Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

யென்னை கொண்டாட பிறந்தவன்...7..1

  • Thread Author
அத்தியாயம்….7.1

ஸ்ருதி வதனியிடம் மகியோடு நட்பை ஏற்படுத்திக் கொள்வேன் என்று சொன்னது, அவளின் காதலுக்காக மட்டுமே தானே தவிர வேறு இல்லை…

அது போல ஸ்ருதி மகியின் நட்பை பெற்று விட்டாள் தான்.. அதற்க்காக ஸ்ருதி அதிகம் மெனக்கெட எல்லாம் இல்லை…

வதனியிடம் சொன்ன அடுத்த நாளே.. ஸ்ருதி மகியை பார்த்து.. “என்ன நீ அன்னைக்கு முதல் நாள் உன்னை பார்த்தது.. அப்புறம் பார்க்கவே முடியல…” என்று மகியை அழைத்து ஸ்ருதி கேட்ட போது…

மகி… “ நீங்க தானே சீனியர்.. இந்த இடத்துக்கு எல்லாம் அதிக வராதே சீக்கிரம் போ என்று சொன்னது…



அன்று மகியை ராக்கிங்க செய்த போது ஸ்ருதி சொன்னது தான்.. ஆனால் அதை அப்படியே கடைப்பிடிப்பாள் என்று ஸ்ருதி நினைத்து பார்க்கவில்லை..



இன்னும் கேட்டால், அன்று சித்தார்த்துக்கு உறவு பெண் மகி என்று தெரிந்து இருந்தால் ஸ்ருதி அந்த வார்த்தையையே சொல்லி இருக்க மாட்டாள்.



அன்று பேசிய பேச்சை சமாளிக்கும் வழியாக… “அன்னைக்கு என் கூட மத்த சீனியர்ங்க இருந்தாங்க.. அது தான் போ சொன்னேன்.. “ என்று சொன்ன ஸ்ருதி..

மேலும்.. “ காலேஜ் வந்த இரண்டாம் நாளே.. நீ பேமஸ் ஆகிட்ட.. பூனை குட்டின்னா அவ்வளவு பிடிக்குமா..?” என்று மகியிடம் பேச வேண்டுமே.. பேசினால் தானே நட்பாக ஆக முடியும் என்று ஒரு காரணத்திக்காக தான் ஸ்ருதி மகியிடம் இந்த கேள்வி கேட்டது..

ஆனால் அதற்க்கு மகி… “ பூனை பிடிக்குமா பிடிக்காத எனக்கு தெரியல. ஆனா அன்னைக்கு அந்த பூனைக்குட்டி தன் அம்மாவை பார்த்து அப்படி கத்தினதை பார்த்துட்டு அப்படியே என்னால போக முடியல…” என்று மகி இதை சொல்லும் போதே.. அவளின் குரலில் சிறிது மாற்றம் தெரிந்தது..

இருந்தும் அதை அழகாக மறைத்து… “ என் பேரன்ஸ் சமீபத்தில் தான் இறந்தாங்க. எனக்கு வயது ட்வென்டி.. இப்போ கூட என் அம்மா அப்பா இல்லாதது.. அவ்வளவு கஷ்டமா இருக்கு.. அந்த பூனைக்குட்டி சின்னது.. தன் அம்மா கிட்ட பால் குடிக்கும் வயது.. அம்மா அங்கு ஒரு மூளையில் கத்த.. குட்டி இன்னொரு மூளையில் கத்த… அதை பார்த்து நான் எதையும் யோசிக்காது எப்படியாவது அந்த அம்மா கிட்ட இந்த குட்டியை கொடுத்துடனும்.. இது தான் எனக்கு தோனுச்சி..

ஆனா அந்த சன் சைட்ல தொங்கின அந்த நிமிஷம் உண்மையில் நான் ரொம்ப பயந்து போயிட்டேன்.. இன்னும் கேட்டால் என் அம்மா அப்பா படத்துக்கு முன் தினமும்.. என்னை மட்டும் ஏன் விட்டுட்டு போனிங்க .. என்னையும் உங்க கூட அழச்சிட்டு போய் இருந்து இருக்கலாமே… “ என்று சொல்லுவேன்.. ஆனாலும் அதை எல்லாம் தான்டி கூட உயிர் பயம் இருக்குலே சீனியர்.” என்று மகி சொல்லி விட்டு சிரித்தாள் தான்..

