Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

யென்னை கொண்டாட பிறந்தவன்...6...2

  • Thread Author
அத்தியாயம்….6.2

குருமூர்த்தி ஸ்ருதியிடம் சொன்னது போல அவளின் கல்லூரியின் வாசலில் தான் தன் காரை நிறுத்தினான்…

கேட் அருகில் நிற்கிறேன் என்று மெசஜ் போட்டவள் எங்கே இன்னும் காணும் என்று நினைத்து தன் கை பேசியை எடுத்து அவளை அழைக்கும் வேளயில் தான் கல்லூரியின் உள் ஏதோ சத்தம்.. கல்லூரி என்றால் சத்தம் இருக்க தான் செய்யும்..

ஆனால் இது ஒரு வித பதட்டமாக கேட்டதில், அவனுமே காரை விட்டு இறங்கி கல்லூரியின் வளாகத்திற்க்குள் சென்றான்…

அவனுக்கு தன் மாமன் பெண்ணுக்கு ஏதோ பிரச்சனையோ என்ற பதட்டதம்.. அது தான் நேற்றில் இருந்து ஸ்ருதி ஒரு மாதிரியாக இருந்தாளே.. என்ன பிரச்சனை என்றும் சொல்லவில்லை.. அதனால் அவளுக்கு தான் என்னவோ என்பது போல் தான் அவனுமே பதட்டத்துடன் உள் நுழைந்தான்..

நுழைந்தவன் ஸ்ருதியையும் பார்த்து விட்டான்.. அவளை பார்த்த பின் ஒரு நிம்மதி குருமூர்த்திக்கு, அதில் என்ன பிரச்சனை யாருக்கு என்று போல் பின் தான் கவனித்தது..

குருமூர்த்தி மகேஷ்வரியை முதலில் அவளின் பின் பக்கம் தான் கவனித்தது..நீண்ட கூந்தலில் காய்ந்த மல்லிகை பூவை தான் அவன் முதலில் கவனித்தது…

அவளின் செயல்களையும் பார்த்தவன்.. இது என்ன பைத்தியக்கார தனம்.. பூனைக்காக யாராவது இப்படி செய்வாங்களா… ? எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் திருப்ப பார்க்கிறாள் போல.. என்று இப்படியாக தான் குருமூர்த்தி மகியின் பின் பக்கம் பார்த்து நினைத்தது..

சித்தார்த்தின் குரலுக்கு மகி திரும்பிய வேளை தான் மகியின் முகத்தை குருமூர்த்தி பார்த்தது..

அது என்னவோ லவ் இன் பஸ்ட் சைட் என்று சொல்வதா. இப்போது குருமூர்த்திக்குமே ஒரு வித பதட்டம் மனதில் பற்றிக் கொண்டு விட்டது..

அதன் விளைவாக அவனுமே சித்தார்த் விரித்த அந்த வலையை அவனுமே ஒரு பக்கம் பிடித்து கொண்டு அவனுமே ஒரு வித பதட்டத்தில் தான் மகியை பார்த்து நின்று இருந்தது.

குருமூர்த்தியை ஸ்ருதி கவனிக்கவில்லை.. ஆனால் வதனி கவனித்து விட்டாள்..

“ஏய் உன் அத்தான்.. டி .. உன் அத்தான்..” என்று ஸ்ருதியின் தோளை தொட்டு குருமூர்த்தியின் பக்கம் கை காட்டினாள்..

ஆனால் ஸ்ருதி அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் எல்லாம் இல்லை.. சித்தார்த்தின் அந்த பதட்டமான முகத்தை தான் அவள் பார்த்து கொண்டு இருந்தது..

அவளுக்குமே மகியின் இந்த நிலை பதட்டத்தை கொடுத்தது தான்.. ஆனால் அந்த நிலையிலுமே மகிக்காக சித்தார்த் பதை பதைத்து..

அதுவும் மகி தங்கம் என்ற அந்த அழைப்பு.. தன் காதல் ஒரு தலை காதலாக தான் யாரும் கேட்பார் அற்று போய் விடுமோ… என்ற பயமும் அவளுக்குள் எழுந்தது..

இதில் மகி அந்த வலையத்தின் உள் விழ… அவளை அதில் இருந்து மீட்டு தன் நெஞ்சோடு அணைத்து கொண்டதை பார்த்தவளுக்கு தன் நெஞ்சு கூண்டு காலியான போலான ஒரு உணர்வு அவளுக்கு,..

அவர்களை அது போல பார்க்க பார்க்க தன்னால் அவளின் கண்களில் இருந்து கண்ணீர்..



