Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

யென்னை கொண்டாட பிறந்தவன்...7...2

  • Thread Author
அத்தியாயம்….7 ….2

இதோ அதோ என்று மகேஷ்வரி அந்த கல்லூரிக்கு சென்று பத்து மாதம் கடந்து விட்டது.. ஸ்ருதி மகியின் நட்பின் ஆழமும் அதே பத்து மாதங்கள் தான்.. தொட்டு இருந்த சமயத்தில் தான் அந்த கல்லூரியில் தொடங்கி நூறு ஆண்டுகள் கடந்த நிலையில், அதை பெரிய விழாவாக கொண்டாட கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து இருந்தது…

அந்த விழாவை சரியாக நடத்தி முடிக்கும் பொறுப்பை ராம சந்திரனிடம் தான் கல்லூரி நிர்வாகம் ஒப்படைத்தது…

விழாவை நடத்தி முடிக்கும் பொறுப்பை ராம சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தாலும், ராமசந்திரன் விழாவில் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை அனைவரையும் கேட்டு தான் முடிவு செய்தார்..

ஒரு ஊரில் ஒரு நல்லவன் இருந்தால், ஒரு கெட்டவனும் இருக்க தானே செய்வான்.. அப்போது தானே இவன் நல்லவன் என்பதை நாம் அடையாளம் படுத்த முடியும்..

அதே போல அந்த கல்லூரியில் அனைவருக்கும் ராமசந்திரனை பிடித்து இருந்தாலும், பிடிக்காத ஒரிருவர் அந்த கல்லூரியில் இருக்க தான் செய்தனர்.

அதில் ஒருவர் தான் அந்த விழாவில் சீப் கெஸ்ட்டாக யாரை வர வரவழைக்கலாம் என்ற பேச்சு நடைப்பெறும் போது தான் ராம சந்திரன் மந்திரி எம். எல்யா என்று அழைத்து வராது..

இந்த கல்லூரியில் படித்து விட்டு இப்போது படிப்பால் உயர்ந்தவர்களை சீப் கெஸ்ட்டாக அழைக்கலாம்.. அதற்க்கு என்று ஐ.ஏ.எஸ் ஐபி.எஸ் எல்லாம் வேண்டாம்..

சீப் கெஸ்ட் என்பது படித்தால் நாமும் நல்ல சமூகத்தில் இருக்கலாம் என்ற எண்ணம் மாணவர்களுக்கு வர வேண்டும்.. அனைவரும் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் ஆக முடியாது தானே.. அதனால் படிப்பினால் நல்ல நிலையில் உயர்ந்தவர்களை அழைக்கலாம் என்று ராம சந்திரன் தன் கருத்தை சொன்னார்…

உடனே ராம சந்திரனை பிடிக்காத ஒருவர்.. “ அது என்ன ராம் சார்… ஐ.பி. எஸ்ஸா இருக்க கூடாது… ஐ.ஏ.எஸ்ஸா இருக்க கூடாது.. ஆனா நல்லா படிப்பில் படித்து உயர்ந்தவங்களை கெஸ்ட்டா கூப்பிடனும் என்று சொல்றிங்க…” என்று கேட்க..

அதற்க்கு மற்றோருவர்.. “அதுவும் இந்த காலேஜில் படித்து படிப்பில் உயர்ந்தவங்களை கூப்பிடனுமா… அதை கவனிச்சிங்கலா சார்…” என்று சொல்ல.

அதற்க்கு முதலாவன்.. “ இதுக்கு ஏன் ராம் சார் சுத்தி வளைத்து சொல்றிங்க. நேரா என் பையனையே சீப் கெஸ்ட்டா அழைச்சிடலாம் என்று சொல்லிட வேண்டியது தானே.” என்று இடக்காக சொன்னவரிடம் அங்கு அமர்ந்து இருந்த சித்தார்த் ஏதோ சொல்ல வர..

மகனை பேச விடாது தடுத்து நிறுத்திய ராமசந்திரன் … “நான் எங்கு சார் என் பையனை பத்தி இப்போ பேசினேன்…?” என்று மிக தன்மையாகவே தான் இதை கேட்டது..

