Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

chapter....3

  • Thread Author
அத்தியாயம்….3

மரகதம் பயந்தது போல் தான் அக்னி… “ ம்மா மேரஜ் ஓகே தான்.. ஆனால் பெண் நான் பார்த்த பெண்ணோடு… நீங்க தான் அவங்க வீட்டுக்கு போய் பெண் கேட்கனும்…” என்று மகன் பேச பேச இங்கு மரகதத்திற்க்கு பட பட என்று தான் ஆயிற்று….

அதன் தொட்டு இழுத்து விட்ட மூச்சு மட்டுமே வந்ததே ஓழிய மரகதத்தினால் சரியோ… இல்லையோ என்று வாய் திறந்து கூட அவரால் பதில் சொல்ல முடியவில்லை..

இத்தனை பேச்சுமே ஸ்பீக்கரில் போட்டு மரகதம் பேசிக் கொண்டு இருந்ததினாலும், மரகதம் அருகில் அவர் கணவன் நீல கண்டன் அமர்ந்து கொண்டு இருந்ததினாலும் மனைவிக்கு பதில் அவர் பதில் சொன்னார்..

“பெண் கேள் என்று சொல்லிட்ட அக்னி.. ஆனால் பெண் யார்…? என்று சொல்லலையே… எங்களை கேட்க சொன்னதால பெண் இங்கு தான் இருக்கா என்று தெரியுது….” என்ற பேச்சில், மரகத்திற்க்கு போன உயிர் கொஞ்சம் திரும்பி வந்தது என்று தான் சொல்ல வேண்டும்..

அப்பாடி என்று ஆனது தான்.. ஆனாலுமே தன் மகன் விரும்பிய பெண். அவளோடு திருமணம் என்பது மகன் தங்களை மீறி செல்கிறான் என்று தானே அர்த்தம்..

கெட்டதிலும் ஒரு நல்லதாக கணவன் சொன்னதும் புரிந்து கொண்டதில் வெளி நாட்டு பெண் கிடையாது என்று மட்டும் சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டியது தான்.

இருந்துமே மகளின் நாத்தனாரை திருமணம் செய்து கொண்டால், இன்னுமே தங்களோடு நிலை உயரும்… என்பதை நினைக்காமம் மரகத்ததினால் இருக்க முடியல்லை..

அனைத்தையும் மீறி குடும்பத்தை உயர்த்திய அக்னியை எதிர்க்கவும் முடியாது பெண்ணை பற்றி கேட்க.

அக்னி… “ம்மா ஷ்யாம் சிஸ்டர் தாம்மா…” என்றதுமே மரகத்ததிற்க்கு முன்பை விட ஒரு மாதிரியாகி தான் போனது.. ஷ்யாம் தங்கையை விட வெளி நாட்டு பெண்ணை கை காட்டி இருந்து இருந்தால் கூட பரவாயில்லை போலான ஒரு எண்ணம் தோன்றியது..

இன்னும் கேட்டால் இவருமே இன்னும் ஷ்யாம் தங்கையை பார்த்தது கிடையாது.. மகனே பார்த்து இல்லாத போது மரகதம் எங்கு பார்த்து இருந்து இருக்க போகிறார்..

ஷ்யாமின் தங்கை என்ன.. ஷ்யாமையே மரகதம் பார்த்தது கிடையாது.. இன்னும் கேட்டால் ஷ்யாம் குடும்பமும் அக்னி குடும்பமும் இருவருமே சென்னை வாசி தான்..

அது என்னவோ… அமெரிக்காவில் இருவரும் ஒன்றாக தங்கி படிக்கும் போது மகன் தன்னுடன் இருக்கும் ஷ்யாமை பற்றி சொல்லும் போது மரகதம்.

“அப்படியா.. இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஓத்தாசையா இருங்க…” என்று சொன்ன மரகதம் தான்… பின் தன் மகனுக்கு நல்ல வேலை கிடைத்து ஷ்யாமுக்கு கிடைக்காது இருவரும் ஒன்றாக தங்கி கொண்டு இருந்த போது..