வதனி தான்… “ஏய் அழுகாத ஸ்ருதி.. யாராவது பார்த்தா தப்பா நினைக்க போறாங்க.” என்று ஸ்ருதியின் காதில் கிசு கிசுத்தாள்..

காரணம் மகி பாதுகாப்பாக தன் எதிரில் நிற்பதை பார்த்து அனைவரும் கை தட்டி மகிழ்ந்து கொண்டு அவளை பார்க்க.. இவள் அழுதுக் கொண்டே பார்த்தால், பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயம் வதனிக்கு,

ஆனால் ஸ்ருதிக்கோ யாரையும் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை… அவளின் கண்கள் பாதுகாப்பாக சித்தார்த்தின் அரவணைப்பில் இருந்த மகியையும், அவளை அன்போடு அணைத்து கொண்டு இருந்த சித்தார்த்தின் மீது தான் நிலை பெற்று இருந்தது..

ஸ்ருதியின் நிலை இப்படி என்றால், நம் குருமூர்த்தியோ.. அது என்ன இப்படி பார்க்க அணைத்து கொள்வது.. அதுவும் பாடம் நடத்தும் ஆசிரியர்.. இப்படி செய்யலாமா.? என்ற கோபத்தோடு அவர்களை பார்த்தான்..

(அவனின் கோபத்திற்க்கு காரணம்.. இது என்று அவன் நினைத்து கொண்டான்…)

பின் ராம்சந்திரன் அந்த இடத்திற்க்கு வரவும் தான் தன் மருமகளை..

“என்னம்மா இது.. கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் தானே… “ என்று மருமகளை கொஞ்சம் கடிந்து கொண்டார்.. பூனைக்குட்டிக்காக யாராவது இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்பது அவருக்கு.. இவ்வளவு ரிஸ்க் எடுத்து காப்பாற்றிய அந்த பூனைக் குட்டியோ… தாய் பூனையோடு சேர்ந்து கொண்டது..

பின் சித்தார்த்தும் ராம் சந்திரனும் தான் அனைவரையும் பார்த்து.. “ வீட்டுக்கு கிளம்புங்க நேரம் ஆகுது..” என்று அங்கு இருந்த மாணவ மாணவிகளை கிளம்ப சொன்னது..

இத்தனை நேரம் கோபமாக இருந்த குருமூர்த்தியோ நேராக சித்தார்த்தின் அருகில் போய் நின்றவன்…

“இது என்ன காலேஜா இல்ல சினிமா ஷூட்டிங் எடுக்கும் இடமா… ? சீன் கிரியேட் செய்துட்டு இருக்கிங்க…?” என்று தன் கோபத்தை மறைக்காது தான் சித்தார்த்தின் மீது குருமூர்த்தி காட்டியது..இன்னுமே சித்தார்த்தின் கை பிடித்து நின்று கொண்டு இருந்த மகியையும் பார்த்து முறைத்து கொண்டே தான் இதை சொன்னது..

ஆனால் நம் மகி தான் அவளுக்கு இருந்த பயத்தில் யாரின் பார்வையையும், கவனிக்கவில்லை. பேச்சையும் கேட்கவில்லை.

ஆனால் சித்தார்த் குருமூர்த்தியின் இந்த பேச்சுக்கு ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் முன்.. குருமூர்த்தியின் பக்கத்தில் வந்து நின்ற ஸ்ருதி..

“அத்தான் வாங்க போகலாம்.. டாடி கால் பண்ணிட்டே இருக்கார்… “ தன் கையில் இருந்த கை பேசியை குருமூர்த்தியிடம் காட்டினாள்.. அவளின் குரலில் ஒரு பதட்டம் தெரிந்தது.. தன் அத்தானுக்கும், சித்தார்த்துக்கும் இடையே எந்த வித பிரச்சனையும் வந்து விட கூடாது என்ற முனைப்பு ஸ்ருதிக்கு..

காரணம் ஸ்ருதி தன் படிப்பு முடிந்ததும், தன் காதலை வெளிப்படையாக சித்தார்த்திடம் சொன்ன பின்… தன் குரு அத்தான் உதவியுடன் தான் இந்த விசயத்தை தன் அப்பாவிடம் சொல்ல நினைத்து இருந்தது..

தன் காதலுக்கு குரு அத்தான் ஆதரவு இருந்தால் போதும்.. கண்டிப்பாக தன் காதல் ஜெயித்து விடும் என்ற நம்பிக்கை அவளுக்கு, இப்போது இரண்டு பேரும் எதிரும் துருவமாக நின்றால், அதனால் சித்தார்த் மகியிடம் காட்டிய அந்த உரிமை.. ஸ்ருதிக்கு இப்போது அது எல்லாம் பின்னுக்கு போய் விட்டது.. அத்தானுக்கும் சித்தார்த்துக்கும் பிரச்சனை வர கூடாது என்று நினைத்து குருமூர்த்தியின் முழங்கையை பிடித்தவள்..