ஆனால் ஸ்ருதியால் மகியின் பேச்சில் சிரிக்க முடியவில்லை.

ஸ்ருதி ஒரு காரணத்திற்க்காக தான் மகியிடம் நட்பை ஏற்படுத்திக் கொள்ள விரும்பியது.. ஆனால் மகியோடான இந்த பேச்சில் ஸ்ருதி உண்மையில் அவள் குணத்திற்க்காகவே அவளிடம் நட்பை பாராட்டினாள் என்று தான் சொல்ல வேண்டும்..

அதுவும் மகி.. “ நீங்க முதல் நாள் ராகிங்கில் இருந்து என்னை காப்பத்தினதை என் அத்தான் கிட்ட சொன்னேன்.. அத்தான் யார் என்று கேட்டாங்க,. உங்க பிரண்ட் உங்க பெயர் சொல்லி உங்க கிட்ட பேசினதில் உங்க பெயர் எனக்கு நியாபகத்தில் இருந்தது.. அத்தான் கிட்ட சொன்னேன்…” என்று பேச்சு வாக்கில் மகி சாதாரணமாக சொல்ல.

உடனே ஸ்ருதி… “ அதுக்கு உங்க அத்தான் என்ன சொன்னார்… “ என்று கேட்ட குரலில் அத்தனை பர பரப்பு… தன்னையும் மீறி ஸ்ருதி தன்னை வெளிப்படுத்தி விட்டாள்..

மகி தான்.. “ ஏன் சீனியர் அதுக்கு இத்தனை டென்ஷன் அத்தான் ஒன்னும் சொல்லலே…” என்று மகி சொல்ல… வதனி கூட ஸ்ருதியின் விலா எலும்பில் ஒரு இடி இடித்து எச்சரிக்கை செய்ய பின் தான் தன்னை கொஞ்சம் நிலைப்படுத்தி கொண்ட ஸ்ருதி…

“இல்ல ராகிங்க எல்லாம் காலேஜில் செய்ய கூடாது… சித்தார்த் சார் வேறு ரொம்ப காலேஜ் ஒழுக்கம்.. ரூல்ஸ் இது எல்லாம் பார்ப்பாரு.. அது தான் மேலிடத்தில் சொல்லிட்டா. மத்தவங்க மாட்டுவாங்க தானே. இந்த வயசுல இது எல்லாம் ஒரு ஃபன் தானே..” என்று சமாளித்து விட்டாள்..

இப்படி இவர்களுக்கு இடையே பேச்சுக்கள் நடைப்பெற்றாலும்.. இப்போது சித்தார்த் என்ற ஒரு காரணத்திற்க்காக மட்டும் அல்லாது ஸ்ருதி மகியிடன் நல்ல மாதிரியே பழகினாள்..

வதனி கூட.. “ இப்போ எல்லாம் என்னை விட உனக்கு மகி ரொம்ப க்ளோஸ் மாதிரி தெரியுது…” என்று ஸ்ருதியிடம் கேட்ட போது..

ஸ்ருதி… “ மகி ரொம்ப நல்ல பெண் வது…” என்று மகிக்கு நற்சான்றிதழ் வழங்கு அளவுக்கு ஸ்ருதிக்கு மகியை பிடித்து தான் இருந்தது..

ஆனாலுமே… வதனி.. “ அப்படியா மகி ரொம்ப நல்லா பெண்ணா.. அப்போ அந்த ரொம்ப ரொம்ப நல்ல பெண்ணை சித்தார்த் சார் மேரஜ் செய்தா உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்ற…” என்று வதனி விளையாட்டாக கேட்க.

ஆனால் ஸ்ருதிக்கு அந்த விளையாட்டுக்கு கூட சித்தார்த் மகியோடான இந்த பேச்சு பிடிக்கவில்லை..

அதில் ஸ்ருதி வதனியிடம் இரண்டு நாட்களாக பேசாது போக.. வதனி தான் கெஞ்சி கொஞ்சி.. அத்தனை முறை மன்னிப்பு கேட்டு… காலில் விழாத குறையாக கேட்ட பின் தான் ஸ்ருதி கொஞ்சம் மனம் இறங்கி…

“இனி அது போலான பேச்சை நீ விளையாட்டுக்கு கூட பேச கூடாது.. “ என்ற கண்டிப்போடு ஸ்ருதி வதனியுடன் பேச ஆரம்பித்தது..