ஆனால் அந்த தன்மை எல்லாம் எதிராலிக்கு இல்லை போல.. அதனால் தான் அதே தெனவெட்டான தோனியிலேயே…

“நீங்க தனியா வேறு உங்க மகன் பேரு சொல்லனுமா சார்… அது தான் படித்து படிப்பின் மூலம் உயர்ந்து இந்த காலேஜில் நல்ல முறையில் படித்து ஒழுக்கமானவனா தான் சீப் கெஸ்ட்டா கூப்பிடனும் என்று சொல்றதிலேயே தெரியுதே.. நீங்க உங்க பையனை தான் குறுப்பிடுறிங்க…” என்ற அவரின் இந்த பேச்சில்

ராமசந்திரன் சிரித்தார்.. அவரின் அந்த சிரிப்பில் ஆணவம் இல்லாது ஒரு நிறைவு.. மகிழ்ச்சி.. ஒரு பெருமை தெரிந்தது..

பின்… “உங்க பேச்சு எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் கொடுக்குது சார்.. ஒரு அப்பாவுக்கு இதை விட என்ன பெருமை இருக்க போகுது சார்… ஒழுக்கம் பண்பு படிப்பு.. என்று எல்லாம் சேர்ந்தவர் எனும் போது உங்களுக்கே என் மகன் தான் நியாபகம் வந்தாரு என்றால் ஒரு அப்பாவா வேறு என்ன சார் எனக்கு வேண்டும்… “ என்று மனது நிறைவோடு சொன்னவரை இப்போது அடுத்து என்ன பேசுவது என்று தெரியாது முழித்தவரிடமே ராம் சந்திரன்..

“நீங்கலே சொல்லுங்க சார்.. யாரை சீப் கெஸ்ட்டா போடலாம்…” என்று ராம்சந்திரன் கேட்கும் போது தான்…

அந்த இடத்திற்க்கு ஸ்ருதியும் வதனியும் வந்தது.. அந்த இடத்திற்க்கு என்றால் அவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த அந்த ஹாலின் வெளியில் வந்து நின்றது.. ஆனால் உள் இருப்பவர்கள் பேசியது நன்றாகவே கேட்கும் தூரத்தில் தான் இருவர்களும் இருந்தார்கள்..



அந்த விழாவில் ஸ்ருதியும் வதனியும் நடனம் ஆட உள்ளார்கள்.. எது போலான பாடலை தேர்வு செய்வது என்று கேட்க தான் இங்கு வந்தது

இவர்களின் க்ளாஸ் டீச்சர்…” இந்த விழா சம்மந்தமாக எது என்றாலுமே ராமசந்திரன் சாரை தான் கேட்க வேண்டும்..” என்று சொன்னதினால் தான் இங்கு வந்தது..

இந்த பேச்சுக்கள் காதில் விழ... பேசி முடிக்கட்டும் என்று வெளியில் காத்திருக்கும் வேளயில் தான் ராம சந்திரன்..

“ நீங்க யாரை நம்ம கல்லூரி விழாவுக்கு சீப் கெஸ்ட்டாக கூப்பிடலாம் என்று உங்க விருப்பத்தை சொல்லுங்க.. அவங்களையே கூப்பிடலாம்..” என்று ராம் சந்திரன் சொல்ல.

உடனே… “ விசுவநாதன்…” என்று ராம சந்திரன் எதிர் அணி சொன்ன போது..

வெளியில் நின்று கொண்டு இருந்த ஸ்ருதியின் மனது துள்ள தான் செய்தது.. வதனியுமே.. சூப்பர் என்பது போல சைகை காட்டினாள்..

ஆனால் அதற்க்கு ராம சந்திரன் சொன்ன.. “ இறும்பு அடிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை என்பது போல கல்லூரி விழாவுக்கு சாராயக்கடை வைத்து இருப்பவனுக்கு என்ன வேலை என்பது தான் எனக்கு புரியல..”

ராம் சந்திரனின் இந்த பேச்சு ஸ்ருதியின் மனதை பலமாக தாக்கியது.. அதுவும் ராம சந்திரன் ஒரு மதிப்பு மிக்க அந்த கல்லூரியின் ஆசிரியர் மட்டும் கிடையாது.. சித்தார்த்தின் தந்தையும் தானே.. தன் அப்பாவை பற்றிய மதிப்பீடல் இது தானா.. என்று ஸ்ருதி மனம் வருந்தும் போது தான்..