தந்தை அழைத்ததையே காரணம் காட்டி அந்த இடத்தை விட்டு குருமூர்த்தியை அகற்ற நினைத்தாள்..

இப்போது சித்தார்த்தின் பார்வை கூர்மையுற்றது.. ஸ்ருதியையும் அவள் பிடித்து இருந்த குருவின் கையையும் மாறி மாறி பார்த்தான்.. ஆனால் குருமூர்த்தி போல் எதுவும் பேசவில்லை.. ஆனால் முகம் மாற்றம் அடைந்தது..

அதை ஸ்ருதி மட்டும் அல்லாது வேறு யாரும் சித்தார்த்தின் அந்த பார்வை மாற்றத்தை கவனிக்கவில்லை.. கவனிக்க முடியாத அளவுக்கு தான் சித்தார்த் பார்த்தான் என்பது வேறு விசயம்..

ராம் சந்திரன் தான்… தன் கையில் இருந்த அவரின் கார் சாவீயை மகனிடம் கொடுத்து.. கார் எடுத்து வை.. நான் மகியை கூட்டிட்டு வரேன்…” என்ற தந்தையின் பேச்சுக்கு மறு பேச்சு பேசாது காரை எடுக்க செல்ல.

ராம் சந்திரனுமே… “மகியிடம் வாடாம்மா…” என்று அழைத்தவர் என்ன நினைத்தாரோ.. குருமூர்த்தியை பார்த்து…

“ஒரு சில விசயம் சினிமாவை விடவும்.. சுவாரசியமா இருக்கும்..” என்று சொல்லி விட்டு சென்ற ராம் சந்திரனையே தான் பார்த்து கொண்டு இருந்தான் .. ஆனால் இப்போது குருமூர்த்தியின் பார்வையில் கோபம் தெரியவில்லை.. ஒரு வித ஆராய்ச்சி தான் தெரிந்தது..

பின் குருமூர்த்தியுமே… ஸ்ருதியை அழைத்து கொண்டு வீடு வந்து விட்டான்..

அன்று இரவு கூட விசுவநாதன்.. “ ஸ்ருதி ஏதாவது சொன்னாளா குரு…?” என்று கேட்டார்..

குரு.. “ ஒன்னும் சொல்லலே மாமா.. பார்க்கலாம்.. மாமா.. இதே போலவே இருந்தாள் திரும்பவும் அவள் கிட்ட பேசறேன்” என்று விட்டான்..

ஆனால் ஸ்ருதி குருமூர்த்தி மீண்டும் தன்னிடம் பேசும் அளவுக்கு வைத்து கொள்ளவில்லை.. மீண்டுமே அவள் முகத்தில் பழைய சிரிப்பு பேச்சு வந்து விட.. மாமனும் மருமகனும் …

பிரன்ஸ்க்குள்ள சின்ன பிரச்சனையா இருந்து இருக்கும் என்று நினைத்து விட்டு விட்டனர்..

ஆனால் ஸ்ருதி விட்டு விடவில்லை.. அதாவது சித்தார்த்தை விட எண்ணம் அவளுக்கு இல்லவே இல்லை…

மகியை பற்றி முழுவதும் தெரிய அவளுக்கு ஒரு வாரம் தேவைப்பட்டது… அவள் நினைத்து இருந்தால் ஒரு மணி நேரத்தில் மகியை பற்றி முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள முடிந்து இருக்கும்..

ஆனால் அவள் அவளை பற்றி விசாரிப்பது தெரியாது.. சும்மா பேச்சு வாக்கில் பேசுவது போல அவளின் விவரத்தை தெரிந்து கொண்டாள்..



மகியை பற்றி தெரிந்த விசயம் ஸ்ருதிக்குமே பாவமாக தான் இருந்தது.. ஒரே நேரத்தில் அம்மா அப்பா இரண்டு பேரை பறிகொடுப்பது என்பது பாவம் தான் என்று வதனியிடம் கூறிக் கொண்டு இருந்தாள்..

அந்த பாவத்தை செய்ததே அவள் தான் என்பது தெரியாது…

வதனி கூட.. “ நான் விசாரித்த வரை சித்தார்த் சாருக்கு அந்த பெண்ணை தான் மேரஜ் பண்ணி வைக்கனும் என்று பேச்சு போல..” என்று சொன்னதற்க்கு..