அப்போ தன் மகன் சம்பாதியத்தில் தான் ஷ்யாம் அங்கு தங்கி இருக்கிறானா என்ற ஒரு எண்ணம்… அங்கு தினம் வேலைக்கு சென்றாலே அதிக டாலரில் சம்பாதிக்கலாம் என்பது மரகதத்திற்க்கு தெரியாது..

தெரியாததை மகன் சொன்னான் தான். அதுவும் முதல் முறை அக்னி மரகதத்தை அப்படி பேசி விட்டான். அந்த வார்த்தையை மரகதத்தினால் இன்றுமே மறக்கமுடியவில்லை தான்…

ஆம் ஷ்யாமை பற்றிய தன் எண்ணத்தை ஒரு நாள் மகனிடம் கை பேசியில் பேசிக் கொண்டு இருந்த போது.

“ அந்த பையனுக்கு இன்னுமே நல்ல வேலை கிடைக்கலையா.?” என்று கேட்ட மரகதம்..

பின்… “ அங்கு தங்கி சாப்பிட எல்லாம் ரொம்ப செலவு ஆகுமே.. அப்பா வேறு இல்ல என்று சொல்லி இருக்க… வசதியுமே இல்ல தானே… அப்போ எப்படி…?” என்று கேட்டவர்.

அவர் கேட்டதற்க்கு மகனிடம் எதுவும் பதில் இல்லை எனும் போது அவரே தொடர்ந்து… “ அப்போ ஆறு மாசமா உன் செலவுல தான் இருக்கான்னா அந்த பையன்….” என்று மரகம் ஒரு மாதிரியாக சொன்னது தான் தாமதம்..

அக்னி அவன் பெயருக்கு ஏற்றது போல் வார்த்தைகளை நெருப்பு துண்டுகளாக கக்கி விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்…

“இங்கு செலவு அதிகம் தான்ம்மா… அதே போல தினம் வேலைக்கு பார்த்தா அத்தனை சம்பாதிக்கலாம்… இது வரை என் கிட்ட இருந்து அவன் ஒரு பணமும் வாங்கினது கிடையாது. இனி அவனை பத்தி என் கிட்ட இது போல பேசுற வேலை வெச்சிக்காதிங்க….” என்று விட்டான்..

ஒரு நாளும் தன்னிடம் இப்படி பேசாத மகன் இன்று இப்படி பேசியதில், அதுவும் யாரோ ஒருவனுக்காக பேசியது மரகதத்திற்க்கு அப்படி இருந்தது தான்..

இருந்தும் சரி என்று விட்டவர்… அதன் பின் ஷ்யாம் பற்றி மகனிடம் பேசவில்லை என்றாலுமே, அன்றே அந்த ஷ்யாமை மரகதத்திற்க்கு பிடிக்காது போய் விட்டது.

இன்று அந்த ஷ்யாமின் தங்கையை விரும்புகிறேன் என்று மகன் சொல்கிறான்.

அப்போ அன்னைக்கு அப்படி தன்னை பேசியதற்க்கு காரணம் இது தானா…என்று தான் மரகதம் நினைத்தார்.

மகனின் பேச்சுக்கு சட்டென்று பதில் சொல்ல முடியாது அனைத்தையும் நினைத்து பார்த்தவர்… பின் மீண்டும் மீண்டும் அக்னி..

“ம்மா லைனில் இருக்கிங்கலா….?” என்ற கேள்விக்கு இதற்க்கு மேல் அமைதியாக இருந்தால் நன்றாக இருக்காது என்று..

“ம் இருக்கேன் ப்பா…. “ என்று சொன்னவர் பின் தயங்கி…

“எப்போ இருந்து உனக்கு விருப்பம் ப்பா…” என்று மெல்ல பேச்சை ஆரம்பித்தார் மரகதம்..

ஆனால் மகன் அதற்க்கு பதில் சொல்லாது.. “ பிடிச்சி இருக்கும்மா.. பெண் கேளுங்க…” என்று முதலில் சொன்னதையே மீண்டும் சொன்னானே ஒழிய… அக்னி மரகததின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை..