விசுவநாதனை சீப் கெஸ்ட்டாக அழைக்கலாம்.. என்று சொன்னவர்… “அது என்ன சாராயம் என்ற வார்த்தை.. அவர் என்ன கள்ளச்சாரயத்தையா காசுகிறார்… கவர்மெண்ட் ஏலம் விடுறதை எடுத்து முறைப்படி பர்மிட் வாங்கி தானே விற்பனை செய்வது…” என்ற வார்த்தை காத்தோடு தான் போனது..

காரணம் யாருக்குமே விசுவநாதனை சீப் கெஸ்ட்டாக அழைப்பதில் விருப்பம் இல்லை என்பதினால், முன் நாள் மாணவன்… அதுவும் சிறப்பு குழந்தையும் சிறப்பு மாணவனுமான ஒரு கை இல்லாது இன்னொரு கையும் அளவில் சின்னதாக இருந்த மாணவன் இன்று படித்து நல்ல முறையில் இருப்பதோடு தன்னை போல இருப்பர்வகளுக்கு என்று ஒரு இல்லம் அமைத்து செயல்படுவதில் அவரையே சீப் கெஸ்ட்டாக அழைக்கலாம் என்று ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது.

இப்போது அது கிடையாது விசயம்.. ஸ்ருதி இதை எல்லாம் கேட்டவளுக்கு நாளை பின் சித்தார்த் தன்னை விரும்பினாலும்.. விரும்பினால் என்ன விரும்பினால் கண்டிப்பாக விரும்புகிறார் என்பது அவளுக்கு நிச்சயமே.. அதில் அவளுக்கு எந்த வித சந்தேகமும் கிடையாது..

என்ன ஒன்று என்னிடம் படிப்பவள் என்ற அந்த அடையாளம் இருக்க கூடாது என்பதினால் தான் இந்த கல்லூரியில் தன் படிப்பு முடிந்ததும் தன் காதலை சித்தார்த் சொல்லவில்லை என்றாலும் தான் சொல்லி விடலாம் என்று நினைத்து கொண்டு இருந்தவளுக்கு சித்தார்த் தந்தையின் இந்த பேச்சும். அதை அமைதியாக கேட்டு கொண்டு இருந்த சித்தார்த்தும் அவளுக்கு அச்சத்தை தந்தது..

அதன் விளைவு.. வதனி கண்ணனாகவும்.. ஸ்ருதி ராதையாகவும் ஒரு நடனம். மனதில் குழப்பம் அச்சம் என்று கலந்த பாவனையில் இருந்த ஸ்ருதிக்கு அந்த கல்லூரி விழாவில் ஆடிய அந்த நடனமானது அந்த அளவுக்கு அவளுக்கே மனது நிறைவு தராத போது.. பார்ப்பவர்களுக்கு எப்படி தந்து இருக்க முடியும்..

இன்னும் கேட்டால், ஸ்ருதி முறைப்படி தன் ஐந்தாம் வயது முதலே பரதம் கற்று அரங்கேற்றமும் செய்து இருக்கிறாள்..

தன் மகள் நடனத்தை பார்க்க என்றே அந்த கல்லூரிக்கு சீப் கெஸ்ட்டாக வரவில்லை என்றாலும், ஒரு பார்வையாளராக வந்த விசுவநாதனுக்கும், குருமூர்த்திக்குமே மகளின் நடனத்தில் இருந்த அந்த வித்தியாசம் நன்கு தெரிந்தது..

இன்னும் கேட்டால் நடனத்தை பற்றி எந்த அரிச்சுவடியும் தெரியாத விசுவநாதனுக்கும் குருமூர்த்திக்குமே ஸ்ருதி மனதை இங்கு வைத்து ஆடவில்லை என்பது புரிந்து விட்டது..

அதில் விசுவநாதன் குருமூர்த்தியை பார்க்க. குருமூர்த்தியும் மாமனின் அந்த பார்வையில் “நான் பார்க்கிறேன்.. மாமா என்று சொன்னான்…”

ஆனால் அடுத்து பாட வந்த மகேஷ்வரியோ.. தன் எண்ணம் செயல் என்று அனைத்திலுமே தன் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடலான..

“செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும், என்ற அந்த பாடல் எப்போதுமே இரவு நேரத்தில் மொட்டை மாடியில் தன் அன்னையை பார்த்து பாடுவார்..