பாவம் இவர்களின் இந்த ஸ்ருதியின் கோபம்.. வதனியின் கெஞ்சல்கள் நடக்கும் போது அந்த இடத்தில் மகியும் இருப்பாள்.. என்ன விசயம் என்று தெரியாத போதும்..

ஸ்ருதியிடம்.. “பாவம் சீனியர் பேசுங்களேன்…” என்று வதனிக்கு சிபாரிசு வேறு செய்தாள்...

வதனியிடம். கூட “இனி சீனியருக்கு கோபம் வருவது போல பேசாதிங்க சீனியர்.” என்றும் சொல்வதை கேட்டு வதனி தான்..

“இப்படி பச்ச புள்ளையா இருக்கியே. ஆனா நீ இப்படி இருப்பது கூட நல்லதுக்கு தான். உன் சித்தார்த் அத்தானை இவள் லவட்டிக் கொண்டு போக வசதியா இருக்கும்..’ என்றும் மனதில் நினைப்பவள் வெளியில்..

“சரி சரி இனி அவளுக்கு பிடிக்காது போல பேசவே மாட்டேன்.. பிடிப்பது போல தான் பேசுவேன்..” என்று சொன்ன வதனி.

ஒரு நாள் சொன்னது போல ஸ்ருதிக்கு பிடிப்பது போல தான் வதனி பேசியது..

அதற்க்கும் ஸ்ருதி கோபித்து கொண்டு விட்டாள்..

ஒரு நாள் மகியிடம் வதனி.. .. ஸ்ருதியை நீ இனி அக்கா என்று கூப்பிடு..” என்று சொல்ல.

அதற்க்கு மகி.. “ நான் காலேஜ் முதல் நாள் ராகிங்கில் இருந்து என்னை காப்பத்தின போது… அக்கா என்று தான் கூப்பிட்டேன். ஆனா அது சீனியருக்கு பிடிக்கல…” என்று சொல்ல..

வதனி… “ அது முதல் நாள்.. உன்னை யார் என்று ஸ்ருதிக்கு தெரியாத போது… இப்போ கூப்பிடு… அவள் சந்தோஷப்படுவா…” என்று சொன்னதற்க்கு..

இவர்களின் இந்த பேச்சை வதனியை முறைத்து கொண்டு கேட்டு கொண்டு இருந்த சீனியரிடம் மகி..

“அப்படியா சீனியர்…” என்று கேட்டதற்க்கு.

ஸ்ருதி.. “ அவள் கிடக்கா லூசு .. நீ எப்போவும் போல என்னை சீனியர் என்றே கூப்பிடு…” என்று சொன்னவளை வதனி குழப்பத்துடன் பார்த்தவள் மகி அந்த இடத்தை விட்டு சென்ற உடன்..



ஸ்ருதியிடம்… “ ஏய் என்னை லூசு சொல்ற.. நீ தான் லூசு.. அவள் உன்னை அக்கா என்று கூப்புட்டா.. சித்தார்த் சார் உனக்கு அத்தான் முறை ஆகுதுல. இவள் மூலம் நீ சித்தார்த் சார நெருங்கலாம் தானே…” என்று வதனி கேட்ட போது..

ஸ்ருதி சொன்னது இது தான்… “ மகி மூலமா எனக்கு சித்தார்த் கிடைக்க கூடாது.. சித்தார்த் எனக்காக தான் என்னை பார்க்கனும்.. எனக்காக தான் என்னை பிடிக்கனும்.. அதே போல என்னை வைத்து தான் அவர் மேரஜ் செய்துக்கனுமே தவிர எங்க இரண்டு பேருக்கும் இடையேயான உறவில் எப்போதும் மகி இருக்க கூடாது…” என்று ஸ்ருதி இதை சொல்லும் போது அவள் பேச்சிலும் சரி, குரலிலும் சரி அத்தனை திடம் இருந்தது..

“அப்போ எதுக்கு நீ வலிய சென்று மகி கிட்ட பிரண்ட் பிடித்த…?” என்று வதனி கேட்டதற்க்கு…

“சித்தார்த் வீட்டில் என்ன நடக்குது என்று எனக்கு தெரியனும் லே..” என்று சொன்னவளையே பார்த்த வதனி…

“தெரிந்து,.. விசயம் தெரிந்து நீ என்ன செய்வ.?” என்று கேட்டவளிடம் ஸ்ருதி சொன்னது இது தான்.

