேற்று மகியிடம் பூ கொடுத்து சித்தார்த்திடம் பிரபோஸ் செய்ய சொன்னவன்.அனைவரிடமும் பொதுவாக..



“ நேத்து அந்த பெண் நம்ம சித்தார்த் சார் கூட தான் காரில் போனாலாம் டா.. நல்ல வேள ஜஸ்ட் மிஸ் என்ற மாதிரி… நான் தப்பிச்சேன். நான் சொன்னதை நேத்து அந்த பெண் செய்து இருந்தா நான் மாட்டி இருப்பேன்..” என்று சொல்ல



இன்னொருவனும்.. “ ஆமா டா… நானுமே கேள்வி பட்டேன் அந்த பெண் சித்து சார் கூட தான் போனதா.. நாம சார் கிட்ட பூ கொடுத்து பிரபோஸ் பண்ணு என்று சொன்ன போது பயப்படாது சிரிச்சிட்ட போகும் போதே நாம உஷாராகி இருக்கனும் டா…” என்று சொன்னவனின் இந்த பேச்சுக்கு மற்றும் ஒருவன்.



ஸ்ருதியிடம். “ ஸ்ருதி உனக்கு தெரியுமா அந்த பெண் சித்து சாருக்கு ரிலேடீவ் என்று.. ரிலேடீவ் என்றால் என்ன மாதிரி.. ஏன்னா இந்த சித்தி பெண் சித்தப்பா பெண் இருந்தா பரவாயில்லை.. ஆனா மாமா பெண்.. அத்தை பெண் என்பது போல இருந்தா நம்ம காலேஜில் படிக்கும் நிறைய பெண்களோட நெஞ்சு வெடித்து சிதறி விடும்..” என்று அவன் கிண்டலாக பேச.



ஆனால் அந்த கிண்டல் பேச்சை ரசிக்கும் மன நிலையில் நம் ஸ்ருதி இல்லை.. அதனால்.. “ கொஞ்சம் வாயை மூடிறிங்கலா…?” என்று வள் என்று விழுந்தவளையே தான் அனைவரும்…



இவளுக்கு என்ன ஆச்சு…? என்பது போல பார்த்தனர்..



ஆனால் அவர்களின் அந்த பார்வை ஸ்ருதி மீது தொடர விடாது சித்தார்த் கார் வந்து நிண்றது… இப்போது அனைவரின் பார்வையும் அங்கு ஆவளோடு சென்றது.. அதில் நம் ஸ்ருதியுமே அடக்கம் தான்..



கல்லூரிக்கு இவ்வளவு சீக்கிரம் வர இது தானே காரணம். அனைவரின் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்யும் படி தான் வந்து நின்ற சித்தார்த் காரில் இருந்து தான் மது இறங்கியது..



இங்கு காரில் இருந்து இறங்கிய மகேஷ்வரியோ.. தன் அத்தானை பார்த்து ஒரு தலையாட்டலுடன் விடைப்பெற்றவள் முன் போல அதே பாதையை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்து இருக்க மாட்டாள்..



சித்தார்த்தின்.. “ மகி…” என்ற அழைப்புக்கு மகி திரும்பி பார்க்க. இப்போது சித்தார்த் காரில் இருந்து இறங்கி நின்று கொண்டு இருந்தான்..



மகி நின்ற இடத்தில் இருந்தே …” என்ன அத்தான்…” என்று கேட்டாள்…



அவளின் அந்த அத்தான் என்ற அழைப்பு ஸ்ருதி கேங்குக்கும் மிக தெளிவாகவே கேட்டது.. ஒரு சில பெண்கள் தன் நெஞ்சின் மீது கை வைத்து கொள்ள. ஆண்கள் இவர்களையும் , மகியையும் மாறி மாறி பார்த்து கொண்டு இருக்க,, ஸ்ருதியின் பார்வையோ சித்தார்த் மகி மீது மட்டுமே நிலைத்து நின்று விட்டது..



மகியின் கேள்விக்கு சித்தார்த் தன் கையில் இருந்த மகியின் லஞ்ச் பேக்.. அதை தூக்கி காட்ட… சிரித்து கொண்டே மகி சித்தார்த்தின் அருகில் ஓடி சென்றாள்..



சித்தார்த்தும் சிரித்து கொண்டே மகியின் கையில் அந்த லஞ்ச் பேகை கொடுத்தவன். மகியின் தலையில் ஒரு கொட்டும் வைத்தான்..