ஒரு வேலை இன்று அக்னி தன் அன்னையின் கேள்விக்கு பதில் சொல்லி இருந்து இருந்தால், நானே பார்த்தது கிடையாது. பேசியது கிடையாது.. ஷ்யாமின் திருமணத்தின் புகைப்படத்திலும் வீடியோவிலும் பார்த்து தான் பிடித்தது.. கூடவே பேச்சு வாக்கில் ஷ்யாம் தன் குடும்பத்தை பற்றி பேசும் போது.. தன்னை விட எட்டு வயது சின்னவளான தன் தங்கை ஸ்வேதாவை பற்றி பேச பேச…. பிடித்து விட்டது..

அந்த பிடித்தம் கூட அந்த பெண்ணுக்கு இல்லை.. இது என் விருப்பம் மட்டுமே தான் என்று சொல்லி இருந்து இருந்தால்,

பிற்காலத்தில் ஸ்வேதா கேட்க கூடாத பேச்சை எல்லாம் கேட்டு இருந்து இருக்க தேவை இருந்து இருக்காது.. அதன் தொட்டு இவனின் மன நிம்மதி மட்டும் இல்லாது தன் வாழ்க்கையை பிரச்சனைக்கு பிடியில் தள்ளி இருந்து இருக்க தேவை இருந்து இருக்காது.. ஆனால் இதை எல்லாம் முன் கூட்டிய தெரிந்து செய்து விட்டால் பின் விதிக்கு என்ன வேலை..

இதோ.. மரகதம் கேள்விக்கு பதில் சொல்லாது தன் குறி என்று பேசியதில் மரகதம் தான் நினைத்தது தான் சரி என்று அவரே ஒரு முடிவுக்கு வந்து விட்டார்.

இருந்துமே இதை தடுக்க ஏதாவது ஒரு வழி கிடைக்காதா என்று யோசித்தவருக்கு ஜாதகத்தை கையில் எடுத்தார்.

அதன் தொட்டு… “ முதல்ல பெண் ஜாதகம் அனுப்ப சொல்லுப்பா… அது பொருத்தம் இருந்தால் தானே…. அதுக்கு அடுத்து பெண் பார்க்க போகனும்… உன் தங்கைக்கு நடந்தது மறந்து விட்டதா அக்னி…” என்றதும்

அக்னியிடம் அமைதி.. பின் என்ன நினைத்தானோ… “ஜாதகம் எல்லாம் வேண்டாம்மா…. அவங்க பார்க்கனும் என்றால் பார்க்கலாம்…” என்றவனின் பேச்சில் மரகதம் வாய் அடைத்து தான் போய் விட்டார்….

இதன் பின் என்ன பேசுவது ம் என்ற வார்த்தையை விடுத்து… இந்த அமைதி எல்லாம் மகனிடம் மட்டும் தான்…

மகன் பேசியை வைத்ததும் , கணவனிடம் அத்தனை பேச்சு… ஓ இதுக்கு தான் அந்த பையன் கல்யாணம் ஆன போது கூட கூடவே இருந்தானா….?

அந்த பையனை பத்தி பேச கூடாது என்று உங்க கிட்ட இதை பற்றி பேச சொன்னேன்..

நீங்க கேட்டதுக்கு உங்க மகன் என்ன சொன்னான்…. டபுல் பெட் ரூம் தான் ப்பா … எனக்கு என்று தனிப்பட்டு சமைக்க தேவையில்லை.. எல்லாத்தையும் விட அந்த பெண் என்னை அண்ணா என்று கூப்பிடுறா…. பாசமா இருக்கா….”

ம் அன்னைக்கு என்ன என்ன பேச்சு பேசினான் உங்க மகன்.. அந்த பெண் அண்ணா என்று கூப்பிட்டுதாம்.. எல்லாம் முறையா கூப்பிட்டு நல்லா சம்பாதிக்கும் பாக்க நல்லா வாட்ட சாட்டமா இருக்கும் பையனை வளைத்து போட்டு விட்டாங்க….” என்று கணவரிடம் அத்தனை பேச்சு..

அனைத்திற்க்கும் அமைதியாக இருந்த நீல கண்டன் ஒன்றே ஒன்று தான் சொன்னது..