“சித்தார்த் எனக்கு கிடைக்க நான் என்ன. என்ன வேணாலும் செய்வேன்.. ஆனா எங்க இரண்டு பேருக்கும் இடையில் மகி வர கூடாது…” என்று ஸ்ருதி இதை சொல்லும் போது… முழு வில்லி போல தான் வதனி கண்ணுக்கு ஸ்ருதி தெரிந்தாள்.

அதை ஸ்ருதியிடம். வதனி சொல்லியும் விட்டாள்..

“நீ இப்போ பார்க்கும் போது படையப்பா படத்தில் வரும் நீலம்பரி போலவே இருக்கே டி…” என்று..

அதற்க்கும் ஸ்ருதியிடம் இருந்து வதனிக்கு திட்டு தான் கிடைத்தது…

“அதுல நீலம்பரிக்கு அவளுக்கு பிடித்த வாழ்க்கை கிடைக்காது.. ஆனா நான் அப்படி எனக்கு பிடித்த வாழ்க்கையை விட்டு விட மாட்டேன்.. எனக்கு பிடித்த வாழ்க்கை எனக்கு கிடைக்க நான் என்ன வேண்டும் என்றாலும் செய்வேன்.. “ என்று மீண்டும் அதே வார்த்தையை சொன்னவளின் பேச்சு வதனிக்கே பயத்தை தான் கொடுத்தது.

அதனால் அதன் பின் அது போலான பேச்சுக்களை வதனி எடுப்பது கிடையாது… மகியோடான நட்பு ஸ்ருதிக்கு இன்னும் ஆழமானது..

மகி வீட்டில் தன் அத்தை மாமாவிடமும் தன் சித்தார்த் அத்தானிடமும்.. தினம் ஒரு முறையாவது.. ஸ்ருதியை பற்றியான பேச்சு வந்து விடும்..

அதே போல இங்கு ஸ்ருதி வீட்டிலும் சரி… மகியை பற்றியான பேச்சு இருக்கும்.. ஸ்ருதி வீட்டில் மகியை பற்றி பேசுவதில் எந்த பாசங்கும் இல்லாது அவள் மீது இருக்கும் உண்மையான பாசத்தில் தான் பேசுவது..

ஸ்ருதிக்கு உண்மையில் மகியை பிடித்து தான் இருந்தது.. மிக மிக நல்ல பெண்… ஆனால் என்ன ஒன்று சித்தார்த் என்று வந்து விட்டால் தான். எனக்கும் அவருக்கும் இடையில் இவள் யார் என்று நினைப்பது.

ஸ்ருதியின் மகியை பற்றியதான இந்த பேச்சை கேட்ட விசுவநாதன் கூட. குருமூர்த்தியிடம்…

“நம்ம ஸ்ருதி யாரோ ஒரு பெண் கூட ரொம்ப நெருங்கி பழகுற குரு,… அந்த பெண் யார் என்று பாரு… நமக்கு பிடிக்காதவங்க யாராவது அனுப்பி இருக்க போறாங்க.. ஏன்னா அந்த பெண் இந்த ஆண்டு தான் காலேஜ் வந்து சேர்ந்ததா சொல்றா…” என்ற மாமனின் பேச்சுக்கு குரு மூர்த்தி…

“அந்த பெண்ணால பிரச்சனை வராது மாமா. ஒரு பூனைக்குட்டிய அப்படி நினைப்பா. நம்ம ஸ்ருதியை.. ரொம்ப நல்ல பெண் மாமா.. நீங்க அந்த பெண்ணை பத்தி எல்லாம் நினச்சி கவலை படாதிங்க..” என்று சொன்ன தன் மாப்பிள்ளையின் இந்த பேச்சை புதியதாக பார்ப்பது போல தன் குருமூர்த்தியை பார்த்தார் விசுவநாதன்…




 
Active member
Joined
Jul 13, 2024
Messages
165
Arumai. Guru, please save Mahi from your villi cousin. Appa, ammavaiyum mudichutu enna oru villathanam?
 
Last edited:
Active member
Joined
Aug 16, 2024
Messages
262
பூனைக்குட்டி இப்போ தான் மெதுவா வெளியே வருது.
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Magi parents ah konnathu ne than nu Siddarth ku therinjale unnai thirumbi kooda parkka mattan… ne Neelambari level ku think pannuriya
 
Top