அவளுக்கு நன்றாக நியாபகத்தில் உள்ளது தந்தையின் மடியில் அவள் அமர்ந்திருக்க.. தந்தை பாடும் அந்த பாடலுக்கு அன்னையின் முகத்தில் அத்தனை கூச்சத்தோடு ஒரு புன்னகை…

அந்த பாடலை மகி பாட பாட அவளின் கண் முன் அவளின் அன்னையும் தந்தையுமே கண் முன் வந்து நின்று விட்டனர்..

அதில் கண் மூடிக் கொண்டு அவள் அன்னை தந்தைக்கு அவள் பாடி காட்டுவது போன்ற பாவனையில் அவள் பாடினாள்…

அவள் கண் மூடிக் கொண்டு இருந்தாலுமே அவளின் அந்த குரல் இனிமையில் அவளையே தான் பார்த்தும் கேட்டும் கொண்டு இருந்தனர்.. அனைவரும்…

அந்த அனைவரில் நம் குருமூர்த்தியும் ஒருவன்… அன்று மகியை பார்த்தவன் தான் அடுத்து அவன் அவளை பார்க்க வில்லை என்பதை விட. அவன் பார்க்க முயற்சிக்கவில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும்..

ஆனால் தினம் தினம் அவளின் பெயரை ஸ்ருதியின் வாயில் இருந்து கேட்டு இருக்கிறான்…

இன்று மீண்டுமான ஒரு பார்வை குருமூர்த்தி மகியை பார்த்து செலுத்தினான்.. அன்று ஒரு சிறு பூனைக்காக அவள் செய்த செயல்.. இப்போது பாடல்.. அவள் குரலின் இனிமை என்று அனைத்தும் சேர்ந்து குருமூர்த்தியை மகி கட்டி போட்டு விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்..

முன்னாவது பார்த்தான்.. ஏதோ ஒரு வித்தியாசம் இந்த பெண்ணிடம் இருக்கிறது.. அதில் தனித்து தனக்கு அவள் தெரிகிறாள் அவ்வளவு தான் என்று நினைத்து கொண்டவனுக்கு இன்று அவன் மனம் அவனுக்கு அடித்து சொன்னது..

இல்லை அப்படி இல்லவே இல்லை.. இவள் உனக்கு மட்டுமே ஆன தனித்துவமானவள்… இனி இவளை பார்க்காது உன்னால் இருக்க முடியாது… என்று அவன் மனது அடித்து சொன்ன அதே வேளையில், குருமூர்த்தியின் பக்கத்தில் அமர்ந்திருந்த விசுவநாதன்…

“ஸ்ருதிக்கு முன்னவே அவள் நல்லா ஆடல என்று இருந்தா. இப்போ இந்த பெண் நல்லா பாடவும்.. அதுவும் எல்லோரும் கை தட்டி பாராட்டியதில் ஸ்ருதி முகமே ஒரு மாதிரி ஆகிடுச்சி மாப்பிள்ளை…” என்று சொன்னவரின் பேச்சில், தன் மனம் சொன்ன பேச்சை விடுத்து இப்போது தன் மாமன் சொன்ன பேச்சை கவனித்தவன் தன் மாமன் பெண்… ஸ்ருதியை தான் பார்த்தது..

பார்த்த குருமூர்த்திக்குமே. ஸ்ருதி மகியை பார்த்து வதனியிடம் ஏதோ பேசுவது தெரிந்தது.. மாமன் சொன்னது போல ஸ்ருதி கல்லூரிக்கு வந்த போது இருந்த அந்த மகிழ்ச்சி இல்லாது ஏதோ போல இருப்பதை கவனித்தவன்.

ஸ்ருதியிடம் பேச வேண்டும்… இது போல சின்ன சின்ன விசயங்களுக்கு எல்லாம் இது போல மூட் ஆவுட் ஆக கூடாது.. ஒரு சின்ன தோல்வியை கூட இவளாள் தாங்கி கொள்ள முடியவில்லை என்றால்,

நாளை வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கு.. அதை எல்லாம் தான்டி எப்படி இவளாள் வர முடியும்…? என்று தன் மாமன் சொன்னது போல இந்த விழாவில் தனக்கு பரிசு கிடைக்காது என்று நினைத்து தான் ஸ்ருதி இப்படி இருக்கிறாள் என்று ஸ்ருதியை அவனுமே தவறாக தான் நினைத்து விட்டான்..