அதை பார்த்தவர்கள் அனைவருக்கும் தெரிந்தது.. அது ஒரு செல்ல கொட்டு என்று… பார்த்தவர்கள் அனைவரும் சித்தார்த்தின் சிரிப்பை ஆ என்று பார்த்து கொண்டு இருக்க.. ஸ்ருதியோ சித்தார்த்தை ஒரு வெறுமை பார்வை பார்த்து கொண்டு இருந்தாள்..



மகி நேற்று போல தான் இவர்களை கடந்து தான் சென்றாள்.. ஆனால் இன்று அவளை அழைக்கவில்லை.. ஏன் அவளை பார்க்கவும் இல்லை.. ஆனால் ஸ்ருதி மட்டும் அவளையே தான் இஞ்ச் இஞ்சாக பார்த்து கொண்டு இருந்தாள்..



தோற்றம் நிறம்.. தன்னை விட மேலாக இருக்கிறாளா என்று.. அழகி தான்.. ஆனால் நானுமே தானே அழகாக இருக்கிறேன்.. என்ன ஒன்று அந்த பெண் முகத்தில் குழந்தை தனம் இன்னும் மிச்சம் இருக்கிறது.. என்னோடு ஒரு வயது சின்னவள்.. அடுத்த வருடம் மெச்சூரிட்டி வந்து விட்டால், இந்த குழந்தை முகம் மறைந்து போகும்.. என்று ஸ்ருதியின் மனம் ஏதேதோ நினைத்து அவளின் மனம் எங்கு எங்கோ சென்று வந்து விட்டது..



இடையில் அவள் நட்புக்கள் வட்டம் பேச்சும் காதில் விழ தான் செய்தது…



நேற்று பூ கொடுக்க சொன்னவன் தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவனிடம்.. “ நீ நேத்து ஏன்டா சித்தார்த் சார் கிட்ட பூ கொடுத்து பிரபோஸ் பண்ண சொன்ன… என் கிட்ட பிரபோஸ் பண்ண சொல்லி இருக்கலாமே என்று கேட்ட தானே இப்போ வேணா கூப்பிட்டு தன் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் தலையில் இருந்த பூவை.. இப்போது அவன் கைக்கு மாட்டியது மல்லிகை தான்..

அதை அவன் கையில் கொடுத்தவன்.. “ இப்போ அந்த பெண்ணை கூப்பிடுறேன் உனக்கு பிரபோஸ் பண்ண சொல்லட்டுமா…?” என்று கேட்டவனிடம்..



தன் கை கூப்பி வணங்கியன் தன் கையில் இருந்த பூவை அவனிடமே வீசி விட்டு ..



“பார்க்க ஒம்லியா இருக்கா.. மத்த பெண்ணுங்க போல மேக்கப் இல்லாது இருக்கா… பார்க்கவும் நல்லா இருக்கா மொத்தத்தில் பேமிலிக்கு செட் ஆவா என்று நினச்சா.. நீ என் அடி மடியிலேயே கை வைக்க பார்க்கிறியேடா..



சித்தார்த் சாருக்கும், ராம் சாருக்கும் இந்த காலேஜில் எவ்வளவு வாய்ஸ் என்று தெரியும் தானே.. போடா என் அப்பா உங்க அப்பாங்க மாதிரி கம்பெனி வைத்து இல்லட.. படிப்பு முடிந்ததும் முதலாளியாக போய் அங்கு உட்கார..

நான் கேம்பஸில் செலக்ட் ஆனா தான் அடுத்து என் லைப் போகும்.. “ என்று சொன்னவன் அந்த இடத்தை விட்டே ஒடி விட்டான்..



ஆனால் ஸ்ருதிக்கு அவன் சொன்னது அனைத்தையும் விடுத்து அவன் சொன்ன பேமிலி கேள்.. மேக்கப் இல்லாம இருக்கா என்ற வார்த்தை மட்டுமே மீண்டும் மீண்டும் அவள் காதில் கேட்டது.. அதில் கோபமும் வந்தது..