ஸ்ருதி.. “ பேச்சு மட்டும் தானே… அதுவும் பெரியவங்க தானே பேசிக்கிறாங்க.” என்று இப்போது என்னவோ ஸ்ருதிக்கு ஒரு தைரியம்.. பெரியவங்க ஆயிரம் பேசுவாங்க. ஆனா சித்தார்த்துக்கு மகி மீது அந்த மாதிரியான பிடித்தம் இருந்தால் தானே அது திருமணத்தில் முடியும் என்று… அதன் தொட்டு வதனி சொன்னதற்க்கு பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் வதனி… “ அது எப்படி சித்தார்த் சாருக்கு பிடித்தம் இல்லை என்று அவ்வளவு ஸ்டாங்கா சொல்ற. அன்னைக்கு பார்த்த தானே,,, அந்த பொண்ணுக்காக சித்தார்த் சார் துடித்ததும், கட்டி பிடித்து கொண்டதும்…” என்று வதனியின் இந்த பேச்சை கூட ஸ்ருதி பெரியதாக எடுத்து கொள்ளவில்லை.

“மகி இருந்தது போல நான் இருந்தா என் குரு அத்தான் சித்தார்த்தை விட துடித்து போய் இருந்து இருப்பார்.. அப்போ எனக்கு என் அத்தான் மீது காதலா..? இல்லை என் அத்தானுக்கு தான் என் மீது காதலா…?” என்று ஸ்ருதி கேட்டு விட்டு.. புருவத்தை உயர்த்தி வதனியிடம் என்ன என்பது போல பார்க்க.

ஸ்ருதியையே கூர்ந்து கவனித்த வதனியோ… “ உனக்கு உன் அத்தான் மீது லவ் இல்ல. அது கன்பாமா எனக்கு தெரியும்.. ஆனா உன் குரு அத்தானுக்கு உன் மீது லவ்வோ லவ் இருந்தா..?” என்று வதனியுமே ஸ்ருதியை போல புருவத்தை உயர்த்தி கேள்வி கேட்க.

“உனக்கு என் அத்தான் என் மீது லவ்வா இல்லையா. என்று தெரியாது இருக்கலாம்.. ஆனா எனக்கு கன்பாம்.. அத்தானுக்கு என் மீது லவ் எல்லாம் இல்ல. பாசம் அன்பு.. இப்படி எது என்றாலும் சொல்லலாம்.. அதோடு என் மீது அக்கறை அளவுக்கு அதிகமாவே என் அத்தானுக்கு என் மீது இருக்கு.. அது எனக்கு நல்லாவே தெரியும் ..” என்று சொன்னவள் கூடவே இதுவும் சொன்னாள்..

“என் அப்பா என் அத்தான் கிட்ட என்னை மேரஜ் செய்துக்க சொன்னா கண்டிப்பா என்னை மேரஜ் செய்து கொள்வார்.” என்று.

வதனி ஸ்ருதியின் பேச்சை ஆச்சரியத்துடன் கேட்டு கொண்டு இருந்தவளுக்கு மீண்டும் ஒரு சந்தேகம்.. அதாவது.

“ உன் அத்தானுக்கு உன் மீது லவ் இல்லை என்றாலுமே உன் அப்பா சொன்னா உன்னை மேரஜ் செய்துப்பார் என்று சொல்ற.. அதே போல சித்தார்த் சாருமே.. மகி மீது லவ் இல்ல என்றாலுமே.. உன் அத்தானை போல தானே அவருக்குமே மகி மீது பாசம் அன்பு இருக்கு.. ஒரு வேள சித்தார்த் சார் அப்பா ராம் சார் மகியை மேரஜ் செய்துக்க சொன்னா அவருமே மேரஜ் செய்துக்குவார் தானே.. அதுவும் மகியோட அப்பா அம்மா இல்லாம சித்தார்த் சார் வீட்டில் தான் மகி இருக்கு.. அதோட சித்தார்த் சாருக்கு அவர் மாமா மீது ரொம்ப மதிப்பு என்று வேறு கேள்வி பட்டேன்…” என்ற வார்த்தையின் ஸ்ருதியின் முகம் மாறி விட்டது தான்..

பின் ஏதோ யோசித்தவள் மிக தீவிரமான பாவனையோடு.. “ அதுக்கு தான் மகியோடு பிரண்ட் ஆக நினைக்கிறேன்…” என்று சொன்ன ஸ்ருதி சொன்னது போலவே ஒரே வாரத்தில் மகிக்கு ஸ்ருதி தோழியாக ஆகி விட்டாள்…


 
Active member
Joined
May 11, 2024
Messages
167
இவங்க நாலு பேர்ல மகி மட்டும் தான் மனசுல எதுவும் இல்லாம இருக்கா
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Guru 😡😡😡 Avanga relationship ennanu theiryuma???
Ram ku Guru pathi edho therinji irukku??? Adhan sarcastic ah sollittu porar
 
Top