ஆனால் நடந்ததோ.. வதனி… “ என்ன ஸ்ருதி இப்படி சொதப்பி விட்டுட்ட.. நான் இந்த பக்கம் திரும்பினா நீ இந்த பக்கம் திரும்பி தானே என்னை பார்த்து ஆடி இருக்க வேண்டும்..

அதோடு அது என்ன ஸ்ருதி நாம ஆடுனது ராதை கண்ணனுக்கான பாடல்.. அதில் ராதை கண்ணனை எந்த அளவுக்கு லவ் பண்ணுவா.. அப்படியே அதை எல்லாம் உன் கண்ணில் காட்ட வேண்டா௳அ.. நானாவது சும்மா டிவி சினிமா பார்த்து டான்ஸ் ஆடினேன்.. ஆனா நீ இதுக்காகவே டான்ஸ் க்ளாஸ் போனவ தானே ஸ்ருதி... இப்படி சொதப்பி விட்டுட்டியே…. இப்போ பாரு மகி என்னம்மா படுறா என்று. கண்டிப்பா அவளுக்கு தான் ப்ரைஸ்.. பாரு பாரு எல்லோரும் எப்படி கேட்கிறாங்க என்று ..

மகி பாடி முடித்ததும் மகிக்கு கிடைத்த கை தட்டலை காண்பித்து பாரு பாரு… கண்டிப்பா அவளுக்கு தான் பிரைஸ் என்று ஆதங்கப்பட்டு கூறிக் கொண்டு இருந்த வதனி பேச்சு எல்லாம் ஸ்ருதியின் காதில் விழவே இல்லை..

மகியின் பாட்டை சித்தார்த் அவளையே பார்த்து கேட்டு கொண்டு இருந்ததும்.. அவள் பாடி முடித்தும் மற்றவர்கள் கை தட்டல் அடிங்கிய பின்னும் அவன் கை தட்டிக் கொண்டு இருந்ததும், சித்தார்த்தின் பக்கம் வந்து நின்ற அவனின் தந்தை ராம் சந்திரன் மகியை காட்டி ஏதோ சொன்னதும், அதற்க்கு சித்தார்த் தலையாட்டி தந்தையின் பேச்சை ஒத்து கொண்டது என்பது போலான பாவனை காட்டிய சித்தார்த்தும், ராம் சந்திரன் சித்தார்த் இருவருமே மகியை பெருமையுடன் பார்த்து கொண்டு இருப்பதையே தான் ஸ்ருதி கவனித்து கொண்டு இருந்தது..

ஸ்ருதி கணித்தது சரி தான் என்பது போல் தான் ராம் சந்திரன் மருமகளின் இந்த பாடலை கேட்டவருக்கு தன் மச்சான் தன் மச்சான் மனைவி தான் நியாபகத்தில் வந்தனர்..

அவருக்குமே தெரியும்.. தன் மச்சான் இந்த பாடலை அடிக்கடி முனு முனுப்பது… மகி பாட்டு கத்து கொண்டு உள்ளாள் என்பதும் தெரியும்..ஆனால் ராம் சந்திரன் மருமகளை பாட வைத்து கேட்டது எல்லாம் கிடையாது..

அவருக்கு இந்த ஆடல் பாடல் அதில் எல்லாம் அவ்வளவு ஈடுபாடு எல்லாம் கிடையாது.. இன்று மருமகளின் இந்த பாடலை வெகுவாக ரசித்தவர்…

அதை தன் மகனிடம் பெருமையுடன் பகிர்ந்தும் கொண்டார்.. கூடவே.

“உங்க அம்மா சொல்லுவா சித்து.. மகி பாட்டு பாடினா தேன் குடித்து விட்டு பாடினது போல அப்படி இருக்கும் என்று.. நானுமே அண்ணன் மகள் அதனால சின்னது கூட பெரியதாக தான் தெரியும் என்று நினைத்து விட்டேன் சித்து.. ஆனா ரொம்ப நல்லாவே பாடுறா டா…” என்று பெருமையாக கூற..

சித்தார்த்துமே… “ம் நானுமே இந்த அளவுக்கு மகி பாடுவா என்று தெரியாதுப்பா. நல்ல குரல் வளம் ப்பா மகிக்கு..” என்று அவனுக்குமே தன் மாமன் மகளின் இந்த திறமையில் பெருமை தான்.. இதை பார்க்கவும், கேட்கவும்.. அம்மா வந்து இருக்கலாம்.. இன்னைக்கு தான் அந்த ஜோசியரை இவங்க பார்த்து போகனுமா. என்ன…?