அதில் அனைவரையும் பார்த்து.. “ உங்களுக்கு சைட் அடிக்க மாடல் கேள் வேண்டும். ஆனா மேரஜ் செய்துக்க மட்டும் பேமிலி கேள் லே.. ஏன் மாடல் பெண்ணுங்க பேமிலி பெண்ணுங்களா இருக்க மாட்டாங்களா. அவங்க குடும்பத்திற்க்கு ஒத்து வர மாட்டாங்களா…?” என்று கோபமாக பேசியவள் அதே கோப முகத்துடன் தான் தன் வகுப்பறைக்கு சென்றது..

அவள் கோபமாக பேசி போனதை பார்த்த மற்றவர்கள்.. இவளை நாம் என்ன சொன்னோம்.. ஏன் இப்படி கோபப்படுக்கிறாள் என்று நினைத்தவர்கள்.. அதை வதனியிடம் தான் கேட்டனர்..

வதனி எனக்கு தெரியாது என்பது என்று சொல்ல. “ உனக்கு தெரிந்தாலும் நீ சொல்ல மாட்டியே…?” என்று தான் மற்றவர்கள் வதனியை குறை சொன்னது..



இதற்க்கு வதனி என்ன என்று சொல்லுவாள்..? ஸ்ருதி சித்தார்த் சாரை பார்ப்பது மற்ற பெண்கள் அவரை பார்ப்பது போல க்ரேஸி பார்வை கிடையாது.. காதல் பார்வை.. உண்மையில் ஸ்ருதி சித்தார்த்தை ஆழமாக காதலிக்கிறாள் என்பது வதனிக்கு தெரியும்..



இப்போது கொஞ்ச நேரம் முன் தான் அவரும் தன்னை பார்ப்பது போலான வார்த்தை சொன்னது.. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்பது வதனிக்கு தெரியவில்லை..

ஸ்ருதி சித்தார்த் பாடம் நடத்தி முடித்த பின் பொதுவாக அனைவரையும் ஒரு பார்வை பார்த்து புரிகிறதா என்று கேட்டு தலையாட்டுவார்.. அதை தவிர அவர் வேறு யாரையும் தனித்து அவள் பார்த்தது இல்லை..

சித்தார்த்தை அளவுக்கு அதிகமாக காதலிப்பதினால், ஸ்ருதி சித்தார்த்தின் இது போலான பார்வைகளை கூட தன் விருப்பத்திற்க்கு ஏற்பது போல நினைத்து கொள்கிறாளா என்று எதுவும் தெளிவாக புரியாது வதனி இவர்களிடம் என்ன என்று சொல்லுவாள்..

ஆனால் ஒன்றும் மட்டும் வதனிக்கு தெளிவாக புரிந்தது.. அது மகேஷ்வரி ஸ்ருதியின் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றம் செய்யும் என்பது.

ஆம் அது ஒருவகையில் உண்மை தான்.. மிக பெரிய மாற்றம் தான் ஸ்ருதி வாழ்க்கையில் மகியின் வருகை செய்தது..

ஆனால் அது ஸ்ருதி வாழ்க்கை மட்டுமே அல்லாது குருமூர்த்தி வாழ்க்கையையும் சேர்த்து பதம் பார்த்தது தான் விதியின் விளையட்டு என்று சொல்லலாம்.. இல்லை இந்த ஜென்மத்தில் நாம் செய்த பலனை இந்த ஜென்மத்திலேயே நாம் அனுபவித்து போக வேண்டும் என்ற இறைவனின் விளையாட்டு என்று கூட நாம் நினைத்து கொள்ளலாம்..

அதன் முதல் கட்ட நகர்வாக தான் அன்று மாலையே குரூமுர்த்தி நம் மகேஷ்வரியை பார்த்தது..

அதுவும் குருமூர்த்தி மகியை பார்த்த போது சித்தார்த் அவளை அணைத்து கொண்டு இருந்தான்.. குருமூர்த்தி மகியின் முகத்தை பார்த்த போது சித்தார்த்தின் நெஞ்சில் தலை சாய்ந்து கொண்டு இருந்த அவளின் முகத்தை பார்த்து தான் அவன் தன் நெஞ்சில் ஏற்றிக் கொண்டது…

பார்க்கலாம். இது விதியின் விளையாட்டா.? இல்லை அந்த கடவுளின் விளையாட்டா.. இல்லை இந்த மனிதர்கள் ஆடும் விளையாட்டா…? என்பதை…
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Ama Neeyum un athaanum love pannuweenga antha rendu peraiyum… avaloda life ah spoil pannathu podhathu nu nimmathiyaiyum spoil panna poreengala???
 
Top