அது… “ அந்த பெண் தான் இந்த வீட்டுக்கு மருமகள்… நீ இது போல் பேசுறது கொஞ்சம் கூட சரியில்ல மரகதம்… நீ இப்படி பேசுறது நம்ம மகன் வாழ்க்கையை தான் பாதிக்கும்..” என்று சொல்லியும் கூட மரகதம் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை..

கணவன் பேச்சை கேளாது தன் மகளுக்கு அழைத்து விசயத்தை சொல்லி விட. சென்னையிலேயே இவர்கள் வீட்டு பக்கமே இருக்கும் ப்ரீத்தா உடனே அம்மா வீட்டிற்க்கு வந்து விட்டாள்.

வந்தவள்.. “ என்னம்மா சொல்றிங்க..அக்னி அண்ணனா ஒரு பெண்ணை விரும்புவது.?” என்று அதிசயத்து கேட்டாள்.

அதுவும் ஷ்யாம் தங்கை எனும் போது அன்னையின் போதனையில் தாயை போலவே ஷ்யாம் தன் அண்ணனை பிடுங்கி வாழ்கிறான் என்று நினைத்து கொண்டு இருப்பவள்..

அவனின் தங்கை எனும் போது…. “ அந்த ஷ்யாம் என்ன அந்த பெண்ணுக்கு அண்ணனா இல்ல மாமாவா…?” என்று தன் அன்னையிடம் கேட்க.

அந்த வார்த்தையை நீல கண்டன் தன் மகளை அதிர்வுடன் பார்த்தவர்..

“என்ன பேச்சு ப்ரீயா…இது.. அதுவும் பார்க்காத ஒருத்தவங்களை பத்தி இப்படி பேசுற..என்ன பேச்சு இது ஒரு நல்ல குடும்ப பெண் வாயில் இருந்து இந்த வார்த்தை வரலாமா…?” என்று கண்டித்த தந்தைக்கு மகள் பதில் அளிக்கும் முன் அன்னை..

“அவள் என்ன தப்பா சொல்லிட்டா..?” என்று ப்ரீத்தாவுக்கு ஆதரவாக மரகதம் வர…

நீல கண்டனோ… “ அம்மாவோ பெண்ணோ எப்படியாவது போங்க…” என்றவர் பின் மரகதத்திடம்..

“ உன்னை போல சில அம்மாவால தான் பெண்ணை கொடுத்த இடம் அல்லல் படுது… ஆனா ஒன்னு சொல்றேன் மரகதம். அம்மா அப்பா கூட பிறந்தவ என்று நம்ம எல்லோர் மீதும் அவன் பாசமா இருக்கான். அதை கெடுத்துக்காதிங்க. ஏன்னா அவனுக்கு ஒன்னு ஆசைப்பட்டு விட்டா அதை எப்படி கொண்டாடுவான் என்று உனக்கே தெரியும்.. இதோ உன் வசதிக்கி அமெரிக்கா போய் தன் படிக்கனுமா.. ஏன் இந்தியாவில் படிச்சா ஆகாதா..? அத்தனை பேர் சொல்லியும்.. ஏன் நம்ம கூட பயந்த போது கூட அவன் ஆசைப்பட்ட படிப்பை படிச்சு அவன் சொன்னதை நிறை வேற்றி விட்டான்..

படிப்பு என்பது இது இல்லேன்னா அது.. அதுக்கே அப்படி.. ஆனா காதல் கல்யாணம் பிடித்தம் எல்லாம் ஒன்னு தான்… அந்த ஒன்னு அந்த பெண் எனும் போது… அந்த பெண்ணுக்காக எந்த அளவுக்கு இருப்பான்.. இது போல பேசி உங்க மதிப்பை நீங்கலே கெடுத்துக்காதிங்க. என்று சொன்னார் தான்..

ஆனால் அம்மாவும் மகளும் அதை கேட்க வேண்டுமே…






 
Active member
Joined
May 12, 2025
Messages
38
நீலகண்டன் சரியா தான் சொல்லிருக்கார். அம்மாவும் பொணணும் கேட்கணும். கேட்காம அந்த பொண்ணையும படுத்தி பின்னாடி இவங்களும் பட போறாங்க. அதுலயும அந்த ப்ரீத்திக்கு என்ன வாய்?
 
Top