இதை கேட்டா.. “அவர் அப்பாயிட்மெண்ட் அப்புறம் கிடைக்காது.. இன்னைக்கு கிடைத்ததே அதிசயம்.’நான் என் அண்ணன் பெண் பாடுறதை கூட்டத்தோடு எல்லாம் கேட்க மாட்டேன்… தனியா பாட சொல்லி கேட்பேன் என்று வியாக்கணம் பேசுனா…. தனியா பாட வைத்து கேட்கலாம்.. ஆனால் இது போல அவள் குரலுக்கு கிடைக்கும் இந்த வர வேற்ப்பை அவங்களால் பார்க்க முடியுமா.?” என்று ஸ்ருதி நினைத்தது போல் தான் அப்பாவும், மகனும் மகியை பெருமையாக பேசிக் கொண்டு இருந்தனர்..வதனி போல தங்களுக்கு கிடைக்கும் அந்த பாராட்டு பரிசோ… அவளின் அப்பா மாமா நினைத்தது போல என் நடனத்தை இது போல அனைவரும் மெய் மறந்து பார்க்கவில்லை என்ற வேதனை எல்லாம் அவளுக்கு ஒரு பொருட்டே கிடையாது..

அவளின் வேதனை எல்லாம் சித்தார்த்தும் அவனின் அப்பாவும் மகியை பெருமையாக பார்த்ததே… கூடவே சித்தார்த்தின் அப்பா தன் தந்தையை பற்றி பேசியதும்..

இப்போது ஸ்ருதிக்கு புதியதாக ஒரு பயம். சித்தார்த்துக்கு தன்னை பிடித்து இருந்தாலுமே, தன் காதலை ஏற்றுக் கொள்வானா.? என்ற சந்தேகம் அவளுக்கு,,

அதன் விளைவு இன்னும் அவளின் படிப்பு முடிய இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளது.. படிப்பு முடிந்து சித்தார்த்திடம் காதலை சொல்ல நினைத்து இருந்தவள்..

அன்றே தன் காதலை சொல்ல முடிவு செய்து விட்டாள்..

அதனால் குருமூர்த்தியும், விசுவநாதனும்.. விழா முடிந்து கிளம்பும் சமயம்.. “ எங்களோடு வந்துடேன் ஸ்ருதி… “ என்று அழைத்த போது ஸ்ருதி..

“இல்ல நீங்க கிளம்புங்க. நான் என் காரிலேயே வந்துடுறேன்.. “ என்று சொன்னாள்.

குருமூர்த்தி தான் கிளம்பும் சமயம்… “ சின்ன விசயத்துக்கு எல்லாம் இது போல சோர்ந்து போயிட கூடாது ஸ்ருதி.. இன்னைக்கு அங்கு இருப்பது நாளை உன் கிட்ட இருக்கும்..” என்று மகியின் கையில் இருந்த பரிசை பார்த்து கொண்டே ஸ்ருதியிடம் சொன்னான்.

தன் அத்தானின் பேச்சில் பெண்ணவள் குருமூர்த்தியை பார்த்தவள்..

“ஓரு சிலது எல்லாம் போனா போனது தான் அத்தான். அது திரும்ப நம்ம கிட்ட வராது.. அதனால போக போகுது என்று தெரிந்தா,

அந்த பொருள் நம்மை விட்டு போகாது இருக்க நாமே என்ன என்ன செய்யனுமோ.. அது எல்லாமே செய்து நம்ம கிட்ட கொண்டு வந்துடனும்.. அத்தான்..” என்ற. ஸ்ருதியின் இந்த அழுத்தம் திருத்தமான பேச்சு குருமூர்த்திக்கு உணர்த்தி விட்டது..

ஸ்ருதியின் இந்த பேச்சு பரிசுக்கானது கிடையாது என்பதை… .






 
Active member
Joined
Jul 13, 2024
Messages
165
Arumai. Shruthi, nee already neraiya panniyachu. Don’t do anything that will upset Mahi
 
Last edited:
Active member
Joined
May 12, 2024
Messages
199
Nalla vadiva valarthu irukkanga pillaiya 🥴🥴🥴
Enekku intha Shruthi ya pidikkave ilal
 
Top